Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 19 2

 ஏன்  என் வாழ்வில் இதெல்லாம் நடக்கிறது நான் நினைத்து வந்தது ஒன்று இங்கு நடப்பது ஒன்று.. ரவி என்  தாய்மாமன் மகனா ஐயோ கடவுளே.. என்று புலம்பியவள்.

நான்  அவனை விலகி,விலகி போக நினைக்கிறேன், அவன் தன்னை தொடர்ந்து வருவதை  எண்ணி அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..



Advertisement

 அப்படியே சிறிது நேரம் படுத்திருந்தாள்..

Advertisement

 பிரபு ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக் கொண்டு வர கீழே  சென்றிருந்தான்.

Advertisement

 பெல் சத்தம்  மெல்ல கேட்க..

கண்திறந்து பார்த்தாள் சீதா.. காலிங் பெல் சத்தம்  மீண்டும் கேட்டு மெல்ல எழுந்து அமர்ந்த  சீதா,  “யார் பிரபு கதவை திற” என்று கூற.

Advertisement

பிரபு  அங்கே இல்லை, மீண்டும் பெல் சத்தம் கேட்க,,  “பிரபு பிரபு” என்று அவள் அழைக்க அவன்  அறையில் இல்லாததை உணர்ந்தவள், எழுந்து சென்று  கதவை   திறந்தாள்.

 ஒரு வயதான பெண்மணி போல் தெரிய யார் இவர் என்று பார்த்தவள், பக்கத்தில் பத்மாவதியை  பார்த்து தான் இவர்கள் யார் சொந்தமா என்று , உத்து பார்த்தால் சீதா.. உத்துப் பார்த்தவளுக்கு அப்படியே தலை  கிறுகிறுவென்று சுத்தியது,  பார்க்க அச்சு அசல் தன் தாய்யை போல் முகவடிவத்தோடு  இருந்தவரை  பார்த்தவள்,,  அந்த வயதான பெண்மணி  தன் தாயோட தாயென்று   அறிந்து கொண்டவள்.

அந்த வயதான பெண்மணியை பார்த்தபடியே நிற்க.

நாகம்மாளுக்கு உடல் சிலிர்த்தது, அச்சு அசல் தன் மகள் வரலட்சுமியை போல இருந்த பேத்தியை பார்த்தவர்.

” வரு, வரலட்சுமி நா பிள்ளா” என்று கதறியவாறே கைவிரித்து சீதாவை அணைக்க, போக.

சீதா அவர் வரு என்று தன் தாயை அழைப்பது போல்  தன்னை  அழைத்ததும் உடைந்து விட்டவள்..

ரவியின் ஞாபகம் பின்னுக்கு சென்று அந்த வயதான பெண்மணியை அணைத்துக்கொண்டாள் “பாட்டி” என்று.

“பத்மா, பத்மா சூடு, நா வரலட்சுமி அம்மாய் பாரு” என்று மருமகளை அழைத்து கூறியவாரு, பேத்தியை அணைத்தவர்..

 தடுமாற.

“பாட்டி” என்று நாகம்மாளை பிடித்து கொண்ட சீதா, பெட்டில் அமர வைக்க.

நாகம்மாள் சீதாவை அணைத்துக்கொண்டே அழுதவர்.

அவளின் முகத்தை தொட்டு தடவி,.

“வரலட்சுமிக்கு ஏம்மாய்ந்தி” என்று கேட்க..

 சீதாவிற்கு புரிய வில்லை, பத்மாவதி சீதாவை பார்த்து, “உங்க அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு கேக்குறாங்க” என்று சொன்னார்..

 “அம்மாவா,  அம்மாவுக்கு கேன்சர் பாட்டி” என்றால்  திக்கி, திணறி.

 “நான் வரலட்சுமிகா கேன்சர் ஒச்சிந்தி, ஐயோ நான் பிள்ளா எந்த கஷ்டப்பட்ச்சோ” என்று அழுதவர்.. கண்களை துடைத்து..

“நீ நல்லா இருக்கீயா”?,,, என்று சீதாவை தொட்டு தடவி பார்த்தவர்,,, “உன் தம்பி எங்கே” என்று கேட்க,,.

“தெரியல பாட்டி”?. என்று சீதா சொன்னதும்.

 “என்னை  யாருன்னு தெரியுதா உனக்கு” என்ற நாகம்மாளிடம்..

 தெரியும் என்ற தலையாட்டியவள் “எங்க அம்மாவோட அம்மா “.. என்றதும்..

“எங்க கூட வர்ரீயா”?.

 என்று நாகம்மாள் கூப்பிட்டது.

 “வரல பாட்டி வேண்டாம்” என்றாள்.

 “ஏண்டா இந்த பாட்டிக்காக எங்க வீட்டுக்கு வர மாட்டியா”? என்றார்.

