லீலாவதியும் அவர் கணவர் வேந்தனும் அவர்கள் போர்களைகளை சொல்லிக்கொடுத்த வைத்திருந்த வீரர்கள் அனைவரையும் போருக்காக தயார் படுத்தினாள்,, வீரசிம்மா தன் நாட்டில் உள்ள படைகளை தயார் படுத்தினான்..செஞ்சி நாடு பெரிய நாடு,, முதல் நாளே அவர்களை வீழ்த்த வேண்டும், மறுநாள் என்றால்,, பெறும்படையோடு வந்து விடுவார் என்று திட்டம் தீட்டினான் வீரசிம்மன்,, அதன் படி, போர் செய்ய முடிவு செய்தவன்…
போர் நடக்கும் இடத்துக்கு சென்று விட்டான்.
Advertisement
தன் தாயிடம், குழலிசை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றே அவன் சென்றது,, நிச்சயம் முடிந்து இருப்பதால் குழலிசை வெளியில் வர வேண்டாம்,, என்று சொல்லி சென்றிருந்தான் வீரசிம்மா..
Advertisement
அமைதியாக இருந்த குழலிசை ராஜாவுக்கு தெரியாதவாரு ஆண்வேடமிட்டு அவனுக்கு முன் போர் நடக்கும் இடத்துக்கு சென்றிருந்தாள்..
Advertisement
வீரசிம்மன் போரில் முதல் நாளே வெற்றி பேற வேண்டும் என்றே, தீர்மானம் செய்திருந்தான்..
Advertisement
மறுநாள் அழகாய் விடிந்தது,, போர் நடக்கும் இடத்துக்கு இரண்டு நாட்டு வீரர்களும், மன்னர்களும் தயாராக போர்களத்தில் நிற்க.
போர் சங்கு முழங்கவும் போர் தொடங்கியது.
முதலில் வீரர்கள் படை செல்ல,, அடுத்தது, குதிரை படை,,.
குதிரை படையை கார்குழலி வெற்றி கரமாக வழிநடத்தி முன்நோக்கி சென்றாள்,, அடுத்தது யானை படைகளை வேந்தன் முன்னோக்கி சென்று எதிரிகளை தாங்க..
சேந்தனன் ராஜாவுக்கு வீரசிம்மன் ஒருவனே அவனை சுலபமாக வென்று விடலாம் என்று எடைபோட்டிருந்தார், அவர் கார்குழலின் குதிரைபடை வேகத்தை பார்த்து வியந்த நின்ற நொடி, வரிசையாக யானை படைகள், என்று வரிசையாக இவர்களை தாங்க,,..
பெறும் சண்டை நடந்துக் கொண்டிருந்தது,,…
சேந்தனன் நாம் சிறிய படையோடு வந்தது தவறாகி விட்டதே, என்று நினைத்தவர், அவரின் மந்திரியை அழைத்து பெரிய வீரர்களை அழைத்து வீரசிம்மனை கொல்ல சொல்லி ஆணை இட..
இது தவறு என்று தெரிந்தும் அந்த வீரர்கள் வீரசிம்மனை, போரில் ராஜாவிடம் சண்டை போடாமல் பின் இருந்து தாங்கி வீரசிம்மனை கொல்ல பார்க்க.
இதை அறிந்துகொண்ட குழலிசை ராஜாவிடம் எப்படியாவது இந்த விசயத்தை சொல்ல வேண்டும் என்று குதிரை வேகமாக ஓட்டிக்கொண்டு வர..
அவள் வருவதற்கு முன் ராஜாவை பின்னிருந்து தாங்கினார்கள் அந்த நயவஞ்சக காரர்கள்… முதலில் ராஜாவின் குதிரையை தாக்கி ராஜாவை கீழ இறங்க வைத்தவர்கள்.. ராஜாவை சுற்றி பகைவர்கள் சூழ்ந்து கொள்ள..
வீரசிம்மன் தன் வாள்கொண்டு பகைவர்களை வீழ்த்தி கொண்டு சண்டை போடு..
