Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 12 1

சீதா கல்யாண வைபோகமே..

  அத்தியாயம் -12



Advertisement

Advertisement

Advertisement

 தை  திருநாள்  அதிகாலை அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாட தயாராக…

Advertisement

அதிகாலை 3 மணிக்கே சீதாவை எழுப்பி, கிளம்பி இந்திரா சேனா பட  முதல்ல சோவுக்கு அழைத்து கொண்டு சென்றிருந்தான் ரவி.

முதல் சோ அதிகாலை நான்கு மணிக்கு தொடங்க  இருக்க..

அதுதான் அவனுக்கும் வசதி.. இருவரும் முகத்திற்கு மாஸ்க், கண்ணாடி அணிந்து தங்கள் முகத்தை மறைத்தபடியே. படம் ரிலீஸ்சாகும்  மாலிற்கு வர..

எந்த ஒரு ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த மால்.

எந்த  ஒரு முன்னனி நடிகர் படம் இல்லை என்பதால்.. கூட்டம் குறைவாகவே இருந்தது.. ஆனால் நிறைய பட போஸ்டர்கள் ஒட்டி இருந்தார்கள்..

சிவாவின் ரசிகர்கள் மட்டும் வந்திருந்தனர்.

சிலர் சோசியல்  மீடியாவில் படத்தின் ட்டெய்லரை பார்த்து வந்திருந்தனர்.. சிலர் பழயகாலத்து படம் போல இருக்கிறது.. புது டைரக்டர் என்று சிலர் அவரவர் யோசனை எற்ற வாறுபடம் பார்க்க வந்திருந்தனர்.

சீதாவுக்கு அதிகாலை  குளிர்  தாங்க முடியவில்லை,,. ரவியை திட்டிய படியே பைக்கின் பின்னாடி அமர்ந்திருந்தவள்.

“ஏன் ரவி இவ்வளவு காலையில் சோ பார்க்க கூட்டிட்டு வந்தீங்க,, தூக்கமா வருது”, என்றவள் கொட்டாவி விட்டபடியே வர..

“ஏய் படம் உன் படம், கொஞ்சமாவது ஆசை இருக்க உனக்கு “..

என்றான்.

“நான் ஏற்கனவே பல முறை பார்த்தாச்சு ரவி”.. என்றாள்.

“இருந்தாலும் முதல்ல சோ..  எனக்கு எப்படி த்திரிலிங்கா  இருக்கு தெரியுமா. அதுவும் அந்த  படத்தின் ஹீரோயின் கூட  சேர்ந்து படத்தை பார்க்க போறேன்.. செம்மா பீல் சீத் பேபி..

நீ என்னன்னா தூங்கிட்டு வர்ர”..

“ரவி குளிருது ரவி, தூக்கம் வேற வருது, நம்ம அடுத்த சோ போலாமே” என்றவளை முறைத்து பார்த்தவன்..

“உன்னை யாரவது பகல்ல பார்த்தா என்ன ஆகுறது சீதா. இந்த சோ தான் நமக்கு ஸ்சேப்”.. என்றவன்

“ஆமாம் உனக்கு  குளிருதுன்னு  சொன்னல” என்று

எதிரில் வந்த வைன் சாப்பை பார்த்து.. “சீத் பேபி ஒரு கட்டிங் வாங்கி தரவா. குளிருக்கு சும்மா சுடா இருக்கும்” என்று கூற.

“அட பாவி என்னை குடிகாரியா ஆக்க போறியா,, என்னை பார்த்தா குடிக்குற மாதிரியா தெரியுது”. என்றவளை.

திரும்பி பார்த்தவன் “இதுக்கு எல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டா” என்று  சிரிக்க..

 “ரவி” என்று அவனை பின்னாடி இருந்து மொத்தி இருந்தாள்.

படம் பார்க்கும் மால் வந்து விட..

யாருக்கும் அடையாளம் தெரியாமல் மால் உள்ளே நுழைந்தனர்.

