சின்னஞ் சிறு பூவே
8
Advertisement
சிலுசிலுவென வேப்பமரத்து காத்து ஜில்லுன்னு வீசவும், செய்த வேலைக்கு உடல் ஓய்வுக்கு கெஞ்ச, அப்படியே அந்த புல்தரையில் கண்களை மூடினான் வெற்றி..
Advertisement
அருகிலிருந்த மாறனோ, காத்துல கைகளால் படம் வரைந்துக்கொண்டிருந்தான்..
Advertisement
இவன் செய்கை தெரிந்தாலும், மூடிய விழிகளை திறப்பேனா என்று இவனும் இருக்க..
Advertisement
பொறுமையை களவு கொடுத்தவனோ! “அடேய், ஒருத்தன் ஒரு மணிநேரமா காத்துல படம் வரையுறேனே! எங்கன்னா வாயை திறந்து கேட்குறீயாடா நீ?” என்று, கண்களை மூடியிருந்தவன் கைகளை தட்டி விட்டான்..
“ம்ப்ச்” என்ற சலிப்புடனே எழுந்து அமர்ந்தான் வெற்றி. “இப்ப என்னத்துக்குடா என்னை உசுப்பிட்டிருக்க?” எனக் கேட்டுக்கொண்டே எழுந்து அமர்ந்தான்…
“ஏண்டா, சொல்லமாட்ட? ஊர் முழுக்க பெரியாத்தா கதைதான் பெருங்கதையா இருக்கு.. நீ என்னடான்னா அசால்ட்டா இருக்க” என்றான் மாறன்..
“அப்படியென்ன சாகசத்தை பண்ணிடிச்சு அப்பத்தா?” என்றவன் பார்வையை வயல் பக்கம் திருப்பினான்..
அங்கே சேடை ஓட்டிருந்த பகுதியில் சில கொக்குகள் புழுவை கொத்திக்கொண்டிருந்ததை கண்டான்..
அருகிலிருந்த தட்டில் குச்சியை கொண்டு சத்தம் எழுப்ப, சத்தம் கேட்டு அந்த கொக்குகளும் பறந்து சென்றது..
“டேய், உன் கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா!”
“இப்ப எதுக்குடா நீ புலம்பிட்டு இருக்க? உனக்கு வேலை வெட்டி இல்லையா?” என்று நண்பனை முறைத்து பார்த்தான்..
“அது கெடக்கு கொள்ள வேலை. நீ என் கேள்விக்கு பதில் சொல்லு.. இத்தனை வருஷம் இல்லாம, இப்ப எதுக்கு பெரியாத்தா கோவிலுக்கு போக நெனைச்சிது?” என்றான்..
நீண்ட மூச்சை இழுத்து விட்டவன்… “அப்பத்தாவுக்கு பயம்டா…”
“என்னடா சொல்லுற? பயமா? ஆனா ஏன்? இத்தனை வருஷம் இல்லாம இப்ப எதுக்காக பயம்?” என்றான் புரியாமல்..
“வேல்விழி…” என்றான் ஒரு வரியில்..
“அந்த புள்ளை என்னடா பண்ணுச்சு?” என்று இன்னும் புரியாமல் கேட்டான்..
வெற்றி முகத்தில் ஒருவித சோகம் தெரிந்தது… உடனே பதில் சொல்லாமல், தூரத்தில் காற்றில் அசைந்த நெற்பயிரை பார்த்தபடியே இருந்தான்.
“டேய்… என்னடா அமைதியா இருக்க?” என்று மாறன் மீண்டும் உசுப்பேற்ற,
“வேலு வளர்ந்துட்டாடா…”
என்றான் மெதுவாக. அந்த ஒரு வார்த்தையிலேயே ஏதோ இருந்தது.
“அதுக்கென்னடா இப்ப?” என்று புரியாமல் கேட்டான் மாறன்.
“அது தான் அப்பத்தாவுக்கு பயம்…” என்றவன்,
அருகிலிருந்த மண்ணை விரல்களால் கிளறினான்.
“என்ன பயம்?”
“அவளை எப்படியாவது இந்த வீட்டுக்குள்ளேயே நிரந்தரமா இருக்கணும்னு…”
மாறன் கண்களை சுருக்கினான். “அதுல என்ன தப்பிருக்குடா? சொந்தத்துல தானே?” என்றவன் வாக்கியம் முடிவு பெறாமல் நின்றது..
