Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மௌனமாய் ஒரு காதல் செய்வோம்

காதல்❤️ 20

மாமியார் மருமகள் அணைத்து கொண்டு நிற்பதை பொய் கோவத்துடன் பார்த்து நின்ற அருள் “போதும் போதும் மாமியார் மருமகள் ரெண்டு பேரும் கொஞ்சனது…” என்று கூறினான்…

அருள் அவ்வாறு கூறியதும் இரண்டு பேரும் அவனை முறைக்க “அப்பா பயந்துட்டேன் ப்பா… போங்க போங்க… எனக்கு பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்க” என்று கூறினான்….



Advertisement

அவன் வானதியிடம் தனியாக பேச விரும்புகிறான் என்று அறிந்த தாயம்மா பாட்டி “போங்க எல்லாரும் வேலையை பாருங்க… வானதிம்மா அருள் ரூமுக்கு போ” என்று கூறி அனைவரையும் கலைத்து விட்டார்..

Advertisement

அனைவரும் அவரவர் வேலையை பாக்க வானதியும் அருளின் அறைக்கு சென்றாள்… அனைவரும் சென்றவுடன் அருள் வேகமாக சென்று பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு “லவ் யூ கிழவி” என்று கத்திக்கொண்டே அறைக்கு சென்றான்…

Advertisement

அருளும் வானதியும் வெளியில் மற்றவர்களுக்காக சிரித்து கொண்டு இருந்தாலும் மனதிற்குள் நேற்று நடந்த நிகழ்வின் தாக்கம் இருந்து கொண்டே தான்  இருந்தது…. அதனால் தான் பாட்டி இருவரும் தனியாக பேசினால் சரியாகி விடுவார்கள் என தனியாக பேச அனுப்பி வைத்தார்….

Advertisement

அவர் நினைத்தது போலவே அறைக்கு உள்ளே செல்லும் வரை சிரித்து கொண்டு இருந்தவள் உள்ளே சென்றவுடன் அந்த நிகழ்வின் தாக்கத்தில் உடைந்துவிட்டாள்.. அது மட்டுமின்றி இன்று காலையில் நடந்தது என அனைத்தும் அவள் மனதை போட்டு குழப்பியது….

அது மட்டுமின்றி நேற்று வானதியை பார்க்க இல்லை இல்லை அடிக்க தேவிகா வரும் போது மேலும் அவளை குழப்பி விட்டு சென்று இருந்தாள்… “நீ மட்டும் ஏன் என் வழில குறுக்க வர… உன்னை பார்த்தாலே பிடிக்க மாட்டிங்குது… உனக்கு என் அருள் தான் வேணுமா…” என்று கேட்டாள் தேவிகா….

என் அருள் என்று சொன்னவுடன் கோவமாக அவளை முறைதாள் வானதி…. அதை பார்த்து கோவமடைந்த தேவிகா “என்னடி முறைக்குற… வாய் மட்டும் தான் பேச முடியாம இருக்க… கொஞ்ச நேரத்துல சாக போற…. இனிமே அவன் எனக்கு மட்டும் தான்… உனக்கே மனசாட்சி உறுத்தல நாமளே வாய் பேச முடியாம ஊமையா இருக்கோம்… நாம எதுக்கு எந்த குறையும் இல்லாத ஒருத்தனை கல்யாணம் பண்ணனும் யோசிக்கமாட்ட… நீ கல்யாணம் பண்ணி குழந்தை பிறந்தாலும் உன்னை மாதிரி குறை உள்ள குழந்தை தான் பிறக்கும்… அப்போ உன்னை தூக்கிவெச்சு கொண்டாடுனவங்க…. கீழ போட்டு மிதிப்பாங்க… அப்போ புரியும்… இப்போ எதுக்கு தேவ இல்லாத பேச்சு… எப்படியும் சாக தான் போற… உன் இடத்துல இனிமே நான் இருப்பேன்…” என்று கூறி வானதியை தன் கோவம் தீரும் வரை அடித்துவிட்டு தான் சென்றாள்….

