Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 4

சீதா கல்யாண  வைபோகமே..

   அத்தியாயம் -4



Advertisement

Advertisement

Advertisement

  தன்னை நோக்கி வரும் தன் நண்பன்  சிரஞ்சீவியை

 பார்த்த சீதா  துள்ளி குதிக்காத  குறை தான்…

Advertisement

“ஹேய் சிரஞ்சீவி!  எப்படிடா இருக்க!”?.. என்றவள் அவனின் கையை பிடித்துக்கொண்டு பேச..

“நான்  நல்லா இருக்கேன் சீதா, நீ எப்படி இருக்க,,?”என்றான்..

“நான் நல்லா இருக்கேன்டா,,  அம்மா, உன் தம்பிகள், அப்பறம் லதா எப்படி இருக்கா”?.. என்றாள்…

“எல்லோரும்  நல்லா இருக்கோம், நீ என்னடி இப்படி பையன் மாதிரி ட்ரெஸ் பண்ணி இருக்க, இங்கே என்ன பண்ணிட்டு இருக்க?”.. என்றான் தோழியின் ஆண் வேஷத்தை பார்த்து,,.

“அது ஒன்னும் இல்லடா, கார் டிரைவரா வேலை பாக்குறேன்,, அதுக்கு  தான் இந்த அவதாரம்,,?”.. என்றாள் சிரித்துக்கொண்டே..

“ஹேய்  நீ டிகிரி படிச்ச தானா சீதா,, படிப்ப நிறுத்திட்டீயா, “? என்று கவலையாக கேட்க..

“அதெல்லாம் இல்லடா,,  டபுள் டிகிரி  முடிச்சு பி, எச், டி பண்ணி முடிச்சாச்சு,, இதோ பார்” என்று போனா மாதம்   பி, எச்,டி முடித்து பட்டம் வாங்கிய போட்டோவை தன் நண்பனிடம் காட்ட,,..

“சீதா!   சூப்பர் டி,, ரொம்ப சந்தோஷம்,, நீ தான் ஸ்கூல் பஸ்ட் வந்தா,, இப்போ பி, எச் டி,,,, அப்பறம் ஏண்டி இந்த வேலை பாக்குற”?.

“அதெல்லாம் அப்பறம் சொல்லுறேன்,, உன்னை பார்த்து எவ்வளவு வருஷம் ஆகுது,, என்ன பண்ணுற டா நீ” என்று  நண்பனிடம் கேட்டவள்..

அப்போது  தான்   சிரஞ்சீவி பக்கத்தில் இருந்த அந்த இன்னொருவரை  பார்த்தவள் சாக் ஆனாள்.

“இது, இது! சிவா சார் தானே”??.. என்றாள் சீதா… ஒரு நடிகரை  தன் நண்பனோடு பார்த்ததும் பேச்சு வர வில்லை சீதாவுக்கு..

“ஆமாம்  டா சீதா ., சிவா சார் தான்,, நம்ப முடியலையா”?..

“சிவா  சார்! தானா,, என்னால நம்ப  முடியல, சிவா சார்ரா இது,, நீங்க சிவா சாரா”?..

என்று சிவாவிடமே கேட்க..

இவ்வளவு நேரம் ,, தன்னை கண்டு கொள்ளலாம்,, நண்பர்கள் இருவரும் அவர்கள் உலகில் இருந்து  பேசி முடித்து  விட்டு தன்னை பார்த்து, சிவா சார் என்று பேசிய சீதாவை பார்த்தபடியே நின்றான் சிவா..

சிவாவிடம் சில முறை சொல்லி இருக்கிறான் சிரஞ்சீவி,,  என் தோழி சீதான்னு  ஒருத்தி  இருக்க,  அவள  எனக்கு  ரொம்ப பிடிக்கும்  என் பெஸ்ட் பிரண்ட் இப்போ எங்கே இருக்காளுன்னு  தெரியல,  வீட்டையும் மாத்திட்டா,  அவ அம்மாவும் இறந்துட்டாங்க,,எங்கே போனாளோ என்று புலம்பி இருந்தான்..