சரியாக குழலிசை வந்தவள், குதிரையில் இருந்த படியே, அந்நியர்களை தாங்க,, வீரசிம்மா குழலிசை திரும்பி பார்த்தவன் ‘நீ ஏன் வந்த இசை”, என்று எதிரிகளிடம் சண்டை போட்டுக்கொண்டே குழலிசையிடம் பேச..
“உங்களை போர்களத்தில் தனியே விட்டு, என்னால அரண்மணையில் இருக்க முடியாது ராஜா” என்றவள், எதிரிகளை வெட்டி வீழ்த்திய படியே ராஜாவை காத்து நிற்க, மேலும், மேலும் ராஜாவிடம் சண்டை போட ஆட்கள் வந்து கொண்டே இருக்க,,, ராஜாவிடம் சண்டை போட வரவில்லை அவர்கள், ராஜாவை கொல்லும் நோக்கத்தோடு வீரசிம்மனை பின்னிருந்து எதிரிகள் தாக்க,..
இருவரும் அதிவேகமாக தன் வாளை வைத்து எதிரிகளை வீழ்த்திய படியே முன்னேற..
செஞ்சி நாட்டு வீரர்கள் குறைய ஆரம்பித்தார்கள்,, இந்திரா சேனா வெற்றியை நோக்கி முன்னேற,, சேந்ததனன் அரசனால் இதை தாங்க முடியவில்லை,, வீரசிம்மனை இன்று கொன்று அந்த நாட்டை நாம ஆளவேண்டும் என்று வேறி வர.
கடைசி ஆயுதமாக விசம் தடவிய அம்புகளை தூரத்தில் இருந்து வீரசிம்மா மீது எய்ய சொல்ல, அதன்படி சரியாக வீரசிம்மன் மீது விசம் தடவிய அம்புகள் ராஜாவை நோக்கி வர,,..
வீரசிம்மன் அம்புகள் வருவதை கவனிக்கவில்லை எதிரிகளிடம் அவன் சண்டை போட்டுக்கொண்டிருக்க,, குழலிசை அந்த அம்புகளை பார்த்தவள் ராஜாவை காப்பாற்றவென்று “அரசே” என்று அவனுக்கு எய்த விச அம்புகளை அவள் தாங்கி கொண்டாள்..
தன் மேல் குழலிசை வந்து விழவும் “இசை” என்று அவளை தாங்க தூரத்தில் இருந்த பல அம்புகள் குழலிசை உடல் முழுவதும் பாய்ந்திருந்த…
தன்னவள் மீது அம்பு பாய்ந்ததை உணர்ந்தவன், “இசை இசை, ஏன்டா இப்படி” என்றவன் “ஏய்ய்ய்ய்” ,,, ” என்று எதிரிகளை பார்த்து கத்த,, தூரத்தில் இருந்த வெற்றி கொடியை நாட்டிய கார்குழலிக்கு வீரசேன கர்சிப்பது கேட்க,, இந்திர சேனா வெற்றியை உருதி செய்தவள்,, குதிரையில் வேகமாக ஓட்டிக்கொண்டு வர…
விசம் பாய்ந்த அம்புகளை தாங்க முடியாத குழலிசை துடி, துடிக்க,, அவள் துடிப்பதை பார்க்க முடியாத ராஜா..
“இறைவா, என் தேவி இவ்வளவு வேதனை படவேண்டுமா, இசை, இசை இசை” என்று அவளை தன் மடிமீது ஏந்தி கொண்டு வீரசிம்மன் போர்களம் அதிரும் படி கத்த,, சில நொடிகள் “அத்தான்” என்ற ஒரு வார்த்தை கூறிய குழலிசை விண்ணுலகம் சென்றிருந்தாள்..
குழலிசை அத்தான் என்றதும் “இசை” என்றவன் அவள் முகத்தை பார்க்க.. மூச்சு, பேச்சின்றி கண்களில் ஏக்கத்தோடு தன்னை பார்த்தவண்ணம் தன் மடிமீது உயிரற்ற கிடந்தவளை கட்டி அணைத்து கொண்டு “ஏன்டி வந்த, ஏன் வந்த உன் உயிரை விட வா” என்று வீரசிம்மன் குழலிசை தன் மார்போடு அணைத்த படியே கதறிக்கொண்டிருக்க..
