Skip to content
Post Views: 1,875

மணி ( அருளின் நண்பன் ) பத்மினியை அழைத்து கொண்டு வீட்டில் விட சென்றான்… எங்கு கொண்டு போய் விடுவது என அவன் கேட்ட போது வானதியின் வீட்டுக்கு செல் என்று அவர் கூறினர்…
Advertisement
அவனும் அங்கு சென்று விட்டுவிட்டு “அத்தை நான் போய் அருளை பாக்குறேன்… நீங்க போய் தேவாவை பாருங்க… வானதி வேற கோவத்துல இருந்தா என்னனு பாருங்க” என்று கூறி அனுப்பி வைத்துவிட்டு மணியும் மண்டபதை நோக்கி பைக்கை விட்டான்…
Advertisement
பத்மினி உள்ளே சென்று அங்கு நடப்பதை பார்த்தவுடன் கண்ணீருடன் நின்று விட்டார்… அங்கு வானதி தரையில் அமர்ந்து இருக்க அவளுக்கு இருபுறமும் ஒரு பக்கம் தேவா அவள் மடியில் படுத்து இருக்க இன்னொரு பக்கம் யுகேன் மடியில் படுத்து இருந்தான்… இருவருக்கும் தலையை கோதி கொடுத்து கொண்டு இருந்தாள் வானதி…
Advertisement
தன் பிள்ளைகளை தாயாய் தாங்கும் ஒரு பெண்ணை கேட்க கூடாதாவர் பேச்சை கேட்டு இத்தனை நாள் பேசாமல் இருந்துவிட்டேனே மனதிற்குள்ளேயே வருந்தினார்…
Advertisement
அவரை முதலில் யாரும் கவனிக்கவில்லை… பின் வேலுவின் அம்மா தான் முதலில் பார்த்து “வாங்க சம்மந்தி” என்று அழைத்தார்… அதன்பிறகு தான் அனைவரும் வரவேற்றனர்…. வானதியும் ஒரு சிறு தலையசைப்பு குடுத்து விட்டு அமைதியாகி விட்டாள்… அவளின் தலையசைய்ப்பே அவருக்கு போதுமானதாக இருந்தது….
தேவாவும் யுகேனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்…. அங்கு மண்டபத்தில் அருள் இன்னும் அதே நிலையில் தான் இருந்தான்…. அவனின் இன்னொரு நண்பன் மூர்த்தி அவனை திட்டியே ஒரு வழியாக்கி விட்டான்….
வேகமாக வந்த மணி மூர்த்தி திட்டுவதை பார்த்து “டேய் டேய் அறிவுகெட்டவனே…. அவனே நொந்து போய் இருக்கான் நீ வேற ஏன்டா… டேய் அருளு எந்திரி இப்படியே உட்காந்துட்டு இருந்தா ஒன்னும் ஆக போறது இல்ல…. போய் தங்கச்சி கிட்ட பேசு… புரிஞ்சிப்பா…. கொஞ்சம் உன் முன்கோவத்தை குற குறனு(குறை) எத்தனை தடவ சொல்லி இருக்கோம்…. எந்திரி முதல்ல” என்று அவனை தூக்கி விட சென்றான்… ஆனால் அருளோ அசைந்து கொடுக்கவே இல்லை…
“டேய் மூர்த்தி என்ன பார்த்துட்டு இருக்க இவனை தூக்கு முதல்ல அப்பறம் போய் மண்டபதை காலி பண்ணு… மூனு பேரும் தங்கச்சி வீட்டுக்கு போகலாம்” என்று கூறினான்…
மூர்த்தியோ அமைதியாக நின்றான்… “டேய் இப்போ நீ வரல… உன் பொண்டாட்டிக்கு போன் பண்ணி நேத்து குடிச்சதை தங்கச்சி கிட்ட சொல்லிடுவேன்” என்று கூறினான்…
“டேய் டேய் அப்படி எல்லாம் பண்ணாத…. ரொம்ப நாள் ஆச்சேனு கம்மியா தான் குடிச்சேன் நீ வேற கம்மனு இரு… நானே ஒரு வார சண்டையை இப்போ தான் சமாதானம் பண்ணேன்….” என்று கூறி ‘இவனை எந்திருச்சு நிக்க வைக்கணும் அவளோ தானு நில்லு” என்று கூறி அவனே மொத்த பலத்தையும் பயன்படுத்தி அவனை தூக்கி நிறுத்தி இருந்தான்….
