Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா

ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 17

காதல் அன்று

தன் வீட்டு பால்கனியின் கதவை வெளிப்புறமாக சாத்திக்கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தான் ராகவ்.

அவன் சிகரெட் பிடிப்பது இப்போது கொஞ்சம் அதிகம் ஆகி விட்டது!

முதலில் வித்யாவுக்காக என்று மிகவும் குறைத்துக் கொண்டு விட்டான்!



Advertisement

அதுவும் மித்து பிறந்த பின் இந்த ஐந்து வருடங்களில் இன்னுமே குறைந்து விட்டிருந்தது!

ஆனால் இப்போது இந்த கேஸ் விவகாரம் ஆரம்பித்ததில் இருந்து அவனுக்கு அது இப்பவெல்லாம்  அடிக்கடி தேவைப்பட்டுக் கொண்டிருந்தது!

அவனும் அவன் பெரியப்பாவும் கணித்து வைத்திருந்ததை விட பெரிய பேராசைக்காரியாக இன்னும் சொல்ல போனால் கடைந்து எடுத்த கிரிமினல் ஆகவே இருந்தாள் அந்த ஈஸ்வரி!

Advertisement

அவளுக்கு ஏற்றவாறு ஒரு கிரிமினல் மூளைக் கொண்ட ஒரு வக்கீலும்!

Advertisement

நேரிடையாக வழக்கை சந்திக்காமல், குறுக்கு வழியில் அவனுக்கு தொந்திரவு கொடுத்து அவனை உளவியலாக உடைக்க நிறைய முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்!

ராகவும் அதை சமாளித்து தான் வருகிறான்!

அதற்கு முழு சப்போர்ட் செய்வது அவன் மயிலு தான்!

Advertisement

அவன் மயில் இடத்தில் வேறு பெண்ணாக இருந்தால், தாங்கிக் கொள்ள முடியாமல் பிரிந்து சென்று இருப்பாள்!

அவன் வேலை செய்யும் கம்பெனிக்கு முதலாளி சியாம் என்றாலும் அவனுக்கே முதலாளி அவன் மனைவி!

அவளோ அவள் தம்பி மற்றும் தம்பி மனைவியின் கைப்பாவை!

அவளும் ஒன்றும் கெட்டவள் இல்லையென்றாலும் மிகுந்த ஈகோ உடையவள்!

அதைத் தூண்டி விட்டு தூண்டி விட்டு தான் அவள் தம்பி மனைவி ஈஸ்வரியின் அண்ணன் மகள் காய் நகர்த்தினாள் அவள் அத்தையிடம் போட்டு  இருக்கும் டீலின் படி!

எல்லாமே காசு.. பணம் செய்கிற வேலை!

முதலில் ராகவின் வேலையில், குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தவர்கள், அதாவது ரிப்போர்டிங் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது போல தொல்லைகள் கொடுத்தவர்கள், பின் அவனின் ட்ராவல் க்ளைம்களில் கை வைத்தார்கள்!

அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மென்ட் ஆட்களை மிரட்டி, வேண்டுமென்றே!

அவன் க்ளைம்களுக்கு தேவையில்லாத க்வரிகள் போட்டு போட்டு, ஒன்று ரிஜக்ட் செய்தார்கள் இல்லை என்றால் டிலே செய்தார்கள்!

பின் அவன் சாலரி ஹைக்கை நிறுத்தி வைத்தார்கள்!

சியாம் இதையெல்லாம் பார்த்து சத்தம் போட்டு விட்டால் அவனின் வீட்டில் ஏக ரகளை ஆகி விடும்!

அவன் மனைவி அவர்கள் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் அவள் அம்மா வீடு போய்விடுவாள்!

அவனால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய் விட்டது ஒரு கட்டத்தில்!

ஒரு கட்டடத்தில் ராகவ் பேப்பர் போட்டு விட்டான்!

வேலையை ரிசைன் பண்ணியே விட்டான் இந்த டார்ச்சர்கள் தாங்க முடியாமல்!

ஆனால் அவனின் அதிக திறமை காரணமாகவே அவனுக்கு சட்டென்று உடனே அடுத்த வேலையைத் தேடி கொள்ள முடியவில்லை!

