Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 23 2

ரவி கத்தியதும் தான் சீதா ரவியை பார்த்து,.

“ரவி” என்று அவளும் கத்த.



Advertisement

சீதாவை ஒருவன் முடியை பிடித்து இழுக்க, இன்னொருவன், அவளை நகர முடியாமல் பிடித்து வைத்திருந்தான்.

ரவியின் பார்வை முழுவது சீதாவின் மேலும், அவள் வயிற்றில் மேல் தான்.

Advertisement

Advertisement

அவளுக்கு  ஒன்றும் ஆகிவிட கூடாது என்று அவன் அவளை பார்க்க.

Advertisement

“ரவி வலிக்குது ரவி” என்று  சீதா அழுகவும்..

“டேய்”  என்று கத்தியவன்.

சீதாவை  பிடித்திருந்த இருவரையும்  வேகமாக எழுந்து வந்து அடிக்க…

சீதாவை விட்டு இருவரும் கீழே விழந்தனர்.

சீதா ரவியின் கையைபிடித்து கொள்ள,..

“ஒன்னும் இல்லடா சீதா ஒன்னும் இல்லடா”, என்று அவளின் தலை கோதி விட.

அதற்குள்  சில கருப்பு உடையணிந்தவர் ரவியை இழுத்துக்கொண்டு செல்ல,, சீதா “ரவி” என்றவள்.. அவனின் கையைபிடித்துக்கொண்டே..

அவனோடு செல்ல பார்க்க.

சீதாவையும் இரண்டு பேர் இழுத்து சென்றனர்.

சீதாவுக்கும் முடியவில்லை.

“டேய் என் ரவியை விடுங்கடா, விடுங்கடா” என்று அவள்  கத்த..

பளார் என்று ஒருவன் சீதாவை அரைந்திருந்தான்.

சீதாவுக்கு அந்த அரையெல்லாம் பெரியது இல்லை.. அவள் ரவியை பார்த்துக் கொண்டே “விடுங்கடா” என்று மறுபடியும் கத்த.

 ரவி சீதாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்,  “டேய் என் சீதாவை விடுங்கடா அவ மேல கைய வைக்காதீங்கடா” என்று இவனும் கத்த.

 ஒரு மளையாளத்து காரன்  ‘சீக்கிரம் வேலையை முடிங்கடா” என்று கத்த.. ஒருவன்  பெரிய அரிவாளோடு வர..

 சீதாவுக்கு  புரிந்தது ரவியை ஏதோ செய்யப் போகிறார்கள் என்று.

 “ரவி,ரவி, ரவி” என்று  கத்தியவள் “அவரை ஒன்னும் செய்யாதீங்கடா பிலீஸ்டா”, என்று அவள் கைகூப்பி கதரி அழ..

 ரவி சீதாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் தனக்காக துடிக்கும் துடிப்பை பார்த்தவனுக்கு கண்ணில் நீர் வந்திருந்தது..

 “சீதா நீ அழாத” என்றான்…

 “ரவி நீ எனக்கு வேணும்,  ரவி நீ தான் என் உயிர் ரவி, உனக்கு ஒன்னும் ஆகக் கூடாது ரவி,,  டேய் என் ரவியை  விடுங்கடா ப்ளீஸ் விடுங்கடா” என்று சீதா அவளை மீறி கத்தியிருந்தாள்..

 வெங்கட்டும் பத்மாவும் சீதாவை அதிர்ச்சியாக பார்த்தனர்.. சீதா கத்திய கத்தலில்  அவர்களுக்கு  சீதா ரவிமேல் வைத்திருக்கும் பாசம் புரிய,, சீதா துடிப்பதை  பார்த்தபடியே  அவர்களும்  மகனுக்கு ஏதாவது நடந்து விடுமோ என்று அவர்களும்  “ரவி, ரவி” என்று கத்த..

 ஒருவன் வந்து ரவியின்  “கையையும் காலையும் மட்டும் வெட்டு” என்று ஒருவனுக்கு சொல்ல..

 இதைக் கேட்ட  சீதா “ஐயோ யாரவது வாங்களேன் என் ரவியை காப்பாத்துங்க அய்யோ” என்று  ஊர்மக்களை பார்த்து கத்த அனைவரும் பயந்து நின்றனர்..

 “ரவி ரவி” என்று  சீதா கத்தியபடியே பார்க்க.

 ஒருவன் வேகமாக அருவாளை எடுத்துக்கொண்டு  ரவி அருகே வந்தவன்..

ரவியின் கையை வெட்டப் போனான்..

 திடீரென்று ஒரு கார் சர் என்று வந்து இவர்கள் பக்கத்தில் வந்து நிற்க..

