Skip to content
Post Views: 65
“ஆமாம் மா டெத் சர்டிபிகேட், அப்பறம் ஆதார் கார்ட் நகல் வேணும் அது இருந்தா தான் உங்க அப்பாவை இங்க, எரிக்க முடியும்,, இல்லன்னா முடியாது,, டைம் இப்பவே 9, 30 மணி ஆச்சு.. நீ 10:00 மணிக்குள்ள வந்தா தான் உங்க அப்பாவை எரிக்க முடியும்,, இல்லன்னா காலையில 9 மணிக்கு மேல வா”, என்றார்..
“இல்ல சார் எனக்கு நைட்டே அப்பாவுக்கு பண்ண வேண்டியதை பண்ணனும், உடனே ஹாஸ்பிடல் போய் டாக்டர்கிட்ட டெத் சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துடுறேன்,, நாளைக்கு எல்லாம் அப்பாவை என்னோட வைத்திருக்க முடியாது” என்றவள் உடனே அவளுக்கு தெரிந்த மருத்துவமனை நோக்கி சென்றாள்…
Advertisement
இவள் சரியாக மருத்துவமனை உள்ளே வரவும், டாக்டர் டூட்டி முடித்து வெளியில் வரவும் சரியாக இருக்க,, அவர் காரில் ஏறும்முன் “டாக்டர் சார்” என்று அவரை அழைத்து கோண்டே அவரை போக விடாமல் தடுத்தவள்..
Advertisement
“சார்” என்று அவர் அருகில் சென்று “எங்க அப்பா இறந்துட்டாங்க சார் டெத் சர்டிபிக்கேட் எனக்கு வேணும்” என்று கேட்க.
Advertisement
‘எப்போ செத்தாருமா யார் பார்த்தாங்க? ” என்று ஆயிரம் கேள்வி சீதாவை கேட்டார்..
Advertisement
சீதா ஒவ்வொன்றாக பதில் சொல்ல..
” ஓகே” என்று அவர் கண்ணனை தொட்டுப் பார்த்து விட்டு..
டெத் சர்ட்டிபிக்கேட்டில் சைன் பண்ணியவர்..
அதை நர்சிடம் தந்து விட்டு “ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிகிட்டு டெத் சர்டிபிக்கேட் கொடுத்துடுங்க” என்று நர்ஸ்சிடம் சர்ட்டிபிக்கேட்டை கொடுத்துவிட்டு கிளம்பினார்..
சீதாவின் கையில் வெறும் நூறு ரூபாய் மட்டுமே, ஐந்தாயிரம் பணத்திற்கு என்ன செய்வது என்று நினைத்தவள்..
உடனே அழகு மலருக்கு ஒரு ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பி வைக்குமாறு மெஜேஸ் போட..
“என்னடி இந்த நேரத்தில்” என்று மெஜேஸ்சில் கேட்டுக்கொண்டே அடுத்த நொடி பணம் அனுப்பி இருந்தாள் அழகுமலர்…
அழகுமலர் பண்ணிய உதவியை சீதா எப்பொழுது மறக்க மாட்டாள்,, அவள் பணம் கொடுத்து அடுத்த நொடி சீதாவின் கண் கலங்கியது..
அழகுமலரை நினைத்து,, என்ன மாதிரியான நட்பு இது என்று..
அழகுமலர் கொடுத்த ஐந்தாயிரம் பணத்தை நர்ஸ்சிடம் ஜீபே பண்ணியவள்,, உடனே டெத் சர்ட்டிபிக்கேட்டை வாங்கிக் கொண்டு காரில் கிளம்பி இருந்தால்..
போகும் வழியில் ஒரு ஜெராக்ஸ் கடையில் தந்தையின் ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுத்தவள்.. பக்கத்தில் ஒரு பூக்கடை இருக்க,, அப்போது தான் ஞாபகம் வந்தது தந்தைக்கு ஒரு மாலை கூட வாங்கவில்லை என்று..
