Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 22

சாரல் – 22

கோவை ரயில்வே நிலையம் காலையில் பரபரப்பாக இருக்க, நந்தாவோ அவனின் அதியின்  வரவிற்க்காக கையில் சிவப்பு வண்ண ரோஜா பூங்கொத்துடன் அவள் வரும் பாதையில் விழி வைத்து காத்திருக்க,

அரவி, “அடேய் நீ எல்லாம் என்ன டிசைன்னு எனக்கு தெரியலடா…”

“நீ ஏன் தெரிஞ்சிக்கணும்… கொஞ்ச நேரம் வாய தொறக்கமாத் தான் இருந்து தொலையேன்டா…”



Advertisement

“எதுக்கு… எதுக்குன்னு கேக்குறேன்… என் வாய் நான் பேசுவேன்…”

“அப்போ உனக்கு நீயே பேசிக்கோ, என்கிட்ட பேச வேண்டாம்…”

“பேசுவேன்டா… ஆறு மணிக்கெல்லாம் என்னைய இங்க இழுத்து வந்தல்ல.. அதுக்கு பேச தான் செய்வேன்…”

Advertisement

“நீயேன்டா நைட் என் வீட்டுல தங்குன… உள்ளேயே வச்சி பூட்டிட்டு வந்திருக்கனும்.தெரியாம உன்னையும் கூட்டிட்டுவந்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்…”

Advertisement

“அதுக்குன்னு ஒரு அளவில்லையாடா தடிமாடு… உனக்கு ஏழேகாலுக்கு தான் ட்ரெயின்… மணி இப்போ என்னனு மட்டும் பாரு…”

“என் மாமனார் இப்படி தான் முன்னாடியே வந்துடுவாராம்…அது மாறி நானும் மாறிட்டேன்…”

“உனக்கே நீ சொல்லுறது அடுக்குதா சொல்லு… மாமனாரை எதுக்குடா காப்பி பண்ணுற…”

Advertisement

“அதிக்கு அவங்க அப்பாவை ரொம்ப பிடிக்குமாம்…”

“அடங்கொப்புரானே… நானே இதுக்கு மேல பேசலடா… “

“இதை தான் முன்னாடியே பண்ண சொன்னேன்… அப்போ நீ பண்ணல, அதுனால இப்போ நீ பேசுற…”

“என்னைய பாத்தா உனக்கு எப்படிடா தெரியுது… நல்லா படுத்துறா மனுஷனை…என்னோட வாயும் அடங்க மாட்டுதே… பரவால்ல, இதுக்கு பதில் சொல்லு என்றுவிட்டு, தங்களுடைய மாமனார் பற்றியெல்லாம் எப்போது தாங்களுக்கு தெரிய வந்தது…”

“அதுவா, என் மாமியார் சொன்னாங்க…”

“இது எப்படா நடந்துச்சு… என்று அதிர்ச்சியானான்.

“என் மாமியார் கிட்ட தானேடா பேசுனேன்… நீ ஷாக் ஆகி நான் ஊருக்கு போற நேரத்துல, எதையாவது இழுத்து வச்சிடாத…”

“உன்னைய நம்பி வந்தேன் பாத்தியா… அதனால் நீ இன்னும் பேசுவ… நான் கிளம்புறேன் போடா…”

“இன்னும் ஆரம்பிக்கவே இல்ல… அதுக்குள்ளவே போறேன்னு சொல்லுற…”

“நீங்க இதுவரைக்கும் பண்ணதே போதும்… தங்கச்சி காள் பண்ணி எங்க வந்துட்டு இருக்குனு கேளு.. அப்போவது நான் கொஞ்ச நேரம் நிம்மதியா இருந்துக்குறேன்…”

“அதுயெல்லாம் நாங்க அப்டேட்டட் ஆஹ் இருக்கோம்… நீ ஒன்னும் சொல்ல தேவ இல்ல…”

