Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 27

சாரல் – 27

“ஹப்பா… இப்போதான், நல்ல ஜம்முனு இருக்கு… அப்படிதானே அதி?…”

அவளோ முறைப்புடன் அவனை பார்க்க,

“பாரேன்… இப்போ நீ எப்படி வேணும்னாலும் வசதியா முறைக்கலாம், அடிக்கணும்னாலும் அடிக்கலாம், அப்பறம்….ம்ம்ம்ம்” என்று இழுக்க,



Advertisement

“நந்து…உங்களையே என்ன தான் நான் பண்றது…”

“நானும் தான் சொல்லுறேன் என்ன வேணும்னாலும் பண்ணுனு… எங்கயாச்சும்  கேக்குறியா…” என்று கண்சிமிட்ட,

“அவ்வா…. வாய் வாய்…”

Advertisement

“வாய் சும்மாத்தான் இருக்கு…” என்று மார்க்கமாக கூற,

Advertisement

“சத்தியமா… என்னால முடியல நந்து… இனிமே நான் பேசவே இல்ல போங்க…” என்றால் கோவம் போல,

அவளை நெருங்கி அமர்ந்து, அவளின் காதில், அதி என்று மீசை உராய பேச…

அவனை தள்ளி விட்டு, எவ்வளோ உஷாரா பெர்த் புக் பண்ணிருக்கீங்க நீங்க…

Advertisement

“ஹா ஹா…” என்று உடல் குலுங்க சிரித்து, கல்யாணம் முடிஞ்சி ரெண்டு மாசத்துக்கு அப்பறம் ஊருக்கு போறோம்… நல்லா சொகுசா போகணும்ல…”

“நான் ஏதும் பேசலை, கேக்கலை… நீங்க ஒன்னும் சொல்லாதீங்க…” என்றாள் முன்னெச்சரிக்கையாக,

அவனோ அவளை பார்த்துக் கொண்டே, அவளை தன் மடியில் நன்றாக அமர்த்திக் கொண்டு, “இப்போ பேசு… இதுக்காக தான் இதுல புக் பண்ணுனேன்… எவ்வளோ வசதியா இருக்கு பாரு…”

அவளோ செல்ல முறைப்புடன் அவனைப் பார்க்க, அங்க சில நிமிடம் கண்ணும் கண்ணும் பேசிக் கொண்டது… பின்பு பேச விஷயங்களா இல்லை… பேசிப்பேசி தீர்த்து, பேசுன விஷயங்களையே மறுபடியும் புதிதாய் பேசிப்பதை போல் பேசி, அவர்களின் ஊரை அடைந்தனர்.

விடியற்காலை ஐந்து மணிபோல் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருக்க, கோமதி வந்து கதவை திறந்து இவர்களை ஆச்சரியமாக பார்த்துவிட்டு, “வாங்க… என்னடா சொல்லவே இல்ல வரேன்னு… திடுதிப்புனு வந்து நிக்குற… என்ன அவந்தி, அவசரமா எதுவும் வேலையா கிளம்பி வந்திங்களா?…”

“வாசலையே நின்னு பதில் சொல்லனுமா ம்மா…”

“இவன் ஒருத்தன், வந்திருக்கதை பாத்ததும் கேட்டேன்டா… வாங்க உள்ள…”

“ஒரு பெரிய விஷயமாத் வந்திருக்கேன்… இப்போ பேச முடியாது… கொஞ்ச நேரம் ரூம்க்கு போயிட்டு தூங்கிட்டு அப்பறம் பேசலாம்…” என்று கூறிவிட்டு, அதியை பார்த்து கண்சிமிட்ட,

“இவன் என்னமா சொல்லுறான் அவந்தி… என்ன விஷயம்?”

“அது வந்து… அத்தை…”

“அது வந்து அப்பறம் சொல்லிக்கலாம்… அம்மா நாங்க ரூம்க்கு போறோம்… உங்ககிட்ட அப்பறம் அது வந்துனு சொல்லுவா… வா போலாம்…” என்று கைபிடித்து அழைத்து சென்றான்.

