Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

48. கலாராணி பாஸ்கர் - காதல் எனும் மாயன்

காதல் எனும் மாயன்-22

அத்தியாயம்-22

அதிதிக்கு நடப்பது எதையும் நம்பகூட முடியவில்லை,வசீகரன் அருகில் அமர்ந்து சாதாரணமாக பேசிக்கொண்டு இப்படி பயணம் செய்வதெல்லாம் ஏதோ கனவுபோல இருந்தது.

இருவரும் நிறைய பேசினார்கள், ஆஃபீஸ் விஷயம் வேலை விஷயம் என்று எதுவும் இல்லாமல் பொதுவான விஷயங்கள், இருவரது விருப்பு வெறுப்புகள் பார்த்த நிகழ்வுகள் படித்த விஷயங்கள் என்று வானத்துக்கும் பூமிக்கும் இடையில் கிடைக்கின்ற அத்தனை விஷயங்களையும் பேசித்தீர்க்க பயணமும் இனிமையாக கழிந்தது.



Advertisement

இடையில் ஒருமுறை நிறுத்தி அதிதியின் அம்மா கட்டிக் கொடுத்த பிரியாணியை உண்டார்கள்.

பின்னர் பயணத்தை தொடர்ந்த போது அதிதி அசதியில் அப்படியே உறங்கிப்போனாள், நெடுநேரம் கழித்து விழித்தவளைப் பார்த்து

“என்னம்மா நல்ல தூக்கமா? சீட்டெல்லாம் வசதியா இருந்ததா..?” என்று நக்கலாக கேட்டான்.

Advertisement

இவன் பார்க்க இப்படி வாயைப்பிளந்து தூங்கிவிட்டோமே என்று அவமானமாக இருக்க,

Advertisement

“எழுப்பியிருக்கவேண்டியது தானே..” என்று குறைப்பட்டாள்.

“சண்டைபோடுற வாய்க்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுக்கலாம்ன்னு தான் அப்படியே விட்டுட்டேன்.. ஆனா என் நேரத்தப்  பாத்தியா.. பேச்சுத்துணைக்குன்னு ஒரு கும்பகர்ணிய கூட கூட்டிட்டு வந்திருக்கேன்.” என்று  அவன் பாவனையுடன் புலம்ப..

அவள் பேசாமல் அவளை முறைத்தாள்..

Advertisement

“சரி சரி என்னை முறைச்சி எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத..” என்றவன் தொடர்ந்து

“ஆனா உன்னையும் குறை சொல்ல முடியாது கிட்டி.. ஆண்ட்டி கைப்பக்குவம் அப்படி.. இப்படி ஒரு பிரியாணிய  சாப்ட்டுட்டு நீ தூங்காம இருந்தாதான் அதிசயம்..”என்று வியந்தான்.

“அப்போ நீங்க மட்டும் எப்படி தூங்காம இருந்தீங்க..?”

“நானும் தூங்கிட்டா ரெண்டு பேரும் பரலோகம் போக வேண்டியது தான்..பொதுவா வண்டி ஓட்டும் போது எனக்கு தூக்கம் வராது கிட்டி..” என்றான்.

“ம்ம்கும்..” என்று உதட்டை சுளித்துவிட்டு அவள் அமைதியாகிவிட

“ஆமா.. நீ சமைப்பியா?” என்று கேட்டு பேச்சை வளர்த்தான்.

“எனக்கு.. தோசை சுடத்தெரியும், அப்புறம் ஆம்லெட் போடுவேன், நூடுல்ஸ் பண்ணுவேன் அவ்ளோதான் என்னோட சமயல் திறமை.”

“அய்யோ இது போதுமே பல வருஷம் உயிர் போகாம சமாளிக்கலாமே..”

என்று அவன் கிண்டலடிக்க

இவள் முறைத்தாள்.

“எங்கம்மா தான் நல்லா சமைப்பாங்க எனக்கு அவ்ளோ வராது..”

“நான் குடுத்துவெச்சது அவ்ளோதான்..” என்று அவன் பெருமூச்சு விட

“என்ன குடுத்து வெச்சீங்க..?”

“ஒன்னுமில்ல விடு..” என்று பேச்சை மாற்றினான்.

“ஆனா எங்க வீட்டுக்கு வரும்போது இதெல்லாம் எதிர்பார்த்துட்டு வந்துறாதம்மா.. எங்க குக் இந்த அளவுக்கெல்லாம் சமைக்க மாட்டாங்க..” என்று அவன் கூற

அவள் இனிமையாக அதிர்ந்தாள். என்ன சொல்ல வரான் இவன்..?என்று ஆச்சரியத்தில் அவள் கண்களை அகலவிரிக்க..

“இப்ப எங்க வீட்டுக்கு போறோம்ல அத சொன்னேன்..” என்று சேர்த்து சொன்னான்.

உடனே பொங்கிய உற்சாகமெல்லாம் புஸ்.. என்று ஆகிவிட..

