Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 19

சாரல் – 19

கையில் ஒரு கோப்புடன் அவந்திகா மற்றும் தர்ஷி முதல்வர் அறையிலிருந்து வெளியே வர, அவர்கள் வருவதை பார்த்த வைஸ்  ப்ரின்சியோ, நக்கலாக சிரிக்க… அதனை பார்த்தாலும் ஒன்றும் கேட்காமல் அவரை கடக்க முயல,

“அப்பறம் அவந்திகா மேடம், என்ன கைல… ராஜினாமா கடிதமா, நீ கேட்ட கால அவகாசத்துக்கு முன்ன, நீயே கிளம்ப முடிவெடுத்துட்டியா?… குட், குட்… இப்படி தான் இருக்கணும்…”

இவர் பேசுவதை பார்த்த தர்ஷியோ, “ஏய் உன்ன…” என்று என்னவோ சொல்ல வர,



Advertisement

அவந்தி, “அட இரு தர்ஷி… என்ன அவசரம்… வைஸ் பிரின்சிபால் மேடம் பேசுறாங்க… நீ மரியாதை இல்லாம இடையில பேசுற… தப்பு, தப்பு… மேடம் பேசி முடிக்கட்டும் முதல்ல… அவ எதோ தெரியாம பேசிட்டா மேடம்… ஹான், இப்போ நீங்க பேசுங்க மேடம்…”

“அச்சச்சோ… எனக்கு அறிவே இல்லடி அவந்தி… சாரி மாடம்ம்ம்… மன்னிச்சிக்கோங்க… நீங்க வேற பெரிய ஆளுன்னு தெரியாம  பேசிட்டேன்…” என்றாள் நக்கலாக,

இவர்கள் இருவரும் தன்னிடம் நக்கலாக பேசியதை பொறுத்துக்க முடியாமல், “ஏய்ய்ய்…” என்று தனது குரலை உயர்த்த,

Advertisement

 “என்ன மேடம் ரொம்ப சூடா இருக்கீங்க போல… சத்தம்லாம் பயங்கரமா வருது… நீங்க இப்படி கத்தி தான் பேசணும்னு இல்ல…  பொறுமையா பேசுனாக் கூட போதும்… ஏன்னா எனக்கு காது நல்லாவே கேக்கும்…”

Advertisement

“இவ்வளோ நடந்தும் உனக்கு இருக்குற திமிரு அடங்கலை பாத்தியா… இன்னும் மூணு நாள் தான் இருக்கு… பொட்டிய கட்டிட்டு  வீட்டுக்கு போறதுக்கு ரெடி ஆஹ் இருந்துக்கோ… ஏய்… தர்ஷினி, தானே நீ… அவகூட சேந்த பாவத்துக்கு, நீயும் கிளம்பு…”

“நீங்க சொன்னா, சரியாத் தான் இருக்கும் மேடம்… அப்படியே பண்ணிடுறோம்… சரி வா தர்ஷி… நாம போயிட்டு எடுத்து  வைப்போம்… வரேன் மேடம்…”

“உன்னால எவ்வளோ முடியுமோ பேசுடி… இன்னும் மூணு நாளு தான் இருக்கு… பாத்துக்குறேன்…” என்று அவளிடம் கோவமாக கூறிவிட்டு சென்றார்.

Advertisement

தர்ஷி,” என்னடி பண்ண போறோம்… இன்னும் நமக்கு சரியான ஆதாரம் கிடைக்கலையே…”

“இன்னும் மூணு நாலு இருக்குடி… அவன் எதுனால இப்படி செஞ்சான்னு மட்டும் தெரியணும்… பாக்கலாம் ஏதாவது க்ளூ  கிடைக்குதான்னு…”

ஆனாலும் “அந்தம்மா அன்னைக்கு என்னமா, நடிச்சிது பாத்தியா…” என்று அவந்தியிடம் பேசிக்கொண்டே, அந்த நாளை நினைவு படுத்தினாள்.