அதை யோசித்து கொண்டே அமர்ந்து இருந்தவள் தன் மடியில் பாரம் ஏறியவுடன் குனிந்து கீழே பார்த்தாள்… அவளின் மாமன் தான் அவனின் இடுப்பை கட்டிக்கொண்டு படுத்து இருந்தான்… அவனை பார்த்ததும் கண்கள் பணித்தது அவளுக்கு…. அவள் கை தானாகவே அவனின் தலையை கோதி கொடுத்தது….

அவன் மேலும் அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டான்… அவன் கண்ணீரும் அவளின் உடையை தாண்டி உடம்பில் பட்டது… முதலில் உணராதவள் பின் உணர்ந்து அவனை அவளிடம் இருந்து கஷ்டப்பட்டு பிரித்து அவனின் முகத்தை பார்த்தாள்…

அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது… அதை துடைத்து அவனின் நெற்றியில் இதழ் பதித்தாள் வானதி….

அவன் எழுந்தவன் அவளின் எலும்பு உடையும் அளவிற்கு அணைத்து இருந்தான்…  அவளும் அவனை இறுக்கி அணைத்து இருந்தாள்…. அவளை அணைத்தவாறே பேச ஆரம்பித்து இருந்தான் அருள்…

“நேத்து ரொம்ப பயந்துட்டேன் குட்டிமா… நீ இல்லாத அந்த கொஞ்ச நேரமே ரொம்ப தவிச்சு போயிட்டேன்.. இனிமே என்னை விட்டு எங்கயும் போகாத” என்று கண்ணீர் வடிய கூறினான்…

வெளியில் அவன் தைரியமாய் இருந்தாலும் வானதியிடம் தன் மொத்த பயத்தையும் இறக்கி இருந்தான்… அவளுக்கு இவன் ஆறுதல் கூறுவான் என்று நினைத்தால் அவள் தான் இவனுக்கு ஆறுதல் கூற வேண்டியதாய் போயிற்று…

அவனை தன்னிடம் இருந்து விலக்கி அவன் கண்ணை துடைத்து விட்டு ப”ழசு எல்லாம் மறந்துடு மாமா..  இனிமே நடக்க போறதை யோசி… நாம ரெண்டு பேரும் ஆசைபட்ட மாதிரியே நான் எப்பயும் உன் கூடவே இருப்பேன்” என்று சைகையில் கூறினாள்…

அவனும் ஆம் என தலையசைத்து மீண்டும் அவளை அணைத்து கொண்டான்… சிறிது நேரம் அவர்களின் நேற்றைய தாக்கத்தை ஒருவரின் ஒருவர் அருகாமையில் நீக்கி இருந்தனர்….

பத்மினி இருவரையும் சாப்பிட அழைத்தார்…. அனைவரும் சாப்பிட்டு விட்டு கூடத்தில் கூடி இருந்தனர்… காலை சாப்பாடு சாப்பிடவே நேரம் ஆனதால் மதிய உணவுக்கு விருந்தே ஏற்பாடு செய்து இருந்தனர்…. யுகேனும் தேவாவும் வெளியில் சென்று இருக்க வேலு சூப்பர் மார்க்கெட் திறக்க சென்று இருந்தான்…

வேலுவின் அப்பா வயலுக்கு சென்று இருக்க பெண்கள் அனைவரும் சமைக்க தேவையான வேலைகளை ஆரம்பித்து இருந்தனர்…

வேலை செய்ய வந்த வானதியை மிரட்டி உட்கார வைத்த ரஞ்சி அவர்களின் இளவரசியை அவள் கையில் குடுத்துவிட்டு அவளும் சென்று இருந்தாள்….

அருளும் வானதியின் அருகில் வந்து அமர்ந்தவன் அவனின் மருமகளை கொஞ்சும் சாக்கில் அவனின் மனைவியையும் கொஞ்சி கொண்டு இருந்தான்…

ஒன்றரை மணி நேரத்தில் சமைத்து இருக்க வெளியே சென்றவர்கள் இனிமேல் வரவில்லை… அவர்களை போனில் அழைக்க போனை எடுக்க வந்த பாரதி தான் பார்த்த காட்சியில் அப்டியே நின்று விட்டாள்..