ரவி இப்படியெல்லாம் படம் பார்க்க வந்ததே இல்லை.. அதுவும் அவன் தயாரித்த  படத்தை பார்க்க, ஏற்கனவே படத்தை பல முறை பார்த்தவனுக்கு.. சீதாவோடு  சேர்ந்து பார்ப்பது புது அனுபவம்  தானே..

ரவி அந்த  அனுபவத்தை அனுபவிக்க. சீதாவின் கைகளை பிடித்தபடியே அவர்களின் சீட்டை தேடி பிடித்து  அமற.

சீதாவுக்கு  படத்தை பார்க்க பயமா இருந்தது, நான் நடிப்பதை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா.

படம்  ஓடுமா என்று ஆயிரம் கேள்விகளோடு.. அமர்ந்திருக்க..

இந்திரா சேனாவின் முதல் சோ ஆரம்பமானது..

முதலில் பெருமாள் படம் வர.

ஆர், டி பிக்சர்  வழங்கும்..

இந்திரா சேனா என்று படத்தை டைட்டிலை  அந்த பெரிய ஸ்கிரின் பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது..

சில இளைஞர்கள் விசில் அடித்து கத்த.

படத்தில் நடித்தவர்களின் பெயர்கள் வர.

தன் பெயர் வருவதை ஆர்வமாக பார்த்தாள் சீதா..

இந்திரா சேனாவின் படத்தின் கதாநாயகி கீதா என்று அவள் பெயர்  வர.

சீதாவே  அவளை அறியாமல் கைதட்டியிருந்தாள் தன் பெயர் வருவதை பார்த்து,, அவளை போலவே ரவியும், கீதா என்று சீதாவின்  பெயர் வந்ததும் கைதட்ட..

அவனை பார்த்த சிரித்தவளை..

“படம் பார்க்கலாமா” என்றான்..

சீதா “ஊம்ம்ம்” என்று தலையாட்ட.

படத்தின்  முதல் காட்சிகள் வேந்தன் லீலாவதியோட, காட்சிகள் வர.

ரசிகர்கள்  அமைதியாக படம் பார்த்தார்கள்..

 கேமெரா மேன் ஜான் படத்தின் இயற்கையை காட்சிகளை அவ்வளவு அழகாய் படம் பிடித்திருந்தார்.

தேட்டரில் பார்க்க அழகாய் இருந்தது.

அடுத்த சீன் ராஜாவை  எதிரிகள்  காட்டில்  சூழ்ந்து கொண்டு தாக்கும் போது.. திடிரென்று கருப்பு குதிரை குழலிசை வரும் சீனில்,  ரசிகர்கள் குழலிசை  குதிரை வந்து ராஜாவை காப்பாற்றிய சீனில்   ஓ…. என்று கத்த…

சீதா ரசிகர்களை பார்த்தாள்.. அவர்களுக்கு பிடித்து சீன் வந்தால் கத்தி கொண்டிருந்தனர்.

அதே போல் கார்குழலி தூரத்தில் இருந்து அம்பு  விடும் சீன்லில் கூட ரசிகர்கள் கத்த,.

சீதா அனைத்தை கவனித்தபடியே பார்த்திருந்தாள்.

 அடுத்தது லீலாவதியிடம் ராஜா எனக்கு  குழலிசை திருமணம் முடித்து தாருங்கள் என்று கேட்க அதற்கும் விசில் சத்தம் ஒலித்தது..

 ரசிகர்கள் “டேய் ராஜா!  பொண்ணோட மாமியாரை  கவுத்துட்டியா” என்று கேட்டு சிரித்தனர்.

 பின்பு சிவராத்திரி அன்று கார்குழலியும்,,குழலிசையும்  சேர்ந்து  நடனமாடும் சீனை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்தனர் அதுவும் ராஜாவின் கண் ஜாடைக்கு குழலிசை செய்யும் பதில் பாவனைகளில் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்க..

பின்பு வீராசேனா குழலிசை குதிரையில் தூக்கி சொல்லும் சீனில் விசில் சத்தம் ஒலிக்க.

