Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

01. சின்னபொண்ணு - காதலுக்கு வேலி கட்டலாமாContest Stories 2026

காதலுக்கு வேலி கட்டலாமா 02

அத்தியாயம் 02



Advertisement

“ ஏன் தங்கம் அந்த விஜிதா எடுபட்ட கழுதை வீட்ட விட்டு அவனோட ஓடி போறதுக்கு நீ என்ன பண்ணின?..”

Advertisement

“ நான் எதுவுமே பண்ணல அப்பத்தா தினமும் டியூசன் போவேன். பள்ளிக்கூடம் போவேன். அண்ணனோட சைக்கிள் விளையாடுவேன். இதுதானே அப்பத்தா பண்ணுவேன். நான் எதுவுமே தவறா பண்ணலையே.. அவங்க ஏன் இப்படி என்ன இதுல மாட்டி விட்டுட்டு போனாங்கன்னு எனக்கு தெரியாது.

Advertisement

 பள்ளிக்கூடம் போயிட்டு வந்து டியூசன் போக முன்னாடி விஜிதா அக்கா தினமும் கேப்பாங்க இன்னைக்கு எது முதல் பாடம். கேட்டுட்டு அந்த நோட் கேப்பாங்க நானும் கொடுப்பேன். வாங்கி பார்த்துட்டு நேத்து நல்லா படிச்சியா?. கேட்பாங்க.. அப்படித்தான் ஒவ்வொரு நாளும் கேட்பாங்க.. அங்க போன உடனே அந்த அண்ணா இன்னைக்கு முதல் பாட நோட் தா தமிழன்னு கேப்பாங்க நானும் கொடுப்பேன்.. இப்பதானே அப்பா சொல்லும்போது எனக்கே தெரியுது அதுக்குள்ள தான் அவங்க கடிதம் வச்சு கொடுத்து இருக்காங்கன்னு.. விஜிதா அக்கா கையில இருந்து நோட்டை வாங்கிட்டு அங்க போய் சந்தோஷ் அண்ணா கேட்டதும் கொடுப்பேன்.. நான் இடையில் அதை பிரிச்சு பார்க்கிறதே இல்லை.. அதனால அதுக்குள்ள எனக்கு என்ன இருக்குன்னு தெரியாம இருந்துட்டேன் அப்பத்தா.. என் மூலமாவே அவங்க காதல் பண்ணியிருக்காங்க அதுவே நான் தெரியாம இருந்திருக்கேன்.. ”

Advertisement

“ அட எடுபட்ட கழுதைங்களா என் பேத்திக்கு தெரியாமலே என் பேத்திய ஏமாத்தி இப்ப என் பிள்ளையை இவ்வளவு அடி வாங்க வச்சிட்டு ஓடி போயிட்டாங்க.. எப்படி இருந்தாலும் இந்த ஊருக்குத்தானே வந்து ஆகணும் வரட்டும் அந்த விஜிதாவையும் அவனையும் முச்சந்தியில் வைத்து கிழிக்கிறேன்..” இன்னும் திட்டிக்கொண்டே அவளுக்கு பக்குவமாக மருந்தை போட்டுக்கொண்டு இருந்தார் பேபியம்மா..

“ கோமதி வாயை திறந்து சொல்லுடி நான் போய் தொலைஞ்சதுக்கு பிறகு இந்த வீட்ல என்ன எழவு நடந்துச்சு..”

“ நான் சமயல் கட்டுல வேலையா இருந்தேன் அத்தை.. அப்ப மூர்த்தி அண்ணன் வந்து உங்க மகனை கூப்பிட்டார்.. நான் வெளியே போய் பார்க்கும்போது அவரு ரொம்ப யோசனையா நின்னுட்டு இருந்தார்.. ”

“ சரவணா சரவணா வெளிய வா..

 டேய் சரவணா கூப்பிடுறதுக்கு கேட்கலயா?.. வெளிய வா.. ”

வெளியே நின்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சமையலறையில் வேலையாக இருந்த கோமதி வெளியே வந்து பார்த்தார்..

“ சொல்லுங்க மூர்த்தி அண்ணா.. அவர் தோட்டத்துக்கு போயிருக்கார்.. வீட்டுல இல்லையே.. உள்ள வாங்க.”

