Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 7

அத்தியாயம் – 7

இந்தியா கேட், புது தில்லி.



Advertisement

ப்ரதாப்பும், லலிதாவும் கணித்ததற்கு நேரேதிராக, மறுநாள் காலையும் மெல்லோட்டத்திற்கு தயாராகி இந்தியா கேட்டில் வந்து இறங்கி விட்டார் வசுந்தரா. 

இதற்கும் அன்றைய செய்தித்தாளில் தலைப்புச் செய்தி: ‘பழைய நெருப்பு மீண்டும் புகைகிறதா?’ என்பதே. அதன் கீழ் இரு புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தது. ஒன்று – வசுந்தராவும், வருணணும் முந்தைய நாள் மெல்லோட்டத்திற்கு சென்ற போது ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிய போது எடுக்கப்பட்டிருந்தது. மற்றொன்று சித்தார்த்தும், வசுந்தராவும் கல்லூரியில் காதலர்களாக இருந்த போது எடுத்தது.

Advertisement

Advertisement

வெறும் வாயை மெல்லும் கூட்டத்திற்கு, கை நிறைய அவல் கிடைத்தால் சும்மா விட்டு விடுவார்களா என்ன? பதவியின் கண்ணியம் கருதியோ, இல்லை மறைமுக எச்சரிக்கையோ, நேரடியாக எதையும் கூறாமல், சித்தார்த்தையும் வருணனையும் மாறி மாறி வசுந்தராவுடன் இணைத்து, குப்பையை கிளறி மூடி வைத்திருந்தது அந்த தலையங்கம்.

மற்ற முன்னணி செய்தித்தாள்கள் அந்த அளவு தரமிறங்கவில்லையென்றாலும், பல செய்தித்தாள்களில் வசுந்தரா – வருண் மெல்லோட்டப் புகைப்படமே அச்சிடப்பட்டிருந்தது. முதலில் அதைப் பார்த்தது ப்ரதாப் சிங் தான். அதிகாலையிலேயே அவர் சித்தார்த்துக்கும், லலிதாவுக்கும் அழைத்து செய்தியை பகிர்ந்திருந்தார். 

Advertisement

சித்தார்த் வருணனுக்கு அழைத்து காட்டமாய் விளாசித் தள்ளி விட்டார். வருணன் சற்று தயங்கினாலும், தான் மறுத்தால் வசுந்தரா இன்னுமே வருத்தப்படுவார் என்பதை உணர்ந்தவராய் சித்தார்த்தின் எச்சரிக்கையையும் மீறி கிளம்பி வந்து விட்டார். அதற்கும் மேல் வசுந்தராவிடம் பேசி அவர்களுக்குள்ளான பிணக்கையும் சரி செய்ய வேண்டுமே

ப்ரதாப் சிங், வசுந்தராவிடம் பேசிப் பார்த்தார் தான்.

“மேம், கண்டிப்பா வெளில போகணுமா? பிரஸ் நேத்து கண்ணுலய படல, அதுக்கே இப்படி. இன்னிக்கு கண்டிப்பா ஒரு கூட்டமே இருப்பாங்க. கொஞ்சம் ரிஸ்க் தான் மேம்” என்றார் ப்ரதாப். 

“இது என்னோட நாடு ப்ரதாப். சுதந்திர நாடு! ஒரு ஜாகிங் போக எனக்கு உரிமை இல்லையா. ஐ டோண்ட் வாண்ட் பிரஸ் டு டிசைட் வாட் ஸூட் ஐ டு இன் மை டே டு டே லைஃப்! உங்களுக்கு இது அதிக வேலையா? அது மட்டும் சொல்லுங்க. அப்டின்னா நான் போகலை” என்று வசுந்தரா கை கட்டி நின்று விட, ஒரு நொடி பதறிவிட்டார் ப்ரதாப்.

“மேம், டியூட்டில என் உயிரே போனா கூட எனக்கு பெருமை தான் மேம். உங்க சேஃப்டிக்காக மட்டும் தான் சொன்னேன். இது ஒரு தேவை இல்லாத அட்டென்ஷன் தான் மேம்” என்றார் சட்டென்று தன் நிமிர்வை மீட்டவராய்.