இது தான் சரியான நேரம் வீரசிம்மனை கொன்று விடலாம் என்று ஒருவன் வீரசிம்மாவின் மேல் வாளை வீச,,, போக..
வாள் வீச போனவின் கை துண்டாக போயி கீழே விழந்து கிடந்தது,, கார்குழலி காளி போல வந்து நின்றிருந்தாள்,, பல பேர் சேர்ந்து ராஜாவை கொன்று விடவேண்டும் என்று சூழ்ந்து கொள்ள,, வீரசிம்மனுக்கு தெரிந்து விட்டது,, தன்னை கொல்லத்தான் வந்திருக்கிறார்கள் என்று,, அவனோ குழலிசை தன்னை விட்டு சென்றுவிட்டாள் என்று துயரத்தில் இருந்தே அவனால் வெளியே வரமுடியாமல் கதறிக்கொண்டிருக்க..
வீரசிம்மன் தன் தங்கையை கட்டி அணைத்து கதறுவதை பார்த்த கார்குழலி ! தங்கை இறந்து விட்டாள், என்று அறிந்து கொண்டவள்,,..
வீரசிம்மனை கொல்ல வந்த கொடியவர்களை வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தாள்,, கண்ணீல் அக்னி தீ போல எறிய.. வெறிக்கொண்டு அனைவரையும் வெட்டி வீழ்த்தியவள்,, தன் தங்கை முன் மண்டியிட்டு “சின்னபொண்ணு, என் தங்கபொண்ணு, வாடி, இசை” என்று கார்குழலி கதறி அழ..
இவ்வளவு நேரம் கார்குழலின் வெறியான வேட்டையை இசையை அணைத்தபடியே பார்த்திருந்த வீரசிம்மன்..
கார்குழலி கதறுவதை பார்த்தவன்..
குழலிசையை தன்னில் இருந்து பிரித்து அவளிடம் காட்ட….
இரத்த வெள்ளத்தில் தங்கையை பார்த்தவள்,, “என் தங்க பொண்ணு, உன்னை இப்படி விட்டுவிட்டேனே, ஐயோ, அம்மாவுக்கு என்ன பதில் சொல்வேன்” என்றவள் கதறி அழ..
வீரசிம்மனின் பின் இருந்து ஒருவன் கடப்பாறையை ராஜா மீது வீச அதை பார்த்து கார்குழலி,, தன் வாளை எடுத்து கடப்பாறை வீசியவன் மேல் வீசியவள்.. ராஜா மேல் கடப்பாறை வீழாத வாறு, கடப்பாறையை எய்தவனை கொன்று விட்டு,, தன் உயிரை ராஜாவுக்காக விட..
வீரசிம்மனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, திடிரென்று கார்குழலி யார் மீதோ வாள் வீசுவதை பார்த்தவன்,, திரும்பி பார்க்க. கார்குழலி தன் மேல் விழுவதை உணர்த்தவன்..
அவள் “ஆ…” என்று சத்தம் போடுவதை பார்த்தவன்..
“கார்குழலி, கார்குழலி என்னாச்சுடா”, என்றவனின் மேல் குருதி கெட்ட,, அவளை திருப்பி பார்த்தவனின் கண்கள் அப்படியே நின்று விட்டது..
ஒரு பெரிய கடப்பாறை அவள் முதுகில் குத்தி ரத்தவெள்ளதில் இருந்தவளை,பார்த்தவன் கடப்பாறையை உடனே பிடிங்கி போட்டவன்,, “கார்குழலி, கார்குழலி மா,, உனக்கு ஒன்னும் ஆகாது டா என்றவன்,
அவளை காப்பாற்றி விடலாம் என்று வைத்தியரை தேடி கார்குழலியை தூக்கிய படியே வீரசிம்மா ஓட தயாராக..
