Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மௌனமாய் ஒரு காதல் செய்வோம்

காதல் ❤️ 15

அருள் குளித்துவிட்டு வானதி வீட்டிற்கு தான் சென்றான்.. பின் என்ன நினைத்தானோ நேராக அவனின் சூப்பர் மார்கெட்டிற்கு சென்றுவிட்டான்முதலில் சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்கள் மட்டுமே வைத்து உள்ளான்அனைத்து வகையான பொருட்களும் வைத்து உள்ளான்..

மேலே பாத்திர கடையும் வைக்கலாம் என்று ஒரு எண்ணம்.. ஆனால் வானதி சில மாதங்கள் போகட்டும் இதை முதலில் பாருங்கள் என்று கூறிவிட்டாள்அதனால் அவனும் அதை சில மாதங்கள் கழித்து பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்

கடையில் நன்றாக இப்பொழுது எல்லாம் வியாபாரம் ஆகிறதுதினமும் இரவு கணக்கை பார்த்துவிட்டு தான் உறங்குவான்அதே போல் வாரத்திற்கு ஒரு முறை வானதி கணக்கை பார்த்து விட்டு எதோ ஒரு விஷயத்தில் ஐடியா சொல்வாள்.. எப்போதும் கடைக்கே வந்து பார்த்துவிட்டு செல்வாள்



Advertisement

அவளும் வழக்கம் போல் பத்து மணிக்கு மேல் வந்தாள்.. வந்தவள் ஒரு வார கணக்கை பார்த்துவிட்டு சூப்பர் மார்கெட்டை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் அவன் இருக்கும் அறைக்கு வந்தாள்அவள் முதலில் வந்ததில் இருந்து அவளையே பார்த்தவாறு இருந்தான் அருள்தற்போதும் பார்வையை மாற்றாமல் அப்படியே பார்த்து கொண்டு இருந்தான்

அவனின் பார்வையில் வெட்கம் வந்தாலும் அவன் மேல் உள்ள கோவத்தில் அங்கிருந்த வெயிட் லெஸ் பொம்மையை எடுத்து அவன் மேல் எரிந்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள்

அவனும் அங்கு வேலை செய்யும் செல்வா அண்ணனிடம் கடையை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு அவள் பின்னாடியே சென்றான்தன் பின்னாடியே வருபவனை முறைத்துவிட்டு தந் வண்டியை எடுத்து கொண்டு வீட்டை நோக்கி சென்றாள்

Advertisement

கண்ண காட்டி போனா

Advertisement

என்ன தாண்டி போனா…..ஆ.

கண்ண காட்டி போகும்போதே

என்ன அவ கொண்டு போனா

Advertisement

சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்

 

சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

அட சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்

வழி முழுவதும் அவள் பின்னே தான் சென்று கொண்டு இருந்தான்…. அதுவும் அவன் முகத்தை பார்த்தால் அனைவரும் உருகிவிடும் அளவிற்கு அப்பாவியாக வைத்து இருந்தான் அருள்…

வானதிக்கு சிரிப்பாக இருந்தாலும் இன்னொரு புறம் அலையட்டும் என்று நினைத்து விட்டுவிட்டாள்…. வேலு வழியில் இவனை பார்த்து பேச கூப்பிட்டாலும் இவன் அழைப்பதை கேட்காமல் அருள் அவன்போக்கில் வானதி பின் வண்டியை செலுத்தினான்….

அவன் பக்கத்தில் இருந்த மூர்த்தியிடம் “டேய் மாப்ள இவன் என்னடா காது கேட்காத மாதிரி போறான்…” என்று கேட்டான்  வேலு….

அதற்கு மூர்த்தியோ “டேய் மாமா முன்னாடி போன உன் தங்கச்சிய பாக்கலயா நீ… அது தான் இவன் திரும்பி பாக்காம போறான்… வா எப்படியும் நாலு அடி வாங்கி சமாதானம் பண்ணிடுவான்…” என்று கூறி பைக்கை எடுக்க வேலுவும் சிரித்து கொண்டே அவன் வண்டியை எடுத்து கொண்டு அவரவர் வேலையை பார்க்க சென்றனர்….

இங்கு வானதி வீட்டிற்கு சென்று இருக்க தன் பின்னே வருபவனை முறைத்து கொண்டே  வீட்டினுள் சென்றுவிட்டாள்… அவள் பின்னாடியே சென்றவனை வழிமறித்த தாயம்மா பாட்டி “எங்க இந்த பக்கம்???”  என்று கோவமாக கேட்டார்…

“என்ன கேள்வி இது ஏன் பொண்டாட்டிய பாக்க வந்தேன்…” என்று அவள் சென்ற பக்கம் பார்வையை வைத்து கூறினான்…

‘உன் பொண்டாட்டியா அப்படி யாரும் இங்க இல்லையே” என்று நக்கலாக கூறினர் பாட்டி….

அப்படி அவர் கூறியவுடன் தான் அவர் பக்கம் பார்வையை திருப்பிய அருள் அவர் முகத்தில் இருக்கும் கோவத்தை கவனித்தான்….

அவருக்கு தேவா என்றால் தனி பிரியம் தான்… சிறு வயதில் கூட அவனை விளையாட்டாக கூட அடிக்க விடமாட்டார்….  நேற்று அவனை அடித்ததால் அருள் மேல் கோவத்தில் இருந்தார்…. அதுவும் அவன் வேறு காய்ச்சலில் இருந்த போது அவன் தப்பே செய்யாமல் இருந்தும் அடித்ததுனால் பாட்டி அருள் மீது கோவத்தில் இருந்தார்….

