சின்னஞ் சிறு பூவே 21.2
பூவே 21.2
Advertisement
“ஏலே, என்னடா சின்னப்புள்ள கணக்கா கொழாவ மாட்டிட்டு சுத்திட்டு இருக்க?” என்றார் சாமிக்கண்ணு.
“இது கொழாவா டேய்? நல்லா கண்ணைத் திறந்து பாரு… பேண்டு! உனக்கு எங்கிருந்துடா இதெல்லாம் தெரியும்?” என்று எதிரே நின்றவன் சிரிப்போடே கேட்டான்.
Advertisement
Advertisement
“ஆமாடா, எனக்குத் தெரிஞ்சுதான். நான் பொண்ணு பார்த்து கட்டிக்கப்போறேன் பாரு. போவியா, வேலை வெட்டியைப் பார்த்துட்டு!” என்று சாமிக்கண்ணு கொஞ்சம் கடுப்போடே சொன்னார்.
“என்னடா, காண்டாகுதா?” என்று சிரித்து வைத்தான்.
Advertisement
சாமிக்கண்ணுவின் பார்வை மொத்தமும் எதிரே இருந்தவன் மேல்தான் இருந்தது.
“என்னவே… உள்ளுக்குள்ள என்ன நினைப்பு இருக்கோ?” என்றவன் சிரிச்சுக்கிட்டே, சாமிக்கண்ணுவின் தோளில் கை போட்டான்.
தோளில் இருந்த கையை எடுத்துவிட்டு, “உனக்கும் என் வயசுதான்ல? அப்படி இருக்கும்போது, நீ எப்படிடா இப்படி எல்லாம் சுத்துற?” என்று சாமிக்கண்ணு புருவம் சுருக்கினார்.
“அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்ல!” என்று அவன் சிரித்துக்கொண்டே, சாமிக்கண்ணுவின் இடுப்பில் கிள்ளினான்.
“ஏய்! கண்ட இடத்துல கை வைக்காதே. கூச்சமா இருக்கு!” என்று துள்ளி எழுந்தார் சாமிக்கண்ணு.
எதிரில் இருந்தவன்
வாய்விட்டு சிரித்தான்.
“சரி, சரி… உன் இடுப்பை நீயே வச்சுக்கோ. நீ வந்த சேதி என்ன? அதை சொல்லு,” என்றான்.
“அட ஆமா… சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரு!” என்று தலையில் தட்டிக்கொண்டார்.
“தலையில அப்புறம் கை வச்சுக்க. முதல்ல சேதியைச் சொல்லு,” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“சாமி, நீ இங்கேயே இரு. நான் வெளியே போயிட்டு வரேன்,” என்று அவன் சொல்லிக்கொண்டு எழுந்தான்.
“ஏய், இரு. என்னை தனியா விட்டுட்டு எங்க போற? இந்த ஓட்டலு எல்லாம் சரிபட்டு வராது!” என்று சாமிக்கண்ணு பயத்தோடே சொன்னதும்,
“அடேய்… இங்க யாரும் வர மாட்டாங்க. இது எனக்குத் தெரிஞ்சவங்க ஓட்டல்தான். கொஞ்ச நேரத்துல வந்துட்றேன். அதுவரை இதைக் குடி,” என்று ஒரு பீர் பாட்டிலை அவன் கையில் திணித்தான்.
“ஏய்… என்னடா இது? இத்தாதண்டி பாட்டில் இது?” என்று மூடியைத் திறந்து மோப்பம் பிடித்த உடனே, சாமிக்கண்ணுவின் கண்கள் மங்கத் தொடங்கின.
இங்கு அவன் அரக்கப் பறக்க ஓடி வந்து, கீழே இருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்தான்.
“என்னய்யா, இன்ஸ்பெக்டர்? உனக்கு கொடுத்த வேலை என்னாச்சு?” என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் வந்தவன்.
“அது நீங்க சொன்ன மாறி சரிய்யா செஞ்சிட்டேன். இந்த தடவை நீங்க பணம் கூட கொடுக்கணும்,” என்றான் அந்த காக்கி சட்டையுடன் இருந்தவன்.
“அதெல்லாம் கைக்கு மேல வரும். முதல்ல விஷயத்தை முழுசா சொல்லு,” என்று இருக்கையில் அமர்ந்தான்.