வெற்றி சிரித்தான்… ஆனா அந்த சிரிப்புல சந்தோஷம் இல்லை. “சொந்தமெல்லாம் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது டா…”
“என்னடா புதிர் போடுற?” என்று எரிச்சலானான் மாறன்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “அப்பத்தா ஆசை… வேலுவை எனக்கே கட்டி வைக்கணும்னு…”
மாறன் ஆனந்த அதிர்ச்சியாய் அவனை பார்த்தான். “டேய்…”
“ஆனா…” என்று சொல்லிவிட்டு பாதியில் நிறுத்தினான் வெற்றி.
“ஆனா என்னடா?” என்றான் சலிப்பாக, சந்தோஷமான செய்தியை கேட்டு மகிழவிடாமல், ஒரு ‘க்’ வைக்கிறானே! என்ற கடுப்பில்..
“அந்த புள்ள இன்னும் சின்ன புள்ளடா…” அவன் குரலில் இருந்த நடுக்கம் மாறனுக்கே புதிதாய் இருந்தது.
“நீயும் அந்த புள்ளையை அப்படிதானே பார்க்குற, அப்பறம் என்னடா?” என்று நேராக கேட்டான்.
வெற்றி உடனே பதில் சொல்லவில்லை. காற்று மட்டும் இருவருக்கும் நடுவே ஓடியது. சிறிது நேரம் கழித்து, “அதுதான் பிரச்சனைடா…” என்றான் மெதுவாக.
“என்னடா சொல்லுற? எனக்கு ஒன்னும் புரியல?” என்று தலையை பிடித்துக் கொண்டான்..
வெற்றி கண்களை மூடி பின்னால் கைகளை ஊன்றிக்கொண்டான்.
“நேத்து வரைக்கும்… அவ என் பின்னாடி ஓடி திரிஞ்ச குட்டி புள்ளை மாதிரி தான் இருந்தா… ஆனா இப்ப…” என்று சொல்லி நின்றவன், தன்னையே கடிந்து கொண்டான்..
“இப்ப என்ன?”
“இப்ப அவ என்னை பார்த்தா… எனக்கு நிம்மதியா இல்லடா…”
மாறன் அவனை சந்தேகமாக பார்த்தான்.
“டேய் வெற்றி…” என்று மெதுவாக அழைத்தவன், “நீ அந்த புள்ள மேல…” என்று ஆரம்பிக்க,
“தெரியலடா!” என்று திடீரென்று குரலை உயர்த்தினான். கண்களில் ஒரு வித குழப்பம் தெரிந்தது.
“அதான் பயமா இருக்கு… எனக்கே என்ன நெனப்பு வருதுன்னு புரியல… அவ என்னை ‘மாமா’ன்னு கூப்பிடுற ஒவ்வொரு தடவையும்…” என்று சொல்லிவிட்டு தலையை குனிந்தான்.
அவன் மெதுவாக சிரித்தான்.
“நேத்து அந்த குதிர்ல நெல்லு எடுக்கும்போது… ஒரு நொடி…” என்று சொல்லிவிட்டு வார்த்தையை விழுங்கினான்.
“என்னாச்சு?” என்று மாறன் ஆர்வமாக கேட்டான்.
“ஒன்னுமில்லைடா…” என்று தவிர்த்தவன் எழுந்து நின்றான்.
ஆனா மாறன் விடவில்லை.
“டேய் சொல்லிட்டு போடா!”
வெற்றி அவனை திரும்பி பார்த்தான்.
“அந்த புள்ளை என் மேல விழுந்துச்சு…”
“அடப்பாவியே!” என்று சிரிப்பை அடக்க முடியாமல் மாறன் வயிற்றை பிடித்தான்.
“சிரிக்காதடா!” என்று முறைத்தவன், “அவளுக்கு ஒன்னுமே தெரியாது… ஆனா எனக்கு…” என்று சொல்லிவிட்டு நின்றான்.
“அதான் சொல்றேன்… எனக்கு நானே சரியில்லடா.”
மாறன் இப்போது சிரிப்பை நிறுத்தினான்.
“வெற்றி…” என்று சீரியஸாக அழைத்தவன், “நீ எதையும் அவசரப்படாத. அந்த புள்ள மனசுல என்ன இருக்குன்னே இன்னும் தெரியாது.”
