Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா

ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 19.2

காதல் அன்று

“அப்பா இங்க பாரேன், அத்தை எனக்கு பெரேரோ ரோச்சர்(Ferrero Rocher) பெரியபாக்ஸ் வாங்கிட்டு வந்திருக்காங்க, அவ்வளவும் எனக்கு!”

மித்து கையில் ஒரு சாக்லேட் பாக்ஸுடன் ஓடி வந்தான்.

லதா வாங்கி வந்தது! லதாவை அவன் அம்மாச்சி என்றோ பாட்டி என்றோ கூப்பிடுவதில்லை!



Advertisement

ராகவ் கூப்பிடுவது போல அத்தை என்றே கூப்பிடுவான்! வித்யாவையுமே பேரை சொல்லிதான் கூப்பிடுவான்!

“ம்ம். ஆசை , கொடுரா என்கிட்ட, ஒரு நாளைக்கு ஒண்ணுதான் தருவேன்” அந்த பெட்டியைப் பிடுங்கி பிரிட்ஜில் வைத்தாள் வித்யா!

மித்து அழத்தொடங்க, “கொடேண்டி” என்றான் ராகவ்!

Advertisement

“ஆமா நீங்க இப்படியே செல்லம் கொடுங்க! அவன் அதான் அப்பா பிள்ளை ஆகிட்டான்! நான் என்ன சொன்னாலும் கேக்கவே மாட்டேங்கிறான்!

Advertisement

டெய்லி காலையில ஸ்கூல் வேன் வந்திடும்டா கிளம்பனும் சொல்லி எழுப்பினா, நான் காட்டு கத்தல் போட்டாலும் கெஞ்சினாலும் எந்திரிக்க மாட்டான்!

ஆனா நீங்க போனில் டேய் மித்துக் கண்ணா எழுந்திரும்மான்னு சொன்னா போதும், சரிப்பா ன்னு சொல்லி உடனே எழுந்துக்கிறான்!

எல்லாத்துக்கும் நீங்க வேணும் அவனுக்கு!” வித்யா அலுத்துக் கொண்டாள்.

Advertisement

“மேடம்க்கு மட்டும் எப்படியாம்! ஒரு தரம் பீவர் வந்தத பாக்காம விட்டுட்டேன்னு சொன்னதுக்கு, அவன் நல்லாயிருக்கும் போதுகூட சும்மா தொட்டு தொட்டுப் பார்த்துட்டு, ஏங்க உடம்பு சுடுதா பாருங்கன்னு தூங்கிட்டு இருக்கிறவன எழுப்பி தொல்லை கொடுக்கிறவ தானே நீயும்!”

“ஆமாங்க, நீங்க வேற பக்கத்துல இல்ல இப்பவெல்லாம், எனக்கு அப்படி டவுட் வரும் போது எல்லாம் எனக்கு ரொம்ப பதட்டம் ஆகிடுதுங்க!”

“போடி லூஸு! இப்படியே பயந்துட்டு இரு! தைரியம் முக்கியம் மயிலு! இந்த விசயத்துல மட்டும் இல்ல எல்லாத்துலயும்!

எது வந்தாலும் ஏத்துக்க பழகிக்கோ, தைரியமா பேஸ் பண்ணனும்!

இப்படி பயந்துட்டு உட்கார கூடாது! என் பொண்டாட்டி எதுக்குமே கலங்கிடக் கூடாது, எப்பவுமே வில் பவரோட இருக்கணும்!

பீவர் வந்தா வரட்டும், ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய் காட்டு! எதுன்னாலும் சமாளிக்கணும் மயிலும்மா!

அந்த வில் பவரை வளர்த்துக்கோ!

அப்புறம் பெரியவங்க ஒண்ணு சொல்வாங்களே, விதிய மதியால் வெல்றதுன்னு! அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?  என் வரையில சொல்றேன்!

விதியை அப்படியே அக்செப்ட் பண்ணிக்கிறது தான் விதையை மதியால வெல்றது!” ராகவ் இன்னுமும் பேச்சைத் தொடர

வித்யா கத்தினாள், “போதும் மாமா, உனக்கு என்ன ஆச்சு இன்னிக்கு? இப்படி நூத்துக் கிழவன் மாதிரி லெக்சர் அடிக்கிற? போ மாமா..” அவள் சிணுங்கினாள்!

