Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 16 3

 அவனுடைய இரண்டாவது படமும் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது சிவாவும் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடித்துக் கொண்டிருந்தான்,,..

 அந்த வருட இறுதியில் இந்திர  சீனா படத்திற்கு பல துறைகளில் இருந்து விருதுகள் கொடுத்தனர் எந்த விருதிற்க்கும்  சிவாவும்,சிரஞ்சீவியும் செல்லவே இல்லை..



Advertisement

ரவிதேஸ்ஜா மட்டும்தான் சென்று விருதை  வாங்கிக் கொண்டிருந்தான் அதில் சிறந்த நடிகர், சிறந்த ஹீரோயின் சிறந்த டைரக்டர் என்று விருது வழங்க மூன்று பேரும் வரமால் இருப்பதால்..

பல மீடியாக்களில் ஏன் வரவில்லை, எதற்கு வரவில்லை விருது கொடுக்கும் துரையை அவமதிப்பு செய்திருக்கிறார்கள், மன்னிப்பு கேட்க வேண்டும், என்று பல டி,வி  சேனல்களில் பேச,,.

Advertisement

Advertisement

சிவாவும், சிரஞ்சீவியும் யார் சொல்வதையும் கண்டு கொள்ளவே இல்லை, அவர்களுக்கு ஒவ்வொரு அவார்ட் வரும்போதும்  அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்..

சீதா இல்லாமல் அதை பெற்றுக் கொள்ள அவர்கள் இருவருக்கும் மனமில்லை சீதா என்று வருகிறாளோ அன்று சேர்ந்து நம் வெற்றியை மூன்று பேரும்  கொண்டாடலாம் என்று  சிவாவும்,  சிரஞ்சீவையும் நினைத்திருக்க.

Advertisement

 அங்கு எல்லா டிவி சேனலை பார்த்த சீதா  நண்பர்கள் இருவரையும்  திட்டிக் கொண்டிருந்தாள்,  இவனுங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா அவார்ட் கொடுத்து அதை வாங்க போக மாட்டாங்களா  அறிவு கெட்ட பயலுக என்று அவர்கள் இருவரையும் திட்டிக் கொண்டிருந்தாள் சீதா.

 ஒரு பட வாய்ப்புக்காக எப்படி எல்லாம் கஷ்டப்பட்டான்  இந்த சிரஞ்சீவி..

 ஆனால் இப்போ படம் நல்லா ஓடினவுடனே  திமிர் ஏறிடுச்சு என்று நண்பனை திட்டியவள்.

  அவார்டு கொடுத்தா போய் வாங்கிட்டு வர வேண்டியதுதானே எதுக்கு இப்படி அநியாயம் பண்றான்னுங்க,   இவனுக்கு என்னை பழிவாங்குவதற்க்காக  தான் இப்படி பண்றானுங்க,, அவனுங்களுக்கு தெரியும் இவனுங்க அவார்டு வாங்க போகலன்னா  அதை நான் தெரிஞ்சுகிட்டு  திட்டுறதுக்காக இவங்க கிட்ட பேசுவேன்னு தெரியும் அதனால தான் அவனுங்க அவார்ட் வாங்காம என்னை பழிவாங்குறானுங்க,, நான் எப்படியும் அவங்கள திட்டுறதுக்காவது போன் பேசுவேன்னு  தெரியும்..

 போங்கடா நான் திட்டவே மாட்டேன் உங்களை.  நீங்க ரெண்டு பேரும் அவார்ட் வாங்கினா எனக்கென்ன,  வாங்காட்டி போன  எனக்கு என்ன போங்க என்றவள்…

டிவியை ஆப் பண்ணி விட்டு  சீதா படுக்க..

 பிரபு அக்காக்கு போன் செய்து இருந்தான்.

 சீதா போன்  எடுத்தது “அக்கா எப்படி இருக்க” என்று கேட்க நான் நல்லா இருக்கேன்டா” என்றாள் சீதா.

 “ஒரு விஷயம் கா இந்தியாவில் இருந்து ஒரு லாயர் பேசினாரு” என்று கூற.

  “என்னடா விஷயம்” என்றால் சீதா.

 “அது நம்ம அம்மா சொத்து ஆந்திரா பக்கம்  கொஞ்சம் இருக்கும் போல அது கோயில் பக்கத்துல இருக்கறதுனால அந்த சொத்தை  எழுதி கேக்குறாங்க”என்று கூற.

