Skip to content
Post Views: 2,220

அருவியூர்(கற்பனை ஊர்)
அந்த ஊரில் உள்ள அத்தனை மக்களும் அந்த ஆலமரத்தின் அடியில் கூடிய இருக்க ஒருவனுக்காக அனைவரும் காத்து கொண்டு இருந்தனர்….
Advertisement
ஒரு பெண் அழுது கொண்டு நின்று இருக்க அப்போது புல்லட்டின் சத்தம் கேட்டது… அனைவரும் அந்த சத்தம் வந்த திசையில் பார்க்க கம்பிரமாக ஒருவன் அமர்ந்து வண்டியோட்டி கொண்டு வர நடுவில் ரத்த காயத்தோடு ஒருவன் அமர்ந்து இருந்தான்… கடைசியில் அமர்ந்து இருந்தவனோ முன்னால் அமர்ந்து இருந்தவனுக்கு ஈடாக கம்பிரமாக அமர்ந்து இருந்தான்….
Advertisement
ஆனால் இருவருக்கும் ஒரு வித்தியாசம்… முதலாமவன் இறுகிய முகத்துடன் இருக்க இரண்டாமவன் குறும்பு முகத்தில் கூத்தாட எப்போதும் இருப்பான்….
Advertisement
தற்போது இருவர் முகமும் இறுகி இருந்தது…. முதலாமாவனுக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை குடுக்க அதை அவன் கண்டுகொள்ளாமல் சென்று அவனுக்குரிய நாற்காலியில் அமர்ந்தான்….
Advertisement
இரண்டாமவன் நடுவில் காயத்தோடு அமர்ந்து இருந்தவனை அழுது கொண்டு இருந்த பெண்ணிடம் நிற்க வைத்து விட்டு அமர்ந்து இருந்தவன் அருகில் சென்று நின்று கொண்டான்….
காயத்தோடு இருந்தவன் பேச ஆரம்பித்தான்…. “இந்த பொண்ணு மேல எந்த தப்பும் இல்ல… எல்லாம் என் மேல தான்… என்னை வேண்டாம்னு சொன்னதுனால பழி வாங்க தான் இப்படி பண்ணேன்… என்னை மன்னிடுச்சுங்க….” என்று கை எடுத்து கும்பிட்டான்….
முதலாமவன் எதுவும் கூறவில்லை….. அவன் பக்கத்தில் நின்று இருந்த பெரியவருக்கு கண் காட்ட அவர் ஒரு சாட்டையை கொண்டு வந்து அழுது கொண்டு நின்று இருந்த பெண்ணிடம் கொடுத்தார்…..
அவளும் கண்களை துடைத்து கொண்டு அதை வாங்கியவள் “ஆம்பளனா பெரிய இவன்னு நினைப்பா டா உனக்கு….. இவரு வந்து காதல் சொன்னதும் ஒத்துக்கலனா அந்த பொண்ணை ஊரு முன்னாடி அசிங்க படுத்துவியா…. இன்னிக்கு உனக்கு நான் தர போற தண்டனையை பார்த்துட்டு இனிமே இந்த ஊருல யாரும் இந்த தப்ப பண்ண கூடாது” என்று கூறி அவனை அடித்து பிரித்துவிட்டாள்…
இனிமேல் அடித்தால் அவன் செத்து விடுவான் என அறிந்து இரண்டாமவன் அவளிடம் இருந்து சாட்டையை வாங்கி இருவருக்கு கண் காட்டினான்…. அவர்கள் மயங்கி இருந்தவனை தூக்கி சென்றனர்…
நாற்காலியில் அமர்ந்து இருந்தவன் அந்த பெண்ணை பார்த்து “நீ சொல்லு பொன்னி என்ன முடிவு எடுத்து இருக்க….” என்று கேட்டான்….