அவனைப்பார்த்து முறைத்துக்கொண்டே..

“நான் எப்போ உங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னேன்..?எனக்கு ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கு நான் அங்கயே தங்கிக்கறேன்..” என்றாள்.

“அதெல்லாம் கேன்சல் பண்ணியாச்சி கண்ணம்மா.. நீ எங்க வீட்லதான் தங்கனும்..”

“அது என்ன உங்க இஷ்டத்துக்குதான் நான் நடந்துக்கனுமா? இந்த ரூம் கேன்சல் பண்ணியிருந்தா என்ன? நான் வேற ரூம் புக் பண்ணிக்கறேன்..” என்று  தன் ஃபோனை எடுக்கவும்,

அதை அவளிடமிருந்து பிடுங்கி வைத்துவிட்டு,

“இப்ப ஏன் இப்படி பாப்கார்ன் மாதிரி குதிக்கற..?நம்ம வீட்டுல தங்கறதுல உனக்கு என்ன பிரச்சனை..?”

“அது நம்ம வீடு இல்ல, உங்க வீடு..” என்றாள் பட்டென்று

“சரி என் வீடுதான்.. போதுமா.? நக்கீரர் மாதிரி எல்லாத்துலயும் குத்தம் கண்டுபுடிச்சிட்டே இருக்காதடி.. உன்ன வேற எங்கயாவது தங்க வச்சிட்டு நீ எப்படி இருக்கியோன்னு கவலைப்பட்டுட்டே இருக்க என்னால முடியாது. நீ எங்க வீட்லதான் ஸ்டே பண்ற.. தட்ஸ் ஃபைனல்..” என்று திட்டவட்டமாக கூறினான்.

இப்போதுதான் ஒரு சண்டை போட்டு முடித்து சமாதானம் ஆகியிருக்கும் போது மீண்டும் ஒன்றைத் தொடங்க வேண்டாம் என்று அவளும் அமைதியாகிவிட்டாள்.

ஆனாலும் அவனிடம் பேசாமல் முகத்தைத்திருப்பி கொண்டு வெளியே வேடிக்கைப்பார்த்தபடி அவள் அமைதியாக வரவும்..

கொஞ்ச நேரம் பொறுத்தவன்,

“அடியே அழகே..

என் அழகே அடியே..

பேசாம நூறு நூறா கூறுபோடாத..

வலியே வலியே..

என் ஒளியே ஒளியே..

நா ஒன்னும் பூதமில்ல தூரம் ஓடாத..”

என்ற பாடலை ஒலிக்கவிட்டு கூடவே அவனும் சேர்ந்து பாட

அவளாலும் ரொம்ப நேரம் கோபத்தைப் பிடித்துவைக்க முடியாமல் போனது..

அவனைப்பார்த்து முறைக்க முயன்றவள் முடியாமல் சட்டென்று சிரித்துவிட்டாள்.

“அப்பா.. உன்னை சிரிக்கவைக்க நான் இன்னும் கம்பிமேல நடக்காதது தான் பாக்கி..” என்று அவன் கூற

“கவலைப்படாதீங்க, ஃபியூச்சர்ல அதுக்கும் வாய்ப்பிருக்கு..”

“ராட்ஸசி நீ பண்ணாலும் பண்ணுவ.. நா கூட மொதல்ல உன்னைப்பார்த்து பூனைக்குட்டி மாதிரி சாது போலன்னு நெனைச்சி கிட்டின்னு பேரு வச்சேன்.. இப்பதான் தெரியுது நீ கிட்டி இல்ல கேடின்னு.. சரியான டெவில்டிநீ ..”

அவன் பேச்சுவாக்கில் டெவில் எனவும் அவள் சட்டென்று சிரித்துவிட்டாள்.

“என்ன சிரிப்பு? இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லையே..”

என்று அவன் சந்தேகமாக கேட்க..

“அதுக்கு சிரிக்கல..” என்று மீண்டும் சிரித்தாள்

“என்னன்னு சொல்லு..”

“ஒன்னு இல்ல..”

“என்னமோ இருக்கு.. நீ சொல்லாம நான் விடமாட்டேன்?” என்று அவன் விடாப்பிடியாக கேட்கவும்

“சொல்றேன். ஆனா நீங்க மிரட்டுறதுக்காகலாம் இல்ல..” என்றுவிட்டு தன் மொபைலை எடுத்து அவனுக்கு டயல் செய்து

அந்த டிஸ்ப்ளேவில் வந்த பேரை காட்டினாள்.

“அடிப்பாவி.. என்னை டெவில்ன்னு சேவ் பண்ணியிருக்கியா..?” என்றவன் வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு அவளது போனை பறித்தான்

“என்ன பண்றீங்க.. போனை கொடுங்க..” என்று வாங்க முயன்றவளை லாவகாம தடுத்துக்கொண்டே அவளது போனில் எதோ வேகமாக டைப் செய்துவிட்டு திரும்ப அவளிடம் கொடுத்தான்.

