இந்த கப்பலின் உள்ள கேப்டன் ரவியிடன்.. கேள்வி கேட்டிருந்தான்.
“சார் நாம ஏன் உலகம் முழுக்கு சிப்புல சுத்தி வர கூடாது, நீங்க ஏன் சிப் இந்தியாகுள்ள மட்டும் தான் சிப் இருக்கனுமுன்னு சொல்றீங்க. ” என்றான்.
Advertisement
நான் வாங்கியதே என் இந்தியா மக்கள் சொகுது சிப்புல தாங்கி சுத்தி பார்க்கத்தான்,, பாரின்ல சுத்தி சம்பாத்தியம் பண்ண இல்லா, அப்கோஸ் சம்பாத்தியமும் பண்ணவும் தான் இவ்வளவு செலவு பண்ணி நிறைய பேங் லோன் அப்புளே பண்ணி தான் வாங்கி இருக்கேன். இருந்தாலும் இது இந்தியா குள்ள சுத்தி வந்தா போதும், சென்னை கொச்சி, கோவா, இலங்கை, இப்படி நம்ம நாட்டு பக்கமே கடல் வழி சுத்தி வந்தாள் போதும்.
Advertisement
என்றவன்.
Advertisement
ஒவ்வொரு டிப்பார்ட் மென்டையும் தனி, தனியே அழைத்து அவர்களின் குறைகளை கேட்டவன்…
Advertisement
அவனின் கட்டு பாடுகளையும் அவர்களிடம் சொல்லி இருந்தான், மெடிகல் ப்பிட் இல்லாதவங்களை, சிப்புல ஏத்த கூடாது, டிசிபிலின் இங்கே முக்கியம், டூ வார்னிங் குடுங்க, அதுக்கு மேல போன, இமிடியட்டா அவங்க சிப்புல இருக்க கூடாது, சிப்புல சுத்தம் ரொம்ப முக்கியம், எல்லா ரூம்பை ஒரு நாளைக்கு டூ டைம் கிளின் பண்ண சொல்லுங்க..
அவங்க, அவங்க வேலையை சரியா செய்யனும், 24 மணி நேரமும் தண்ணி சப்ளே குறைய கூடாது, டாக்டர் எப்பையும் பேசண்டுக்கு தேவையின்ன ரூம் வரை சென்று மருத்துவம் பார்க்கனும்,,
இங்கே தங்க வர ஒரு, ஒரு பேசேஞ்சருக்கும் எந்த ஒரு அசோகௌரியமும் இருக்க கூடாது,, முக்கியம் என்டர் டைமெண்ட் குறைய கூடாது, பாட்டு, டான்ஸ், சினிமான்னு, எல்லாரும் என்ஜாய் பண்ணுற மாதிரி ஆளை போடுங்க, என்றவன்..
அனைத்து கணக்கு வழக்குகளை பார்த்துவிட்டு வர. சாயங்காலம் ஆகி இருந்தது.
சீதா நன்றாக தூங்கி எழுந்து அந்த அறையில் உள்ள காபி மேக்கரில் காபி போட்டு கொண்டு பால்கனிக்கு சென்றவள். கடல் காற்றை சுவாசித்த படியே காபியை பருக.
புது அனுபவமாக இருந்தது சீதாவிற்கு.
அறை கதவு திறக்க பட.
சீதா யார் என்று பார்த்தால், ரவி தான் மிகவும் சோர்ந்து போய் வந்திருந்தான்,, வந்தவன் சீதாவை பார்த்து, “நல்லா என்ஜாய் பண்ணுற போல” என்றவன் அப்படியே தன் கோர்டை கலட்டி விட்டு கட்டில் சரிந்து படுத்து விட்டான்.
அதிகாலை எழுந்ததில் இருந்த இப்போ வரைக்கும் ஓடிக்கொண்டே இருந்தவனுக்கு உடல் வலி எடுக்க அப்படி படுத்திருந்தான்.
சீதா காபிபை பருகி முடித்தவள்..
சுருண்டு போய் படுத்திருந்த ரவியின் அருகில் வந்து.
“என்னாச்சு ரவி” என்றவள்.
அவனின் நெத்தியில் கைவைத்து பார்க்க அது நார்மலாக தான் இருந்தது.