“இல்லடி மயிலு என்னமோ எனக்கு சொல்லனும்னு தோணுச்சு! அவ்வளவு தான்!”

“கிளாஸ் எடுத்தது போதும். உங்க வண்டி இன்சுரன்ஸ் பணம் கட்டிட்டேன்!

ரசீது தான் இன்னுமும் வாங்கல!  ப்ரிண்டர் ஏதோ மக்கர் பண்ணுச்சுன்னு அப்புறம் வந்து வாங்கிக்க சொல்லிட்டாங்க!”

“சரி நான் போய் அதை வாங்கிட்டு வரேன், என் போனை எடு!” டூவீலர் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

“இதோ இவன் வச்சுருக்கான் பாருங்க” மித்துவிடம் இருந்து போனைப் பிடுங்கினாள்!

“கொடுடா போனை, கொஞ்சம் அசந்து கீழே வச்சுட்டா போதும் எடுத்துக்குவான்!”

“சரிடி, நான் போய் அந்த இன்சுரன்ஸ் காபியை வாங்கிட்டு வந்திடுறேன்!” சொல்லி கிளம்பினான் ராகவ்!

கொஞ்ச நேரத்தில் அவனிடமிருந்து போன்!

“சொல்லு மாமா”

“அவர் இல்லங்க.  நான் பிசி பேசுறேங்க, இங்க ராகவ் சாருக்கு ஒரு சின்ன ஆக்சிடன்ட், அவரை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்க.

அத நேர்ல பார்த்த, டிஎஸ்பி சார்தான் அவரை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு  போயிருக்கார்”

“அய்யோ! மாமாவுக்கு என்ன ஆச்சு, அவருக்கு ஒண்ணுமில்லையே?  எந்த ஹாஸ்பிட்டல்?” இதயம் கழன்று வெளியே விழுந்து விடுவதுபோல படப்படப்புடனும் பயத்துடனும் கேட்டாள் வித்யா!

அவர் அந்த பிரபல தனியார் ஹாஸ்பிட்டல் பேரை சொன்னார்!

இவளின் அந்த கத்தல் கேட்டு ஓடிவந்து விட்டார் திவ்யா அம்மா!

பின்னாலேயே திவ்யா அப்பாவும்!

“என்ன ஆச்சும்மா?”

திக்கித் திணறி அவள் சொன்ன விபரம் கேட்டுக் கொண்டு மித்துவை திவ்யாவிடம் விட்டுவிட்டு மூவரும் ஹாஸ்பிட்டல் விரைந்தனர்!

எமர்ஜென்சி வார்டில் இருந்தான் ராகவ்.

வெளியே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் வித்யா!

சிலமணி நேர தவிப்பிற்கு பிறகு ராகவை வார்டிற்கு மாற்றினார்கள்!

ராகவ் கண் விழித்துப் பார்த்தான் அவன் மயிலை!

“மாமா..” அவள் உதடு பிதுக்கி அழுதாள்!

“என்னடி ரொம்ப பயந்துட்டியா?” ராகவ் பலவீனமாய் சிரித்தான்.

“உயிரே போச்சு மாமா, என்ன மாமா ஆச்சு, இப்படியெல்லாம் பயமுறுத்தாத மாமா, உன் மயிலால தாங்க முடியாது!”

“ஏய் லூஸு, பயப்படாத, காலையில தான சொன்னேன், எதுக்கும் பயப்படக் கூடாதுன்னு!”

“போ மாமா, அதுக்குன்னு ஒரு அளவில்ல? ஒரு நிமிஷம் உலகமே இருண்டுப் போன மாதிரி ஆச்சு எனக்கு!”

“எப்படி ராகவ் இருக்கு இப்ப ” என்றபடியே உள்ளே வந்தான் கெவின்.

கெவின்,  சியாம் இருவரும் திக் பிரண்ட்ஸ்! அவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகவும் கெவினின் பிரன்ட் தான்!