அவசரமாக வாங்கிப்பார்த்தவள் முகம் சிவந்தது

“டார்லிங் டெவில்😘” என்று தன் பேரை அதில் மாற்றியிருந்தான்.

“இதெல்லாம் அராஜகமா இருக்கு..” என்று குமைந்தவள்

“ஆமா நீங்க மட்டும் என் பேரை அப்படி என்னன்னு சேவ் பண்ணியிருக்கீங்க..?” என்று பாதி அலட்சியமும் மீதி ஆவலுமாக கேட்டாள்.

“நீயே பார்த்துக்கோ..” என்று தன் ஃபோனை அவளிடம் கொடுத்தான்.

“என்ன என்னை நம்பி உங்க ஃபோனையெல்லாம் தரீங்க..” என்று அவள் கேலியாக கேட்க

“உனக்கு தெரியக்கூடாத ரகசியம் ஒன்னும் அதுல இல்ல…” என்று தோளைக் குலுக்கினான்.

அதற்குள் அவளது எண்ணைத் தேடிப்பார்த்தவள்,

“பூக்கியா..? எனக்கு பிடிக்கல..” என்றாள் முகம் சுளித்து

“பிடிக்கலையா..அப்போ  உனக்கு பிடிச்ச மாதிரி நீயே மாத்தி வச்சிடு..”என்றவன்

“சரி என்னன்னு மாத்தி வைக்கபோற?” என்று  ஆர்வமாவ கேட்க

அவள் எதோ டைப் செய்துவிட்டு அவனிடம் காட்டினாள்.

“அதிதி” என்று அதில் இருந்தது

அதைப்பார்த்ததும் அவன் முகம் ஏமாற்றத்தில் சுருங்கிப்போகவும்

பக்கத்தில் ஒரு ஹார்ட்டை சேர்த்து போட்டு

“அதிதி❤️” என்று மாற்றினாள்.

உடனே அவன் முகம்  மலர்ந்தது

“நாட் பேட்” என்றவன்,

“ஆனாலும் என் டேஸ்டுக்கு இல்ல, அப்புறமா நான் மாத்திக்குறேன்” என்றான்.

“நானும் மாத்தி வைக்கத்தான் போறேன்..” என்று அவளும் வீம்புக்கென்றே கூற

“நீ என்ன வேணா மாத்திவச்சிக்கோ ஆனா என் நம்பரை ப்ளாக் பண்ணாத வரைக்கும் சந்தோஷம்” என்றான்.

“இதுக்கு முன்னாடிகூட இப்படி ஃப்ளாக் பண்றத பத்தி என்னமோ சொன்னீங்க..ஏன் எப்பப்பாரு அப்படியே சொல்றீங்க..? நான் ஏன் உங்க நம்பரை ப்ளாக் பண்ணப்போறேன்..?” என்று அவள் சற்று கோபமாக கேட்க

“என்ன பண்றது மேடம் வரலாறு அப்படி இருக்கே.. பாதிக்கப்பட்டவனுக்கு தானே வலி தெரியும்..” என்று கேலி போல கூறினாலும் அதன்பின்னால் இருந்த வலியும் தெரிந்தது.

அவசரமாக யோசித்தவளுக்கு முன்பு வைஷாலி வந்து பேசியபோது அவன் எண்ணை ப்ளாக் செய்ததைத்தான் குறிப்பிடுகிறான் என்று புரிந்தது.

‘அப்போ அவன் எனக்கு கால் பண்ணியிருக்கான்..நான் தான் நம்பரை ப்ளாக் பண்ணி வச்சிருந்திருக்கேன்..’ என்னும் உண்மை உறைக்க..

யோசனையாக அவனைத்திரும்பிப்பார்த்தாள்..

முகம் பாறையாக இறுகிவிட நேரே பார்த்து காரோட்டிக் கொண்டிருந்தவனின் புருவம் நெரிந்திருந்தது.

அவன் கையை லேசாக பற்றி

“வசி, நான் என்ன பண்றது..? அன்னிக்கு உங்க பர்த்டே பார்ட்டிக்கு அப்புறம் வைஷாலி என்னை வந்து பார்த்து என் பாய்ஃப்ரண்டு கூட பழக உனக்கு வெக்கமா இல்லையா? அது இதுன்னு ரொம்ப இன்சல்டிங்கா பேசினா.. அதான் இனிமே உன் பாய்ஃப்ரண்டுகிட்ட பேசலைன்னு சொல்லி உங்க நம்பரை ப்ளாக் பண்ணினேன். நானா பண்ணல,வைஷாலி பேசின பேச்சு தாங்க முடியாம தான் பண்ணேன்..” என்று தன் பக்க நியாயத்தைக் கூறினாள்

அவள் பேசியது அவன் காதில் விழுந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவன் முகம் எந்த மாறுதலும் இல்லாமல் யோசனையாகவே இருந்தது.

