அவளிடம் கஞ்சியை கொடுத்து விட்டு சென்று.. வெகு நேரம் ஆகி திரும்பி ஹாலுக்கு வந்த போது அசைவே இல்லாது.. விழித்த படி நின்ற கனியை நெருங்கிய செந்தமிழ்.. கனிகாவை அழைக்க.. அவளோ, ஏதோ ஒரு சிந்தனையில் இருந்ததால் அவரும் அவளின் தோளை தொட்டு உலுக்கினார்.
அதற்கு அவள் சொன்ன வார்த்தையில் முதலில் அதிர்ந்தாலும், “லூசு.. லூசு.. என்னோட மானத்த வாங்குது.
Advertisement
எந்த நேரத்துல தான் இத நா பெத்தேனோ..? ஆண்டவா..” என்றபடி,
தலையில் மானசீகமாய் அடித்துக் கொண்டவர் நறுக்கென ஒரு கொட்டை அவளின் மண்டையில் வைக்க, சுயநிலைக்கு முழுதாய் வந்தவள் சொன்னது அதைவிட கொடுமையாய் இருக்க,
நல்லா கம்பிய காய்ச்சி வாய்லயே இழுத்து விட்டா தான் அடங்குவீயா..?” என திட்ட துவங்கவும் தான் நடப்புக்கு வந்த கனிகாவிற்கு நடப்பது எல்லாம் புரிய,
Advertisement
‘அப்போ இப்ப நடந்தது எல்லாமே கனவா..? அதானே பார்த்தேன்.. என்னடா இந்த மாமாக்கு எப்படி இவ்வளவு ரொமான்ஸ் வருதேன்னு…!’ நினைத்தபடியே வெளிப்படையாய் தலையில் அடித்துக்கொண்டாள்.
“உன்னை பெத்த கொடுமைக்கு நா செய்ய வேண்டியத நீ ஏன் செய்யற..?
கஞ்சிய கொண்டு போய் மாப்பிள்ளைகிட்ட கொடுக்க சொன்னா, படியில நின்னுட்டு கண்ண முழிச்சிட்டே கனவு கண்டுட்டு இருக்கே..! உன்னை..” என எப்போதும் போல தனது சுப்ரபாதத்தை செந்தமிழ் ஆரம்பிக்க,
இன்னைய கோட்டா காலைலயே முடுஞ்சு போச்சு. மிச்சம் மீதி இருந்தா இன்னொரு நாள் வச்சுக்கோ.
ஏற்கனவே நீ செஞ்ச அட்வைஸால, ‘வொய் பிளட்… சேம் ப்ளட்..’ நிலைமையில தான் என்னோட காது இருக்கு.
மறுபடியும் தாங்காது மம்மி. ப்ளீஸ்..” என சொன்னபடியே திரும்பியவள் அதிர்ந்து போய் நின்றாள் வெற்றிவேல் செழியனின் பார்வையில்.
அவன் பார்த்தது என்னவோ கோபப்பார்வை தான்.. ஆனால், கனவாய் இருந்த போதும் சிறிது நேரத்திற்கு முன்பு தான் பார்த்த அவனின் தாப பார்வை, அவனை நேர் கொண்டு பார்க்க இயலாமல் பெண்ணவளை படுத்த, முகம் மொத்தமாய் சிவந்த நிலையில்.. அந்த இடத்தில் நிற்காமல் ஓட்டம் பிடித்தாள் சமையலறையை நோக்கி.
“என்னாச்சு இவளுக்கு..? இவ ஏன் இப்படி ஒரு ரியாக்க்ஷன் கொடுத்திட்டு போறான்னு தெரியலையே..!
ஏற்கனவே கண்ணு சிவந்திருக்கற மேட்டர்ல.. எல்லா மேட்டரும் முடுஞ்ச மாதிரி லுக்கு விடுறாங்க அத்தையும், அம்மாவும்.
அது அங்கிருந்த மாமாக்கு வேணுமின்னா புரியாம இருக்கலாம். ஆனா இந்த போலீஸ்காரன் கண்ணுல பட்டுச்சே..!