கெவின் ஐபிஎஸ் படித்து முடித்து விட்டு கொஞ்சநாள் வடக்கே அங்கே இங்கே என்று சர்வீசில் இருந்து விட்டு, இப்போது அவனின் சொந்த ஊருக்கே டிஎஸ்பி போஸ்டிங்கில் வந்திருக்கிறான்!

ராகவ் டூவீலரில் ஒரு ரவுண்டானாவில் சுற்றிப் போய்க் கொண்டிருக்கும் போது அவனை இடித்து தள்ளி விடும் போல ஒரு லாரி வந்து, அருகே வந்ததும் கண்ட்ரோல் ஆகியதில் ராகவ் வண்டியில் இருந்து கீழே ரவுண்டானா உள்ளே இருந்த புல் தரையில் விழுந்து விட்டிருந்தான்.

விழுந்த வேகத்தில் அவனுக்கு மயக்கம் வந்து விட்டது!

இந்த காட்சி,  அப்போது பார்த்து சரியாக சைரன் வைத்த போலிஸ் வாகனத்தில் வந்து கொண்டிருந்த கெவின் கண்களில் பட்டுவிட, வேகமாக கிட்டே வந்தவன், விழுந்தது ராகவ் என்று தெரிந்தவுடன் அவன் பொறுப்பில் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்து விட்டான்.

அவன் டிரைவரை விட்டு வித்யாவுக்கு தகவல் தெரிவிக்கவும் சொல்லியிருந்தான்.

“இப்ப பரவாயில்லண்ணா, நீங்க எப்படி இங்க?” என்றான் ராகவ்!

“எனக்கு இங்கேதான் போஸ்டிங் , ஜாயின் பண்ணி ஒருவாரம்  ஆகுது!

 இன்னும் பிரண்ட்ஸ் யாரையும் காண்டாக்ட் பண்ணல!”

“சூப்பர்ண்ணே, நம்ம ஊருக்கே வந்திட்ட!” ராகவ் சொல்லிக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்த நர்ஸ் ஒருவர், வித்யாவிடம் “பார்மசியில் போய் இந்த மெடிசன் எல்லாம் வாங்கிட்டு வாங்க” என்றார்.

அவள் கிளம்ப, துணைக்கு அவளுடன் திவ்யா அம்மாவும் கிளம்பி விட்டார்.

அவர்கள் சென்றபிறகு, “யார் ராகவ் உனக்கு இப்படி  ஒரு எதிரி?  உன்னை மர்டர் அட்டெம்ப்ட் செய்யற அளவுக்கு?” கேட்டான் கெவின்.

கொஞ்சம் தயங்கிவிட்டு ராகவ் சொன்னான்.

“என் அப்பாவின் மனைவி ஈஸ்வரி”. என்று சொன்னவன் சுருக்கமாக நடந்ததை சொன்னான்.

“எனக்கு அப்பவே தெரியும்டா, உன் அப்பன் சரியில்லன்னு, நீதான் டாடி பாவம்னு விட்டு வச்ச!

இப்ப பாரு அவங்க எந்த எக்ஸ்ட்ரீமுக்கு போய்ட்டாங்க!

உன் பாசத்துக்கெல்லாம் கொஞ்சம் கூட தகுதி இல்லாத ஆள் அந்தஆள்!” கோபத்தில் கத்தினான் கெவின்!

“இல்லைண்ணே, இப்ப நான் கேசே போட்டுட்டேன் அப்பா மேல, அதுக்கபுறம் தான் அவங்க ரொம்ப தீவிரமா என் மேல வெஞ்சன்ஸ் வச்சுட்டு அலையிறாங்க!”

“ஆமா சார். ராகவிற்கு எல்லா விதத்திலும் டார்ச்சர் பண்றாங்க சார் அந்த கும்பல்!

பாவம் சார் ராகவ்! ஸ்ட்ரெஸ் ஆகி ஏற்கனவே ஒரு தரம் மைல்ட் அட்டாக்கே வந்து விட்டது!

அது இன்னமும் அவர் ஓய்புக்கே  தெரியாது, சொல்லிட சொல்லியும் சொல்ல  மாட்டேங்கிறார்!”

“ஏற்கனவே உனக்கு ஒரு வாட்டி வந்திருக்கா ராகவ்?

