Skip to content
Post Views: 659
அத்தியாயம் 06
கோமதி வீட்டில் இருந்து வந்ததும் ராஜி தன் தாயுடனே இருந்து கொண்டாள்.. மகளும் அக்கா வீட்டில் அதனால் தான் மட்டும் தன் வீட்டுக்கு செல்லாமல் தாய்க்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் தங்கையும் படிக்க செல்வாள்.. தாய்க்கு ஒத்தாசையாக அங்கே இருந்து விட்டாள்.. இரண்டு நாளைக்கு ஒருமுறை அவள் வீட்டுக்கு சென்று கூட்டிட்டு துப்புரவு செய்து விட்டு வருவாள்..
Advertisement
Advertisement
தமிழுக்கு விசேஷம் வைப்பதற்கு நாள் பார்த்து விட்டார்கள்.. அதையும் கோமதியும் சரவணன் வந்து மகேஸ்வரிக்கும்,ராஜிக்கும் முறையாக சொல்லிவிட்டு சென்றார்கள்..
Advertisement
மாப்பிள்ளை வந்த அன்று விடு விழா கோலம் கொண்டது போல் அமர்க்கபடுத்தி மாப்பிள்ளை விருந்தே வைத்து விட்டார் மகேஸ்வரி..
Advertisement
ஏனென்றால் சரவணன் அடிக்கொருக்கா இங்கே வரமாட்டான்.. எப்பயாவது இருந்துட்டு தான் வருவான்.. சொந்த அத்தை வீடுதான் ஆனாலும் அவன் வர மாட்டான்..
கதிருக்கு தான் யோசனை கூடியது நாளும் நெருங்கி விட்டது. இன்னும் அவனது செவளை அவன் மாட்டுக்கு அவன் பேசிய விலைக்கு யாரும் படிந்து வரவில்லை.. அவசரத்துக்கு ஒன்றை கொடுக்க எடுத்தால் அதை அடிமாட்டு விலைக்கு தான் கேட்பார்கள்.. அந்த கதையாகி போய்விட்டது மாடு ஆரோக்கியமாகவும் சந்தைகளில் நின்று பேசக் கூடியதாகவும் இருந்தது.. ஆனால் அவனது அவசரம் புரிந்து அவன் சொல்லும் விலைக்கு எடுக்க மாட்டார்கள்..
அப்படி விலை குறைத்து கொடுக்க அவன் விரும்பவில்லை..
ராஜிக்கு கல்யாணம் செய்யும் போது கதிருக்கு பதினைந்து வயது.. அதனால் அவனும் அக்காவிற்கு ஒன்றும் செய்யவில்லை.. மகேஸ்வரி தனக்கு வெளி நாட்டில் இருந்து கொண்டு வந்த நகைகளையும் சரவணன் ராஜேஸ்வரிக்கு செய்த நகையும் போட்டு தான் அவளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.. அதனால் கதிர் தலை எடுத்து அவன் செய்யும் முதல் சீர். அதனால் எந்த குறையும் வராமல் அக்கா மகளுக்கு செய்ய வேண்டும் என நினைத்து ஓடிக்கொண்டிருக்கிறான் அவனது விலைக்கு யாரும் படியவில்லை..
அதிக விலை சொல்லவில்லை நியாயமான சந்தை விலை தான் சொன்னான்.. அதிலும் மிகவும் குறைத்து கேட்கிறார்கள்.. அதனால் வேறு வழி தேடலாம் என்றால் கடன் வாங்க மாட்டேன் என்று தாயிடம் உறுதி கூறிவிட்டான்.. அவனுக்கும் இதுவரைக்கும் கடன் வாங்கி பழக்கம் இல்லை.. மனம் கவர்ந்தவளுக்கு முதல் முதலாக அவன் செய்து போடுவது அவனது உழைப்பில் உள்ளதாக இருக்க வேண்டும். யாரின் உழைப்பிலும் வந்ததாக இருக்க கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறான்.. என்ன செய்வது என்று தெரியாமல் யோசனையில் இருக்கிறான்..
அவசர தேவைகள் வரும் என்பதால் சுத்தமாக கையில் பணம் இல்லாமல் எடுக்க மாட்டான்.. அப்படி பார்த்தாலும் எழுப்பத்தி ஐயாயிரம் வரை அவன் கையில் இருந்தது. அதையும் மீறி இரண்டு என்று சொன்னவன் மூன்று கிடாயையும் விற்று விட்டான் அதில் வந்த பணமும் இருக்கிறது.
இருக்கும் பணத்தை வைத்து மூன்று சவரன் எடுக்கலாம்.. ஆனால் அவனுக்கு ஐந்து சவரன் போட வேண்டும் என்பது அவனது விருப்பம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..
