Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

குட் லக் சுந்தரி

குட் லக் சுந்தரி….13

குட் லக் சுந்தரி….13

விக்ரம் வந்து சென்றவுடனே நேசன் அத்தனை ஆக்ரோஷமாக,

“அதை கழட்டி எறிமா….”என்று சுந்தரி கழுத்தில் இருந்த தாலியை கூற,

“என்னங்க என்ன பேசுறீங்க…..”என்று லட்சுமி அலறிவிட்டார்.தன் பேரன் செய்தது தவறு தான் என்றாலும் அதற்காக தாலியை கழட்ட சொல்லுவது சரியில்லை என்று தான் தோன்றியது அவருக்கு.



Advertisement

“என்ன பேசுறாங்க…..நான் சரியா தான் பேசுறேன்….சுந்தரி சம்மதம் இல்லாம நடந்தது….இது கல்யாணமே இல்லை…சுந்தரிமா எந்திரி இந்த தாத்தா இருக்குற வரைக்கும் நீ எதுக்கும் பயப்பட வேண்டாம்….முதல்ல அதை கழட்டி எறி…..”என்றவர் உடனே மகனிற்கு அழைத்து அனைத்தையும் கூறி,

“பெரிய ரவுடினு நினைப்பா உன் பிள்ளைக்கு அவனை பார்த்து நான் பயந்துடுவேன்னு நினைக்கிறானா…..என்ன செய்யுறேன் பாரு…..”என்றுவிட்டு ரவியின் பதிலை எதிர்பார்க்காமல் வைத்துவிட்டார்.

“என்னங்க நீங்க இப்படியெல்லாம் பேசுறீங்க….அவன் நம்ம பேரன்…..”என்று லட்சுமி அழ தொடங்கிட,

Advertisement

“அப்ப சுந்தரி…..”என்றார் நேசன்.

Advertisement

“அவளும் எனக்கு முக்கியம் தான்….அவன் செஞ்சது தப்பு தான் அதுக்கு இப்படியெல்லாம் பேசாதீங்க…..”என்று வாய்விட்டு கதறிவிட,வசந்தியோ அதைக் கூட செய்யமுடியாமல் மகளை பார்த்துக் கொண்டிருந்தார்.இப்படியே இரண்டு நாட்கள் சென்றது அதற்குள் ஊர் முழுவதும் சுந்தரியின் திருமண விஷயம் கசிந்து அனைவரும் வந்து கேட்டுவிட்டு செல்ல தொடங்கினர்.நேசன் தான் அனைவரிடமும் பேசி அனுப்பிக் கொண்டிருந்தார்.

வசந்தி மகளின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்க அவளோ மௌனியாகி போனாள்.எதுவும் யாரிடமும் பேசுவதில்லை ஏதோ தீவிர யோசனை செய்யும் பாவனை மட்டுமே அவளின் முகத்தில் இருந்தது.வசந்தி அவளிடுடன் பேச முயலும் போதெல்லாம்,

“இப்ப என்னை எதுவும் கேட்காதமா…..”என்றுவிட வசந்திக்கு மகளின் எண்ணப்போக்கு ஒரளவிற்கு புரிய தொடங்கிற்று.அவள் இந்த திருமணத்தை ஏற்று கொள்ள தான் போகிறாள் என்று அவளின் நடவடிக்கைகளே கூற வசந்திக்கு தன் பெண் இத்தனை கோழையாகிவிட்டாளா என்று கோபம் தான் வந்தது.அதனால் அவரும் எதுவும் கேட்கவில்லை.

Advertisement

அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் வந்தான் விக்ரம்.இம்முறை அவன் மட்டும் வரவில்லை ரவிகுமாரும்,நிரோஷவும் சேர்ந்து வந்திருந்தனர்.லட்சுமியாவது மகன்,மருமகளை பெயருக்கு வரவேற்றார் நேசன் அதை கூட செய்யவில்லை.ரவிகுமாருக்கு மகன் செய்து வைத்ததில் அத்தனை கோபம் அதற்குள் விஷயம் நிரோஷாவின் காதுக்கு போய்விட அவர் ஆடி தீர்த்துவிட்டார் கணவனிடம்.