“ஹம்ம்ம், என்னிக்கோ ஒரு நாள் நடக்குற விஷயம் பேப்பர்ல் வந்தா தான் தலைப்புச் செய்தி ப்ரதாப். அதுவே தினமும் வந்தா?”

“மேம்” என்று இழுத்தார் ப்ரதாப் புரியாமல்.

“விளம்பரம்!” என்றுவிட்டு, பளீரென்ற புன்னகையுடன் வாகனத்தில் ஏறி விட, இப்போது ப்ரதாப்பின் முகத்திலும் மிகச் சிறியதாக ஒரு புன்னகையின் சாயல்! 

அதிகாலையில் இவ்வளவு களேபரம் நடந்தும், அதைக் கடந்து தான் வந்திருப்பதாக வருணனிடம் கூற, அவர் மனதிலோ புது தில்லியின் குளிரை விஞ்சிய பனித்தூறல்!

சுற்றிலும் இருந்த பத்திரிகைக்காரர்கள், காணொளி பதிவர்கள் எல்லாரையும் கவனித்தபடி,

“இவ்ளோ ரிஸ்க் தேவைங்களா அம்மணி?” என்க வசுந்தரா வருணனைத் திரும்பி ஆச்சரியமாகப் பார்த்தார். 

இந்த நெகிழ்ச்சி, மரியாதை கலந்த ‘அம்மணி’ எனும் அழைப்பு எல்லாம் வருணனிடமிருந்து, அத்தி பூத்தாற் போல எப்போதாவது தான் வரும். சிறு வயதில் தேவராஜன் வசுந்தராவை அழைப்பதை வைத்து, வேண்டுமென்றே,  ‘அம்மி’ என அழைத்து வெறுப்பேற்றுவதில் வருணனுக்கு ஓர் அலாதி இன்பம். 

கடந்த காலத்தின் நினைவில், ‘ஹம்ம் அதெல்லாம் ஒரு காலம், மீண்டும் கிட்டாத அரிய பொக்கிஷம்’ என்பது போல் சின்ன ஏக்கப் பெருமூச்சு இருவரிடமும் இருந்தாலும், அதை கவனமாகத் தவிர்த்தனர். 

“என்னிக்கு பப்ளிக் லைஃப்ல வந்துட்டேனோ அன்னிக்கு ஐ ஆம் ரெடி ஃபார் ஆல் ஆஃப் திஸ் வருண். எதுக்கு தான் நான் பயப்படணும்னு ஒரு வரையறை வேணாமா? எல்லாத்துக்கும் என்னைய இறங்கி போக சொல்றீயா?” என்றார் வசுந்தரா மீண்டு விட்ட சீற்றத்துடன்.

“ம்ப்ச், அதெல்லாம் கரெக்ட் தான். பட், இட்ஸ் வைஸ் டு சூஸ் யுவர் பேட்டல்ஸ் (battles)! சும்மா எல்லாத்துக்கும் எனர்ஜிய வேஸ்ட் பண்ணக் கூடாது! உனக்கு ஜாகிங் கம்பெனி வேணும்னா நான் உன்னோட வீட்டுக்கே வந்துடுவேன். தோட்டத்திலயே போகலாம். சிங் மாமா என்னையப் பார்த்து இன்னிக்கு லைட்டா சிரிச்ச மாதிரி வேற இருந்துச்சு. கண்டிப்பா உள்ள விட்ருவார்” என்று வருணன் தோள்களை குலுக்கினார்.

அதில் இலகுவாகி சிரித்த வசுந்தரா,

“ஆக்சுவலி அப்டி பண்ணோம்னா ப்ரதாப் ஹேப்பியா இருப்பாரு தான்” என்று லேசாக திரும்பி ப்ரதாப்பை பார்த்தவர், 

“பட், இது பேட்டல் இல்ல வருண். இட்ஸ் அ ஸ்டேட்மெண்ட் அண்ட் அன் ஆட்டியூட்” என்றார். 