நாள் நெருங்கிவிட்டது என்பதால் கையில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு நகை கடையில் போய் அவனக்கு பிடித்த டிசைனில் ஆரம் செய்ய முன் பணத்தை கொடுத்து அதையும் பதிவு செய்துவிட்டு வந்தான்.. விழாவுக்கு முதல் நாள் கேட்டிருந்தான். அதற்குள் மிகுதி பணம் எப்படியாவது புரட்டியாக வேண்டும்..
மகேஸ்வரியும் கேட்கக் கூடாது என்று தான் இருந்தார்.. ஆனால் நாளும் நெருங்கி விட்டது. மகன் சீர் செய்ய அதற்கான எந்த முன்னேற்பாடும் செய்த மாதிரி தெரியவில்லை.. மகன் முகமும் வாட்டமாக இருக்கிறது என்னவென்று மகனை விசாரித்தார்..
உண்மையை மறைக்காமல் தாயிடம் சொல்லி விட்டான் நடந்ததை.
“ கடன் வாங்க கூடாது சாமி. அது நம்ம கொடுக்கிற வரைக்கும் கழுத்தை நெறிக்குற மாதிரி இருக்கும்.. மூச்சுவிட முடியாது. அதனால இருக்குற பணம் மூணு சவரன் செய்யற அளவுக்கு இருக்கு தானே இப்போதைக்கு அதுவே போதும்.. தமிழ் கல்யாணத்துக்கு நம்ம இன்னும் சிறப்பா செஞ்சிடலாம். அப்ப உனக்கும் தொழில் ஒன்னு அமைந்திடும்.. இப்ப மனச போட்டு குழப்பாம இருக்கிற பணத்துக்கு செய்ய சொல்லுங்க.. ” என்றார் மகேஷ்.
அதை கேட்ட ராஜி “ அம்மா நீ ஏன் இடையில போற? கதிர் அஞ்சு சவரன் செய்ய வேண்டும் என்று மனசுல விருப்பப்பட்டுடான் அதை செய்யட்டும் மிச்ச பணத்தை நான் கொடுக்குறேன்.. தம்பி பிறகு பொறுமையா தரட்டும்.. வெளிய வாங்கினால் தான் கடன். அக்கா நான் கொடுக்கலாம் தானே.. ”
“ முக்கியமா உறவுகுள்ள தான் பணம் கொடுக்கல் வாங்கல் வைக்கவே கூடாது. அன்பையும், பாசத்தையும் உங்களுக்கு இடையில் பணம் தான் முறிச்சு வைக்கும்.. நல்லா அதை புரிந்து கொள்ளுங்க.
நீ இப்ப தம்பி பொறுமையா கொடுக்கட்டும்னு சொல்ற. உனக்கு ஒரு அவசர தேவை வந்துட்டு அப்ப அவன் கையில அந்த பணம் கொடுப்பதற்கு இல்லை. அப்ப நீ என்ன செய்வ. சும்மா உங்க ரெண்டு பேருக்கும் இடையில வீணா மனஸ்தாபம் தான் வரும். அதெல்லாம் வேணாம் யாராக இருந்தாலும் அது கடன் கடன் தான்.. ” என்றார் மகேஷ்..
அம்மா சொன்னதை கேட்டு “ இல்லக்கா இன்னும் ரெண்டு நாள் இருக்கு தானே பாப்போம்.. அப்படி இல்லாட்டி அம்மா சொன்ன மாதிரி நான் மூணு சவரனே போடுறேன்..
நீயும் நகை செய்ய பணம் கொடுத்து இருக்க தானே அதனால உனக்கும் அவசரத் தேவை இருக்கும். அம்மா சொன்ன மாதிரி நீ எனக்கு எப்பவுமே அக்காவா இருந்தா போதும்.. நான் உனக்கு கடனாளியாக ஆகிட்டா உறவு இடையில விரிசல் வந்துடும் வேணாம்..”
உடனே ராஜியின் முகம் சோர்ந்து விட்டது. சொந்த தம்பி பணத்தேவைக்கு கஷ்டப்படும்போது கணவன் அனுப்பிய பணத்தில் மிச்சப் படுத்தி வைத்துள்ள பணம் தன்னிடம் இருக்க அதை தம்பி வாங்காமல் இருக்க தாயின் உபதேசம் காரணம் என்பதாலும் கடன் என்ற அந்த வார்த்தையாலும் அவள் மிகவும் மனம் சோர்ந்து விட்டாள்.. இனி ஒன்றும் செய்ய முடியாது என தெரிந்து விட்டது அதனால் அமைதியாகி உடனடியாக தன் வீட்டுக்கு சென்று விட்டாள்..
அன்று மதிய சமையல் முடித்து தான் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. வழமை போல் அவள் வீட்டை கூட்டி துப்புரவு செய்யப் போகிறாள் என விட்டுவிட்டார் மகேஸ்வரி.. மாலையாகியும் இன்னும் ராஜி வீட்டுக்கு வராததால் மகளுக்கு அழைத்தார். ராஜி கோபமாக இனி அங்கே வரமாட்டேன் என்று சொன்னாள் மனம் வருந்தி. உடனடியாக கதிருடன் அங்கே சென்று மகளை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார் மகேஷ்..
