Skip to content
Post Views: 844
மிதந்தலையும் காற்றை பிடித்து வைக்க முயல்வதை போல ராகா, அரவிந்தை தன்னுள் இறுக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனால் சந்தர்ப்பம் புதிய பறவையை அந்த காற்றில் மிதக்க வைக்கும் என்று அவள் கனவா கண்டாள்?
Advertisement
நூறாவது முறையாக அந்த காணொலியை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
குறுஞ்செய்தியின் ஒலி வந்ததும் அவசரம் அவசரமாக வாட்சப்பை பார்த்தாள்.
Advertisement
Advertisement
“நைஸ் எடிட்” சிரிக்கும் தலை இப்படியும் அப்படியமாக ஆடியது. அரவிந்த் தான் அவள் அனுப்பியதை பார்த்து விட்டு பதில் அனுப்பி இருந்தான்.
ராகா, அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் விழித்தாள்.
Advertisement
விருப்பத்துக்கும், வெறுப்புக்கும் வித்தியாசத்தை என்ன அலைபேசி உணரவா போகிறது?. அவன் அனுப்பியதை கொண்டு வந்து இவளிடம் சேர்த்து விட்டு அமைதியாக இருந்தது.
நேற்றிருந்த காதல் இன்று காத்திருப்பு பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக விரக்தியுடன் சிரித்தாள். அவளின் வேலையும், மீண்டும் மீண்டும் அரவிந்தையும், மதுராவையும் நினைவுப்படுத்தியது.
“செம பேர் இல்ல ராகா. ரொம்ப நாளைக்கு அப்புறமா ப்ரெஷ்ஷா ஒரு காதல் சீன் ஓடுது நம்ம செட்ல. எப்படியும் நம்ம டிவியே இவங்களுக்கு கல்யாணம் முதல் குழந்தை வரை அத்தனை நிகழ்ச்சியும் நடத்தி காசு பாத்துடும். இப்பவே இந்த பொண்ணு செம வைரல். அரவிந்த் முகத்தில் இருக்க அந்த வெட்க சிரிப்பு மதுரா காதலை அவரும் விரும்பறார்னு தான் சொல்லுது..” நேரம் கெட்ட வேளையில் உளறி வைத்தான் உடன் இருக்கும் நண்பன்.
இதயம் நொறுங்குவதன் சத்தம் காதலில் தோற்றவருக்கு தான் கேட்கும்.
அப்படி சில்லு சில்லாய் நொறுங்கினாள் ராகா.
“கண்மணி.. வேண்டாம் சொல்றதை கேளு. கால் பண்ணா வீட்டுக்கே வந்து செய்ய போறாங்க..” ஆதி முகத்தை இப்படியும் அப்படியும் அசைத்தான்.
இடுப்பில் சேலையை அள்ளி செருகிக் கொண்டு, அவன் முகத்தை ஒரு கையிலும், இன்னொரு கையில் ரேசரையும் வைத்துக் கொண்டு இருந்தாள் கண்மணி.
“ஹேர் கட்னா பரவால்ல. ஷேவ் தானே.. நானே பண்றேன். இது
என்ன பெரிய கம்ப சூத்திரமா..? இப்படி ஒரு இழு.. அப்படி ஒரு இழு.” என்று ரேசரை பார்த்தாள்.
“கம்ப சூத்திரம் இல்ல தான். இப்பத்தான் என் முகம் கொஞ்சம் கொஞ்சமா காயம் ஆறி பாக்கற மாதிரி இருக்கு. நீ பிடிக்கிற ஸ்டைல்ல பார்த்தா திரும்ப எதாவது கீறல் போட்டிடுவியோன்னு பயமா இருக்கு.”
“மனைவியை நம்பியோர் கைவிடப்படார்னு சொல்லியிருக்காங்க இல்ல..”
“அது கடவுள் இல்ல..”
“மனைவி வேற.. கடவுள் வேறயா..” ரேசர் அவன் கழுத்துக்கு குறி பார்த்தது.