“ கோமதி தப்பா நினைக்காதம்மா நான் வீட்டுக்குள்ள வந்து இருந்து சாவகாசமா பேசுற சூழ்நிலையில் இல்ல.. சரவணா வர லேட் ஆகுமா?. தமிழ் பாப்பா எங்க?.. தமிழ் பாப்பாவ கூப்பிடு அவ கிட்ட தான் நான் பேசணும்.. ”

“ அட அவளா?. அண்ணா அவ எங்க வீட்டுல இருக்கா? பரிட்சை முடிஞ்சு லீவு விட்டதுதான் தாமதம் அவங்க அண்ணனோட சைக்கிள்ல ஊர் சுத்த போயிட்டா.. இனி அவங்க அப்பாவோ இல்ல அவங்க அப்பத்தாவோ வீட்டுக்கு வர நேரம் தான் சரியா வீட்டுக்கு வந்து சேருவா.. முகமெல்லாம் சோர்வா இருக்கு. ரொம்ப பதட்டமா இருக்கீங்க?. என்ன ஏதும் பிரச்சினையா அண்ணா?..”

“ பெரிய பிரச்சனை தான் மா. அதை ஏன் கேக்குற?. இன்னைக்கி மதியம் நான் கடைக்கு போயி கடையில கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துட்டு ஞாயிற்றுக்கிழமை அரை நேரத்தோட கடை மூடுறது தானே..! மூடிட்டு சாப்பிட வீட்டுக்கு வந்து பார்த்தா வீட்டில் சமையல் பண்ணல.. வேலையும் எதுவும் பண்ணல போட்டது போட்டபடியே அப்படியே இருக்கு. விஜிதாவை காணல.. எங்க போயிட்டாலோ தெரியலன்னு எல்லார்கிட்டயும் அக்கம் பக்கத்துல கேட்டேன்.. இந்த நேரத்தில் கோயிலுக்கும் போகவும் வாய்ப்பு இல்லை..

 மதியம் 12 மணி போல எல்லா வீட்டு பொம்பளைகளும் வீட்டுக்குள்ள சமையல் பண்ணிட்டு இருப்பாங்க.. அந்த வெயில் நேரத்தில் யாரும் அதிகமாக வெளியே வராத நேரம் பார்த்து வீட்டை விட்டு வெளியேறி போய் இருக்கா.. பக்கத்து தெரு மூக்காய் பாட்டி தான் கையில பையோட உன் மக இந்த பக்கம் போனா.. ஒரு மணி நேரத்துக்கு முந்தி போனாலேன்னு சொன்னாங்க.. நானும் பெரியவன் கிட்ட கடைக்கு போய் கறி வாங்கி கொடுன்னு சொல்லி காசு கைல கொடுத்துட்டு தான் போனேன்.. அவனையும் வீட்ல காணல.இவளையும் காணல. கடைக்கு தான் இவளே கறி வாங்க போயிட்டாளோன்னு கடை தெரு வரைக்கும் போனேன்.. அங்க மெயின் ரோட்டில் சிவா அண்ணே ரொம்ப பதட்டமா நின்னுட்டு இருந்தாரு.. என்னன்னு விசாரிச்சேன்.. தங்கச்சியை டவுன்ல இருந்து அழைச்சிட்டு வரேன்னு கார் எடுத்துட்டு போறதா சந்தோஷ் சொல்லிட்டு போனானாம்.. இப்ப திடீர்னு பார்த்தா உன் பொண்ணு கார்ல ஏறி சந்தோஷ் கூட போறதை பார்த்து இந்த கடைக்கார அண்ணன் சொன்னார்.. இந்த பொண்ணு எங்க அவனோட கார்ல போகுதுன்னு நானும் யோசிச்சுட்டு நிக்கிறேன் அங்க டவுன்ல இருந்து என் பொண்ணு கால் பண்ணிக்கிட்டே இருக்கா. அண்ணனை காணலப்பான்னு.. போற வழியில இந்த பொண்ணயும் விட போனானா? இல்லை ஏதும் பிரச்சினையா?.. எதுவும் எனக்கு தெரியலை மூர்த்தி.. ”

 இவ்வளவு நடந்தும் இன்னும் அந்த இரண்டு தகப்பனுக்கும் தங்கள் பிள்ளைகளை தவறாக நினைக்க தோன்றவில்லை.. ஆனால் அவர்களின் நினைப்பை மீறி அவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு சென்று விட்டார்கள்..