 “அது நமக்கு வேண்டாமுன்னு  சொல்லுடா”.. என்றாள்..

” இல்லக்கா சைன் பண்ண கண்டிப்பா வரணும்னு சொல்றாங்க அந்த கோயில் கும்பாபிஷேகம் நடக்க போகுது, அதனால  கும்பாபிஷேகத்துல  எந்த  பிரச்சனை வரக்கூடாதுன்னு சொல்லி நம்ம ரெண்டு பேர் சைன் கேக்குறாங்க” என்று சொல்ல..

 “நமக்கு எதுக்குடா அந்த சொத்து விவகாரம்” என்றால் சீதா.

“இல்லக்கா பல முறை போன் பண்ணிட்டாங்க, நீ எப்போ இந்தியா வர, நானும் வர்ரேன்” என்று பிரபு சொல்ல.

 “எனக்கு வர விரும்பம் இல்லை டா,, நிம்மதியான இடம், நல்ல வேலை, என்ன பாசமா பாத்துக்கற மொழி தெரியாத ஆளுங்க, நான் நிம்மதி இருக்கேன்டா” என்றாள்.

“சரிக்கா உன் இஷ்டம்” என்றவன் போனை அனைத்து வைத்திருந்தான்…

ஒரு வாரம் கடந்து சென்ற நிலையில், இரவு அழகுமலர்  சீதாவுக்கு போன் செய்திருந்தாள்,.

தோழியின் அழைப்பை ஏற்றவள், “சொல்லு நேத்து ஏன் போன் போடலா”? என்றாள் சீதா.

 தோழிகள் இருவரும் தினமும் பேசிக்கொள்வார்கள்,,

“நேத்து ஒரு பங்சன் சீதா, அதான் உன்கிட்ட பேச முடியல, டி. வி ல நீயூஸ் பாத்தீயா” என்றாள்,,.

“இல்லை டீ ஏன் கேட்குற” என்றவள் டி, வியை ஆன் பண்ண,..

அதில் முதல் நீயூஸ்சாக சிரஞ்சீவியை அனைவரும் திட்டிக்கொண்டிருக்க.

 “எதுக்குடி எல்லாரும் சிரஞ்சீவி திட்டறாங்க” என்றால் சீதா..

” ஸ்டேட் அவார்ட் கொடுத்தா, அத வாங்க போக மாட்டேன்னு  சொன்னா என்ன திட்டாம கொஞ்சவா செய்வாங்க உன் பிரண்டுக்கு என்ன பைத்தியமா புடிச்சு போச்சு” என்றால் அழகு மலர்..

 “ஏண்டி இப்படி பண்ணி தொலையுறானுங்க”.

 “ஏய் அவங்களுக்கு மட்டும் இல்ல உனக்கும், சிவா சார் எல்லாருக்கும் ஸ்டேட் அவார்ட் கிடைச்சிருக்கு கண்டிப்பா இந்த அவார்ட் நீ வாங்க வந்தே ஆகணும் இல்லனா அவங்களுக்கு  பெரிய பிளாக் மார்க் வந்துரும்.. சொன்னது புரிஞ்சுக்கோ உனக்கு மட்டும் இல்ல சிரஞ்சீவிக்கும் சிவாவுக்கும் அடுத்த படம் எடுக்கறதுக்கு தடை  போட்டா என்ன பண்ணுவாங்க”. என்று அழகு மலர் கேட்டுதும்.

ஆத்திரம் கொண்டவள்  கோபத்தில் சிரஞ்சீவிக்கு போனில் அழைத்திருந்தாள் 7 மாதம் கழித்து.

 புதிய நம்பராக இருக்கவும் சிரஞ்சீவி போனை  எடுக்கவில்லை மீண்டும் அழைப்பு வர யாரோ என்று நினைத்து..

“ஹலோ” என்று கோபமாக பேச…

 “ஏண்டா அறிவு கெட்டவனே அவார்டு கொடுத்த வேண்டான்னு சொல்லுவீயா” என்று சீதா அவனை திட்ட ஆரம்பிக்க..

 போனில் சீதா குரலை கேட்ட சிரஞ்சீவி துள்ளிக் குதிக்காத ஒரே குறை தான் “சீதா, சீதா, சீதா, நீயா சீதா”என்று அவன் ஆயிரம் சீதா போட..