இப்போது தன் தோழி சீதாவை பார்த்ததும், சந்தோஷமாக உணர்ந்தவன், ‘”முதல்ல  உன் போன் நம்பர், வீட்டு அட்ரஸ் கொடு,, இனி என்னால  உன்னை தேட முடியாது ” என்றவன்..

போன் நம்பரை கேட்க…

சீதா சிரித்துக்கொண்டே தன் போன் நம்பரை சொன்னாள்….

அந்த நம்பரை  ‘மை ஸ்வீட் ஹார்ட் சீதா பேபி’ என்று  தன் போனில்  பதிவு  செய்தவன்..

 “மிஸ்ட் கால்  குடுக்குறேன் சேவ் பண்ணிக்கோ என் நம்பரை ”  என்று சொல்ல..

அவன் நம்பரை  ‘சிரஞ்சு’  என்று சேவ் பண்ணியவள்..

“உன்  அட்ரஸ் கொடு” என்றான்..

சீதா சிரித்து,, “அட்ரஸ் சொல்ல வீடு இருக்கனுமே, வீடு இல்லடா” என்றவள் அவள் இப்போது இருக்கும் இடத்தை  பற்றி சொல்ல..

“என்னாச்சு டி,  நல்லா தானே இருந்தீங்க,, உன் தம்பி எங்கே அவன் என்ன பண்ணுறான்?, அப்பா எங்கே”?..

“தம்பி நல்லா இருக்கான்டா டாக்டர் படிக்குறான்,,”?..

“சூப்பர் சீதா உங்க அம்மா ஆசை பட்ட மாதிரியே உன் தம்பியை  டாக்டர் படிக்க வச்சுட்டீங்க, அப்பா என்ன பண்ணுறார், கார்  ஓட்டுறாரா”?..

“கார்  ஓட்டினார், இப்போ இல்ல டா, அவர் இறந்து போய் இரண்டு மாசம்” ஆகுது.. என்றதும்.. அமைதியாகி விட்டான் சிரஞ்சீவி,. அவன் அமைதியாகி வருந்துவதை பார்த்தவள்.

“நானே அதுல இருந்த மீண்டு வந்துட்டேன் டா,, நீ பீல் பண்ணாத, பீல் பண்ணிட்டே இருந்தா அடுத்ததா யோசிக்க கூடா முடியாது..அப்படி உட்கார வேண்டியது தான்,, என் கூடவே தான்  அப்பா, அம்மா இருக்காங்கன்னு, நெனச்சி தான், நானே  ஓடிட்டு இருக்கேன்,, என் தம்பியை பார்க்கனுமே, அத விடு

நீ என்னடா பண்ணுற”? என்றாள்..

“நான்  டைரக்டர் டி, புதுசா  ஒரு படம் டைரக்டர் பண்ண போறேன்,, அந்த வேலை தான் போயிட்டு இருக்கு , சிவா சார் தான், என் படத்தின் ஹீரோ” என்று சொல்ல..

“வாழ்த்துக்கள் டா, கலக்கு” என்று நண்பனுக்கு கைகொடுத்தவள்..

சிவாவுக்கும் வாழ்த்து சொல்ல…

அந்த நேரம் பார்த்து  சோனாலி   சிதாவிற்கு போன் போட..

அந்த காலை அட்டன்ட பண்ணியவள், “சொல்லுங்க மேம்,  கார்ரெடுத்துட்டு  என்ட்ரன்ஸ்  வரட்டுமா”?.. என்றாள் சீதா..

‘” நோ சீதா, ஒரு  ஹிந்தி டைரக்டர் புது கதை சொல்லுறத சொல்லி இருக்காரு  அதனால அவங்க கூட நான் போறேன்,, நீ வீட்டுக்கு போ” என்றாள்..

