Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 16 .1

“ஏய்.. இந்தாடி சனியனே..” என்று கலையரசி உறக்க கத்த,

சமயலறையில் இருந்து அடித்துப்பிடித்து ஓடி வந்த நித்யா, “என்னமா..” என்று மெதுவாக கேட்க,

“உன்னைய என்ன அம்மான்னு சொல்லக் கூடாதுனு சொல்லிருக்கேன்ல.. என்னைய அப்படி இனிமே கூப்புடுவியா” என்று ஒரு அடி முதுகில் வைக்க, அவளோ அழுதுக் கொண்டே கூப்பிடுல, கூப்பிடுல என்று பின்னைடைந்து சுவரில் ஒட்டி நின்றாள்.

அப்போது குளித்து விட்டு உள்ளே நுழைந்த மெய்யப்பன், பெரிய மகள் அழுதுகி கொண்டு நிற்பதைப் பார்த்து, விறு விறுவென அவளின் அருகில் சென்று, அவளை ஒரு கையால் அணைத்து பிடித்து, நீ அழாதடா.. வா என்னோட என்று அழைத்து செல்ல,



Advertisement

“யோவ்.. அவளை விடு என்று ஆங்காரமாக கத்த, அவர் சொல்வதை காதில் வாங்காமல் மகளை கூட்டிட்டுக் கொண்டு உள்ளே சென்றார்.

ப்பா..ப்பா என்று மகள் தேம்ப, விடுடாம்மா.. நீ அழாத, உனக்கு கூடிய சீக்கரம் இந்த வீட்டிலிருந்து விடுதலை வாங்கித் தரேன்.. இந்த செமஸ்டர் மட்டும் நீ படிச்சி நல்லா மார்க் எடுத்திட்டினா போதும்டா.. நான் என்னோட நண்பன் கிட்ட உனக்கு வேலைக்கு சொல்லிருக்கேன்.. நீ உன் படிப்பை முடிச்சதும் அங்க போய்டலாம்டாமா.. நீ சம்பாரிக்க போறேன்னு தெரிஞ்சாலே அந்த பணப் பேய் உன்னைய விட்டுடும்.. நீ கவலைப்படாதடா..”

அவளோ சரியென்று தலையாட்டினாள்.

Advertisement

இங்கு வெளியிலோ பார்த்தியாம்மா.. அந்த ஆளு நீ சொல்றத கேக்காம கூட்டிட்டு போறாரு.. ரொம்ப தைரியம் வந்துடுச்சும்மா என்று தன அன்னையை இன்னும் நன்றாக ஏற்றிவிட்டாள்.

Advertisement

“தரித்திரம்.. இது வந்து எப்படி என் வயத்துல பிறந்துச்சுனே தெரியலே..”

“சரியாய் சொல்ற ம்மா நீ.. அவளை நீ பெத்துக்காமயே இருந்திருக்கலாம்..”

ஆர்த்தியின் வேலையே இதுதான்.. எப்போது அவளின் ஜாதகம் நந்தகுமாரிற்கு சேரவில்லை என்று தெரிந்ததோ அன்றைய தினத்திலிருந்து தன் கூடப்பிறந்தவளை பற்றி இப்படி இல்லாததை சொல்லி இன்னும் நன்றாக அன்னைக்கு கொம்பு சீவிவிடுவாள். சிறுவயதிலிருந்தே தான் இரண்டாவதாய் பிறக்க கரணம் இவள் என்ற ஒரு எண்ணம் வேரூன்றி அவளை அப்போதிலிருந்தே வெறுத்து, அவளை எதில் எப்படி மாட்டிவிடலாம் என்ற சிந்தனை தான் எப்போதும். அதற்கு தக்க திருமணமும் முடிவாகாமல் போக, இவள் காட்டில் பெருமழையை அது பொழிந்துக் கொண்டிருக்கிறது.

Advertisement

“ம்மா.. அவ வெளியே வரும் போது.. நீ சும்மா விடாதம்மா..”

“அவ கடக்குறா விடுடி.. என்னைக்கு அவ ஜாதகம் ஒத்துவரலையோ, அன்னையோட அவளை நான் தல முழுகிட்டேன்.. இப்போ உன் ஜாதகமும் அவளோ பெருந்தலை வேற.. அதை தான் என்ன பன்னலாம்னு யோசிக்குறேன்.”

“என்னமா பண்ணலாம்னு இருக்க.. அப்போ எனக்கு நந்தா மாமா கூட கல்யாணம் நடக்காதா?..”

“இவ எவடி.. இப்படி எப்பப் பாரு அபசகுனமா பேசுறவ.. செத்த இருடி.. என்னைய யோசிக்க விடு..”

