Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கவிதையாய் ஒரு காதல்

கவிதையாய் ஒரு காதல்- கவிதை 8

கவிதை 8

அன்று இரவு முழுவதும் அழுதேன்.

அவனே நெருங்கி வந்து என்னை அணைத்துக் கொண்டான்.

“குழந்தை எனக்கு வேணும் ஹரிணி” என்றான்.



Advertisement

என்னிடம் விம்மல் வெளிப்பட்டது…

எந்த பதிலும் சொல்லவில்லை…

ஒரு வெறுமையான மனநிலை…

Advertisement

கர்ப்பமாக இருந்ததால் உடல் அசதிகள் வேறு…

Advertisement

வீட்டில் எல்லோரும் என்னை தாங்க ஆரம்பித்து விட்டார்கள்…

ஆனால் என்னிடம் உயிர்ப்பே இல்லை…

நடைப்பிணமான நாட்கள் அவை…

Advertisement

அவன் என்னை வைத்தியரிடம் அழைத்து சென்றான்.

பரிசோதனையும் செய்து கொண்டான்…

கிட்டத்தட்ட ஒரு மாதம் முடியும் நிலை அது…

அலுவலகத்தில் கூட வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய நடவடிக்கைகளை பற்றி பேச ஆரம்பித்து இருந்தார்கள்…

என் கனவை நான் விட்டு கொடுக்க தயாராக இல்லை…

உயிர்ப்பில்லாமல் இந்த வாழ்க்கை வாழவே இஷ்டம் இல்லை…

பிரபஞ்சனை இப்போது பார்க்கும் போதெல்லாம் கோபம் வந்தது…

அன்று அலுவலகத்தில் இருந்து கிளம்பி நேரே மருத்துவரிடம் சென்றேன்.

எனக்கு வழக்கமாக செக்கப் செய்யும் டாக்டர் மாலதி தான் அங்கே இருந்தார்…

கொஞ்சம் பயமும் தயக்கமும் இருந்தது…

நான் செய்ய போவது பெரிய பாவம் என்று தெரியும்…

ஆனால் இந்த பாழாய் போன மனது சமாதானம் ஆக மாட்டேன் என்று நிற்கின்றதே…

அவரும் என்னிடம் நலம் விசாரித்தார்…

“டாக்டர், அபார்ட் பண்ணலாமா?” என்று தயங்கி தயங்கி கேட்டான்…

அவருக்கு தூக்கி வாரிப் போட்டு இருக்க வேண்டும்…

விழிகள் அதிர்ந்து விரிந்தன…

“ஃபெர்ஸ்ட் பேபில?” என்று கேட்டார்…

ஆம் என்று தலையசைத்தேன்…

“ஏதும் பெர்சனல் பிரச்சனையா?” என்று கேட்டார்…

“இல்ல, எனக்கு ஃபாரின் ல வேலை கிடைச்சு இருக்கு” என்று இழுத்தேன்.

“நான் அபார்ஷன் எல்லாம் பண்ணுறது இல்லம்மா, உங்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்றேன் கேட்டுக்கோங்க, பலர் இங்க குழந்தை இல்லாம இருக்காங்க, குழந்தையை பெத்துக்கோங்க, அப்படியே உங்க கேரியரையும் பாருங்க, சில சமயம் ஃபெர்ஸ்ட் பேபி அபார்ட் பண்ணி பின்னாடி குழந்தை தங்காம போன நிறைய கேஸ் இருக்கு” என்று அறிவுரைகளை வழங்கி எனது மனதையும் கரைத்து இருந்தார்…

நானும் நன்றி சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டேன்…

அவர் சொன்னதும் நியாயமாக தெரிந்தது…

குழந்தை என்ன பாவம் செய்தது கலைப்பதற்கு…

என் குழந்தை…

என்னுடைய பிரபஞ்சனின் குழந்தை…

நீண்ட நேரம் யோசித்த நான், என் குழந்தைக்காக மட்டுமே ஒரு முடிவு எடுத்தேன்.

ஆம் இந்த அமெரிக்க பயணமே வேண்டாம் என்கின்ற பெரிய முடிவை எடுத்து, என் மனதை அதற்கு சம்மதிக்கவும் வைத்தேன்…

கஷ்டமாக இருந்தது…

அழுகை வந்தது…

ஏமாற்றம் தோன்றியது…

ஆனால் என் குழந்தை முக்கியமாக பட்டது…

வீட்டுக்கும் வந்து விட்டேன்…

இரு நாட்கள் கடந்து இருக்கும், இப்போதெல்லாம் பிரபஞ்சனை பார்த்து கோபம் வருவது இல்லை…

என் மனதும் இயல்புக்கு திரும்பிக் கொண்டு இருந்தது…

பெண்கள் வாழ்க்கையே அப்படி தானே…

ஒரு கட்டத்தில் சகித்துப் பழகி, அதுவே வாழ்க்கையாகி விடும்… குழந்தைக்காக கனவை தொலைத்து விட்டு வாழும் பெண்களில் நானும் ஒருத்தியாக முடிவெடுத்து விட்டேன்.