– – – – – 

சம்பவம் நடந்த அன்றிரவு, பிரின்சிபால் மட்டும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டு அவர்களிடம் நடந்ததை  விசாரித்துக்கொண்டு,

ஒகே அவந்திகா அண்ட் தர்ஷினி, ஒரு உயிரை சேவ் பண்ணிருக்கீங்க.. பட் உங்களுக்கு இன்வெஸ்டிகஷன்ஸ் இருக்கும்… என்னால எதுவும் சொல்லமுடியாது… பி ரெடி டு பேஸ்… நாளைக்கு அவங்க அப்பா, அம்மா வந்ததும் பேசிக்கலாம். பாத்துக்கோங்க, வைஸ் பிரின்சிபால் இன்னும் ஏன் வரலன்னு தெரியல… ஒகே, லெட்ஸ் சி, மீட் யு இன் காலேஜ்.”

“ஒகே சார்… தேங்க் யு சார்…” என்றனர்.

மறுநாள் கல்லூரியே பரபரப்பாக இருக்க, பத்து மணியளவில் அவந்தி மற்றும் தர்ஷினி இருவரும் கல்லூரிக்கு வருகை தந்தனர்.

கல்லூரி நுழைவு வாயிலில் இருந்த நிர்வாக அதிகாரி, இவர்களை பார்த்தவுடன் மேம் உங்கள இங்கயே வெயிட் பண்ண சொல்லி  பிரின்சிபால் சொல்லிருக்காங்க.. சோ ப்ளீஸ் மேம் என்று இருவரையும் பார்த்து பொதுவாக கூற,

“ஒகே.. தேங்க் யு…” என்று பதில் கூறிவிட்டு அமர்ந்தனர்.

தர்ஷி,  “வேலை போனாலும் பரவால்ல அவந்தி, ஒரு உயிரை காப்பாத்திருக்கோம்… அதனால இது ஒன்னும் பெருசில்ல.. நீ எதுக்கு இவ்வளோ யோசிக்குற… பிரீ ஆஹ் விடு…”

“ம்ம்…இந்த விஷயம் எனக்கு அப்படி தோணல தர்ஷி…”

“எப்படி சொல்லுற நீ…”

“இல்ல்ல… வைஸ் பிரின்சிபால் இன்னும் நம்மகிட்ட என்னனு ஒரு வார்த்தை கேக்கல… ஏன் அதோட கேபின்ல கூட காணும் பாரு…  அதுதான்…” என்று பேச,

அங்கே இடது கையில் பெரிய கட்டுடன், வைஸ் பிரின்சிபால் வெளியே வர, இவருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, அவரை நோக்க, 

அவரே இவர்கள் இருக்கும் இடம் வந்து, “எப்படி இருக்க அவந்தி… அச்சோ, கேள்வியையே தப்பா கேக்குறனோ… இனிமே இங்க எப்படி இருப்ப அவந்தி?.. “

அவந்தி அவரை தீர்க்கமாக பார்க்க, 

“என்ன புரியலையா, என் பெர்பாமன்ஸ் எப்படி இருக்குனு, நீ உள்ள போயிட்டு வந்து சொல்லு…”

அவளோ அவரின் கையில் இருந்த கட்டை நோக்க,

“அவள் பார்வையை உணர்ந்து, இந்த கட்டும் அந்த பெர்பாமன்ஸ்ல சேந்தது தான்… இப்படி அடிபட்டதுனால ‘பெயின் கில்லர்’  போட்டுட்டு தூங்கிட்டேன்… அதுனால தான் என்னால ரெஸ்பாண்ட் பண்ண முடியலை… ஹப்பா ரொம்ப நேரம் நிக்க முடியல, கை வலிக்குது… நான் வரேன்…”

தர்ஷியோ, “இதுலாம் பொம்பளையா டி… அவளை..” என்று பேச வர, அச்சமயம்  இவர்களை  உள்ளே அழைத்தனர்.