ப்ரதாப்போ சுற்றுப்புறத்தை வெகு கவனமாக ஆராய்ந்தவாறே அவர்களின் பின்னால் மெல்ல ஓடி வந்தார். வசுந்தரா திரும்பவும், சட்டென அவர் அருகில் வந்தவர்,

“டு யூ நீட் எனிதிங் மேம்?” என்றார்.

“நத்திங் ப்ரதாப். வருணும் நீங்க சொல்றது தான் சொன்னார். அதுனால பார்த்தேன்” என்று விட்டு ஓட்டத்தை தொடர்ந்தார் வசுந்தரா. 

“நீ என்னோட கேள்விக்கு முழுசா பதில் சொல்லல வசு. சித்தார்த்தும் கூப்பிட்டாரு. ஹி டசிண்ட் லைக் இட் ஐதர்”

“ம்ப்ச், இந்த சிட் ஏன் எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கிறாரு?” என்றார் வசுந்தரா எரிச்சலாக.

“பிகாஸ் ஹி இஸ் யுவர் பிரின்சிபல் செக்ரட்டரி. அவர் மூக்கை நுழைக்கலைன்னா தான் ஆச்சரியப்படணும்! தெரியும்ல அவர் சும்மாவே எவ்ளோ ப்ரொடொக்டிவ்னு (protective). இப்ப கேட்கவே வேண்டாம்”

“இங்க பாரு வருண். நான் பதவியேத்து ஒரு நாள் ஒரு நைட் தான் ஆகியிருக்கு. கேன் யூ பிலிவ் இட்? எனக்கு என்னவோ ஒரு மாமங்கம் ஆன மாதிரி இருக்கு! அவ்ளோ ஸ்டிரெஸ், அவ்ளோ டிராமா! ஐ நீட் அ வெண்ட் அவுட் வருண்!

உங்க யாருக்கும் அது புரியுதா இல்லையா? இந்த தங்கக் கூண்டு எனக்கு மூச்சு முட்டுது. ஐ நீட் ஃபிரஷ் ஏர், மனுஷங்களைப் பார்க்கணும். முடிஞ்சா பேசவும் செய்யணும். நாள் முழுசும் ஃபைல்ஸ்க்கு உள்ள தலைய விட்டுட்டு, டாகுமெண்ட்ஸ்ல சைன் பண்றது தான் என்னோட வேலையா என்ன?” என்று பொரிய, ஓடிக் கொண்டே பேசியதில் மூச்சு வாங்கியது.

“ஹேய், ஈசி. இப்ப என்ன? இங்க ஜாகிங் போகணும். அவ்ளோ தானே? போகலாம், நோ இஸ்யூஸ்” என்று கடைசியில் வருணன் தான் இறங்கி வர வேண்டியதாயிற்று.

‘அது’ என்பது போல் வருணனைப் பார்த்த வசுந்தரா,

“அண்ட் நீ என் கூட கார்டன்ல ஜாக் பண்ணா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா? பிரதமர் SPPயின் வியூக வல்லுநருடன் தோட்டத்தில் தினமும் ரகசிய சந்திப்புன்னு இன்னொரு ஹெட்லைன்ஸ் போடுவாங்க” என்றார் கிண்டலாக.

“ஹ்ம்ம், அதுவும் கரெக்ட் தான்” என்று ஒத்துக் கொண்டார் வருணன். வேறு வழி? தேவி திரும்பவும் மலை ஏறினால், யார் இறக்குவது என்ற கவலை அவருக்கு.

“லிசன் வரு, நம்ம மக்களுக்கு ப்ரைவசியும், பப்ளிசிட்டியும் ஒரே நேரத்துல வேணும். அதெல்லாம் நடக்குற காரியமா? அதுவும் நான் பப்ளிக் லைப்ல தான் இருக்கேன். டிரான்ஸ்பரன்ஸி ரொம்ப முக்கியம். 