எனக்கும் அது தான் இக்கணம் நடந்தது…

அன்று சனிக்கிழமை…

நானும் வீட்டில் தான், பிரபஞ்சனும் வீட்டில் தான்…

காலையில் குளித்து விட்டு வந்த எனக்கு, கால்கள் வலிக்க ஆரம்பித்து விட்டன.

அடி வயிற்றில் சுள்ளென்று இரு வலி…

இடுப்பு தொடக்கம் எல்லா இடமும் வலி பரவியது…

வேகமாக குளியலறைக்குள் சென்றேன்…

எனக்கு மாதவிடாய் வந்து இருந்தது…

அப்படி என்றால் என் குழந்தை கலைந்து விட்டதா?

நினைக்கும் போதே இதயத்தை யாரோ கிழித்து எடுக்கும் உணர்வு…

அழுகையாக வந்தது…

“பிரபஞ்சன்” அழுகையுடன் மீண்டும் அறைக்குள் வர, அவனோ, “என்னாச்சு ஹரிணி?” என்றான்.

“அபார்ட் ஆயிடுச்சு” என்று சொன்னதுமே அவன் முகம் சட்டென இறுக, “சரி வா டாக்டர் கிட்ட போகலாம்” என்று சொன்னவனுக்கு வலி உள்ளுக்குள் இருந்தாலும் அதனை காட்டாமல் அக்கணம் என்னுடைய உடல் நிலைக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தான்…

வைத்தியசாலைக்கு கிளம்பும் போதே, “குழந்தை வேணாம்னு சொல்லியே குழந்தை கலைஞ்சு போச்சு” என்று என் அத்தை  திட்டியது கேட்டது…

“அம்மா கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?” என்று அவருக்கு திட்டி விட்டு என்னை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றான்.

எனக்கு உடல் வலியுடன் சேர்த்து மன வலியும்…

இப்போது தான் குழந்தையை பெற்றுக் கொள்ள நினைத்தேன், அதற்குள் இந்த விபரீதம் ஆகி விட்டதே…

டாக்டர் மாலதியிடம் தான் அழைத்து சென்றார்.

அவர் என்னை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு, “பீரியட் முடியும் வரைக்கும் பார்க்கலாம், இல்லன்னா டி அண்ட் சி பண்ணலாம்” என்று சொன்னவர் என்னை பரிசோதனை அறைக்குள் அழைத்து செல்ல தாதிகளிடம் சொன்னார்.

நானும் பரிசோதனை அறைக்குள் செல்ல, அவர் பிரபஞ்சனுடன் பேச ஆரம்பிக்க, எனக்கு தாதிகள் உள்ளே பரிசோதனைக்காக ஏற்பாடுகளை செய்தார்கள்…

பிரபஞ்சனுடன் பேசியவரோ, “நான் அவ்ளோ சொன்னேன் அபார்ட் பண்ண வேணாம்னு, எதுக்கு இந்த டிசிஷன்?” என்று கேட்க, பிரபஞ்சனுக்கு தூக்கி வாரிப் போட்டு இருக்க வேண்டும்…

இதெல்லாம் எனக்கு தெரியாது…

எனக்கு பரிசோதனைகளை முடித்து விட்டு அவர் வீட்டுக்கு அனுப்பி இருந்தார்…

பிரபஞ்சனின் முகமோ இறுகி போய் இருந்தது…

நான் ஓரளவுக்கு தேறி விட்டேன்…

எனக்கு அவனது முக இறுக்கத்துக்கு காரணமே தெரியவில்லை…

ஒரு மாதிரி வீட்டுக்கும் அழைத்து வந்து விட்டான்.

நானும் அவனுடன் வீட்டினுள் நுழைந்தேன்.

அவன் இதுவரை ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை…

முகத்தில் அப்படி ஒரு இறுக்கம்…

“டாக்டர் என்னவாம்?” என்று எனது அத்தை ஆரம்பித்தார்…

அவன் பதில் சொல்லாமல், என்னை நோக்கி மொத்தமா திரும்பினான்.

நான் அவனை புரியாமல் பார்க்க, அதுவரை தேக்கி வைத்து இருந்த ஆத்திரத்தை சேர்த்து ஓங்கி அறைந்து இருந்தான்.

நான் எதிர்பார்க்கவே இல்லை…

தடுமாறி கீழே விழுந்தும் விட்டேன்.