“உன்னைய இப்போ கொல்லப் போறேன்… நான் சர்ரெண்டெர் ஆகிடுறேன்… என்னைய விட்டுடு…”

“மிஸ்டர் அரவிந்த், என்ன தப்பு பண்ணீங்கனு சொல்லுங்க… நானே உங்களை போலீஸ் ஸ்டேஷன்ல விட்ருறேன்…”

“ப்ளீஸ் டா… எனக்கு பேச கூட வரமாட்டுது… விட்டுட்டேன்…”

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, என் வாய் நான் பேசுவேன்னு சொல்லிட்டு… இப்போ பேச வர மாட்டேங்குதுனு சொல்லுறீங்க அரவிந்த்…”

“ஆத்தா… மாரியாத்தா, இன்னைக்கு காலைலயே இவன்கிட்ட என்னைய இப்படி கோர்த்து விட்டுட்டியே… அந்த புள்ளைய கொஞ்சம் சீக்கரம் வர வச்சிடு தாயி… உனக்கு நான் தேங்காய் உடைக்குறேன்…”

“அது என்னடா வேண்டுறது கூற, லேடீஸ் சாமி கிட்ட தான் வேண்டுவியா… அப்போ ஆம்பள சாமி கோச்சிக்காத?”

“சாமி… இந்த ஆசாமி ரொம்ப பாவம்… வந்து குடிச்ச ஒரு டீக்கு இவ்வளோ தான் தாங்கும்… சொல்லிட்டேன்…”

“இப்போ சார் எதுக்கு வழி பண்ணுண்றிங்க?”

“ஒரு வழியும் பண்ணல… ஒழுங்கா வந்து எனக்கு சாப்பாடு வாங்கிக்குடு… உன்கிட்ட பேசுனதுல எனக்கு பசியே வந்துடிச்சி..”

“உன்னைய நான் பேச சொன்னேன் ஆஹ்?”

“ஐயா.. ராசா… மறுபடியும் ஆரம்பிக்காதீங்க சாமி… ரொம்ப லெங்த் ஆஹ் போகுது… இவளோ தான் தாங்கும்… நீங்க சாப்பாடு வாங்கி குடுத்துட்டு என்ன வேணும்னாலும் சொல்லுங்க… நான் கேட்டுக்குறேன்..” என்று இவன் பேச, நந்தாவிடம் இருந்து பதில் இல்லாமல் போக,

“டேய், நான் இங்க பேசிட்டு இருக்கேன்” என்று அவனை தன்புறம் திருப்ப முயல,

நந்தாவோ அவனை சட்டை செய்யாமல், அங்கே தனக்கு பிடித்த சிவப்பு நிறத்தில், லாங் குர்த்தி வித் பலாசோவ் அணிந்து வரும் மங்கையில் தன் விழியை பதித்து நிற்க, அவளும் இவனை முதலில் விழி விரிய ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, கண்ணில் சிரிப்புடன் அவனை நெருங்கி, அவனுக்கு தன் சிரிப்பை தந்துவிட்டு, அரவியை பார்த்து “ஹாய் அண்ணா..” என்றாள்.

தர்ஷி, “ஹாய்… ஹாய்… அண்ணாஸ்…”

ஹாய்லாம் அப்பறம் சொல்லுறேன்.. “அப்பாடி… தங்கச்சி இப்போவாது வந்தியே ம்மா… “

தன் நந்துவை, ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, என்ன ண்ணா… சரியான நேரத்துக்கு தானே வந்திருக்கோம்…”

தர்ஷி, “அரவிந்த்..ண்ணா இருங்க, இருங்க… ண்ணா… நந்தா அண்ணா…. நாங்களும் இருக்கோம்… கொஞ்சம் எங்களை பாக்குறது…”

“நீ வேற ஏன் தர்ஷினி… இவ்வளோ நேரம் என்னை வச்சி செஞ்சிட்டு இப்போதான் அவனே இப்போதான் அமைதியா இருக்கான்… நீ அதை கெடுத்து விற்றுவ போல…”