“இதுக்கு தான் அவன் அங்க போனானா….நான் இந்த மேரேஜை அக்ஸபட் பண்ணபோறதில்லை…..”என்று கத்திக் கொண்டிருக்க,

“என் கிட்ட எதுவும் கேட்காத எதுவா இருந்தாலும் உன் புள்ளைகிட்ட பேசிக்க….”என்று ரவி நிதானமாக கூறிவிட்டார்.அவருக்கு மனைவியின் மீது தான் அத்தனை கோபம் இவள் ஒழுங்காக இருந்திருந்தால் மகன் இப்படி வழி தவறியிருக்கமாட்டான் என்ற எண்ணம்.இருவரும் அன்றே டிக்கெட் புக் செய்து கிளம்பிவிட்டனர். அவர் வந்திறங்கியவுடன் அவரை அழைத்து செல்ல வந்ததே விக்ரம் தான்.அவனைக் கண்டவுடன் ரவி மகனை வேகமாக நெருங்க,அவர் வரும் வேகத்தை வைத்தே அவர் என்ன செய்ய போகிறார் என்று உணர்ந்தவன்,

“என் மேல கை வைக்குற வேலையில்லாம் வச்சுக்காதீங்க…..எனக்கு சுந்தரியை பிடிச்சிருந்தது நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அவ்வளவு தான்…..”என்றுவிட்டான்.ரவி அவனின் பேச்சில் அதிர்ந்து நின்றுவிட்டார்.ஆனால்  நிரோஷா,

“விக்ரம்…..ஐ ம் நாட் அக்ஸ்பட் திஸ் மேரேஜ்……”என்று ஆக்ரோஷமாக கூற,

“இட்ஸ் ஓகே மாம்….நோ நீட்…..”என்று அவனும் அலட்சியமாக கூறிவிட்டான்.

“நீ அந்த பொண்ணை ஏதோ திட்டம் போட்டு தான் கல்யாணம் பண்ணியிருக்க….உன்னால அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆச்சு….நான் மனுஷனா இருக்கமாட்டேன்….”என்று ரவி எச்சரிக்கை செய்ய,அவரை பார்த்து எள்ளலாக சிரித்தவரே,

“என் லைப்பை ஸ்பாயில் பண்ணி பழிவாங்க நான் என்ன முட்டாளா…..கமான் டேட்….நீங்க தாத்தா எல்லாம் இன்னும் ஆதி காலத்துலேயே இருக்கீங்க….”என்றவன் நிரோஷா மீண்டும் ஏதோ பேசவர அவரையும் தடுத்துவிட்டு,

“எல்லாத்தையும் இங்கே தான் பேசுவீங்களா….கிளம்புங்க….”என்றுவிட்டு  இதோ இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.

அனைவரும் அந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.விக்ரமின் கண்கள் நேசனை ஆராய்ந்து கொண்டிருந்தது.அன்று இருந்த ஆவேசம் இன்று இல்லை அதைவிட அவர் நிதானமாக தன்னை எதிர்கொண்டது அவனை துணுக்குற செய்ய,

“சுந்தரி எங்க பாட்டி….”என்று கேட்டுக் கொண்டே வெளியில் வர அவனை எதிர் கொண்டனர் வசந்தியும்,சுந்தரியும்.

“வந்துட்டியா…..”என்றவன் அவளின் கை பிடித்துக் அழைத்துக் கொண்டு தந்தையின் முன் சென்றான்.

“ப்பா….இது தான் உங்க மருமக….”என்று அறிமுகம் செய்ய அவரோ அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.நிரோஷா ஏதோ எகத்தாளமாக பேசவர,

“மாம்….டோன்ட் டாக் எனிதிங் நான்சென்ஸ்….ஐ கான்ட் கண்ட்ரோல் மை ஆங்கர்….”என்றவனின் முகத்தில் இருந்த கோப கனலைக் கண்டு பெற்றவர்கள் இருவருமே திடுக்கிட்டனர்.

“நிரோ….நீ பேச வேண்டிய இடத்திலேயே இப்ப இல்ல….அதனால அமைதியா இரு…..”என்று ரவி கூற,அவரும் மகனின் கோபத்தைக் கண்டு அடக்கி வாசித்தார்.

“நீ செஞ்சது சரியில்ல விக்ரம்….சுந்தரியோட சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் செல்லுபடியாகாது….”என்று அழுத்தமாக கூறினார் லட்சுமி.

“இப்ப நீங்களா பாட்டி….”என்று அயர்வாக கூறியவன்,சுந்தரியிடம் திரும்பி,

“ஸி….எனக்கு உன்கிட்ட தனியா பேசனும்….”என்றான்.

“எதுவா இருந்தாலும் இங்கேயே பேசுங்க….”என்றாள் சுந்தரி,அவள் வரப்போவதில்லை என்று அவள் நின்ற தோரணையே உணர்த்த,

“நீ என்ன முடிவு எடுத்திருக்க….”என்று கேட்டான்.