அவந்தி, “வா போலாம்..”

இருவரும் பொதுவாக அங்கிருந்த நால்வருக்கு விஷ் செய்து விட்டு நிற்க,

பிரின்சிபால், தாளாளரின் முகத்தை பார்த்து விட்டு, “சொல்லுங்க.. நீங்க என்ன போறீங்க…”

அதுக்கு முன்ன வைஸ் பிரின்சிபால் உங்க மேல, அதாவது அவந்திகா உங்க மேல, நிறைய கம்ப்லைன் பண்ணிருக்காங்க,

“என்னனு நான் தெரிஞ்சிக்கலாம் சார் ப்ளீஸ்…”

“வெள்!… நீங்க ஸ்டூடெண்ட்ஸை ஒழுங்கா கேர் பண்ணல, அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது இல்லனா, உடனே கூப்பிடமா கடைசியா கூட்டிட்டு வர சொன்னதுனால தான் இப்படி நடந்துச்சுனு அவங்க சொல்லுறாங்க… அப்பறம் காலேஜ்ல நீங்க அவங்ககிட்ட  மரியாதையா நடந்துக்குறது இல்லணும் சொல்லுறாங்க… இப்படி இன்னும் நிறைய சொன்னாங்க… அதனால, உங்கள மாறி வேற எந்த டீச்சரும் மாறாம இருக்கணும்னா, அவங்க உங்களை வேலையை விட்டு நீக்க சொல்லுறாங்க…”

“இதுக்குலாம், நீங்க எதுவும் பதில் வச்சிருக்கீங்களா அவந்திகா…” என்று தாளாளர் கேட்க,

“சார்… முதல்ல இப்படி என்கிட்டயும் விசாரிக்குறது நான் நன்றி சொல்லிடுறேன் உங்க எல்லாருக்கும்… என்னை பொறுத்தவரைக்கும், நான் இந்த காலேஜ்ல அப்படி மரியாதை இல்லாம யார்கிட்டயும் நடந்தது போல எனக்கு நினைவில்லை… ஒன்னும் மட்டும்  சொல்றேன் சார், எனக்கு நேத்து அந்த சம்பவம் நடந்த அப்போ, ஒரு உயிர் தான் கண்ணுக்கு முன்ன முதன்மையா தெரிஞ்சிச்சு, அந்த நேரம் ரூல்ஸ் பத்திலாம் நான் யோசிக்கவே இல்ல… இது உண்மை நான் ஒதுக்குறேன்…” என்று நிறுத்தினாள்.

“ஒகே… வேற எதுவும் இருக்கா?”

“வேலை விட்டு போறது பத்திலாம் எனக்கு கவலை இல்லை சார்… பட் இதுமாறி ஒரு பேரோட வெளில போக வேணாம்… எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க சார் ப்ளீஸ்… எனக்கு எதுனால இப்படி ஆனதுனு,  நான் ஆதாரத்தோட உங்களுக்கு சொல்லிட்டு அப்பறம்  ராஜினாமா பண்ணிக்குறேன்… ப்ளீஸ்…”

பிரின்சிபால், “நாங்க இன்னும் எந்த டெசிசனும் இன்னும் எடுக்களையே அவந்திகா… அதுக்குள்ள நீங்களே சொல்லுறீங்க…”

“எந்த டெசிஸின் எடுத்தாலும், நான் அதை ஏத்துக்குறேன் சார்… தேங்க் யு…”

“தர்ஷினி, நீங்க அவங்க கூட இருந்திருக்கிங்க… உங்களுக்கு ஏதும் சொல்லனுமா?”