 “உங்களைப் பார்த்ததே  எனக்கு போதும் பாட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கு,  எங்க அம்மாவ பார்த்த மாதிரியே இருக்கு” என்ற சீதா  நாகம்மாளின்  கைகளை பிடித்து தன் கன்னத்தில் வைத்துக் கொள்ள..

 பேத்தியின் தலையை வருடி கொடுத்தவர் “நீ வாயேன் எங்க வீட்டுக்கு என் பொண்ணை  தான் பார்க்க முடியல உன்னையாவது  நான் பார்த்துக்கிறேன் நீ வாயேன்”  என்று கேட்க.

சீதாவுக்கு அவர்களோடு சென்று விட மனம் ஏங்க..

ரவி இருப்பானே, அவன் இருக்கும் இடத்தில் தான் போக மாட்டேன், என்று முடிவை எடுத்தவள்..

நாகம்மாள் அழைத்தும் வரமாட்டேன் என்று சொல்ல.

 “எங்க ஊர்ல கும்பாபிஷேகம் நடக்குது சீதா நாலு நாள் நடக்க போகுது ,அந்த கும்பாபிஷேகத்துக்காக வந்துட்டு போயேன் ப்ளீஸ்மா” என்று பத்மாவதி கேட்க..

 அவளோ  நான் வரமாட்டேன் என்பது போல் அமைதியாக தலையாட்ட  பிரபு வந்திருந்தான்.

 வந்தவர்களை யார் என்று தெரியாமல் அவன் பார்த்தபடி நிற்க..

 வரலட்சுமி முக ஜாடையில் உள்ள ஆண் பையனை பார்க்க நாகம்மாள் “என் பேரனா பேரேண்டி” என்று கேட்க.

“பிரபு” என்ற சீதா.

“நம்ம அம்மாவோட, அம்மா, பாட்டி” என்று அறிமுகம் படுத்தி வைக்க.

“பாட்டியா'”? என்றவன்.

நாகம்மாளின் காலில் விழ..

தன்  பேரனை அணைத்துக்கொண்டார் நாகம்மாள்..

 “எவ்வளவு அழகா இருக்கும் ரெண்டு பேர  பிள்ளைங்க,, இந்த பிள்ளைங்களை  பார்க்க  என் மகளுக்கு கொடுத்து வைக்கலையே” என்று தன்  மகள் வரலட்சுமியை  என்னி புலம்பியவர்,, பேரனை அணைத்து, “எங்க வீட்டுக்கு வாங்க, நீங்க ரெண்டு பேரும்” என்று நாகம்மாள் அழைக்க.

பிரபு சீதாவை பார்த்தான்,,, அவளோ முடியாது கிளம்பிடலாம்  என்பது போல் தலையாட்ட.

பிரபு  “இல்ல பாட்டி நாளைக்கு எனக்கு பிளைட், நான் பாரின்ல படிக்கிறேன் போகனும், அக்கா நேபாள்ல வேலை பாக்குற” என்று கூறியவன்..

“இன்னொரு தடவை நாங்க வர்ரோம்” என்று கூற.

“அப்போ என் கூட  வீட்டுக்கு வரமாட்டீங்களா,” என்று கேட்க.

“இன்னொரு தடவை வர்ரோம் பாட்டி ” என்றாள் சீதா.

“அடுத்த நீங்க எப்போ வருவீங்களோ,” என்ற நாகம்மாள்..

“இந்த வயசான பாட்டிகூட ஒரு அஞ்சு நாள் இருக்க மாட்டீயா  சீதா,, கும்பாபிஷேகம் முடியுற வரைக்குமாவது  இரேன் ” என்று    கூற..

சீதாவுக்கு  பாட்டி இவ்வளவு கெஞ்சும் போது, இங்கே  அவர் கூடவே, தன் அம்மாவை பார்ப்பது போல் அவர்களை பார்த்துக்கொண்டு இருந்து விடலாம் என்று தோன்ற, இந்த ரவியை என்ன செய்வது என்று யோசித்தாள்.

பிரபு நாகம்மாள் இவ்வளவு சொல்லியதும்  “நீ வேணா இருந்துட்டு வாக்கா” என்று கூற.

பேரன் சீதாவை இரு என்றதும், சந்தோச பட்ட நாகம்மாள், “நீ வீட்டுக்கு வர்ரீயா சீதா”, என்றவர், பிரபுவையும் அழைக்க.

“இல்ல பாட்டி என்னால இப்போ முடியாது அக்காவை கூட்டிட்டு போங்க” என்றான்..

சீதாவுக்கு நாகம்மாளிடம் மறுப்பு சொல்ல கஷ்டமாக இருந்தாலும்,..

“நான் வரல பாட்டி நாங்க சென்னை கிளம்புறோம்” என்று சீதா சொன்னதும்.

