“அடேய் நவீ… அவன் சொல்லுறதுல கூட ஒரு அர்த்தம் இருக்கு… அவன் ஒன்னும் தெரியாத பையன்… உனக்கு கூடவா என் பீலிங்ஸ் புரியல?”
“டேய் தடிமாடு… யாருடா ஒன்னும் தெரியாதவன்…”
“நீதாண்டா எருமைமாடு… ஒரு பொண்ணு வந்து, எனக்கு வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்கனு, உங்கிட்ட வந்து சொல்லியும் உனக்கு ஒன்னும் புரியலைனா… அப்பறம் உன்னைய வேற என்னனு சொல்லணும்…”
Advertisement
“ஹா ஹா… இவன் அதுக்கு கேக்குறான்டா… லீவு வாங்கி குடுக்கணுமான்னு…”
Advertisement
“போதும்டா… ரொம்ப ஓட்டாதீங்க… புரியல தான் முதல்ல… அப்பறம் தான் பேசிட்டேன்ல… அப்பறம் என்னடா?..”
நவீன், “எப்பறம் பேசுன?… அந்த பொண்ணுதானேடா சொல்லுச்சு… எனக்கு உங்கள பிடிச்சிருக்குனு…”
நந்தா, “அதுவரைக்கும் இந்த மண்டைக்கு புரியல… அப்பறம் எப்படிடா ஏன் பீலிங்ஸ் உனக்கு புரியும்…”
Advertisement
“கரெக்ட்டா நண்பா…” என்று இருவரும் ஹை- பை அடித்து சிரிக்க,
“டேய்… தூங்காம இந்நேரம் என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு… அதும் வெளில வரைக்கும் கேக்குது…” என்று திட்டிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.
நந்தா, “தெய்வமா வந்திருக்கீங்க தாயாரே…”
“அப்பறம் பேசிக்கோ எதுவா இருந்தாலும்… இப்போ ஒழுங்கா தூங்குங்க… விடிய காலை முகுர்த்தம்…”
அரவி, “அதான் அம்மா சொல்லிடங்கள, தூங்கலாம்…”
“ம்மா… வைஷு எங்க இருக்கா… அவளை மட்டும் என்னைய வந்து பார்த்துட்டு போக சொல்லுங்க…”
“என்னடா… ஏதும் வேணுமா?… நான் கொண்டுவரேன்…”
“இல்லாம நீங்க பாருங்க… அவளை மட்டும் வரச் சொல்லுங்க… ஒன்னு கேக்கணும் அவ்வளோதான்…”
“சரிடா… நான்தான் அவந்தி ரூம்க்கு போயிட்டு, நகையெல்லாம் பத்திரமா வச்சாச்சானு கேட்டு வரச் சொன்னேன்… வர சொல்லுறேன்… என்னனு கேட்டுட்டு, ஒழுங்கா தூங்கு சொல்லிட்டேன். உங்க சின்ன அத்தை வேற வயிறு எரியுற மாறி உக்காந்திருக்கா… பக்பக்குனு இருக்கு… எதுக்கும் நீ பாத்து இரு…” என்றுவிட்டு வெளியேறினார்.
சிரித்து நேரம் கழித்து வைஷு வர, “என்னனா ஏதும் கேக்கணும் சொன்னியா…”
“ஆமா… உங்க அண்ணியோட போன் யார் வச்சிருக்கா…?”
“அண்ணா, உன்னைய அம்மா என்கிட்ட பேசிட்டு தூங்க சொல்லுன்னு சொல்லி தான் அனுப்பிச்சாங்க…”
“உனக்கு தெரியலைனா… நீ போ… அண்ணியை வர சொல்லிட்டு போ…”
அரவி, “என்னாது தங்கச்சியையா…?”
“டேய் அடங்குடா… எங்க அண்ணியை… அப்படியே உன் தங்கச்சி வந்துட்டாலும்… மூஞ்ஜியை கூட பாக்க மாட்டுறா…”
நவீன், “வைஷு… நீ கிளம்புடா… காவியா அக்காவை வர சொல்லு ப்ளீஸ்…”
அரவி, “டேய்.. நீயும் அவன்கூட சேர்ந்துட்டியா… இப்போ எப்படிடா பேச முடியும் தங்கச்சியால… கூட ஆள் இருப்பங்கள்ல…”
அறையிலிருந்து வெளியே வந்து, காவியா அண்ணியை தேடித் செல்லும் வழியில்…
“அத்தை இருக்காங்க… உன் போன் குடுக்க தான் வந்தேன்… நான் அவளை போயிட்டு பாக்குறேன்… இல்லனு தெரிஞ்சு அழுதாலும் அழுவா… இவளை வச்சிட்டு என்னால உன் கல்யாணத்தை கூட ஒழுங்கா என்ஜோய் பண்ண முடியல…”
“ஹே அகல்… ஒன்னும் இல்ல… நீ போய் பாப்புவை முதல்ல பாரு…”
“சரி… காலைல பாக்கலாம்…” என்று அவளின் அறைக்கு சென்றாள்.