“வேண்டாம் அரசே, என்னை காப்பாற்ற முடியாது, என் தாயிக்கு செய்த சத்தியத்தை நானும், என் தங்கையும் நிறைவேற்றி விட்டோம்,,,, என் தாய் எனக்கு முதலில் சொல்லிக்கொடுத்தது இது தான் உன் உயிரை கொடுத்தாவது இந்த நாட்டின் ராஜாவின் உயிர் காப்பது,, தினமும் என்னிடம் என் தாயி சொல்லுவார் இந்த நாட்டின் ராஜா என்பவர் நமக்கு தந்தை போல, அவர் உயிரை காப்பது நமது கடமை” என்று கார்குழலி ரத்தவெள்ளத்தில் கூறினாள்.
“கார்குழலி உனக்கு ஒன்னும் ஆகாது நீ ஒருத்தியாவது என் அத்தைக்கு மகளாக இருக்க வேண்டும் என்ற வீரசிம்மன்,, கார்குழலியை கையில் ஏந்திய படியே ஓட..
“அரசே” என்றவள் மூச்சு விட கஷ்டபட,,..
“இன்னும் கொஞ்சம் நேரம், வைத்தியரை பார்த்துவிடலாம்” என்று வீரசிம்மன் வைத்தியர் இருக்கும் குடில் பக்கம் போக,,..
வேண்டாம் என்ற கார்குழலி,, எனக்கு ஒரு கடைசி ஆசை என்றாள், மூச்சை இழுத்து விட்ட படியே..
“சொல் கார்குழலி'” என்று வீரசிம்மா, சொன்னதும்,,….
“என் உயிர் உங்கள் கையிலே போகட்டும்”, என்றவள், நீண்ட மூச்சை விட..
‘கார்குழலி” என்ற வீரசிம்மன், அவளை தன் மடிமீது படுக்க வைக்க, என் பாக்கியம் செய்தேன் நான் என்று கார்குழலி கூறியதும்..
அவள் விழியை பார்த்த வீரசிம்மன்,, “என்னை விரும்பினாயா கார்குழலி “..
என்றதும்..
“இந்திரா சேனா நாட்டின் அரசரை யாருக்குத்தான் பிடிக்காது அரசே” என்றவள்,,..
“எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, நான் என் தங்கையை பார்க்க போகிறேன்,, விடை கொடுங்கள் அரசே” என்றவள்,, சிரித்துக்கொண்டே தன் உயிரை விட்டிருந்தாள்..
இரண்டு பெண்களிள் உயிர் தன் மடிமீதே போய் விட்டதே, இவளையும் காப்பாற்ற முடியாத பாவியாகி விட்டேன் என்ற வீரசிம்மன் கார்குழலியை தூக்கியபடியே,, குழலிசை இறந்த கிடக்கும் இடத்துக்கு வந்தான்,,.
இருவரையும் தன் மடிமீது, படுக்க வைத்தவன், உங்க உயிரை கொடுத்து என் உயிரை காப்பாற்றியிருக்கீர்கள்..
வேந்தன் போரில் வென்று விட்டோம் என்ற மகிழ்ச்சியில் யாணை படையோடு வீரசிம்மனின் அருகில் வர..
ராஜா யாரையோ மடி மீது வைத்திருப்பதை போல தெரிய யாணையில் இருந்த இறங்கி ஓடிவந்தவர் வேந்தன், தன் இரு பெண் சிங்ககுட்டிகளை உயிரற்று கிடப்பதை பார்த்த வேந்தன் “பிள்ளைகளோ” என்று கதறியபடியே தன் பிள்ளைகளின் உயிரற்ற உடலை தொட்டு தூக்கி அழ..
லீலாவதி தன் பிள்ளைகள் போர்களத்தில் இறந்த விட்டனர் என்று தெரிந்து அழறியபடியே போர்களத்து ஓடி வந்தவர்..
வேந்தன் பிள்ளைகளை பார்த்து கதறுவதை பார்த்த, லீலாவதி அமைதியாகி கணவரை வந்து தாங்கிக் கொள்ள..
மனைவியை பார்த்து இன்னும் அழுதார் வேந்தன்,, இப்படியாகிவிட்டதே… “என் செல்வங்கள் என்னை விட்டு போயிவிட்டார்களே நான் என்ன செய்வேன்” என்று அவர் கதற.