அவள் அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதி ஆகிவிட… கொஞ்சம் பொறுத்து,

“அப்போ முன்னாடியே என் நம்பரை ப்ளாக் பண்ணிட்டியா..?” என்று அவனாக கேட்டான்.

“நீங்க என்ன கேக்குறீங்கன்னு எனக்கு புரியல..”

“அந்த இன்சிடெண்ட்க்கு முன்னாடியே என்ன ப்ளாக் பண்ணிட்டியான்னு..” கேட்டேன்

“எந்த இன்சிடெண்ட்..” என்று கேட்க வாய்த்திறந்தவள் அவன் பார்த்த பார்வையில் பேசாமல் வாயைமூடிக்கொண்டு

ஆமாம் என்று மட்டும் தலையசைத்து வைத்தாள்.

அதன் பின் நெடுநேரத்திற்கு அவன் பேசவே இல்லை..

என்னவாயிற்று என்று கேட்கலாமா என்று இவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவன் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

வசீகரன் இன்னும் அதே இறுக்கத்துடனே இருப்பது தெரிந்தது.

காரிலிருந்து இறங்கியதும், வீட்டிலிருந்து வந்த வேலையாளிடம்

“அண்ணா கார்ல இருக்கற பெட்டியை உள்ள ரூம்ல கொண்டு வெச்சிடுங்க..” என்று விட்டு..

“உள்ள வா அதிதி..” என்று இவளை அழைத்துப்போனான்.

முதல் முதலாக அவன் வீட்டிற்குள் முன்வாசல் வழியாக வருகிறாள். ஆனால் அதுவரை இருந்த சந்தோஷம் போய் மனம் ஒரு மாதிரி குழம்பிப்போனது.

‘என்ன ஆச்சி இவனுக்கு..? ஏன் இப்படி திடீரென்று மூட் அவுட் ஆகிவிட்டான்.?’ என்று யோசனையாகவே அவன் பின்னால் நடந்தாள்.

அவளை அவன் அதிதி என்று முழுமையாக பேர் சொல்லி அழைப்பதும் ஒரு மாதிரி வித்தியாசமாக தெரிந்தது.

யோசனையாக நடந்தவள் முன்னால் சென்றவன் நின்றுவிட்டதை கவனிக்காமல் அவன் மீது மோதிக்கொண்டாள்..

வேகமாக திரும்பியவன் அவளைப்பிடித்து நிறுத்தி

“கண்ண எங்க வச்சிட்டு நடக்கற” என்று கடிந்து கொள்ள..

அவளுக்கு சுள்ளென்று சுட்டுவிட்டது..

அவன் கையைத்தட்டிவிட்டு போக எத்தனித்தவளை நிறுத்தி,

“எங்கயாவது போய் இடிச்சிக்காத வா..” என்று கையைப்பிடித்து வீட்டுக்குள் அழைத்துப்போனான்.

வீட்டுக்குள் போனதும் ஹாலில் அமர்ந்திருந்த பாட்டியைப்பார்த்ததும் முகமெல்லாம் சிரிப்பாக..

“அப்பாயி.. எப்படி இருக்கீங்க..” என்று ஓடிப்போய் அவர் அருகில் அமர்ந்து கட்டிக்கொண்டான்.

அவரும் மலர்ந்தமுகத்துடன்..

“ராஜா.. வந்துட்டியா நீ வருவன்னுதான் பார்த்துட்டே இருந்தேன்..” என்றார் ஆசையாக அவன் தாடையை வருடியபடி.

“நீங்க டைமுக்கு தூங்கமா ஏன் இப்படி உடம்ப கெடுத்துக்கறீங்க..?”என்று செல்ல சண்டையிட்டான் பேரன்.

இந்த பாட்டி-பேரன் ரீயூனியனை சற்று தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் அதிதி.

அதற்குள் அவளை கவனித்துவிட்ட பாட்டி..

“அங்க நிக்கறது யாரு கண்ணு..?” என்றார் தன் கண்ணாடி சட்டத்துக்குள்ளிருந்து அவளை உற்றுபார்த்தபடி..

“இது என்னோட ஃப்ரண்ட் அப்பாயி, விக்ரம் அண்ணா கம்பெனிலதான் வேலைபாக்குறாங்க..நம்ம கம்பெனிக்கு வேலை விஷயமா வந்திருக்காங்க…வெளிய ஹோட்டல்ல தங்குறேன்னு சொன்னாங்க , நான்தான் நம்ம வீடு இருக்கறப்ப எதுக்கு வெளிய தங்கனும்னு சொல்லி கூட்டிட்டு வந்தேன்..” என்று தன் பாட்டிக்கு தக்கவாறு கதை சொன்னான்.

அவரும் அதிதியை பார்த்து

“அதானே நீ ஏன் கண்ணு வெளியல்லாம் தங்கனும், இங்க என்ன ரூமா இல்ல.?” என்றார் சினேகமாக சிரித்தபடி..