பேப்பர்ஸ் என்ன ஒரு நாள் போடுவாங்க, ரெண்டு நாள் போடுவாங்க? அப்புறம் அவங்களுக்கே போர் அடிச்சிடும். மூளை இருக்க யாருக்கும், நான் ஏன் உன் கூட பப்ளிக் பிளேஸ்ல ஜாகிங் போறேன்னு ஈசியா புரிஞ்சிடும். இதுக்கு பயந்து நான் பேக் அடிக்கணுமா?” என்றார் நிதானமாக.

‘இல்லை’ என்பது போல் தலையாட்டினார் வருணன்.

“அண்ட் பாரு. ஒரு பத்திரிகையிலையும் கேபினட் மீட்டிங் பத்தி பெருசா எழுதல. நான் அனவுனஸ் பண்ண மிஷன்ஸ் பத்தியும் எதுவும் மென்ஷன் பண்ணல. சிட் கூடயும், உன் கூடயும் சேர்ந்து வொர்க் பண்றது தான் இவங்களுக்கு பெரிய நியூஸ். வேடிக்கையா இல்ல?”

“இதெல்லாம் எக்ஸ்பெக்டட் தான் வசு. மக்கள் உன்னைய ஆக்‌ஷன்ல பார்த்தா தான் நம்புவாங்க. இப்ப வரைக்கும் நீ தாராதேவியோட ரப்பர் ஸ்டாம்ப்புன்னு தான் பார்ப்பாங்க. யூ ஹேவ் டு ப்ரூவ் யுவர்செல்ஃப்”

“எங்க ப்ரூவ் பண்றது? ஐ ஃபீல் நீங்க எல்லாரும் சேர்ந்து என்னைய கைய, கால கட்டி வைச்ச மாதிரி இருக்கு. ஐ நோ! ரொம்ப நல்ல இண்டென்ஷன்ல தான் பண்றீங்க. பட், விழுந்து எந்திரிச்சு அடிபட்டு கத்துக்குறேனே? என்ன இப்போ?” என்றவரின் குரலில் சலிப்புத் தட்டியது.

அதைக் கேட்ட வருணனிடம் நீண்ட பெருமூச்சு.

“அந்த லக்சூரி நமக்குக் கிடையாது வசு. நீ சொல்றது பொறுமையா சைக்கிள் ஓட்டி கத்துக்கிறதுக்கு வேணும்னா ஒத்து வரலாம். ஃபளைட் ஓட்ட கத்துக்கிறதுக்கு இல்ல! இன்னும் சரியா சொல்லனும்னா ஓடுற காரை நிறுத்தாம டயரை மாத்தி ஓட வைக்கிற கண்கட்டு வித்தை தான் உன் வேலை!” என்றார் அழுத்தமாக.

“ரைட், அப்போ நடைமுறைல சாத்தியப்படாதத பண்றதுக்கு என்னைய பலிகடா ஆக்கிருக்கீங்க!”

“அப்டி எடுத்துக்கிட்டீன்னா அது உன்னோட கண்ணோட்டம். வி கேன்னாட் ஃபெய்ல் அட் எனி காஸ்ட். அது மட்டும் தான் நான் சொல்ல வந்தது. 

வி கேன்னாட் ஈவன் ஃபெய்ல் ஃபாஸ்ட்! ஒன்னு டிரை பண்ணுவோம். சரி வரலைன்னா மாத்திக்கலாம் அப்டின்றதுக்கு. ட்ரீட் இட் லைக் அ வார் ஸோன்! இட்ஸ் லைஃப் ஆர் டெத் சிச்சுவேஷன். கத்தி மேல நடக்குற மாதிரி!

ஒரு ஸ்டெப் தப்பா வைச்சா போதும். சமர்ஜித் ஷர்மா நம்மள ஒரு கல்ப்ல முழுங்கி ஏப்பம் விட்ருவாரு. ஆல் இட் டேக்ஸ் டு ஃபால் இஸ் ஒன் ராங் மூவ்!”

“ஃப்பூஊஊஊ. நவ் யூ ஆர் ஸ்டிரெஸ்ஸிங் மீ வருண்!”

“நோப், ஒன்லி சார்ஜிங் யூ” என்றவரிடம் மந்தகாசப் புன்னகை.