“சார், நீங்க கொலை பண்ண பொண்ணு, கால் தவறித்தான் கிணத்துல விழுந்து, மூச்சு திணறி இறந்து போனதா டாக்டர் கிட்ட சொல்லி, ரிப்போர்ட் கொடுத்து கேஸ் ஃபைலை மூடிட்டேன் சார்,” என இன்ஸ்பெக்டர் சொன்னதும்,
அவனை நிமிர்ந்து பார்த்தவன், “உண்மையா?” என்று சந்தேகமாக கேட்டுக்கொண்டே, தன் வலது காலை தூக்கி இடது காலின் மேல் போட்டவன், சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
“இங்க பாருங்க சார். நா ஒருத்தரை காப்பாத்தனும்னு நெனைச்சா, கடவுளே வந்தாலும் அவங்களை தண்டிக்க முடியாது சார். அந்தளவுக்கு என் கை சுத்தம்,” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும்,
“கோவிச்சாகாதைய்யா. எனக்கு ஒரு விஷயம் முடிஞ்சா, முடிஞ்சதுதான். அது தெரியாமைய்யா இத்தனை வருஷம் நா இப்படி இருக்கேன்னு,” சொல்லி, தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஆயிரம் ரூபாய் நோட்டை பத்து தாள் எண்ணி வைத்தான்.
அதை பார்த்தவன் கண்கள் ஆசையில் மின்னின.
“இது மொத்தமும் எனக்கா சார்?” என்றான் ஆசையுடன்.
“உனக்குத்தான்யா. எடுத்துக்கோ,” என்றதும்,
மொத்தத்தையும் கைகளில் அள்ளிக்கொண்டான்.
“சரிய்யா, நா வரேன்,” சொல்லி எழுந்தான்.
“சார், இது மட்டும் தானா?” என்று தலையை சொறிந்தான்.
“நீ கேட்ட நாட்டு கட்டை, நா வெளியே போன நேரம் வரும்யா,” என்று நகரப் போக,
“சார், ஒரு நிமிஷம்,” என்றான்.
“இன்னும் என்னையா?” என்று சலித்துக்கொண்டான்.
“அது எனக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க சார். இனிமே நீங்க எது பண்ணுறதா இருந்தாலும், ஜாக்கிரதையா பண்ணுங்க சார்,” என்றதும்,
கொஞ்சம் யோசித்தவன், “சரிய்யா, எந்த ஊருக்கு போற?”
“அது குண்ணகபூன்டி சார்.”
சிரித்தவன், “சரிய்யா. அந்த ஊரை தாண்டி எனக்கு வேண்டப்பட்டவங்க நிறைய பேர் இருக்காங்க. உன் உதவி தேவைப்பட்டா சொல்லுறேன். செஞ்சு கொடு,” என்று இவன் வெளியேறியதும்,
கண்டாங்கி புடவையும், தலையில் மல்லிகைப்பூவும் வைத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.
அறைக்குள் வந்தவள் மீது மையலாக பார்த்துக்கொண்டே, அவளை நெருங்கினான் அந்த இன்ஸ்பெக்டர்.
இங்கு அறைக்குள் வந்தவன், சாமிக்கண்ணு இருக்கும் நிலையை கண்டு தலையிலே அடித்துக்கொண்டான்.
“ஏலே, மோப்பம் பாத்ததுக்கே இந்த நிலையா?” எனக் கேட்டுக்கொண்டே, அவன் கையிலிருந்த பாட்டிலை வாங்கினான்.
“டேய்… சிவம், கொடுய்யா,” என்று உளறினான்.
இவனைப் பல்லைக் கடித்து, குடிக்க வைத்திருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து சாமிக்கண்ணு முகத்திலே ஊற்றினான்.
“ஹா… மழை! மழை! கொடை கொண்டு வாங்கடா!” என்றவன், இடுப்பிலே தன் வலது காலால் எத்திவிட்டான்.
“ஐய்யோ அம்மா!” என்று கத்திக்கொண்டே, படுக்கையிலிருந்து கீழே விழுந்திருந்தார்.
வலியில் போதை தெளிந்து, கண்களை சிமிட்டி, “ஏலே சிவம், எப்படிய்யா இருக்கு?” என்று எதிரே இருந்தவன் முகத்தை தொட்டு கேட்டார்.
“எருமை! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாண்டா பார்த்த. இப்ப வந்து நலம் விசாரிக்குற!” என்று தன் முகத்தில் இருந்த அவன் கையை தட்டிவிட்டான்.
“எது எருமையா? அது நீ தாண்டா. என்னையை தனியா விட்டு நீ எங்க போன?” என்று தண்ணீரில் நனைந்ததால், போதை தெளிந்து அமர்ந்தார் சாமிக்கண்ணு.