ஐந்து வருடம் முன்னால் பார்த்ததைவிட சற்று மூப்புத்தெரிந்தது அவரிடம்.

அதிதியை அவருக்கு நினைவில்லை, மறந்துவிட்டார் போலும் என்று நினைத்துக்கொண்டாள்.

அதற்குள் பாட்டியைப் பார்த்துக்கொள்ளும் நர்ஸ் வந்து,

“பாட்டிக்கு தூங்கற டைம் தாண்டிடுச்சி..” எனவும்

“நீங்க போய் தூங்குங்க அப்பாயி.. காலையில பார்க்கலாம்..” என்று அனுப்பி வைத்தான்..

அவரும் போகும் முன்

“கண்ணு ரெண்டு பேரும் சாப்ட்டுட்டு படுங்க..”என்று சொல்லிச்செல்ல மறக்கவில்லை..

“அதி மேல உனக்கு ரூம் ரெடி பண்ணியிருக்கு.. உன்னோட லக்கேஜ்ஜையும் அங்க வச்சாச்சி..நீ ஃப்ர்ஷ் அப் ஆகிட்டு வரியா சாப்பிடலாம்..?” என்றான்.

‘அதுக்குள்ள திரும்ப அதி ஆகிட்டேனா..?இவன் இஷ்டத்துக்கெல்லாம் இனிமே ஆடக்கூடாது’ என்று முடிவெடுத்து..

“இல்ல எனக்கு பசிக்கல, நான் தூங்கப்போறேன். என் ரூம் எங்கன்னு மட்டும் சொல்லுங்க..” என்றாள் விரைப்பாக..

“மலர் அக்கா..”என்று ஒரு பணிப்பெண்ணை அழைத்தான்,

“மேல தோட்டத்த பார்த்த மாதிரி இருக்கற கெஸ்ட் ரூமுக்கு மேடம்ம கூட்டிட்டுப்போங்க..” என்றான்.

“சரிங்க தம்பி..” என்றவர்,

“வாங்க மேடம்..” என்று இவளை அழைக்க..

‘ரூமைக்கூட இவன் காட்ட மாட்டானா..? இவன் வீட்டுக்கு வந்ததும் பணக்காரத் தோரணையைக் காட்டுகிறானா..?நான் இங்க வந்ததே தப்பு..’ என்று தன்னையே நொந்துகொண்டு கூடப் போனாள்.

அவளுக்குக் கொடுக்கப்பட்ட அறை, சென்னையில் அவளது அறையைவிட இருமடங்கு பெரிதாக இருந்தது. வசீகரன் கூறியது போல் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால் அழகான தோட்டம் காட்சியளித்தது. பெரிய பெட், ஸ்டடி டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள், நவீன வசதிகளுடன் கூடிய குளியல்அறை என்று அந்த அறையில் எல்லாமே இருந்தது. குறைபட எதுவும் இல்லை.ஆனால் அவளுக்கு மனம் எதிலும் ஒட்டவில்லை..தான் ஒரு ஹோட்டல் ரூமில் தங்கியிருந்தால் கூட நிம்மதியாக உறங்கியிருக்கலாம் என்று தோன்றியது.

வசீகரன் இப்படி முன்னுக்குப்பின் முரணாக நடந்துகொள்வது அவளுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.

‘இப்போது ஏன் யாரோப்போல் நடந்து கொள்கிறான்..? ஒருவேளை வைஷாலியின் நினைவு வந்துவிட்டதா? இவன் அவளை மறந்தானா இல்லையா? இந்த ஐந்து வருடத்தில் வேறு எதாவது ரிலேஷன்ஷிப் கூட அவனுக்கு இருந்திருக்கலாம், அவன் என் மீது காட்டும் பிரியம் முழுமையாக எனக்கு மட்டுமே உரித்தானதா என்றும் தெரியவில்லை..

இந்த முறையாவது முன்னர் போல ஏமாறாமல் இருக்க அவனுக்கு கேர்ள் ஃப்ரண்ட் இருக்கிறதா என்று முதலிலே கேட்டிருக்க வேண்டும்..முட்டாள் மாதிரி அவனைப்பார்த்ததும் ஈஈ..என்று இளித்துக்கொண்டு எதையும் யோசிக்காமல்  இந்த வெக்கங்கெட்ட மனது அப்படியே அவனிடம் சரணாகதி அடைந்துவிட்டது..”

இப்படி பலவாறு யோசித்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தவளுக்கு தலை வலித்தது..பசியினால் கூட இருக்கலாம் மதியம் சாப்பிட்டதுதான்  அதற்கு மேல் எதுவும் சாப்பிட வில்லை..

அவன் கேட்டதற்கும் ஜம்பமாக வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்போது எப்படி கேட்பது..?”

தண்ணீராவது குடிக்கலாம் என்று பார்த்தால், அதுவும் இல்லை.. சரி கீழேபோய் தண்ணீர் மட்டுமாவது எடுத்து வந்துவிடுவோம். என்று முடிவெடுத்து.. சத்தமில்லாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.