அப்ப இன்னிக்கு வந்தது ரெண்டாவது அட்டாக்கா?” கெவின் அதிர்ந்தான்.

“என்ன சார் சொல்றீங்க? அப்ப இன்னிக்கும் ஒரு அட்டாக் தான் வந்திருக்கா?” திவ்யா அப்பா பதறினார்!

“ஆமா” என்றான் ராகவ்!

அவன் லாரி தட்டி கீழே விழுந்தவுடன் தலையைத் தூக்கி,  இடித்த வண்டியைப் பார்த்தபோது, அதில் இருந்த டிரைவர்,  அவன் வீட்டில் முன்பு டிரைவராக இருந்தவன் தான்!

ஈஸ்வரியின் ஆள்! அவனைப் பார்த்தவுடன் ராகவிற்கு எல்லாம் புரிந்து விட்டது!

புரிந்தவுடன் ஒரு மிகப்பெரிய பயம் அப்படியே நெஞ்சைத் தாக்கியது!

ஏற்கனவே கொஞ்சம் பலவீனமாய் இருந்த அதற்கு, இந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது!

விளைவு? மீண்டும் ஒரு ஹார்ட் அட்டாக்!

நல்லவேளையாக அங்கு கெவின் வந்து விட்டதால் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு ராகவ் காப்பற்றப்பட்டு விட்டான் இம்முறையும்!

முதலில் அவனுக்கு இப்படி நேர்ந்த போது வித்யாவும் திவ்யா அம்மாவும் குத்து விளக்குப் பூஜை ஒன்றிற்கு போய் இருந்தனர்!

வீட்டில் திவ்யா அப்பா மட்டுமே இருந்தார் அப்போது.

ராகவிடம் பேசிக் கொண்டிருந்தவர், அவனின் முக மாற்றத்தைக் கண்டு அவர் தான் வற்புறுத்தி ஹாஸ்பிட்டல் கூட்டி சென்றார் அப்போது!

இதைப் பத்திதான் இருவரும் அடிக்கடி ரகசியம் பேசினார்கள்!

“அப்ப இது ப்யூர்லி மர்டர் அட்டெம்ப்ட் ராகவ்! நான் இதை சும்மா விடப் போறதில்லை! நான் சார்ஜ் எடுத்து இருக்கும் ஊரில், என் பிரன்டையே தூக்கப் பார்த்து இருக்காங்க!

நான் அவங்கள சும்மா விட்டுடுவேனா? விட மாட்டேன் ராகவ்!” என்றான் கெவின் கோபத்துடன்!

நான்கு நாட்கள் ஹாஸ்பிட்டல் வாசத்திற்கு பிறகு வீடு திரும்பினார்கள் ராகவும் வித்யாவும்!

லதா மித்துவை தன்னுடன் வைத்துக் கொண்டார். அவரும் திவ்யா அம்மாவும் மாற்றி மாற்றி சாப்பாடு மற்றும்  உடைகளைக்  கொண்டு போய் கொடுத்து பார்த்துக் கொண்டார்கள் இந்த நான்கு நாட்களும்!

வீடு திரும்பிய பின் கொஞ்ச நேரம் கூட வித்யா அவனை விட்டு விலகவே இல்லை!

அவனை வலிக்காத மாதிரி கட்டிக் கொண்டே படுத்திருந்தாள்.

இன்னமுமே அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்த விஷயம் அவளுக்குத் தெரியாது.

ராகவ் அவள் அணைப்பிலேதான் தூங்கினான். மாத்திரைகளின் வீரியத்தால்.

மதியம் லைட்டாக கஞ்சி மட்டும் கேட்டு வாங்கி குடித்தான்.

முன் மாலை நேரம் அவள் எழுந்து குளித்துவிட்டு சாமி மாடத்தில் விளக்கேற்றி சுலோகம் சொல்லிக் கொண்டே அவனையும் கவனித்தாள்.

அவன் இடையில் ஒரு முறை எழுந்து பாத்ரூம் சென்று வந்து படுத்துக் கொண்டதை.

“காபி வேணுமா மாமா”

“இல்லடி வேணாம், வயிறு ஒருமாதிரியா இருக்கு!”