“பின்னா இவ்வளவு பெரிய சிப்பு வாங்குன, தூக்கம் எப்படி வரும், உங்களுக்கு திஷ்டி ஆகி இருக்கும் ரவி, நானே நீங்க காலையில ஓய்ட்டன், ஓய்ட்டு கோர்ட் சூட்டுல
உங்களை பார்த்து, இந்த ரவி இவ்வளவு அழகா இருக்கானேன்னு, நெனச்சேன், என்ன மாதிரி எத்தன பேரு உங்களை பார்த்து கண்ணு வச்சு இருப்பாங்க, இவ்வளவு பெரிய சிப்பு வாங்கியிருக்கீங்க யாராவது கண்ணு வச்சு இருப்பாங்க, நான் சுத்தி போடுறேன்” என்று பேசியவள் வெளியே போக.
“எங்கே போற சீதா” என்றான்.
“கிச்சன் போறேன்”,.
“அங்கே போய் என்ன பண்ண போற சீதா”?..
“கிச்சனுல இருக்குறவங்க எல்லாம் எனக்கு பிரண்ட்டா ஆகிட்டாங்க ரவி, இதோ வந்துடறேன்” என்றவள்.
ரவிக்கு சுத்தி போட.
கல்லு உப்பும் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்.
சோர்வாக படுத்திருந்த ரவியை எழுந்து கிழக்கு பார்த்து அமர சொன்னாள்,
“சீதா போ சீதா” என்ற ரவி திரும்பி படுத்து கொள்ள.
“ரவி”! என்று கத்திருந்தாள்.
“உன்னோட இம்சையா போச்சு சீதா” என்றவன் எழுந்து உட்கார.
அவனின் தலை முதல் கால் வரை கல்உப்பை எடுத்து சுத்தி எடுத்தவள், “மெதுவா தூ, தூ சொல்லுங்க ரவி” என்றாள்.
ரவி சிரித்துக்கொண்டே “இது மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல சீதா” என்றான்.
“சொன்னதை செய்ங்க” என்றாள்.
அவள் சொல்லியது போல ரவி செய்தான், அவளை பார்த்து சிரிக்க.
“சிரிக்க கூடாது ரவி” என்றவள் அவனை பார்த்து முறைத்து விட்டு.பால்கனி சென்று அந்த உப்பை
கடலில் போட்டு வந்தவள்.
அவனை எழுந்து நிற்க சொன்னவள். எழுமிச்சை பழத்தை அவனின் தலைமுதல் கால்வரை தடவியவள் “ரவியின் மேல் எந்த பொல்லாத கண்ணும் பட கூடாது, எல்லா கண் திஷ்டியும் ரவியை விட்டு போகனும்” என்றவள், அவளின் கால் கீழே எழுமிச்சை பழத்தை வைத்து மிதித்தவள்,.
அதை எடுத்துக்கொண்டு போய் டாஸ்பின்னில் போட்டு கைகழுவி வந்தவள்.
” இப்ப எப்படி இருக்கு ரவி” என்றாள்.
அவனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, ஏனோ சீதா பண்ணியது அவனுக்கு பிடித்திருந்தது, தன்மேல் அக்கரை காட்டும் பொண்ணை யாருக்குத் தான் பிடிக்காது,, அவனுக்கும் கூட கொஞ்சம் உடல் வலி எல்லாம் குறைந்தது போல் தெரிய அவளை பார்த்து சிரித்திருந்தான்.
“இதில் மேலே எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை சீதா, ஆனா நீ பண்ணது ரொம்ப புடிச்சிருக்கு” என்றவன்.
“சீதா ஒரு கப் காபி” என்றான்.
“நோ ரவி நீங்க லன்ச் சாப்பிடல தானே, வெய்ட் பண்ணுங்க உங்களுக்கு சாப்பாடு பண்ணி கொண்டு வர சொல்லி இருக்கேன் சூடா வருது” என்றாள்.
அவள் சொல்லியது போலவே சூடாக மதிய உணவு தயாராகி கொண்டு வந்து தர..
அதை வாங்கி வந்தவள், ரவியை பார்த்து “சாப்பிடுங்க ரவி, உங்களுக்கு பிடிச்ச சீ புட் தான் கொண்டு வர சொன்னேன்” என்றவள் ரவி முன்னே ஒரு சிறிய டேபிளை எடுத்து போட்டவள்.. அவனை உண்ண சொல்ல.