“என்ன எடுக்கனும்….எனக்கு தெரியலை….நான் என்ன செஞ்சாலும் அதை நீ நாசமாக்க தான் போற….அதனால நான் எதுவும் செய்ய போறதில்லை…..”என்று அவனைவிட அழுத்தமாக அவள் கூற,விக்ரமின் முகத்தில் மெச்சுதல்,

“குட்….குட் டெசிஷன்…..அப்ப என்னோட கிளம்ப தயாராகு….”என்றவன் தந்தையிடம் திரும்பி,

“எனக்கும் சுந்தரிக்கு மேரேஜ் ஆனதை அபிஷியலா என்ன செய்யனுமோ செய்யங்கப்பா…..”என்றுவிட,ரவிக்கு அவன் செய்து கொண்டிருப்பதை பார்த்து பேச்சே வரவில்லை.

“நீ என்னடா உன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்க….என்னங்க நீங்க எதாவது சொல்லுங்க….”என்று லட்சுமி பேச,

“ம்மா நாம இனி பேசி பிரயோஜனம் இல்லை….நடக்குறது நடக்கட்டும்….ஏனா சுந்தரி இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டா….”என்று வசந்தி மகளின் முடிவை அனைவரின் முன்பும் கூறிவிட்டார்.நேசன் ஓரளவிற்கு இதை அனுமானித்திருந்தார்.அவர் மெல்ல சுந்தரியிடம் எழுந்து வந்து,

“ஏன்????”என்று கேட்க,

“எதுவும் வேண்டாம் தாத்தா…..எதுவும் கேட்காத….”என்றுவிட அதன் பின் நேசன் எதுவும் கேட்கவில்லை எதுவும் செய்யவும் இல்லை.ஏதோ தோற்று போன உணர்வு அவர் தளர்ந்துவிட,

“தாத்தா ப்ளீஸ்….நீ நினைக்கிற மாதிரி இல்ல….நான் உன்னை நம்பாம இருப்பேனா…..”என்று அவரின் எண்ணவோட்டத்தை சரியாக கூற,

“அப்பறம் ஏன் இந்த முடிவு….”என்றார் அவரும் விடாமல்,அதற்கு சுந்தரியிடம் பதில்லை.

“அப்ப என்ன எதுவும் கேட்காத….”என்றுவிட்டு அவர் சென்றுவிட.அதன்பின் நடந்த அனைத்தும் விக்ரமின் விருப்படி தான்.ஊரிலேயே பெரிய மண்டபத்தில் வரவேற்பு போல வைத்தார் ரவிகுமார்.மகன் செய்தது தவறு என்று தான் நினைத்து வந்தார் ஆனால் அவன் என் வாழ்க்கையும் இதில் இருக்கிறது என்று கூறிய பின் ரவி எதுவும் கூறவில்லை.நிச்சயம் விக்ரம் தன் வாழ்வை வீணாக்க விடமாட்டான் என்று நம்பினார்.இதோ அனைவரின் ஆசிர்வாதங்களையும் பெற்று சுந்தரியை தன் மனைவி என்று அனைவரின் முன்னும் காட்டிவிட்டான் விக்ரம்.

சென்னை விமான நிலையம் பயணிகள் தங்கள் பொதிகளை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க,சிலர் பிரிய போகும் உறவுகளுடன் அழுதபடி பேசிக் கொண்டிருந்தனர்.அனைத்தையும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் சுந்தரி.ஒருமாதம் கடந்திருந்தது அவளின் வாழ்வு அவளின் கையில் இல்லை என்று நிருபித்து கொண்டிருந்தான் விக்ரம்.இதோ இதுவரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.இத்தனைக்கும் ஓரே வீட்டில் தான் இருந்தனர்.ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனரா என்றால் கூட இல்லை என்று தான் பதில் வரும்.

“சுந்தரிமா….”என்று அழைத்த தாயின் குரலுக்கு நிகழ்வுக்கு வந்தவள்.

“ஆங் என்னமா????”என்று கேட்க அவரோ அவளின் முகத்தை தான் ஆராய்ந்து கொண்டிருந்தார்.

“ம்மா எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்க….நான் நல்லா தான் இருக்கேன்….”என்றவளின் குரலே உள்ளடங்கி தான் இருந்தது.

“நீ எப்படி இருக்கனு எனக்கு தெரியாதா…..இப்பவும் சொல்லுறேன்….உனக்கு வேண்டாம்னா என்கூடவே வந்துடு….”என்று கூற அவரை பார்த்து அழகாக புன்னகைத்தவள்,

“ம்மா…..அப்படி எதுவும் இல்லை….எனக்கு உங்களை விட்டு போறோம்….அது தான் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகுது…..”என்று கூற,

“அது மட்டும் தானா….”என்று கேட்டவாரே தூரத்தில் நின்று யாருடனோ பேசியில் பேசிக் கொண்டிருந்த விக்ரமை அவர் பார்க்க,

“ம்மா இவனுக்கெல்லாம் நான் பயப்படவேன்னு நினைக்கிறியா…..”என்று கேட்க,வசந்தி எதுவும் பதில் பேசவில்லை அமைதியாக மகளின் முகம் பார்த்தார்.

