Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

01. சின்னபொண்ணு - காதலுக்கு வேலி கட்டலாமாContest Stories 2026

காதலுக்கு வேலி கட்டலாமா 04

அத்தியாயம் 04**2



Advertisement

சின்னதம்பி மகேஸ்வரி தம்பதியின் சந்தோஷமான வாழ்க்கைக்கு சாட்சியாக அவர்களுக்கும் முதல் பெண் குழந்தை பிறந்தது

Advertisement

மகேஸ்வரிக்கு ராஜேஸ்வரி அடுத்து இரண்டு வருடம் கழித்து கதிர்வேலழகன் என இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்..

Advertisement

Advertisement

கோமதிக்கு திருமணம் முடித்து வைக்கும் பொழுது கதிருக்கு ஐந்து வயது

 மகேஸ்வரியும் தன் மகளுக்கு கலாவதி செய்து வைத்த நகையோடு சேர்த்து அவர் அக்காக்கும், மகளுக்கும் என வாங்கி வந்ததையும் சேர்த்து போட்டுத்தான் சரவணனுக்கு சீரும் சிறப்புமாக கோமதியை திருமணம் முடித்து வைத்தார்கள்..

 சரவணன் நகை கொடுப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.. ஆனால் தன் மகளுக்கு தான் செய்வேன் என்று மகேஸ்வரி அடம் பிடித்து தான் செய்தார்..

 மகேஸ்வரி செய்ததற்கு எந்த குறையும் வைக்காமல் மகேஸ்வரியின் மகள் ராஜேஸ்வரியின் திருமணத்திற்கு சரவணன் அனைத்தையும் இரண்டு மடங்காகவே செய்து விட்டார்..

 கோமதியின் மகன் செழியன் மகேஸ்வரியிடம் தான் சிறுவயதில் இருந்து வளர்ந்தான்..

 அத்தை மற்றும் தாய் மாமனின் மக்கள் என்று கோமதி மற்றும் ராஜேஸ்வரியை ஏற்றுக்கொண்ட சரவணன் அத்தை மகனான கதிர்வேலழகனை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

 இந்திரன் கல்லூரி படிக்க சென்று வடநாட்டு பெண்ணை திருமணம் செய்து அவர்களின் ஊருக்கே சென்றுவிட்டார்.. அவரைப்பற்றி பேபியம்மா குடும்பத்திற்கு எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.. அவர்களும் ஆரம்பத்தில் தேடினார்கள் அதன் பின் அவனாக வரட்டும் என விட்டுவிட்டார்கள்..

 கதிருக்கு பின் அன்புச்செல்வி அன்பழகன் என ரெட்டையர்களை மகேஸ்வரி பெற்றெடுத்தார்..

 அப்போது தான் கோமதிக்கும் செழியன் பிறந்தான்..

 மூவரும் ஒன்றாகவே வளர்ந்தாலும் தாயின் தம்பி தாயின் தங்கை என மரியாதையாகவே செழியன் சித்தி மாமா என அழைத்தான்…

 அன்புச்செல்வியிடம் விளையாட்டு வைத்துக் கொள்ள மாட்டான் சித்தி என்றே பழகுவான்.. ஆனால் அன்பழகனிடம் மாமா என்று பழகினாலும் ஒரே வயது என்பதால் உரிமையோடு நண்பர்களாக இருவரும் பழகுவார்கள்..

 கதிரிடம் மட்டும் மரியாதை கலந்த பயம் அவனுக்கு எப்பொழுது இருக்கும்..

இவர்களுடன் லூட்டி அடிப்பது போல் கதிருடன் நின்று கூட சேர்ந்தார் போல் ஐந்து நிமிடம் பேசமாட்டான்…

 இப்படி இவர்கள் காலம் சென்று கொண்டிருக்க ஒருநாள் திடீரென எதிர்பாராத விபத்தில் ஆறுமுகம், சின்னதம்பியும் ஒரே நேரத்தில் அவர்களது வாழ்க்கையை துறந்தார்கள்..

 பேபியம்மா மற்றும் மகேஸ்வரிக்கு தங்களது கணவரை இழந்தது மற்றும் அண்ணன்களை இழந்தது வலியாகவும் தாங்க முடியாது துன்பமாகவும் இருந்தது. ஆறு மாதங்களாக அதிலிருந்து மீண்டு வராமல் தவித்து தான் இருந்தார்கள். ஆனால் இங்கு சரவணன் அங்கு கதிரும் தான் தங்களது குடும்பத்தை தூணாக தாங்கி நின்று அடுத்த கட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றார்கள்..

கதிர் பிளஸ் டூ பள்ளி படிப்புடன் படிப்பை முடித்துக் கொண்டான்..

தங்கை, தம்பியை கல்லூரியில் சேர்த்து விட்டான்.. அவர்களின் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை.. அவர்களை நன்றாகவே பார்த்துக் கொள்கின்றான்..