ரவிக்கு பசி இருந்தது அதை விட, சோர்வு அதிகமாக இருக்க படுத்திருந்தான், சீதா அனைத்தையும் புரிந்து கொண்டு, தன் உடல் வலியையும், வயிறு பசியையும் போக்கிய தேவதை பொண்ணை பார்த்து ரசித்த படியே உணவை உண்ண.
“என்ன பார்வை பாஸ்” என்றாள்…
“சும்மா, என் சீதாவுக்கு எவ்வளவு என் மேல் அக்கரையின்னு பார்த்தேன்”, என்றவன், உணவை உண்டு கொண்டே பேச.
“நீங்க மட்டும் எனக்கு எல்லாம் பண்ணலாம் நான் நான் உங்களுக்கு பண்ண கூடாதா?”… என்றாள்.
உண்டு முடித்தவனுக்கு, எங்கே போனது சோர்வு என்று தெரியவில்லை வயிறு மனதும் நிறைந்திருக்க “கிளம்பலாமா சீதா” என்றான்.
“நைட்டுதான ரிசப்ஷன் இப்பவே கிளம்பனுமா” என்றாள்.
“வந்திருக்கிறது எல்லாமே என்னுடைய பிரண்ட்ஸ் சீதா காலையிலிருந்து எனக்காக வெயிட் பண்றாங்க,, இப்ப என்னை பார்த்தா! அவனுங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியல சீக்கிரம் கிளம்பலாம்” என்றவன், அவளுக்கா அவன் வாங்கி வந்த உடையை அவளிடம் தர.
அதை வாங்கி பார்த்தவளின் கண்கள் மின்னின.
சிவப்பு வண்ண புடவை, புடவை முழுக்கு கற்கள் வேலை பாடு கொண்ட புடவை, ஆனால் கொஞ்சம் ட்டிரன்பிரண்டாக இருக்க, அதை உடுத்து தயங்கிய பெண்ணை பார்த்தவன்,
என்னவென்று கேட்க.
“ரவி இது கொஞ்சம் கண்ணாடி போல இருக்கு, இதை எப்படி கட்ட,” என்றாள்.
“ஏன் சீதா நல்லா தானே இருக்கு”.
என்றான்.
“உனக்கு புரியல ரவி இத நான் எப்படி கட்ட,” என்று சொல்ல வந்தவள் தயங்க..
“நீ கட்டிட்டு வா சீதா வா, நான் பாக்குறேன், என்றவன், ஸ்மிங் பூல் இருக்கும் ரெஸ்ட் ரூம் சென்று உடை மாற்றி வந்தான், கருப்பு சர்வாணி அணிந்திருந்தான் ரவி, அதிக வேலை பாடுகள் கொண்ட சர்வாணி பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது ரவிக்கு.
“சீதா நான் ரெடி” என்று ரவி வர.
புடவை ஒன் சைட் விட்டு பின் பண்ணி கட்டியவள், முடியை தலற விட்டு கொஞ்சம் மேக்கப் மட்டும் போட்டு, கண்ணுக்கு மை இட்டு கொண்டிருந்த சீதாவின் பின் வந்து நின்றான் ரவி.
அந்த சிவப்பு வண்ண புடவையில் ஒரு சிவப்பு வண்ண ரோஜா பூ போல இருந்தவளை, பின்னாடி இருந்து பார்த்தவன், பின்பு முன்னாடி வந்து சீதாவை பார்த்தவன் மூச்சடைத்து போனான்.
அவளின் வதனத்தோடு ஒட்டி உறவாடி கொண்டிருந்தது அந்த சிவப்பு வண்ண புடவை.
அவளின் பால் நிறத்திற்க்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது.
ரவி வந்து நின்றதும்.
அவனின் முன் திரும்பியவள்.
“நல்லா இருக்கா ரவி” என்றாள்.
அவனோ அவளை பார்த்த படியே நின்றவனுக்கு பேச்சிலந்து போனான்.
சீதாவின் அங்கங்களை அப்படியே படம் பிடித்து காட்டியது போல இருந்தது அந்த புடவை, அவளின் பால் வண்ண மேனியின் அங்க வளைவுகளை புடவை படம் எடுத்து காட்டியதை போல தெரிய.
அவளை பார்த்த படியே நின்றிருந்தான்.
ரவி கருப்பு சர்வாணியில் மிக அழகாய் இருந்தான், அவன் தலை முடி மட்டும் கலைந்திருப்பதை பார்த்தவள், அவன் அருகில் நெருங்கி வந்து சீப்பை எடுத்து “இந்த ரவி தலை முடி கலைந்திருக்கு பாரு” என்று கூறி அவனின் அருகில் வர.