இதுல இவ வேற என்னை பார்த்ததும் இப்படியெல்லாம் பண்ணி வச்சான்னா, அடுத்த மாசமே புள்ளைக்கு தொட்டில் வாங்க ஆரம்பிச்சாலும் ஆச்சரியம் இல்ல..’ என கடுப்பாய் நினைத்தவன், தனது தலையை இருபக்கமும் ஆட்டிக்கொண்டே மேலிருந்து கீழே வர,
ஹாலில் இருந்த பிரகாஷ் அவனின் தோற்றத்தை பார்த்ததும், “என்ன மாப்பிளை யூனிஃபார்ம்ல வந்திருக்கீங்க..!
நேத்து தான் கல்யாணம் முடுஞ்சிருக்கு. இன்னைக்கே ட்யூட்டிக்கு போகணுமா..?” என,
நேற்று திருமணத்தின் போது ஒரு வாரம் லீவில் இருக்க போவதாய் சொன்னவன், இப்படி மறுநாளே ட்யூட்டிக்கு செல்வதை கண்டு சந்தேகம் கொண்டு புரியாது கேட்க,
நம்ம சாதாரணமா கல்யாணம் பண்ணி வச்சிருந்தாலே இப்படி விட்டுட்டு போனா யோசிக்க வேண்டிய விசயம் இது.
அப்படி இருக்கும் போது நம்ம செஞ்சது போர்ஜரி கல்யாணம்.
என்ன விவகாரமுன்னு பார்க்காம பேக்கு மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க..?” என வசைமாரி பொழிய,
“போதும் தமிழூ.. காலைல இருந்து முறைச்சதோட, நல்லா இத்தன நாள் மனசுல நினச்சத எல்லாம் சொல்லி என்ன போதுமான வரைக்கும் டேமேஜ் பண்ணியாச்சு..” என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, ஹாலுக்கு வந்த சந்திராவை கண்டு தனது பேச்சை நிறுத்தியிருந்தார்.
சந்திராவுக்கு இவ்வளவு நேரம் வெளியே பேச்சு குரல் கேட்ட போதும் மாமியாரும், மருமகளும் எப்போதும் போல கொஞ்சலில் இருந்ததால், வெற்றிவேலின் வாகனம் கிளம்பி சென்ற சத்தத்தில் தான் அவன் சென்றுவிட்டது புரிய அவசரமாக ஹாலுக்கு வந்தவர்,
தமிழும், பிரகாஷும் பேசிக்கொண்டு இருந்தது தான் வந்ததும் நின்று போனதிலேயே, ‘ஏதோ விவகாரம்..’ என்பதை உணர்ந்தவர் சடனாக அதை பற்றி கேட்பது உகந்ததாக தெரியாததால்,
“தமிழு.. போனது நம்ம வெற்றி தானா..?” என தெரிந்துமே கேட்க,
“ஆமா அண்ணி. ஏதோ அவசரமா போன் வந்துச்சு. நான் போயே ஆகனுமுன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்.
நா சாப்பிட்டு போக சொன்னதுக்கு கூட இல்ல வெளிய பார்த்துக்கறேன்னு சொல்லிட்டே நிற்காம வெளிய போயிட்டார்.
நாளைக்கு மறுவீட்டு விருந்துக்கு கேட்கலாமின்னு நினச்சோம்..” என அதற்கு இடமே கொடுக்காமல் வெற்றி சென்றதை மறைமுகமாய் தமிழ் சொல்லிட,
‘எப்பவும் என்ன ஆனாலும் சாப்பிடாம போக மாட்டானே..!
இன்னைக்கு என்ன ஆச்சு இவனுக்கு..?
அதுவும் என்கிட்டயும் கனிகிட்டயும் சொல்லிக்க கூட இல்ல..’ என மனதில் நினைத்தவர், சந்தேகத்தோடு கனியின் முகத்தை பார்க்க,
கனிகா யாரின் முகமும் பார்க்காமல் தலை குனிந்த விதமே சொல்லாமல் சொல்லியது திருமணத்திற்காக சொன்ன பொய் வெற்றிவேல் செழியனுக்கு தெரிந்து விட்டது என்பது..!!!