Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் 7

அத்தியாயம் – 7

“இப்போ உன்னால வேலைக்கு வர முடியுமா முடியாதா?”

“முடியாது சார்” என்று பட்டென்று கூறினாள்.



Advertisement

“இங்க பாரு பொண்ணே…பி எ பிராக்டிகள்”

“ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற?

இப்போ உடனே கிளம்பி நீ அங்க போ”.

Advertisement

“உனக்கு பேசுன பணத்தை விட நாலு மடங்கு அதிகமாத்தரேன்”.

Advertisement

“ஒரு செகண்ட் யோசிச்சு பாரு

அப்பறம் உன் விருப்பம்” என்றான் விக்ரம்.

அதை கேட்டதும் ஒரு நிமிடம் அவளுக்கு தலை கால் புரியவில்லை.

Advertisement

“என்..ன…என்ன சொல்லறீங்க” என்று வார்த்தைகள் தடுமாற்றத்துடன் கேட்டாள் சிந்து.

“உண்மையாக தான் சொல்கிறேன்.

நீ சரி என்று சொன்னால் இப்போதே உன் அக்கௌன்ட்டிற்கு ஐம்பது ஆயிரம் அனுப்பி வைக்கிறேன்”என்றான் விக்ரம்.

என்ன ஐம்பது ஆயிரமா!!!!

“சார்…நீங்க இன்னும் ஃபோன் வைக்கவில்லையா.

நான் உங்கள் வீட்டுக்கு கிளம்பி ஐந்து நிமிடம் ஆகிறது” என்றாள் சிந்து.

“ஹ்ம்ம்…வெரி குட்”என்று அழைப்பை தூண்டித்தான்.

அடுத்த நொடி அவளின் ஜி பே நம்பருக்கு பணம் கிரிடிட் ஆனது.

பணம் வந்த உடன் சந்தோஷமும் நிம்மதியும் அடைந்தாள்.

தேங்க்ஸ் சார் என்ற பதிலும் அவளிடம் இருந்து வந்தது.

அதை கண்டவன் “பணம் எப்போதும் அல்டிமேட் தான்” என்று சிரித்து கொண்டே மீட்டிங் அறைக்குள் நுழைந்தான்.

பின் தன் வேலையை நிம்மதியுடன் தொடர்ந்தான் விக்ரம்.

வீட்டிற்குள் நுழைந்த சிந்து காதை இரு கை கொண்டும் அடைத்துக் கொண்டாள்.

கண்களை மூடி ஒவ்வொரு அடிக்கும் பதஸ்டதோடு நடந்தாள்.

பண்ட பாத்திரம் யாவும் காற்றில் பறந்தது.

வீடே அலங்கோலமாய் இருந்தது.

ஒரு மூலையில் தலையில் தன் புடவை முந்தானையை போட்டு கொண்டு அமர்ந்து இருந்தார் கீதா.

“ஐயோ கீதா…க்கா.

என்ன ஆச்சு?” என்றிட தலையில் இருந்த முக்காடை எடுத்தார்.

“ஐயோ…என்ன..க்கா இது ரத்தம்” என்று பதறினாள் சிந்து.

“சத்தம் கேக்கலயா சிந்து?!

சுசிலா அம்மா தான் சாப்பாடு கொடுக்க போன என்ன மரப்பாச்சு பொம்மையால அடிச்சுட்டாங்க” என்று வருத்தத்துடன் கூறினார்.

“என்ன அடிச்சுட்டாங்களா” என்று சிந்தனையாய் வான் நோக்கினாள் சிந்து.

“போச்சு…. காசுக்கு ஆசப்பட்டு இப்படி வசமா இங்க வந்து மாட்டிக்கிட்டோமே!”

“உயிர் தப்புமான்னே தெரியலையே?

அந்தாளு நாலு மடங்கு பணம் தரதா சொன்னானே”…

“அதை வாங்க நான் உயிரோட இருக்க மாட்டேன் போலே இருக்கே. என் குடும்பம் வேற என்னை நம்பித்தானே இருக்கு.

ஒருவேள சுசிலா அம்மா அடிச்சே என்ன கொன்னுட்டாங்கனா?”என்று அவள் மைண்ட் வாய்ஸ் அவளை எச்சரித்தது.