நடைபாதையின் இருபுறமும் நிறைய அறைகள் இருந்தது வசீகரன் எந்த அறையில் இருக்கிறான் என்று தெரியவில்லை..

இவள் கீழே வந்து நேரே கிச்சனுக்குள் போனாள், தண்ணீர் பிடித்து குடித்தவள், மேடையை ஆராய்ந்தாள் எதாவது சாப்பிடுவதற்கு கண்ணில் படுகிறதா என்று.. எல்லாம் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருத்தது.

கடைசி முயற்சியாக ஃப்ரிஜ்ஜை திறந்து பார்த்தாள். அப்போது

“என்ன தேடுற..?” என்று திடுமென கேட்ட குரலில் அதிர்ந்து துள்ளிகுதித்து நிமிர்ந்தாள்.

“வேணும்ன்னே எனக்கு ஹார்ட் அட்டாக் வரவெக்கனும்னே இப்படி பண்ணுவீங்களா..?” என்றாள் கையை நெஞ்சில் வைத்து படபடப்பை அடக்கியபடி..

“நீ ஏன் இவ்ளோ ஸ்கேர்டி கேட்(scaredy cat) ஆ இருக்க?”

என்று அவன் திருப்பிக் கேட்க..

அவள் அவனைப்பார்த்து முறைத்தாள்.

வசீகரனுக்கும் தூக்கம் பிடிக்கவில்லை, எவ்வளவு ஆசையோடும் கனவோடும் அதிதியை தன் வீட்டுக்கு கூட்டி வந்தான்..!!ஆனால் அந்த உற்சாகம் சற்றும் இல்லாமல் மனம் சோர்ந்திருந்தான்..

அதிதி அந்த ‘ஃபோட்டோ லீக்’ ஆன பிரச்சனைக்கு பிறகுதான் அவனிடம் பேசவேண்டாம் என்று முடிவெடுத்திருப்பாள் என்று நினைத்திருந்தான். அவளது இடத்திலிருந்து யோசித்துப்பார்த்தாள் அதில் நியாயம் இருப்பதாகத்தான் அவன் நினைத்தான்.

ஆனால் அதற்கு முன்பே..குறிப்பாக சொல்வதென்றால், அன்று பேஸ்கெட் பால் கோர்ட்டில் அவனை சந்திக்கும் முன்பே அவனிடம் பேச வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தாளா?

‘தன்னிடம் பேசப்பிடிக்காமல் தன் எண்ணை ப்ளாக் செய்திருந்த பெண்ணைத்தான் நான் முத்தமிட்டேனா? அது எவ்வளவு கேவலமான செயல்? இப்போது கூட என் கட்டாயத்தினால் தான் என்னைப்பிடிக்காமலே எப்படி என்னை தவிர்ப்பது என்று தெரியாமல் தான் அதிதி என்னுடன் பழகுகிறாளா? அவளைப்பற்றி நான் நினைத்தது எல்லாமே ஆசை கொண்ட என் மனதின் கற்பனையா..?’

இப்படியெல்லாம்  ஏதேதோ எதிர்மறை  எண்ணங்கள் மனதைப்போடு வாட்ட அவன் நெருப்பின் மேல் நிற்பவனைப் போல் தவித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அதிதி கதவைத் திறக்கும் ஓசை அவனுக்கு கேட்டது.

‘இந்த நேரத்தில் தூங்காமல் எங்கே போகிறாள்..?’என்று அவளைப் பின் தொடந்து வந்திருந்தான்.

“முறைக்காத.. ஃப்ரிஜ்ல என்ன தேடுனன்னு சொல்லு..?”

“ஐஸ் வாட்டர் இருக்கான்னு பார்த்தேன்.. அவ்ளோதான்.. நான் ஒன்னும் உங்க ஃப்ரிஜ்ஜை தூக்கிட்டு போயிட மாட்டேன்..” என்றாள் எரிச்சலுடன்.

அவளையே உற்றுப்பார்த்தவன்..

“பசிக்குதா..?” என்று கேட்டான்.

கண்டுபிடித்துவிட்டானே என்று அவள் முகம் அதிச்சியைக்காட்டவும்

“சொல்லவேண்டியதுதானே.” என்று அவளை நகர சொல்லிவிட்டு அவன் பிரிஜ்ஜுக்குள் தேடினான்..

“மீந்துபோனது கூட எதுவும் இல்லை.. நான்வேற சமயல்காரம்மாவ எல்லாத்தையும் எடுத்துட்டு போக சொல்லிட்டேன்.” என்று தன்னையே நொந்துகொண்டவன்..

“எதாவது ஆர்டர் பண்ணவா? என்று கேட்டபடி நேரம் பார்த்தான் மணி பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது.

“இப்ப எனக்கு பசிக்குதுன்னு நான் சொன்னேனா..?” என்றாள் அதிதி கடுப்புடன்..

