Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல்.

 

அத்தியாயம் – 1



Advertisement

 

அது ஒரு கோடை கால மதிய வேளை.

பேருந்து நிறுத்தத்தில் “அப்பப்பா…. என்னா வெயிலு…

Advertisement

கண்ணே தொறக்க முடியல” என்றபடி மக்கள் சூரிய பகவானைத் திட்டிக்கொண்டு இருந்தனர்.

Advertisement

சிக்னல் போடப்பட்டு இருந்ததால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டு இருந்தது.

இதில் இடை இடையே ஹாரன் வேறு ஓயாமல் அடிக்க

“யோவ் சும்மா இருக்க மாட்ட

Advertisement

அங்க தான் ரெட் லைட் போட்டு இருக்குல்ல கண்ணு தெரியல”

“அவ்ளோ அவசரம்னா ஃபிளைட்ல போக வேண்டியது தானே”.

வந்துட்டானுங்க என்று கறுவிக்கொண்டு இருந்தார் ஒரு ஆட்டோ ஓட்டுநர்.

“என்ன ஆதவ் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்”.

ஆல்ரெடி லேட் என்று தன் பி. ஏவிடம் கேட்டான் நம் கதையின் நாயகன் விக்ரம்.

“இதோ…இதோ…சார் போய்டலாம்.

சிங்னல் போட்டு இருக்காங்க, பெரிய டிராஃபிக் சார்”என்றான் ஆதவ்.

“இதுக்கு தான் நான் இப்படி ரோட்ல எல்லாம் வரது இல்ல”.

அப்போவே ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணி இருந்தா இப்படி நடந்து இருக்குமா?” என்றவன் ஆதவ்வை முறைத்தான்.

“சாரி.. சார் மறந்துட்டேன்” என்றான்.

உன் நியாபக மறதி வர வர ரொம்ப அதிகம் ஆயிட்டே போகுது.

இப்படியே பண்ணிட்டே இருந்தேனா கண்டிப்பா நீ வேற வேலைத் தேட வேண்டியது இருக்கும்.

அப்பறம் என்னை குறைக் கூறக் கூடாது.

போறப்ப ஆச்சும் ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணு என்றவன் கண்ணை நிமிர்த்தியும் அவனை பாராது தன் மடி கணினியில் கண்களை புதைத்தான்.

“சார்…என்ன தான் ஃபிளைட்ல வந்தாலும் ஆபீஸ் வரைக்கும் போக முடியாது”.

“ஏர்போர்ட்ல இருந்து நாம கார்ல தான் வந்தாக வேண்டும்” என்று வாயை மூடி கொண்டான் ஆதவ்.

“வர வர வாய் ஓவரா பேசுற ஆதவ். குறைச்சுக்கோ” என்றான்.

சரிங்க…சார் என்று தன் பார்வையை வேறு திசை திருப்பிக்கொண்டான்.

அப்போது அவன் காரின் ஜன்னல் தட்டப்பட்டது.

“இப்ச்…”என்று உச்சு கொட்டியப்படி கார் ஜன்னலைத் திறந்தான்.

அங்கே கையில் ஒரு கிளி வடிவிலான விசில் ஒன்றை

தன் காய்ந்த உதட்டில் வைத்து

ஊத கூட முடியாமல் தொண்டை உளர்ந்து கண்களில் ஒளி இழந்தப்படி

கிழிந்த அழுக்கடைந்த ஆடையுடன் காலில் செருப்பு கூட இல்லாமல் தகிக்கும் தார் சாலையின் உஸ்னம் தாங்கிக்கொள்ள முடியாமல்

நெளிந்தபடி பத்து வயதேயான ஒரு சிறுமி நின்று இருந்தாள்.

“என்ன” என்று கடு கடுத்த முகத்தோடு கேட்டான் விக்ரம்.

“அண்ணா….கலரிங் புக் வாங்கிக்கோங்கண்ணா”

காலைல இருந்து ஒருத்தர் கூட வாங்கவே இல்லை.

ரொம்ப பசிக்குதுண்ணா” என்றாள் அச்சிறுமி.

அவள் சோக கீதத்தை முழுமையாய் கேட்க கூட அவனுக்கு மனம் இல்லை.

தன் வாலட்டில் இருந்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவள் முன்னே நீட்டி

“இந்தா இதை பிடி, மொதல்ல இங்க இருந்து போ என்றான் அதட்டலாய்”

அந்த சிறுமி அதை ஏற்க மறுத்தாள்.

வேண்டாம் அண்ணா என்று புன்னகையுடன் கூறிக் கடந்தாள்.