எதுக்கும்மா என்னைய இப்போ இப்படி பேசுற.. நீ தான சொன்னா அதனால கேட்டேன்.. என்னையவே இப்படி பேசுவியோ நீ..”

“சரிடி .. அதுக்கு இப்போ என்னங்குற..”

“என்ன பண்ண போறேன்னு சொல்லு முதல்ல..”

“எங்க நொண்ணங்காரன் அந்த ஒரு ஜோசியர் கிட்ட மட்டும் தான் ஜாதகம் பாக்கும்.. ஏற்கனவே உன் ஜாதகத்தை பாத்ததுனால.. அந்த ஆளு கிட்ட உன் ஜாதகத்தை மாத்தி காமிக்க முடியாது.. எங்க அண்ணங்கரான் கிட்ட தான் எதுவாது சொல்லி, நீலிக்கண்ணீர் வடிச்சு.. பூஜை, பரிகாரம் இருக்கானு பாத்து பண்ணிக்கலாம்னு சொல்லணும்.. இல்லனா இருக்கவே இருக்கே என்னோட ஆஸ்தான நடிப்பு.. அதைதான் பண்ணனும்..”

“சூப்பர் ம்மா.. நீ தான் நல்லா நடிப்பியேம்மா.. உனக்கு சொல்லியா தரணும்..”

“சரி.. நீ போயிட்டு உள்ள சமைச்சி வச்சிருக்காளான்னு பாரு.. முதல்ல சாப்டுட்டு செத்த படுக்கும்..”

உள்ளே அறையில் இதை காதில் வாங்கிக் கொண்டிருந்த நித்யாவோ தன் தந்தையைப் பார்க்க, இதுங்கலாம் திருந்தாதுடா.. யாரு குடியை கெடுக்கலாம்னு தான் பாக்கும்.. நீ வாடா.. நான் உன்னோட அத்தை (மெய்யப்பனின் ஒன்றுவிட்ட தங்கை) வீட்டுல விட்டுட்டு போறேன்.. இதை அவங்க வீட்டுல யாருகிட்டாவது சொல்லணும்டா.. நான் பாக்குறேன் எப்படி சொல்லுறேன்னு..

“ப்பா..” என்று தயங்கி அழைக்க, நானே சொல்லுறேன்ப்பா `நந்தா மாமாக்கு.. என்கிட்ட அவங்க நம்பர் இருக்கு.

“அப்படியாடா.. அந்த தம்பி பேசுமா உங்கிட்ட..”

“ஆமப்பா.. ப்பா..ஆ” என்று திரும்ப அழைக்க,

“என்னனு சொல்லும்மா.. என்ன சொல்றதுக்கு பயப்புடுற நீ.. என்ன இருந்தாலும் சொல்லு அது தப்பா இருந்தாக் கூட பரவால்ல..” என்று அவளை ஊக்குவிக்க,

“அந்த ஜாதகம் எனக்கும் நந்தா மாமாக்கும் செட் ஆகலல ப்பா.. அது அது.. நான் தான் ப்பா.. ஜாதகத்தை பொருந்தாத மாறி வச்சேன்..”

“என்னடா சொல்லுற.. ஏன்டாம்மா.. எதுக்காக அப்படி செஞ்ச.. உனக்கு பிடிக்கலைனா என்கிட்ட சொல்லிருக்கலாம்ல..”

“அப்படி சொன்னாலும் உங்களால ஒன்னும் பண்ணிருக்க முடியாதேப்பா.. முன்னாடியும் இப்படி தானே ப்பா.. என்னப்பா பெரிய வித்யாசம் இருந்துச்சி.. ஒண்ணே ஒன்னு தான்.. கையை நீட்டி அடிக்க மாட்டாங்க.. இப்போ இந்த ஜாதகத்தால அது சேந்துருக்கு.. அவ்வளோ தான் விடுங்க ப்பா.. நான் என்ன பண்ணுனேனு தெரியல இந்த ஆர்த்திக்கு.. அப்போ இருந்தே எதையாவது சொல்லி என்னை திட்டு வாங்க வச்சிட்டே தான இருப்பா.. இன்னும் கொஞ்சம் நல்லா வாய்ப்பை இப்போ ஏற்படுத்தி தந்திருக்கு அவளுக்கு.. அவ்வளோ தான் ப்பா.. விடுங்க..”

“என்னமா இப்படிலாம் பேசுற..”

