அஸ்வத்த நெருங்கிய அஞ்சலி மெல்லிய குரலில், ” அஸ்வத் வாங்க போகலாம்.. டைம் ஆச்சு.. லேட்டா போனா அம்மா அப்பறம் என்னை கொன்றுவாங்க” என்று அவனை அழைக்க,
‘ சற்று முன் அந்த நான்கு பேரையும் அடித்து கிழித்து தொங்கவிட்டவள் இவள்தானா?? ‘ என்று அஸ்வத்திற்கு சந்தேகமே வந்துவிட்டது.
Advertisement
அப்போது பாய்ந்து பாய்ந்து அடித்ததென்ன இப்போது பம்மி பம்மி பேசுவதென்ன என்று அவன் வியந்து போய் அவளைப் பார்க்க, அஞ்சலிக்கோ அதுவெல்லாம் கருத்தில் பதியவில்லை.
Advertisement
அவளுக்கு இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாக போய்விட, அனைவரையும் துரிதப்படுத்தி அங்கிருந்து இழுத்துக் கொண்டு கோவிலின் முன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களின் காருக்குச் செல்ல, அப்போது தான் பக்கத்து கடையில் இருந்த பாழடைந்த தொலைக்காட்சியில் தேனியில் வெடித்துள்ள கலவரத்தை பற்றி செய்தி ஓடிக்கொண்டிருக்க, நால்வரும் இந்த கலவரத்தில் எப்படி ஊருக்கு போய் சேருவது என்று தெரியாமல் முழிபிதுங்கி போய் நின்றனர்.
Advertisement
” மது டார்ஜிலிங் கொஞ்சம் இங்க வாயேன்” என்று வெளித் திண்ணையில் சாவகாசமாக கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு தன் மனைவியை அழைத்தார் வாசுதேவன்.
Advertisement
” அய்யய்யா உங்களோட ஒரே தொல்லையா போச்சு.. நிம்மதியா ஒரு வீடியோ பண்ண விடுறீங்களா?? நானே இங்க வந்ததுல இருந்து ஒரு வீடியோ கூட போடலைன்னு என் ஃபேன்ஸ் எவ்ளோ வருத்தத்துல இருக்காங்க..” என்று அங்கலாய்த்துக் கொண்டே உள்ளிருந்து வந்த மதுரம் தன் கணவனை எரிச்சலுடன் எதிர்நோக்கி, ” இப்போ என்னத்துக்கு கூப்பிட்டிங்க? ” என்று எரிந்து விழ,
அப்போது அங்கு வெளியில் எங்கோ செல்ல கிளம்பி வந்த பரமசிவன், ” அம்மா அப்பாவே உடம்பு சரியில்லாம இருக்காரு அவர்கிட்ட போய் இப்படி கோவமா பேசலாமா?? என்னம்மா இப்படி இருக்கிங்க?? எங்களை சொல்லிட்டு அப்பாவை நீங்க தான் ரொம்ப கஷ்டப் படுத்துறீங்க..இப்படிலாம் பண்ணாதீங்க” என்று அவர் கண்டிக்க,
தன் விதியை நொந்து கொண்ட மதுரமும் வேறு வழியில்லாமல், ” சரிப்பா ராசா உங்க அப்பாவை என் இடுப்புல தூக்கி வச்சு பார்த்துக்கிறேன்.. நீ கவலைப்படாத” என்று எள்ளலாய் கூறினார்.
” உங்களை திருத்தவே முடியாது ” என்று பரமசிவன் தலையில் அடித்துக்கொள்ள,
” ஆமா நான் என்னமோ நீ எழுதுன பரீட்சை தாள் பாரு என்னைத் திருத்த முடியாம போறதுக்கு.. போடா போடா போக்கத்தவனே.. என் புருஷனை பார்த்துக்க எனக்கு தெரியும்.. நீ உன் வேலையை பாரு” என்று தன் மகனின் வாயை அடைத்தார் மதுரம்.
தன் அன்னையை பற்றி தெரிந்ததால் மேலும் அவரோடு பேசி வம்பு வளர்க்காமல் அங்கிருந்து கிளம்பிய பரமசிவன், ” சரி நான் தேனி வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்.. பார்த்து இருங்க” என்று கூறிவிட்டு கிளம்ப,
அவரைத் தடுத்த மதுரம், ” போகிற வழியில உங்க அண்ணனை பார்த்தா நான் ‘ மேபிலின் நியூயார்க் காஜல் ‘ வாங்கிட்டு வர சொன்னேன்னு சொல்லிட்டு போய்டு.. அவனும் தேனிக்கு தான் போனான்..பேரை மாத்தி சொல்லிறாத வேற பிராண்ட் நான் யூஸ் பண்ண மாட்டேன்” என்று கூறி மகனின் இரத்த அழுத்தத்தை கூட்டினார் அவர்.
அவரை கொலைவெறியோடு நோக்கிய பரமசிவன், ” அம்மான்னு கூட பார்க்க மாட்டேன் கொன்னே போட்ருவேன்.. மரியாதை போய்டுங்க” என்று மிரட்டிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.
