சீரஞ்சீவியின் தாய் மாலா சீதா அருகிலே இருந்து பார்த்துக்கொண்டார்.
சீரஞ்சீவி தம்பி சஞ்சை சீதாவை விட்டு நகரவே இல்லை, அவனுக்கு சீதாவை மிகவும் பிடிக்கும், சீதாவால் தான் இந்திர சேனா படம் ரிலிஸ் ஆனது என்று தெரிந்து கொண்டவன்.
Advertisement
சீதாவால் தான் இன்று என் அண்ணன், அம்மா தன் குடும்பமே அமைதியாக இருக்கிறது என்றவன் சீதாவுடனே இருந்தான்.
Advertisement
சீதாவுக்கு சீரஞ்சீவியின் மீது கொஞ்சம் கோபம் இருந்தது, அவன் அவளிடம் ரவியை பற்றி கேட்ட போது, ரவி என் பிரண்ட் அவரை எதுவும் பண்ணாதே, உன் வாழ்க்கை நீ பாரு என்று ஒற்றை வார்த்தையில் முடித்திருந்தாள்.
Advertisement
ஆனால் சீதாவின் முகத்தை பார்த்தே, சீரஞ்சீவிக்கு அனைத்தும் புரிந்தது, அவன் சீதா பேச்சை கேட்க வில்லை..
Advertisement
அவன் ரவிவை அழிக்கும் திட்டத்தை தொடங்கி இருந்தான்…
சீதா இரண்டு நாள் கழித்து வீடு திரும்பி இருந்தாள், சீரஞ்சீவியின் தாய் அவளை அவர்கள் வீட்டிற்கே அழைத்து சென்று பார்த்துக்கொண்டார்.
ரவி சீதாவை அன்று சென்னையில் விட்டு விட்டு அன்றே அடுத்த பிளைட்டில் மீண்டும் கோவாவிற்கு சென்றான், ஏனோ அவனுக்கு சீதாவுடன் இருந்த அந்த அறையில் சில நாட்கள் இருக்க வேண்டும் என்று தோன்ற, சீதாவை சென்னை ஏர்போர்டில் சிவாவிடம் விட்டு, விட்டு திரும்பவும் கோவாவிற்கு வந்திருந்தான், இரவு அவன் கோவாவிற்கு வந்து அந்த அறைக்குள் நுழைந்ததும் சிறிது நேரம் கழித்து.
ஜூலியும், கண்மணியும் ரவியையும், சீதாவையும் பார்க்க ரவி அறைக்கு வந்தனர்..
சோர்ந்து போய் பெட்டில் சாய்ந்திருந்தான் ரவி,, அவனின் கையில் சீதாவின் உடை இருக்க.
ஜூலி அறைக்குள் வந்து “எங்கேடா போனீங்க இரண்டு பேரும், எங்கே சீதா,” என்று கண்மணியும் ஜூலியும் அந்த அறையில் சீதாவை தேட.
எங்கேயும் சீதா இல்லை என்றதும், “எங்கேடா அவ”..
என்று அவன் தோழிகள் அவனை கேட்டதும்.
“சென்னை போயிட்டா”? என்றான்.
“டேய் என்ன? என்ன சொல்லுற, கால் புண் சரியாகி இருக்காதே, எப்படி போனா, ஏன் போனா,,”? என்று தோழிகள் மாறி மாறி கேட்க..
உண்மையை சொல்லி விட்டான் ரவி.
“நான் அவளுக்கு என்ன வேணுமுன்னு தான் கேட்டேன் கோச்சிக்கிட்டு போயிட்டா'” என்று ரவி சொல்ல.
அதிர்ச்சியான ஜூலியும், கண்மணியும்..
“அப்போ நீ சீதாவை லவ் பண்ணலீயா”..
“இல்லை” என்றான்..
“அப்போ சீதாவை உன் தேவைக்கு யூஸ் பண்ணிட்டு பணம் வாங்கிட்டு போன்னு சொல்லி இருக்க, அதனால அவ கோச்சி கிட்டு போயிட்டா, அப்படி தானே”..என்று ரவியிடம் கேட்க.
“ஆமாம்” என்று தலையாட்டியிருந்தான்,,..
“நீயெல்லாம் ஒரு மனஷனா, அந்த பொண்ணு எவ்வளவு அருமையான பொண்ணு, அந்த பொண்ணு கிட்ட இப்படி கேட்க உனக்கு எப்படி மனசு வந்ததுடா, அழகு, படிப்பு, அனுசரிச்சு போகுற குணமுள்ள பொண்ணு அவள விட உனக்கு எப்படி மனசு வந்தது” என்று கண்மணி திட்ட.
“இவனுக்கெல்லாம் மனசு எப்பவோ செத்து போச்சு கண்மணி, இருந்திருந்தா சீதா கிட்ட இப்படி பேசி இருப்பானா, பாவம் அந்த பொண்ணு அடி பட்ட காலோட சென்னை போயிருக்க,..