“அதான் நான் எதுவுமே காட்டிக்க மாட்டேன்டா…” என்றான் உடனே.
“ஆனா மனசு கேக்கணுமே…”
அந்த வார்த்தை அவன் வாயிலிருந்து தானாக வந்தது.
மாறன் அவனை சில நொடிகள் அமைதியாக பார்த்தான்.
“வெற்றி… நீ மனசுக்குள்ள எவ்வளவு போட்டுக்கிட்டாலும், ஒரு விஷயம் மட்டும் மறந்துடாத.”
“என்ன?”
“அந்த புள்ளை உன்னை உலகமேன்னு நம்புறா…”
அந்த வார்த்தை வெற்றியை அமைதியாக்கியது.
“அதனால தான் பயமா இருக்கு டா…” என்றான் மெதுவாக.
மாறன் எழுந்து அவன் தோளில் கை போட்டான்.
“சரி… இப்பவே எதையும் யோசிச்சு தலையை உடைக்காத. காலம் போகப் போக எல்லாம் தெளிவாகும்.”
அந்த நேரம் தூரத்திலிருந்து,
“வெற்றிண்ணா!” என்று ஒரு குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தவன், வரப்பை தாண்டி ஓடிவந்த சிறுவனை பார்த்தான்.
“என்னடா?”
“உங்க வீட்டுல இருந்து கூப்பிடுறாங்க ண்ணா… பெரியாத்தாவுக்கு கால் ரொம்ப வலிக்குதாம்.”
அதை கேட்டதும் வெற்றியின் முகம் மாறியது.
“சரி… நீ போ. நா வரேன்.” என்று சொல்லிவிட்டு வேகமாக, அங்கே நிறுத்தியிருந்த தன் மோட்டர் பைக்கை எடுத்தான்..
வெற்றி பின்னே மாறனும் அமர்ந்துக்கொண்டான்..
வண்டியை ஸ்டார்ட் செய்ய பதட்டத்தில், சாவியை கூட சரியாக போட முடியவில்லை அவனால்.
நண்பனின் பதட்டம் கண்டவன், “வெற்றி, நீ பின்னாடி வா… நா வண்டி எடுக்குறேன்.” என்றான்..
நண்பனிடம் வண்டியை கொடுத்தவன், அப்படியே பின்பக்கம் நகர்ந்து அமர்ந்தான்அடுத்து பதினைந்து நிமிடத்தில் , வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி இருவரும் வீட்டுக்குள் வந்தவர்கள் கண்டது ..
திண்ணையின் சுவரின் சாய்ந்திருந்த மயிலம்மா வலியில் முகத்தை சுருக்கினார்..
அவரின் கால் வீக்கத்துக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தார் காளியம்மா, “அத்தை தம்பி வந்ததும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துடலாம்..
” ஏட்டி, அவனுக்கு தாக்கல் சொல்லி விட்டியா நீ” என்று சொலாலிக்கொண்டிருந்த நேரத்தில், தான் உள்ளே ஓடி வந்தான் வெற்றி.
“என்னம்மா ஆச்சு?” என்று பதட்டமாக கேட்டவன், அவரின் காலை பிடித்து பார்த்தான்.
வீக்கம் இன்னும் அதிகமாகி இருந்தது.
“ஒன்னுமில்லய்யா…” என்று சொல்ல முயன்றவரை முறைத்தான்.
“இதுக்கு மேலயும் ஒன்னுமில்லன்னு சொல்லாத. கெழவி” என்றான் கோவமாக,
“எய்யா… சும்மா வலிக்குதுய்யா…”
“அதான் ஆஸ்பத்திரிக்கு போவோம்.” என்றான் முடிவாக.
“வேணாம்யா…” என்று மயிலம்மா சொல்ல,
“அப்பத்தா , பிடிவாதம் பிடிக்காத.” என்றவன், “மாறா! வண்டிய எடு.” என்று நண்பனை பார்த்தான்.
அவன் குரலில் இருந்த பதட்டத்தை பார்த்த மயிலம்மாவுக்கே மனசு கலங்கியது…“எய்யா… இதுக்கெல்லாம் எதுக்குய்யா ஆஸ்பத்திரி?” என்று மயிலம்மா இன்னும் முணுமுணுத்துக்கொண்டே இருக்க,
“அப்பத்தா , நீ பேசாம இரு.” என்று சற்றுக் கடிந்து சொன்னவன், மெதுவாக அவர் காலைத் தூக்கிப் பார்த்தான்.
