Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 17 2

 “நீ சொல்றதெல்லாம் உண்மையா சீதா”? என்றான் சிரஞ்சீவி.

 “ஏண்டா,  நான் ஏண்டா பொய் சொல்ல போறேன்” என்று அவள் சொல்ல..



Advertisement

” எனக்கு நம்பிக்கை இல்லை” என்றான்.

Advertisement

 “நம்பிக்கை இல்லையா ஏன்டா!  என்னை  நம்பு ” என்றாள்.

Advertisement

 “வீட்டுல போய் பேசிக்கலாம்” என்று இருவரும் காரில் அமைதியாக வந்து கொண்டிருக்க..

Advertisement

 அங்கே  ரவியில் பீ ஏ ரவியை போனில்  அழைத்து கொண்டு இருந்தான்..

 ரவியோ  இரண்டு மாதம் வெளிநாடு சென்று இப்போது தான் இந்தியா  வந்து  இரண்டு நாட்கள் ஆனது..

காலையில் ஒரு மீட்டிங்கை முடித்து  வந்திருந்தான்,,  அவனுக்கு பாரின் சென்று வந்ததில் இருந்து தூக்கம் சரியில்லை பகலிலே நன்றாக குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருக்க .. போன் விடாமல் ஒலித்துக்கொண்டிருக்க அதை எடுத்தவன்..

“ஏண்டா போன்  எடுக்கலைன்னா தூங்குறாங்கன்னு தெரியாது,, அறிவு கெட்டவனே போன வைடா” என்று தன் பீ, ஏ,வை,, திட்ட.

 “சார் சார் போனை வச்சுடாதீங்க சார் நீங்க கேட்ட சீதா இப்போ டி வி நீயூஸ்  பேட்டியில  வந்துட்டு இருக்காங்க சார்” என்று கூற..

 “டேய் சீதா வா” என்றான் ரவி.

 “ஆமா சார் சீதா தான், சீதா மேடமே தான் சார்,”..

“டேய் ஒழுங்கா சொல்லு அடிச்சிடுவேன்”.என்றான் ரவி..

 “இல்ல சார் நீங்க சொன்ன அதே இந்திர சேனா நடிகை சீதா தான் சார்”?. என்றான்.

 “எந்த டிவி சேனல் நியூஸ் ல டா”?..

 “சார் எல்லா  டி, வி நியூஸ்ல வருது சார்” என்றதும்.

 அவனின் ரூமில் உள்ள பெரிய  கூகுல்   டி. வி நியூஸ்  சேனலை ஆன் செய்தான்…

 அவன் பி ஏ  சொன்னது போல் அனைத்து டிவியிலும் சீதா தான்  இருந்தாள்.

‘சீதாவா!  சீதாவா?  இது என்று ஒரு நிமிடம் பேட்டி கொடுத்த பெண்ணை பார்த்தான்.

 சீதா மாதிரி தான் இருக்கு என்ன ஆச்சு  இவளுக்கு, இவ்வளவு  குண்டா இருக்கா?! வயிறு வேற பெருசா இருக்கு பிரக்னண்டா இருக்காளா? என்று தன் கண்ணை துடைத்துவிட்டு மீண்டும்   பார்க்க, சீதா மாதிரி தான் தெரிந்தது ரவிக்கு…

 கீழே எழுத்துக்களாக நியூஸ் வருவதை   பார்த்தவன்,  அப்படியே அதை வாசிக்க முயற்சி செய்தான்..

 “காணாமல் போன நடிகை  கீதா மீண்டும் சென்னை வருகை,, பிரபல பிசினஸ் மேனை  காதல் திருமணம் செய்து  நேபாளத்தில் வாசிக்கிறார்,,..

 இன்று சென்னை  ஏர்போர்ட்டில் கீதாவை சந்தித்த  கேட்டபோது..

 நாளைக்கு நடக்கும்  அவார்ட் பங்ஷனுக்காக , அவார்ட் வாங்க வந்ததாக கூறினார்.

என்று நியூஸ் முடிந்திருக்க..

 சீதா சொல்வது நிஜமா? அவள் ஒரு பிசினஸ் மேன்னை  கல்யாணம் செய்து கொண்டாளா! நம்ப முடியலையே என்று புலம்பியவன்..

 நாளை ஹவார்ட் வாங்கும் போது  பார்த்து பேசலாம் என்று நினைத்தவன் விட்ட தூக்கத்தை மிண்டும்  தூங்க நினைக்க தூக்கம் வருவேனா என்றது..

 மனதில் தீராத வலி ஏறிக் கொண்டது போல் ஒரு உணர்வை உணர்ந்தான் ரவி.

 எப்படி எப்படி சீதா ஒருவனை  காதல் திருமணம் செய்து கொண்டாள்..