அவள் கையில் நூறு ரூபாய் மட்டுமே இருந்தது..
பூக்கடையை அடைத்துக் கொண்டிருக்க..
தயங்கியபடியே அவர் அருகில் வந்தவள், அந்த கடையை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவரிடம்,, “அண்ணா ஒரு மாலை வேணும்” என்றாள்.
“எதுக்கும்மா மாலை? எந்த சாமிக்கு மா மாலை எவ்வளவு பெருசு வேணும்” என்று அவர் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க..
“அப்பாவுக்கு” என்றாள்..
“எதுக்குமா அப்பா போட்டோவுக்கா?”.. என்று கேட்க.
” இல்லை ணா, அப்பா இறந்துட்டாங்க அவங்களுக்கு போட வேண்டும்” என்றாள்..
“உங்க அப்பா எங்கே இருக்காருமா?”.. என்றார் அந்த பூ கடை காரர்..
சீதா காரின் முன் சீட்டில் சாய்ந்த படி இருந்த கண்ணனை சுட்டிக் காட்ட.
உடனே அவர் அருகில் வந்தவன் கண்ணனை பார்த்துவிட்டு…
“சொந்தக்காரங்க யாரும் இல்லையாம்மா இப்பதான் இறந்தாரா” என்று அவர் கேட்க..
“யாரும் இல்லை அண்ணா இப்ப தான் எலக்ட்ரிக் சுடுகாட்டுக்கு போயிட்டு இருக்கேன்” என்று அவள் கலங்கியபடியே கூற..
சீதாவை பார்த்து அனுதாபப் பட்டவர்..அவரிடம் இருந்த பெரிய மாலை எடுத்து ஒரு கவரில் வைத்து கொடுக்க.
“அண்ணா இவ்வளவு பெரிய மாலையெல்லாம் வாங்க என்கிட்ட காசு இல்ல 100 ரூபாய் தான் இருக்கு அதற்கு ஏத்த மாதிரி மாலை கொடுங்க” என்று கேட்க..
“பரவால்ல ம்மா மாலை வாங்கிட்டு போ, காசு வேண்டாம்” என்றவர் ஒரு பெரிய கவரில் மாலை எடுத்து சீதாவிடம் கொடுக்க,..
அந்த மாலையை வாங்கிக் கொண்டவள்,, அவரிடம் நூறு ரூபாய்யை கொடுக்க “பரவாலம்மா எனக்கு வேண்டாம் இந்த காசு”என்றார்..
“கண்டிப்பா என்கிட்ட காசு இருக்கிறப்போ உங்ககிட்ட வந்து பணம் கொடுப்பேன் நீங்க வாங்கிக்கணும் அண்ணா” என்றான்..
“பரவால்ல தங்கச்சி, அப்பாவை பாரு ஏதாவது உதவி வேண்டுமா உனக்கு? நான் வேணா கூட வரவா” என்று கேட்க..
“இல்லண்ணா, பரவால்ல கார் இருக்கு நான் கார்ல போய் விடுவேன்” என்று அவருக்கு நன்றி சொல்லிவிட்டு எலக்ட்ரிக் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தாள்..
“என்னம்மா பத்து மணிக்கு மேல வந்தா நான் என்னம்மா பண்றது,, நாளைக்கு வா மா” என்ற அவளைத் திட்டி “போமா” என்க…
“சாரிங்க, மன்னித்து விடுங்க டைம் ஆச்சு, என்னால அப்பாவை தூக்கிட்டு வீட்டுக்கு போக முடியாது, பிலிஸ்ணா உதவி பண்ணுங்க, நீங்க கேட்ட டெத் சர்ட்டிபிக்கேட், ஆதார் ஜெராக்ஸ் எல்லாம் இருக்கு, பாருங்க” என்று அவர்களிடம் தர..
அங்கிருந்து இன்னொருவர் “டேய் பரவால்ல டா அந்த பொண்ண பார்க்க பாவம் இருக்க..தனியாக வேற இருக்குது யாருமில்லை போல” என்று கூற.