 மகேஸ்வரி சின்னத்தம்பியின் திருமணத்தின் போது வாங்கிய அந்த இடத்தில் சின்ன வீடு தான் கட்டியிருந்தார்கள். கதிர் தலை எடுத்து தொழிலில் கால் ஒன்றிய பின் இரண்டு அறை, சமையலறை, பூஜை அறை, கூடம் என அளவான சிறிய ஓட்டு வீட்டை கட்டினான்.

 அவர்களின் இடத்தைச் சுற்றியுள்ள இடங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கினான்.. நடுவில் வீடு அதை சுற்றி வயல் காணிகள், தோட்ட காணிகள், என ஐந்து ஏக்கர் வயல் காணியும், மூன்று ஏக்கர் தோட்டகாணியும் தற்போது இருக்கிறது..

 அந்த இடம் பார்க்கவே பச்சை பசேல் என்று கண்ணை கவரும் வகையில் அழகாகவே இருக்கும்..

 வீட்டின் முன்புறம் அழகிய பூந்தோட்டம் அமைத்திருந்தான். மல்லி, முல்லை, கலர் வகையான செம்பருத்தி நித்தியகல்யாணி, எக்ஸோரா போன்றவை பூஜைக்குறியவை..

 அவன் தோட்டத்தில் பூக்கும் பூக்கள் தான் அங்கே சுற்றியுள்ள மக்களுக்கு அவர்களின் பூஜை அறையை அலங்காரப் படுத்தும்.. காலையில் நான், நீ என அடித்து படித்துக் ஓடி வந்து தேவையான பூக்களை பரித்து செல்வார்கள்..

 ரோஜாவிலும் நான்கு, ஐந்து கலர் வகைகள் ரோஜா அதை யாருக்கும் பார்வைக்கு தெரியாமல் வீட்டுப் பெண்களுக்காக தனியாக வளர்கிறான்..

 ஒரு பக்கம் பழ மரங்களும் கொய்யா, சீத்தா, பப்பாளி, தோடை, மா,பிலா, வாழை, மாதுளை, நெல்லி, அடுத்து தென்னை மரங்களும் தோப்பாக அமைத்து இருந்தான்.. அதற்கு இடையில் காய்கறி தோட்டம் அமைத்திருந்தான்.. தென்னைமரம்,மாமரம் அவர்களுக்கு இடையில் இருக்கும் இடத்தில் முருங்கைமரம், பாக்குமரம், கத்தரி, வெண்டி, மிளகாய் செடி, பயத்தை, புடோல், பாகல்,பீக்கை, சுரக்காய் போட்டு பந்தல் போட்டு இருந்தான்..

இஞ்சி, மஞ்சள், மரவள்ளி கிழங்கு, பங்கிழங்கு மேடை, சக்கரவள்ளி கிழங்குவகைகள். ஒரு பக்கம்.

கற்றாளை, கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை போன்ற மருத்துவ குணம் கொண்ட செடிகள்.. ஒரு பக்கம்

மல்லி இலை, தூதுவளை, முடக்கத்தான், கருவேப்பிலை, ரம்பை, புதினா, பொன்னாங்கண்ணி, கீரை வகைகள், ஒரு பக்கம்

  ஒரு அடி இடத்தை கூட சும்மா விடாமல் ஒவ்வொரு இடத்திலும் வீட்டுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்திருந்தான்..

 தேவையான காய்கறிகள் வெளியே வாங்கவே மாட்டார்கள். ஒரு நாளைக்கு இரண்டு காய் வீதம் சமைத்தாலும் அந்த வாரம் முழுதும் விதவிதமாக சமைக்க கூடிய அளவுக்கு செய்து வைத்திருந்தான்..

அதேபோல் பழங்கள் கூட நாட்டு பழங்களை வெளியே வாங்கவே மாட்டார்கள்..

 அரிசிக்கும் பஞ்சம் இருக்காது ஒருபோகம் நெல் விளைந்தால் அந்த போகம் முழுதும் வீட்டுக்கு தேவையான அளவு நெல்லை பூஜை அறையில் எடுத்து வைத்துவிட்டு தான் மீதம் இருப்பதை விற்பனை செய்வான்..

 அவன் வீட்டில் செய்பவற்றில் அக்காக்களுக்கும் பங்கு கொடுப்பான்..

 சரவணன் தங்கள் வீட்டிற்கு கொடுக்க வருவதை விரும்புவதில்லை.. ஆனால் மனைவி,தாயின் மனம் நோகாமல் இருக்க தடுக்காமல் இருப்பார்..

 வீட்டில் ஆடு,மாடு, கோழி, வாத்து அதுவும் ஒரு பக்கம் வளர்த்து வருகிறான்..

 வாத்து முட்டை,நாட்டுக்கோழி முட்டை, பால் இவற்றுக்கு கூட பஞ்சமில்லை..

 தோட்டத்தின் எல்லைகளில் வேப்ப மரங்கள் நிழலுக்காக நட்டு வைத்திருந்தான் அதுவும் வளர்ந்து விட்டது..

 அவர்களின் வயலின் முடிவின் பின்பு ஆறு போல் ஓடை நீர் ஓடுகிறது..