“ஓகே மேடம்” என்றவளுக்கு சந்தோசமாக இருந்தது,, அப்பாட தொல்லை விட்டது, என்று பெருமூச்சு விட்டவள்..

சிரஞ்சீவியை பார்த்து சிரிக்க..

“யார் சீதா?” என்றான் சிரஞ்சீவி..

“நான் கார் ஓட்டுறேனே அந்த  கார்  ஓனர்  மேடம், அவங்க வேற யார்கூடவோ போறாங்களாம்,, அதனால  என்னை நீ வீட்டுக்கு போன்னு சொன்னாங்க” என்று கூறியவள்…

சிவாவை  பார்த்து “உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார், நீங்க டிவி சோவுல காமெடி  பண்ணதுல இருந்து உங்களை பிடிக்கும்,, அப்புறம் நீங்க பண்ண இரண்டு மூவியும் பிடிக்கும்,,என்னோடு  பிரண்ட் அழகு மலருன்னு  ஒருத்தி  இருக்க, அவளும் உங்க ப்பேன்,, நான்  உங்களை பார்த்ததை  சொன்னா நம்ப மாட்ட?? ஒரு செல்பி ” என்று கேட்க,,..

 சிவா சீதாவை ரசித்தப்படியே அவளோடு இணைந்து நின்று செல்பி  எடுக்க…

சீதா அந்த செல்பி உடனே அழகு மலருக்கு அனுப்பி வைத்திருந்தாள்…

அவள்  போட்டோவை அழக மலருக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருக்கு கேப்பில் சிரஞ்சீவியை  தனியா இழுத்துக்கொண்டு வந்தான் சிவா,,..

“இதுதான்  உன் உயிர் தோழி சீதா வா..?”.

“ஆமாம் சிவா” என்றான்..

“சீதாவை பார்த்து உங்களுக்கு ஒன்றும்  தோணவில்லை  டைரக்டர் சார்”? என்றான்..

“அவளை பார்த்து என்ன தோணனும்” என்றான்…

“டேய் டைரக்டர் உன் பிரண்ட் நம்ம ஹீரோயின் கேரக்டருக்கு சரியா வருவான்னு எனக்கு தோணுது”…

“என்னடா  சொல்லுற”.. என்றான் சிரஞ்சீவி..

சிவாவும், சிரஞ்சீவி இருவரும் சில மாதங்களாக ஒன்றாக   இந்த பாடத்திற்க்காக  தான் பழகுகிறார்கள்,, இதிலே தான் இந்த அழகான நட்பு  ஊருவாகி இருந்தது,, வாடா, போடா என்று அழைக்கும்  அளவிற்கு இவர்களின் நட்பு உருவாகி இருக்க..

” இவ்வளவு நாள் தேடிட்டு இருந்தீயே,, உன் படத்தோட ஹீரோயின்,, அது சீதா தான்  நல்லா பாரு நீளமான முடி,,  பேசும் கண்கள், தைரியமான பேச்சு எந்த ஒரு நடிப்பும் இல்லாத எதார்த்தமான  பேச்சு,   நீயே  நல்லா கவனி” என்றான் சிவா..

 சீதா இவர்களை தேடவும்..

 அப்போதுதான் அவளை கவனித்தவன்..

 “சரி வா” என்று நண்பனை அழைத்துக் கொண்டு சீதா அருகில் வந்தவன் ..

 அப்போதுதான் டைரக்டர் என்று நினைப்பில்  சீதாவை பார்த்தான்..

 தான்  உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரத்தில்  ஹீரோயின் கேரக்டர் தேவையான அனைத்து குணாதிஸ்யங்கள்  சீதாவிடம் இருக்க.. சீதாவை பார்த்தபடியே இரு ஆண்கள் நிற்க..