“என்ன மா…சிந்து யோசிக்கிற”.

“போ…போய் அவங்கள சாப்பிட வை” என்றார் கீதா.

“அக்கா இது உங்களுக்கே நியாயமா இருக்கா”

“நீங்களாச்சும் வாழ்க்கைல சில பல விஷயத்தை ஆண்டு அனுபவிச்சுட்டீங்க”.

“ஆனா நான்…பசும் தளிர். என்ன கொல்ல பிளான் போட்டு கொடுக்குறீங்களே.. க்கா இது உங்களுக்கே நியாயமா இருக்கா?”என்றாள்.

கீதாவிற்கு அவள் பேசும் தோரணை சிரிப்பை வரவழைத்தது.ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல்

“இப்ச்…சிந்து!! அவங்க ஒன்னும் பண்ணமாட்டாங்க நீ தைரியமா போ” என்றார் கீதா.

“ஆமாம்…அந்த தைரியத்தோட போய் தானே இப்படி நெத்தியை பேர்த்து விட்டு வந்து இருக்கீங்க” என்றாள்.

“இப்ச்…இப்போ போக போறியா இல்லையா?”

“நான் விக்ரம் தம்பிக்கு கால் பண்றேன்” என்று எழ,

“தெய்வமே நான் போறேன்.

ஆனா ஒன்னு நான் உள்ள போய் ரொம்ப நேரம் நான் வெளிய வரலைனா கொஞ்சம் என்னா ஏதுன்னு மட்டும் பார் ஆத்தா…

இல்ல…இல்ல கீதா”…என்றாள் சிந்து.

“அடிங்க…வாலு” என்று அடிக்க கை ஒங்க ஓடியே விட்டாள் சிந்து.

“பாவம் அப்பாவி பொண்ணு”…. என்று சிந்துவை நினைத்து பெருமூச்சு விட்டார் கீதா.

“அம்மா…. கருமாரி, உருமாரி வந்து காப்பாத்து தாயே”.

“நான் உள்ள போறேன். என் உயிருக்கு நீ தான் இன்சூரன்ஸ் பாலிசி” என்று விட்டு மெல்ல அறைக்குள் நுழைந்தாள்.

நடுங்கும் குரலில், சு…சு.. சுசிலா…ம்ம்ம்மா…என்றழைத்தாள் சிந்து.

அவள் குரலை கேட்டதும் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டு அழுதார் சுசிலா.

“அம்மா என்ன ஆச்சு?”

“ஏன் இப்படி அழறீங்க?

யார் என்ன பண்ணா?

சொல்லுங்க அம்மா” கேட்டு பதறினாள் சிந்து.

“சிறு குழந்தையை போலே.. அங்கே.. அங்கே”..என்று தேம்பினார்.

“என்ன மா…அங்க என்ன இருக்கு?

வாங்க” என்று சுசிலாவை அழைக்க, “நான் வர மாட்டேன்” என்று அழுதார்.

“அதான் நான் இருக்கேன்ல, எதுக்கு பயம் வாங்க” என்று கை பிடித்து அழைத்து செல்ல, பயந்து நடுங்கி கொண்டே சென்றார் சுசிலா.

“அங்க எதுவும் இல்லை பாருங்க…பயப்படாம கண்ண திறங்க” என்றாள் சிந்து.

கண்களை மெல்ல திறந்தவர் மீண்டும் அலறினார்.

“அம்மா…என்ன ஆச்சு. அங்க என்ன இருக்கு…ஏன் இப்படி நடந்துக்கறீங்க” என்றாள்.

“பட்டாம்பூச்சி”…என்று நேற்று அவர் கொன்ற வண்ணத்து பூச்சியை நோக்கி கையை காண்பித்தார் சுசிலா.

அதை எறும்பு கூட்டங்கள் மொய்த்து மெல்ல நகர்த்தி அதன் இரைக்காக எடுத்து சென்று கொண்டு இருந்தது.

புருவத்தை சுருக்கி…”ஹ்ம்ம்…ஆமாம் பட்டாம்பூச்சி அதற்கு என்ன?.

அதுதான் நேற்றே இறந்துவிட்டதே!

இதுக்காவா இப்படி பயந்து இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்றிங்க”.

“பத்தாததுக்கு கீதா அக்கா நெத்தியை வேற காயப்படுத்திடீங்க?

