Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 24 2

விஷயம் கேள்விப்பட்டு மீனட்சியும் பதறித் துடித்து மருத்துவமனைக்கு ஓடி வர, அங்கு தன் இரு மகள்களும் நினைவின்றி கிடக்க அவரின் உள்ளம் உலைக்கலனாய் கொதித்தது.

 அந்த முரடன் போதையில் இருந்தாலும் நிறுத்தி நிதானமாய் அவளை ஆள வேண்டும் என்னும் உணர்வோடு அஞ்சலியை நெருங்கியதால் அவள் உடலில் பெரிதாய் ஏதும் காயங்கள் ஏற்படவில்லை.. மேலும் அஞ்சலி வேறு சுயநினைவின்றி  கிடந்ததால் தனக்கு என்ன நடந்தது என்றும் அவளுக்கு தெரியாமல் போய்விட்டது ஒருகால் அவளுடைய சுயநினைவோடு இவை அனைத்தும் நடந்திருந்தால் நிச்சயம் அவனை எதிர்த்து போராடி அதற்கு பரிசாய் பல காயங்களை பெற்றுக் கொண்டிருப்பாள்.. இப்போது அதற்கும் வழியில்லாமல் போக,   அஞ்சலி உடம்பில் ரோட்டில் தூக்கி வீசப்பட்டதை தவிற வேறெந்த காயங்களும் ஏற்படவில்லை.. இருந்தும் அந்த பொறுக்கி கொடுத்த மயக்க மருந்தின் வீரியம் அதிகரித்ததால் அதற்கான சிகிச்சையை அளித்த மருத்துவர்கள், அவள் கற்பழிக்கப்பட்டுள்ளாள் என்பதையும் சுந்தரபாண்டியனிடம் கூறிவிட, அவர் அந்த உண்மை தன்னோடு மட்டும் போகட்டும் என தன் மனைவியிடம் கூட அதைப்பற்றி மூச்சு விடவில்லை.



Advertisement

கீதாவிற்கும் அதிகமாய் காயம் ஏற்படாததால் அவளும் விரைவில் கண்விழித்து விட, அவள் கண்கள் அஞ்சலியைத் தான் தேடியது.

அஞ்சலியைக் கண்ட பின்பே அவளின் மனம் நிம்மதியடைந்தது.

Advertisement

Advertisement

ஆனால் அஞ்சலியோ அந்த மயக்க மருந்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஒரு நாள் சென்றே கண்விழித்தாள்.

அவளுக்கு உண்மைகள் எதுவும் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த சுந்தர பாண்டியன், அவளிற்கு மயக்க மருந்து கொடுத்த போதே தான் அங்கு வந்து விட்டதாகவும், அவரைக் கண்டதும் அஞ்சலியைக் காரில் இருந்து தள்ளி விட்டு அவன் தப்பித்துச் சென்றதாகவும் மட்டுமே கூறினார்.

Advertisement

மேலும் அஞ்சலி சிறுவயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றதன் விளைவால் அவளின் கன்னித்திரை எப்போதோ கிழிந்திருந்தது. அதிலும் அதிர்ஷ்டவசமாக அவள் உடலில் அந்த முரடன்  அஞ்சலியை பலவந்தப்படுத்தியதற்கு சான்றாய் எந்தவித நகக் கீரல்களோ காயங்களோ இல்லாமல் கீழே விழுந்ததன் விளைவாய் கிடைத்த சிராய்ப்புகள் மட்டுமே அங்கங்கு இருக்க, அஞ்சலியும் தன் சித்தப்பாவின் மீதுள்ள நம்பிக்கையில் அவர் கூற்றை நம்ப முயன்றாலும் மனதின் ஓரத்தில் சிறு சந்தேகம் இருந்து கொண்டே இருக்க, அவள் யாருக்கும் தெரியாமல் வேறோரு மருத்துவமனைக்கு சென்று தன்னை பரிசோதனை செய்து கொண்டாள். அந்த விடயம் எப்படியோ சுந்தரபாண்டியனின் செவியை எட்டிவிட, அஞ்சலிக்கு தெரியாமல் அந்த மருத்துவரை சந்தித்து அவளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவளிடம் உண்மையை உரைக்காமல் இருக்க வேண்டிக்கொள்ள, தாய்மை உள்ளம் கொண்ட அந்த மருத்துவரும் அஞ்சலியின் நலனைக் கருதி அந்த முரடன் அவளை நெருங்கவில்லை என்று அவளிடம் பொய்யுரைத்தார்.

என்னதான் அஞ்சலியை எப்படியோ பேசி பேசி  சுந்தர பாண்டியன் சமாளித்தாலும், கீதாவிற்கு தான் அவரின் கூற்றில் நம்பிக்கையில்லை.

நிச்சயம் அஞ்சலிக்கு ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது என்று அவளின் உள்மனம் கூறிக்கொண்டே இருக்க, தன் தந்தையிடம் சென்று கேட்க அவரோ எதுவும் நடக்கவில்லை என்று மறுத்தார்.