 எப்படி அவளால் முடிந்தது? என்னாலே அவளை மறக்க முடியல, பின்பு  அவள் எப்படி என்னை மறந்தாள்,,

 பொய் சொல்கிறாளா என்று, அவன் அவள்  கொடுத்த நியூஸ்சை   பார்க்க..  சீதா பொய் சொல்வது போல தெரியவில்லை அவ்வளவு சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தாள்.. இவள் பேசுவது உண்மை தான் போல.. என்று இருந்தது அவளின் பேட்டி..

அப்போ கதிர் பொண்ணுக்களை பற்றி சொல்லியது உண்மை தானோ, “நீ எவ்வளவு பாசம் காட்டினாலும், மதிக்க மாட்டாளுங்க,, யாராவது, சாப்டீயா? அழகா இருக்கேன்னு சொன்னா போதும் அவன் பின்னாடி போவாளுங்க,” என்று அன்று நண்பன்  போனில் சொல்லியதை நினைத்து பார்த்த ரவி, ஒரு வேளை சீதாவை ஒருத்தன் விரும்புவதாக சொல்லி அவளை வற்புறுத்தி திருமண செய்து, பின்பு சீதாவுக்கு  அவனை பிடித்திருக்க கூடுமோ, என்று யோசித்தவன்..

சீதாவிடம் சென்று நேரில்  பேச வேண்டும் என்று நினைத்தவன்..

தன் பீ ஏ வை அழைத்து “சீதாவை ப்பாலோ பண்ண ஆள் அனுப்பு, அவ எங்கே போற வர்ர, என்று எனக்கு அப்டேட் வருணும், அப்பறம் சீதா நேபாள்ல எங்கேயே  இருந்தத சொன்னா, அங்கே நம்ம ஆள அனுப்பி சீதா புருஷனை பற்றி விசாரிக்க சொல்லு”…  என்றதும்..

“சரி சார்” என்ற ரவியின் பீ ஏ.

சீதாவை பின் தொடற   ஒருவனை  ஏற்பாடு பண்ணியவன்..

நேபாளத்துக்கு ஆள் அனுப்பி இருந்தான்.

 சிரஞ்சீவி சீதாவை அழைத்துக் கொண்டு  தன் வீட்டுக்கு வந்திருந்தான்..

 சீதாவை பார்த்து மாலாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை கட்டி அணைத்து முத்தமே கொடுத்திருந்தார் சீதாவிற்கு..

 “உள்ளே  வா  சீதா”என்று அழைத்துக் கொண்டு வீட்டின் உள்ளேவர.

 லதாவும் சீதாவை பார்த்து வேகமாக வந்தாள் “ஹேய் மெதுவா வா  லதா” என்று சீதா சொல்ல..

 தோழியை அணைத்துக் கொண்டாள்  லதா..

 “எப்படி இருக்க” என்று இருவரும் விசாரித்துக் கொண்டு சிரித்துக்கொண்டனர்…

 “வா சீதா வா டைம் ஆச்சு, லதா நீயும் வா சேர்ந்து சாப்பிடலாம்  சிரஞ்சீவி வாடா  நேரம் ஆச்சு” என்று வா என்று மாலா அழைத்து  அனைவருக்கும் பரிமாற, குடும்பமாக  அமர்ந்து சாப்பிட்டனர்..

 லதாவும்,  சீதாவும் தங்கள் கர்ப்ப காலத்தை பற்றி  அவர்களின் உடல்நிலை பற்றி பேசிக்கொண்டே சாப்பிட..

 மாலா மருமகளுக்கும்,சீதாவுக்கும் பரிமாறிக் கொண்டே அவரும் உண்டார்…

 அனைவரும் உண்டு முடிக்க..

 சரியாக சிவா வந்து சேர்ந்தான்..

 சீதா கொடுத்த நியூஸ்சை  பார்த்துவிட்டு கோபமாக வந்தவன் அவளை பார்த்து முறைத்தபடி நிற்க..

 “என்ன சிவா சார்  எப்படி இருக்கீங்க”… என்று சீதா கேட்டதும்..

” நீ வா” என்று அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஒரு ரூமுக்கு சென்று கதவை சாத்தினான்.

 “என்ன சிவா ஏன் கதவை சாத்துற” என்று சீதா கேட்க..

” என்ன இது? என்ன இது கோலம்”? என்றான்…

 ” உனக்கு தெரிஞ்சு தானே வந்த நியூஸ் சேனலை பார்க்கலை நீ”..

 “அதெல்லாம்  நான் பார்த்தேன் அந்த பொய்யை நம்ப நான் தயாரா இல்லை” என்றான்.