இது என்ன வினோதம்!

ஆனால் யதார்த்தம் அது தான்!

அவன் அப்ளை செய்யும் பெரும்பாலான கம்பெனிகளில் முக்கிய தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், அவன் மென்டர்ஷிப்பில் தங்களை மெருகேற்றிக் கொண்ட,  மேலும் வளர்த்துக் கொண்ட அவனின் ஜூனியர்களாக இருந்து விட்டது அவனின் பேட் லக்!

அவர்கள் “பாஸ் நீங்க எப்படி என் டீமில் எனக்கு கீழே வேலை செய்வீங்க?” என்று சங்கடப்பட்டார்கள்!

இங்கே வேண்டாம் என்று மெட்ரோ சிட்டிகளில் டிரை பண்ணலாம் என்றால், அதிலும் ஒரு பிரச்சினை இருந்தது!

அவன் வேலையோ ஊர் ஊராக சுற்றும் வேலை! அப்படி அவன் பிசினெஸ் டூர் போகும் நேரங்களில் இந்த ஊர், இந்த வீடு என்றால் ஒரு வித பாதுகாப்பு!

இதே பாதுகாப்பு வெளியூரிலும் கிடைக்குமா என்றால் சந்தேகமே!

வேறு ஒரு சராசரி குடும்பம் என்றால் இத்தனை பயப்படத் தேவையில்லை! ஆனால் அவனுக்கு இருக்கிறதே!

அவனுக்கு வித்யா மற்றும் மித்துவின் பாதுகாப்பு பற்றிய பயம் இருக்கிறது மிக அதிகமாகவே இப்போதல்லாம்!

அதை அவனின் மயில் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ளும் போது ஏற்கனவே கொஞ்சம் இயலாமையில் இருக்கும் அவனுக்கு கோபம் தலைக்கேறிவிடுகிறது!

அடிக்கடி அவளிடம் கை நீட்டி விடுகிறான்!

ஆனால் அவள் மற்ற பெண்கள் போல அதற்கு கோபப்படவே மாட்டாள்!

“சாரி மாமா, இனிமே உனக்கு இந்த அளவு கோபம் வர மாதிரி நடந்துக்க மாட்டேன்” என்று தான் சொல்வாள்!

“ஸ்கூட்டியை எடுக்காதே, ஸ்கூல் வேனில் போ, பணம் கட்டுகிறேன்” என்றால், “பீஸ் அதிகம்” என்று கேட்க மாட்டேன்கிறாள்!

ஸ்கூட்டியில் போகும் போது அவர்கள் இருவரையும் ஈஸ்வரியின் ஆட்கள் ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் ராகவிற்கு!

தாய்க் கோழி தன் இறக்கையை விரித்து வைத்துக் கொண்டு அதனுள் தன் குஞ்சுகளை அடக்கி வைத்து கொண்டு மேலே பறந்து கொண்டிருக்கும் பருந்துவிடம் இருந்து காக்க முனைவது போல தான் இருந்தது ராகவின் நிலைமை இப்போது!

இதன் சீரியஸ்நெஸ் புரியாமல் அவள் நடந்து கொள்ளும் போது அவனுக்கும் கோபம்  வந்து விடுகிறது!

“மித்துவை ஜாக்கிரதையாக பார்த்துக்கோ, நீயும் அலர்ட்டாக இரு” என்றால் சில நேரம் கேட்டுக் கொள்பவள் பல நேரங்களில் தவறி, இவனின் கோபத்துக்கு ஆளாகிறாள்!

மற்றபடி, அவள் சொக்கத் தங்கம்! தேடினாலும் கிடைக்காத அரிய பொக்கிஷம் தான் அவனுக்கு!

அதை பாதுகாக்கும் பொருட்டே இத்தனையும்!

கணவனின் வருமானம் குறையும் போது அதை அனுசரித்து குடும்பம் நடத்தும் மனைவியைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்!

அந்த வகையில் ராகவ் ரொம்பவே லக்கி!

வித்யா தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேக்கவே மாட்டாள்!  அவனாக வாங்கிக் கொடுத்தால் தான் உண்டு!