“எஸ் சார்… அவந்திகா மேம் போல என்னால அந்த நேரம் செயல் பற்றுக்க முடியுமான்னு தெரியல… எனக்கும், நீங்க எந்த முடிவு எடுத்தாலும் சம்மதம் சார்…”

“ஒகே… தென்.. மீட் யு அஃபிடேர் ஒன் வீக்… பெஸ்ட் ஆப் லக்…”

“தேங்க் யு சார்…”

– – – – 

தர்ஷி,” ஆனாலும் அவந்தி இப்போ நினைச்சாலும், அந்தம்மா நடிச்சது எனக்கு  கண்ணுகுள்ளெ நிக்குது டி… செம வில்லிடி அது…”

“ஹா ஹா… இன்னும் எத்தனை தடவை சொல்லுவ… பாத்துக்கலாம்… அதுக்கு தான் ஆப்பு ரெடி பண்ணிட்டோம்ல விடு…”

“அன்னைக்கு அந்த பொம்பள மூஞ்சியை மட்டும் தான் நான் பாப்பேன்டி…”

“அன்னைக்கு பாரு… வா இப்போ போயிட்டு அனிதாவை பாத்துட்டு வரலாம்… இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணணும்ல… அதுக்கு  தானே லெட்டர்ல சைன் வாங்க போனோம்… வா கிளம்புவோம்…”

“கேட்டதிலும் ஒரு நல்லது போல… இந்த சாக்கை வச்சிட்டு அண்ணாவை பார்த்துடுற… என்ஜோய்…”

“வேணும்னா நீயும் உன் மச்சானை வர சொல்லேன்…”

“ம்க்கும்… வந்துட்டாலும், எப்போதும் மில்லையே கட்டிட்டு அழச்சொல்லு… அது வேணும்னா பண்ணுவாரு… இப்போ இந்த  சம்பவத்தை அவரு கிட்ட மட்டும் தான் சொன்னேன்… அதுக்கு நீயும் அவந்திய பாத்து கத்துக்கோனு சொல்லுறாரு… இவரையெல்லாம் வச்சிட்டு நான் என்னமா என் வாழ்க்கையை ஓடப்போறானோ…” என்று பெருமூச்சினை விட,

“அடப்பாவி… அப்போ நீ நைட் போனெல்லாம் பேசுறதே இல்ல?”

“அடப்போடி… அப்பயும் மில்லை பத்தி தான் மனுஷன் பேசுவாரு…”

“ரொம்ப பீலிங்ஸ் ஆப் இந்தியா வா இருக்கே… நான் வேணும்னா உங்க வீட்டுல பேசுறேன்… உனக்கு சீக்கரம் கல்யாணம் பண்ணச் சொல்லி, அப்பறம் உன் மச்சான் மில்லை கட்டிக்காம உன்னை கட்டிப்பாரு…”

“நீயாச்சும் நல்லா சொல்லிப்பாருடி… அதுங்களுக்கு உரைக்குதான்னு  பாக்குறேன்… மச்சானுக்கு முப்பது வயசு முடிஞ்ச தான்  கல்யாணத்த தடை நீங்குமாம்… அப்படினு ஜோஸ்யக்காரன் சொல்லிட்டானாம்… அதையே பிடிச்சி தொங்குதுங்க… எப்ப என்ற மச்சானுக்கு முப்பது வயசு முடிஞ்சி, நான் கல்யாணம் பண்ணி, புல்லக் குட்டியை பெத்துக்குறது…”

“நீ ஒரு பார்ம்ல தான் இருக்க தர்ஷி.. நீ பட்டையைக் கிளப்பு…”

“பின்ன இந்த மாறி பொம்பளைங்க கூட குப்பைக் கொட்றதுக்கு, ஒரு நாலஞ்சு புல்லக் குட்டிய பெத்துட்டு அதுங்க கூடவாது மல்லு  கட்டலாம்…”

“ஹா ஹா ஹா… சான்ஸ்யே இல்ல தர்ஷி நீ…”

“நீ அப்பறம் சிரிச்சிக்கோ, அங்க பாரு எங்க அண்ணண் நீ எப்போ வருவேன்னு வழி மேல் விழி வைத்து  பார்த்துக்கொண்டிருக்கிறார்… வண்டியை விட்டு இறங்கு டி..”