அதற்குள் மணி மண்டபத்தை மேற்பார்வை பார்ப்பவரிடம் பேசி அனைத்தையும் முடித்து விட்டு வந்தான்…
மணி பைக் எடுக்க அருளை அடுத்து அமர வைத்துவிட்டு அவன் பின் மூர்த்தி அமர்ந்தான்…. நேராக வானதியின் வீட்டுக்கு தான் சென்றான்…
அருள் ஆனால் உள்ளே செல்ல மறுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டான் வேகமாக…. இவர்கள் இருவரும் வீட்டிற்கு சென்று பணத்தை வேலுவிடம் குடுத்து விட்டு அவனிடம் மட்டும் தனியாக அருள் உள்ளே வராமல் குற்றவுணர்ச்சியில் சென்றதை கூறிவிட்டு கிளம்பி விட்டனர்….
வீட்டிற்கு சென்றவன் உடை கூட மாற்றாமல் அப்படியே திண்ணையிலேயே உட்காந்துவிட்டான்… சாவி கூட பத்மினியிடம் தான் இருந்தது….. பத்மினி தான் வானதி வீட்டில் உள்ளாரே…. நடந்த பிரச்சனையில் அவரிடம் தான் சாவி உள்ளது என்பதையே மறந்துவிட்டார்….
இங்கு வானதி வீட்டில் தேவாவும் யுகேனும் சிறிது நேரம் வானதியின் மடியில் படுத்துவிட்டு எழுந்து கொண்டனர்…. தேவா ரூமில் சென்று மீண்டும் உறங்கி இருக்க யுகேன் வேலுவிடம் பேச சென்றுவிட்டான்…. பாரதி தேவா இருக்கும் அறையை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டே இருந்தாள்….
பின் அவளாகவே இனிமேல் இங்கு இருந்தால் யாரோ பார்த்து விடுவார்கள் என நினைத்து வானதியிடம் சென்று “அக்கா வீட்டுக்கு போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் அவள் வீட்டுக்கு சென்று விட்டாள்…
இரவு ஏழு மணிக்கு தான் தேவா எழுந்து இருந்தான்… கொஞ்சம் காய்ச்சல் மட்டு பட்டு இருந்தது….. அவன் வெளியில் வந்தவுடன் வானதி அவனை முகம் கழுவி வருமாறு சைகையில் கூறினாள்… அவனும் அவள் அங்கு வைத்து இருந்த சூடு செய்து வைத்து இருந்த தண்ணீரை எடுத்து கொண்டு முகம் கழுவி வாய் கொப்பளித்து விட்டு வந்தான்…
வானதி அவனுக்கு இட்லியை ஊட்டிவிட்டாள்… அவனின் பார்வை பாரதி எங்கு என்று தான் தேடியது…. ஆனால் அவள் தான் இங்கு இல்லையே…. அவனின் பார்வையை புரிந்து கொண்ட வானதி யுகேனை அழைத்து பாரதியை கையோடு அழைத்து வர கூறினாள்…
அவனும் சென்று அழைத்து வந்து இருந்தான்… அவளை பார்த்த பின் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது….
இருவரையும் அழைத்து கொண்டு பின்பக்கம் சென்றாள்…. வீட்டில் மற்றவர்கள் ஓரளவு விசயத்தை யூகித்து இருந்தனர்…. அவர்களுக்கு சந்தோசம் தான்…. இருவரும் சேர்வது…. அவன் தூங்க சென்ற போது அவள் அடிக்கடி பார்த்தது…. பின் இவனின் அவளுக்கான தேடல்…. அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருந்தனர்… பத்மினிக்கு கூட சந்தோசம் தான்….
பாரதியின் பாட்டிக்கு இது அளவில்லாத சந்தோசம் தான்… தனக்கு பின் பாரதிக்கு யார் உள்ளனர் என நினைத்து கொண்டே தான் இருப்பார்…. அவருக்கு வானதி விடமாட்டாள் என தெரியும்…. இருந்தாலும் பாரதியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் இவர்களின் உறவை ஏற்ப்பார்களா என்று சந்தேகம் இருக்கும்….