இதோ நாளை விசேஷம் என இருக்கும் நிலையில் இன்னும் அவனுக்கு கையில் பணம் வந்து சேரவில்லை அவன் செய்ய சொன்ன நகையும் செய்தாகிவிட்டது வந்து எடுக்குமாறு அவனுக்கு அழைப்பு வந்துவிட்டது. என்ன செய்வதென தெரியாமல் மிகவும் சோர்ந்து விட்டான் கதிர்வேலழகன்..
ராஜியை அழைத்துக் கொண்டு போய் தமிழுக்கு வைக்க சீர்க்கு உடையாக புதிய வகை லெகங்கா செட் எடுத்தான்.. அதே போல் நிலாவுக்கும் ஒன்று எடுத்தான்.. ராஜி வேண்டாம் என தடுத்தாள் ஆனால் அதை அவன் கேட்கவில்லை..
தமிழுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கிக் கொண்டு பலகாரம் செய்வதற்கான பொருட்களும் வாங்கிக் கொண்டு வந்து ராஜியை வீட்டில் விட்டுவிட்டு அவன் மீண்டும் பஜார் நோக்கி சென்றான்..
நகை கடையில் கொடுத்த பணத்திற்குரிய மூன்று சவரன் நகை மட்டும் வாங்கிக் கொண்டு வரலாம் இதை வேண்டாம் என சொல்லலாம் என நினைத்து சென்றான்..
இனி வேறு வழியும் தெரிய வில்லை அவனுக்கு..
நகை கடைக்கு சென்றவன் அப்படியே உள்ளே செல்லாமல் நின்று விட்டான்.. ஏனெனில் உள்ளே சரவணனும் கோமதியும் நின்றார்கள்..
யார் முன் தான் தாழ்ந்து விடக்கூடாது என நினைத்தானோ இன்று அவரின் முன்னாலையே தன் நிலை இறங்கி இருப்பதை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என தெரியாமல் அப்படியே திரும்பி விட நினைத்தான்.. அப்போது அந்த கடைக்காரர் அழைத்து விட்டார்..
“ கதிர் தம்பி என்ன உள்ள வாங்க. வந்துட்டு பேசாம போறீங்க.. உங்க அக்கா, மாமா வந்துருக்காங்க கவனிக்கலயா? ”
இனி ஒன்றும் செய்ய முடியாது உள்ளே போய் தான் ஆக வேண்டும் என்ற நிலை வந்ததும் உள்ள சென்றான்..
“ வா கதிர் என்ன வந்துட்டு உடனே திரும்பிட்ட.. ” என்றாள் கோமதி..
“ இல்ல அக்கா ஒரு கால் வந்துது பேசிட்டு வர போனேன். உங்களை பார்க்கல.. ”
“ வீட்டுக்கு எப்ப வாரீங்க இன்னைக்கு இரவா? நாளைக்கா?.. ”
“ இரவு வந்து அலங்கார வேலை எல்லாம் முடிச்சிட்டு திரும்ப காலையில் வருவோம் அக்கா.. ” என்றான் கதிர்..
“ நீங்க இங்க.. ”
“ பஜாருக்கு சாமன் வாங்க வந்தோம். அப்படியே தமிழுக்கு உங்க மாமா நகை எடுக்கணும்னு சொன்னார் அதையும் எடுத்துட்டு போக வந்தோம்.. ” என இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது
“ கதிர் தம்பி இப்பவே பார்க்குறீங்களா?.. எடுத்துட்டு வர சொல்லட்டுமா?. அக்கா இருக்காங்க அவங்களும் பார்த்துட்டு சொல்லுவாங்களே.. ” என்றார் கடை முதலாளி..
ஆறுமுகம் பேபியம்மா தம்பதியரை நன்கு அறிந்தவர் இந்த கடை முதலாளி.. அவர்களை தொட்டு கதிர் குடும்பமும் அவருக்கு நன்றாகவே தெரியும்..
இரு வீட்டிலும் என்ன விசேஷம் என்றாலும் அந்த கடையில் தான் நகை எடுப்பார்கள்..
அடுத்து என்ன செய்ய வேண்டும் என தெரியாத தர்ம சங்கடம் கதிருக்கு..
இப்ப வேண்டாம் என சொன்னால் அக்காவும்,மாமாவும் தங்களுக்கு காட்டக்கூடாது என தவறாக நினைத்துக் கொள்வார்கள்.. காட்டினால் அதையே எடுத்துக் கொடுக்க வேண்டும்.. அதை எடுப்பதற்கு தான் பணம் போதாமல் மூன்று சவரனாக எடுக்க வந்தான்.. இன்றைய நாள் அவனுக்கு மிகவும் மோசமான நாளாக அமைந்தது என நினைத்து வருந்தினான் கதிர்வேலழகன்..
error: Content is protected !!