என் பிரபஞ்சன் எனக்கு அறைந்து விட்டானா?

நினைக்கவே நெஞ்சம் அடைத்துக் கொண்டது…

தலைக்குள் ஏதோ உருள்வது போல ஒரு உணர்வு…

நிதானத்துக்கு வர முடியவில்லை…

அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவே இல்லை…

அவனை விறைத்துப் போய் பார்த்தேன்.

என் அத்தையே, “என்னடா அடிக்கிற?” என்று அதட்டும் அளவுக்கு, அவனுடைய அறை இருந்தது…

“அறையாம என்ன பண்ண சொல்றீங்க? குழந்தை அதுவா கலையல, இவ தான் கொன்னு இருக்கா, டாக்டர் கிட்ட நமக்கு தெரியாம அபார்ட் பண்ண போயிருக்கா, டாக்டர் இல்லன்னு சொன்னதும் வேற எங்கேயோ போய் எல்லாம் பண்ணிட்டு நம்ம கிட்ட நடிச்சிட்டு இருந்து இருக்கா, ரொம்ப கெட்டவ இவ” என்று அவனாக ஒரு கதையை எனக்காக எழுதி இருந்தான்…

தூக்கி வாரிப் போட்டது எனக்கு…

“நான் டாக்டர் கிட்ட போனது உண்மை தான் பிரபஞ்சன், ஆனா அப்புறம் மனச மாத்திக்கிட்டேன்” என்று அழுகையுடன் எனது பக்க நியாயத்தை சொல்ல வந்தேன்…

காது கொடுத்து கேட்கும் நிலையில் அவன் இல்லை…

“வாயை மூடுடி, நடிக்காதே” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்…

“கொலைக்காரி, இப்படி பட்டவ உனக்கு தேவை தானா? அறுத்து விட்டு வேலைய பாரு டா” என்று சொன்னார்.

அவனோ, “எனக்கு வாய்ச்ச தரித்திரம் இவ, நீங்க சொன்னதை அன்னைக்கே கேட்டு இருக்கனும்… இவ்ளோ மோசமானவளா இருப்பானு எனக்கு தெரியல” என்று சொன்னான்…

நொறுங்கி விட்டேன்.

அவன் அடி கூட எனக்கு வலிக்கவில்லை, ஆனால் அந்த வார்த்தைகள் என்னை மொத்தமாக வதைத்தன…

என்ன சொல்லி விட்டான் அவன்? தரித்திரமாமே…

நடிப்பாமே…

நான் கொலைகாரியாமே…

செய்யாத ஒரு தப்புக்கு தண்டனை அனுபவிக்கும் வலி கொடியது…

நான் அனுபவித்துக் கொண்டு இருந்தேன்…

ஏற்கனவே உடல் வலி ஒரு பக்கம், குழந்தையை இழந்த வலி ஒரு பக்கம்…

இப்போது என் காதலும் பொய்த்து போய் விட்டதே…

என் மேல் நம்பிக்கை அவ்வளவு தானா?

“சத்தியமா நான் அபார்ட் பண்ணல” என்று கெஞ்சினேன்…

அதற்கும் தாறு மாறாக பேசினான் அவன்…

என்னுடைய பிரபஞ்சன் இல்லை இவன்…

குழந்தையை இழந்த வலி எல்லாமே என் மீது அவனுக்கு கோபமாக திரும்பியது…

கீழே விழுந்த என்னை தூக்கி விட கூட நினைக்கவில்லை…

என் கூட பேசவே இல்லை…

அறைக்குள் அனாதை போல அமர்ந்து இருந்தேன்…

உடல் களைப்பாக இருந்தது…

ஒரு வார்த்தை எப்படி இருக்கின்றேன் என்று கேட்கவில்லை…

“போய் தொலையவும் மாட்டேங்குறா” என்று ஹாலுக்குள் அவன் திட்டியது காதில் விழுந்தது…

கெஞ்சி விட்டேன்…

இதற்கு மேல் என்னால் என்ன செய்து விட முடியும்?

அன்று முழுவதும் யோசித்தேன்…

அடுத்த நாள் காலையில், “நான் அம்மா வீட்டுக்கு போறேன்” என்று சொன்னேன்.

“கிளம்பிடு, அது தான் உனக்கு நல்லது” என்றான்.

என்ன மாதிரியான வார்த்தைகள்?

எப்படி எல்லாம் காதலித்து இருப்போம்?