“ என் பொண்ணு ஏன் சிவா அண்ணே உங்க மகனோட கார்ல ஏறி போகணும்.. அதுக்கு வாய்பே இல்லை.. நான்தான் கறி வாங்குறதுக்கு கூட காசு பெரியவங்க கிட்ட கொடுத்துட்டு போனேன்.. திடீர்னு அவ பையோட வெளிய போறான்னு சொல்லவும் நானும் தேடி கடை தெரு வரைக்கும் வந்தேன்.. என்ன ஏதும் பிரச்சனையா என்று தெரியலையே..பெரியவனுக்கு அழைப்பும் போகலையே.. ”

 அப்பொழுது சிவாக்கு அவரது வீட்டில் இருந்து கைபேசிக்கு அழைப்பு வந்தது..

“ என்னங்க நம்ம மோசம் போயிட்டோங்க.. நம்ம மகன் அந்த மூர்த்தி மக விஜிதாவை காதலிச்சு ஊர விட்டு ஓடி போயிட்டாங்க.. அவனுக்கு அவளை தான் ரொம்ப புடிக்குமாம் நம்மகிட்ட சொன்னா சாதி வேறுபாடு காட்டி கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோம். அவனுக்கு விஜிதாவை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லையாம்.. அவ இல்லாட்டி தற்கொலை பண்ணிப்பானாம்.. நாமளும் எப்படியும் ஒத்துக்கொள்ள மாட்டோம் அதனால் வேற வழி தெரியல நாங்க ஊரை விட்டு போய் கல்யாணம் பண்ணிக்கபோறோம்.. கடிதம் எழுதி வச்சிட்டு போயிருக்காங்க எனக்கு என்னமோ படபடன்னு வருது சீக்கிரம் வீட்டுக்கு வாங்க.. ”

சிவா மனைவி மாலதி அழைத்து விசயம் கூற இருவரும் அடித்து பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்..

 தமிழுடன் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண் அவளது நோட்டை எடுப்பதற்காக சந்தோஷ் வீட்டிற்கு வந்தாள்.. அங்கே சந்தோஷ் இல்லாததால் அவன் அம்மா மாலதி அதை அவனது அறையில் இருக்கும் எடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தார்..

 அப்போது அவள் ஒவ்வொரு நோட்டாக எடுத்து பார்த்துக் கொண்டிருக்கும் போது தமிழின் நோட்டுக்குள் இருந்த கடிதம் தான் அவள் கையில் சிக்கியது. அதை எடுத்து அவள் படித்து பார்த்துவிட்டு உடனடியாக மாலதியிடம் கொடுத்து விஷயத்தை கூறிவிட்டு அவளது நோட்டை எடுத்துக்கொண்டு சென்று விட்டாள்.. சத்தமே இல்லாமல் வெடிகுண்டை மாலதி தலையில் இறக்கிவிட்டு ஓடிவிட்டாள் அந்த குட்டி..

 அந்த விவரம் சொல்லத்தான் மாலதி சிவாவை அழைத்து அழுது புலம்பியதும்.

 வீட்டுக்கு வந்த சிவா மற்றும் மூர்த்தியின் கையிலும் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது. அவர்களும் படித்துப் பார்த்துவிட்டு இருவரும் அதிர்ந்து போய் தலையில் கை வைத்து விட்டார்கள்..

அந்த ஊரில் சாதிவேறுபாடு என்ற ஒன்று இருக்கிறது தான். ஆனால் சாதாரணமாக பழகுவதற்கு சாதியை அவர்கள் மையப்படுத்துவதில்லை.. அண்ணன், தம்பி என தான் பழகுவார்கள்.. ஆனால் முக்கியமான இடத்தில் ஜாதி முன்னே வந்து நிற்கும்..