போகும் அவரைக் கண்டு புன்னகைத்துக் கொண்டிருந்த மதுரத்தின் முதுகை சுரண்டிய வாசுதேவன், ” மது டார்ஜிலிங் ” என்று அவர் காதில் கிசுகிசுக்க,
” அடங்.. இப்போ உனக்கு என்னையா வேண்டும்” என்று கடுப்புடன் அவரை நோக்கி மதுரம் திரும்ப,
வாயெல்லாம் பல்லாக அவரைப் பார்த்த வாசுதேவன், “இங்க பக்கத்துல தான் தேக்கடி இருக்கு .. நாம ரெண்டு பேரும் போய் ஒரு ரெண்டு நாள் மீண்டும் தேன்நிலவு கொண்டாடிட்டு வருவோமா டார்ஜிலிங்” என்று அவர் வினவ,
அவர் மண்டையிலே நங்கென்று கொட்டிய மதுரம், “பால் ஊத்துற வயசில உனக்கு மீண்டும் ஒரு தேனிலவு கேக்குதா.. இருக்க நாலு பல்லையும் கழட்டி கையில கொடுத்துருவேன்..மரியாதையா உடம்பு சரியில்லாத மாதிரி அப்பப்போ ஆக்டிங்கை கொடு.. அடிக்கடி உன் மகனுங்களை பார்த்து நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லு.. ஆல்ரெடி ரெண்டு எருமைங்களுக்கும் டவுட் வந்திருச்சு.. அவனுங்க நம்ம குட்டை உடைக்குறதுக்குள்ள அவனுங்களை ஒன்னு சேர்த்து வைக்கணும்” என்று அவர் தீவிரமாய் கூற,
அப்போது அங்கு பிரசன்னமான அவரின் மருமகள்கள், “ம்க்கும்.. வந்து நாலு நாள் ஆச்சு.. ஆனா இப்போ வரைக்கும் என் புருஷனும் இவ புருஷனும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக்க கூட இல்லை.. அவர் கிழக்குனா இவர் மேற்குன்னு இருக்காரு..நீங்களும் இந்த நாலு நாளாக உங்க பழைய கதை அது இதுன்னு சொல்லி என்னென்னமோ பிளான்லாம் போட்டிங்க.. ஏதாவது நடந்துச்சா.. எல்லாம் ஃபெயிலியர்.. எனக்கென்னமோ இது ஒத்துவரும்னு தோணலை அத்தை” என்று நீட்டி முழக்கினார் சீதா.
அதை ஆமோதித்த தனமும், ” ஆமாத்தை அக்கா சொல்ற மாதிரி தான் நடக்கும்.. இத்தனை வருஷம் பகை நாலு நாள்ல நாம நினைச்சதும் சரியாகிடாது.. நாம நம்ம வேலையை விட்டு இங்க இருக்கது வேஸ்ட்” என்று புலம்ப,
இருவரையும் அதட்டிய மதுரம், ” என்னடி உங்களுக்கு இங்க இருக்க நோகுதா?? ” என்று கேட்க,
” அச்சோ அதெல்லாம் இல்லை அத்தை” என்று இருவரும் கோராசாய் பதிலளித்தனர்.
“பின்ன என்ன.. என் புள்ளைங்களை பத்தி எனக்கு தெரியாதா?? அவனுங்க பிறந்ததுல இருந்து நான் அவனுங்களை பார்க்குறேன்.. ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்ளோ பாசம் வச்சிருக்காங்க.. ஏதோ பகை குகைன்னு உலறிகிட்டு இருக்கிங்களே .. இல்லை தெரியாம கேக்குறேன் அவனுங்க என்ன பங்காளிகளா பகையோடு இருக்க, ஒரே இரத்தம் டி .. அண்ணன் தம்பிகளுக்குள்ள ஆயிரம் சண்டை வந்தாலும் பாசம் என்னைக்கும் கொறையாது.. அது என்னைக்காவது ஒருநாள் வெளிய வந்து தான் ஆகும்..அது தானா வெளிய வரலைனாலும் என் பேரங்களோட வாழ்க்கைக்காக நான் வரவைப்பேன்..எனக்கு என் குடும்பம் ஒன்னா சந்தோஷமா இருக்கணும்.. என் பேரங்களும் அவங்களுக்கு பிடிச்ச பொண்ணுங்களை கட்டிகிட்டு நிம்மதியா இருக்கணும்.. அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்” என்று அவர் உணர்ச்சி பூர்வமாக பேச,
சீதாவும் தனமும் தங்களது தவறை உணர்ந்து தங்கள் மாமியாரை இருபுறமும் கட்டிக்கொண்டு, ” கண்டிப்பா ஒன்னா சேருவோம் அத்தை” என்று அவருக்கு நம்பிக்கை அளித்தனர்.
இருவரையும் தள்ளி விட்ட மதுரம், ” அடச்சீ தள்ளுங்க.. ஏதோ ஒரு வேகத்துல சென்டிமெண்ட்டா டயலாக் பேசுனா உடனே வந்து ஒட்டிக்க வேண்டியது.. டிரஸ் கசங்கிருச்சு உங்களால .. இப்போ நான் எப்படி ரீல்ஸ் பண்றது.. போங்க போய் மதியத்துக்கு பிரியாணி செய்ற வேலையை பாருங்க.. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று அவர் தன் அறைக்கு விரைய,
சீதாவும் தனமும் மதுரத்தை பற்றி அறிந்ததால், சிரிப்புடன் தங்களது வேலையை கவனிக்கச் சென்று விட்டனர்.
வாசுதேவன் வேறுவழியின்றி அங்கு ரோட்டில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
இப்படியே நேரம் கழிய, இரண்டு மணி நேரம் சென்று வெளியே அழைப்பு மணி சப்தம் கேட்டது.
” இதோ வரேன்” என்று அடுப்பங்கரையில் இருந்து குரல் கொடுத்த சீதா, தன் கைகளை புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டே வந்து கதவை திறந்து பார்த்தவர்,