வேறு வழியில்லாமல் தலையை ஆட்டினான் ஆதி.
“அது..” என்று அவன் கன்னங்களில் வெண்ணெயை ரொட்டியில் தடவுவதை போல், க்ரீமை தடவி, மேலிருந்து கீழ் இழுத்தாள். அப்படியே டிஷ்யூ பேப்பரில் தடவினாள். மீண்டும் மறு பக்கம்.. பின் தாடை.. மீசையை அளவெடுத்து மீதி பகுதியை சரியாக வழித்தெடுத்தாள். ஆனால் அதற்குள் அவளின் முகம் அஷ்ட கோணலாகி.. ஒரு கட்டிட நிபுணர் அளந்து பார்ப்பது போல் கோண அளவு எல்லாம் எடுத்து பக்காவாக முடித்து இருந்தாள். ஆஃப்டர் ஷேவ் லோஷன் அவன் முகத்திலும், அவள் மனதிலும் வாசனையை தந்தது. மூச்சை இழுத்து விட்டாள்.
ஆதிக்கு அவளை பார்க்க பார்க்க சிரிப்பு வந்தது. கூடவே அடக்கமுடியாத காதலும் வந்தது.
உண்மையான காதல் உண்மையில் சிறு பிள்ளைத்தனங்களை வெளிக் கொண்டு வந்து விடுகிறது. தனக்கே தனக்கானவன் என்ற உரிமை. அவனிடத்தில் இதை காண்பிக்காமல் வேறு யாரிடம் காண்பிக்க முடியும்.
“இப்போ கண்ணாடில பாருங்க.. பர்ஃபெக்ட்..ஆதி இப்போ கதாநாயகனாவே நடிக்கலாம்..” என்று அவன் தலையில் ஒரு முட்டு முட்டி, கன்னத்தை கிள்ளி எடுத்து முத்தம் தந்தாள். பின் நாவால் அவள் உதடுகளை ஈரப்படுத்த, அவள் முகம் மீண்டும் அஷ்டகோணலாகியது. டிஷ்யூ பேப்பர் எடுத்து வாயை துடைத்தாள்.
“கண்மணி.. பெண் ஒரு புரியாத புதிர்னு சொல்லுவாங்க.. இன்னிக்கு தான் நேர்ல பாக்கறேன். நீ எல்லாத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம்.. அன்போ, கோவமோ, காதலோ.. எல்லாமே..”
“ம்ம்ம்.. இப்போதான் சாருக்கு மனைவியை பக்கத்துல இருந்து பாத்து ரசிக்க முடிஞ்சிருக்கு. அந்த ஆண்டவனுக்கு தான் நன்றியை சொல்லனும். உங்க கையை காலை உடைச்சு வீட்ல உட்கார வச்சதுக்கு..”
“அடிப்பாவி.. உனக்கு நிச்சயமா சப்ஸ்டியூட்டே கிடையாது..” என்று அவளின் இடுப்பில் கைக்கோர்த்து அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.
“கண்மணி.. நாளைக்கு நாம புது கம்பெனி ஆரம்பிக்க போறோம். பேர் என்ன தெரியுமா? கண்மணி ப்ரொடக்ஷன்ஸ்..” அவளின் கைகளில் இதழ்களை பதித்து கொண்டே சொன்னான்.
“ஏன்.. ஆதி ப்ரொடக்ஷன்ஸ்.. இருக்கறப்ப இது என்ன?”
“ம்ம். எல்லாமே புதுசா ஆரம்பிக்கறப்ப இதுவும் புதுசா இருக்கட்டுமே. இனி எல்லாம் உன் பெயர்ல இருக்கட்டும். பெண்ணை முன்னிறுத்தற எந்த வேலையும் வெற்றி பெறும்..”
அவனது நெற்றி முடியை ஒதுக்கி விட்டு அதில் தன் இதழ்களை பதித்தாள்..
“ஆரம்பிக்கறதெல்லாம் இருக்கட்டும். பழையபடி அங்க வர ஹீரோயின்ஸ், ஆர்ட்டிஸ்ட்ன்னு எவளும் உங்க பக்கம் திரும்பக் கூடாது..”