 சிவாவும் , மூர்த்தியும் வேற்று ஜாதிக்காரர்கள் அதனால் இருவரும் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என நினைத்த பிள்ளைகள் அவர்கள் திருமண வாழ்க்கையை தேடிச் சென்று விட்டார்கள்..

 இருவரும் பக்குவமான பிள்ளைகள் கஷ்டம் தெரிந்து வளர்ந்தவர்கள். இப்படி ஒரு காரியம் செய்வார்கள் என்று நினைக்கவில்லை.. அதனால் மன வருத்தத்துடன் யாரை யார் பேசுவது என்று தெரியாமல் இருக்கவும் மூர்த்தி அழுது கொண்டே அங்கிருந்து சென்றார்..

 ஆனால் அதை மாலதி விட வேண்டுமே அவள் தன் வாய்க்கு வந்ததுதான் பேச்சு என்று வார்த்தையை கொட்டி விட்டார்..

“ ஏண்டி மாலதி வார்த்தையை பார்த்து பேசு. அந்த மனுஷனுக்கும் என்னன்னு விஷயம் தெரியாம தான் இடிஞ்சு போய் ரோட்டுல நின்னார்..

நம்ம வீட்டு பிள்ளைங்களை நீயும் நானுமோ..! அல்லது ஊர்ல இருக்க வேற யாரும் ரோட்ல பார்த்தேன். கோயில்ல பார்த்தேன்.கடை தெருவுல பார்த்தேன்னு தப்பா ஒரு வார்த்தை பேசி இருப்பாங்களா?.. இல்ல அவங்க தான் நமக்கு சந்தேகம் வர மாதிரி லவ் பண்றது எடுத்து காட்டி இருக்காங்களா?. எதுவுமே இல்லையே..! அவங்களை முன்ன பின்ன ரெண்டு பேரும் நேர்ல சந்திச்சு பேசி யாரும் பார்த்ததில்லை.. அந்த பொண்ணு அவங்க வீட்டுல அமைதியா இருக்கும். இவன் அவன் வேலை உண்டுன்னு இருப்பான். அப்படி இருந்தவங்க கடிதம் மூலமா காதலிச்சு நம்மள எல்லாம் ஏமாத்திட்டு போன மாதிரி தான் அவருக்கும் நடந்திருக்கு . அவங்க காதல் அவங்களுக்கு பெருசா போயிடுச்சு. பெத்தவங்க அவங்களுக்கு முக்கியமில்லன்னு போயிட்டாங்க. போனவங்க போகட்டும் இருக்கிறவங்க நிம்மதியை ஏன் கெடுக்கணும். மகன் என்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு போய்விட்டானேன்னு எனக்கும் வருத்தம் தான். அதுக்காக அந்த மனுசன திட்டினால் ஆயிடுமா?. அவருக்கும் அதே வருத்தம், ஏமாற்றம் இருக்கும் தானே. இனி யாரும் இதைப்பற்றி பேசக்கூடாது. நான் போய் என் பொண்ண அழைச்சிட்டு வரேன்.. என்று கோபமாக கூறிவிட்டு சிவா அங்கிருந்து சென்று விட்டார்.. மூர்த்தி அவர்களின் பேச்சில் திகைத்தாலும் என்ன செய்வது என அறியாது நேராக சரவணன் வீட்டுக்கு சென்றார்..

 சிவா மூர்த்தியின் கலங்கிய முகத்தை தன்னிடத்தில் வைத்துப் பார்த்ததால் மனைவியை அவரை ஒரு சொல் சொல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு சென்றார். ஆனால் தமிழ் எனும் ஒரு தேவதையை தன் மனைவி காயப்படுத்தப் போகிறாள் என்பதை அவர் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அதற்கும் மனைவியை கட்டுப்படுத்தி விட்டு சென்றிருப்பார்..

 சிவா அங்கிருந்து சென்றதும் மாலதி உடனடியாக அவளும் சரவணன் வீட்டுக்கு வந்தார். அப்பொழுதுதான் சரவணன் உணவு உண்ணுவதற்கு வீட்டுக்கு வந்த நேரம். சைக்கிள் ஓட்டி பழகுவதற்காக சென்று இருந்த செழியனும்,தமிழும் வந்தார்கள் நேரடியாக மாலதியே தமிழை இழுத்து கன்னத்தில் அடித்து விட்டார்..