“ஐயா நீங்க எது சொன்னாலும் நான் ஏத்துக்குறேன்… ஆனா இவங்க கூட மட்டும் போக மாட்டேன்…. பெத்த பொண்ணை நம்பாதவங்க கூட நான் போக மாட்டேன்….” என்று கூறினாள்
“நான் எந்த முடிவு எடுத்தாலும் உனக்கு சம்மதமா” என்று கேட்டான்…. அவளும் “சம்மதம்” என கூறினாள்…
“சரி உனக்கும் கண்ணாவுக்கும் இப்பயே கல்யாணம்… கண்ணா உனக்கு சம்மதமா” என்று கேட்டான்….
“எனக்கு சம்மதம் ஐயா” என்று அவளை காதலுடன் பார்த்து கூறினான்….
முதலாமவன் கண்ணை காட்ட ஒரு வயதான பெண்மணி கோவிலுக்கு சென்று மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கொம்பை வைத்து சாமி முன் வைத்து நன்றாக வேண்டி கொண்டு வந்து கண்ணனிடம் கொடுத்தார்…..
அவனும் அதை வாங்கியவன் கடவுளை வேண்டி கொண்டு அழுது கொண்டு இருந்தவளை பார்த்தான்…. அவன் பார்ப்பதை பார்த்த அந்த பாட்டி “ஏட்டி ராதா அவனை தான் பாரேன்…. அவனும் எவ்வளவு தான் உன்னை பார்ப்பான்… நிமிர்ந்து பாரு” என்று அதட்டி கூறினார்….
அவள் மெதுவாக நிமிர்ந்து கண்ணனை பார்த்தாள்…. அவன் கண்களாலே “சம்மதமா” என்று கேட்டான்…. அவளும் கண்களில் காதல் பொங்க சரி என்று கூறினாள்…
அவனும சந்தோசமாக அவனுக்கு மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கி கொண்டான்… இருவரையும் பார்த்து முதலாமவன் “நீங்க இப்போ பாட்டி கூட வீட்டுக்கு போங்க… நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று கூறி கம்பீரமாக கூறிக்கொண்டு நாற்காலியில் இருந்து எழுந்து ராதாவின் பெற்றவர்களை பார்த்து “முதல்ல பெத்த பொண்ணை நம்பனும் இப்போ நம்பாம இப்போ அழுதா ஒரு பிரயோஜனமும் இல்லை… போங்க போய் வேலையை பாருங்க” என்று இரண்டாமவனை பார்த்து தலையசைத்து விட்டு அதே கம்பீரத்துடன் தன் வீட்டை நோக்கி சென்றான்…. அவன் தீனா…. தீனதயாளன்….
அவன் வீட்டை நோக்கி செல்லும் போது ஒரு கை அவன் வண்டியின் முன் கை நீட்டி அவன் வண்டியை நிறுத்தியது…. அந்த கரத்தை நீட்டியவளை பார்த்து “என்ன ஜானகி எதுக்கு கை நீட்டுற” என்று கேட்டான் தீனா….
“மாமா நானும் நம்ம வீட்டுக்கு தான் வரேன்…. அது தான் உங்க கூட வண்டில வரலாம்னு” என்று அவனை காதலுடன் பார்த்து கூறினாள்….
“சரி வா ஏறு” என்று அவளை வண்டியில் ஏற்றி கொண்டு வீட்டை நோக்கி சென்றான்…. பின்னால் அமர்ந்து இருந்தவள் அவனை காதலுடன் பார்த்தவாறு அவனுடன் வண்டியில் சென்றாள்…
அவள் வண்டியில் இருந்து இறங்கியவுடன் அவனை எதிர்பார்க்காமல் வீட்டினுள் சென்றாள்… அவளை பார்த்தவுடன் வீட்டினுள் இருந்த இரண்டு பேரில் இளையவன் “அண்ணி வாங்க…. இன்னிக்கு சீக்கிரமா வரனு சொன்னிங்க… ஆனா மதியம் மேல ஆகிடுச்சு” என்று கேட்டான்…. அவன் கரண்… கரண் தேவ்…
“வீட்டுல கொஞ்சம் வேல கரண்… அது தான் முடிச்சிட்டு நடந்து வந்துட்டு இருந்தேன்…. வழியில மாமா வந்தாங்க… அவங்க கூட வந்துட்டேன்… சரி நீங்க சாப்பிட்டாச்சா…..” என்று கேட்டாள்….