“சாப்பாட்டு விஷயத்துலல்லாம் ஈகோ பாக்காதம்மா..” என்று மென்மையாகக் கூறியவன்.

“ப்ரெட் ஆம்லெட் சாப்பிடுவியா?” என்று கேட்டான்.

“நீங்க பண்ணப்போறீங்களா?” என்று சந்தேகமாக கேட்டாள்

“ஏன் நான் சமைக்க மாட்டேன்னு நினைச்சியா? ஒரு வருஷம் அமெரிக்காவுல நானே சமைச்சி சாப்டுதான் சமாளிச்சேன்.” என்றவன்

“கொஞ்சம் வெயிட் பண்ணு நான் பண்ணித்தரேன் சரியா..” என்று அவன் பாசமாக  கூறவும்

அவள் மனம் துள்ளியது கொஞ்சம் முன்னால் இவனிடம் கோபம் கொண்டிருந்ததே அதே பச்சோந்தி மனம்தான் அது.

அவன் தேவையான பொருட்களை சேகரித்து அடுப்பை ஆன் செய்யவும்.. “நான் எதாவது ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்டாள்.

“நீ ஒரு ஹெல்ப்பும் பண்ண வேண்டாம்..”என்றுவிட்டு  அவள் சற்றும் எதிர்பார்க்காத போது,அவள் இடையைப்பிடித்து இலகுவாக தூக்கி கிச்சன் மேடையின் மேல் அமரவைத்தவன்

“நீ இங்க உக்காந்து அமைதியா வேடிக்கைப்பாரு போதும்” என்றான்.

“அது என்ன அமைதியா..?நீங்க சொன்னா அப்படியே கேக்கனுமா?நான் பேசிட்டுதான் இருப்பேன் ..” என்றாள் பிடிவாதமான குரலில்,

அவன் லேசாக சிரித்து

“சரி பேசு..”என்றான்.

“உங்களுக்கு கேர்ள்ஃப்ரண்ட் இருக்கா?” என்று பட்டென்று மனதில் தோன்றியதைக் கேட்டு விட்டாள்.

அந்த கேள்வியில் ஒரு கணம் திகைத்துப்போனவன்,

“உனக்கு என்ன தோணுது..” என்று அவளையே திருப்பிக்கேட்டான் அவன் வேலையை தொடந்து பார்த்தபடி..

“எனக்கு தோணுறதெல்லாம் தப்பாதான் இருக்கு.. முன்னாடிகூட அப்படிதான்.. நான் உங்களுக்கு கேர்ள்ஃப்ரண்ட் இல்லைன்னு நெனைச்சேன்.. ஆனா ஒருத்தி வந்து நின்னா.. அதனால நான் இனிமே இந்த கெஸ்சிங் கேம் வெளையாடறதா இல்லை..நீங்களே சொல்லிடுங்க” என்றாள் பிடிவாதமாக முன்வைத்த காலை பின் வைக்க மறுத்து..

அவளை யோசனையாகப்பார்த்தவன்.

‘இதற்கு முன்பும் அவள் நினைத்தது சரிதான், தனக்கு எப்போதுமே கேர்ள்ஃப்ரண்ட் இருந்ததில்லை” என்பதை சொல்லலாம்தான் ஆனால் அது எந்த அளவுக்கு நம்பும்படியாக இருக்கும் என்று அவனுக்குத் தெரியவில்லை, வெறும் சப்பைகட்டு கட்டுவதாக அவள் நினைத்துவிட்டால்?

பேச்சினூடே பிரெட் ஆம்லெட் செய்துமுடித்திருந்தான், அதை சுலபமாக சாப்பிடுவதற்கு ஏற்றாற்போல் நான்காக வெட்டிவைத்தான். அவள் முன்னால் வந்து நின்று

“இந்தா மொதல்ல இதை சாப்பிடு, அப்புறம் என் ரிலேஷன்ஷிப்ப பத்தி ஆராயலாம்..” என்றான்.

‘இவன் என்ன நேரடியாக பதிலை சொல்லாமல் இழுத்தடிக்கிறான்? என்னை என்ன சொல்லி ஏமாற்றலாம் என்று யோசிக்கிறானா?’ என்றெல்லாம் யோசித்து அவள் அவனையே வெறித்து பார்த்துக்கொண்டிருக்க,

ஒரு துண்டை எடுத்து அவள் வாய் அருகில் வைத்து

“சாப்டு..”என்று ஊட்டினான்.

அதை மறுத்து,அவன் கையில் இருப்பதை வாங்கிக்கொண்டு அவளே உண்ணத்தொடங்கினாள்

“பார்க்க வச்சி சாப்ட்டா வயிறுவலி வரும்ன்னு யாரோ சொன்னங்க..” என்று அவள் சொல்லிக்காட்டியதை கேட்டு சட்டென்று சிரித்தவன்

தானும் கொஞ்சம் எடுத்துக்கொண்டான்..