வீரசிம்மா அந்த துக்கத்திலும் வாய் திறந்திருந்தான்,..
“அத்தை நீங்க சொல்லியது பலித்து விட்டது”.. என்று..
என்ன என்பது போல் கணவனும், மனைவியும் வீரசிம்மனை பார்க்க.
“நீங்கள் தான் தினமும் கார்குழலியிடமும், குழலிசையிடமும் ராஜாவை உயிர் காக்க உங்க உயிரையும் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லி வளர்த்தீர்கள். நீங்கள் சொல்லியதைப் போல என் உயிரை காக்க உங்கள் மகள்கள் இருவரும் உயிரை கொடுத்து விட்டார்கள்,, சொல்லியது பலித்து விட்டதே அத்தை” என்று அழுதான் வீரசிம்மா..
“ஏன்னத்தை எப்படி சொன்னீர்கள் ராஜாவே உயிர் காத்து நீங்களும் உயிரோடு இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்திருக்க கூடாதா? சொல்லிய சொல் அதன் படியே நடந்து விட்டதே” என்று அவன் கதற…
“ஐயோ நான் சொல்லியது பலித்து விட்டதே” என்று லீலாவதி கதறுவதை பார்த்த வேந்தன், மனைவியை தாங்கிக் கொண்டு அழாதே என்று அவரை தாங்கிக்கொள்ள..
“அத்தை நான் சொல்வதை கேட்பீர்களா”? என்று வீரசிம்மா லீலாவதியிடம் கேட்க..
“சொல்லு” வீரசிம்மா என்றார் லீலாவதி
“உங்கள் மகன் வீர வேந்தனை இந்த நாட்டு அரசனாக்குங்கள், எனக்காக உயிர் விட்ட உங்கள் இரு மகள்களையும் நான் தனியே விடபோவதில்லை,, ” என்று கூற..
“வீர என்ன செய்ய போகிறாய்”?..
என்று லீலாவும் வேந்தனும் பதற..
“அடுத்த பிறவியில் கண்டிப்பாக நாங்கள் மூன்று பேரும் பிறப்பெடுப்போம்,, அந்த பிறவியிலாவது நாங்கள் உயிரோடு இந்த உலகத்தில் சந்தோஷமாக வாழ்வோம்,, போய் வருகிறேன் அத்தை” என்றவன் குழலிசையின் மீது எய்த விஷ அம்பை எடுத்து தன் மேல் குத்தி உயிரை விட்டான் வீரசிம்மா!!!.
“என்ன ஆச்சு ப்பேட்டி அந்த வீரசிம்மா ராஜா உண்மையில் செத்துப் போயிட்டானா ” என்று சின்மய் கேட்க..
“எஸ் மா, அவன் உயிர் விட்டு விடுவான்” என்று சோனாலி கூற.
“நல்லா இருக்கு பேபி கதை, நீ எந்த கேரக்டரின் நடிக்க போறதா இருந்துச்சு”?..
“கார்குழலி, குழலிசை இரண்டு கேரக்டரு மம்மி, ஆனால் எல்லாம் போச்சே??? இந்த சீதா மட்டும் இந்த கேரக்டருல நடிச்சா நம்பர் ஒன் ஹீரோயின்னா ஆகிடுவா” என்று பொறமையில் பொங்க,,..
“கண்டிப்பா இந்த படத்தை பார்க்கனும் பேபி” என்று சின்மய் சொல்ல,,.
“மா” என்று கத்தி இருந்தாள் சோனாலி…..
அங்கே தன் பீச் ஹௌசில் ஸ்விம்மிங் பூலில் மிதந்து கொண்டே ரவிதேஸ்சா. சீதா எப்படி குழலிசை கேரக்டரில் நடிப்பாள் ? அதை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்ற இந்திரா சேனா படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு சொல்ல வேண்டும் என்று ரவிதேஸ்சா நினைக்க..
இவன் கண்ணீலே சீதாவை காட்ட கூடாது என்று சிரஞ்சீவி நினைத்துக்கொண்டிருந்தான்..