வீக்கம் கண்கூடாக அதிகரித்திருந்தது.
“பாரு… காலே தரையில ஊன முடியல. இன்னும் வீட்டுலயே உட்கார்ந்திருக்கணுமா?” என்றான்.
அவர் பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டார்.
அந்த நேரம் உள்ளே இருந்து ஒரு துண்டை கொண்டு வந்தார் காளியம்மா. “இந்தாய்யா… கால்ல கட்டிடு.”
வெற்றி அதை வாங்கிக்கொண்டு மிகவும் கவனமாக மயிலம்மாவின் காலை சுற்றிக் கட்ட ஆரம்பித்தான்.
அவன் கைகளின் மென்மையை பார்த்த மயிலம்மா, “நா ஒன்னும் இத்தனை பெரிய நோயாளி இல்லய்யா…” என்று மெதுவாக சொன்னார்.
“நீ பேசுறதுக்கு தான் தெம்பு இருக்கு.” என்று சொல்லியவன் கட்டி முடித்தான்..
அந்த நேரம் வாசலிலிருந்து, “வெற்றி… வண்டி எடுத்துட்டு வந்துட்டேன்.” என்றான் மாறன்.
“சரி.”
வெற்றி மெதுவாக மயிலம்மாவை எழுப்ப முயன்றான்.
“இரு… நா எழுந்துக்கறேன்…” என்றவர் வலியில் முகம் சுருக்க,
“அம்மாடி…” என்று தானாக வாய்விட்டார்.
அதை கேட்டவனின் முகமே இறுகிப் போனது.
“மாறா… ஒரு கை பிடி.” என்றான்.
இருவரும் சேர்ந்து மயிலம்மாவை மெதுவாக தூக்கி வாசல் வரை கூட்டிக்கொண்டு வந்தனர்.
அந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு பெண்களும் வாசலுக்கு வந்துவிட்டனர்.
“என்ன பெரியாத்தா… ஆஸ்பத்திரிக்கா?” என்று சரளா கேட்க,
“இந்த பயலுக்கு பயம் அதிகம்… லேசா கால் வீங்குனதுக்கே இப்படி பதறுறான்.” என்று மயிலம்மா சிரிக்க முயன்றார்.
“அட அது நல்லதுதானே அத்தை… பேரன் இப்படி பாத்துக்குறது கொடுப்பினை.” என்றார் இன்னொருவர்.
அதை கேட்ட மயிலம்மா முகத்தில் பெருமை தெரிந்தது.
வெற்றி மட்டும் எதுவும் பேசாமல், அந்த மினி டிராக்டரில் “மெதுவா ஏறு.” என்று சொல்லி அவரை வண்டியில் அமர வைத்தான்..
மாறன் வண்டியை ஸ்டார்ட் செய்ய, “அம்மா, அக்கா யாராவது கூட வாங்க” என்று காளியம்மாவை பார்த்தான் வெற்றி.
“நாங்க எதுக்குடா?” என்று சரசு கடுப்பாக கேட்டார்…
“அப்பத்தாவை தூக்கி இறக்க ஆள் வேணும்ல.”
அதற்குள் காவ்யா “நா, வரட்டுமா மாமா?” என்றாள்
வெற்றி ஒரு நொடி யோசித்தான்.
“வேணாம் காவ்யா… நீ வீட்டுல இரு. பள்ளிக்கொடம் விட்டு வேலு வந்ததும். அப்பத்தாவை கேட்டா, பொறுமையா எடுத்து சொல்லு”,
வேல்விழி நினைவு வந்ததும், அவன் குரல் தானாக மெதுவானது.
“அவ வந்தா… பயப்படாம இருக்க சொல்லுங்க.” என்றான்..
அதை கவனித்த காளியம்மாவின் கண்கள் ஒரு நொடி மகனை ஆராய்ந்தது… ‘இவன் என்ன இந்தநிலமையிலும் அவளுக்குன்னு பாக்குறான்’ என்ற யோசனை ஓடிய நேரத்தில் ,
“சரி… நேரமாச்சு. கிளம்பலாம்.” என்று சொல்லியவன், வண்டியின் பின்புறம் ஏறி மயிலம்மாவை தாங்கியபடி அமர்ந்தான்.