ஆனால் விடாப்பிடியாக நின்று அவரிடம் உண்மையை வாங்கிவிட்டே வந்த கீதாவின் மனம் கோபத்தில் கொழுந்து விட்டெரிந்தது.

அஞ்சலி கடத்தப்பட்ட விஷயத்தை வீட்டில் கூற வேண்டாம் என சுந்தர பாண்டியன் கூறிவிட, அஞ்சலிக்கும் அதுதான் சரி என்று பட்டதால் அவளும் அவரின் பேச்சைக் கேட்டு வீட்டில் இதைப்பற்றி மூச்சே விடவில்லை.

அஞ்சலிக்கு உடல்நிலை சரியாகியவுடன் அவளை மீனாட்சியுடன்  தமிழ்நாட்டிற்கே சுந்தரபாண்டியன் அனுப்பி வைத்துவிட, கீதா தான் அந்த பொறுக்கியை கொல்லாமல் இங்கிருந்து நகர மாட்டேன் என்று பிடிவாதமாய் அங்கேயே தங்கியிருந்தாள்.

அஞ்சலியை இப்படி செய்தவனை கொல்லாமல் விடக்கூடாது என்று முடிவு பண்ணிய கீதாவிற்கு ஒரு நொடியே பார்த்திருந்தாலும் அந்த பொறுக்கியின் முகம் மனதில் ஆழப் பதிந்து போய் இருந்தது.

அவனின் வண்டி எண்ணை வைத்தே அவன் யார் என்பதைக் கண்டறிந்த கீதாவும்,  தனியாக அவன் சிக்கிய சமயத்தில் தன் தந்தையின் உதவியுடன் அவனை வதம் செய்திருந்தாள்.

பெரிய தொழிலதிபரின் ஒரே தம்பியான அவன், போதைக்கும் மாதுவிற்கும் அடிமையாகி பண்ணிய தவறுகள் ஏராளம்.

அவன் என்ன தவறு செய்தாலும், அவனுடைய தமையன் பணத்தை வைத்து அதை சரிகட்டி விட, அந்த தைரியமே அவனை எண்ணிலடங்கா தவறுகளை செய்யத் தூண்டியது.

இத்தனை பாவத்திற்கும் தண்டனையை கீதாவின் மூலம் கடவுள் வழங்கியிருக்க, சுந்தர பாண்டியனோ அவனை ஒரு முக்கியமான கேஸ் ஒன்றின் குற்றவாளியாக்கி அவனை என்கவுன்டரில் சுட்டுத் தள்ளியதாய் கேஸை முடித்து விட்டார்.

ஆனால் அந்த பொறுக்கியை கொன்று, அவனின் தமையனும், ஜே.கே குழுமத்தின் சேர்மேனுமான ஜித்தேஷ் வர்மாவின் மனதில் வன்மத் தீயை பற்ற வைத்து விட்டது தெரியாமல் தமிழகம் வந்து சேர்ந்திருந்தனர் கீதாவும் அவளின் தகப்பனும்.

தன் உயிருக்கு உயிரான ஒரே தம்பியை கொன்றுவிட்டது கீதா தான் என்பதை அறிந்து அவள் மேல் வன்மத்தை வளர்த்துக் கொண்ட ஜித்தேஷ் தான் இந்த ஒரு வருடமாக அவளைக் கொல்ல பல திட்டங்களை போட்டு விட்டான்.

அவன் போடும் திட்டங்கள் யாவும் தோல்வியிலே சென்று முடிய, இந்த முறை செயலில் தானே இறங்க முடிவு செய்திருந்தான் அவன்.

ஜித்தேஷின் குடும்பத்திற்கு எதிராக அப்போது வேறு ஒரு வழக்கு வேறு போய்க்கொண்டிருந்ததில் கீதாவின் விஷயத்தை கொஞ்சம் கவனமாகத் தான் கையாண்டான். அதனால் தான் இத்தனை திட்டங்கள் சொதப்பிய போதும் இந்த ஒரு வருடமாய் நேரடியாய் இந்த விஷயத்தில் இறங்காமல் இருந்தவன், இப்போது ஒரு முடிவோடு கீதாவின் கதையை முடிக்க தானே கிளம்பி மதுரை வந்திருந்தான்.

அன்று கோவிலில் கீதாவை கொலை செய்ய வந்த கும்பலை பிடிப்பதற்காக வந்த ஜீவா அங்கு அவர்களின் காரை பின் தொடர்ந்து கொண்டிருந்த காரில் இருந்த MPயின் அடியாட்களை பிடித்த பின்பு அங்கு மறைவாய் நின்றிருந்த இன்னொரு காரைக் கண்டு குழப்பமுற்றவன் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து சென்றான்.