– – – – –
“என்ன கொழுந்தனாரே… என்னைய கூப்பிட்டதா தகவல் வந்துச்சி…”
“வாங்க… வாங்க அண்ணி… அதியை என் போனை அட்டென்ட் பண்ண சொல்லுங்களேன்…”
“என் புருஷனுக்கு நான் ஒரே பொண்டாட்டி தான் இருக்கேன்…”
“ஹா ஹா ஹா…” என்று அனைவரும் சிரிக்க, “டேய் உங்கள தூங்கத்தானே சொன்னேன்… காவியா நீ இங்க என்ன பண்ணுற..?”
அதுவா அத்தை… நந்தாவை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே, “முகுர்த்த புடவை எடுக்க கூட நாமா போலல்ல … தம்பி வந்து, இங்க தானே அவந்தி இருக்கா, இதுக்காக லீவு போட்டுட்டு வரணும்னு சொல்லி, அவளுக்கு பிடிச்சமாறி நானே எடுத்து குடுறேன்னு சொல்லி எடுத்தாங்கள்ல, அதுதான் புடவை ரொம்ப நல்லா எடுத்துருக்கீங்கனு பாராட்டுனேன்.
“அதை சொல்ல இப்போ தான் நேரம் கிடைச்சிதுதா உனக்கு…”
இங்கு நந்தவோ நமுட்டு சிரிப்புடன், “அண்ணி, போய் கொஞ்ச நேரம் படுக்க சொன்னேன்ல… போங்க அண்ணி… நல்ல அண்ணியா, இந்த கொழுந்தனுக்கு கொஞ்சம் நல்லது பண்ணிவிட்ருங்க… புள்ளகுட்டியோட ரொம்ப நூறு வருஷம் நல்லாருப்பிங்க…”
கோமதி, “என்னடா உளறுற?”
“அது அண்ணிக்கு புரியும்மா… சரி ரெண்டு பேரும் கிளம்புங்க… எனக்கு தூக்கம் வந்துடுச்சி…”
“சரிங்க அத்தை… வாங்க போலாம்… நீங்க நடத்துங்க புது மாப்பிள்ளை… வரோம் நாங்க…” என்று வெளியேறினார்கள்.
– – – —
மறுநாள் காலை சுபவேளையில், மங்கள வாத்தியங்கள் முழங்க, உற்றார்… உறவினர்கள்… படை சூழ, திருமண மண்டபமே நிறைந்து காணப்பட்டது.
சற்று நேரத்தில், முகுர்த்த புடவை மாற்றி அழகோவியமாய் அவந்தி, மேடையை நோக்கி நடந்து வர, அவள் தன்னருகில் வந்து அமரும் வரை, அவனின் பார்வை முழுதும் அவளிடத்தில் தான்.
“உம்மவனை கொஞ்சம் நேர பாக்க சொல்லு… இப்படியா எல்லாருக்கும் முன்ன பொண்ணையே பார்த்து வைப்பான்.”
“நீங்க ஏன் அவனையே குத்தம் சொல்லுறீங்க… நீங்க தான் என்னை இப்படி பாக்கல… அவன் பாத்தா உங்களுக்கென்ன…”
இப்படி கோமதி கூறிய பிறகு, எங்கிருந்து வாய் திறப்பது.. வீரபாண்டியன் முறைப்புடன் திரும்பிக் கொண்டார்.
“தங்க பொண்ணே… இப்படியே உன்னை களவாடிடவா?”
“எல்லாரும் பாக்குறாங்க…”
“அப்பறம் கல்யாணத்துக்கு வந்துட்டு பாக்காம இருப்பாங்களா?…” என்று சிரித்தவன், அவளின் படபடப்பை பார்த்து, ரிலாக்ஸ் அதி… உன் நந்து தான் என்று சொல்லி நிதானித்தான்.
பின்பு இருவரும் மந்திரத்தில் கவனம் செலுத்த, சற்று நேரத்திற்கு பிறகு திருமாங்கல்யம் அவனின் கைக்கு வர, “அதி என்றழைத்து… அவள் நிமிர்ந்து அவனை பார்க்கவும், அவளை பார்த்துக் கொண்டே, மூன்று முடிச்சிகளையும் அவனே போட்டுவிட்டான்.”
“வெல்கம் பொண்டாட்டி, மிசஸ். அவந்திகா நந்தகுமார்… இப்பொழுதிலிருந்து வெற்றிகரமாக பெயர் மாற்றப்பட்டது…”
அவன் சொன்னவுடன் திரும்பி அவனை பார்க்க, அவளை பார்த்து கண் சிமிட்டினான்.
தர்ஷி, “அடியே அப்பறம் பாருடி அண்ணனை… இப்போ நேர பாரு…”
அவள் சொல்லியதும், நிமிர்த்து முன்னாள் பார்க்க, அங்கே ஆனந்த கண்ணீருடன் அவளின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் நின்றிருந்தனர்.
அடுத்து குங்குமம் வைப்பதற்காக அவளின் கழுத்தை சுற்றிக்கொண்டு அணைத்தார் போல வைத்தவன், இறுதியில் தன் மீது சாய்த்து விட்டான்.
இவனின் செயலில் பதறி விலக, அங்கே இதனை பார்த்த இளைய வட்டத்தினரின் சத்தம் காதுகளை நிறைத்தது.
அதன் பின்னர் பெரியவர்களிடம் ஆசி பெற்று, அடுத்து நடந்த சடங்குகளில் அவளை திணறடித்து, சடங்குகள் முடியும் வரையிலும் அவனை சமாளிக்க முடியாமல் திண்டாடி போனாள், அவனின் மனைவி.