 பதறி அடித்து ஓடி வந்த சரவணன் மகளை தன் பின்னால் இழுத்து நிறுத்தவும் “ என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்க நீ.? என் வீட்டுக்கு படிக்க வந்தாளா? இல்ல என் மகனுக்கும் அந்த விஜிதாக்கும் புரோக்கர் வேலை பார்க்க வந்தாளா?. இவ நோட்டுல தானே கடிதம் வச்சு கொடுத்து இருக்காங்க. இவளுக்கு தெரியாமலா இருக்கும்.. 13 வயசுல இன்னும் வயசுக்கு வராத நேரத்திலேயே பெரிய முத்தல் வேலையெல்லாம் உன் புள்ள செய்ய பாக்குது.. இது எதுவும் தெரியாமல் தான் நீ இந்த வீட்டில ஆம்பளையா இருக்கியா என்ன?.. நல்லா லட்சணமா வளர்த்து வெச்சிருக்க.

 இப்ப யாருக்கு அசிங்கம் எங்களுக்கு தானே அசிங்கம்.. இதோ இந்த சீம ராசா மகளை இழுத்துகிட்டு என் மகன் போய்ட்டான்.. ஆனா அந்த மனுஷன் இவரை ஒரு வார்த்தை பேச கூடாதுன்னு என்ன திட்டிட்டு போறாரு. அப்ப எனக்கு இருக்கிற கோவத்த ஆதங்கத்தை நான் யாரிடம் கொட்டுவேன்.. இன்னைக்கு அந்த பாப்பா வந்து விஷயம் சொல்லாட்டி எங்களுக்கு எதுக்குமே தெரிந்திருக்காது. எத்தனை பிள்ளைங்க படிக்க வருது அவன்கிட்ட. அவங்க எல்லாம் படிக்க வந்து படிச்சிட்டு போற மாதிரி இல்லாம உன் பொண்ணு நல்ல வேலை பார்த்து வச்சிருக்கா. இப்படி சும்மா ரெண்டு பேரை சேர்த்து வைக்கிறதுக்கு இன்னும் வயது வந்த பிறகு காசு வாங்கிட்டு ரெண்டு பேரை சேர்த்து வச்சா அதுக்கு பேரே வேற.. ” இன்னும் என்னவெல்லாம் மாலதி பேச இருந்தாரோ அதற்கு முன்பு கோமதி மாலதியை அடித்துவிட்டார்.. தன் மகளை தாங்கள் யாருமே ஒரு சொல் சொல்லவில்லை.. அப்படிப்பட்ட மகள் அவர்கள் சொல்லும் அளவிற்கு அவள் நடந்து கொண்டதும் இல்லை.. அந்த வயதிற்கு மிகவும் அதிகமான பக்குவத்தில் இருப்பாள் தமிழ்.. அதுவும் பேபியம்மாவின் வளர்ப்பு என்றால் கேட்கவும் வேண்டுமா என்ன..! அப்படிப்பட்ட மகளை பேசுவதற்கு வார்த்தை இல்லாமல் என்னவெல்லாம் நெருப்புகளை அள்ளி வார்த்தைகளாக கொட்டி விட்டாள். அது எதுவும் விவரம் தெரியாத மகளுக்கு அர்த்தம் புரியாமல் அவள் முழித்துக்கொண்டிருப்பதை பார்த்து கோமதி மிகவும் மன வருத்தத்துடன் தன் மகளை இழுத்து அணைத்துக் கொண்டார்.. என்ன நடந்தது என சற்று நேரம் உணர்வு இல்லாமல் நின்ற சரவணன் மூர்த்தியும் நடந்தவற்றை சுருக்கமாக கூறி “ தமிழை ஏன் பாப்பா அப்படி பண்ணின நான் உன்னையும் என் பொண்ணாத்தானே பார்த்தேன்.. நீ விஜிதா இப்படி நடந்துக்கிறான்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் கண்டித்து வைத்திருப்பேன் தானே.. நீ என்கிட்ட சொல்லாம அவங்களுக்கு உதவி பண்ணி இருக்க.. அதனால் இப்ப இரண்டு குடும்பமும் சந்தி சிரிக்கிது இனி இது காலத்துக்கு எங்களுக்கு தலை குனிவு தானே.. அவங்களை நான் எங்க போய் தேடுவேன்..” என ஆதங்கமாகவும், கவலையாகவும் அவரும் தமிழை திட்டி விட்டு அங்கிருந்து செல்லவும் அனைத்து கோவத்தையும் வைத்துத்தான் சரவணன் தமிழை அடித்தார்..