“எல்லாம் இந்த மாத்திரைங்க எபெக்டா இருக்கும்! சத்துமாவு கஞ்சி வேணா கொஞ்சநேரம் கழிச்சு குடிக்கிறியா மாமா?”

“ம்ம்” என்ற குரல் மட்டும் வந்தது அவனிடமிருந்து!

விளக்கு வைத்த நேரம் படுக்கக்கூடாது என்று அவன் அருகிலேயே அமர்ந்து ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள் வித்யா.

ராகவ் புரண்டுப் படுத்தவன், தலையை அவள் மடியில் வைத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

அவன் தலையை கோதி விட்டபடி புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் வித்யாவும்.

எட்டு மணி வாக்கில் அவனை மெல்ல எழுப்பினாள்.

“இன்னும் கொஞ்சநேரம் போகட்டும்” என்று சொல்லி மீண்டும் அவள் வயிற்றோடு முகத்தைப் புதைத்துக்கொண்டு தூங்கினான்!

கொஞ்சநேரம் அப்படியே இருந்தவள், அவளுமே கூட உட்கார்ந்தவாறே கொஞ்சம் கண் அயர்ந்து விட்டாள்.

சிலமணி நேரம் கழித்து கண் விழித்தவள் “அய்யோ மணி பத்து, மாமா ஒண்ணுமே சாப்பிடல இன்னும்” என்று நினைத்தவள் மெல்ல அவனை எழுப்பி “மாமா மணி பத்து ஆகுது, கொஞ்சமா பாலாவது குடிச்சுட்டு ராத்திரி போட வேண்டிய மாத்திரைகளை போடணும். எழுந்திரு மாமா” என்று சொல்லி அவனை எழுப்பினாள்.

அவன் எழுந்து உட்கார்ந்தான்.

அவள் கொண்டு வந்து கொடுத்த பாலைக் குடித்தவன், சிறிது நேரத்திலேயே அதை வாந்தியும் எடுத்து விட்டான்!

“என்னாச்சு மாமா” என்று பதறியபடி அவள் அவனை சுத்தம் செய்து விட்டு, அந்த இடத்தையும் சுத்தம் செய்தாள்.

ரொம்பவே டயர்டாகி படுத்துக் கொண்டிருந்தவன், கொஞ்ச நேரம் கழித்து எழுந்து பாத்ரூம் சென்று வந்தவன்,

“மயிலு டயரியாவா போகுதுடி, சாரிடி மயிலு கொஞ்சம் ட்ரஸ்ல கூட போயிட்டேன், அவசரத்துல!”

“அதனால என்ன மாமா, மித்து போனா நான் வாஷ் பண்ண மாட்டேனா?

எனக்கு நீயும் மித்து மாதிரி ஒரு குழந்தை தான் மாமா, என்னோட பெரிய குழந்தை!

நீ என்ன வேணுமின்னா செய்த, உடம்பு சரியில்லாததால் இப்படி ஆய்டுச்சு விடு மாமா. நாம் இப்ப ஹாஸ்பிட்டல் போலாமா?”

“ஹாஸ்பிட்டல் இப்ப ஓபி எல்லாம் முடிஞ்சுருக்கும்! எமர்ஜென்சியா காட்டுற அளவு பிரச்சினை இல்லை இது, விடு காலையில பார்த்துப்போம். நல்லா தூங்குனா கூட சரியாகிடும்”.

அவன் அருகே மீண்டும் அவனை கட்டிக்கொண்டே தூங்கினாள் வித்யா.

அதிகாலை பாத்ரூம் செல்ல எழுந்தான் ராகவ்.

அவன் எழுந்து போய் விட்டிருப்பது தெரிந்து அவளும் எழுந்து உட்கார்ந்திருந்தாள்.

வெளியே வந்தவன், அவள் மடியிலே படுத்துக் கொண்டான்.

படுத்தவன் திடீரென்று அவள் வயிற்றை இறுக்கிக் கொண்டு முகம் புதைத்தான். முன்பை விட அதிக இறுக்கமாக, ரொம்ப அதிக இறுக்கமாக!

அவன் பிடியில் ஏதோ வேறுபாடு உணர்ந்தவள் அவன் முகத்தை திருப்பிப் பார்த்தால், அவன் முகம் வேறு மாதிரி இருந்தது! சொல்ல முடியா வேதனையில் இருப்பது போல!