 அதில் தேவையான குளத்து மீன், சீசனுக்கு இறால், நண்டு என அசைவமும் அவனே பிடித்துக் கொள்வான்..

பூண்டு, வெங்காயம், ஆங்கில காய்கறி, பழங்கள் கரெட், பீன்ஸ், லீக்ஸ், கோவா ஆப்பிள் ஆரெஞ்சு திராட்சை,அவகாடோ, இப்படியான அவன் நிலத்தில் செய்ய முடியாதவற்றை பஜார் சென்றால் வாங்கி வருவான்..

மொத்தத்தில் அன்றாடம் ஒரு வீட்டுக்கு தேவையான அனைத்தையும் வெளியே சென்று வாங்க தேவையே இல்லை.. அனைத்தையும் பெரும் அளவில் அவனே சுயமாக வீட்டுக்கு தேவையான அளவிலும் செய்து கொண்டு அதை மீதம் உள்ளதை விற்பனையும் செய்து கொண்டு வீட்டோடையே அவன் வாழ்க்கை ஓடுகிறது..

 பார்ப்பதற்கு அவன் வீட்டை சுற்றியுள்ள இடங்களும் அந்த ஓடையும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், மனதுக்கு இதமாகவும், நிறைவாகவும் இருக்கும். அங்கே வாழ்ந்தால் சொர்க்கத்தில் வாழ்வதை போல் உணர்வது நிச்சயம்..

 கிராமத்து வாழ்க்கையை ரசிப்பவர்களுக்கு கதிர்வேலழகன் வீடு சொர்க்கமே..

 அக்காவின் வீட்டில் இருந்து புறப்பட்டு மருத்துவமனை சென்று நண்பனை பார்த்து அவனுக்கு பண உதவியும் செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்தவன் அக்காவின் வீடு சென்றதைப் பற்றி தாயிடம் எதுவும் கூறவில்லை.. அதை சொன்னால் திடீரென காரணம் இல்லாமல் அங்கே ஏன் போனாய் என கேட்டு அவனை தொலைத்து விடுவார்..

 அதனால் பேபியம்மா கொடுத்த புடவை அவனிடமே இருந்தது. அவருக்கு பிறந்தநாளுக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருப்பதால் இடையில் ஒரு நாள் கொடுத்துக் கொள்ளலாம் என வைத்து விட்டான்..

 வழமை போலான அவனது நாள் அழகாகவே விடிந்தது அவனின் சின்னப்பொண்ணுவின் சிறிய வயது புகைப்படம் அவளை கையில் அவன் தூக்கி வைத்திருந்த புகைப்படத்தில் தான் அவனது காலை பொழுது எப்பொழுதும் விடியும்.. அந்த புகைப்படத்தை பார்த்து அவளுக்கு காலை வணக்கம், இரவு வணக்கம் சொல்லிவிட்டு தான் அவன் காலை எழுவதும், இரவு உறங்குவதும்..

இன்றும் அப்படியே. காலைக்கடனை முடிப்பதற்காக வெளியே வந்தான்..

 காலை கடன் முடித்து விட்டு வந்து நீர் ஆகாரம் குடித்து விட்டு தோட்டம் மற்றும் வயல் என அவற்றை சுற்றியே அரை மணி நேரம் நடந்தான்..

 அதுவே அவனது அன்றாட உடற்பயிற்சி ஆகும்..

வயலில் நெல் அறுவடை செய்துவிட்டு

வீட்டு உணவிற்கு தேவையான பயறு, கெளப்பி, சோளம் இவற்றை மூன்று வயலில் மட்டும் போட்டிருந்தான்.. மிச்ச வயலில் நிலக்கடலை போட்டுருந்தான்..

அது இப்போதுதான் இரண்டு மாசம்..

 அப்போதான் வயலை வரம்பில் ஏறி சுற்றி பார்வையிட்டு முடித்து தோட்டத்துக்கு வந்து மரம், செடி, கொடிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது தான் அவனது கைபேசி பேபியம்மாவின் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது..

 கைபேசி வழியாக பேபியம்மா சொன்ன செய்தியில் ஆனால் ஒரு நிமிடம் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் நின்றான். அதை கரகித்த நொடி ஆர்ப்பரித்து கத்த வேண்டும் போல் இருந்தது.. ஆனால் அதை கைவிட்டு தன் தாயிடம் சொல்லி விட்டு உடனடியாக அக்கா வீட்டுக்கு செல்வதற்காக தயாராக ஆரம்பித்தான்..

 பள்ளி,கல்லூரி விடுமுறை என்பதால் தங்கை, தம்பி, ராஜேஸ்வரி கதிர், மகேஸ்வரி என அனைவரும் செல்வதற்கு இரண்டு ஆட்டோக்களை பிடித்து வந்தான்..

  இன்றைய காலை பொழுது மீண்டும் அவனது சின்ன பொண்ணு தரிசனம் பார்க்க அவனது பயணம் தொடர்கிறது அங்கே என்ன அசம்பாவிதங்கள் நடக்க காத்திருக்கிறதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!