 நடந்ததை அப்படியே கோமதி அவளது மாமியாரிடம் கூறியதைக் கேட்ட பேபி அம்மாவுக்கு கொலை வெறியே உண்டாகியது. இந்த சம்பவத்தை நடத்தி அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது..

 கமுக்கமாக இருந்து காரியத்தை சாதித்த விஜிதா,சந்தோஷ் மீது அதிகம் கோபம் கொண்டார்.. அவர்களின் வரவிற்காக காத்திருந்தார்.. தன் மகனை கோபத்தினால் அடித்து தள்ளிவிட்டார்.. ஆனால் மாலதிக்கு ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டார்.. அதற்கு நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தார்.. மாலதி என்ன வார்த்தைகள் கொண்டு சம்மந்தமே இல்லாத பச்சை பிள்ளையை பேசி அவளை காயப்படுத்தி விட்டாள் பாதகத்தி. என்று கோபம் கனத்துக் கொண்டிருந்தது அவருக்கு. அங்கே போய் சண்டை பிடிக்க தெரியாமல் இல்லை. ஆனால் அது அவரின் பழக்கமும் இல்லை.. மாலதிக்கு அவர் திருப்பிக் கொடுப்பதற்காக சந்தர்ப்பம் தான் பார்த்துக் கொண்டிருந்தார்..

 தமிழ் அப்பத்தாவின் மடியில் படுத்திருந்தது போலவே உறங்கி விட்டாள்.. அவரின் சிந்தனையை கலைக்கும் விதமாக தமிழின் அனத்தல் சத்தம் கேட்டதும் பதறிப் போய் பேத்தியை பார்த்தவர். அவளது உடல் அனலாக கொதிப்பதை தொட்டு உணர்ந்து கொண்டார்.. அடியின் தாக்கத்தால் அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டதை உணர்ந்து துடித்து போய்விட்டார்.. உடனடியாக தமிழுக்கு முகத்தை துடைத்து தலையை ஒதுக்கிவிட்டு ஒரு உடையை அணிந்து அவளை தூக்கிக் கொண்டு எதிரில் வந்த ஆட்டோவை பிடித்து யாருக்கும் சொல்லாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டார் பேபியம்மா..

 தமிழின் உடலில் காயத்தை பார்த்து மருத்துவர் பேபியமாவின் வயதையும் பார்க்காமல் அவருக்கு திட்டிவிட்டு காய்ச்சலுக்கும் உடல் காயத்துக்கும் மருந்து கொடுத்து அனுப்பி வைத்தார்..

தமிழை அழைத்துக் கொண்டு வெளியே வரும்போது எதிரில் வந்த கதிரை பார்த்த பேபியம்மா அவனிடம் தமிழுக்கு குடிப்பதற்காக ஏதாவது வாங்கி வர சொல்லலாம் என நினைத்து அவனின் அருகில் சென்றார்..

 உடல் சோர்வு காரணத்தால் அவள் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாள். அவளை அங்கிருந்து இருக்கையில் அமர வைத்துவிட்டு வந்தவர் “ என்ன கதிர் இந்த பக்கம் யாரை பார்க்க வந்த..”

“ அத்தை என் நண்பன் இங்க தான் வச்சிருக்காங்க. அவனுக்கு விபத்து நடத்துட்டு அவனை பார்க்க வந்தேன்..

 என்னத்த இந்த நேரத்துல ஹாஸ்பிடலுக்கு தனியா வந்துட்டீங்க உடம்புக்கு என்ன?. எங்க மாமா, அக்கா ஒருத்தரையும் காணல?.. ” என்றான்..

