காதல் ரட்சகா 6
இவர்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்று ரதி குழம்பி நிற்க, அவர்கள் பழ தட்டோடு வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
சுவரோடு சாய்ந்து அமர்ந்திருந்த அமலா வந்தவர்களை பார்த்து விட்டு எழுந்தாள்.
Advertisement
‘இவங்களுக்கு இங்கே என்ன வேலை?’
மாயா தன் தந்தையின் புகைப்படத்தின் முன்னால் புது ஊதுவர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டிருந்தாள். உள்ளே வந்தவர்களின் நிழல் விழுந்ததும் திரும்பிப் பார்த்தாள்.
Advertisement
Advertisement
விக்னேஷ் உப்மாவை செய்து முடித்து விட்டு வெளியே வந்தான். வந்தவர்களை கண்டு நெற்றியை சுருக்கினான்.
அமலாவை நெருங்கினாள் கைலாஷின் மனைவி.
Advertisement
“உங்க சின்ன பொண்ணை எங்க வீட்டுக்கு மருமகளா கேட்டு வந்திருக்கோம்..” என்றாள்.
மாயா பற்களை அரைத்தபடி எழுந்து நின்றாள்.
அமலாவுக்கு ஆதங்கம் தாங்க முடியவில்லை.
“என் ஹஸ்பண்ட் இறந்து கூட முழுசா இரண்டு நாள் ஆகல. அதுக்குள்ள இப்படி வந்து நிற்கிறிங்களே!” என்றாள். கோபத்தால் அழுகைதான் வந்தது அவளுக்கு.
மாயா வந்தவர்களின் பக்கத்தில் நடந்தாள்.
விக்னேஷ் கிச்சன் வாசலிலேயே சாய்ந்து நின்றான். கரண்டியை ஒரு கையில் வைத்திருந்தான். அவன் பார்வையில் நக்கல் நிரம்பி இருந்தது.
அமலாவின் கண்ணீர் கண்டு கைலாஷ் பேமிலி வருத்தப்பட்டது.
“நாங்களும் வருந்துறோம். ஆனா சசியோட கடைசி ஆசை நாங்க அவரோட பொண்ணை எங்க வீட்டு மருமகளா கூட்டி போகணுங்கிறதுதான். முந்தாநாள் மதியம்தான் என்கிட்ட சொன்னாரு. அதனாலதான் அவர் ஆசையை நிறைவேத்த உடனே வந்துட்டோம்..” என்று அமலாவிடம் சொன்னார் கைலாஷ்.
மாயா அம்மாவுக்கும் கைலாஷூக்கும் இடையில் வந்து நின்றாள். கைலாஷின் கால்கள் தானாக ஓரடி பின்னால் நகர்ந்தன.
“எங்கப்பா சொன்னாரா? அதுவும் உங்கக்கிட்ட சொன்னாரா?” என்று கேட்டாள்.
கைலாஷின் முகத்தில் சிறு மாற்றம் தெரிந்தது. அவர் சொன்னது பொய் என்று சொல்ல அந்த சிறு முக மாற்றமே போதும்தான்.
இவள் அவரின் கையில் இருந்த தட்டை வாங்கினாள். “எப்ப கல்யாணம்?” என்று கேட்டாள்.
வந்தவர்களின் முகத்தில் வென்னீரை ஊற்றுவாள் என்று விக்னேஷ் எதிர்பார்த்து இருந்தான். இவள் ஏன் இப்படி சொன்னாள் என்று புரியவில்லை.
கைலாஷூக்கு ஆச்சரியம்.
“உனக்கு ஓகேன்னா இந்த வாரமே கூட வச்சிக்கலாம்மா..” என்றார்.
“எங்கப்பாவுக்கு கடன் இருக்கு. அதை நீங்க கட்டுவிங்கன்னா எனக்கு இந்த கல்யாணத்துக்கு ஓகே..” என்றாள்.
“நான் கட்டுறேன்ம்மா. இனி உன் குடும்பம் என் குடும்பம் போல..” என்றார் கைலாஷ்.
இவள் தன் கையில் இருந்த தட்டை அம்மாவிடம் தந்தாள். “அப்படின்னா போய் அதுக்கான ஏற்பாடுகளை செய்ங்க. எங்கப்பாவோட கடைசி ஆசையை நான் கண்டிப்பா நிறைவேத்துவேன்..” என்றாள்.
வந்தவர்கள் புன்னகையோடு திரும்பி போனார்கள்.