  ரவியை திரும்பி பார்த்தால் சீதா..

 ரவியும் அந்த சீனை  ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவன் சீதாவை பார்த்து சிரித்திருந்தான்.

 அவனுக்கு குழலிசை செய்யும் பாவனை  ரொம்ப பிடித்திருந்தது அதிலும் அவளில் ஜாடை பேச்சை ரசித்தவன், அவ்வப்போது சீதாவின் முகத்தையும் பார்த்துக் கொண்டான்.

 சீதா படத்தை பார்க்கவில்லை ரசிகர்கள் முகத்தில் தெரியும் பாவனைகளை  தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 போரில் இருவரும் சண்டை போடும் காட்சியை  ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.. குழலிசை இறந்தது ஐயோ என்று தலையில் கை வைத்தனர்…

பின்பு  கார்குழலி ராஜாவுக்காக போரில்  சண்டை போட அந்த சீனை ஆர்வமாக பார்த்தவர்கள் கைதட்டினார்.

பின்பு கார்குழலியும் இறந்து போகும் சீனிலில்  என்னடா இது இப்படி பண்ணிட்டாங்க இந்த டைரக்டர் என்று சிரஞ்சீவியை  திட்டினார்கள்..

பின்பு ராஜா   நாங்கள் மூன்று பேரும்  அடுத்த ஜென்மத்தில் பிறப்போம் வாழ்வோம் என்று பேசியது.

அதுக்கும்  கைதட்டல்..

இடைவேளைக்கு பிறகு செகெண்ட் ஆப் கதை ஆரம்பமானது.

இதில் ஹீரோவும் இரட்டையர், ஹீரோயின்னு இரட்டையர்…

இருவரும் சந்திக்கும் காட்சிகள் வெளிநாட்டில்  பாடமாங்க பட்டிருந்தது.

இன்றை சூழ்நிலைகேற்ற ஹீரோ, ஹுரோயின் சந்திக்கும் காட்சிகள் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியுமாறு படமாக்கபட்டிருந்தது..

குழலிசையின்  சுறு சுறு பேச்சும், அவளில் குழந்தைதனமான பேச்சிலும் அனைவரையும் ரசிக்க வைத்தாள்.

கார்குழலி அதிகம் பேசமாட்டாள், இருந்தாலும் அவளின் கம்பீரத்தை பார்த்து  ஹீரோ காதல் சொல்லி  திருமணம் முடித்தும், இரு ஜோடிகளுக்கும் பழய  ஞாபகங்கள் அனைத்தும் கண்முன்னே  வர.

ஒருவர் இன்னொரு முகத்கை பார்த்து..

அவர்களின்  பழய பெயர்களைசொல்லி கைகோர்த்ததும் படம் முடிந்திருந்தது.

தேட்டரில் படம் சூப்பர், கதை நல்லா இருக்கு டைரக்டர் எந்த இடத்திலும் போர் அடிக்காம படத்கை எடுத்திருக்கார், என்று ரசிகர்கள் பேசியதை கேட்டு கொண்டு வெளியே   செல்ல..

 சீதா எழுந்து கொள்ளவே இல்லை   அப்படியே  அமர்ந்திருந்தாள்

சிலபெண்கள்  அந்த ஊமை பொண்ணு நல்லா நடிச்சிருக்கு என்று பேச..

 இன்னும் சிலர் இல்லை எனக்கு கார்குழலியை  தான் புடிச்சிருக்கு என்று பேச..

ரசிகர்கள்  அவர்களின்  கருத்துக்களை ஒவ்வொருவராக சொல்ல சொல்ல அதை கேட்ட சீதா  அப்படியே அமர்ந்திருந்தாள்.

ரவி அனைத்தையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.

சீதாவுக்கு அவள் நடித்ததை  பார்த்து.

ரசிகர் பேசியதும் கேட்டு  கண்கலங்கி உணர்ச்சிவேச பட்டவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்..

ரவி சீதாவின் கைமீது அலுத்த..