அவந்தி அவனை பார்க்க, அவனோ இப்பொழுது அவளைப் பார்த்து கண்ணடித்தான்… அவளோ அவனை கண்களை சுருக்கி செல்லமாக முறைத்துவிட்டு, பேச வர…

அதற்குள் தர்ஷி முந்திக் கொண்டு, “ஹா ஹா…ண்ணா, நீங்க என்னமோ புதுசா அண்ணா வச்சி செஞ்சிட்டாங்கனு சொல்லுறீங்க… இதுலாம் உங்களுக்கே ஓவர் ஆஹ் தெரியல…”

“அடேய்… பாத்துகோடா… இந்த புள்ள என்ன சொல்லுதுனு… உனக்கு இப்போ குளுகுளுனு இருக்குமே…”

“தர்ஷி உண்மையை தானேடா சொல்லுது … அதுல என்ன எனக்கு குளுகுளுனு   இருக்க போது… உன் லட்சணம் அப்படி… அதுக்கு நான் என்ன பண்ண முடியும் சொல்லு…”

பெண்கள் இருவரும் சிரிக்க,

“துரோகி டா நீ… என்ன கக்கபிக்கணு சிரிப்பு உங்க ரெண்டு பேருக்கும்…”

தர்ஷி, “விடுங்க ண்ணா… அரசியல்ல இது சாதாரணமப்பா…”

அவந்தி, “விடுங்க ண்ணா…” நந்தாவை பார்த்துவிட்டு,ஏதும் சாப்பிட்டீங்களா அண்ணா?… நான் எடுத்து வரேன்னு இவங்ககிட்ட சொல்லிருந்தேன்.

“நீ தான் இந்த அண்ணனோட மனசு தெரிஞ்ச தங்கச்சி ம்மா… பார்த்துக்கோடா நீயும் தான் இருக்கியே… தங்கச்சிடா…ஆஆ… சாப்பாடு வேணும்னு கேட்டு கூட எனக்கு வாங்கி தரலைமா இவன்…”

“அவ கொடுத்தாலும் நான் கொடுத்த மாறித்தான் டா எரும… நானும் அவளும் வேறவேற இல்லையே…” என்று பார்வையை பாவையின் மேல் வைத்துக் கொண்டே சொல்ல, அவளோ அவன் பார்ப்பது தெரிந்தும் அதை தவிர்த்து, பேகிலிருந்து சாப்பாடு எடுப்பது போல் குனித்துக் கொண்டாள்.

தர்ஷி, “அட்ராசக்க… அரவிந்த் அண்ணா நாம இனி பேச வேலையே இல்லனு நினைக்கிறேன்..”

“அதுதான் பேசுற வேலை இல்லனு புரிஞ்சிதுள்ள முதல்ல இடத்தை காலி பண்ணுங்க ரெண்டு பேரும்… எப்போ பாரு ரெண்டு கரடியை பின்னால  வச்சிக்கிட்டே சுத்த வேண்டியதா இருக்கு…”

தர்ஷி, “அரவிந்த் அண்ணா… இந்த ண்ணா என்ன சொல்லுறாங்க பாருங்க…”

அதி, நந்துவை பார்த்து, “பேசவேண்டாம்” என்று சைகையில் வாயில் விரலை வைத்துக் காமிக்க, அவனோ அவளை பார்த்து கண்சிமிட்டினான்.

அரவி, “அவன் நம்மள எப்படி கிளப்பலாம்னு தான் பாக்குவான்… அப்படி நாம கிளம்பிடுவோமா என்ன… அவன் கிடக்குறான்…”

“நன்றி சொல்லவே இந்த அண்ணனுக்கு வார்த்தை இல்லையே தங்கச்சி… ரெண்டு வேளைக்கு சாப்பாடு குடுத்த என் அன்பு தங்கையே, கோடானு கோடி நன்றிகள்… நன்றிகள்…”

அவந்தி மறுத்து கூற வர, அதற்குள், “உன் நன்றியை நீயே தூக்கிட்டு கிளம்புடா மண்ட…” அதை சிரிப்புடன் பார்த்தாள், அவந்தி.