அதுவும் இவர்களும் வானதி அருள் வேலுவின் குடும்பத்தினரும் உறவினர்கள் கூட இல்லை…. ஆனால் தற்பொழுது அவர்கள் வீட்டிக்கே தன் பேத்தி செல்வது சந்தோசம் தான் அவருக்கு….
பின்பக்கம் சென்றவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை… வானதி அமைதியாக கைக்கட்டி நின்று கொண்டாள்…. மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்று இருந்தனர்… பின் தேவாவே வானதியை அங்கிருக்கும் கல்மேடையியோ அமர வைத்து அவளின் கை பிடித்துக்கொண்டே மண்டியிட்டு அமர்ந்தான்… அவன் கீழே அமர்ந்து இருப்பதை பார்த்த வானதி மேலே அமருமாறு சைகையில் கூறினாள்…
ஆனால் அவனோ அதை மறுத்து “வானு ம்மா எனக்கு பாரதியை பிடிச்சி இருக்கு அவளுக்கும் அப்படி தான் ரெண்டு பேரும் வாய் வார்த்தையா கூட சொன்னது இல்ல… ஆனா சொல்லாமயே எனக்கும் சரி அவளுக்கும் சரி எங்களோட நேசத்தை உணர்ந்தோம்… உங்க கிட்ட நாங்க வேணும்னு மறைக்கல…. ஆனா நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிட்டது கூட இல்ல….. உங்க கிட்ட இந்த விஷேசம் முடிஞ்சி சொல்லலாம்னு தான் இருந்தேன்…” என கூறினான்
அவள் எதுவும் கூறாமல் அவனின் தலையை கோதி அவளுக்கும் இதில் விருப்பம் என சொல்லாமல் சொல்லிவிட்டாள்…. பாரதியும் அவனருகே அமர்ந்து அவளின் இன்னொரு கையை பிடித்து “உங்களுக்கு எங்க மேல கோவம் இல்ல தானு க்கா…. இவரும் இன்னும் காலேஜ் முடிக்கல…. நானும் இன்னும் காலேஜ் கூட போகல…. அதுகுள்ள பிடிச்சி இருக்குனு சொல்றோம்னு நீங்க தப்பா நினைக்கல தானு” என்று கேட்டாள்….
தேவாவிடம் இருந்த கையை பிரித்து அவள் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு இருவரையும் தன் அருகில் அமர கூறினாள்…. அவர்களும் அவளின் இரு பக்கமும் அமர்ந்து அவளின் தோளில் சாய்ந்து கொண்டனர்….
வானதி அவள் கொண்டு வந்த போனில் “எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்…. நான் என்னோட பசங்களா நினைக்கிற நீங்க ரெண்டு பேருமே எப்பயுமே என்கூடவே இருப்பிங்க… எனக்கு உங்க மேல எந்த கோவமும் இல்லை…. ஆனா உங்க ரெண்டு பேருக்குமே கனவு ரொம்ப பெருசு…. அதை அடைஞ்ச வாட்டி தான் மத்த எல்லாத்தையும் யோசிக்கனும்…. தேவா அவ அஞ்சு வருஷம் படிப்பு இருக்கு…. அவ படிக்குற வரைக்கும் நீ வெயிட் பண்ணனும்… அவளை நீ டிஸ்டர்ப் பண்ண கூடாது…. சரியா….” என்று டைப் செய்து காட்டினாள்
அவர்களும் சரி என கூறி அவளை இரு பக்கமும் அணைத்து கொண்டனர்…. இங்கு இவர்கள் இப்படி இருக்க அருள் இன்னமும் திண்ணையில் தான் படுத்து இருந்தான்.. பத்மினி சாவி அவரிடம் உள்ளது எனவே மறந்துவிட்டார்…
வானதியும் அவன் மேல் உள்ள கோவத்தில் சாப்பிட்டானா இல்லையா என்றே கேட்காமல் வீட்டில் தான் இருப்பான் என விட்டுவிட்டாள்… அனைவரும் அவன் வீட்டில் தான் உறங்கி இருப்பான் என விட்டுவிட்டனர்….
error: Content is protected !!