அவனின் தோளில் முகத்தை மறைத்தால் சீதா.

அவளின் தலைமீது கைவைத்தவன் “ரீலாக்ஸ்டா எமோஷனல் ஆகாத படம் நல்லா போகும் அமைதியா இரு”   என்று அவள் தலையை தடவிகொடுத்தான்..

சிறிது நேரத்தில் கண்களை துடைத்தவள்.. “போலாம் ரவி” என்று கூற.

 “சீதா” என்றான்.

 “என்ன ரவி” என்றதும்.

 “என்கூட குதிரையில் ஒரு சவாரி வருவீயா” என்று அவன் கேட்க..

 “குதிரையிலா”.?

 “அந்த வீரசேனா,  மட்டும் உன்னை குதிரையில்  தூக்கிட்டு போவான், நான் சும்மா இருக்கனுமா,  நானும் உன்னை ஒருநாள் குதிரையில்  தூக்கிட்டு போவேன்'” என்று கூறி அவளை சிரிக்க வைத்தான்.

“ஆசை தான்” என்ற சீதா ரவியோடு குதிரையில் சொல்வது போல் நினைத்து பார்க்க.

அவளை பார்த்தபடியே வந்தவன்..

 “என்ன ரெண்டு பேரும் குதிரையில்  போறது, நல்லா இருக்கா”? என்றான்.

 நான் மனதில் நினைத்ததை  இவன் இப்படி சொல்கிறான் என்று சீதா ரவிவை பார்க்க.

 “உன்  முகத்தை பார்த்தாலே தெரியுது, நீ என்ன நினைக்குறேன்னு” என்று கூறியவன்.

 அவளை ரூம்பிற்க்கு அழைத்து வந்தான்.

 இருவரும் காலை உணவை சாப்பிட்டவுடன்.

 “சீதா ரெடியாகு  நாம சிப்புக்கு  போகணும்” என்று சொல்ல..

 “ஈவினிங் தானே ரிசப்ஷன் இப்ப எதுக்கு போகணும்” என்றால்.

“இல்ல ஒரு மீட்டிங் இருக்குமா கிளம்பு என்றான்..

 “மீட்டிங்கா?   சிப்புலயா?”என்றாள் சீதா.

“ஆமாம் சீதா நல்லா டிரஸ் பண்ணிக்கோ,” என்றான்

   சீதா கிளம்ப போக..

 “இரு நான் உனக்கு டிரஸ் செலக்ட் பண்ணி தர்ரேன்” என்றவன்.

 அவன்  சீதாவுக்கென்று வாங்கி வைத்த நிறைய உடைகளில்  இருந்து ஒரு அழகான  வேலைபாடுகள் கொண்ட  வைலெட்  கலர் சுடிதாரை  அவளுக்காக தேர்வு செய்தவன்..

‘இதை போட்டு ரெடியாகு கார்வந்து விடும்” என்று சொல்லி சென்றான்.

 சீதா பத்து நிமிடத்தில் ரெடியாகிவிட.

 ஆனால் ரவி ரெடியாகி வர அரை மணி நேரத்துக்கு  மேலானது.

 அவன் காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்து சீதா,  பார்த்தவள் அசந்து போனாள்..

 ஒயிட் அண்ட் ஒயிட் கலர் கோர்ட் சூட்டில்  சூப்பராக  ரெடியாகி வந்து நின்ற  ரவிதேஸ்சாவை பார்த்து..

 “வாவ் ரவி செம ஹன்சம்மா இருக்க”,  என்று அவனை  ரசித்து பார்த்து கூறினாள் சீதா..

அவள் கூறியதும் வெட்கபட்டு  சிறு புன்னகை சிந்தியவன்.

“வா போலாம்” என்றான்.

சிறிது தூர கார்  பயணத்தில் பிறகு..

இவர்களுக்கு ஒரு எலிகாப்பட்டர் நின்றிருக்க.

“சீதா வா” என்று ஹெலிகாப்டரின்  பக்கத்தில் அழைத்து வந்தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!