அவன் செய்த ப்ரெட் ஆம்லெட்டை வாயில்போட்டு நீர் அருந்தி உள்ளே தள்ளியதும், சத்தம்போட்ட வயிறு சற்று சமாதானம் ஆனது.

“தாங்க்ஸ்..” என்றுவிட்டு  மேடையிலிருந்து இறங்கப்போனவளைத் தடுத்தவன்

“எங்க போற, நீ கேட்டதுக்கு என்னோட பதிலையும்  கேட்டுட்டுப் போ..” என்று கூறிக்கொண்டே

அவளை  மிகவும் நெருங்கி கால்களுக்கிடையில் நின்றான், ஒரு கை தானாக அவள் இடுப்பை சுற்றி வளைத்து சேர்த்து அணைக்க, மறுகரம் அவள் விரிந்த கூந்தலில் நுழைந்து தலையை வாகாகப்பற்றியது.

அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணோடு கண் பார்த்துக்கொண்டே..

“கிட்டி.. எனக்கு கேர்ள்ஃப்ரண்ட்… ரிலேஷன்ஷிப்.. சிட்டுவேஷன்ஷிப் இந்த மாதிரி வேற எந்த ஷிப்பும் இல்லை..போதுமா..?” என்று கேட்டான் நிதானமாக ஆழ்ந்த குரலில் அவளுக்கு மட்டுமே கேட்குமாறு.

அவ்வளவு நெருக்கத்தில் அவன் முகத்தைப்பார்க்க  அவளுக்கு மூச்சுமுட்டியது, இருவர் உடலும்  தீண்டிய இடமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.

அவன் என்ன சொல்கிறான் என்பதையே அவள் சிரமப்பட்டுதான் புரிந்துகொள்ள முடிந்தது, மூளை வெகேஷனுக்கு சென்றதுபோல் வேலை செய்ய மறுத்தது. எஞ்சியிருந்த கொஞ்சம் சிந்திக்கும் திறனை வைத்து தேடிப்பிடித்து

“நிஜமாவா..” என்ற ஒற்றை சொல்லை தன் கண்களை அகலவிரித்து அவள் கேட்க

“ப்ராமிஸ்” என்று அவள் இதழ்மேல் தன் இதழ்பதித்து சத்தியம் செய்தான் அவன்.

ஒருகணம் கண்ணைமூடி அந்த ஸ்பரிசத்தில் திளைத்தவன் மறுகணம் விலகினான், ஆனாலும் முழுமையாக தள்ளிப்போகாமல் நெருக்கத்தில் நின்றபடி

“சாரி..உனக்கு பிடிக்கலைன்னா சொல்லிடு..” என்று அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்பே அவன் சட்டையைப்பிடித்து தன் பக்கம் லேசாக இழுத்து அவன் இதழ்களில் அழுந்த முத்தமிட்டிருந்தாள் அவள்..

அதிதியின் மனதில் என்ன இருக்கிறது என்று உறுதியாக தெரியாமல், அவள் விருப்பம் என்னவென்று அறியாமல் குழம்பிப்போய் தன்னையே வறுத்திக் கொண்டிருந்தவனுக்கு அவள் அவனை நோக்கி எடுத்துவைத்த இந்த ஒரு அடி போதுமானதாக இருந்தது..

அதுவரை கடைபிடித்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் காற்றில் பறக்க.. அவளை தன்னுடன் சேர்த்து இழுத்து அணைத்தபடி முழுமையாக அவளை ஆக்ரமித்திருந்தான்.

அதிதிக்கு காட்டாற்றில் அடித்து செல்வது போல் இருந்தது, பற்றுதலுக்கு அவன் கழுத்தையே  இறுகப் பற்றிக்கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து அவன் அவளை விடுவித்தபோது இருவருக்கும் மூச்சுவாங்கியது..

அவள் நெற்றியில் தன் நெற்றியை வைத்து அழுத்தியபடி கண்மூடி சாய்ந்திருந்தான்.

எங்கோ வானத்தில் பறந்துவிட்டு பூமிக்கு மெதுவாக திரும்பி வந்து கொண்டிருந்தவர்களுக்கு அந்த அவகாசம் தேவைப்பட்டது.

கொஞ்சம் இயல்புக்குத் திரும்பியதும்

“என்ன கொல்றடீ” என்று அவன் அவளை செல்லமாக சாட.. அவள் முகம் செந்நிறம் கொண்டது.

“சரி போய் தூங்கு.. நாளைக்கு ப்ளாண்ட் விசிட் இருக்கு  சீக்கிரம் கெளம்பனும்” என்றான் அவளைவிட்டு மெல்ல விலகி நின்று.

அவள் ஏமாற்றத்துடன் அவனைப்பார்க்க..

“என்ன? வேற என்ன வேணும்..?” என்று குறும்பாக கேட்க

“ஒன்னும் வேண்டாம்” என்றுவிட்டு சட்டென்று கீழே குதித்து இறங்கி ஓடிப்போனவளை அவன் சிரிப்பொலி துரத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!