 “என்ன ரெண்டு பேரும் தனியா போயி  பேசிட்டு வந்துட்டு என்னை முறைச்சு பார்க்கிறீங்க?”  என்றாள் சீதா…

 “சீதா நான் ஒன்னு சொன்னா நீ என்னை அடிக்கக்கூடாது”  என்றான் சிரஞ்சீவி..

 “அடிக்கிற மாதிரி சொன்னா அடிபேன்டா” என்றவள்  சிரிக்க..

 “அடிக்க மாட்டேன்னு சொல்லு விஷயத்தை சொல்றேன்” என்றான்..

 “அட லூசு சொல்லுடா அடிக்க மாட்டேன்”  என்றவள் நிமிர்ந்து கைகட்டி நிற்க….

 அவள் நிமிர்ந்து நின்ற தோரணையும்,  பேசிய பேச்சைப் பார்த்தவன் இவள் தான் என் பட ஹீரோயின் என்று  முடிவு எடுத்தவன்..

 “என் படத்துல ஹீரோயின்னா நடிக்கிறியா சீதா”?.. என்றான்..

 அவன் சொல்லியதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் சீதா.. “போடா லூசு பயலே” என்று அவள் சிரிக்க…

 “சீதா” என்றான்..

 “என்ன?  என்ன வச்சு காமெடி பண்றியா போடா?” என்றவள் மீண்டும்  சிரிக்க..

” சீதா  நான் சீரியஸ்சா  சொல்றேன் என் படத்துல உள்ள ஹீரோயின் கேரக்டருக்கு நீ சரியா வருவேன்னு,  எனக்கு தோணுது”…

 “டேய் உளறாத” என்றாள் சீரியஸ்சாக..

 “நான் உளறல்ல எனக்கே முதல்ல தெரியல சிவா சார் தான் சொன்னாரு” என்று கூற..

 “நீங்க ரெண்டு பேரும் என்ன வச்சு காமெடி பண்றீங்களா, நீங்க தேடுற ஆளு நான் இல்லடா “?…

 சீதாவின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து பார்த்த  சிவா..

 அவள்  பேசியதை கேட்டு  முன்னாடி வந்து நிற்க..

 சிவாவை நிமிர்ந்து பார்த்தாள் சீதா..

 அவனின்  தீவிரமாக முகத்தை  பார்த்து சீதாவுக்கு பயம் வர..

 சிவாவை பயத்தோடு  நிமிர்ந்து பார்த்தாள்…

 “நாங்க எத்தனை மாசமா இந்திரசேனா   படத்துக்காக  ஹீரோயின் தேடிட்டு இருக்கோம் தெரியுமா  சீதா”.. என்றான்..

 “நாங்க பல மாசமா ஹீரோயின்னுக்காக, எத்தனை நடிகைகளுக்கும், பொண்ணுங்களுக்கு   மேக்கப் டெஸ்ட் போட்டு பார்த்தோம் தெரியுமா? ஒரு ஹீரோயின் கூட செட் ஆகல,, நீ சரியா வருவேன்னு எங்களுக்கு தோணுது,,”.. என்றான் சிவா..

 “சிவா சார் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு நடிக்க வராது, அதுல  எனக்கு  இன்ட்ரஸ்ட் இல்ல,, நம்ம சோனாலி ஹீரோயின் மேம்மை கூப்பிட்டீங்களா”?..

“போன மாசம் அவங்களுக்கும் மேக்கப் டெஸ்ட் பண்ணோம்,, அவங்க இந்திராசேனா படத்துக்கு  செட்டாக மாட்டாங்க  சீதா, நீ நடி  சீதா கண்டிப்பா படம்    நல்லா வரும்” என்றான்..

 சீதா  சோனாலி என்றதும்,, “சோனாலிக்கு உனக்கு என்ன பழக்கம்  சீதா” என்றான் சிரஞ்சீவி..

 “நான் சோனாலி மேம்முக்கு தான் கார் ஓட்டுகிறேன்” என்றாள் சீதா…

 “அப்போ  போன மாசம் சோனாலி  மேக்கப் டெஸ்ட் பண்ணுறப்போ, நீயும் கூட வந்திருந்தியா சீதா”?..