 “அது பொய் எல்லாம் இல்லை உண்மைதான்'” என்றாள்,.

 “எது நீ  இங்க இருந்து போயி ஒரு பிசினஸ் மேனை பார்த்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணி இப்ப பிரக்னண்டயிருக்கு அத நான் நம்பனும் பைத்தியக்காரனா நான்” என்றான்.

 “சிவா தேவையில்லாம எதையும் பேச வேண்டாம்”..

 “அப்போ உண்மைய சொல்லு நீ யாரையும் கல்யாணம் பண்ணல, இது அந்த ரவியோடு குழந்தை அப்படி தானே”.

 “யூவார் வ்வேரி ஸ்மார்ட்  சிவா..  சிரஞ்சீவி கூட நம்பிட்டான் ஆனா நீ கரெக்டா கெஸ் பண்ணிட்ட”  என்று சிரித்துக் கொண்டாள்.

 “சரி அடுத்து என்ன பண்ண போற”..?

” என்ன பண்ண போறன்னா  எனக்கு ஒன்னும் புரியல சிவா” என்றாள்.

 “நீ ஒன்னும் பண்ண வேண்டாம் நம்ம ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றான்.

 “சிவா”  என்று அவனை சத்தமாக அழைக்க.

  “நீ என்ன பண்ண போற, இந்த பிள்ளையை  இப்படியே  பெத்து வழக்க போறியா,,குழந்தைக்கு  அப்பா வேண்டாமா”?..

 “தப்பு தப்பா பேசாத எனக்கு நீ பிரிண்ட் அவ்வளவு தான்”..

 “எனக்கு நீ அப்படி இல்ல சீதா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஸ்டில்,  ஐ லவ்  யூ டா, உன்னை நான் மிஸ் பண்ண முடியாது”.

 “ரொம்ப சீக்கிரம் உங்க லவ்வை சொல்லிட்டீங்க சிவா” என்றாள் சீதா.

 “சீதா நம்ம  படம் முடிஞ்ச உடனே உன்கிட்ட சொல்லலாமுன்னு  இருந்தேன்,   படம் முடிஞ்சதும்   நம்ம சூழ்நிலை அப்படியேவா  இருந்தது சொல்லு”…

” பழசை எல்லாம் பேச வேண்டாம் சிவா,  என் வாழ்க்கையை  நான் வாழ்றேன்,  உங்க வாழ்க்கை நீங்க வாழுங்க, என் வாழ்க்கைக்குள்ள யாரும் வர நான் அனுமதிக்க மாட்டேன்”.. என்றாள்.

 “அப்போ என்ன பண்ண போற இப்படியே தனியா இருக்க போறியா என்று கேட்க”.

 “அது என்னோட இஷ்டம் என்னோட வாழ்க்கை நான் பார்த்துப்பேன். என் சுமையை நான் சுமப்பேன் அதை யார் தலையிலும் இறக்கி வைக்க என்னால் முடியாது,, நீங்க எப்பவுமே எனக்கு பிரண்ட் அதையும் நீங்க எப்பவும்  மெயின்டெயின் பண்ணுங்க”.. என்றாள்.

 “சீதா புரிஞ்சுக்கோடா பேபீஸ்  பாவம்,  இப்ப உனக்கு பேசுறது ஈசியா தான் இருக்கும் ஆனால் பிற்காலத்துல உனக்கு கஷ்டமா இருக்கும்டா பேபிஸ் பாவம் நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றான்.

 “சிவா  நீங்க பேசறது எனக்கு புடிக்கல அசிங்கமா இருக்கு” என்றாள்..

 “எனக்கு அப்படி தோணல,,  ஏன் யாரும்  செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிறது இல்லையா அப்படி நினைச்சுக்கோ,,”..

 “யாரைப் பத்தி ஜட்ஜ் பண்ண நான் இல்ல, எனக்கு என்ன பாத்துக்க தெரியும் சிவா அதனால எனக்கு சப்போர்ட் பண்ணுங்க  போதும்” என்றவள்..

 “கதவை  திறங்க சிவா,,.  சிரஞ்சீவி பயந்திட போறான்” என்று சொல்ல..

 “நான் உனக்காக காத்திருப்பேன் சீதா யோசிச்சு பதிலை சொல்லு” என்றவன் கதவை திறந்து விட.

 சிரஞ்சீவி பதட்டமாக உள்ளே வந்தவன்..

 “ஏன்டா என்னடா கேட்ட,  சீதா கிட்ட” என்று அவன் கேட்க சீதா ரிலாக்ஸாக அமர்ந்திருந்தாள் சேரில்…

 “ஒன்னும் இல்ல சீதா கிட்ட பர்ஸ்னலா பேசிட்டு இருந்தேன்” என்றான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!