Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 4

அத்தியாயம் – 4

 

விக்ரம் தன் வீட்டின் உள்ளே நுழைந்தான்.



Advertisement

 

வந்த வேகத்தில் அம்மா சாப்பிட்டாங்களா? என்று பணி பெண்ணிடம் கேட்டார்.

 

Advertisement

இல்ல தம்பி. அம்மா எவ்ளோ சொல்லியும் சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்குறாங்க.

Advertisement

 

என்ன சொல்றிங்க?

 

Advertisement

ஆமாம் தம்பி. நீங்க போன அன்னையில் இருந்து அவங்க சாப்பிடறதே இல்ல.

 

ஏதோ அப்போ அப்போ ஹார்லிக்ஸ், ஜூஸ் மட்டும் கட்டாயப்படுத்தி குடிக்க வச்சோம்.

 

ஆனால் சாப்பாடு ஒரு பருக்கை கூட சாப்பிடல தம்பி.

 

நீங்க வந்தா தான் சாப்பிடுவேன்னு தட்டை பிடுங்கி எரியுறாங்க தம்பி என்றார் அந்த இட வயது பணிப்பெண்.

 

என்ன நீங்க இவ்ளோ அலட்சியமா பதில் சொல்றிங்க?

 

நான் சொல்லிட்டு தானே போனேன். அம்மா சாப்பிட அடம் பிடித்தால் எனக்கு கால் பண்ணுங்கனு.

 

ஹ்ம்ம்….. இருங்க,

 

மொதல்ல அவங்கள என்னனு பார்த்துட்டு வந்துட்டு உங்களை கவனிச்சுகிறேன் என்ற விக்ரம் தன் அன்னையை காண விரைந்தான்.

 

தன் அன்னையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் விக்ரம்.

 

அவன் அன்னையை எங்கும் காணவில்லை.

 

அம்மா…. அம்மா…என்று அழைத்தான்.

 

சுவற்றின் ஒரு மூலையில் அமர்ந்து விக்ரம்…விக்ரம் என்று அழுது கொண்டு இருந்தார் விக்ரமின் தாய் சுசிலா.

 

அம்மா…. ஆ.. என்று அவர் அருகில் சென்று அமர்ந்து,

அம்மா நான் வந்துட்டேன்.

உன் பிள்ளை விக்ரம் வந்து இருக்கேன் பாரும்மா!

 

என்ன மன்னிச்சிரு மா.

 

உன்ன தனியா விட்டுட்டு போய்ட்டேன். எனக்கு வேற வழி தெரியல.

 

ரொம்ப முக்கியமான மீட்டிங் அதனால தான் ம்மா…. நான் உங்களை தனியா விட்டுட்டு போற மாதிரி ஆயிடுச்சு.

 

வா…மா.. சாப்பிடலாம் என்றான் விக்ரம்.

 

நீ…போ என்று விக்ரமை உந்தி தள்ளினார் சுசிலா.

 

அம்மா நான் உன் விக்ரம்.

 

போ…நீ பொய் சொல்ற?

 

என் புள்ள விக்ரம் இதோ இங்க இருக்கான் என்று கையில் ஒரு பொம்மையை காட்டினார்.

 

நீ வேற யாரோ.

 

போ போ…என்று துரத்தி அடித்தார்.

 

கடவுளே மீண்டும் இது என்ன புதிய சோதனை.

 

இப்போ அம்மா அந்த பொம்மையை நான் என்று நினைத்து விட்டார்.

 

மீண்டும் அம்மாவின் ஆள் மனதில் இடம் பிடிப்பது கடினமான ஒன்று.

 

ச்ச…இந்த இரண்டு நாளில் எல்லாம் மீண்டும் பழையபடி ஆகிவிட்டது.

 

இப்போது நான் என்ன செய்வேன் என்று கவலையுடன் தலையில் கை வைத்து அமர்ந்தான்.

 

தன்னை பெற்ற தாய் இப்போது அவன் அருகில் குழந்தையாக?

 

இது வரமா? சாபமா?

 

தனக்கு அன்னையானவள் இப்படி தன்னை மறந்து என்னை மறந்து கையில் பொம்மையோடு அதை தன் மகன் என எண்ணி அரவணைத்து அன்பு காட்டும் அன்னை விக்கரமிற்கு சாபம் தானே.