“என்ன மாமா ஏதோ மாதிரி இருக்க?” என்று கேட்டவள் அவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.

அவன் கண் திறந்து அவளை ஒரு கணம் பார்த்தவன் வெளிப்புறம் பார்த்து விட்டு “வர மாட்டேன் போ” என்கிற மாதிரி செய்து விட்டு மீண்டும் அவள் வயிற்றை இறுக கட்டிக் கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இறுக்கம் குறைந்தது!

“என்ன மாமா ஆச்சு உனக்கு, என்னென்னமோ பண்ற?” அவன் முகத்தைத் திருப்பியவள், அவன் கண்களில் கண்ணீரைக் கண்டாள்!

“அய்யோ எதுக்கு மாமா அழற?” அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு அவளும் அழுதாள்.

கண்ணீருடன் அவளைப் பார்த்தான்.

பார்த்தவன், பார்த்துக் கொண்டே இருந்தான்!

ஆமாம் பார்த்துக் கொண்டே தான் இருந்தான்! இமை மூடவில்லை!

ரொம்ப நேரம் அவன் அப்படியே இருக்க, குழம்பியவள் “மாமா” என்று அழைக்க அவனிடம் பதில் இல்லை!

மீண்டும் மீண்டும் அழைத்தும் பதிலில்லை!

அவளுக்குள் ஏதோ பயம் வர, அருகில் இருந்த போனை எடுத்து அவள் திவ்யா அம்மாவை அழைத்தாள்.

அவரும் கூடவே திவ்யா அப்பாவும் உடனே வந்து பார்த்தனர்!

திவ்யா அப்பா கிட்டே வந்து ராகவைப் பார்த்தவர், அர்த்தமாக மனைவியைப் பார்த்தார்.  அவர் மனைவியும் அதைப் புரிந்துக் கொண்டவர் வித்யாவை அப்படியே அணைத்துக் கொண்டவர்,

“அழாதே வித்யா, ராகவ் எப்பவும் உன் கூட தான் இருப்பார், அவர் ஆத்மா எப்பவும் உன்னையும் மித்துவையும் தான் சுத்தி சுத்தி வரும்” என்று அழுது கொண்டே சொன்னார்.

“என்னது ஆத்மாவா? இவங்க என்ன சொல்றாங்க மாமா, நீ எழுந்திரி மாமா! பாரு திவ்யா அப்பா இருக்கார் இங்க, நீ இப்படி என் மடியில படுத்துட்டு இருக்க!” வித்யா கத்தி அவனை எழுப்பினாள்.

திவ்யா அப்பா, கீழே சென்று பக்கத்து வீட்டில் இருக்கும் டாக்டரை அழைத்து வந்தார்.

வந்த டாக்டரும் உறுதி செய்து விட்டார்.

திவ்யா அம்மா, மெல்ல வித்யாவை ராகவிடம் இருந்து நகர்த்தி அமர வைத்தார்.

திவ்யா அப்பா ராகவின் உடலை நேராக படுக்க வைத்தார்.

“அய்யோ மாமா எழுந்திரு, வா ஹாஸ்பிட்டல் போலாம், ஏன் இப்படியே படுத்துருக்க, விளையாடாதே மாமா, உன் மயிலு இங்க கதறிட்டு இருக்கேன், உனக்கு காதில் விழலையா?

மாமா எழுந்திரு, எதுக்கும் அளவு உண்டு,  உன் மயிலுக்கும் கோபம் வரும், எழுந்திரு. பாரு இவ்வளவு பேர் கூடிட்டாங்க நம்ம வீட்டுல!

எழுந்திரு மாமா, என் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் உன்னை ஒரு பெயிலியர்னு சொல்லுவியே, நான் இங்க இப்ப இவ்வளவு கண்ணீர் விட்டுட்டு இருக்கேன் பார்த்துட்டு இருக்கியே? எழுந்திரு மாமா!

அய்யோ, நான் அழறத எல்லோரும் பார்க்குறாங்க மாமா, அது உனக்கு அசிங்கமா இல்லையா? எழுந்திரு மாமா,

ஏண்டி இப்படி கத்திட்டு இருக்கே திட்டிட்டாவது எழுந்திரு மாமா!