“என்ன ப்ளான் பண்ற?” எனக் கேட்டபடி கரண்டியோடு ஹாலுக்கு வந்தான் விக்னேஷ்.
“என்ன ப்ளான். மேரேஜ் பண்ணிக்க போறேன். அவ்வளவுதான்..” என்றவள் பழ தட்டில் இருந்த ஒரு பழத்தை எடுத்து கடித்தாள். சோஃபாவில் அமர்ந்தாள்.
ரதி வாசல் ஓரத்தில் நின்றாள். தங்கையின் முடிவை அவளாலும் நம்ப முடியவில்லை.
“நீ கைலாஷ் மேல கொலைவெறியில் இருக்க. அவரோட பையனை கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற?” எனக் கேட்டான் விக்னேஷ்.
“ரொமான்ஸ்தான்..” என்றாள் சிரிப்போடு.
“உன்னை பார்த்தா வில்லி மாதிரி இருக்கு..” என்றாள் ரதி பயத்தோடு.
நிமிர்ந்த மாயா “இல்ல. நான் மேரேஜ் பண்ணா உன் மாமியாரோட கடனை கட்டிடலாம்.. நீயும் ஹேப்பி. நானும் ஹேப்பி..” என்றாள்.
அமலா பழ தட்டை தூக்கி வீசினாள். “என் புருசனை கொன்னுட்டுதான் நீங்க இரண்டு பேரும் வாழணுமா?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள்.
மாயா அசையாமல் இருந்தாள். “இவளை கை அறுக்கவும் நான் சொல்லல. உன் தாலியை அறுக்க சொல்லி எங்கப்பன்கிட்டயும் நான் சொல்லல. கேட்டா நான் வேலைக்கு போனதுதான் காரணம்ன்னு பழி போடுவிங்க. ஆனா அது ரதியோட மாமியாருக்கு வெறும் சாக்கு. நான் என்ன பண்ணாலும் அந்த டேஸ் பொம்பளை அக்காவை துரத்தி விட்டிருப்பா..” என்றாள்.
“இப்ப இவனை கல்யாணம் பண்ணா நடந்தது எல்லாம் இல்லன்னு ஆகிடுமா? நீ அவங்களை பழி வாங்கதான் அந்த கம்பெனிக்கு போனன்னு தெரிஞ்சா உன்னை கொன்னுடுவாங்க..” என்றான் விக்னேஷ்.
“நோ ப்ராப்ளம்..” என்று தோள்களை குலுக்கினாள் இவள். “இவ்வளவு நாள் வேலை செய்யும் போது வராத சந்தேகம் இப்ப கல்யாணத்துக்கு ஓகே சொன்னதும் வருதுன்னா நான் கவலைப்பட மாட்டேன்..” என்றாள்.
“இவ விளையாடுறா..” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிச்சனுக்கு சென்றான் விக்னேஷ்.
காலை நேரத்தில் மூன்று பெண்களும் வேண்டா வெறுப்பாகதான் சாப்பிட்டார்கள். அமலாவுக்கு உணவு தொண்டையில் இறங்கும் போது விஷம் போலவே இருந்தது.
பெண்கள் பிறந்தால் அது அதிர்ஷ்டம் என்று சொல்லப்பட்ட அத்தனை பழமொழிகள் மீதும் கோபம் வந்தது.
இந்த நாட்டின் திருமண வாழ்க்கை சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு பெண் கட்டையில் போகும் வரையிலும் பிறந்த வீட்டிலிருந்து சீர் வர வேண்டும், கட்டையில் போகும்போதும் பிறந்த வீட்டில் இருந்து கோடி வர வேண்டும் என்று கேட்கும் சமூகம் இதுவாக மட்டும்தான் இருக்க முடியும். விரும்பி செய்தல் வேறு. கட்டாயப்படுத்தி வாங்குதல் வேறு.
அமலா வாழ்வின் மீதான வெறுப்பின் உச்சத்தில் இருந்தாள்.
இவர்கள் சாப்பிட்டு முடித்த நேரத்தில் வீட்டுக்குள் வந்தான் தருண்.
ரதியின் தட்டில் உப்மா காலியாகி இருப்பதை கண்டு சிறு நிம்மதி.
ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்தவர்களின் முன்னால் இவனும் அமர்ந்தான்.
“வக்கீல்கிட்ட பேசிட்டு வந்தேன்..” என்றான்.
“எப்ப டைவர்ஸ் கிடைக்குமாம்?” என்று கேட்டாள் ரதி.