“போலாம் போலாம்…”

“அதனாப் பாத்தேன்… நீ அப்போ முன்னவே பாத்துட்ட… அண்ணாவை வெயிட் பண்ண வைக்கிறதுல அவளோ குஷி…”

“நடடி… போலாம்…”

“ஹாய் ண்ணா… போதும் நின்னது, வாங்க உள்ள போலாம்.. உங்க ஆளு வந்தாச்சு…”

“நீங்க முதல்ல போங்க… நான் எங்க ஆளு கூட தான் வருவேன்…”

“அதானப் பாத்தேன்… நீங்க பொண்ணை முதல்ல பாக்க வரும் போதே, அரவிந்த் அண்ணாவை கழட்டி விட்டுட்டு வர பாத்தவங்களாச்சே… இப்போ சொல்லவா வேணும்… நீங்க வந்தா வாங்க, இல்லாட்டி எங்கயாவது போங்க…”

நந்தா, “கிளம்புறது அப்போ…”

அவந்தி, சிரிக்க…

“நல்லா வருவீங்க ரெண்டு பேரும் … ண்ணா… அரவிந்த் அண்ணா… எங்க இருக்க ண்ணா… இவங்க என்னைய…” என்று கூவிக் கொண்டே முன்னே சென்றாள்.

நந்தா அவளையே ஆழ்ந்து பார்க்க,

“எதுக்கு இப்போ இப்படி பார்க்குறீங்க… நாம எங்க இருக்கோம்னு தெரியுதா?…”

“ம்க்கும்… பேசவும் கூடாது, பாக்கவும் கூடாது ன்னா… என்ன தான் பண்றது நான்… அப்போ நீ என்னைய பாரு… நான் உன்னை போல எதுவும் சொல்ல மாட்டேன்… எங்க ட்ரை பண்ணு… நான் எப்படி இருக்கேனு நீயே பாரு…”

“நந்து… ஆரம்பிச்சிட்டீங்களா… இன்னும் நாம உள்ளக கூட போல… வாங்க போலாம்… என்று ஒரு அடி எடுத்து வைத்து அவனை பார்க்க,

“போலாமே அவந்திகா நந்தகுமார்… எங்கனாலும் நா ரெடி…” என்று கண்ணடித்து அவளுடன் இணைத்து சென்றான்.

 

அங்கு அரவிந்த் டிஸ்சார்ஜ் சம்மரி எடுத்து வைத்து இவர்களுக்கு காத்திருக்க,

“சாரி அண்ணா… லேட் ஆகிட்டேன்னா… சாரி ண்ணா…”

“நீயேன் ம்மா… சாரி கேக்குற, எனக்கு தான் தெரியுமே எதுக்கு லேட் ஆஹ் வரேன்னு… என்று தன் நண்பனை பார்த்துக் கூற,

“அதான் சொல்லிட்டான்ல… இனிமே நீ அவன்கிட்ட சாரி கேக்காத அதி…”

 இவனை என்று பல்லைக் கடிக்க, அதற்குள்

அவந்தி, “ண்ணா… இன்னும் எவ்வளோ நேரம் ண்ணா… இங்க இருக்கலாம்…”

“டிஸ்சார்ஜ் சம்மரி வாங்கிட்டேன் ம்மா… டாக்டர் வந்து செக் பண்ணிட்டு கிளம்ப சொல்லிடுவாங்க…”

“ஒரு ஆறு மணி வரைக்கும் இங்க இருக்குற மாறி பாத்துக்கலாமா ண்ணா…”