வெளியில் சென்றவள் சத்தத்தை காணாமல் வந்த ரஞ்சியும் அவர்களை பார்த்து பாரதியின் அருகில் சென்று நின்றுகொண்டாள்…

அவளை அணைத்து அவளின் தோளில் முகம் வைத்து மூவரையும் பார்த்தவாரு நின்றுவிட்டாள் பாரதி… இருவரை தேடி மற்றவர்கள் வர அவர்கள் சிலை போல் நிற்கும் இருவரையும் தட்டி “அடியே வெளிய போனவங்களை கூப்பிட அனுப்புனா ஏன் இங்க சிலை மாதிரி நிக்குறிங்க” என்று பத்மினி இருவரையும் செல்லமாக தட்டி கேட்டார்….

பாரதி திரும்பி அவர் வாய் மேல் விரல் வைத்து அவர்கள் பார்த்து கொண்டு இருந்ததை காட்டினாள்… அங்கு அருள் வானதி மடியில் தூங்கி இருக்க ரித்து பாப்பாவை அவன் மார்பின் மேல் தூங்க வைத்து இருந்தான்…. பாப்பாவின் மேல் ஒரு கையும் அருளின் தலையை கோதி கொடுத்தவாறு ஒரு கையை வைத்து அப்டியே தூங்கி இருந்தாள் வானதி…

அதை பார்த்தால் குடும்பமாய் மூன்று பேரும் உறங்குவது போல் இருந்தது… வெளியில் இருந்து வந்தவர்களும் அதை பார்த்து ரசித்துவிட்டு அமைதியாக உள்ளே சென்றுவிட்டனர்…

அரை மணிநேரம் யாரும் அவர்களை தொந்தரவு செய்யவில்லை… ஆனால் குழந்தையின் அழுகையில் தான் இருவரும் எழுந்தனர்… அருள் பாப்பாவை தூக்கி தோளில் போட்டு தட்டிக்கொடுக்க பாப்பா மீண்டும் தூங்கிவிட்டாள்….

வானதியும் அருள் பாப்பாவை தான் பார்த்து கொண்டு இருந்தாள்… பாப்பா தூங்கியபின் தான்  இருவரும்  சுற்றி பார்த்தனர்…. அனைவரும் அவர்களை கன்னத்தில் கையை வைத்து   ரசித்து  கொண்டு இருந்தனர்…

இருவருக்கும் அதை பார்த்து வெட்கம் வந்துவிட்டது…. வானதி அருளின் பின் மறைய அருள் தலையை குனிந்து கொண்டான்..

ரஞ்சி வானதியை இழுத்து தன்பக்கம் கொண்டு வந்தவள் அவளை ஓட்ட ஆரம்பித்தாள்… அவள் பத்மினியிடம் ஓட அவரும் கமலா அம்மாவுடன் சேர்ந்து ஓட்டினார்….

கடைசியாக பாட்டியிடம் செல்ல பாட்டியோ “அடியே என்னடி என் பேத்தியை ஓட்டுற… வேணும்னா உன் புருஷனை உன் மடியில  படுக்க சொல்லு” என்று கூறி அவரும் அவர் பங்குக்கு கலாய்த்தார்…

அவளும் அனைவரையும் பார்த்து செல்லமாக முறைத்து விட்டு அருளின் அறைக்கு ஓடி விட்டாள்… அனைவரும் அவளை பார்த்து தான் சிரித்தனர்….

ஆசை ஆசையாய்

இருக்கிறதே இதுபோல்

வாழ்ந்திடவே பாச பூமழை

பொழிகிறதே இதயங்கள்

நனைந்திடவே

நம்மை காணுகிற

கண்கள் நம்மோடு சேர

கெஞ்சும் சேர்ந்து வாழுகின்ற

இன்பம் அந்த சொர்க்கம்

தன்னை மிஞ்சும்

ஒரு நாள் கூட

இங்கு வரமாகும் உயிர்

எங்கள் வீடாகும் சுகமாய்

என்றும் இங்கு விளையாடும்

நிரந்தர ஆனந்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!