“அத்தை என்ன நினைப்பாங்க… ரொம்ப பண்றீங்க நீங்க…”

“உங்க அத்தை என்ன நினச்சங்கனு காலைல எழுந்து வந்து கேட்டுக்கோ…இப்போ உன் நந்து என்ன நினைக்குறானு மட்டும் பாரு…” என்றான் கள்ள புன்னகையுடன்.

“ஏதாவது சொல்ல விட்டானா பாரு இவன்… என்னவா இருக்கும்…” என்று யோசித்துக் கொண்டே, இனிமே படுத்தாலும் தூக்கம் வராது என்று நினைத்துக் கொண்டு அடுப்படிக்கு சென்றார்.

– – – – –

காலை உணவை முடித்துவிட்டு, வீரபாண்டியன் கூடத்தில் உள்ள சோபாவில் அமர்ந்துக் கொண்டு, “அம்மாடி கோமதி, கொஞ்சம் காபி தரியா?…” என்று பதுசாக கேட்க,

“அம்மாடியாம்… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…” என்று திட்டிக் கொண்டே காபியை போட,

கொஞ்ச நேரத்திற்கு முன்பு எழுந்து வந்த காவியாவோ, “அத்தை அம்மாடி…” என்று கூப்பிட்டு சிரிக்க,

“அடியேய், பொறுமையா சிரிடி… வயித்துல புள்ள இருக்கு ஞாபகமிருக்கட்டும்… பொரயேறப்போது… “

“சரி… சரி த்தை … இருந்தாலும் மாமாவை நீங்க இப்படி பண்ணகூடாது… பாவம்…”

“பாவமாவே இருக்கட்டும்…” என்று காபியை எடுத்துச் சென்றார்.

அவந்தி, “நீங்க முன்னாடி போங்க… நான் அப்பறம் வரேன்…” என்று படியில்  இறங்கும்முன் சொல்ல,

“அப்படிலாம் சொல்ல கூடாது பொண்டாட்டி… வாங்க சேர்ந்தே போவோம்…” என்று அவளையும் தன் கைப்பிடியில் வைத்து இறங்க,

“ஒழுங்கா வாங்க…அங்க பாருங்க மாமா…” என்று கூறிவிட்டு அவனிடமிருந்து நழுவி முன்னே சென்றாள்.

இவர்கள் வருவதை பார்த்த வீரபாண்டியனோ, வா ம்மா… வா ப்பா… நந்தா” என்றார்.

அவளும் அவரை நலம் விசாரித்துவிட்டு சமயலறைக்கு சென்றாள்.

நந்தா வாய்க்குள் சிரித்துக் கொண்டே சென்று அப்பாவின் அருகில் அமர, இதனை பார்த்துக் கொண்டே வந்த கோமதியோ, நந்தாவை பார்த்துக் கொண்டே, அவரிடம் காபியை நீட்ட, அவரும் அதனை வாங்கி குடித்து விட்டு,

“காபி நல்லா இருக்கு கோமு… நந்தா வந்திருக்கான் பாரு… என்ன வேணும்னு கவனி… நான் மதிய சாப்பாட்டுக்கு வரேன்… எதுவும் வேணும்னா போன் பண்ணு… நான் வாங்கி குடுத்துவிடுறேன்… வரவா…” என்று சொல்லி அவரை பார்க்க,

கோமதி சிறு தலையாட்டல் கொடுக்க, அதன் பின்பு, நந்தாவிடமும் விடைபெற்று மண்டிக்கு கிளம்பினார்.

அவர் சென்றவுடன், கோமதி மகனை முறைத்துப் பார்க்க, அவனோ ஆர்ப்பாட்டமாக அடக்கமாட்டாமல் கைத்தட்டி சிரித்தான்.

“அப்போ உங்க அப்பா சொல்லி நீ கிளம்பி வந்திருக்க…”

“ஹா ஹா ஹா…” என்று அவன் விடாமல் சிரிக்க, இவனின் சிரிப்பு சத்தம் கேட்டு, மருமகள் இருவரும் ஹாலிற்கு வந்தனர்.

“என்ன கொழுந்தனாரே, எங்களுக்கும் சொன்னா நாங்களும் சிரிப்போம்ல…”

“ஹாய் அண்ணி… வாழ்த்துக்கள்… எங்க உங்க கல்லான கணவன்?”