“அதை விடுங்க ப்பா.. எல்லாம் பழகிடுச்சி.. இப்போ எப்படி ப்பா.. என்னை கூட்டிட்டு போவீங்க.. அம்மா திரும்ப பேசுவங்களே ப்பா..” என்று எதிர்ப்பார்ப்புடன் கேட்க,

“நாய்க்கு கறித் துண்டு போட்டா வாலாட்டாது.. அது மாறி தான்.. உன் அம்மாகிட்ட கொஞ்சம்g காசு குடுத்தா போதும்.. பேச மாட்டா..”

“அப்ப்பா..”

“நான் போயிட்டு மேஜைல காசு வைக்கிறேன்.. நீ கிளம்பி வா கூட்டிட்டு போறேன்.”

இங்கு நித்யாவோ தனது அத்தையின் வீட்டிற்கு அகத்தில் மகிழ்ச்சிப் பொங்க தயாரானாள் .

– – – –

“பிரபாகர்.. எண்ணப் பண்ணுறீங்க” என்று வைஸ் பிரின்சிபால் போனில் கேட்க,

“சொல்லுஙக மேம்.. வீட்ல தான்.. எதுவும் பண்ணனுமா மேம்..”

“அப்போ சரி..நல்ல நேரத்துக்கு தான் கால் பண்ணிருக்கேன்.. அப்பறம் அவந்திகா என்ன சொல்லுறாங்க.. எப்போ கல்யாணம்?”

“மேம்.. மேம்.. அப்படிலாம் ஒன்னும் இல்ல மேம்..”

“சும்மா சொல்லுங்க.. நீங்க தான் அவங்க இருக்குற இடத்துலலாம் பாத்திருக்கேனே.. அப்பறம் என்ன ஒன்னும் இல்லன்னுலாம் சொல்லுறீங்க..”

“மேம்.. உண்மையா அப்படி ஒன்னும் இல்ல மேம்.. அவங்களுக்கு கல்யாணம் ஆகப் போதாம்.. நீங்க இப்படிலாம் அவங்க கிட்ட போயிட்டு கேட்டருதாதீங்க மேம்…” என்று வெளியில் சொல்லிவிட்டு, அப்பறம் என் மண்டை உடையிறது நிச்சயம் என்று மைண்ட் வாய்ஸ்-இல் பேச,

“என்ன மேன் சொல்லுற.. யாரு சொன்னா உனக்கு.. அப்பறம் நீ பின்னாடி சுத்திட்டு இருந்த..”

“நான் அவங்க பின்னாடிலாம் சுத்தலை மேம்.. நீங்க வேற இதையே சொல்லாதீங்க.. அவங்க தான் மேம் சொன்னாங்க..”

“அப்படியா.. சரி.. நான் வைக்கிறேன்..”

“என்னடா இது.. இந்தம்மா பாட்டுக்கு கால் பண்ணுச்சி.. பேசுச்சி.. இப்போ வச்சிடுச்சி.. எப்படியோ இதை அந்த அவந்திகாட்ட கேக்காம இருந்த சரி தான்.. இப்படி கேட்டது மட்டும் தெரிஞ்சா என்னை மாவிளக்கு போட்டுடுவா.. பதுசான பொண்ணுன்னு நினைச்சி நாம ஏமாந்தது தான் மிச்சம்..” என்று புலம்பி விட்டு போனை கீழே வைத்தான்.

வைஸ் பிரின்சிபால்,” என்னடா இது இவன் இப்படி சொல்லுறான்.. இவன் மூலமா ஏதாது பேசி பாக்கலாம்னு பாத்தா.. ஒன்னும் நடக்கலையே.. என்ன பண்ணலாம் இப்போ.. இல்லனா கொஞ்ச நாள் விட்டு அப்பறம் ஏதாவது பண்ணுவோமா.. இந்த ப்ரீத்தி எதோ பிளான் பண்ணிருக்கேன்னு சொன்னாலே.. ஹ்ம் முதல்ல அது என்னனு பாப்போம்..” என்று தீவிரமான யோசனையில் ஆழ்ந்தார்.

– – – – –

பானு, “அவந்தி.. என்ன பண்ணுற?..”

“சொல்லுங்க ம்மா.. ஹாஸ்டல் தான்.. ரொம்ப உஷாரா கேக்குறீங்க.. நல்ல முன்னேற்றம்..”

“பாத்தியா.. இப்படி கேட்டாலும் ஓட்டுற..

“ஹா ஹா.. ஓகே.. நான் ஹாஸ்டல் எண்ட்ரன்ஸ்ல நிக்குறேன்.. ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் வெளில போயிட்டு திரும்புறாங்க.. அதான்.. நோட் பண்ணிட்டு இருக்கேன்.”

“தஸ்புஸ்.. எங்க?”

