Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தித்திக்கும் தீத்திரள்

தித்திக்கும் தீத்திரள்…

தித்திக்கும் தீத்திரள்…

 

 

 



Advertisement

1…..

 

‘ ஆரம்பக் காலத்துல நம்ம சமூகம் தாய் வழி சமூகமாக தான் இருந்ததாம். அதாவது  பொண்ணுக தான் தலைமை பொறுப்புல இருந்து மொத்த குடும்பத்தையும் வழி நடத்துவாங்க. அதுக்கப்புறம் நிறைய சமூக மாற்றத்தால தாய் வழி சமூகம் வீழ்ச்சியடைஞ்சு, பெண்களுக்கு எதிரான அடக்குமுறை அதிகரிக்க ஆரம்பிச்சிருக்கு. இத நான் சொல்லலங்க  மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க,  சீனால பொண்ணுங்க வீட்டை விட்டு ஓடிடக்  கூடாதுன்னு அவங்க இளமை பருவத்தில  கால்கள மடக்கி முடமாக்கி வச்ச கதை கூட நடந்து இருக்கு.  அடக்கொடுமையேன்னு  கேட்கும்போதே கஷ்டமா இருக்குல. நல்லவேளை நம்ம நாட்டுல அப்படி இல்லன்னு  ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதிங்க நம்ம நாட்டுல  கால்களை முடமாக்குறதுக்கு பதிலா பல கட்டுப்பாடுகள்  விதிச்சு அதுதான் நமக்கு நல்லதுன்னு நம்மள நம்பவும் வச்சு பொண்ணுங்களோட உணர்வுகளையும் உரிமைகளையும் முடக்கி  வச்சிருக்காங்க!, என்னம்மா பேசுற அதெல்லாம் அந்த காலம்…  இது பெண்களுக்கான காலம், பெண்ணியம் பேசி சம உரிமை அடஞ்சு பொண்ணுங்க எல்லா விஷயத்துலயும் முன்னேறிட்டு இருக்க இந்த காலத்துல வந்து நீ என்ன பொண்ணுகள அடக்கி வைக்கிறாங்க அது இதுன்னு கதை சொல்லிட்டு இருக்கன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்கிறது எனக்கு நல்லாவே புரியுது.  பெண் சுதந்திரம்னு சம உரிமை பேசி பொண்ணுக எல்லாத்துலையும் முன்னேறிட்டு இருந்தாலும், இன்னும் ஒரு சில இடத்துல அவங்களுக்கான சம உரிமை மறுக்கப்பட்டுட்டு  தான் இருக்கு.  அப்படி இல்ல இங்க இருக்கிற எல்லா பொண்ணுங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டு எல்லா விதத்திலையும் அவங்க சுதந்திரமா செயல்படுறாங்கன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா?,  முடியாது ஏன்னா இன்னும் பெண்களுக்கான சம உரிமையும் கிடைக்கல, நம்ம உணர்வுகளையும் இங்க யாரும் ஒழுங்கா மதிக்கிறதும் இல்லை. அதுதான் உண்மை.’

Advertisement

 

Advertisement

‘ பொண்ணுனா இதெல்லாம் செய்யணும், இதெல்லாம் செய்யக்கூடாதுன்னு நிறைய கட்டுப்பாடுகள் நம்மள சுத்தி இருந்தாலும் அதெல்லாம் உடைச்சு எறிஞ்சிட்டு ஒரு சில பொண்ணுங்க முன்னேறிப் போறாங்க,  பல பொண்ணுங்க இன்னும் அந்த கட்டுப்பாடுகள் தங்களை பாதுகாக்க வரையறுக்கப்பட்டதுன்னு  நம்பிட்டு அந்த நம்பிக்கையில  நம்மள கட்டிப்போட விதிச்ச கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்ந்துட்டு இருக்காங்க.  இவ்ளோ கருத்தா பெண்ணியம் பேசுறியே நீ யாருன்னு கேக்குறீங்களா?, என் பெயர் மீனாட்சி. இவ்ளோ நேரம் பெண் சுதந்திரம் பெண் உரிமை அது இதுன்னு பேசிட்டு இருந்தேனே இப்போ நான் என்ன செஞ்சிட்டு இருக்கேன் தெரியுமா?.  எனக்கு பிடிக்காத என்னோட கல்யாணத்துக்கு அலங்காரம் பண்ணிட்டு இருக்கேன். இது சாதாரணமா நடக்கிற கல்யாணம் இல்லை, கட்டாய கல்யாணம்.  என்னை இப்படி கட்டாயப்படுத்தி கல்யாண பந்தத்துக்குள்ள இணைக்கிறது வேற யாரும் இல்லங்க சாட்சாத் என்னோட அம்மா அப்பா தான்.   ‘

 

‘பெத்தவங்க எப்பவும் நல்லது தானே செய்வாங்க அவங்க நடத்தி வைக்கிற கல்யாணம் எப்படி கட்டாய கல்யாணம் ஆகும்னு யோசிக்கிறீங்களா?. அது ஒன்னும் இல்லங்க பொதுவா என் வயசு பொண்ணுகளுக்கு வர காதல் நோய் எனக்கும் வந்துடுச்சு. அத தெரிஞ்சுகிட்ட என் அம்மா அப்பா.. அவங்க காட்டுற பையன கல்யாணம் பண்ணிக்கலன்னா குடும்பத்தோட விஷம் குடிச்சு இறந்துடுவோம்னு மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் என்ன வேற வழியே இல்லாம என் அப்பா அம்மாவுக்காக எனக்கு பிடிக்காத கல்யாணத்துக்கு சம்பந்தம் சொல்லிட்டேன்.’