“அவரு தானே… தெரிஞ்சும் கேட்டா, நான் என்னத்த சொல்லுறது…”

“சரி விடுங்க… வந்ததும் சிறப்பா கவனிச்சிடுவோம்… இப்போ எங்க அப்பா இருக்குற மாறி, அவனுக்கும் வேப்பிலை அடிச்சிடுவோம்…”

இன்னமும் கோமதி உர்ரென்று நிற்க,

அவரை பார்த்து ம்மா… இருந்தாலும் உங்க புருஷனை நீங்க இப்படி ஆட்டி வைக்கக்கூடாது… வீரபாண்டியன்னு பேரு வச்சிட்டு, வீறாப்பா சுத்திட்டு இருந்த மனுஷனை, இப்போ பாருங்க, பச்சப்புள்ள போல, உங்க முகத்தை பார்த்துட்டு நிக்குறாரு, எல்லாத்துக்கும்…”

“ம்க்கும்… போயிட்டு வேற ஏதாது வேலை இருந்தா பாருடா… பெருசா பேச வந்துட்டான்… சரி வாங்க சாப்புடலாம்…” என்று அவர் நகர,

“என்னாது… வேலையா?… எங்க அப்பாவே முதல்முறையா கால் பண்ணி, அம்மாவை, என்கிட்டே பேச சொல்லுப்பானு, மனுஷன் கெஞ்சாத குறையா பேசிருக்காரு என்ட… லீவு போட்டுட்டு இதுக்காக வந்திருக்கேன்… உங்கள அப்பாவோட பேச வச்சிட்டு  தான் மறுவேலை…”

“உங்க அப்பாவோட தானே பேசிடலாம்… பெரியவனை தூது விட்டாரு, அடுத்து நீயா?”

“ஓஹோ… அவன்கிட்டயுமா… “

“என்னடா அவன் கிட்டயுமா?… நீ என்னடா சொல்லாம கொள்ளாம வந்திருக்க?” என்று ராஜா வர,

“நான் வர்றது இருக்கட்டும்… டேய்… அப்பாவாக போற… பொறுப்பா இருக்க வேணாமா?…”

“இப்போ என்ன பொறுப்பா இல்லாததை நீ கண்ட?…. இப்போதான் சாப்புடுறீயா நீ? என்று தன் மனைவிடம் கேட்க…”

“இதைத் தான் சொல்லுறேன்… கூட இருந்து அண்ணியை கவனிக்க வேணாமா?… பாரு அப்பாவை, என்ன பண்ணுனாலும் அம்மாவோட, முகத்தை பார்த்துட்டு அதுபடி தான் செய்யுறாரு… அதை பார்த்து நீயும் கொஞ்சமாச்சும் கத்துக்கோடா…” என்றுவிட்டு தன் அன்னையை பார்த்து நகைக்க,

“எப்படி! இப்போ நீ அவந்தி பின்னால சுத்துற மாறியா?…”

அவந்தி தட்டில் தலையை வைக்காத குறையாக கவிழ்த்துக் கொள்ள, “அப்படிதான் டா… பாரு, அப்பாவே என்னை பார்த்து மாறிட்டாரு… நீயும் கொஞ்சம் திருந்து… அப்பறம் பின்னாடி வருத்தப்பட போற…”

காவியா, வாயை பொத்திக்கொண்டு சிரித்து புரையேற… “ஹேய்.. காவியா…” என்று பதறி, ராஜா அவளிடம் தண்ணீர் குடுத்து முதுகை நீவி விட,

“பரவால்லை… கொஞ்சம் முன்னேற்றமா தான் இருக்கு உன் மாற்றம்… அப்படியே அண்ணிக்கு இப்படி ஊட்டிவிடு இது மாறி…” என்று அவந்திக்கு ஊட்ட வர,

அவளோ, அவனை ஒன்றும் செய்ய முடியாமல் கண்களால் மிரட்ட,

கோமதி, “டேய் அரட்டை… முதல்ல சாப்பிடுடா… அப்பறம் பேசலாம்…” என்று சூழலை மாற்ற,

“எங்க என்னோட ஒரே தம்பி?…”

கோமதி, “அவனுக்கு எதோ மாடல் பரிட்சையாம்… அதுனால சீக்கரம் கிளம்பிட்டான்…”