“இந்த அரைக்கிழவனை யார் பாக்க போறா.. உன்னை விட்டா..”
“ஓ அப்ப பாக்கலைன்னு தான் உங்க வருத்தமா.. பார்த்தா அப்படியே இவர் என்னை விட்டு அங்க போய்டுவார்..கழுத்தை அறுத்து எடுத்துருவேன்..” பத்ரகாளியாய் நின்றாள். அவளை முழுக்க இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டவன்,
“நீ எந்தன் பாதி இதுதானே மீதி,உனை விட்டு போக முடியாதம்மா..
மறைந்தாலும் நான் மறு ஜென்மமே…என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மனி..
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி.. “ என்று பாடினான்.
நெஞ்சோடு அவள், அவனை அணைத்தாள். அவளது முகம் அவன் இதழில் குளித்தது.
மாலை வேளைக்கென்றே ஒரு அழகு உண்டு. ஒரு நாளின் மொத்தமும் இளைப்பாறும் நேரம் அது. கூடடைய அத்தனை உயிர்களும் தவிக்கும்.
“அம்மா. மதுரா அவ ப்ரெண்ட்ஸ்ட்ட இங்க தங்க போறதை சொல்லனுமாம். அப்படியே அவளோட திங்க்ஸ் எடுத்துட்டு வந்திடறோம்.” சிறு பிள்ளையாய் அனுமதி கேட்டு நின்றான் அரவிந்த்.
“இதெல்லாம் சொல்லனுமா.. போய்ட்டு வா. அப்படியே அவளுக்கு என்ன தேவையோ அதை வாங்கி கொடு..” அவனது கன்னத்தில் தட்டி சிரித்தாள் கண்மணி. வளர்ந்தாலும் இன்னும் குழந்தை தான் என்பதை அடிக்கடி நிரூபிப்பவன் அரவிந்த். கண்மணியை லேசாக அணைத்து விட்டு, மதுராவை அழைத்துக் கொண்டு சென்றான்.
காரில் மிக மெதுவான குரல், ஆனால் பழக்கமான குரல் ஒலித்தது. வீட்டிலும் இதே குரல்.. எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மதுராக்கு அதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று துடித்தது.
“இது யாரோட வாய்ஸ்.. ரொம்ப அழகா இருக்கு..”
அரவிந்த் அவளை திரும்பி பார்த்து சிரித்தான். கன்னத்தில் குழி அழகு என்பது சிலருக்கு தான் வாய்க்கும். அந்த அபூர்வம் ஆதிக்கும், அரவிந்த்க்கும் இருந்தது.
“இது அம்மா குரல்..”
“கண்மணி ஆண்ட்டிதா. நிஜமாவா. அவங்க பாடகியா..?”
“ம்ம் ஆமா. அவங்க பாடகி தான். மாமாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகறப்ப பாடறதை விட்டாங்க. இன்னும் திரும்ப பாடல”
“ம்ம்.. சரி அவங்களை அம்மான்னு கூப்பிடறீங்க. அவங்க ஹஸ்பெண்ட் எப்படி மாமாவா ஆவார்”
“ஓ இவ்வளோ கவனிச்சிருக்கியா..”
‘உன்னை கவனிப்பது தானே எனக்கு பிடித்திருக்கிறது’ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள். இதழோரம் நாணத்தோடு ஒரு சிரிப்பு வந்தது.
“அவங்க என் மாமாவும் அத்தையும். அதாவது என் அம்மாவோட கூட பிறந்தவர் தான் ஆதி மாமா..” என்று ஆரம்பித்து அவனது கதை சுருக்கத்தை அவளுக்கு சொன்னான்.
“வாவ்.. கிரேட் இல்ல. உங்களை அவங்க சொந்த பையனா தான் பாக்கறாங்க. தாராக்கும் உங்களுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் கூட பாக்கறது இல்ல.”
“அவங்க முதல் பையன் நான்தான்..”