அவர்களை பார்த்து கைகூப்பி நின்றவளை பார்த்து,, நீயேன்மா எங்களை பார்த்து கைஎடுத்து கும்பிடுற..
உங்கப்பாவை தூக்கு என்று சொல்ல..
வேக வேகமாக தந்தையே இறக்க முயற்சி பண்ணினாள் சீதா..
“நீ இரும்மா” என்ற இன்னொருவர் ,, செக்சரை எடுத்து கொண்டு வந்து கண்ணனை காரிலிருந்து இறக்கி படுக்க வைத்துவிட்டு.
“ஆதார்கார்ட் ஜெராக்ஸ், டெத் சர்ட்டிபிக்கேட், கூடுமா. அப்பறம் பணம் 3000 ரூபாய் கட்டு மா”..
என்று அந்த பிணத்தை எறிக்கும் ஊழியர்கள் கூற…
“3000 ரூபாய் யா?.. என்று அவள் முளித்துக்கொண்டு நிற்க..
“மா இருக்குற பணத்தை குடுமா, அப்புறம் காலையில வந்து மீதி பணத்தை குடுத்துட்டு உங்க அப்பா அஸ்தியை வாங்கிட்டு போ” என்று சொல்ல.
சீதா தயக்கமெல்லாம் படவில்லை உடனே தன் காதில் இருந்து தங்க கம்மலை கலட்ட..
‘ஹே பொண்ணு என்ன பண்ற கம்மல எதுக்கு கலட்டுற,, காசு குடுமா, உன் கம்மல் எல்லாம் வேண்டாம், பணம் குடு மா, நீ எங்க வேலைக்கு வேட்டு வச்சிருவா போல,, இந்த பொண்ணோடா சிம்சையா போச்சுயா” என்று ஒருவன் சொல்ல..
இன்னொருவன் சீதாவின் கையில் இருந்த கம்மலை பார்க்க,, அவரிடம் தன் கம்மலை கொடுத்தவள்,,
“இது தங்கம் கம்மல், இதுல வைர கல் பதித்து இருக்கு, இது என்னுடைய அம்மா கம்மல், பணம் அதிகமாக வரும், இத வச்சி கிட்டு எங்க அப்பாவுக்கு செய்ய வேண்டியதை செய்க,, பிலிஸ் சார்,, என்கிட்ட பணம் இல்ல”. என்று அழுதவளை..
“யோவ் என்ன பண்ணுறது ஒன்னும் புரியல,” என்று இருவரும் பேசி,, நகையை வித்து இரண்டு பேரும் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணி,,..
“வெளியே யார்கிட்டயும் இத பத்தி சொல்ல கூடாதுமா” என்று கூறிவிட்டு..
கண்ணனை செக்சரில் வைத்து தூக்கிகொண்டு உள்ளே போக..
அப்பொழுது தான் தந்தைக்கு மாலை போடா வில்லையே என்று ஞாபகம் சீதாவுக்கு வர..
“சார் ஒரு நிமிஷம்,,அப்பாவுக்கு மாலை போட்டு விடுறேன்” என்று சீதா சொல்ல,,
“உள்ள வந்து போடுங்க மா”.
என்றவர்கள்..
கண்ணனின் மேல் ஒரு வெள்ளை வேஷ்டியை போர்த்தி விட்டு அவரது கையையும் காலையும் அந்த வேஷ்டியை கிழித்து இறுக்கமாக கட்டிவிட்டு..
“இப்ப மாலையை போடுமா” என்று சொல்ல ..
சீதாவுக்கு இப்போதுதான் புரிந்தது தந்தையை இனிமேல் பார்க்க முடியாது தந்தை இறந்து விட்டார் என்று புத்தியில் உரைக்க.
பிணம் எரிப்பவர்களை நிமிர்ந்து பார்த்தவள் “ஒரு அஞ்சு நிமிஷம் நான் அழுதுகட்டுமா”? என்று அனுமதி கேட்க.