அந்த தடியன்களில் ஒருவனை பிடித்து அடித்து  அவனிடமிருந்து கறந்த இந்த அனைத்து  விஷயங்களையும் ஜீவா,  அஜயிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் போது தான் பரமசிவன் அனைத்தையும் கேட்டுவிட, அவர் மனதில் கீதாவினால் தங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சி இந்த திருமணத்திற்கு சம்மதிக்காமல் மறுக்கிறார்.

இவை அனைத்தையும் அஜயின் வாய்மொழியாக கேட்ட அஸ்வத், எதுவும் பேசாமல் உணர்ச்சிகள் அற்றுப்போய் இருள் கவ்வத் தொடங்கியிருந்த அந்த வானை வெறித்துக் கொண்டு நின்றான்.

அவன் முகத்தை வைத்து அவன் என்ன நினைக்கிறான் என்பதை அஜயால் கண்டுகொள்ள முடியாமல் போக,

” என்ன அஸ்வத் ஏதும் பேச மாட்டேங்குற?? என்ன நினைக்குறன்னு சொன்னா தான தெரியும்” என்று அஜய் வினவ,

 அஸ்வத்தோ நன்றாக திரும்பி நின்று கொண்டு அஜயின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவன், ” என்ன சொல்ல சொல்ற அஜய்?” என்று என்ன உணர்வென்று பிரித்தறிய முடியா குரலில் கையைக் கட்டிக் கொண்டு வினவினான்.

‘ இப்படிக் கேட்டால் என்ன சொல்வது ‘ என்று குழம்பிய அஜயும் தயக்கத்துடன், ” நான் இப்போ சொன்னதை பற்றி.. அஞ்சலியை பற்றி.. உனக்கு ஏதும் வருத்தம் இல்லையே” என்று மெதுவாக கேட்க,

அவனை கூர்மையுடன் பார்த்த அஸ்வத், ” எனக்குப் புரியலை அஜ்ஜூ.. அஞ்சலியை அவளுக்கே தெரியாம ஒரு வெறிநாய் கடித்திருக்கு.. அதுக்கான வைத்தியமும் பார்த்து அந்த நாயையும் கொன்னாச்சு.. இதுல நான் வருத்தப்பட என்ன இருக்கு.. ஆனா எனக்கு ஒரு வருத்தம் இருப்பது என்னவோ உண்மை.. அந்த வெறிநாயை என் கையால கொல்ல முடியாம கீதா பண்ணிட்டா..கீதா மட்டும் அதை பண்ணாம இருந்திருந்தா என் அஞ்சலியை காயப்படுத்தின அந்த வெறிநாயை என் கையால கொன்னு என் ஆத்திரத்தை தீர்த்திருப்பேன்.. என் மனசும் நிம்மதியாகிடுக்கும்..” என்று கண்கள் இரத்தமென சிவப்பேற கோபத்தை அடக்கிய குரலில் அஸ்வத் கூற,

அடுத்த நொடி அவனை தாவி அணைத்துக் கொண்ட அஜய், ” ஐ அம் சோ பிரவுட் ஆஃப் யூ அஷு” என்று தன் அண்ணனின் காதலை எண்ணி பெருமையுடன் கூற,

“என்னைக்கும் இந்த உண்மை அஞ்சலிக்கு மட்டும் தெரியக்கூடாது அஜ்ஜு .. அவ தாங்கமாட்டா.. அவ மனசு பூ மாதிரி.. சட்டுன்னு வாடிடும்..” என்று தன்னவளுக்காக யோசித்து பேசியிருந்தவனின் குரல் சற்று கலங்கியிருந்ததோ…

“அதெல்லாம் எப்பொழுதும் தெரியாது அஷு.. கவலைப்படாத” என்று ஆறுதலாய் அவன் தோள்களில் கை வைத்தான் அஜய்.

அஸ்வத் ஒரு புன்னகையை அஜய்க்கு பரிசளித்து விட்டு, தன் சிந்தனையில் மூழ்கி விட்டான்.

அவன் சிந்தை முழுக்க ஆட்சி செய்தது அவனுடைய அஞ்சலி மட்டுமே.. அஞ்சலியை பற்றி அனைத்து உண்மைகளும் தெரிந்த பின்பு தான் அவள்மேல் தான் கொண்டுள்ள காதலின் ஆழத்தையும் உணர்ந்திருந்தான் அஸ்வத்.

முன்பை விட இப்போது அஞ்சலி மேல் அதிகமாய் காதல் ஊற்றெடுக்க, அவளை என்றும் கலங்க விடாமல் கண்ணுக்குள் பொத்தி வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்ட அஸ்வத், அந்த இருள் வானில் வெளிச்சத்தை பரப்ப நிலவில் தன்னவளின் முகம் கண்டு அந்த நொடியை ஆழ அனுபவித்துக் கொண்டிருக்க, அவளின் நினைவுகள் தென்றல் காற்றாய் அவனை இதமாய் வருடி விட்டு சென்றது.

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!