மாறன் வண்டியை மெதுவாக நகர்த்த, வாசலில் நின்றிருந்த பெண்கள், “பாத்து போங்கய்யா…” என்று சொல்லிக்கொண்டே பார்த்தனர்.
மருத்துவமனைக்கு போகும் வழியெல்லாம் மயிலம்மா மட்டும் பேசிக்கொண்டே இருந்தார்.
“எய்யா… இவ்வளவு தூரம் கூட்டிட்டு போற அளவுக்கு எனக்கு ஒண்ணும் இல்லய்யா…”
“கெழவி, கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு வர்றியா?” என்று வெற்றி கடுப்பாகச் சொன்னான்.
அதைக் கேட்ட மாறன் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
“டேய் மாறா! நீயும் சிரிச்சிக்கிட்டு வண்டி ஓட்டாத.” என்றவன் முறைக்க,
“சரிடா சரி…” என்று வாயை மூடிக்கொண்டான்.
ஆனா, அவன் முகத்தில் சிரிப்பு இன்னும் இருந்தது.
அங்கே வீட்டிலோ…
பள்ளிக்கொடம் முடிந்து வீட்டுக்குள் வந்த வேல்விழி, “பாட்டி!” என்று கூப்பிட்டபடியே உள்ளே வந்தாள்.
ஆனால் திண்ணையில் மயிலம்மா இல்லாததை பார்த்ததும் நின்றுவிட்டாள்.
“பெரியம்மா… பாட்டி எங்க?”
பின்கட்டிலிருந்து தண்ணீர் கொடத்தை தூக்கிக்கொண்டு வந்த சரசு சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க.
“ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்க.”
அந்த ஒரு வார்த்தையிலேயே அவள் முகம் வெளிறிப்போனது.
“என்னாச்சு?” என்று பதட்டமாக கேட்டாள்.
“ஒண்ணுமில்ல … கால் வீக்கம் குறையல. அதான் என் தம்பி கூட்டிட்டு போயிருக்கான்.” என்றாள் வெடுக்கென்று , ‘நானே! இந்த கெழவி ஒன்னுக்கு போனதை கழுவ விட்டுட்டாஙகளேன்னு கடுப்புல இருக்கேன் வந்துட்டா , கேள்வி கேட்டுட்டு வெலங்காதவ’ என்று மனசுககுள்ளே திட்டியபடி திண்ணையில் தாண்ணீயை ஊற்றி கழுவி கொண்டிருந்தாள்..
“ரொம்ப வலிச்சுதா பெரியம்மா, பாட்டிக்கு?” என்று மெதுவாக கேட்டவளின் குரலே உடைந்தது.
அதை பார்த்த சரசு, “இப்ப எதுக்கு அழுகுற? கெழவிக்கு ஒண்ணும் இல்லை , நீ தனியா ஒப்பாரி வைக்காத.” என்றார்.
ஆனால் வேல்விழிக்கு மனசு அமைதியாகவில்லை.
அவள் மெதுவாக வாசலுக்கு வந்து நின்றாள்.
தெருவை பார்த்தபடியே நின்றவளுக்கு, வண்டி சத்தம் கேட்கும் போதெல்லாம் இதயம் துடித்தது.
‘பாட்டிக்கு ஒண்ணும் ஆகக்கூடாது…’
என்ற வேண்டுதல் மட்டும மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
இங்கு மருத்துவமனையில்…
“கால் சதை பெரண்டிருக்கு மாதிரி இருக்கு. பேன்டேஜ் போடுற மாதிரி இருக்கும்.. ஒரு மாசததுக்கு இவங்க ரொம்ப நடக்காம இருந்த போதும்.. சீக்கிரம் சரியாகிடும்” என்று மருத்துவர் சொல்ல,
உடனே, “அய்யோ… நா சொன்னேன்ல! ஆஸ்பத்திரி வேணாம்னு…” என்று ஆரம்பித்தார்.
“அப்பத்தா!” என்று வெற்றி அழைத்த குரலில் அதட்டல் இருந்தது.
டாக்டர் சிரித்தபடி, “பயப்படுற மாதிரி ஒண்ணுமில்லை. இந்த வயசுல கீழே விழுந்தா வரதுதான். கட்டு போட்டா சரியாகிடும்.” என்றார்.