“அதி, ஏன் இவ்வளோ வெயிட் பண்ற… நாம வேணும்னா வைஷு கிட்ட சொல்லி ஏதாவது பண்ணலாம்…”

“இல்ல நந்து… நோ நோ வேணாம்… அந்த கவின் வருவான்னு எனக்கு தோணுது… எப்படியும் இன்னைக்கு டிஸ்சாரஜ்ன்னு அவனுக்கு நியூஸ் சேந்திருக்கும்… சோ, கண்டிப்பா அவனை இதிலிருந்து காப்பாத்திக்க, அவளை பாக்க வருவான்…”

“சரி… நீங்க பேசிட்டு இருங்க என்று பொதுவாக கூறிவிட்டு… அரவி, பாத்துகோடா… நான் ரௌண்ட்ஸ் போயிட்டு வந்துடுறேன்… பை…” என்று கூறிவிட்டு, அதியிடம் சிறு தலையாட்டலுடன் கிளம்பினான்.

“ஓகே டா..”

“இருக்குற ஆதாரம் பத்தாதா தங்கச்சி…”

“போதும் தான் ண்ணா… அவளோட போட்டோவை ‘மார்பிங்’ பண்ணி அவன் தான் அனுப்பிச்சிருக்கான்… சோ, அவனால தான்… அனிதா கைய அறுத்துகிட்டான்னு சொல்லலாம்… இவன் யாரு சொல்லி, இப்படி பண்ணுனானு தெரிஞ்சா, நம்ம சைடு இன்னும் பக்கவா இருக்கும் ண்ணா…”

“வேற யாரா இருப்பா… அந்த வைஸ் ப்ரின்சிபாலா தான் இருக்கும்…”

“இல்லனா… நானும் அப்படி தான் யோசிச்சேன்.. ஆனா, அந்தம்மா இவ்வளோ இறங்கி செய்யும்னு தோணல… நீங்க இப்படி யோசிச்சி பாருங்களேன்… வைஸ் ப்ரின்சிபாலுக்கு ஸ்டூடெண்ட்ஸோட இன்டெரெக்ஷன்ஸ் ரொம்ப கம்மி தான்… யாருக்கும் கிளாஸ் கூட ஹண்ட்லே பண்ணல… அப்போ எப்படி இவனை சூஸ் பண்ணிருக்கும்…”

“சரி தான் தங்கச்சி…”

“நானே அனிதாவை ஒரு நாள் தர்ஷினி டிபார்ட்மெண்ட் கிட்ட பாத்துருக்கேன் ண்ணா… எதையோ மிஸ் பண்ணுறேன்னு மட்டும் நல்லா தெரியுது… அது தான் என்னனு யோசிச்சிட்டே இருக்கேன்…”

“அந்த பொண்ணோட ரூம்மேட்  கிட்ட பேசுனியே, என்ன சொன்னுச்சி அந்த பொண்ணு…”

தர்ஷி, “நான் தான் ண்ணா… கேட்டேன்.. அவ கைய அறுத்துக்குறது முதல் நாள் நாளைக்கு வெளியே வான்னு அவன் கூப்பிட்டானாம்… இவ போகாம இங்க கைய கட் பண்ணிக்கிட்டா…வேற ஏதும் பெருசா சொல்லல ண்ணா… இங்க அனிதா சொன்னதையே தான் சொல்லுறா…”

அவந்தி, யோசனையுடன், “இந்த அனிதாவும் உண்மையை ஒழுங்கா சொல்லல… அவங்க அம்மா, அப்பா இருக்கறதை பார்த்து ரொம்ப பயந்து இருக்கா… இதுல மேம், என்கிட்ட ஏதும் கேக்காதீங்க மேம்… வீட்டுல இந்த போட்டோ பத்திலாம்  சொல்லதிங்கனு கெஞ்சிறா… வீட்டுக்கு இவ்வளோ பயந்து இருக்குறவளுக்கு எல்லாம் இந்த காதல் என்ன அவசியமோ…”