“அப்போ சரி… என்ன சாப்பாடு மதியம்?… சீக்கரம் செய்ங்க… நாம வயலுக்கு எடுத்து போயிட்டு சாப்புடலாம்… அண்ணிக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும்…”

ராஜா, “காவியா… உன்னால முடியுமா?…”

“பாருடா… அப்போ அப்போ நீ அப்பாவை போல அந்நியனா மாறுறடா பெரியவனே… மத்தபடி நல்லவன் தான்…”

“ஏய்… நீ திரும்ப சிரிக்காத…” என்றுவிட்டு திரும்பி தம்பியிடம் “டேய்… கொஞ்ச நேரம் வாய மூடேன்டா…”

அவந்தியோ பதறி, மானத்தை வாங்கப்போறாரு என்று நந்தாவை பார்க்க, அவனோ நமுட்டு சிரிப்புடன் பேசவர,

அவந்தியோ, “அத்தை வாங்க… நாம மத்தியானம் என்ன சமைக்குறதுனு பாக்கலாம்…” என்று வேகமாக எழுந்து ஓடாத குறையாக சமயலறைக்கு ஓடினாள்.

நந்தாவோ மீசையை கடித்து வாய்க்குள் சிரிப்பை அடக்க, இதனை பார்த்த கோமதியோ, சரி சரி… போதும்… காவியா நீ கொஞ்ச நேரம் படுக்கணும்னா படு… நான் என்னனு பாக்குறேன்… என்று கூறிவிட்டு எழுந்து சென்றார்.

– – – – – –

மதியம் இரண்டு மணிபோல், வயலுக்கு வந்த வீரபாண்டியனோ, நந்தாவின் முகத்தை ஆர்வமாக பார்க்க, அவனோ சிரிப்பை ஒலித்து பாவமாக தந்தையை பார்த்தான்.

“என்ன கோமு எல்லாரும் இங்க வந்திருக்கீங்க…” என்று தன் பேச்சை மனைவிடம் துவங்க,

“எல்லாம் உங்க பையன் தான் கூட்டிட்டு வந்தான்… அவன்கிட்டயே பேசிக்கோங்க…” என்றுவிட்டு வயலில் இவர்கள் வந்தால் சிறிது நேரம் அமர்ந்து பேசுவதற்கு ஏதுவாக போடப்பட்டிருந்த கொட்டகையில் வெளியில் வர,

நந்தாவோ, இருங்கப்பா… இப்போ பேசி சரி பண்ணிடலாம்… நான் அம்மாவை கூட்டிட்டு வரேனென்று அவரை இழுத்து உள்ளே வந்தான்.

“விடுடா… உங்க அப்பாவுக்காக என்ட பேசாத சொல்லிட்டேன்… நான் அவரோட பேசல…”

“ம்மா… என்னமா நீங்க… பாருங்க நீங்க அப்பாகூட பேசாம, அவரு மூஞ்சியே ஒளி குறைச்சது மாறி இருக்கு… நீங்களே பாருங்க” என்று பிட்டை போட,

தன் பையன் எதோ தன்னை பற்றி பெருமையாக பேசுவதாக வீரபாண்டியன் பார்க்க, இங்கிருந்தால் சிரித்து விடுவோமென்று, நைசாக அங்கிருந்து வெளியேறினாள், அவந்திகா.

கோமதி, “எங்கடா பெரியவன்?… அவனையும் கூப்பிடு, உங்க அப்பாவோட லட்சணத்தை அவனும் தெரிஞ்சிக்கட்டும்…”

“அவன் அண்ணியோட போயிருக்கான்… அவன் வரும் போது வரட்டும்… நீங்க சொல்லுங்க… பாருங்க, அப்பாவை உங்க முகத்தையே பாக்குறாங்க…”

“கல்யாணமாகி இதனை வருதசத்துல, உங்க அப்பாகிட்ட நான் ஏதாவது மறச்சிருக்கேனானு கேளுடா…”

“அப்பா சொல்லுங்க… கல்யாணமாகி எத்தனை வருஷமாகுதுன்னு?”