அப்போது தான் ரவியின் பார்வை மாற்றத்தை பார்த்தவளுக்கு உள்ளுகுள் ஏதோ உணர்வுகள் தோன்ற, சீப்பை கொடுக்க வந்தவள்.
அப்படியே அவன் அருகில் அவனின் கண்ணை பார்த்தவளுக்கு கண்களை திருப்ப முடியவில்லை, அந்த ப்ளுநிற கண்களை பார்த்திருந்தவள், அவளை அறியாமலே அவன் அருகில் வந்திருக்க. சிப் ஒரு நிமிடம் குலுங்கவும், தடுமாறியவளை.
தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான் ரவி.
நீண்ட நேரம் மெல்லிய அணைப்பு, இருவரும் அவர்கள் சுயநினைவில் இல்லை, சிப்பில் ஹார்ன் சத்ததில் சுயநினைவு வந்த சீதா மெல்ல ரவிவை விட்டு ப்பிரிய, அப்போது தான் சுயநினைவுக்கு வந்த ரவி,
“சாரி சீதா” என்று விலகி இருந்தான்.. சீதாவுக்குமே என்ன நடந்தது, நான் எப்போ ரவியை அணைத்தேன் என்று புரியாமல் நின்றிருந்தவளை, மாற்றும் என்னத்தோடு, “சீதா டைம் ஆச்சு கிளம்பு” என்றான்,.
சீதா அவனின் முகத்தை பார்க்க முடியாமல், வேகமாக கிளம்பி இருந்தாள்,,
ரவிக்கு குற்றவுணர்ச்சியாக தோன்றியது, சீதாவை அவன் தப்பாக நினைத்தது இல்லை பின்பு ஏன் அவளை அணைத்தேன் என்று அவனுக்குமே புரியவில்லை, இன்னும் இரண்டு நாள் கழித்து சீதாவை பத்திரமாக சென்னை அனுப்பி வைக்க வேண்டும், அவளுக்கு ஒரு நல்ல எதிர் காலம் காத்திருக்கிறது என்று நினைத்தவன்.
சீதாவை அழைத்துக்கொண்டு ரிசப்ஷன் சென்றான்,..
இரவு தான் ரிசப்ஷன் என்பதால், அனைவரும் மெதுவாக கிளம்ப, சாங்காலமே ரெடியாகி வந்த நண்பனை பார்த்த ரவியின் நண்பர்கள் குஷியாகி ரவியை அணைத்து ஏன்டா கல்யாணத்துக்கு வரல என்று கோபமாக பேச.
வேலை டா என்று சமாளித்திருந்தான்.
அனைவரிடம் சீதாவை என் பிரண்ட் என்று அறிமுகம் படுத்தியவன் “ஜீலி எங்க” என்றான்,
“கண்மணி எங்கே இருக்காலோ அங்கே தான் ஜீலியும் இருப்பாள்” என்றான் ரவியின் நண்பன்..
தூரத்தில் இரண்டு பெண்கள் ஒரு குழந்தையை வைத்து அழுகையை நிறுத்தி விளையாட்டு காட்டிக்கொண்டிருக்க,
அப்பெண்கள் அருகில் சென்றான் ரவி.
கண்மணி ரவியை பார்த்து விட.
அவளை பார்த்து அமைதியா இரு என்றவன், ஜீலியோடு சேர்த்து குழந்தையை அணைத்தவன் “ஜுலி டார்லிங்” என்று கூறிக்கொண்டே அணைக்க
அணைத்தது யார் என்று தெரிந்த ஜீலி.
“விடுடா என்னை” என்று கத்தியிருந்தாள்.
“அத்தை மகனை இப்படி எல்லாம் திட்ட கூடாது டார்லிங்” என்றவனிடமிருந்து பிரிந்தவள்..
“போடா” என்றவள், ரவியின் பக்கத்தில் சீதா நின்று இருப்பதை பார்த்தவள்.
ரவியை பார்த்து முறைத்து.
“இந்த அழகி கூட சுத்திட்டு, கல்யாணத்துக்கு வராம இருந்தீயா” என்றவள். ரவியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தவள், குழந்தையை தூக்கி கொண்டு சென்றிருந்தாள்.