சில சமயம் அதற்கும் அவனுக்கு திட்டும் விழும்!

“ஏன் மாமா இப்படி செலவு பண்றீங்க?” என்று!

இப்படியே எத்தனை காலம் கடத்துவது பேசாமல் பிசினெஸ் ஏதாவது செய்யலாம் என்றால், அதற்கு முதலீடு வேண்டும்!

அவனிடம் கையிருப்பு அவ்வளவு இல்லை!

இருப்பதும் கரைந்து கொண்டு தான் வருகிறது!

அது முற்றிலும் தீரும் முன் வேறு ஏதாவது செய்தே ஆக வேண்டும்!

அவன் சரியான ஓட்டை கை செலவாளி என்று அறிந்து கொண்டு விட்ட வித்யா, அவனிடம் இருப்பதை வலுக்கட்டாயமாக வாங்கி, விரைவில் தாறுமாறாக விலையேற இருப்பதாக சொல்லப்பட்ட, மெயின் ரோட்டில் இருக்கும் வயல் இரண்டு ஏக்கர் வாங்கிப் போட்டிருந்தாள்.

அப்புறம் நகைகளாகவும் இருக்க தான் செய்கிறது!

அவளும் தர ரெடி தான்!

“உனக்கு யூஸ் ஆகாத நகை எனக்கு எதுக்கு மாமா” என்று!

ஆனால் அவன் தான் அதை கடைசியாக வைத்துக் கொள்வோம் இப்போது இந்த நிலத்தை விற்க, ட்ரை பண்ணலாம் என்று சொல்லி விட்டான்!

ஆனால் அவன் நினைத்த மாதிரி அதையும் செய்ய முடியவில்லை!

அந்த இடத்தில் ஹைவேஸ்,  ரோடு எக்ஸ்டென்சனுக்காக இடத்தை எடுத்துக்கொள்ளப் போகிறது என்ற தகவல் பரவி விட, ராகவால் அதை உடனே விற்க முடியவில்லை!

மீறி கேட்டவர்கள் ரொம்பவும் அடி மாட்டின் விலைக்கே கேட்டார்கள்! எனவே பின்னர் பார்த்துக்கலாம் என்று அந்த முயற்சியையே விட்டு விட்டான்!

இப்போது அவன் ரெஸ்யூமை ப்ரபொபைலை குறைத்துப் போட்டு கூட வேறு வேலைக்கு ட்ரை பண்ணிக் கொண்டிருந்தான்!

அவனே இப்படி பல்வேறு டென்சனில் இருந்து கொண்டிருந்த போது, மித்துவுக்கு திடீரென்று காய்ச்சல் அதிகமாகி பிட்ஸ் வந்து விட்டது!

“குழந்தையைக் கூட பார்த்துக் கொள்ளாமல் அப்படி என்ன உனக்கு அரட்டை?” என்று திவ்யா அம்மா முன்னாடியே அவளை அறைந்து விட்டு, குழந்தையைத் தூக்கி கொண்டு ஆட்டோவில் ஏறினான்.

“மாமா அவன் நல்ல ஆக்டிவா தான் இருந்தான்! அவனுக்கு இவ்வளவு  பீவர் இருக்கிற மாதிரியே தெரியல மாமா!

திவ்யாவும் அவனும் மன்மத ராசா பாட்டுக்கு அப்படி குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க இவ்வளவு நேரம்!

அவன் டயர்டாகி  உட்கார்ந்து இருந்தா தானே மாமா எனக்கு டவுட் வரும்! எனக்கு தெரியலேயே மாமா!” கதறிய அவளை அணைத்துக் கொண்டான் ராகவ்!

பின், சில ஆயிரங்கள் செலவளித்து விட்டு டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டி வந்தார்கள்!

வீட்டிற்கு வரும் வழியில் அவளும் திவ்யா அம்மாவும் மித்துவைத் தூக்கி கொண்டு ஒரு பள்ளிவாசல் அருகில் இறங்கிக் கொண்டார்கள்!

வித்யாவிற்கு எத்தனை பெரிய டாக்டர்களை பார்த்து விட்டாலும், அந்த பள்ளிவாசல் பெரியவரிடம் மந்திரித்துக் கொண்டால் தான் திருப்தி!