“ஓய் நான் இன்னிக்கு உன்னைப் பார்த்து பேசிட்டேன்றதால நம்ம நேத்து சண்டை முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சுக்காத” என்றார் வசுந்தரா இன்னும் கோபமிருப்பதைப் போல்.

“ஓ..அப்புடி. அப்ப முடியலையா என்ன?”

“ஐ ஆம் ஸ்டில் மேட் அட் யூ ஃபார் வாட் யூ டிட். தேவையில்லாம சித்தார்த்தை உள்ள இழுத்து விட்ருக்கீங்க”

“தேட்ஸ் யுவர் வியூ” என்று உடனே கத்தரித்த வருணன்,

“டெல் மீ ஒன் திங். எனக்கோ, சித்தார்த்துக்கோ நீ ஃப்ர்ஸ்டா, இல்ல நம்ம கன்ட்ரி ஃப்ர்ஸ்டான்னு ஒரு கேள்வி வந்தா நாங்க என்ன பதில் சொல்லுவோம்? என்க, வசுந்தராவிடம் மௌனம்.

“சரி, கேள்விய இப்ப மாத்தி கேக்குறேன். உன்கிட்ட நாடா, இல்ல சித்தார்த்தோ, நானோவான்னு கேட்ட என்ன சொல்லுவ?”

“நாடுன்னு தான் சொல்லுவேன்” பட்டென வந்தது பதில்.

“அவ்ளோ தான் விஷயம் வசு! சோ நீ கோபப்படுறதுல எந்த நியாயமும் இல்ல. அர்த்தமும் இல்ல. எவிரிதிங் இஸ் ஃபார் த கன்ட்ரி! நடுவுல சிக்குறது எல்லாம் அன்அவாய்டபுள் கொலாட்டரல் டேமேஜ் ஃபார் அ கிரேட்டர் காஸ்! நத்திங் எல்ஸ்” என்ற போது வசுந்தராவின் வாகனத்தின் அருகில் வந்திருந்தனர். 

வருணன் பேசியது புரிந்தும், புரியாத பாவனை வசுந்தராவிடம். அதையே அவர் முகமும் பிரதிபலிக்க, வருணனுக்கோ வசுந்தராவின் கன்னம் தட்டி, கைகளை அழுத்தமாகப் பற்றி அணைத்துக் கொள்ளும் பேரவா. ஆனால் நட்பில் களங்கம் பெரும்பிழை அல்லவா! 

வருணனின் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும், உணர்வுகளுக்கும் எல்லாம் சேர்த்து கடிவாளம் இட்டதைப் போல், அவர் இரு கைகளையும் கட்டி நின்று விட, வசுந்தரா அமைதியான யோசனையுடனேயே விடை பெற்றார். 

அன்று அலுவலகத்தில் இருந்த நேரம் முழுவதும் சித்தார்த்தின் முகத்தில் இறுக்கம் குறையவே இல்லை. வசுந்தரா என்னவென்று காரணம் கூட கேட்காதது இன்னுமே அவர் கோபத்தைத் தூண்டியது.

அதிகாரத்தின் எல்லையில் மட்டுமே வசுந்தரா தன்னை தள்ளி நிறுத்துவது சித்தார்த்திற்கு தெளிவாகப் புரிந்தது தான். ஆனால் காதல் கொண்ட மனம் அதை ஏற்க மறுத்தது!

வசுந்தரா இடத்தில் வேறொருவர் இருந்தால் என்ன செய்திருப்போம் என்ற கேள்வியெழுந்து பலமுறை மனதிற்குள் தன்னைத் தானே சமாதானம் செய்திருந்தாலும், கண் முன்னால் வசுந்தரா இருக்கும் போது, சித்தார்த்தால் எந்த எல்லையையும் கணக்கிலும் வைக்க இயலவில்லை என்பதே நிதர்சனம்.

கடைசியில் அவர் தான் தனிப்பட்ட கோபதாபங்களை ஓரமாக ஒதுக்கி வைத்து, மூன்றாம் நபருக்கு ஆலோசனை வழங்கும் தொனியிலேயே அந்த விஷயத்தை அணுக வேண்டியதாயிற்று. வேறு விதமாக பேசும் வாய்ப்பையே வசுந்தரா அவருக்கு அளிக்கவில்லை. 