நாகம்மாள் எழுந்து கொண்டவர், “நாளைக்கு நான் செத்து போயிடுவேன், அப்போவாவது எங்க வீட்டுக்கு வருவீங்களா,” என்று கேட்டதும்.. சீதாவுக்கு நாகம்மாள் இப்படி கேட்டதும், அவளின் தாய் இறக்கும் தருவாய், நாளைக்கு நான் செத்து போயிடுவேனா, சீதா என்று கேட்டது ஞாபகம் வர..

, சீதா நாகம்மாளிள் கையை பிடித்து “அப்படி மட்டும் பேசாதீங்க பாட்டி, எங்க அம்மா, அப்பா  போயிட்டாங்க எங்க விதி, நீங்க சாவு, செத்து அந்த மாதிரி வார்த்தைகளை  பேசாதீங்க” என்றவள், அவரின் தூய்மையான நிஜ பாசத்தை பார்த்தவள், ரவி என்ன, வேற யாரு வந்தாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது என்றவள்.

“நான் வர்ரேன் பாட்டி உங்க வீட்டுக்கு,” என்று சொல்ல.

“பத்மாவதி அது உன் வீடும்தான்டா, நம்ம வீட்டுக்டு, வா “. என்றார் பாசமாக.

நேற்று தான் அவள் கடவுளிடம் புலம்பினாள், பெண் துணையில்லாமல் எப்படி என் பிள்ளைகளை பெற்று எடுப்பேன்,  என் உதவிக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லையே  என்று கடவுளிடம் புலம்பியது, அவருக்கு கேட்டு விட்டதோ, என்று கடவுளுக்கு நன்றி சொன்னவள்.

நாகம்மாள் வீட்டிற்க்கு  கிளம்ப.

தம்பியையும்  சீதா அழைக்க.

“இல்லக்கா நீ போ.

நான் நைட் பிளைட்டுக்கு  சென்னை போன தான் நாளைக்கு ஊருக்கு போக முடியும்” என்று சொல்ல…

“சரிடா” என்று,  பிரபு ஏர்போர்ட் கிளம்ப,..

சீதா தன் பேக்கை எடுத்துக்கொண்டு நாகம்மாள், பத்மாவதியோடு கார்பார்கிங் வந்தாள்..

ரவி, கதிரோடு அந்த கார் பார்கிங்கில்  ஓடி பிடித்து விளையாட, கதிரின்  சிரிப்பு சத்தம் தான், சீதாவை திரும்பி பார்க்க வைத்தது, “ரவி காரெடுப்பா” என்று பத்மாவதி அழைக்க….

சீதாவை ஒரு பார்வை பார்த்தவன், ஏதுவும் பேசாமல்..

கதிரை பத்மாவதியிடம் கொடுத்தவன்..

“அம்மா நீ முன்னாடி வந்து உங்காரு” என்றவன்,,..

சீதாவுக்கு கார் கதவை திறந்து விட்டவன்.

நாகம்மாளை சீதா பக்கத்தில் உட்கார வைத்து விட்டு..

காரை கிளப்பினான்.

அமைதியான பயணம். கதிர் தான் முன் சீட்டில் பத்மாவின் மடியிலிருந்து எட்டி சீதாவை பார்த்து, வெட்கப்பட்டு சிரிக்க.

சீதாவும் அவனை பார்த்து சிரித்தாள்.

சீதா சிரித்ததும் வெட்கப்பட்டவன், பத்மாவதியிடம், “சீதா,இசை  ஆண்ட்டி” என்று கூற.

“ஆமாம் டா சீதா, சீதா ஆண்ட்டி செப்பு” என்று சொல்ல.

சீதாவை திரும்பி பார்த்து மிண்டும் சிரித்த கதிர், “சீதா ஆண்ட்டி” என்றதும்.

அவனை தூக்கும் ஆவள் வர..

“என்கிட்ட வர்ரீயா கதிர்” என்றதும்,.

“சரி” என்று தலையாட்டியவன், சீதாவிடம் வர.

அவனை முன்சீட்டில் இருந்து பின்சீட்டிற்க்கு தூக்கியவள், தன் தோடை மீது சாய்த்து அவள் வயிறு இடிக்காத வாரு சாய்த்து கதிரை வைத்து கொண்டவள்.

அவனின் உடல் சூட்டை உணர்ந்து.

“பத்மா மா, கதிருக்கு பீவரா இருக்கு” என்று கூற.

“அப்படியா”?, என்றவர், “இவ்வளவு நேரம் என்னோடு இருந்தானே, சூடு தெரியல”.., என்ற பத்மா பேரனை தொட்டு பார்க்க.

“பீவராகத்தான்” இருந்தது,..

“சீக்கிரம் போ ரவி, வீட்டுக்கு போயி கதிருக்கு ஏதாவது சாப்பிட கொடுத்து சீரப்பு கொடுக்கனும்” என்று சொல்ல.

“என்கிட்ட சாம்பார் சாதம் இருக்கு, பிரபு வாங்கிட்டு வந்தது, நான் கதிருக்கு தரவா”, என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!