“அப்போ நீங்க அங்கிளை அப்பான்னே கூப்பிடலாம் இல்ல..” சடாரென்று ப்ரேக் விழுந்தது. முன் போய் முட்ட சென்றாள் மதுரா. சீட் பெல்ட் அவளை நிறுத்தியது. இருந்தாலும் அரவிந்தின் கை அவள் நெற்றி முன் தானாக வந்தது.
“ம்ம்.. யாரும் இதை சொன்னது இல்ல. எனக்கும் தோணினது இல்ல. சின்ன பிள்ளையில் இருந்து அவர் மேல் எனக்கு ஒரு வெறுப்பு இருந்திருக்கு. இப்போதான் அவர் அடிப்பட்ட பிறகு என்னால் அவரை அப்படி பாக்க முடியாம எல்லாத்தையும் மறந்தேன். ஆனா இப்போ இல்ல எப்போவுமே அவர் தான் என் ரோல் மாடல்..” அவனுக்குள் ஆயிரம் யோசனைகள்.
அமைதியாகவே வந்த அரவிந்த், வடபழனியில் இருக்கும் மிகப்பெரிய வணிக வளாகத்தில் வண்டியை நிறுத்தினான். அங்குதான் மதுராவின் தோழிகளை வரச்சொல்லி இருந்தான்.
மாலை நேரக்கூட்டம் நெருக்கமாக ஒருவருக்கு ஒருவர் இடித்துக் கொண்டு போவது போல் தான் இருந்தது. ஒருவழியாக ஒரு உணவு மேஜையை பார்த்து அதன் அருகில் அமர்ந்தான். மதுரா அவளின் மற்ற தோழிகளை அங்கு கண்டுபிடித்து அழைத்து வந்தாள்.
ஆனால் அதற்குள் அரவிந்த்தை சுற்றி ஒரு கூட்டம் கூடியது. பெண்களும் ஆண்களுமாக இளவட்டங்கள் சூழ நடுவில் நின்றான் அரவிந்த். மதுரா அவனை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏதோ ஒரு பிறந்தநாள் விழா அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காதலியின் வெட்க சிரிப்பிற்காக அவளின் காதலன் திடீரென்ற இன்ப அதிர்ச்சியை தர அங்கிருந்த சிலர் ஆட ஆரம்பித்தனர். சிலர் வாசித்து பாடினர்.
ஒரு பக்கம் அரவிந்த் கைநீட்டியவர்களின் கைகளில் தன் கையெழுத்தை இட்டுக் கொண்டே இசைக்கு தலையை அசைத்துக் கொண்டு இருந்தான்.
அந்த பெண்ணின் காதலன்,
“அரவிந்த் சார். என் தேவதைக்கு இன்னிக்கு பர்த்டே. நாங்க ஏதோ ஏற்பாடு பண்ணோம். ஆனா நீங்க இங்க இருப்பீங்கன்னு எதிர்ப் பார்க்கவே இல்லை.. என் தேவதை உங்க டைஹார்ட் ஃபேன். ப்ளீஸ் ரெண்டு வரி அவளுக்காக பாடினா அதை விட பெரிய கிஃப்ட் அவளுக்கு இன்னிக்கு கிடைக்காது.” அவன் கெஞ்ச, அரவிந்ததால் மறுக்க முடியவில்லை.
அங்கு ஒருவன் நீட்டிய கிடாரில் அவர்கள் ஏற்கனவே பாடிய பாடலை வாசித்தான்.
“ப்ளீஸ் ரெண்டு வரி..” அவன் மீண்டும் கெஞ்சினான். அவளை அங்கு அழைத்து வர சொன்னான் அரவிந்த்..
மிரட்சியும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக அவள் அரவிந்ததை பார்த்து கையை வாயில் பொத்தினாள்.
“ஹாய்.. ஹேப்பி பர்த்டே.. உங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்..”
“எனக்கு.. இப்ப லேட்டஸ்டா வந்த கட்சி சேர பிடிக்கும்..” அவள் தயங்கி சொல்ல அந்த கூட்டம் ஹோவென கத்தியது.