அவ மனசு எவ்வளவு வேதனை பட்டு இருக்கும், உன் தேவைக்கு வேற பொண்ணே கிடைக்கலையா டா, சீதா தான் உனக்கு கிடைத்தாளா, உன் தேவைக்கு பணம் குடுத்தா ஆயிரம் பொண்ணுக்கு வருவாங்க, ஒரு நல்ல பொண்ணு வாழ்க்கையை கெடுத்திட்டீயா, ” என்று ஜூலி புலம்ப..
“சீதாவோட அருமையெல்லாம் இவனுக்கு தெரியாது ஜூலி, தனியா இருந்து கஷ்ட பட்டதான் இவனுக்கு புரியும், அந்த சீதா பொண்ணு இவனை எவ்வளவு ஆசையா பார்த்துச்சு, அவ கண்டிப்பா இவனை லவ் பண்ணா, இந்த அறிவாளிக்குத்தான் அவளோட அருமை தெரியல”.
“நான் எவ்வளவு கற்பனை பண்ணி வச்சுருந்தேன் தெரியுமா கண்மணி, இவன் கிட்ட பேசி சீதாவை இவனுக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி வைக்கலாமுன்னு, ஆனா இவன் இப்படி கிடைத்த வைரத்தை துளைச்சிட்டு வந்திருக்கானே” என்று தோழிகள் இருவரும் ரவியை மாறி, மாறி திட்ட.
ரவி அமைதியாகி இருந்தான்,, “பேசுடா ஏன்டா சீதாவை கொண்டு போய் சென்னையில விட்டா,” என்றாள் ஜூலி…
“அவ தான் போறேன்னு சொன்னா கொண்டு போய் விட்டேன்” என்றான்
“அவ கண்ணுல ரவி மேல உள்ள லவ் தெரிஞ்சது ஜூலி, எப்படி இப்படி போயிட்டா,, “..
“இவன் தான் அவளை பார்த்து என்ன வேணுமுன்னு கேட்டிருக்கானே அவ வேற என்ன செய்வ, டேய் நீ அவள லவ் பண்ணல” என்று ஜூலி அவனை போட்டு உலுக்க.
“சீதாவை எனக்கு பிடிக்கும், ஆனா லவ்! பண்ணலா” என்றான் ரவி.
தோழிகள் இருவரும் அவனின் முட்டாள் தனத்தை எண்ணி வருந்தியவர்.
“பெரிய பாவம் பண்ணுற ரவி, உன்னை நம்பி வந்த பொண்ண ஆசை காட்டி மோசம் பண்ண மாதிரி இருக்கு உன் செயல், அந்த பொண்ண பார்த்து தப்பான பொண்ணு மாதிரியா தெரியுது, தப்பு பண்ணுற ரவி..
சீதாவோடு அன்பு புரிஞ்சிக்காம, அவளை கஷ்டபடுத்திட்டீயே, உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாதுடா, கடைசி வரைக்கும் தனியாதான் கிடந்து சாக போற”..
என்று கண்மணி திட்ட.
“இவன் கிட்ட பேச நமக்கு இனி ஒன்னும் இல்லை கண்மணி, வா நாமா போலாம், பணம், பணம் எதுக்குடா இப்படி சம்பாரிக்குற?..
பணம் இவ்வளவு சம்பாத்தியம் பண்ணுறீயே எதுக்கு, உன் ஒருத்தனுக்கேவா?, எல்லா பணத்தையும் நீயே அனுபவிக்கா போறீயா, இல்ல நீ சாகுறப்போ எல்லாத்தையும் எடுத்திட்டு போக போறீயா, இனி எங்க மூஞ்சுல முளிக்காத” என்ற ஜூலி கண்மணியை அழைத்து கொண்டு சென்றுவிட்டாள்..
பெண்கள் இருவருக்கும் அவ்வளவு கோபம், நல்லா பெண்ணை எப்படி விட்டு, விட்டானே என்று..
ரவி அந்த அறையில் கவுந்து படுத்திருந்தான், அவன் முகத்தில் சீதாவின் ஆடை, அறை முழுவதும் சீதாவின் வாசனை, ஏன் அவன் மீது கூட சீதாவின் வாசனை தான், அவர்கள் படுத்திருந்த தலையணையில் முகம் புதைந்தவனுக்கு சீதாவின் வாசனை போதை ஏற்றியது, .