அவரோ பரிதாபமாக மகனை பார்க்க,

மகனோ “இந்த புள்ளையும் பால்குடிக்குமான்னு பாக்குறாரு பாரேன்…” என்று மனத்தில் நகைக்க, வெளியே “என்னப்பா… தெரியலையா?… சரி விடுங்க…” என்றுவிட்டு, “நீங்களே சொல்லுங்கம்மா…”

“பாருடா… இதுகூட தெரியல…இதை நான் என்னனு சொல்லுறது..” என்று புகாரளிக்க,

“கோமு…”

“நீங்க பேசாதீங்க… உங்க தங்கச்சிக்கு நான் பண்ணவேணாம்னு என்னைக்காவது சொல்லிருக்கேனா, கல்யாணமாகி முப்பத்தாறு வருசமாச்சு… இல்ல, நீங்க பண்ணவர்றதை தான், தடுத்துருக்கேனா?… தெரியாம கொடுத்ததும் இல்லாம, என்கிட்ட சொல்லவேணாம்னு பெரியவன்கிட்ட சொல்லிருக்கீங்க… இதுக்கு என்ன அர்த்தம் அப்போ?”

“கோமு… நான்..” என்று பேச வர,

“நீங்க பேசாதீங்க… இத்தனை வருசத்துக்கு அப்பறம், அவளோட குணம் என்னனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு, அதுனால, நான் தப்புபண்ணிட்டேன்னு என்கிட்ட வந்து சொல்லுறீங்க… அவளைப்பத்தி கடைசி வரைக்கும் தெரியாம உங்களுக்கு இருந்திச்சின்னா, நீங்க கடைசி வரைக்கும் என்கிட்டே சொல்லிருக்கமாட்டீங்க… அப்படித்தானே?…”

“எப்படிம்மா… அப்பா கண்டுபிடிச்சாங்க?…”

“உனக்கும் தெரியுமா நல்லவனே?… என்கிட்ட சொல்லிருக்கலாம்ல…” என்றார் ஆதங்கமாக,

“அவன் சொல்லிருந்த நீங்க நம்பிருப்பிங்களா?… உங்க அப்பா அவங்க சின்ன தங்கச்சி தனியா இருக்குனு பாக்கப்போயிருக்காருடா… அப்போ அவளும், அது பெத்ததும், சதிராலோசனைல ஈடுபட்டருக்காங்க… அப்போ தான் அருமை தங்கச்சியோட வண்டவாளம் தெரிஞ்சிருக்கு… அவளோட திருவிளையாடலெல்லாம் வெளில வந்திருக்கு…”

“எதோ தங்கச்சின்னு பாக்காம அல்லிக்குடுத்துட்டேன்… இனிமே என் மூஞ்சிலயே முழிச்சிடாதான்னு சொல்லிட்டு வந்துட்டேன்… தங்கச்சியா பொறந்துட்டா… வேற நான் என்ன பண்ணனும்னு சொல்லு..”

“நந்தாவுக்கே தந்தை பேசுறது ஆச்சிரியமாக இருந்தது… தான் செய்தது தப்பென்று தெரிந்தவுடன், அதை மறைக்காமல் அன்னையிடம் சொல்லியது வியப்பாக இருந்தது…” என்று அவரைப்பற்றி பெருமையாக நினைத்து இவர்கள் பேசட்டுமென்று வெளியேறினான்.

“நீங்க அல்லிகுடுத்ததுக்கு நான் ஏதும் சொல்லல… என்கிட்ட ஏன் மறைச்சிங்க?…”

“இனிமே உன்கிட்ட சொல்லிட்டு பண்ணுறேன் கோமு…”

“பேரன் பேத்தி எடுக்குற காலத்துல வந்து சொல்லுங்க… இப்போ கேளுங்க என்ன பண்ணனும்னு… நான் இவனுக்கே அவளோட சின்ன பொண்ணை வேணாம்னு சொன்னேன்… நீங்க என்னனா சுரேஷுக்கு ஒத்துவருதா பாக்கலாம்னு பேசிருக்கீங்க…”

“அதையெல்லாம் விடேன் கோமு… நாந்தான் தெரியாம, தங்கச்சி வாழ்க்கைல நம்மால கஷ்டபடுதோனு யோசிச்சி பண்ணிட்டேன், பேசிட்டேன்… நீயே சொல்லிட்டல்ல, நமக்கு பேரன், பேத்தி வரபோற நேரத்துல இப்படியா நாம சண்டை போடணும்… வா வந்து எனக்கு உன் கையாள பரிமாறு கோமு… பசிக்குது…” என்று அவரை பார்த்து சிரித்தபடி தரையில் அமர்ந்தார்.