“அவ ரூம்ல இருக்கா.. படத்தை முடிச்சிட்டு வரேன்னு சொன்னா..”

“சரி அவந்தி.. அப்பறம், மாப்பிள்ளை பேசினாருன்னா.. எப்போ ஓய்வா இருப்பாருனு கேட்டுட்டு, நீங்க ரெண்டு பேரும் சேந்து அகல் கிட்டயும், பெரிய மாப்பிள்ளை கிட்டயும் ஒரு வார்த்தை பேசுங்க..”

“ஓஹ்.. சரிம்மா..”

“நான் நேத்து பேசும் போது அகல் கிட்ட சொன்னேன்.. அவளுக்கு ரொம்ப சந்தோசம்.. எப்போ இந்தியா வரலாம்னு இப்போ இருந்தே பிளான் போட்டுட்டு இருக்கா..”

“சூப்பர் சூப்பர்.. வரட்டும்..கொஞ்ச நாள் நம்ம கூட இருக்கட்டும்..”

“அது தான் அவளும் சொன்னா.. சரி அவந்தி.. நீ பாரு நான் வைக்கிறேன்.. அப்பறம் பேசு.. இதை அப்பா உங்கிட்ட சொல்ல சொன்னாங்க.. அது தான் பேசுனேன்..”

“ஒகே ம்மா.. பை.. ரொம்ப குட் மம்மியா மாறிட்டீங்க இன்னைக்கு..”

“அங்க வேலையை பாரு.. நாங்க எப்போதும் அப்படி தான்.. நான் வைக்கிறேன்..”

– – – – –

ஹாஸ்டல்லில் உள்ள ஒரு ரூமில், “காயூ நான் இப்போ என்ன பண்றது.. நாளைக்கு நைட் பார்ட்டியாம்.. என்னைய கண்டிப்பா வரணும் சொல்லுறாங்க.. அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட என்னைய இண்ட்ரோ குடுக்கணும்னுலாம் சொல்லுறாங்க..”

“ஏன்.. ஏற்கனவே அவங்க பிரெண்ட்ஸ்க்கு உன்னைய தெரியாத?..”

“தெரியுமே.. இருந்தாலும்..”

“என்ன இருந்தலும்னு இழுக்கிற.. சரி.. அப்போ போயிட்டு வா..”

“எப்படிடி போக முடியும்.. ப்ரீத்தி மேம் இருந்தாலும், ஏதாவது பெர்மிஸ்ஸின் கேட்டு பாக்கலாம்.. இப்போ அவந்தி மேம் வேற.. கண்டிப்பா என்னால போயிட்டு கேட்க முடியாது.. எனக்கு கிளாஸ் எடுக்குறாங்க வேற..”

“தெரியுதுல்ல.. அப்போ அந்த அண்ணாகிட்ட சொல்லிடு..”

“என்ன காயூ இப்படி சொல்லுற..?”

“உனக்கு என்ன பண்ணனும் இப்போ..”

“அதுவும் தெரியல..”

“எல்லாத்துக்கும் தெரியலனு சொல்லாத..  நீ ரெண்டும் கட்டானா நின்னுட்டு இருக்க.. ஒழுங்கா என்னனு நீயே உன் மனசுகிட்ட கேளு முதல்ல.. அப்பறம் என்கிட்ட சொல்லு..”

“ம்ம்..”

“ஹே இங்க பாரு அனி.. உனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைனு சொல்லணும்.. பிடிச்சிருக்குனா எஸ் சொல்லிருக்கணும்.. அதை விட்டுட்டு ஒண்ணுமே சொல்லாம, அந்த அண்ணா கூப்பிடப்போ எல்லாம் போயிருக்க.. அதை வச்சி அந்த அண்ணா, நீ அவங்கள லவ் பண்ணுறேன்னு நினைச்சிட்டாங்க.. இதுல உன் மேல தான் நான் தப்பு சொல்லுவேன்.

“என்ன காயூ!  நீயே இப்படி சொல்லுற..”

“பின்ன வேற என்ன சொல்ல சொல்லுற..

“நான் என்னடி முடிவு பண்றது..”

“இங்க பாரு அனி.. உனக்கு அவங்களை பிடிச்சிருக்கு அப்படினா நீ தான் தைரியமா எல்லாத்தையும் பேஸ் (face ) பண்ண ரெடி ஆஹ் இருக்கனும். அதை விட்டுட்டு உங்க அப்பா, அம்மாகிட்ட பேச முடியாது, அவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு தோணுச்சுனா, ஒழுங்கா நாளைக்கு போயிட்டு அந்த அண்ணா கிட்ட ஸ்ட்ரிக்ட் ஆஹ் சொல்லிடு.. அவ்வளோதான் சொல்லிட்டேன்.. இதுக்கு மேல என்ன காயூனு என்கிட்ட வராத..” என்று கூறிவிட்டு வெளியேறினாள்.