“இல்ல அண்ணி அண்ணா வந்ததும் சாப்பிடலாம்னு இருந்தோம்…. நீங்க சாப்பிட்டாச்சா…” என்று மற்றொருவன் சொன்னான்…. அவன் சிவா… சிவகிருஷ்ணன்…..
“சரி நீங்க ரெண்டு பேர் போய் சாப்பிட உட்காருங்க…. மாமா நீங்க போய் முகம் கை கால் கழுவிட்டு வாங்க…..” என்று தீனாவிடம் கூறியவள் சமையலறை நோக்கி சென்றாள்…. தீனாவும் மூவரையும் பார்த்தவாறு அறைக்கு சென்றான்….
அங்கு பஞ்சாயத்தில் நின்று இருந்த இரண்டாமவனோ அங்கு நிறுத்தி இருந்த தன் பைக்கை எடுத்து கொண்டு தன் வீட்டை நோக்கி சென்றான்… அவன் வாசலில் சென்றவுடனே வீட்டில் யாரோ கத்தும் சத்தம் கேட்டு கோவமாக பைக்கில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்றான்….
“போயும் போயும் இந்த மலடியை தான் என் பேரனுக்கு பார்த்து பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சு இருக்கேன்…. என் குடும்ப வாரிசை பெத்து தர மாட்டா போல இருக்கே… இவளால என் பேரனும் புத்தி கெட்டு போய் யார் யார்கிட்டயோ போயிட்டு இருக்கான்….” என்று வடிவாம்பாள் கத்தி கொண்டு இருந்தார்…
“பாட்டி வாயை மூடுங்க… உங்களை இதை பத்தி பேச வேண்டாம்னு சொல்னேன்…. திரும்ப திரும்ப என் பொண்டாட்டியை தப்பா பேசுனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது….. ஏய் வா எப்ப பாரு அழுதுட்டே இருக்குறது” என்று கோவமாக
அவளை இழுத்து கொண்டு சென்றான்…. அவன் விஷ்ணு… விஷ்ணு பிரசாந்த்….
அவன் இழுத்து கொண்டு சென்றவள் அவனின் காதல் மனைவி மகிமா… மகிமா விஷ்ணு பிரசாந்த்….
அருவியூர் தோப்பு வீடு
“அபி அழுகாத டா… டேய் அபி இப்போ அழுதுட்டே இருந்தா அடிச்சுடுவேன் அபி….” என்று மிரட்டி கொண்டு இருந்தாள்…. அவள் சத்யா…. சத்யவதி
“போ அப்பா வேணும்…. அப்பா இப்பயே இங்க வரணும் போன் பண்ணு ஒழுங்கா….” என்று அழுது கொண்டே கூறினான் நான்கு வயது குழந்தை அபிமன்யு…
“அபி” என்று கோவமாக கத்தியவள் அவன் முதுகில் வேகமாக அடித்தாள்….
அப்போது வண்டியின் ஓசை கேட்க வேகமாக வெளியே ஓடினான்… ஓடியவன் முகத்தை கூட பார்க்காமல் “அப்பா” என்று விஷ்ணுவின் காலை கட்டி கொண்டான்….
வேகமாக வெளியில் வந்த சத்யா அபியின் முதுகில் மீண்டு ஒரு அடி போட்டு அவனை விஷ்ணுவிடம் இருந்து பிரித்தாள்….
error: Content is protected !!