இவனுக்கு நெஞ்சில் ஆணி இறங்கியது போல் இருந்தது.
“அதுக்காக போகல. என் பேரன்ட்ஸ்கிட்ட இருந்து சொத்துக்களை பிரிச்சி வாங்க வாய்ப்பு இருக்கான்னு கேட்க போனேன்..” என்றான்.
“ஓ..” என்ற ரதி அத்தோடு அமைதியானாள்.
“வக்கீல் என்ன சொன்னாரு?” விக்னேஷ் ஆவலோடு கேட்டான்.
“கோர்ட்டுல கேஸ் போட்டா தாத்தாவோட சொத்துக்கள் நமக்கு கிடைக்கும். இல்லன்னா அம்மா அப்பாகிட்ட கேட்டு சொத்தை பிரிச்சி வாங்கணும்..” என்றான் பெரியவன்.
“எங்களுக்கு உங்க சொத்து வேணாம். உங்க உறவும் வேணாம். முதல்ல இங்கிருந்து கிளம்பி போங்க..” என்றாள் அமலா.
“சாரி அத்தை. ஆனா இதுல என் தப்பு எதுவுமே இல்ல. நான் எங்கம்மாகிட்ட பேசிட்டுதான் இருந்தேன். கத்தி பேசினாதான் பேசிய மாதிரி அர்த்தமா? அதுக்கும் ஒரு நிலை வந்திருந்தா கத்தி இருப்பேன். அதுக்குள்ள இவ அவசரப்பட்டுட்டா. நான் ஏற்கனவே கில்டியில் சாகுறேன். நீங்க என்னை விரட்ட பார்க்கிறிங்க? உங்க பொண்ணாவது வெறுமனே கையை அறுத்தா. நான் கழுத்தை அறுத்துப்பேன்..” என்று மிரட்டினான்.
அவன் சொன்னது கேட்டு ரதி விம்மினாள். ஆயிரம் கோபம் இருந்தாலும் அவளின் மனதுக்குள் இருந்த காதல் இன்னமும் செத்திருக்கவில்லை
அக்காவின் அந்த சிறு விம்மல் காதில் விழவும் மாயா உள்ளுக்குள் நகைத்தாள். நாம் எடுத்த முடிவு தவறு இல்லை என்றது அவளின் மனசாட்சி.
அப்பா இருக்கும் வரை பழி வாங்குதல்தான் பெரிது என்று தோன்றியது. ஆனால் இப்போது அப்பாவின் இடத்தில் நாம்தான் இருக்கிறோம், நம் வீட்டை கட்டி காக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது என்பது புரிய வந்ததும் சிந்தனைகள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன.
அக்கா ஒருத்தியாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்தது இதயம்.
மாயா அந்த ஹாலை விட்டு வெளியே போனாள்.
“எதுக்கும் ஒரு முறை அப்பாகிட்ட கேட்டு பார்க்கலாம். அவர் ஒத்து வரலன்னா கேஸ் போட்டுடலாம்..” என்று சொல்லிவிட்டு விக்னேஷ் எழுந்தான்.
மாயாவின் பின்னால் சென்றான். வெளியே வாசலின் ஓரத்தில் இருந்தது ஒரு பழைய வேப்பமரம். அதன் அடியில் சென்று அமர்ந்தாள் மாயா.
அவளின் பார்வை வீட்டைதான் அளந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை பெரிய வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். அரண்மனை போல் இருந்தது அந்த வீடு. எத்தனை கார்கள், எத்தனை விதமான தொழில்கள். சர்வ சாதாரணமாக சில நாட்களிலேயே நடு ரோட்டுக்கு வந்து நிற்போம் என்று இவள் கனவிலும் நினைக்கவில்லை.
ஒரு முடிவு தவறானால் அடுத்த முடிவை சரியாக எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போதுதான் தெரிகிறது ஒரு முடிவு தவறானால் கூட மொத்த வாழ்க்கையும் போய்விடும் என்று.
வீட்டில் இருந்து வெளியே வந்த விக்னேஷை பார்த்தாள்.
நேராய் இவளின் முன்னால் வந்துதான் நின்றான்.
“எதுக்காக இந்த கல்யாண நாடகம்?” என்று கேட்டான்.
“நாடகம் இல்ல. நிஜமாவே இஷ்டம்தான்..”
“ஆனா எதுக்காக?”