அவர்களோ அவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு “சரி” என்று பாக்கெட்டில் இருந்த பீடியை பத்த வைத்துக்கொண்டே வெளியில் போக..
தன் கையில் இருந்த மாலையை கை நடுங்க தந்தைக்கு போட்டவள் அப்படியே அவர் மார்பில் படுத்து கதறி அழுதாள்,, “,பா அப்பா, இனி நான் யாரை அப்பாவென்று கூப்பிட்டுவேன் வாங்க பா,, ” என்று..
சீதா கதறும் சத்தத்தை கேட்க அந்த பிணம் எரிப்பவர்கள்..
“மா கத்தாத மா” என்று திட்ட.
வாயை மூடி கதறி அழுதாள் சீதா..
ஒரு ஐந்து நிமிடம் கழித்து வந்தவர்கள்..
“வெளியே போ மா” என்று கண்ணனை எரிக்க தயாராக..
ஒருமுறை தந்தையின் முகத்தை பார்த்தவள் அவரின் முகத்தை தொட்டு தடவி விட்டு, “அம்மா கூட போறீங்களாப்பா, அம்மாவ கேட்டேன்னு சொல்லுங்கப்பா ” என்று அவரின் கையில் முத்தமிட்டு எழுந்து வெளியே சென்று ஒரு தூணின் மீது சாய்ந்த அமர்ந்து விட்டாள்.. கண்ணீல் இருந்த கண்ணீர் அருவி மாதிரி கொட்டியது..
சீதாவின் மனதில் புயல் அடித்து ஓய்ந்தது போல் ஒர் அமைதி.. அந்த இடமே அமைதியாக இருக்க அவளும் அமைதியாகவே கண்மூடி அமர்ந்திருந்தாள்.
ஒரு அரை மணி நேரம் கழித்து ஒரு மண்பாண்ட குடுவையில் கண்ணனை எரித்த சாம்பளை போட்டு அந்த குடுவையின் மேல் ஒரு வேஷ்டியை சுற்றி கட்டி அஸ்தியை மூடி சீதாவிடம் கொடுத்தார்கள்..
அவர்களிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவள் “நன்றி” என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு..
திரும்பி பார்க்காமல் காரில் வந்து ஏறிக்கொண்டவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்..
வீட்டுக்கு வந்தவளுக்கு அந்த வீடே மயான அமைதியாக இருந்தது போல் தெரிந்தது.. தன்னோடு இருந்த ஒரு உறவு போயிற்றே என்று கண்ணீல் நீரோடு விடிய விடிய தந்தையை நினைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்,.
விடியற்காலையில் வாட்ச்மேன் வந்து சீதா இருக்கும் கார் செட்டின் கதவை “கண்ணன், கண்ணன் ” என்று கதவை தட்ட….
அப்போது தான் கண் திறந்து பார்த்தவள்,,, விடிந்து விட்டாத என்று பார்க்க..
வாச் மேன் தந்தை பெயர் சொல்லி அழைப்பதை கேட்டவள்..
கதவை திறந்து பார்க்க..
“சீதா கண்ணனை வர சொல்லி பகதூர் சார் கூப்பிடுறாரு வர சொல்லு அவரை ” என்று வாச்மேன் சொல்ல..
“அப்பாவுக்கு உடம்பு சரியில்ல ஊருக்கு போயிருக்காரு, வர நாளாகும்” என்று சீதா கூற…
“சார் குடும்பத்தோடு கோவிலுக்கு போக ரெடியா இருக்காரு சீதா, இப்போ என்ன பண்ண” என்று வாச்மேன் புலம்ப..
“பத்து நிமிசத்துல நான் கிளம்பி வந்து விடுவேன்” என்றவள்..
தலைக்கு குளித்து ரெடியாகி முகத்துக்கு மாஸ்க் அணிந்து பகதூர் வீடு நோக்கி சென்றாள் சீதா…
error: Content is protected !!