“அதை விடு. நீ வந்த சேதி என்ன? அதை சொல்லு,” என்று அவன் பக்கம் முகத்தை திருப்பினார்.
“அட, அதை மறந்துட்டேன் பாரு,” என்று தன் தலையிலே தட்டிக்கொண்டு, பள்ளிக்கூட விழாவில் தேவகியை பார்த்ததில் ஆரம்பித்து, இன்று காலை வெற்றி வீட்டில் வேல்விழி வயசுக்கு வந்தது வரை சொல்லி முடித்தார்.
எதிரே இருந்தவன் முகம் வெப்பாங்காயின் கசப்பை காட்ட, “நீ சொல்லுறது நிசம்தானே?” என்றான் சிவம்.
“நா பொய் சொல்லுவனா? எங்க ஆத்தாமேல சத்தியம் பண்ணக்கூட நா தயார்,” என்றதும்,
“என்ன, அவளுக்கு திடீர்னு பொண்ணு மேல பாசம்?” என்று முகத்தை சுழித்தான்.
“அது ரொம்ப நாளாவே இருக்கு போல. என் கண்ணுக்கு இப்பதான் அகப்படுது, இன்னேரம் பொண்ணை பாக்க கூட வந்திருப்பாளாக்கும்” என்று சொல்லிக்கொண்டே, சரக்குக்கு தொட்டக்கவா வச்சிருந்த முட்டையை காலி செய்தார்.
“இது தானா? வேற சேதி இல்லையா?” என்றதும்,
“சொல்ல மறந்துட்டேன் பாரு. அந்த ராஜன் பையன் கூட வெற்றி பையனையும், அந்த சின்ன சிறுக்கியையும் மொறச்சிட்டு இருந்தான்,” என்று இன்னொரு முட்டையையும் முழுங்கினார் சாமிக்கண்ணு.
“ஏலே, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவே. தொண்டையில் சிக்கி மேல போயிடப் போற,” என்ற சிவத்தை,
“உனக்கு பொறாமவே. எங்க நமக்கு வைக்காம, எல்லாத்தையும் நானே திண்ணுடுவேன்னு,” என்று தட்டை கையில் எடுத்துக்கொண்டு,
பக்கத்தில் இருந்தவனுக்கு முதுகு காட்டி அமர்ந்தான்.
அவன் செயலில் சிரித்துக்கொண்டு, தன் பையிலிருந்த சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், கூடவே ஒரு பட்டன் கைப்பேசியையும் எடுத்தான்.
“சாமி, இனிமே என்னை பாக்க நேர்ல வராத. கொஞ்சம் மாசத்துக்கு நா இங்க வரமாட்டேன். எனக்கு வேற ஒரு வேலை இருக்கு,” என்றதும்,
இவன் சொன்னதை கேட்டு, வாயிலிருந்த முட்டை தொண்டையில் சிக்கிக்கொண்டு விக்கல் வந்தது.
“ஏய், பாத்து!” என்று அவன் தலையில் தட்டி, மண் பானையிலிருந்த தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தான்.
வாங்கி மடமடவென மேலும் கீழும் சிந்திக்கொண்டே குடித்ததில், சாமிக்கண்ணு சட்டையும் வேஷ்டியும் ஈரமானது.
“எருமை! சின்னபுள்ளை கூட ஒழுங்கா குடிக்கும்,” என்ற சிவத்தை முறைத்தான் சாமிக்கண்ணு.
“என்னடா, முறைப்பு பலமா இருக்கு” என்று அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்தான்..
“சீ தள்ளி போடா” என்று முகத்தை சுழித்து.. “மறுபடியும் எப்ப வருவ?” என்று முகம் பார்த்தார் சாமிக்கண்ணு..
“தெரியலடா, ஒரு வேலையா போறேன் அது முடிஞ்சதும் வருவேன்.. எதுவா இருந்தாலும் போன்ல சொல்லு. அந்த ராஜன் மேலையும் ஒரு பார்வை வை” என்றான்..
“அவனை வச்சு என்னடா பண்ணப் போற,”
“ஆடுபுலி ஆட்டம் தான்… இப்போ
யாரு ஆடு, யாரு புலின்னு யாருக்கும் தெரியாது. ஆனா, ஆட்டம் முடியும்போது புலி யாருன்னு எல்லாருக்கும் தெரியும்,” என்று மர்மமாக சிரித்தான் சிவம்.