 ” ஆமாம். நான்தான் கார் ஓட்டிட்டு வந்து இருந்தேன்” என்றாள்..

 “உன்னை பக்கத்துல வச்சுகிட்டே  பாக்காம இருந்திருக்கிறேனே” என்று தன்னை தானே நொந்தவன்..

இனி உன்ன விடமுடியாது என்று முடிவு எடுத்தா சிரஞ்சீவி….

 “நீதான் என் படத்தோட ஹீரோயின்” என்று சிரஞ்சீவி சொல்ல..

” டேய் ஏன்டா உனக்கு இந்த தேவையில்லாத வேலை, உனக்கு நான் கார் ஓட்டிட்டு நிம்மதியா இருக்குறது பிடிக்கலையா? என்னைய ஆள விடுடா சாமி,, இப்பதான் பி எச் டி முடிச்சிருக்கேன்.. இன்னும் ரெண்டு வருஷம் என் கடனை எல்லாம்  அடைச்சிட்டு,   ஒரு நல்லா  வேலைக்கு போறது தான்  என்னோட ஆசை, தேவையில்லாம இதுல என்னை இழுத்து விடாதே,, எனக்கு நடிக்கறதுல  எல்லாம் விருப்பம் இல்லை, இந்த பேச்சை இதோட விடு சிரஞ்சு” என்றாள்.

 “சீதா” என்றான் சிரஞ்சீவி கோபமாக…

 சிரஞ்சீவி கோபப்படுவதை பார்த்த சிவா,, “நான் பேசுகிறேன்” என்று சீதாவின் அருகில் வந்து “உன் நண்பன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா சீதா” என்றான்..

 “என் நண்பன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு சார்,, என்  சின்ன வயசுல இருந்து அவனை எனக்கு தெரியும்,, அவனுடைய முதல் ஹீரோயின் நான் தான்..

 நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து  பன்னிரண்டாம் வகுப்பு படிக்குறப்போ ஒரு நாடகம் போட்டோம்,, அதில் அவன் தான் கதை, திரைக்கதை,  வசனம் டைரக்ஷன்,, எல்லாம் அவன் தான் பண்ணான்,, அதில் அவன்  ஒரு சின்ன பையன் கேரக்டருல  கூட நடிச்சிருந்தான்,, அவனுக்கு பாட்டியா தான் நான் நடிச்சிருந்தேன்,,,,

 அவ்வளவு அழகா எடுத்து இருந்தான் அந்த கதையை..  ஒரு பாட்டி  தன் பேரனுக்கு இந்த உலகத்தை பற்றி நல்லது, கெட்டது   சொல்லிக்கொடுப்பது போல கதையை உருவாக்கி இருந்தான்.,,  அவன் மேல நம்பிக்கை இருக்கு சார்., ரொம்ப திறமைசாலி,, நல்லாஉழைபாளி, எடுத்த காரியத்தை சரியாக முடிப்பவன் என் சிரஞ்சு,,. இருந்தாலும் எனக்கு நடிப்பு மேல அவ்வளவு  விருப்பமில்லை ,, பசங்களுக்கு பாடம் எடுக்குறது தான், எனக்கு புடிச்சிருக்கு, என்னை விட்டு விடுங்கள்”… என்றாள்…

 “அப்புறம் என்ன சிதா உன் நண்பன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே”..

 “நண்பன் சொன்னா எல்லாத்தையும் கேட்க முடியுமா சார்,, உங்களுக்கு நடிக்க புடிச்சிருக்கு நடிக்கிறீங்க,, எனக்கு படிக்க பிடிச்சிருக்கு படிச்சேன்,  கார் ஓட்ட பிடிச்சிருக்கு,  கார் ஓட்டுறேன் அவ்வளவுதான்”..