“சாய் பாடின பாட்டு.. ம்ம். எனக்கு வரிகள் ஞாபகம் இருக்க அளவுக்கு பாடறேன்.. கூட கொஞ்சம் சொந்த வரிகளை போட்டுக்குவேன்.. டோண்ட் மிஸ்டேக் மீ..”
என சிரித்து அவன் கிடாரில் இசையை ஆரம்பித்து,
இரண்டு வரிகள் பாடினான். அதற்கு மேல் அவனுக்கு ஞாபகம் இல்லை. அதற்குள் யாரோ மதுராவை கண்டுக்கொண்டு அவன் அருகில் அழைத்து வந்தனர்.
அவன் நிமிர்ந்து பார்த்த போது மதுரா அவன் அருகில் நிற்க, அவளை பார்த்துக் கொண்டே அவன் பாடினான்.. அது அத்தனை பேரின் அலைபேசியிலும் பதிவானது..
“செல்லமே ஒத்த சொல்லாலே..
சொல்லிடு உந்தன் காதலை.
வண்ணமே உன் கண்ணால
பாத்திடு என் நெஞ்சத்தை
ஒன்றும் சும்மா வரல..
ஜென்மம் முழுதும் நினைக்க
வந்து நின்னேன் முன்ன..
ம்ம் ம்ம்..
கண் நிறையுது..
காதல் வழியுது
என் பாதம் நிக்கலம்மா..
ஓடி வந்தேன்
தேடி வந்தேன்..
எனை ஏத்துக்கோயேன்ம்மா..
பூந்தளிர பாத்து நிக்கறன்
சேர நிக்கறன்
கார் குழலில் சாக நினைக்கறன்
சேர்த்தணையம்மா.. .. “
அந்த இளைஞர்கள் கூட்டமே ஆடியது ஒரு புது ரத்தம் பாய்ச்சியது போல் இருந்தது அங்கிருந்த அனைவருக்கும்.
மதுராக்கு வாழ்வில் முதல் முறையாக இந்த கொண்டாட்டத்தை பார்க்கும் போது கண்ணீர் வந்தது. அரவிந்த் எவ்வளவு பிரபலமான ஆளாக இருக்கிறான் என்று இன்னும் ஆச்சர்யம் கூடியது.
அவனை அன்பொழுக பார்த்தாள். அவளின் கண்ணீரை அவன் ஒற்றை விரலால் சுண்டியதும் அதற்கும் அந்த கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது. கடைசியாக கூட்டம் அவர்களின் தனிமைக்கும் வழி விட்டு ஒதுங்கியது.
அவளுடைய தோழிகளுக்கு திடீரென மதுராவின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டதை போன்று தோன்றியது.
ஆனாலும் அரவிந்த்தை பார்த்து மிரண்டு தான் போயினர். இப்படி அத்தனை பேர் கொண்டாடும் ஒருவன் மதுராக்காக சாதாரணமாக தங்களை சந்திக்க வந்திருக்கிறான்.
மருண்ட மான்களை போன்று நின்றவர்களை அருகில் அழைத்தான்.
தயக்கத்தின் அருகில் இருப்பதால் நாற்காலியின் நுனி கூட அவர்களுக்கு பெரிய விஷயமாக பட்டது.
“உங்க எல்லாருக்கும் நன்றி.. எனக்கு சொல்ல வார்த்தைங்க இல்ல. இத்தனை நாள் உங்க உழைப்பை மதுராக்காக கொடுத்து இருக்கீங்க. இனி அவ வாழ்க்கை என் பொறுப்பு. அவளை பத்தி கவலைப்பட வேண்டாம். அவ இந்த நிகழ்ச்சில ஜெயிப்பா. அதுமட்டுமில்லாம படத்துலயும் பாட போறா..அதான் அவளை எங்க வீட்லயே தங்க வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.”
அவன் சொல்லியதை குஜராத்தியில் மொழி பெயர்த்தாள் மதுரா.