அது செத்த பட்டாம்பூச்சி உங்களை ஒன்றும் செய்யாது”என்றாள் சிந்து.

 

சிறு பிள்ளை போலே தேம்பி அழுதார் சுசிலா.

“நான் வேணும் பண்ணல. தெரியாம பண்ணிட்டேன்.

தெரியாம பண்ணிட்டேன்..

ஐயோ.. நான் பாவி தெரியாம பண்ணிட்டேன்” என்று தலையில் அடித்து கொண்டு அழுதார்.

“அம்மா!!

என்ன ஆச்சு. வேண்டாம் சொன்னா கேளுங்க

ப்ளீஸ்”என்று அவர் கையை பிடித்து தடுத்தாள்.

“என் புள்ள…!

“என் பிள்ளையை நானே கொன்னுட்டேன்…

என் பிள்ளையை நான் கொன்னுட்டேன் .. நான் வேணும்னு பண்ணல என்ன நம்பு…என்ன நம்பு இனியா…ஆ”என்று மயங்கி விழுந்தார் சுசிலா.

“ஐயோ….கீதா அக்கா…சீக்கரம் தண்ணி எடுத்துட்டு வாங்க, சுசிலாம்மா மயங்கி விழுந்துட்டாங்க” என்று குரல் கொடுக்க,

கையில் குவளை நீரோடு ஓடி வந்தார் கீதா.

உடனடியாக மருத்துவரை அழைத்தார் கீதா.

சுசிலாவை கட்டிலில் கிடத்தி எங்கும் நகராமல் அருகிலேயே அமர்ந்து இருந்தாள் சிந்து.

சில நிமிடங்களில் ஒரு பெண் மருத்துவர் வந்தார்.

“என்ன ஆச்சு?”என்று வினவினார்.

தெரியல டாக்டர். திடீருனு ரொம்ப ஆக்ரோசமா நடந்துகிட்டாங்க” என்றாள் சிந்து.

“ஏதாவது காரணம் இருக்கும்” “எதையாவது பார்த்து பயந்த மாதிரி பிஹேவ் பண்ணாங்களா?”

“எஸ் டாக்டர்”

“இதோ இந்த செத்த பட்டாம்பூச்சி” என்று அதை எடுத்து காண்பித்தாள்.

“ஓ…ஐ.. சீ. ஓகே…ஓகே” என்றார் மருத்துவர் ஆலோசனையுடன்.

“அது மட்டும் இல்லை டாக்டர். நான் தான் என் பிள்ளையை கொன்னுட்டேன். கொன்னுட்டேன்னு ரொம்ப ஆக்ரோசமா கத்தினாங்க. எங்களால கன்ட்ரோல் பண்ண முடியல டாக்டர். அப்படியே மயங்கிட்டாங்க”என்றாள் சிந்து.

“ஹ்ம்ம்…ஓகே மா. நான் இப்போ ஒரு இன்ஜெக்ஷன் போடுறேன். கொஞ்சம் நேரம் அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்.

கூடவே இருங்க. அவங்களை தனியா விடாதீங்க” என்றார் மருத்துவர்.

சரிங்க டாக்டர் என்றவள் சந்தேகத்தோடு டாக்டர்…. சுசிலா அம்மாக்கு என்ன ஆச்சு என்று கேட்டாள்.

“பயப்படுற அளவுக்கு ஒன்றும் இல்லை. அவங்களுக்கு இந்த செத்து போன பட்டாம்பூச்சியை பார்த்ததும் பழைய நினைவுகள் தூண்டப்பட்டு இருக்கலாம்”.

“அவங்களுக்கு அந்த பட்டாம்பூச்சி உயிர் இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை”.

“அதனால் தான் இப்படி ஆக்ரோசமா நடந்து இருக்காங்க.

டோன்ட் வொரி அவங்க தூங்கி எழுந்தா நார்மல் ஆகியிருவாங்க” என்று சிந்துவின் கையை பிடித்து சமாதானம் கூறினார்.

“ஆனா அதை கொன்னதே அவங்க தானே” என்று வினா எழுப்பினாள் சிந்து.

“எல்லாம் நீ போக போக புரிந்து கொள்வாய்,

யார் கீதா இவங்க புதுசா என்றார்.