 “சீதா நாங்க மூணு மாசமா ஹீரோயின்னு தேடிக்கிட்டு இருக்கோம் , கிடைக்கல.. உங்கள பாத்து தான் எனக்கு தோணுச்சு சிரஞ்சீவி கிட்ட சொன்னேன் உடனே அவனும் உங்களை பார்த்து சரியாக வருமுன்னு  நினைத்து உங்ககிட்ட கேட்டோம் அவன் கேட்டது தப்பு இல்லையே”..

 “தப்பு எல்லாம் இல்ல சார் எனக்கு நடிப்பு மேல எந்த விருப்பமும் இல்லை நீங்க ரெண்டு பேரும் பேசறது எனக்கு காமெடியாக இருக்குது,, எனக்கு நடிப்ப பத்தி,  ஒன்னும் தெரியாது, என்னை ஹீரோயின்னா நடிக்க, கூப்பிடுறீங்க,, நான் சதாரணமான பொண்ணு, என்னை போய்”.. என்றாள்..

 சிரஞ்சீவிக்கு பயங்கர கோபம். சீதா புரிந்துகொள்ள மாட்டேங்குறாளே… என்றவன்.

” ஆமாம் எங்களை பார்த்தால் உனக்கு காமெடியாகத்தான் இருக்கும் சீதா. இங்கு இரண்டு பேரோட வாழ்க்கையை இந்த படத்துல தான் இருக்கு, உனக்கு  நாங்க பண்ணுறது காமெடியா இருக்குல” என்றான் கோபமாக..

 “ஏன்டா  அதுக்கு நான் என்ன பண்ண முடியும்”..

” நீ ஒன்னும் பண்ண வேண்டாம் நாளைக்கு மேக்கப் டெஸ்ட்க்கு  வா பாத்துக்கலாம்”.. என்றான் சிரஞ்சீவி..

எதே… என்று புலம்பியவள்….

 ” இல்ல சிரஞ்சீவி நான் வரல எனக்கு இது ஒத்து வராது,  தெரியாத இடம்,, எனக்கு பயமா இருக்கு என்னை விட்டுடேன்”  என்றாள்…

 சிரஞ்சீவி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்து விட்டான், “நான் படமும் எடுக்கல, ஒன்னும் எடுக்கல, எதுவும் எனக்கு  நடக்காது,, எவ்வளவு நாள் ஹீரோயின் தேடினேன் கிடைக்கல.. இப்போ இறைவனா பார்த்து உன்னை என் கண்ணுல ஹீரோயின்னா காட்டி இருக்கான்,, ஆனா நீ நடிக்க மாட்டேன்னு சொல்லுற,,  எனக்கு படமும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்,, எல்லாம் அமைந்தும் எனக்கு படம்  எடுக்க துப்புயில்லை, என்னால முடியல சிவா ” என்றவன் தன் தலைமீது கைவைத்து விட..

சீதா நண்பனை  பாவமாக பார்த்தாள்…

சிவா சீதாவிடம் “நீ மேக்கப் டெஸ்ட்டுக்கு மட்டும் வா சீதா, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்” என்றான் ..

 நண்பனின் புலம்புவதை பார்த்த சீதா,  “சரி வரேன்” என்று கூற..

 மனதுக்குள் சிரிக்க சிரஞ்சீவி  வெளியில் வருத்தபடுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு “நீ ஒன்னும் வர வேண்டாம்” என்றான்..

 “டேய் ஓவரா சீன் போடாத உனக்காக வரல நான்,, என் ஹீரோ சிவா சாருக்கா வர்ரேன்” என்றாள் சீதா….

  சிரஞ்சீவி மனது நிறைந்திருந்தது,, அவன் தேடியது போல நல்ல ஹீரோயின் அவன்  படத்திற்கு கிடைத்து விட..

படம்  நன்றாக வரும் என்று நினைத்துக் கொண்டான்..

இந்த மூவரின் திரையுலக  பயணம் எப்படி இருக்கோமோ பார்க்கலாம்?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!