“இப்போதான் இளமை திரும்புது மனுஷனுக்கு… கோமுவாம் கோமு…” என்று நொடித்தபடி பரிமாறச் சென்றார்.

– – – – –

வாழை களையெடுப்பதை பார்த்துக்கொண்டிருந்த நந்தாவை பார்த்து, இங்க என்னடா நீங்க பண்ணுறிங்க?… என்று தம்பியை பார்த்துக் கேட்க,

“நீ அண்ணியோட இருக்கல்ல… அதுமாறித்தான்…”

“அப்போ அம்மா எங்க…”

“ஏன்டா ஏன்… அம்மா அப்பாகூட இருக்காங்க…. அண்ணி இவனை எங்கயாச்சும் தள்ளிட்டு போங்க… எப்படியும் அவன் செய்ய போறது இல்ல…”

பெண்கள் இருவரும் சிரிக்க, “கொஞ்சமாது..” என்று ராஜா ஆரம்பிக்க,

அவந்தி முந்திக்கொண்டு, “அத்தான் ஏதும் சொல்லிடாதீங்க…”

நந்தாவோ அவளை பார்த்து “உஷாரு… ” என்றுவிட்டு  சிரிக்க,

“என்னமா இவன் உன்னைய ஏதாச்சும் சொல்லுறானா?…” என்று வேறு கேட்க,

இதனை பார்த்த காவியாவோ, தலையில் தட்டிக்கொண்டு… பேச்சை மாற்றும் விதமாக, “போங்க… நீங்களும் அவங்களோட சேர்ந்து மண்வெட்டி புடிச்சி களையெடுங்க… உங்களுக்கு தெரியுதான்னு பாக்குறேன்…”

“ஏண்டி… எனக்கு தெரியாதா?”

“அப்போ போயிட்டு எடுங்க?…”

“டேய்…வா… நீயும் இவ்வளோ பேசுறல்ல… ” என்று தம்பியையும் இழுத்து சென்றான்.

இருவரும் மண்வெட்டி வைத்து களையெடுக்க, நந்தாவின் காலை பதம்பார்த்தது, மண்வெட்டி.

– – – – –

இரவு வீட்டில், இவன் இப்படிதான் ம்மா… எதையாவது ஒண்ணா இழுத்து வருவான்… இப்போதான் கொஞ்சநாளா இல்லாம இருந்துச்சி… என்று அவந்தியிடம் சொல்ல,

நந்தா, “நான் என்ன வேணும்னே பண்ணமாறி சொல்லுறீங்க…”

“நான்தான் ம்மா… இழுத்து போனேன்…” என்றான் ராஜா.

“அவன் இழுத்து போனா, உனக்கு எங்க அறிவு போச்சி… உனக்கு தெரியதை எதுக்கு பண்ணுன… இந்தமாறி முன்னாடியும் நடந்திருக்குள்ள… அப்பறம் என்னடா…”

“விடுங்க ம்மா… ஒன்னும் இல்ல… ரெண்டுநாளுல சரி ஆகிடும்… இதுனால என் மாமியார் வீட்டுக்குத்தான் போக முடியாம போயிடுச்சி…”

“செய்யுற வேலையை பாத்துசெய்யணும்…இல்லனா இப்படிதான்…” இப்படிதான் அவந்தி, இவன் இங்க தஞ்சாவூர்ல படிக்கும் போது மண்டைல கம்பி கூத்திடுச்சினு தையல் போட்டுட்டு வந்தான்… அப்பறம் என்று அவர் இவன் அடிபட்டு வந்ததை எல்லாம் சொல்ல,

அவந்தியோ, திரும்பி நந்தாவை பார்க்க… அவனோ போச்சுடா… இவ கண்டுபிடிச்சிடுவாளோ? என்று பார்த்தான்.

சாரல் வருடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!