அனிதாவோ யோசித்தப் படியே நிற்க, சிறிது நேரம் கழித்து அவளின் தொலைபேசி சத்தமெழுப்ப, அதில் கவின் கால்லிங் என்று வர, அதை அட்டென்ட் செய்ய,

“என்ன அனி.. நாளைக்கு வரல்ல..”

அவள் பதில் கூறாமல் இருக்க,

“அனி.. என்ன பேசாம இருக்க?.. நீ நாளைக்கு வந்தே ஆகணும்.. ஏழு மணிக்கு இங்க இருக்க.. வந்துட்டு வேணும்னா ஒரு எட்டு மணிக்குலாம் கிளம்பிக்கோ நீ.. என்ன சரியா?”

“ஹான்.. என்ன சொன்னிங்க?”

“என்ன அனி.. நீ பேசுறதை பார்த்தா.. வர போல தெரியல.. நீ வரலைனா பின் விளைவுகள் பெருசா இருக்கும் பாத்துக்கோ..” என்று போனை வைத்து விட்டான்.

அனிதாவோ போனை வெறித்துக் கொண்டே அமர்ந்திருக்க, “அனி.. அனி..” என்று காயூ அவளை உலுக்க,

“ஹான்.. சொல்லு காயூ..”

“என்ன சொல்லு காயூ.. மணி எட்டு.. அட்டெண்டன்ஸ் எடுக்குறாங்க அங்க.. நீ இங்க என்ன பண்ற?.. வா வெளில.. உன்னைய மேம் கூட்டிட்டு வரச் சொன்னாங்க..”

“போச்சு.. திட்டப் போறாங்க..” என்று பேசிக் கொண்டே அவந்திகாவின் முன் சென்று நிற்க,

அவந்தி, “வாங்க அனிதா.. அட்டெண்டன்ஸ் சொல்றப்போ இல்ல.. என்ன வேலையா இருந்திங்க.. அட்டெண்டன்ஸ் டைம்னு கூட தெரியாம?..”

“மேம்.. அது..” என்று எச்சில் கூட்டி விழுங்க,

“இப்படித் தான் எப்பவும் பண்ணுவீங்களா?”

“நோ மேம்..”

“அப்பறம் ஏன் இன்னைக்கு வரல..”

“மேம்.. சாரி மேம்.. இனிமே சரியா இருப்பேன் மேம்..” என்றாள் மெதுவாக,

“ஒகே.. லாஸ்ட் வார்னிங் போர் யு.. பாத்து நடந்துக்கோங்க..போலாம்”

“தேங்க்யூ மேம்..”

தர்ஷி, “இந்தப் பொண்ணு எதோ உன்னைய பார்த்து பயந்து பேசுன மாறி இருக்கு எனக்கு..”

“நானும் நோட் பண்ணுனேன்.. என்னனு தெரியல..”

“அந்தப் பொண்ணோட ரும்மெட் கிட்ட பேசுவோமா..”

“வேணாம்.. நான் அவளுக்கு கிளாஸ் எடுக்குறேன்ல.. அதனால இப்போ வராததுக்கு ஒருவேளை நான் திட்டுவேன்னு பயந்திருக்கலாம்..”

“இருக்கலாம்..”

“ஒகே வா ரூம்க்கு போவோம்..”

“மேடம்.. நான் வரல.. நீ கிளம்பு கிளம்பு.. உன்னவர் அங்கு வைட்டிங்..”

“அதுலாம் ஒன்னும் இல்ல.. அவங்களுக்கு நைட் ஷிஃப்ட்.. கிளம்பிட்டாங்க.. பிஸினு சொல்லி மெசேஜ் பண்ணுனாங்க..”

“அதுனால தான் அப்போ, மேடம்  என்னைய ரூமுக்கு வரச் சொல்லுறீங்க..”

“ஏய்.. ரொம்ப பண்ணாத வாடி.. என்ன! நீ இப்போ ரூமுக்கு போயிட்டு உன் மச்சான்ட்ட பேசணுமா?..”

“அவந்தி பேக் டு போர்ம்..”

“ஆமா.. அதே தான்…”

இப்படியே இருவரும் பேசி சிரித்துக் கொண்டே அறைக்கு சென்றனர்.

அப்பொழுதே அனிதாவின் ரூம்மேட்டிடம் விசாரித்திருக்க வேண்டுமோ?

சாரல் வருடும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!