 

அம்மா…ப்ளீஸ்…கொஞ்சம் ஆச்சும் சாப்பிடு மா என்று ஊட்டினான் விக்ரம்.

 

தட்டு பறக்கவே செய்தது.

 

அது காற்றில் சுழன்று தரையில் விழும் சப்தம் ரீங்காரமாய் அந்த அறை முழுவதும் ஒலிக்க

 

அம்மா என்று பற்களை கடித்து உனக்கு வர வர பைத்தியம் ரொம்ப முத்திருச்சு.

 

நான் தான் உன் பையன் விக்ரம்.

 

இந்த பொம்மையை எப்போ பார்த்தாலும் கூடவே வச்சுக்கிட்டு ஏன் என் உயிரை வாங்குற.

 

கண்ணு முன்னாடியே உன் பிள்ளை நான் இங்க தவிச்சுக்கிட்டு இருக்கேன்.

 

அது உனக்கு தெரியலையா?

 

அந்த பொம்மையை குடு இப்படி என்று பிடுங்கி தூக்கி எறிந்தான் விக்ரம்.

 

ஐயோ என் பிள்ளை என்று தவித்தப்படி ஓடி சென்று தரையில் கிடக்கும் அந்த பொம்மையை எடுத்து, தன் மார்போடு அணைத்து கொண்டு

 

என்ன டா தங்கம் என்ன ஆச்சு?

உனக்கு வலிக்குதா?

 

அடி எதுவும் பட்டுச்சா என்று துடித்தார் சுசிலா.

 

அதை கண்ட விக்ரமிற்கு மேலும் கோபம் தான் அதிகரித்தது.

 

இப்படி உயிர் இல்லாத அந்த பொம்மை மேல் அன்பு காட்டு

இங்கே உன் அன்புக்காக ஏங்கும் என்னை ஒதுக்கி வை.

 

வலிக்குது மா…ரொம்ப வலிக்குது.

தாய் பாசம்னா என்னானே தெரியாம இத்தனை வருசமா தவிக்கிறேன்.

 

நீங்க எல்லாரும் பண்ண தப்புக்கு நான் ஏன் இப்படி தண்டனை அனுபவிக்க வேண்டும்.

 

நீ சாப்பிட்டா சாப்பிடு இல்லை என்றாள் எக்கேடோ கெட்டு போ.

 

வீட்டுக்கு வந்தாலே நிம்மதியே இல்லை என்று அங்கிருந்து கோபத்துடன் வெளியே சென்றான் விக்ரம்.

 

அதை உணராமல் அந்த பொம்மையை அக்கறையோடு மடியில் வைத்து ஆறுதலாய் பேசி கொண்டு இருந்தார் சுசிலா.

 

தம்பி சாப்பாடு கொண்டு வரவா என்று வீட்டின் பணி பெண் கேட்க.

 

எனக்கு வேண்டாம் போங்க நீங்க எல்லாரும் சாப்பிடுங்க.

 

அப்புறம் யாரும் என்ன கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று கூறி தன் அறை கதவை அடைத்து கொண்டான்.

 

படுக்கையில் அப்படியே சரிந்தான்.

 

தன் உடையை கூட மாறவில்லை.

 

அத்தனை மன சோர்வு.

 

காலை மெல்ல புலர்ந்தது.

 

பறவைகளின் இறைச்சல், கண்ணாடி ஜன்னல் வழி ஊடுருவி அவன் முகத்தில் விழும் சூரிய கதிர்களின் வெளிச்சம் அவன் தூக்கத்தை கலைத்தது.

 

இப்ச்…. என்று விழியை திறந்தவன் கடிகாரத்தை நோக்கினான்.

 

என்ன மணி ஏழு ஆயிடுச்சா என்றபடி எழுந்தான்.

 

தன்னை தயார் படுத்தி கொண்டு,

 

பிரேக் பாஸ்ட் என்றான்.

 

இதோ ரெடி தம்பி என்று விக்ரமிற்கு பரிமாறினார்.

 

அம்மாக்கு மறக்காம சாப்பாடு கொடுங்க.