இருவரின் முகத்திலும் இருந்து லலிதா என்ன கண்டாரோ அவரும், வசுந்தராவிடம் சித்தார்த்தைப் பற்றி கேட்க நினைத்ததை கேட்கவில்லை. தலைமை அமைச்சரின் அலுவலகமே அன்றைய நாள் முழுவதையும் ஒருவித அழுத்தத்துடனே கடப்பது போன்றதொரு தோற்றம்.

ஆனால் அதற்கு நேரெதிராக வசுந்தராவிடம் பேரமைதி! அன்றாட அலுவல்களை திட்டமிட்டபடி கவனித்தவர், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது போன்று பிரசுரிக்கப்பட்ட செய்திகளுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

தாராதேவி, தேவராஜன் இருவருமே வசுந்தராவை அழைத்துப் பேசியிருக்க, அவர்களிடமும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி வைத்து விட்டார். சமர்ஜித் ஷர்மாவும், இன்னும் சில மூத்த அரசியல் தலைவர்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்திருக்க, வசுந்தரா அதையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. 

வசுந்தராவின் இந்த எதிர்வினையில்லா எதிர்வினை, ஒருவிதத்தில் சித்தார்த்துக்கு பெரும் ஆச்சரியமே! அவர் நினைத்ததோ ‘இதற்கு தான் இந்த பதவியில் உங்களை நியமிக்க யோசித்தேன்’ என்ற வசுந்தராவின் பொருமலைத் தான். ஆனால அந்த திசையில் வசுந்தரா எதிர்வினையாற்றாதது மட்டுமே சித்தார்த்தின் கோபத்தை சற்று மட்டுப்படுத்தியது. 

அதில் சற்று இலகுவான சித்தார்த், வசுந்தரா கேட்டிருந்த திட்ட அறிக்கையுடன் அவரது அறைக்குச் சென்றார். லலிதாவுடன் அன்றைய நாளுக்கான திட்டமிடலில் இருந்தார் வசுந்தரா. அவரிடம் அனுமதி பெற்ற சித்தார்த்,

“மேம், நீங்க கேட்ட மிஷன்ஸ் பிளான் எல்லாம் இதுல அப்டேட் பண்ணி, என்னோட கமெண்ட்ஸ் மார்க் பண்ணிருக்கேன். மிஷன் ஒன்னு மட்டும் தான் நான் பார்க்கப் போறேன். மீதி நாலும் பார்க்கறதுக்கு லலிதா லீட் பண்ற மாதிரி நம்ம டீம்லேர்ந்து பாலிசி எக்ஸ்பெர்ட்ஸ் பேரு சார்ட் லிஸ்ட் பண்ணி வச்சிருக்கேன். 

வருணண் சார் கிட்ட பேசி, மினிஸ்டீரியல் டீமும் ஒன்னு அரேஞ் பண்றதுக்கும் பிளான் ரெடி பண்ணிருக்கேன் மேம். நீங்க ஒரு வாட்டி பார்த்துட்டீங்கன்னா, சர்க்குலர் இஸ்யூ பண்ணிடலாம்” என்றார்.

வசுந்தரா, லலிதாவைக் குறிப்பாகப் பார்க்க, 

“நான் இந்த ரெண்டு அப்பாயின்மெண்ட் மட்டும் ஃபைனலைஸ் பண்ணிட்டு வர்றேன் மேம்” என்று விடைபெற்றார். 

“உட்காருங்க சித்தார்த். சொல்லுங்க. என் கிட்ட கேட்காம வருண்கிட்ட எதுக்கு இந்த பிளான் கன்சல்ட் பண்ணீங்க?” என்று நேரடி விசாரணையில் இறங்கி விட்டார் வசுந்தரா. 

இதற்கு என்ன பதில் கூறுவது என்று சித்தார்த் அழுத்தமாக, அமைதி காக்க, ‘பதில் சொல்லியே தீர வேண்டும்’ என்பது போல வசுந்தராவும் மௌனத்தை கையிலெடுக்க,  சில நிமிடங்கள் அந்த அறையில் வெறும் கடிகார நொடி முள் நகரும் டிக் டிக் ஓசை மட்டுமே!