ஹ்ம்ம்.. ஆமாம் டாக்டர் என்றார்.

ஹ்ம்ம்…அதான் இவங்களை பற்றி எதுவும் தெரியவில்லை போல் இருக்கிறது. சரி அப்போ நான் கிளம்பறேன் என்றவர் விக்ரமை கேட்டதா சொல்லுங்க கீதா என்று விட்டு சென்றார்.

சிந்துவிற்கு ஒரே மர்மமாக இருந்தது.

“அப்படி என்ன ரகசியம் இருக்கிறது சுசிலா அம்மாவின் வாழ்வில்.

ஹ்ம்ம்…எதுவாக இருந்தால் நமக்கு என்ன?

நமக்கும் இந்த குடும்பத்துக்கும் ஒட்டா உறவா என்ன?”

வேலைக்கு வந்தோமோ காசு வாங்குனோமா, வாங்கின காசுக்கு உண்மையாக உழைத்தோமா என்று இருக்க வேண்டும்.

அவர்கள் விஷயம் நமக்குகெதற்கு”என்று அவர் அருகில் நாற்காலி இட்டு அமர்ந்து, அக்கா நீங்க போங்க நான் அம்மாவை பார்த்துக்கறேன் என்று கீதாவை அனுப்பி வைத்தாள் சிந்து.

தன் அலைபேசியை எடுத்தவள் தன் தங்கையின் செல்லுக்கு அழைத்தாள்.

“சிந்து அக்கா…. எப்படி இருக்க?

என்ன அக்கா நீ அங்க போனதுல இருந்து எங்களுக்கு ஃபோன் கூட பண்ணல!நாங்க போன் பண்ணாலும் லைன் கிடைக்கல அம்மாவும் நானும் எப்படி பயந்துட்டோம் தெரியுமா?”என்று துளசி அக்கறையாக கேட்டாள்.

“ஹ்ம்ம்…. புரியுது டி குட்டிமா. அக்காவோட நிலைமை அப்படிடா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ சரி

அம்மா எங்கே?” என்றாள் சிந்து.

“அம்மா காட்டு வேலைக்கு போய் இருக்கு அக்கா.

சாயுங்காலம் தான் வரும்” என்றாள் துளசி.

“ஏய்…உன் கிட்ட என்ன சொல்லி இருக்கேன். இப்படி எல்லாம் பேசக்கூடாது.

நீ ஒரு டாக்டராக போறவ இப்படி எல்லாம் பேசுனா யார் உன்னை காலேஜ்ல மதிப்பாங்க”.

“ஒழுங்கா சிட்டி தமிழ்ல பேசு”என்றாள் சிந்து.

“ஓ…சாரி அக்கா. பழக்கதோஷத்துல பேசிட்டேன். இனி சரியா பேசுறேன்” என்றாள் துளசி.

“ஹ்ம்ம்…குட், அப்பறம் அக்கௌன்ட்ல ஐம்பது ஆயிரம் பணம் அனுப்பி வச்சு இருக்கேன். அதை போய் உடனே அட்மிசன் பீஸ் கட்டிரு, இல்லைனா கடன்காரனுங்க ஒத்த ரூபாய் விடாம வாங்கிட்டு போயிருவானுங்க”.

“எவ்வோளோ வட்டி தான் கொடுக்கறது. அசலை விட மூணு மடங்கு கொடுத்தாச்சு இன்னும் பாக்கி இருக்குனு என் உயிரை வாங்குறானுங்க கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லமா” என்றாள் சிந்து.

“அக்கா எல்லாம் என்னால தானே!”என்று வருத்ததோடு கூறினாள் துளசி.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல டா. நீ நல்லா படிச்சு டாக்டர் ஆயிட்டேனா அப்புறம் நம்ம குடும்ப கஷ்டம் எல்லாம் தீரும்”.

“அதுவரைக்கும் நீ எதைப்பற்றியும் கவலைப்படைதே சரியா நன்றாக படிப்பது ஒன்று தான் உன் சிந்தனையாகவே இருக்க வேண்டும்”.

“நான் அழைத்ததாக அம்மாவிடம் சொல்” என்றவள்அழைப்பை துண்டித்து சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

தென்றல் மீண்டும் வீசும்…*

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!