ட்ரெயின் வந்ததிற்கான அறிவுப்பு வர, மறுபடியும் “கிளம்பு, கிளம்பு… டேய் தர்ஷினியை பஸ் ஏத்தி விட்டுட்டு நீ கிளம்பு… அதி… பை சொல்லிடு… நாம போகணும்ல…”

தர்ஷி, “நோ நோ… நாங்களே உங்கள ட்ரைன்ல உக்கார வச்சிட்டு தான் கிளம்புவோம்.. நான் உங்க பேகை எடுக்குறேன்…” என்று நந்தாவின் அருகில் வர, அப்போது தான் அவள் கண்ணில் பட்டது… “சிவப்பு நிற ரோஜா பூங்கொத்து…”

அவனையும், ரோஜா பூங்கோதையும் மாறி மாறி பார்த்துவிட்டு, பாரேன் இந்த அரவிந்த் அண்ணாவால… இதை நான் இம்புட்டு நேரமா கவனிக்காத இருந்திருக்கேன்…

இவளின் பேச்சை கேட்டு அவந்தி என்னவென்று பார்க்க, நந்தாவோ, “ஷு… ஷு..” என்றான்.

“இதுலாம் போங்கு… இதுக்கு தான் இப்படி உக்காந்திருந்திங்களா?… அரவிந்த் ண்ணா, இப்படி வாங்க என்று சொல்லி அவனை தன்னருகில் நிற்க வைத்து, இவர்கள் பேசுவதை பார்த்த அவந்தியை, நீ இப்படி வந்து எனக்கு எதிர்க்க நில்லு. என்ன தர்ஷி என்று கேட்டுக் கொண்டே வர,

“தர்ஷினி மேடம் நாங்க ட்ரைன்ல குடுத்துறோம், நீங்க கொஞ்சம் அமைதியாகுங்க…”

“செல்லாது… செல்லாது… நாங்களும் பாத்தே ஆகணும்…”

“என்னடி தர்ஷி?”

“அந்த என்ன, வை… அங்க என்னங்கனு கேளு…”

அவள் நந்துவை பார்க்க, தன் பேக் சைடிலிருந்து பூங்கொத்தை அவளின் முன் நீட்டி, “இன்று உன்னுடன் தொடங்கும் என் பயணம், என் வாழ்நாள் முழுக்க தொடர விரும்புறேன்…” என்று கண்ணில் காதலுடன் கூற,

அவந்தியோ அவனையே கண்ணில் நீர் வழிய, உதடுகள் சிரித்துக் கொண்டே பூங்கொத்தை வாங்காமல் பார்க்க, அவனே அவளின் ஒரு கைபிடித்து அதை அதில் திணித்து, மற்றொரு கையை தன் கையுடன் இணைத்துக் கொண்டான்.

தர்ஷி, கைதட்டி கொண்டாடி, அண்ணாவும் ரெட் டீஷர்ட், அவந்தி ரெட் டிரஸ், ரெட் போக்கே..எல்லாம் சிவப்பு மயம்.. என்று சிரிக்க… அரவிந்த் இதை வீடியோ பதிவு செய்தான்.

நந்தா, “நாங்க ரெட் பேமிலி…”

இருவரும் தர்ஷி மற்றும் அரவிந்த்க்கு சொல்லிக் கொண்டு ட்ரைனில் ஏற செல்ல, அரவியோ, “பொண்ணுப் பாக்குறதுக்கு பொண்ணையே கூட்டிட்டு ஊருக்கு போற முதல் ஆள் நீயா தான்டா இருப்ப…” என்று கட்டிபிடித்துக் சொல்லி, “என்ஜோய்” என்று வழியனுப்பி வைத்தான்.