கடைசியில் சித்தார்த் தான் அதை கலைக்க வேண்டியதாயிற்று.

“ம்ப்ச், மேம் ப்ளீஸ்! நான் ஒவ்வொன்னும் உங்ககிட்டு கேட்டு தான் செய்யணும்னா இந்த போஸ்ட் எதுக்கு?”

இது என்ன பேச்சு என்பது போல் கத்திப் பார்வை வசுந்தராவிடம்.

“நான் உங்களோட அட்வோகேட் தான் மேம்! கவர்ன்மெண்ட்டோட பெஸ்ட் இன்ட்ரஸ்ட்ல தான் ஒவ்வொரு ஆக்‌ஷனும் எடுக்குறேன்”

“மை கவர்ன்மெண்ட் அண்ட் SPP, ரெண்டும் வேற வேற என்டிட்டிஸ். எனக்கும் தாரா மேம்க்கும் அதுல தெளிவான அக்ரீமெண்ட் இருக்கு. அண்ட் அதை அப்டியே வச்சிக்கிறது தான் நல்லது”

“எக்சாட்லி. அதுனால தான் உங்களை இதுல உள்ள இழுக்கல மேம். லீவ் திஸ் வித் மீ. அண்ட் டிரஸ்ட் மீ ப்ளீஸ்! நான் வருண் கிட்ட பேசி இதை சார்ட் அவுட் பண்ணிக்கிறேன். நீங்க ஓவர்சீ பண்ணா மட்டும் போதும் மேம். அதுக்கும் லலிதா ஃபுல் சப்போர்ட் பண்ணுவாங்க. இது உங்க ஜாப்போட 10% கூட இல்லை. யூ நீட் டு சேவ் டைம் அன்ட் எனர்ஜி மேம்”

“இங்க டிரஸ்ட் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல சித்தார்த்! டெல் மீ ஒன் திங். என்னோட இடத்துல சமர்ஜித் இருக்காருன்னு வைச்சிப்போம். அப்பவும் இப்டி தான் உங்க ஜாப் பண்ணுவீங்களா?” என்றார் சித்தார்த்தை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டே.

“கண்டிப்பா மேம். இது ஹைப்போதேட்டிக்கல் கொஸ்டின்னாலும் பதில் சொல்றேன். சமர்ஜித் கூட இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷனே வந்திருக்காது மேம். அவர் நாட்டுக்கு நல்லது செய்ய எந்த மெனக்கெடலும் பட மாட்டாரு. 

சொல்லப் போனா, அவர் கார்ப்பரேட்டுக்கு காவடி எடுக்குறதுல பிஸியா இருக்குறப்போ எனக்கு இன்னுமே ஹெட்ரூம் இருக்கும் டிசிசன் எடுக்குறதுக்கு! எல்லாத்தையும் விட அந்த மாதிரி ஒரு கவர்ன்மெண்ட்ல நா இந்த போஸ்டுக்கு ஒத்துட்டு இருக்க மாட்டேன்!”

“ஹம்ம்” என்று மூச்சை இழுத்து விட்ட வசுந்தரா,

“ரைட், வேற ஏதாவது இருக்கா?” என கேட்க, சித்தார்த்திடம் சிறு தயக்கம்.

“மேம்” என்றார் அவருக்கு சற்றும் பொருந்தாத மெலிதான குரலில். 

இப்போது கோப்பிலிருந்து கண்ணெடுத்தவர், கேள்வியாக சித்தார்த்தைப் பார்த்தார். 

“நத்திங் மேம், ஐ டேக் லீவ்” என்று சட்டென்று வெளியேறி விட்டார். நினைத்ததை எல்லாம் பகிர முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். 

அவர்களுக்கிடையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் வசுந்தராவுக்கு புரிந்தே இருந்தது. முடித்து வைக்கும் மார்க்கம் தான் புலப்படவில்லை!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!