 “எரும மாடே  நான் தான்டா பேசுறேன்,, உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா குடுக்குற அவார்டை  எல்லாம் வேண்டாமுன்னு சொல்லுவ நீ,, உங்க இரண்டு பேரின் ஐடியா எனக்கு தெரிஞ்சு போச்சு, நீயும், அந்த சிவாவும் அவார்ட் வாங்க போக மாட்டீங்க, அத  நான்  கேட்டு தெரிஞ்சு கிட்டு உன் கிட்ட பேசணும் அதுதான் உங்க ஐடியா,  அப்படியே எல்லாம் நடந்துருச்சா” என்றாள் கோபமாக..

 “சீதா எங்கடா இருக்க சொல்லு சீதா”.?. என்றான் சிரஞ்சு..

 “டேய் நான் உன்ன திட்டிகிட்டு இருக்கேன்,.  நீ எங்க இருக்குன்னு கேக்குற”..

 “என்னை திட்டு அடி எல்லா உரிமையும் உனக்கு இருக்கு நீ எங்க இருக்குன்னு சொல்லு சீதா” என்றான்.

 “சொல்ல முடியாது” என்றாள் சீதா.

” சீதா ப்ளீஸ் டா நீ எங்க இருக்குன்னு சொல்லுடா நான் வர்ரேன்,, நான்  எந்த வம்புக்கு போலடா உன்னை பிரிந்து இந்த ஏழு மாசம் நான்  ரவி கிட்ட  எந்த வம்பும் பண்ணல” என்றான்.

 “எனக்கு தெரியும்” என்று சீதா கூற.

 “ஆமாம் ஸ்டேட் அவார்ட் என்னைக்கு குடுக்குறாங்க என்றாள்..

 “நாளை மறுநாள் தான்டா சீதா” என்றான்..

“சரி நான் வரேன்” என்றாள்.

 “சீதா, சீதா நாளைக்கு நீ வரியா” என்றான்.

 “வரேன் வரேன்” என்றாள்..

 “சீதா சிவாவுக்கு  போன் பண்ணி சொல்லிடேன் அவனும் நீயில்லாமா ரொம்ப கஷ்டபட்டான், அவனுக்கும் போன் போடு” என்றதும்..

“சரி” என்றவள்…

போனை கட்பண்ணிவிட்டு , நாளைக்கு இந்தியா கிளம்ப டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்க,  விமானத்தில் டிக்கெட் இருக்க,,, உடனே டிக்கெட் போட்டவள், பிரபுக்கு அழைத்து நான் இந்தியா போறேன்டா, நீ ஏதோ சைன் பண்ண கேட்டீயே, அங்கேயும் போயிட்டு வந்திரலாம், நீயும் வா, உன்னை பார்த்தும் எவ்வளவு நான் ஆச்சு” என்று கூற.

“சரிக்கா” என்றான் பிரபு.

சீதா சிவாவுக்கு அழைக்க, அவனோ இரண்டு நாள் படபிடிப்பை முடித்து வந்து போனை சைலண்டில் போட்டு தூங்க,, சீதா காலை எடுக்க வில்லை.

சிவாவுக்கு, அவளின் டிக்கேட்டை போட்டோ எடுத்து, அவள் இந்தியா வரும் நேரத்தையும் அனுப்பியவள், சிரஞ்சீவிக்கு டிக்கெட் விவரத்தை அனுப்பி இருந்தாள்.

இந்த இரவு நேரத்தில் முளித்திருந்த சிரஞ்சீவி சீதா அனுப்பிய டிக்கெட் விவரத்தை பார்த்து இவள் எப்படி நேபாள் போனாள் என்று நினைத்தவன், வரட்டும் சீதாவிடம்  கேட்கலாம் என்றவனும் தூக்கம் தூரமாக சென்றிருந்தது.

“சிரஞ்சீவி” என்று தனது கணவனை  லதா தூக்க கலக்கத்தில் அழைத்துக்கொண்டே வர..

மனைவிடம்  வேகமாக சென்று அவளை அணைத்தவன், “நாளைக்கு சீதா வர்ரா  லதா ஏய் ஜாலி” என்று லதாவை தூக்கி சுத்த, “சிரு பேபி” என்று தன்  வயிரில் உள்ள நாலு மாத கருவை தொட்டு காட்ட, லதா வயிற்றில் முத்தம் வைத்தவன்,..

“என் சீதா வர்ரா” என்று  தன் குழந்தையிடம் சொல்லி சிரித்திருந்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!