“எங்க அக்கா உங்க வீட்ல வாழ்ந்தாலும் சரி வாழலன்னாலும் சரி. உங்க அண்ணன் தனிக்குடித்தனம் வந்தாலும் வரலன்னாலும் சரி. உங்க அம்மா எங்கப்பாவை கடன்காரன்னு சொல்லும்படி என்னால விட முடியாது..” என்றாள்.
“ஆனா நீ செய்வது தப்பு..”
இவள் கசப்பாக நகைத்தாள். “என் அப்பா கடனை கட்டுவதற்காக எதுக்காக அவ்வளவு போராடினார்ன்னு இப்பதான் புரியுது. ஏழையோ பணக்காரனோ.. எங்களுக்கு மானமும் ரோஷமும் இருக்கு. அதனாலதான் உங்க அம்மாவோட வார்த்தைகளை சகிச்சிக்க முடியாம தடுமாறுறோம். என்னோட முடிவு இது. நீங்க குறுக்க வராதிங்க..” என்று சொன்னாள்.
“யோசிக்காம முடிவெடுக்கிற. இதுக்காக ரொம்ப வருத்தப்படுவ..” என்றவன் அதன் பிறகு அவளோடு பேசவே இல்லை.
அன்றைய நாளும் மாயா சரியாய் உணவை உண்ணவில்லை. சூனியமாய் போன வாழ்க்கையில் வெளிச்சத்தை எங்கே கண்டுபிடிப்பது என்று அந்த வீட்டில் இருந்த யாருக்குமே தெரியவில்லை.
இரண்டு நாட்கள் போனது. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆட்கள் வந்தார்கள். தேவையான விபரங்களை வாங்கிப் போனார்கள். ஆனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் பணம் கிடைக்க தாமதமாகலாம் என்று சொல்லிவிட்டு போனார்கள்.
ரதி தன் கணவனோடு பேசவில்லை. யாருடனும் பழகவில்லை. தனிமையில் அழுது தீர்த்துக் கொண்டு இருந்தாள்.
கைலாஷ் முகூர்த்தம் குறித்த நாளும் வந்து விட்டது.
மாயாவை அழைத்துப் போக கைலாஷ் காரையும் அனுப்பி வைத்தார்.
அம்மா வரவில்லை. “என் புருஷன் செத்து முழுசா பத்து நாள் ஆகல. அதுக்குள்ள கல்யாணம் கேக்குதா?” என்று மகள் மீது ஆத்திரம் கொண்டாள்.
ரதியும் வரவில்லை.
ஒரு கோவிலின் முன்னால் வந்து நின்றது கார். மாயா இறங்கினாள். இரண்டு பெண்கள் வந்து அவளை அலங்கரிக்க அழைத்து சென்றார்கள்.
பொம்மை போலவே அனைத்திற்கும் ஒத்துழைத்தாள்.
பட்டுப்புடவை உடுத்தி நகைகள் எல்லாம் அணிவித்தார்கள்.
மேக்கப் முடிய இருந்த நேரத்தில் அலங்காரம் நடந்து கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தார் கைலாஷ்.
“உங்க அப்பா கட்ட வேண்டிய மொத்த கடனையும் அந்த கனகவதிவோட அக்கவுண்டுக்கு அனுப்பிட்டேன்..” என்று ஆதாரத்தை காட்டினார்.
“தேங்க்யூ சார்..” என்றவளுக்கு தன் எதிர்காலத்தை நினைத்து கொஞ்சம் பயமாக இருந்தது.
யாரும் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். இவ்வளவு பணம் கொடுத்து நம்மை கூட்டி செல்வது நிச்சயம் நன்றாக வாழ வைக்கவில்லை என்று இவளுக்கே புரிந்தது.
கைலாஷ் சென்று விட்டார். சற்று நேரத்தில் அலங்கரிக்க வந்த பெண்களும் சென்று விட்டார்கள்.
மாயா எழுந்து நின்றாள். “நான் ஏன் கல்யாணம் செய்யணும்? இந்த கைலாஷாலதான் என் அப்பாவுக்கு கடன் ஆனது. இப்ப இவனே கடனை கட்டிட்டான். இனிமே நான் எதுக்கு இங்கே டைம் வேஸ்ட் பண்ணணும்?” என்று கேட்டவள் சின்ன சிரிப்போடு அங்கிருந்து தப்பிக்க திட்டம் போட்டாள்.
சத்தம் இன்றி அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். தப்பிக்கலாம் என்று அவள் முயன்ற போது யாரோ அவளின் தலையில் துணியை போட்டு மூடினார்கள். அவளை அங்கிருந்து கடத்திச் சென்றார்கள்.
தொடரும்.