“அப்படி பார்க்காத….எனக்கு தெரியும் நீ பார்க்குறது எதுக்குனு….”

“அப்ப பதில் சொல்லு….”என்றார் அவரும் விடாமல்,

“அது உனக்கு தெரியும்….”என்றவள் முகத்தை வேறு பக்கம் திருப்ப,அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவர்,

“என் பொண்ணு இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுறவ இல்லைனு எனக்கு தெரியும் அப்பறம் எதுக்கு இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்ட……”என்றவரின் கேள்வியில் சுந்தரியின் தலை தன் போல் கவிழ்ந்தது.

“சின்ன புள்ளையில எதாவது தப்பு பண்ணிட்டா இப்படி தான் நிப்ப……அப்ப நீ தப்பு பண்ணிட்டனு ஒத்துக்குற அப்படி தான……”

“ம்மா அப்படியில்ல….அது….”என்றவளின் தடுமாற்றம் வசந்திக்கு கோபத்தை தான் கொடுத்தது.

“இப்ப நீ சொல்லாம போனாலும் நீ தான் வருத்தபடுவ…அதனால எதுவா இருந்தாலும் சொல்லிடு…..அவன் உன்னை மிரட்டினானா….”என்று விக்ரமை கை காட்டியே அவர் கேட்க,

“இல்லனு சொல்லமுடியாது…..ஆனா அதுக்கெல்லாம் பயந்து நான் இதுக்கு ஒத்துக்கல……இனி எதையும் மாத்த முடியாதுனு தான் அமைதியா இருந்துட்டேன்…..சண்டை போட்டு என்ன ஆகப்போகுது அன்னைக்கு நடந்ததை எல்லாரும் பார்த்துட்டாங்க….நாம இதை மறுத்தாலும் பிரியோஜனமில்ல….ஏனா இந்த சமுதாயம் உண்மையை விட பொய்யை தான் நம்பும்….”என்றவளை இடைமிறத்த வசந்தி,

“யாருக்கவோ உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்க போற அப்படி தான…..”என்றார் ஆதங்கம் குறையாமல்.சுந்தரிக்கு வசந்தியின் பேச்சில் கோபம் தான் வந்தது.

“சரிமா….நீ சொல்லறபடியே நான் இது எல்லாத்தையும் உதறிட்டு வந்துடுறேன்…..நீ எனக்கு மாப்பிள்ளை பார்க்காம இருப்பியா….”என்று கேட்க,

“ஏன் பார்க்காம….கண்டிப்பா பார்ப்பேன்…”என்றவரின் முகத்தில் அத்தனை கோபம்,

“ஓஓ…..அப்ப வர மாப்பிள்ளை கேள்வி கேட்பான்….உன் பொண்ணுக்கு ஏற்கனவே ஒருத்தன் தாலி கட்டியிருக்கான் ஏன் எதுக்குனு….என்ன பதில் சொல்லுவ….”என்று கேட்க,வசந்தி தடுமாறி போனார்.

“என்னாச்சுமா பதில் சொல்லமுடியலையா….”

“உண்மையை சொன்ன புரிஞ்சிக்குறவங்க இருக்காங்க சுந்தரி….”என்றார் அப்போதும் விடாமல்,

“ம்மா….இதெல்லாம் நடக்கும்னு நீ இன்னுமா நம்பிக்கிட்டு இருக்க…..சரி அப்படியே நீ சொல்லறபடியே நடக்கும்னு வச்சுக்குவோம்….எத்தனை பேர் கிட்ட நீ விளக்கம் சொல்லிக்கிட்டு இருப்ப எத்தனை நாளைக்கு சொல்லுவ….நீ என்ன சொன்னாலும் எல்லாரும் என்னை அவனோட சம்ந்தபடுத்தி பேச தான் செய்வாங்க…..சும்மாவே எனக்கு வரன் பார்க்குறேன்னு நீ பட்ட கஷ்டம் போதாதா….இன்னும் கஷ்டபடுனுமா….வேண்டாம்….”

“அப்ப நீ கஷ்டபடப்போறீயா…..”

“எனக்கு அதெல்லாம் புதுசு இல்லமா….நான் மேனேஜ் பண்ணிக்குவேன்…..என்னால முடியாதுனு வந்துட்டா வந்துடுவேன் பயப்படாத…..”

“அதுக்கு நீ போகமலே இருக்கலாம்….”என்றார் வசந்தி.

“நீங்க தான சொல்லியிருக்கீங்க வாழ்க்கைனா போராடி பார்க்கனும்னு….”என்று சுந்தரி கூற வசந்திக்கு அவளின் வார்த்தைகள் சந்தோஷத்தை தரவில்லை மாறாக கவலையை தான் தந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!