 யார் என்று அனைவரும் பார்க்க காரிலிருந்து சிரஞ்சீவியும், சிவாவும் இறங்கினார்கள்..

 சீதா அவர்களை பார்த்து “சிரஞ்சு ரவியை காப்பாத்து” என்று கத்த.

அங்கே நடந்து கொண்டிருக்கும்  சூழ்நிலையை புரிந்து கொண்ட சிவாவும், சிரஞ்சீவியும்..

 ரவியை  வெட்ட வந்தனையும் அனைவரையும் தூக்கிப்போட்டு மிதிக்க..

  அனைவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்…

 சிவா சீதாவின் அருகில் சென்று சீதாவை காப்பாத்த..

 ரவி பத்மாவை பிடித்துக் கொண்டிருந்தவர்களை  அடித்து  பத்மாவை காப்பாற்றினான்….

 ஓரளவுக்கு சண்டை  முடிவுக்கு  வந்து கொண்டிருக்க சீதா கதிரை தேடினாள்.. “கதிர், கதிர் ” என்று சீதா அவனை தேட.. அவன் எங்கும் தெரியவில்லை அப்பொழுதுதான் தூரத்தில் ஒருத்தன் கதிரை தூக்கிய படியே ஓடுவதை பார்த்த சீதா..

அவன் பின் ஓடியவள் “டேய் என் பையனை விடுடா டேய்” என்று  சீதா கத்த.

ஊர்காரர்கள்  கதிரை தூக்கிக்கொண்டு ஓடுபவனை, பார்த்து, “டேய் விடுடா  பிள்ளையை” என்று அடிப்பது போல வர.

அந்த கருப்பு உடையணிந்தவன், ஊர்காரர்கள் வருவதை பார்த்து, கோபுரத்தில்  வேலை செய்ய கட்டி வைத்திருந்த, கட்டையின் மேல் கதிரை தூக்கிய படியே ஏற.

சீதாவுக்கு அந்த கொடியவன், கதிரை கீழே போட்டால் என்னவாகும் என்று கதிரை நினைத்து  பயந்தவள்.

அவளுக்கு கட்டையில் ஏற தெரியும், சிரஞ்சீவி இந்திர சேனா படத்திற்க்காக சீதாவுக்கு மலைகளில் ஏற, கட்டைகளை பிடித்து ஏற என்று  சொல்லி கொடுத்திருந்ததால் அவள் பயப்படாமல், புடவை எடுத்து இடுப்பில் சொருகியவள்.

கட்டையை பிடித்து மேலே ஏற..

கதிரை தூக்கிக்கொண்டு ஏறியவன்.. கதிர் அவனை “விடுடா, விடுடா” என்று கத்தி அவனை அடிக்க, அவனால் கதிரை சமாளித்து ஏற முடியவில்லை, ஒரு இருபது அடி  மேலே ஏறியவன், அங்கே தடுப்பு பலகை அமரும் படி கட்டி இருக்க, அங்கே கதிரை இறக்கி விட்டவன், வேகமாக கோவில் பின்பக்கமாக  கட்டையை பிடித்து ஓடி விட..

சீதா கதிரை பார்த்தபடியே கட்டையை  பிடித்து கொண்டே ஏறியவள்.. அந்த கருப்பு உடையணிந்தவன்..

கதிரை ஒரு பலகை மேல அமர வைத்து ஓடி விட்டதை பார்த்தவள்.

கதிர் கட்டையில் அமர்ந்திருந்தவன்.

கீழே பார்த்து பயந்து அழ..

சீதா கதிர் அழுவதை கேட்டபடியே ஏறியவள்..

“கதிர் கண்ணா அழத.. கட்டையை இறுக்கமாக பிடிச்சுக்க அம்மா வர்ரேன்”. என்று  சீதா சத்தம் கொடுத்து கொண்டே மேலே ஏற..

கதிருக்கு  சீதா பேசியது கேட்டவுடன், “சீதாம்மா, சீதாம்மா பயமாக இருக்கு வா”, என்று குழந்தை அழ.

“அம்மா வர்ரேன்டா, அம்மா வர்ரேன் நீ அழத கண்ணை மூடிக்கோ கீழே பார்க்காத, கட்டையை இறுக்கமாக பிடிச்சிக்கோ” என்றவளுக்கு மேலே ஏற முடியவில்லை கை, கால்கள் எல்லாம் வலியெடுக்க…

கீழே பார்த்தால் தலை சுத்தியது மக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்தவள்..

“யாரவது வாங்க, வாங்க” என்று கத்தியவள்,  கீழே பார்க்க யாரும் வருவது போல் தெரியவில்லை..