“அதே மாதிரி உங்க எல்லாருக்கும் ஒரு நல்ல வேலையும், தங்கற இடத்தையும் கூடிய சீக்கிரம் ஏற்பாடு பண்றேன்..” என்னவோ ஆதியை நம்பி சொல்லி விட்டான். ஆனால் மனதில் ஏதோ ஒரு நிம்மதி வந்து அமர்ந்தது. மதுராவுக்கு தன்னாலான உதவியை செய்து விட்ட திருப்தி.
மதுராக்கு அவன் பேச பேச ஆச்சர்யம். எதற்காக இத்தனை தூரம் இவன் இறங்கி வர வேண்டும்? தன் மீதுள்ள இரக்கமா..அதையும் தாண்டி எதாவது ஒன்றா. இதுதான் என்று உறுதியாக அவளால் நினைக்க முடியவில்லை.
‘கிளம்பலாமா’ என்பது போல் அவன் தலையாட்டி கேட்க, கண்ணீர் மல்க, அவள் தோழிகளை கட்டிப்பிடித்து விடைக்கொடுத்து, விடைப்பெற்று கிளம்பினாள்.
அவன் அந்த மாலில் பெரிய கடையாக பார்த்து நுழைந்தான். செல்ல நாய்க்குட்டி போல் அவன் பின்னால் போவதை தவிர அவளுக்கு வழியில்லை.
அலைபேசி ஒன்றை அவளுக்காக வாங்கினான். அது அவளுக்குத்தான் என்ற போது படபடத்தது.
“இது எதுக்கு..? எனக்கு இந்த சாதாரண ஃபோன் போதும்.” என்றாள்.
“இதுல எப்படி பாட்டெல்லாம் கேட்டு ப்ரொக்ராம்க்கு ப்ராக்டிஸ் பண்ணுவ.”
“ம்ம்.. அதெல்லாம் தெரியாதே”
“நான் சொல்லி கொடுக்கிறேன்”
“ம்ம்..” சிறகடிக்காத பட்டாம்பூச்சி அவளின் மேனி முழுதும் பறந்தது.
“வேற எதுவும் வேணுமா. டிரஸ்.. அக்சசரிஸ்..”
“இல்ல.. அதான் செட்ல தராங்களே.”
“அங்க போட்டுட்டு போறதுக்கு வேண்டாமா..வா.. அதையும் வாங்கிட்டு போயிடலாம்..”
அவளுக்கு கண்முன் நடப்பது என்ன கனவா..? எந்த ஜென்மத்து பந்தம் இப்போது தன் கைப்பிடித்து வானின் மீது நடக்க வைக்கிறது? என்ற கேள்விகள் தோன்றியது. அவன் உடைகளை பார்த்து கண்களால் கேட்க, அவள் சரியென்று சொன்னதையெல்லாம் வாங்கினான். கால்கள் வலியெடுத்தது. அதுவே போதும் என்று தோன்ற, கிளம்பினர்.
“உங்களுக்கு இத்தனை கூட்டம் சுத்தி நிற்கறப்ப பயம் இல்லையா?”
“எதுக்கு பயம்.? இப்படி வந்தா தான் நம்மளை எப்படி நேசிக்கறாங்கன்னு தெரியும். அம்மா, மாளவி அத்தைக்கு கூடற கூட்டத்தை பார்த்து பார்த்து எனக்கு பெருசா தெரியல”
“ஓ.. யார் மாளவி அத்தை”
“அவங்க அம்மாவோட ப்ரெண்ட்.”
“ம்ம்ம்..” என்றாள்.
மாளவியின் பாடலை ஒலிக்க விட்டான் அரவிந்த்.
சுகமான தூளியில் ஆடிய சுகத்தை கண்டாள்.. மதுரா. அருகில் அவள் மனம் கவர்ந்தவன். அன்பே உருவான ஒரு குடும்பத்தின் பாதுகாப்பான கைகளில் அவள் இருப்பது எத்தனையோ ஜென்மமாக செய்த தவம் என்று அவளுக்குத் தோன்றியது.
error: Content is protected !!