Advertisement

 

‘ அட இது என்னமோ உனக்கு மட்டும் புதுசா நடக்கிற மாதிரி சொல்லுற?  நம்ம நாட்டுல பாதி கல்யாணம் இப்படித்தான் நடக்குதுன்னு நீங்க நினைக்கிறீங்க தானே!, நீங்க நினைக்கலனாலும் அதுதான் நிஜம். பெத்தவங்க மேல இருக்கிற பாசத்துலையும் ஒருவித பயத்துலையும் தன்னோட காதல தியாகம் பண்ணிட்டு மனசு கல்லாக்கிக்கிட்டு அவங்க காட்டுற பையன கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணுங்க தான் நம்ம நாட்டுல அதிகம். என்னை மாதிரி தான் நம்ம நாட்டுல பாதி பொண்ணுங்க இருக்காங்கன்னு தெரிஞ்சும் நான் ஏன் என்னோட கல்யாணத்தை பத்தி இவ்வளவு பெருசா பேசுறேன்னா..  நான் கல்யாணம் பண்ணிக்க பேறவர், என்னை உயிருக்கு உயிராக  காதலிச்சவரோட ஃப்ரெண்ட். அடப்பாவமேனு ஒரு சிலருக்கு என் மேல அனுதாபம் வரலாம்.  ஒரு சிலருக்கு என்னடா இந்த பொண்ணு  காதலிச்சவன ஏமாத்திட்டு அவனோட ஃபிரண்டை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தைரியமாக வந்து சொல்லிட்டு இருக்குன்னு என் மேல கோபமும் வரலாம்.  இப்போ எதுக்கு இதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்னா உங்களோட அனுதாபத்துக்காகவோ, அடுத்தவங்க என்னை தப்பா நினைச்சுடு வாங்களேன்னு  என் செயலை நியாயப்படுத்துறதுக்காகவோ இல்ல. என்னால என் காதல மறக்க முடியல, அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு தேவை இல்லங்குற முடிவுக்கு வந்துட்டேன்.  என்னுடைய இந்த சோகமான முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் செத்ததுக்கு பிறகு இந்த வீடியோ கண்டிப்பா எல்லா நியூஸ்லையும்  சேனல்லயும் வரும்.  இந்த வீடியோ பாத்துட்டு இருக்க பெத்தவங்க தயவுசெய்து உங்க பிள்ளைகளோட உணர்வுகளை கொஞ்சமாவது புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க,   உங்க பிள்ளைங்க யாரையாவது காதலிக்கிறேனு வந்து நின்னா. அந்த பையனோட சொத்து பத்தை கணக்கு பார்க்காம,  அவன் நல்லவனா கெட்டவனான்னு மட்டும் பாருங்க. உங்க பொண்ணு சந்தோசமா வச்சுக்குவாறான்னு பாருங்க… அதே மாதிரி இந்த வீடியோ பார்த்துட்டு இருக்க யங்ஸ்டர்ஸ் நீங்களும் என்னை மாதிரி அவசரப்பட்டு முடிவெடுக்காம உங்க காதலுக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடுங்க.  மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றியே நீயும் அவசரப்பட்டு தப்பான முடிவு எடுக்காம உன்னோட காதலுக்காக போராட வேண்டியது தானேனு  எல்லாருக்கும் தோணும். என் காதலுக்காக நான் மட்டும் போராடி எந்த பிரயோஜனமும் இல்லையே. அவன் எங்க இருக்கான்னு தெரியல. என்னால அவனை காண்டாக்ட் பண்ண முடியல, கல்யாணம் நடக்கலன்னா அப்பா அம்மா செத்துருவேன்னு மிரட்டுறாங்க, கல்யாணம் நடந்தா குற்ற உணர்ச்சியில ஒவ்வொரு நாளும் நான் செத்துப் பிழைக்கணும்,  அதுக்கு இந்த கல்யாணம் நடக்காம இருக்கிறது தான் நல்லது, அதுக்கு நான் எடுத்த முடிவு தான் சரி’

 

‘ அம்மா அப்பா சாரி என்னால உங்களோட மைண்ட் செட்டை மாத்த முடியல…காதலிக்கிறது ஒன்னும் தப்பு  இல்ல, காலம் முழுக்க என்னோட வாழப் போற வாழ்க்கைத் துணையை நானே தேர்ந்தெடுக்கிறது எப்படித் தப்பாகும்?. அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது. காதலிக்கிற பொண்ணுங்க தப்பானவங்க இல்லை. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க. பொண்ணுங்க காதலிச்சா குடும்பம் மானத்துக்கு ஒன்னும் கேடு வந்துடாது, மானம் போயிடும்னு சொல்லி சொல்லியே. ..இனிமேலும் பொண்ணுங்களோட உணர்வுகளை கொல்லாதீங்க.  நீங்க என் உணர்வுகள முடமாக்கிட்டீங்க, அதனால நான் உயிர விடத் துணிஞ்சுடேன்.’  என்று தன் எண்ணத்தில் தோன்றிய வார்த்தைகள் அனைத்தையும் உணர்வுப் பூர்வமாய் ஒப்பித்து முடித்தவள் அதனை காணொளியாய் தனது அலைபேசியில் பதிவு செய்தாள்… தனது விருப்பம் இல்லாமல் நடைபெறும்  திருமணத்தில் இருந்து தப்பிப்பதற்காக உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்த மீனாட்சி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!