அதை கேட்ட பிறகுதான் வெற்றியின் முகம் கொஞ்சம் தளர்ந்தது.
அவன் இவ்வளவு நேரம் உள்ளுக்குள் எவ்வளவு பயந்திருந்தான் என்று, அவனுக்கே அப்போது தான் புரிந்தது…மயிலம்மாவின் காலில் கட்டு போட்டுவிட்டு, “ஒரு மாதம் அதிகமா நடக்கக்கூடாது. கவனமா பார்த்துக்கணும்.” என்று மீண்டும் மருத்துவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
“சரிங்க சார்…” என்று எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான் வெற்றி.
“மருந்து நேரத்துக்கு போடணும்… வலி அதிகமா இருந்தா இந்த மாத்திரை.” என்று சீட்டில் எழுதிக்கொடுத்தார் மருத்துவர்.
அதை வாங்கிக்கொண்டவன், “சரி சார்.” என்று தலையாட்டினான்.
அருகில் அமர்ந்திருந்த மயிலம்மாவோ, “எனக்கு இவ்வளவு பெரிய வைத்தியம் பாக்குற அளவுக்கு ஒண்ணுமே இல்லய்யா…” என்று இன்னும் முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்.
“கெழவி… இப்பவாவது அமைதியா வர்றியா?” என்று வெற்றி கடுப்பாக சொல்ல,
“சரி சரி… பேசமாட்டேன்.” என்று குழந்தை மாதிரி வாயை மூடிக்கொண்டார்.
அதை பார்த்த மாறனுக்கு சிரிப்பு வந்தது.
மருந்து வாங்கிக்கொண்டு வெளியே வந்தவர்கள், வண்டியில் மீண்டும் ஏறினர்.
இரவு முழுக்க ஊர் அமைதியாக ஆரம்பித்திருந்தது. சில இடங்களில் மட்டும் மங்கலான மின் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
வண்டி ஊருக்குள் நுழையும்போதே, வாசலிலேயே நின்றிருந்த வேல்விழி கண்களில் பட்டாள் வெற்றிக்கு.
அவள் தெருவை பார்த்தபடியே நின்றிருந்தாள்.
வண்டி சத்தம் கேட்டதும் அவள் வேகமாக வாசல் வரை ஓடிவந்தாள்.
“பாட்டி!” என்று பதட்டமாக கூப்பிட்டாள்.
“எனக்கு ஒண்ணுமில்லத்தா…” என்று சொல்ல முயன்றார் மயிலம்மா.
ஆனா, காலில் போட்டிருந்த வெள்ளை கட்டை பார்த்ததும் வேல்விழி முகம் மாறிப்போனது.
“மாமா… ரொம்ப அடிபட்டிருக்கா?” என்று கண்கள் கலங்க கேட்டாள்.
வெற்றி மெதுவாக கீழே இறங்கினான்.
“ஒண்ணுமில்லை வேலு… லேசா சதை பெரண்டிருக்கு .”
“சதை பெரண்டிருக்கா?” என்று உடனே பயந்தாள்.
“ஏய்… இப்ப எதுக்கு கண்ணுல தண்ணீ வைக்க ?” என்று அவள் தலையில் லேசாக தட்டினான்.
“பாட்டிக்கு வலிக்கும்ல…” என்றாள் பாவமாக.
அந்த குரலை கேட்ட மயிலம்மாவே சிரித்துவிட்டார்.
“அடியே… அதுக்காக நீ அழுதா, என் கால்வலி காணாமா போகப்போகுதா என்ன”என்றார்..
அதற்குள் காளியம்மா, “சரசு! உள்ளே ஒரு தலையணை எடுத்துட்டு வா.” என்று குரல் கொடுத்தார்.
வெற்றி மெதுவாக மயிலம்மாவை தூக்கிக்கொண்டு திண்ணைக்குள் நடந்தான்.
அதை பார்த்த வேல்விழி,
“மாமா… பாத்து…” என்று அவனுக்கு பின்னாலேயே பதட்டமாக வந்தாள்.
அவன் அவளை திரும்பி பார்த்து சிரித்தான்.
“நா இருக்கேன்ல.”
அந்த ஒரு வார்த்தை…
அவள் மனசை ஏனோ அமைதியாக்கியது…