அது அவளது தனிப்பட்ட நம்பிக்கை!

அதுவும் அவர்கள் தொழுது விட்டு வெளியே வரும் நேரம் பார்த்து போய் மந்திரித்துக் கொள்ள வேண்டும் அவளுக்கு! அதனால் அங்கு இறங்கி கொண்டு விட்டாள்!

வீட்டிற்கு வந்த ராகவ் தனிமையில் யோசித்தான்!

“ச்சே எவ்வளவு பெரிய முட்டாள்த் தனம் இது! எப்படி உன்னால் உன் மயிலுவை அடுத்த வீட்டுப் பெண்மணி முன்னால் அடிக்க மனம் வந்தது!

எப்படி எப்படியெல்லாம் உன்னை, உன் கோபத்தை அனுசரித்து போகிறாள் அவள்!

நீ வித்யா இடத்திலும் அவள் உன் இடத்திலும் இருந்தால் அவளை மாதிரியா இருப்பே” அவன் மனசாட்சி அவனை காறித் துப்பியது!

எப்படி சிக்கனமாக குடும்பம் நடத்துகிறாள்! அவன் கையிருப்பு சீக்கிரம் கரைந்து விடக் கூடாது என்று!

கேட்டால் சிரித்துக் கொண்டே சொல்வாள்,

“என் பாட்டி வள்ளிமயில் சொல்லும், வீட்டில் எல்லா பொருளும் இருக்கும் போது சூப்பரா சமைக்கிறது ஒண்ணும் பெரிய திறமை இல்லை!

இருப்பதைக் கொண்டு சிறப்பாய் சமைக்கவும் தெரிந்திருக்க வேணும் ஒரு பொம்பளைக்கு!

ஆம்பளங்க வருத்தப்படுற மாதிரி,  சும்மா சும்மா  இல்லாதத சொல்லிட்டு இருக்க கூடாது!

இருக்கும் போது நான் தானே மாமா அனுபவிச்சேன், இப்ப கொஞ்ச கஷ்ட காலம் இப்ப நான் அட்ஜஸ்ட் பண்ணலன்னா எப்படி மாமா?

அந்த பஞ்ச பாண்டவர்களே ஒரு வருஷம் இப்படி கஷ்டப்பட்டாங்கன்னு சொல்வாங்க விராட பருவத்தில்! நமக்கும் நல்ல காலம் சீக்கிரம் வந்திடும் மாமா!

நீ ஒண்ணும் கவலைப் படாதே! முதல்ல இந்த சிகரெட்ட விடு!” என்று அதைப் பிடுங்கி போடுவாள்!

இப்படிப்பட்ட அவளைப் போய்.. இந்த கை தானே .. ராகவ் தன் கையை மாறி மாறி சுவற்றில் குத்தினான் பலமாகவே!

உள்ளங்கை சதை கிழிந்து லேசாக ரத்தம் வந்து வலிக்க தொடங்கியவுடன் தான் குத்துவதை நிறுத்தினான்!

வித்யா வீடு திரும்பிய போது, மித்து தூங்கி விட்டிருந்தான்.

அவனை கட்டிலில் படுக்கப் போட்டவள்,

“மாமா மருந்து கவர் எங்க மாமா?” என்று கேட்டவாறு அவன் அருகில் வந்தவள், அவன் கையை கவனித்து விட்டு பதறிப் போய் கேட்டாள்.

“கையில் என்ன மாமா இப்படி காயம்! எப்படி ஆச்சு?”

எப்படி ஆச்சு என்று அவன் சொன்னவுடன்,

“லூஸா மாமா நீ,  இப்பவும் எனக்கு தான் மாமா வலிக்கும்!  வலிக்குது!” அவள் கண் கலங்கினாள்!

“என்னைப் பொறுத்தவரை நீ வேற, நான் வேற இல்ல மாமா! இந்த இரு உடல் ஒரு  உயிர்ன்னு சொல்லுவாங்களே அது என்னை பொறுத்தவரை நிஜம்!

அடி பட்டது உன் கையில் தான்னாலும் எனக்கு தான்  ரொம்ப வலிக்குது மாமா, இங்க” அவள் நெஞ்சைத் தொட்டுக் காட்டினாள்!

அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான் ராகவ்!

அவன் கண்களும் கலங்கத் தொடங்கி விட்டன!

அதை மறைக்க எண்ணி  டிவியைப் போட்டான்!

டிவியில்  மன்மத ராசா பாட்டு தான் ஓடிக் கொண்டிருந்தது!

“இந்த பாட்டுக்கா நம்ம மித்து ஆடினான்னு சொன்னே?”

“ஆமா மாமா”

“யாரு இந்த பையன் புதுசா இருக்கு?”

“அது யாரோ டைரக்டரோட பையனாம்! அவன் அண்ணன் கூட ஒரு டைரக்டர் தானாம்!”

“ஓ! பார்க்க பெரிய ஸ்டார் மாதிரி எல்லாம் இல்ல! ஆனா  பாரேன்.. என்ன இப்படி சூப்பரா டான்ஸ் பண்றான்!”

“ஆமா மாமா, பார்க்க பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருக்காப்ல!  அது தான் அந்த பையனோட ப்ளஸ்ன்னு சொல்றாங்க!!”

பாட்டு முடிந்து விளம்பரம் போட, அவன் சானலை திருப்பினான்!

இப்போது அதில் “நான் ஆளான தாமரை..” சோபனா பாட்டு ஓடிக் கொண்டிருந்தது!

“ம்ம்க்கும்.. மித்து அந்த பாட்டுக்கு ஆடினான், நான் இந்த பாட்டுக்கு ஆட வேண்டியிருக்கும் போல” வித்யா மெதுவாக முணுமுணுத்துக்கொண்டே எழ முயல, அவளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டான் ராகவ்!

“விடு மாமா , ஒரே கப்பு உன் மேல! மித்து கூட சொல்றான், அப்பா கப்பு தாங்க முடியலன்னு!”

“அப்படியா சொன்னான், அந்த மித்துக் குட்டி எழுந்து வரட்டும் அவனுக்கு இருக்கு!”

“ஆமா! நீயும் உன் தலையும், உன் தாடியும்! ஆமா குளிச்சு எத்தனை நாளாச்சு?”

“சுமார் ஒரு வாரம்!”

“அடப்பாவி மாமா! அப்ப பல்லு விளக்கி?”

“தெரியல! கணக்கு வச்சுக்கல!”

“ம்ம், இப்படி இருந்தா உன் பிள்ளைன்னாலும் கிட்ட வர மாட்டான் தான்!

ஏதோ நான் தான்  குளிக்கலைன்னாலும் கணவன், பல்லு விளக்கலன்னாலும் பதி ன்னு சகிச்சுக்கிட்டு இருப்பேன் அவன் எப்படி இருப்பான்?”

“அவ்வளவு அக்கறை இருந்தா நீயே என்னை குளிப்பாட்டி  விடு” என்று சொன்னவன், அதை சாதித்தும் கொண்டே அவளை விட்டான்!

இரவு உணவு சப்பாத்தியும் குருமாவும்!

சாப்பிட உட்கார்ந்த போது கரண்ட் போய் விட,

சுற்றிலும் கேண்டில் ஏற்றி வைத்தாள் வித்யா!

“சூப்பரா இருக்குடி இந்த கேண்டில் லைட் டின்னர்!” என்று அவன் சொல்லிக் கொண்டே அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டு சாப்பிடும் போது, “அப்பா” என்ற குரல்!

மித்துவும் எழுந்து வந்து விட்டான், பேன் நின்று விட்டதால்!

“வந்துட்டான் வில்லன்!” என்று செல்லமாக சொல்லி அவனையும் தூக்கி டேபிளில் உட்காரவைத்துக் கொண்டு மூவரும் சாப்பிட்டனர்!

“காசு பணம் குறைவா இருந்தாலும் , நாம ரொம்பவும் ஹேப்பி பாமிலி இல்ல!” என்றான் ராகவ்!

“ம்ம் ரொம்ப..” என்று சொல்லி அவன் தோள் சாய்ந்தாள் அவன் மயில்!

ஹேப்பிநெஸ் நீடிக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!