நாம இங்கயே ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கோமே தங்கச்சி… “பேஷண்டை பாக்க போல…”

“இல்ல ண்ணா  இங்கயே இருப்போம்… அவன் வந்தா தெரியனும்ல அதுக்கு தான் இங்கயே உக்காந்துட்டேன்… அதுக்கு தான் கொஞ்சம் தள்ளி உக்காந்திருக்கேன்… ஒரு ஆறு மணி வரைக்கும் பாக்கும்…”

அரவி, “ஒருவேளை அவன் வரலைனா..?”    

“இல்ல ண்ணா… கண்டிப்பா வருவான்… இவனை தூண்டி விட்டவங்க, என்ன தான் அவங்க பாத்துக்குறேன் சொன்னாலும்… இவனுக்கு நம்ப மாடிப்போம்னு ஒரு பயம் இருந்துட்டே இருக்கும்… அதனால ஒரு தடவை நம்மளே பேசிடலாம்னு வருவான்… அதுக்காக தான் வைட்டிங்…”

“அவனை நானே போயிட்டு தட்டி கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்னா… இவ தான் கேக்க மாட்டுற… அவனே வருவான்னு சொல்லுறா… அவன் பைனல் இயர் ண்ணா… நிறைய அரியர்ஸ் வச்சிருக்கான்… அந்த ப்ரீத்தி தான், அவங்க கிளாஸ் டீச்சர்… அவனுக்கெல்லாம் என்று எதுவோ சொல்ல வர,

“ஹேய்…ய்ய்ய் தர்ஷி இப்போ என்ன சொன்ன?..”

“என்னடி..?”

“கண்டுபிடிச்சிட்டேன் டி… இதுக்கெல்லாம் காரணம் அந்த ப்ரீத்தி தான் டி… எவ்வளோ கிரிமினல் வேலை பாத்திருக்கா பாரேன்… ஊப்.. நம்பவே முடியல என்னால…” என்றாள்.

“ஆமா.. ஆமா.. அவந்தி… பாரேன்… நீ இப்போ சொன்னதும் தான் எனக்கும் தோணுது… நான் சொல்லிருக்கேன்ல… உன்னையவே நோட் பன்றானு… என்ன கேடி வேல பாத்திருக்கா பாரு… எப்படி திட்டம் போட்டு பண்ணிருக்கா பாரேன்…”

“அதே தான்… நீ கூட கேட்டல்ல… அவ டிபார்ட்மெண்ட் நானு என்னைய கூப்பிடாம உன்னை கேட்ருக்கானு… எல்லாம் பிளான் தர்ஷி… எதுக்காக இப்படி பண்ணுனானு தெரிஞ்சே ஆகணும்… எவ்வளோ தைரியம்… இருக்குடி அவளுக்கு…”

இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அரவி, “என்ன பேசுறீங்க ரெண்டு பேரும்… யாரு ப்ரீத்தி?…”

“அவளா ண்ணா…அவ ஒரு ” என்று தர்ஷி கூற வர, பக்கத்தில் இருந்த அவந்தியோ வேகமாக எழுந்து செல்ல,

மற்ற இருவரும் எங்க போறா இவ்வளோ அவசரமா என்று பார்த்துவிட்டு பின்னால் போக,

அங்கே வந்த கவின், இவளை பார்த்து தயங்கி நிற்க, “வாங்க கவின்…” என்றழைக்க,

“மேம்… நான்” என்று தடுமாற,

“இங்க ஓரமா வா… நடுவுல நிக்குற பாரு… மத்தவங்களுக்கு இடையூறா நிக்காத…”

அவன் அவளின் பக்கம் வந்து நின்றவுடன், அவன் உணரும் முன்னே… அவனின் கன்னத்தில் அவளின் கை இடியென இறங்கியது.

அடுத்து..?

சாரல் வருடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!