அய்யோ எனக்கு மூச்சே முட்டுது மாமா, இவங்க எல்லாம் ஏதோ சொல்றாங்க மாமா!

என்னை விட்டுட்டு போயிட்டியா மாமா, உன்னால உன் மயிலை விட்டுட்டு போகக் கூட முடியுமா மாமா??

நீ வேற நான் வேற இல்ல மாமா, என்னை இப்படி கத்த எல்லாம் விடவே மாட்டியே நீ? எழுந்திரு மாமா ப்ளீஸ்!”

லதா கதறியபடி ஓடி வந்து விட்டார் மித்துவைத் தூக்கிக் கொண்டு!

பெரியப்பா, சியாம் கெவின் மற்றும் உறவினர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.

பெரியப்பா அப்படியே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்து விட்டார்.

“அம்மா நந்தினி, நான் உனக்கு கொடுத்த வாக்கை முழுசா நிறைவேத்த முடியாம போச்சே!”

சியாம் அவன் மனைவியுடன் வந்திருந்தான். அவன் மனைவியும் அழுதாள்.

“என்னை விட அவனுக்கு முக்கியத்தும் நீங்க கொடுத்ததுதான் எனக்கு பிடிக்கலையே தவிர, அவன் சாகணும் எல்லாம் நான் நினைச்சது இல்லைங்க” அவளும் சொல்லி அழுதாள்.

திவ்யா அப்பா தான் விவரம் கேட்டவர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ரொம்ப தங்கமான மனுசன்ப்பா அவர். போனவாரம் கூட எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டை!

அந்த சண்டையைப் பற்றி சொன்னவர், ஒரு பிரச்சினைக்கு என்ன அடி வேர்ங்கிறத சட்டுன்னு கண்டுபிடிச்சு அதுக்கு சல்யூசனும் சொல்லிடுவாப்ல.

என் வீட்டு விசயத்தில் கூட, அந்த ஜோசியரிடம் கூட்டிட்டுப் போன அந்த சொந்தக்காரப் பொம்பள தான் கல்ப்ரிட்ன்னு ரொம்ப சரியா சொல்லிட்டார்.

அந்தம்மா, அவங்க பையனுக்கு திவ்யாவை நேரிடையா கேட்டா கொடுக்க மாட்டோம்னு ஜோசியக்காரன் மூலமா இப்படி சொல்லவச்சு ட்ரை பண்ணியிருக்கு!

இப்படி ரொம்ப சரியா ஆட்களை கணிக்கக் கூடிய ஆள், அவங்க அப்பா விசயத்துல மட்டும் இமொசனலா இருந்துட்டார்”

“ஆமாங்க நீங்க சொல்றதும் சரி தான், அவங்க அப்பா விசயத்தில அந்த ஈஸ்வரிகிட்ட இன்னும் கொஞ்சம் அலெர்ட்டா இருந்து இருக்கலாம் ராகவ்!”

“இருந்தார் தாங்க, பொண்டாட்டி பிள்ளைய அப்படி கோழி அடை காக்குற மாதிரி பார்த்துக்குவார்! எல்லாத்தையும் மீறி இது நடந்திருக்கு!

அவர்கள் பெரியாப்பவைக் கேட்டு மற்ற சடங்குகளை முடித்து ராகவின் உடலைத் தூக்கி சென்றனர்.

அப்படி தூக்கும் போது வித்யா அவள் இதயமே கிழிந்து போய் விடுமோ, தொண்டை கிழிந்து போய் ரத்தம் வரும் அளவு அடி வயிற்றில் இருந்து கத்தினாள்!

“மாமா என்னை விட்டுட்டு போகாதே மாமா! நீ ஊட்டிக்கு விட்டுட்டு போனதே என்னால தாங்க முடியல, இப்படி ஒரேடியா போய்ட்டா எப்படி மாமா?”

அவள் கதறிய கதறல் அங்கிருந்தோர் மனதை அப்படியே உலுக்கி விட்டது!

நீ அன்று சிந்திய கண்ணீரில் பூமியும் வானமும் நனைந்தம்மா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!