 

அண்ட் டேப்லெட் ஆல்சோ என்றவன் தன் சிற்றுண்டியை விரைந்து முடித்தான்.

 

தம்பி அம்மா நான் கொடுத்தா சாப்பிட மாற்றாங்க அதனால என்று வார்த்தையை இழுக்க,

 

அதனால அப்படியே சாப்பிட வைக்காம விட்ருவீங்களா?

 

போங்க போய் எதையாச்சும் செஞ்சு சாப்பிட வைங்க.

 

அவங்க பைத்தியமா இருந்து எனக்கு பைத்தியம் பிடிக்க வச்சுருவாங்க போலே இருக்கு.

 

இங்க பாருங்க மா…அம்மாவை நீங்க சாப்பிட வச்சே ஆகணும்.

 

இல்லைனா வேற இடம் பார்த்துக்கோங்க. உங்களுக்கு இங்கே வேலை இல்லை சரியா என்று விட்டு தன் லேப்டாப் பேகை எடுத்து தன் காரில் புறப்பட்டான் விக்ரம்.

 

போகும் அவரை வருத்ததோடு பார்த்து நின்றார் பணிப்பெண்.

 

கையில் தட்டோடு போக கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து அவர் மீது வீசினார் சுசிலா.

 

“அம்மா…. கொஞ்சம் அமைதியா இருங்க மா, சொன்னா கேளுங்க” என்று மன்றாடினார்.

 

ஒரு சிறிய பிலோவேர் வாசை எடுத்து அவரை நோக்கி தூக்கி ஏறிய அது அவர் நெற்றியில் பட்டு கீழே விழுந்தது.

 

ஆ…என்றவர் தன் நெற்றியில் வழியும் காயத்தை துடைத்து, இனிமேல் அவரிடம் பேசி பிரியோஜனம் இல்லை என்று அறை கதவை அடைத்து சென்று விட்டார்.

 

ஏய்…என்ன டி சிந்து கிளம்பிட்டியா?

 

ஐ அம் ரெடி என்று புன்னகை முகத்தோடு வந்து நின்றாள் சிந்து.

 

ஹே…சிந்து, ரொம்ப அழகா இருக்க டி.

 

இந்த வைட் கலர் சுடிதார்ல, உன்ன பார்க்க செம்ம கியூட் டி என்று புகழ்ந்தாள் ரஞ்சிதா.

 

ஏய்…போதும் ரஞ்சி. ரொம்ப ஒட்டாத டைம் ஆச்சு வா போகலாம் என்று அவளை இழுத்து சென்றாள் சிந்து.

 

இருவரும் ஸ்கூட்டியில் சென்று விக்ரமின் வீட்டின் முன் இறங்கினர்.

 

ஹே…என்ன டி வீடு பேர்லஸ் மாதிரி இருக்கு.

 

இங்கவா நான் ஒர்க் பண்ண போறேன்.

 

வேலை ரொம்ப அதிகமா இருக்குமோ?

 

ஏன் கேக்குறேன்னா, வீடே இவ்ளோ பெருசா இருக்கு அப்போ கண்டிப்பா ஆளுங்களும் அதிகமா தான் இருப்பாங்க,

 

சோ வேலையும் அதிகமா சொல்லி என்ன டார்ச்சர் பண்ணுவாங்க என்று தன் ஆள்கட்டி விரலின் நகத்தை பல்லில் வைத்து லேசாக கடித்து கண்கள் கலங்கினாள்.

 

ஏய்…லூசு. நீ ஓவரா திங்க் பண்ணாத!

 

இந்த வீட்டுல யாரும் இல்ல, விக்ரம் சாரும் அவங்க அம்மா சுசிலாவும் தான் இருக்காங்க.

 

விக்ரம் சார் மார்னிங் ஆபீஸ் போய்ட்டாங்கனா நைட் தான் வருவாரு.

 

நீ பாத்துக்க வேண்டியது சுசிலா அம்மாவை தான்.

 

ஏண்டி அவங்களுக்கு என்ன?

 

எதுவும் உடம்பு சரி இல்லையா?

 

ஹ்ம்ம்…கிட்ட தட்ட அப்படி தான். மனசு சரி இல்ல?”

 

மனசு சரி இல்லையா?