கதிர் பயத்தில் கீழே விழுந்துவிட்டாள் என்ன செய்வது என்று யோசித்தவள்..

கதிரிடம் பேசியவாறே மெல்ல, மெல்ல ஏறினாள்..

பயந்து போன கதிர் கண்களை முடியபடியே, “சீதாம்மா, சீதாம்மா பயமா இருக்கு நீ வா, நீவா ம்மா” என்று அழைக்க.

“என் செல்லத்தை பார்க்கத்தான் அம்மா மேலே வர்ரேன்டா, நீ அழத” என்று மகனிடம் பேசியபடியே  சீதா மேலே  ஏற.

கீழே இருந்த  அனைவரும்  மேலே பார்க்க பயமாக இருந்தது,  எப்படி இந்த பெண் மேலே ஏறுகிறாள் என்று அனைவரும் அதிசயமாக பார்த்து நிற்க,

ரவி, சிரஞ்சீவி, சிவா வெங்கட் சில ஊர்காரர்களும் சேர்ந்து அந்த கெட்டவர்களை அடித்து கட்டி வைத்தவர்கள்,  போலீஸ்காரர்களை காப்பாற்றி, அனைத்தும் முடியும் தருவாயில் ஊர்காரர் ஒருவர் வந்து, “உங்க  மருமக பொண்ணு கோபுரத்தில் மேலே ஏறுது, உங்க பேரன் மேலே மாட்டிக்கிட்டான்” என்று வெங்கட்டிடம்  தகவல் சொல்ல.

சிவாவும், சிரஞ்சீவியும், “நீங்க போங்க ரவி நாங்க இவங்களை போலீஸ் டேசன் கூட்டிட்டு போறோம்”  என்று சொல்ல.

வெங்கட்டும், ரவியும் சீதா ஏறும் கோவில் கோபுரத்தின்  பக்கத்தில் வந்து பார்க்க.. சீதா ஏற முடியாமல் ஏறிக்கொண்டிருந்தாள்..

கதிரின் கால் மட்டும் கீழே தெரிந்தது.. சீதா அவனை நோக்கி செல்வதை பார்த்த ரவி.

வேகமாக ஏற தொடங்க.. பக்கத்தில் உள்ள பயர்மேன்களிடம் விசயம்  சொல்ல பட்டது.. அவர்களும் வந்து கொண்டிருந்தனர்..

சீதா கதிர் அருகில் வந்திருந்தாள்..

கதிர் பயத்தில் கண்களை மூடியபடியே அமர்ந்து அழுதுகொண்டிருக்க.

மெல்ல அவன் அருகில் வந்த சீதா ஒரு கையால் கட்டையை பிடித்தபடியே. இன்னொரு கையால் “கதிர் பயப்படாதே அசையாமல் இரு” என்றவள்.

அவனின்  இடுப்பை பிடித்து தூக்கி அணைத்து கொள்ள.

சீதா அணைத்ததும்.

“சீதாம்மா, சீதாம்மா” என்று அவளை இறுக்கி அணைத்தவன்.

.

கண்திறந்து கீழே  பார்த்து பயந்து போனவன்.. “சீதாம்மா எனக்கு பயமாக இருக்கு நாம கீழே போகலாம்” என்று அழ.

சீதாவுக்கு தெரிந்து விட்டது, தன்னால் கதிரை வைத்துக்கொண்டு கீழே இறங்கி போக முடியாது என்று.

கதிர் பயத்தில் அழுவதை  கேட்டவள், “அழகூடாது கதிர் அழத அம்மா இருக்கேன்லா”, என்றவள்.

இறங்க  காலை எடுத்து கீழே சீதா வைக்க அவளால்  முடியவில்லே .

சீதாவுக்கு உயரத்தில் நின்றிருப்பதால் தலை வேற  சுற்ற, எங்கே கதிரோடு நாமும் சேர்த்து கீழே விழுந்து விடுமோ என்று பயந்தவள்.

“ரவி,… சிரஞ்சு, யாராவது வாங்க, வாங்கடா”  என்று மேலே இருந்து  சீதா கத்த.

ரவி வேகமாக ஏறிக்கொண்டிருந்தான்.

சீதாவுக்கு கதிரை பிடித்துக்கொண்டு நிற்க முடியவில்லை.

“ரவி, ரவி யாரவது வாங்க” என்றவளுக்கு   மயக்கம் வருவது போல் தெரிய…

தன் பின்னாடி ஒரு கை அவளை தன்னோடு சேர்த்து அணைத்து  பிடித்து கொள்ள..

அந்த அணைப்பை அணைத்தவன் ஸ்பரிசத்தை உணர்ந்தவள்.

“ரவி” என்று  மயங்கியிருந்தாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!