என் பக்க நியாயத்தை கூட கேட்காமல் ஒரு வைத்தியர் சொன்னார் என்று என் மீது இப்படி அனலை அள்ளி கொட்டுகின்றானே…

இதற்கு மேல் அங்கே இருக்க என் சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை…

வீட்டுக்கு கிளம்பி விட்டேன்…

அம்மா கொஞ்சம் பதறி தான் போனார்…

“எனக்கு ரெஸ்ட் வேணும் மா, அதான் வந்தேன்” என்றேன்.

நம்பாமல் எனக்கு தெரியாமல் பிரபஞ்சனுக்கு அழைத்து இருப்பார் போலும்…

அவன் நடந்ததை சொல்லி எனக்கு திட்டி இருப்பான் என்று நினைக்கின்றேன்…

அடுத்த நாளே என்னிடம் விசாரித்தார்.

“சத்தியமா நான் அபார்ட் பண்ணலம்மா” என்றேன்.

அவர் என்னை நம்பி மொத்தமாக அரவணைத்துக் கொண்டார்…

ஆனால் நம்ப வேண்டியவன் நம்பவே இல்லையே…

கொஞ்ச நாள் ஓய்வு எடுத்து விட்டு, அலுவலகம் சென்றேன்.

மீண்டும் அமெரிக்கா செல்வதை பற்றி பேச்சு வந்தது…

“நான் கிளம்புறேன் சார்” என்று ஆணித்தரமாக சொல்லி விட்டேன்…

சில விஷயங்களை அழுத்தத்தின் உச்சத்தில் எடுப்போம்…

அப்படி தான் இந்த முடிவும் எனக்கு அமைந்து போனது…

அவனும் சமாதானப்படுத்த வரவில்லை.

நானும் செல்லவில்லை…

அவனை பொறுத்தவரைக்கும் தவறு என் மீது…

என்னை பொறுத்தவரைக்கும் தவறு அவன் மீது…

அவனை பொறுத்தவரை நான் குழந்தையை கொன்ற கொலைகாரி.

இந்த கொலைகாரி வேண்டாம் என்று நினைத்து விட்டான் போலும்…

எனக்கு அமெரிக்கா செல்லும் நாளும் நெருங்கி விட்டது…

எனது அம்மாவிடம் சொன்னேன்…

பொங்கி விட்டார்…

“எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் தேவைம்மா” என்றேன்…

“இதெல்லாம் சின்ன விஷயம் ஹரிணி” என்று திட்டினார்…

பிரபஞ்சனிடமும் எடுத்து பேசினார்…

“டைவர்ஸ் கொடுத்துட்டு போக சொல்லுங்க” என்றான் இளக்காரமாக…

நான் அப்படி செய்ய மாட்டேன் என்று அவனுக்கு நம்பிக்கை…

எங்களுக்குள் விரிசல் அதிகரித்தது தவிர பிரச்சனை சீராகவில்லை…

நானும் பிடிவாதக்காரி தான்…

அவனே என்னை வேண்டாம் என்று சொல்லும் போது எனக்கும் அவன் வேண்டாம் என்று என் ஈகோ என்னை உசுப்பியது…

விவாகரத்து ஏற்பாடு செய்து விட்டு பறந்தும் விட்டேன்…

அமெரிக்காவில் மும்முராக வேலையை ஆரம்பித்தேன்.

பணத்தை சேர்த்தேன், பிஸினஸும் செய்தேன்…

இடையில் விவாகரத்தும் கிடைத்து விட்டது…

விவாகரத்து கிடைத்த அன்று கதறி அழுதேன்…

‘இனி என் பிரபஞ்சன் எனக்கு இல்லை’ என்று சொல்லியும் கொண்டேன்…

என்னுடைய தொழில் வாழ்க்கை வளர்ந்தது…

ஆனால் குடும்ப வாழ்க்கை பூஜ்ஜியமாகி போனது…

வீட்டிலும் பேசுவது ரொம்ப ரொம்ப அரிது…

அமெரிக்காவில் இருக்கும் இயந்திர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டேன்…

எட்டு வருடங்கள் கடந்து விட்டன…

என்ன தான் விவாகரத்து ஆனாலும், பிரபஞ்சனை விட்டு பிரிந்தாலும் அவன் மீதான காதல் என்னிடம் ஏன் குறையவில்லை என்று எனக்கே தெரியவில்லை…

அவனுக்கு திருமணம் என்று சொன்னதும் என்னிடம் ஏன் இந்த பதட்டம் என்று புரியவில்லை…

எனக்குள் அவன் மீதான காதல் இன்னுமே உறங்கிக் கொண்டு இருப்பதை அக்கணம் தான் உணர்ந்தேன்…

இதோ கிளம்பி வந்து விட்டேன்…

அவனை ஒரு கணம் பார்த்து விட்டால் போதும் என்கின்ற மனநிலை எனக்குள் முளைவிட்டு இருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!