எந்த பெண்ணின் வாசத்தை உணர்ந்தது இல்லை ரவி, ஒரு பெண்ணிடம் ஒருமணி நேரம், அல்லது இரண்டு மணிநேரம் தான் பொழுதை கழிப்பான்,, அதற்கு மேல் எந்த பெண்ணிடமும் சீதாவை போல் நாட்கள் கணக்கில் உருகியது இல்லை, அவன் தேவையை முடித்து கொண்டு அனுப்பி விட்டுவிடுவான்,,
அவனுக்கு தேவை என்றால் தான் பெண்களை அனுகுவான், ஒரு மாதத்திற்கு ஒரு முறையோ, ,இல்லை ஒரு மாதத்தில் இரண்டு முறையோ பெண்களை அனுகுவான் அவ்வளவு தான்,, தினமும் எல்லாம் இல்லை,, எல்லா பெண்களிடம் பாதுகாப்போடு நெருங்குபவன், இன்று சீதாவிடம் எந்த ஓரு பாதுகாப்பும் இன்றி நெறுங்கியது ஏன்.
நாட்கள் கணக்கில் யாரிடம் அவன் கூடி கழித்தது இல்லை சீதா என்னவோ செய்து கொண்டிருந்தாள் அவனை..
சொல்ல முடியாதா உணர்வில் ரவி தத்தளித்து கொண்டிருந்தான்,,
சீதா வேண்டும் என மனமும், உடலும் ஏங்கியது,, அவள் தன்னுள் இருப்பது போல் தோன்றியது சீதா, சீதா அவன் எண்ணம்
எல்லாம் சீதா தான், அவன் உயிரை உருஞ்சி எடுத்துக்கொண்டிந்தாள் சீதா, சீதா ஞாபகம் அவனை படுக்க விடவில்லை, எழுந்து சும்மிங் பூல்லிற்கு போனான் நீரில் நீந்துவதற்காக..
வேகமாக வெளியே வந்தவன், கிளம்பி ஹைதராபாத் சென்று விட்டான், ஏனோ அவனுக்கு தாயின் ஞாபகம் வந்தது, அவர் மடியில் படுத்தால் கொஞ்சம் மனம் நிம்மதி அடையும் என்று தோன்றியது.
ஹைதராபாத் வந்து இறங்கியவன், அவர்கள் வீட்டுக்கு போன் பண்ணி தகவல் சொல்ல.. உடனே அவரின் தந்தை அந்த ஊரின் எம் பி வந்து விட்டார்.
பல மாதங்களாய் மகனை பார்க்காமல் இருந்தவருக்கு மகன் ஹைதெராபாத் வந்திருப்பதை சொல்ல உடனே சிறுபிள்ளை போல்.
மகனை பார்க்க ஓடி வந்திருந்தார்…
ஏர்போர்ட் முன்னே கொஞ்ச நேரத்தில் வெடி சத்தம் காதை பிளக்க, ரவி தேஸ்சாவின் தந்தை 1000 வாலா வெடிகள், 2000 வாலா வெடி, மாறி மாறி வெடிக்க, சத்தம் கேட்டு வெளியே வந்தவனை மேள தாளத்தோடு வரவேற்றார், ரவிதேஸ்சாவின் தந்தை வெங்கடரவிதேஸ்சா,..
தந்தையை பார்த்து சிரித்தவனை கட்டி அணைத்துக்கொண்டவர், பெரிய தாமரை பூ மாலையை மகனுக்கு போட.
“ஏன்டி நானா இதி” என்றான் ரவி.
“ஏன்ட்றா நா கொடுக்கு பெத்த சிப்பு வாங்கி இருக்க, சந்தோஷ பட வேண்டாமா” என்றவர். மகனை மாலை மரியாதையோடு வீட்டிற்க்கு அழைத்து வந்தார்.
சாரி, சாரி வீடு இல்லை, அது பழயகாலத்து அரண்மணை என்று தான் சொல்லவேண்டும்,, ரவியின் தாத்தா கட்டிய வீடு அது, பார்க்க குட்டி அரண்மனை போல தெரியும், வீட்டின் முன்னாடி பல மரங்கள் இருக்க. வீட்டின் பின்னாடி மாட்டு தொழுவம் இருக்கும், நிறைய நாட்டு வகை கோழிகள் வீட்டை சுற்றி, சுற்றி வரும், பாக்க கிராமத்து வீடு போல தான் இருக்கும் ரவியின் வீடு.
வீட்டீன் முற்றத்தில் இரட்டு பெரிய திண்னைகள் இருக்க, அங்கே தான் ரவி அவ்வா 90 வயது பாட்டி நாகம்மாள் அமர்ந்து கொண்டு ஏதோ கைவேலை செய்து கொண்டிருந்தார், ரவி வருவது அவர்களுக்கு தெரியாது, மாத கணக்கில் பார்க்காத பேரனை பார்த்து நாகம்மாள் சந்தோஷத்தில்..
“நா பில்லா ரவி” என்றவர், வீட்டினுள்ளே பார்த்து “பத்மா ராவே” என்று மருமகளை அழைக்க..
“ஒஸ்தானு அத்தையா” என்று கையை துடைத்தவாறு வெளியில் பத்மாவதி வர.
ரவி தன் மாமியாரை தூக்கி சுத்துவதை பார்த்த, பத்மா “டேய் கீழ போட்டுறாத” என்று ஓடி வந்தார்.