“இப்போ தான் ரொம்ப சந்தோசமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே ஏசி கோச்சில் அமர்ந்தான். அவனுக்கு பக்கத்தில் அவனின் அதி.

“மேடம் என்ன ஒன்னும் சொல்லாமல் அமைதியா வரீங்க…”

அவனை நிமிர்த்து பார்க்க, “பேசலாமே ஏதாவது…” என்று கண்சிமிட்ட,

“இப்படி பண்ணா, நான் எப்படி பேசுறது…”

“நான் சொல்லி தரவா எப்படினு…”

“போங்க நீங்க… உங்ககிட்ட என்னால பேசவே முடியல… இப்படி ஏதாவது பண்ணி என்னை ஆப் பண்ணிடுறிங்க…”

“அடிப்பாவி… நான் ஒண்ணுமே பண்ணல…”

“அடிவாங்க போறீங்க…”

“அடிக்கலாமே… எப்படி அடிக்குறன்னு பாக்குறேன்…”

“நந்து… என்ன இது…இப்படி பண்ணுனா நான் எங்கேயிருந்து பேச…”

“சரி…சொல்லுங்க முயல்குட்டி… வைஷு என்ன சொன்னா?”

“அவளுக்கு ரொம்ப வருத்தம்… பொண்ணுக்கு பாக்க அவ இல்லனு… அப்பறம் நீங்க சொல்லவே இல்லனு உங்கள திட்டுனா…”

“ஓஹோ… திட்டிக்கட்டும்… “

“ஒழுங்கா நீங்க முன்னாடியே சொல்லிருக்கலாம்…”

“எதுக்கு… இல்ல எதுகுங்குறேன்… எனக்கு பிடிச்ச மேம், அண்ணியா வந்தா நல்லா இருக்கும்னு சொன்னாலே தவிர… ஒரு போட்டோவை காமிச்சால?… இல்லனா முன்னாடியே பாத்திருப்பேன்…”

“யாரை முன்னாடியே பாத்திருப்பேன்?…”

“கேக்குற பாரு கேள்வியை… என் தங்க பொண்ணு உங்கள தான்… தங்க மயிலு..” என்று கண்ணடிக்க,

“பாருங்க, நீங்க இப்படியே பண்றீங்க…”

“இனிமே உஷாரா பேசணும்டா சாமி…” என்று நினைத்துவிட்டு, “சர்ரெண்டெர்… நீ பேசு…நான் கேக்குறேன்…  இப்படி எந்த டிஸ்டர்பன்ஸ் இல்லாம பேசணும்னு தானே டீச்சரம்மாவை கஷ்டப்பட்டு கடத்திருக்கேன், என் மாமியார் ரெகமெண்டஷன்ல…”

அதி அவனை முறைக்க,

“என்ன முறைப்பு… ஒண்ணா போலாம்னு சொன்னதும், நீ ஓகே சொன்னியா?… வேணாம்னு சொன்னல்ல… அதான் என் மாமியார் கிட்ட, நானே கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்… என்னோட மாமியாரும், மாப்பிள்ளை பத்திரமா வாங்கனு சொல்லிட்டாங்க… அப்பறம், நைட் பெர்த் பஸ்ல புக் பண்ணி போலாம்னு சொன்னேன்… நீ தான் ஒத்துக்களை… ஜாலி ஆஹ் படுத்துட்டே வந்திருக்கலாம்…”

“அடி தான் கிடைச்சிருக்கும்…”

“எப்படி, இப்படியா?” என்று மின்னல் வேகத்தில் அவளின் மச்சத்தில் முத்தமிட்டு கேட்க,

அதியோ என்னவென உணர்ந்து அவனை பார்க்க முடியாமல், கன்னங்கள் சிவந்து கீழே குனிய,

“அதி இங்க என்ன பாரு… இப்போதான் நான் உன்ன பாக்கணும் மச்சக்காரி…” என்று அவளை நிமிர்த்த,

அவனின் கையை தட்டிவிட்டு, இன்னும் கீழே குனிந்தாள்.