 

ஓய்.. நீ சொல்றது எனக்கு ஒன்னும் புரியல என்றாள் சிந்து.

 

எல்லாவற்றையும் என் கிட்டே கேட்டால் எப்படி?

 

போ போய் பார்த்து தெரிஞ்சுக்கோ என்று கையில் சுசிலா பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை அவளிடம் கொடுத்து விட்டு

 

சரி டி எனக்கு நேரம் ஆச்சு, நான் கிளம்பறேன். நைட் செவென் ஓ கிளாக் சார்ப் நான் வந்தறேன் ரெடி யா இரு ஓகே வா…

 

ஆல் தே பெஸ்ட் டி என்று ரஞ்சிதா ஸ்கூட்டியில் பறந்தாள்.

 

சற்று தயக்கத்தோடு காலிங் பெல் அடித்தாள்.

 

கேட் திறக்கப்பட்டது.

 

யாரு மா நீ?

என்ன வேணும் என்றார் வாயில் காவலன்.

 

நான் இங்க வேலைக்கு வந்து இருக்கேன்.

 

சுசிலா அம்மாவை பார்த்துக்க வந்து இருக்கேன்.

 

இதோ அபாயிண்ட்மென்ட் ஆடர் என்று காட்டினாள் சிந்து.

 

ஹ்ம்ம்.. சரி உள்ள போ மா.

 

கேட்டை திறந்தே வைத்து இருக்கிறேன் என்றார்.

 

அவரை வித்தியாசமாக பார்த்து, ஏன் என்று கேட்டாள்.

 

நீ உள்ள போ.. நீயே ஏன்னு தெரிஞ்சுப்ப என்று மர்மமாய் புன்னகைத்தார்.

 

யோசனையோடு அடி மேல் அடி வைத்து உள்ளே சென்றாள் சிந்து.

 

ஹ்ம்ம்…இந்த பொண்ணு எத்தனை நாளோ?

எத்தனை மணி நேரமோ? என்று பெருமூச்சு விட்டு

செய்தி தாளை படிக்க துவங்கினார்.

 

உள்ளே மெல்ல அடி மேல் அடிவைத்து நடந்தாள்.

 

அத்தனை பெரிய வீட்டின் நடு கூடத்தில் அவள் கால் கொலுசின் ஓசை மட்டும் கீதமாய் …ஒலித்தது.

 

யாரு என்று அடக்கலையில் இருந்து வெளியே வந்தார் அந்த பணி பெண்.

 

அக்கா…என் பேரு சிந்து.

 

நான் இங்க வேலைக்கு வந்து இருக்கிறேன்.

 

சுசிலா அம்மாவை பார்த்துக்க சொல்லி என்ன நியமனம் செய்து இருக்காங்க.

 

நீ தான் அந்த பொண்ணா.

 

சரி…சரி…சற்று யோசனையோடு

 

அந்த பொண்ணு பேரு வேற ஏதோ சொன்னாங்க நீ சிந்துனு சொல்ற என்றார் சந்தேகமாய்.

 

உங்களுக்கு மாத்தி கேட்டு இருக்கும் அக்கா.

 

அது சரி…பேரா முக்கியம்.

 

அங்க பாரு மா அந்த ரூம் தான் சுசிலா அம்மாவோடது.

 

உனக்கு முதல் வேலை என்ன தெரியுமா?

 

அவங்களை சாப்பிட வைக்குறது.

 

இந்த வேலை உனக்கு கண்டிப்பா வேணும்னா இந்த டாஸ்க்ல நீ ஜெயிச்சே ஆகணும் புரியுதா.

 

இந்தா இதை பிடி என்று கையில் தட்டை கொடுத்தார்.

 

அக்கா…என்ன அக்கா நீங்க இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?

 

பத்து நிமிசத்துல சாப்பிட வச்சி வெற்றியோட திரும்புறேன் என்று நம்பிக்கையோடு மாடி படி ஏறினாள் சிந்து.

 

பாப்போம் இந்த பொண்ணு தாக்கு பிடிக்குமான்னு என்று அவர் நடப்பதை காண அவளோடு இருந்தார்.

தென்றல் மீண்டும் வீசும்…*

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!