 “ எனக்கு ஒன்னும் இல்ல.. நம்ம தமிழுக்கு காய்ச்சல். அவளை காட்டுவதற்காக கூட்டிட்டு வந்தேன்.. பிள்ளைக்கு ரொம்ப முடியல அதான் என்ன செய்யன்னு தெரியாம நிக்கும்போது உன்னை பார்த்தேன். தங்கம் குடிக்கிறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வந்து தர முடியுமா?. அப்போதான் கொஞ்சம் ரோடு வரைக்கும் நடந்து வருவா.. ”

“ என்னத்த இப்படி கேக்குறீங்க? வாங்கிட்டு வரேன். நீங்களும் பக்கத்துல இருங்க நான் போய் சீக்கிரம் வாரேன்..”

 சொன்னது போலவே பேபியமாவுக்கு சூடான இஞ்சி டீயும், தமிழுக்கு பாலும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான்..

 பேபியம்மா டீ யை ஓரமாக வைத்துவிட்டு தமிழுக்கு பால் புகட்டுவதை பார்த்த கதிர் அவர் கையில் இருந்த பாலை வாங்கி அவன் பக்கத்தில் அமர்ந்து அவளை தோளில் சாய்த்து மெதுவாக பாலை புகட்டினான்.. அவனாலே அவளுக்கு பக்கத்தில் இருக்கும் போது அவளது உடலில் இருக்கும் சூட்டை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனம் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது அவனுக்கு. அவன் கொடுப்பதை பார்த்துவிட்டு பேபியம்மா இஞ்சி டீ குடித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்..

 அவரிடம் இருந்த கைப்பேசியில் மகனுக்கு அழைத்து விஷயத்தை கூறினார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு வருவதாக சரவணன் கூறினார்.. இல்லை தங்களைத் வீட்டில் தேடுவார்கள் என நினைத்து தான் தகவல் சொன்னதாகவும் மீண்டும் அவர் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு பேத்தியை அழைத்துக் கொண்டு வந்து விடுவதாகவும் கூறிவிட்டு வைத்தார்..

 கொஞ்சம் கொஞ்சமாக கதிர் தமிழுக்கு பாலை கொடுத்ததும் அவளை அணைத்து உச்சியில் சிறு முத்தம் பதித்தான்.. அவன் கண்களில் கண்ணீர்..

அவளை சிறு வயதிலிருந்து அவனுக்கும் தெரியும். அவள் பிறந்ததிலிருந்து சகலமும் அவனுக்கு தெரியும்.. அவனும் அவளுக்காக சில நேர்த்திக்கடன் செய்து இருக்கிறான், ஆனால் இந்த காய்ச்சல் கூட அவளுக்கு வந்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அப்படிப்பட்ட அவனுக்கு அவள் அடிவாங்கியது தெரிந்தால் யார் தண்டனை கொடுக்காவிட்டாலும் அவன் காரணமானவர்களை தண்டிப்பான்.. அவனது மூர்க்ககுணம் தெரிந்து தான் பேபியம்மா தமிழுக்கு அடி விழுந்ததை சொல்லாமல் காய்ச்சல் என்று சொல்லி மறைத்து விட்டார்..

 பேபி வருவதை பார்த்தவன் முன்பிருந்தது போல் சாதாரணமாக அவளை தோளில் மட்டுமே சாய்த்துக் கொண்டு நிமிர்ந்து இருந்தான்.

 கதிரிடம் சொல்லிக் கொண்டு பேத்தியை அழைத்துக் கொண்டு செல்ல முற்பட்டவரின் கையில் இருந்து அவளை வாங்கி மெதுவாக அவன் மேல் சாய்த்து அணைத்து ரோடு வரைக்கும் அழைத்து வந்து ஆட்டோ பிடித்து அவர்களை ஏற்றி, அவனும் ஏறிக்கொண்டான். அவர்களது வீட்டை நோக்கி அந்த பயணம் தொடர்ந்தது..

 விடுமுறையின் முதலாவது நாள் மிகவும் மகிழ்ச்சியாக ஆரம்பித்த அன்றைய நாள் தமிழுக்கு இவ்வாறு முடியும் என அவள் நினைத்திருக்க மாட்டாள்.

 அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது.

மாமன் தொடுகையால் புத்தம் புது பூ பூத்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!