“மச்சக்காரி… இந்த மச்சத்தை பாக்கும் போதுலாம் கிஸ் பண்ணுனு, என்னை கூப்பிடும்… அது இப்போ தான் நடந்திருக்கு…” என்று சிரித்தான்.

அதி அவனை தன் முழங்கையால், அவனை குத்திவிட்டு தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்து, அவனை முறைத்து, என்ன வேலை பண்ணுறீங்க…”

“ஹா ஹா… செரிஸ் தி மொமெண்ட், அதி…” இதுவே கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் இப்படி பாத்து பண்ணனும் சொல்லாத, இப்போவே சொல்லிட்டேன்…”

“நீங்க என்கிட்ட அடி தான் வாங்க போறீங்க அப்போ…”

“நான் ரெடி ஆஹ் தான் இருக்கேன் மச்சக்காரி…”

“ஒழுங்கா அதினு சொல்லுங்க…”

“ஹா ஹா… உத்தரவுங்க மகாராணி…”

என்னடா இது சொன்னதும் ஓகே சொல்லுறாரு” என்று நிமிர்ந்து அவனை பார்க்க, அவனோ கண்ணடித்து “இந்த மச்சக்காரியை டைம் வரும் போது யூஸ் பண்ணிக்குறேன்…”

“உங்களை… சாப்புடலாம் வாங்க…” என்று அவனிடம் ஒரு பாக்ஸ் எடுத்து குடுக்க,

“அதி ஊட்டி விடலாமே?”

“அஹான்… ஸ்பூன் இருக்கு, எடுத்து சாப்பிடுங்க…”

“அந்த கொடுப்பனையும் இல்லையா…”

“வாய் வாய்… சாப்பிடுங்க… நந்து, நீங்களும் தஞ்சாவூர்ல தானே படிச்சீங்க யு.ஜி… என்னைய எங்காவது பாத்துருக்கீங்களா?… நான் உங்க மெடிக்கல் கொஞ்ச நாள் காலேஜ் கூட வந்திருக்கேன்…”

அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “நீ என்னைய பார்த்துறிக்கியா?…”

“அடப்போங்க நீங்க… எப்போ கேட்டாலும் இப்படிதான் கேக்குறீங்க நீங்களும்…”

“இதே தான் நீயும் சொல்லுற…சரி… பொண்ணு பாக்குறதுக்கு சாறி என்ன கலர்ல சூஸ் பண்ணிருக்க?”

“அப்போ பாருங்க..”

“நானும் மேட்ச் ஆஹ் போட்டுக்க தான்… இன்னைக்கு மாறி…”

“ஒன்னும் வேண்டாம்… இந்த மாறி கோய்ன்ஸிடென்ஸ் தான் நல்ல இருக்கு… நீங்க சொன்னா மாறி, செரிஸ் தி மொமெண்ட்…” என்று சொல்லி சிரித்தாள்.

சிறிது நேரம் சென்று நந்தாவின் ஊர் வர, அவனோ எழாமல் இருக்க, “நந்து என்ன உக்காந்திருக்கிங்க… வாங்க வெளியே… ட்ரெயின் ஸ்டாப் வருது…”

“என் மாமியார்கிட்ட நானே கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்ல அதுக்கு தான்…”

அவள் முறைத்து, “அடிவாங்க போறீங்க நீங்க… விளையாடம கிளம்புங்க…”

“ம்ம்… ரொம்ப தேறீடீங்க அவந்திகா நந்தகுமார்..”. என்று கண்ணடித்து, “நாளைக்கு வந்து தூக்கிட்டு போறேன்… நாளை சிந்திப்போம்…” என்று சொல்லிவிட்டு ரயிலிலிருந்து இறங்கினான்.

சாரல் வருடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!