அவரை கொஞ்சி கெஞ்சி எப்படியோ சமாதானம் செய்து உள்ளே சென்ற போது ஹாலில் தேவா உட்கார்ந்து இருந்தான்…. அவன் அருகில் சென்று அவன் தோளில் கை போட்டு “சாரி தேவா அடிச்சி இருக்க கூடாது…  கோவப்பட்டு உன்னை அடிச்சிட்டேன்… ரொம்ப ரொம்ப சாரி…” என்று அடித்த கன்னத்தை தடவி குடுத்து கூறினான்…

தேவாவோ “கோவம் எல்லாம் இல்ல ண்ணா… கொஞ்சம் வருத்தம் இருந்திச்சு…. ஆனா அது போயிடிச்சு உடனே….நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்காதீங்க… எனக்கு கஷ்டமா இருக்கு…” என்று கூறினான்…

அவனின் தோளில் தட்டி குடுத்து விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான்…. தேவாவே பாரதியை காதலிப்பதை குறித்து அருளிடம் கூறிவிட்டான்… நேற்று வானதி கேட்டது…. இருவரும் கூறியது என்று அனைத்தும் கூறி இருந்தான்….

அருள் முதலில் திகைத்தாலும் பின் மகிழ்ந்து “அவளோ பெரிய மனுஷன் ஆகிட்டியா டா நீ… உன் வானு ம்மா சொன்னது தான் சொல்றேன்… ரெண்டு பேருக்கும் இன்னும் வயசு இருக்கு…. சரியான வயசு வர வரைக்கும் வெயிட் பண்ணனும்.. சரியா” என்று கேட்டான் அருள்….

அவனும் சரி என தலை அசைத்து விட்டு “ண்ணா எல்லாரும் அக்கா வீட்டுக்கு போயிட்டாங்க… இப்போ அப்பத்தாவை கூப்பிட்டுக்கிட்டு நான் அக்கா வீட்டுக்கு கிளம்புறேன்…. நீ வானு ம்மாவை கூட்டிட்டு வந்துரு அங்க” என்று கூறிவிட்டு பாட்டியை அழைத்து கொண்டு ரஞ்சி வீட்டுக்கு சென்று விட்டான்…

தன்னவள் தரிசனம் தருவாள் என நினைத்து ஐந்து நிமிடம் அங்கேயே உட்கார்ந்து இருந்தான்… ஆனால் அவளோ ஓரிடத்தில் மறைந்து நின்று கொண்டு அவனுக்கு ஆட்டம் காட்டி கொண்டு இருந்தாள்….

சிறிது நேரம் காத்து இருந்தவன் பொறுமை இழந்து “குட்டிமா எங்க இருக்க…????” என்று கத்தி கேட்டான்…. அவளோ மூச்சு காற்று கூட கேட்காத அளவு அமைதியாக நின்று இருந்தாள்….

அவள் வராததை பார்த்து சிரித்துவிட்டு பின் அனைத்து இடத்திலும் தேட ஆரம்பித்தான்… அவளோ வீட்டிற்கும் பின்வாசலுக்கும் செல்லும் இடத்தில் உள்ள சிறு சந்தில் ஒளிந்து நின்று இருந்தாள்…

சிறிது நேர தேடலுக்கு பின் அவளை கண்டுபிடித்தான்… மெது மெதுவாக அந்த இடத்தை நோக்கி சென்று அவள் கையை பிடித்து தன் பக்கம் திரும்பி அணைத்து கொண்டான்….

முதலில் பயந்தவள் பின் அவனிடம் இருந்து திமிறி கையை விடுவித்து இருந்தான்…. அவனை நான்கு ஐந்து அடி அடித்துவிட்டு ஏற்கனவே அவள் போனில் டைப் செய்து வைத்து இருந்ததை அவனிடம் குடுத்துவிட்டு கோவமாக அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்….

அதில் “உன்னோட முன்கோவத்தை குறைனு நான் எத்தனை தடவ சொன்னேன்… ஆனா நீ கோவத்துல தேவாவை அடிச்சு இருக்க… கூட ஒரு பொண்ணு இருந்தா அவன் தப்பு பண்றான்னு அர்த்தமா… உன் தம்பியை நீயே சந்தேகம் படுவியா…. அப்போ என் கூட ஒரு பையன் இருந்தா நானும் தப்பான பொண்ணா மாமா….” என்று பாதி படித்தவுடனேயே கோவம் கொண்டு “தேவி” என்று கத்திக்கொண்டே அவள் இருக்கும் இடம் சென்றான்….

“என்ன பண்ணி இருக்க குட்டிமா நான் போய் எப்படி உன்னை சந்தேக படுவேன்…. நான் மாறுனாலும் நீ மாறவே மாட்ட இப்படி இன்னொரு தடவ சொல்லாத” என்று கோவமாக கூறினான்…

அவள் அவனை பார்த்து முறைத்துவிட்டு மேலும் படிக்குமாறு சைகையில் கூறினாள்…

“என்ன அத படிச்சிட்டு என்கிட்ட வந்து கத்துனியா… இதுக்கு தான் முங்கோவத்தை குறைனு சொல்றது… இதை படிக்க கூட உனக்கு பொறுமை பத்தல….ஒழுங்கா கோவத்தை குறைச்சிக்கோ மாமா…. அந்த கோவமே பெரிய பிரச்சனையை கொண்டு வந்துற போது” என்று டைப் செய்து இருந்தாள்….

அதை படித்து விட்டு அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து “குட்டிமா என்னால கோவத்தை கண்ட்ரோல் பண்ண முடியல…. முடிஞ்ச வரைக்கும் என்னோட கோவத்தை குறைக்க பாக்குறேன்…” என்று கூறி மண்டியிட்டவாறே அவள் மடியில் படுத்து கொண்டான்…. அவள் கை தானாகவே அவனின் தலையை கோதி கொடுத்தது…..

சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

அட சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!