“ஏய்…பொண்ணே…நில்லு”.

அவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

“எவ்ளோ திமிரு பாரு. சோத்துக்கு வழி இல்லாட்டினாலும் இந்த ரோஷத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல” என்றான் விக்ரம்.

ஆதவ்…எந்த பதிலும் கூறவில்லை.

விக்ரம் பரம்பரை பணக்காரன்.

அதனால் பணத்தின் அருமை என்னவென்று அவனுக்கு தெரியாது.

ஏழைகளின் வாழ்வியல், அவர்களின் அன்றாட வாழ்வில் இருக்கும் இன்பம் துன்பம் என்னவென்றும் தெரியாது.

சொல்லப்போனால் அவன் ஒரு மனித எந்திரன்.

கார் கண்ணாடியை அடைக்க..

அப்போது திடீர் என மக்கள் பதஷ்டம் அடைந்தனர்.

அங்கே பெரும் சலசலப்பு.

விக்ரமின் காரை கடந்து அலறியபடி ஓடினான் ஒருவன்.

மக்கள் அனைவரும் அவனை பார்த்தனர்.

அவன் பின்னே சுடிதார் அணிந்த ஒரு பெண் அவனை துரத்தி கொண்டு ஓடினாள்.

யார் இவ? என்று அதிசயித்து பார்த்தான் விக்ரம்.

போக்குவரத்து சமிக்ச்சையில் பச்சை விளக்கு ஒளிர வாகனங்கள் மெல்ல நகர துவங்கியது.

ஆனாலும் அனைவரின் கண்களும் அவனை துரத்தி கொண்டு போன அந்த பெண்மையின் மீதே இருக்க வாகனகள் சில அசைய கூட இல்லை.

ஏய்…என்ன இது?

 

அதான் சிக்னல் கிளியர் ஆயிடுச்சுல போகவேண்டியது தானே.

டைம் ஆச்சு ஆதவ்”என்று எரிச்சலுடன் கூறினான் விக்ரம் .

“சார்…முன்னாடி இருக்க வாகனங்கள் எதுவும் மூவ்வாக மாட்டேங்குது சார்” என்றான் ஆதவ்.

“ஓ மை காட்” என்று பற்களை கடித்து…”எல்லாம் உன்னால் தான்”என்றான்.

“சாரி சார்” என்றான் தலையை குனிந்தபடி.

“ஆதவ்…போதும் உன் வருத்தம்”

மொதல்ல அங்க என்னனு போய் பாரு.சீக்கிரம்…”என்றான்.

“ஹ்ம்ம்…ஓகே சார்” என்று காரை விட்டு இறங்கி ஓடினான் ஆதவ்.

நேரம் சென்று கொண்டுத் தான் இருந்ததே தவிர வாகனங்கள் அசையக் கூட இல்லை.சென்றவனும் திரும்பி வரவும் இல்லை.

“இந்த ஆதவ் இருக்கானே,எதுக்கு போனான் அப்படிக்கறதயே மறந்து வாயை பார்த்துட்டு நின்னுட்டு இருப்பான் அவன” என்று காரை விட்டு இறங்கி கூட்டத்திற்குள் நுழைந்து..

“ஹலோ…கொஞ்சம் வழி விடுங்க” என்றபடிக் கூட்டத்தை விளக்கினான்.

“அடேங்கப்பா…. யாரு டா இவ” என்று கண்கள் விரியப்பார்த்தான் விக்ரம்.

ஒருவனை தரையில் கிடத்தி அவன் மேல் ஏறி அமர்ந்து ஆக்ரோசமாக தாக்கி கொண்டு இருந்தாள் ஒருத்தி.

யாரும் அவளை தடுக்கவோ, ஏன் எதற்கு என்று கேட்கவோ செய்யாமல் தன் புகைப்படத்தில் அதை பதிவு செய்து கொண்டு இருந்தனர்.

அந்த பெண்ணின் முகத்தை அவள் நீண்ட கூந்தல் மறைத்து இருந்தது.

“ஏய்…. யார் நீ?”

“எதுக்காக இப்படி இவர அடிக்கிற?”

“மொதல்ல அவரை விடு” என்று அவள் கையை பிடித்து தடுத்து

அவளை அவன் மீதிருந்து எழுப்பினான் விக்ரம்.

அவன் இழுத்த வேகத்தில் அவள் கார் கூந்தல் அவன் முகத்தில் பட்டு நகர்ந்தது.

இதுவரை முகத்திரையாய் இருந்த அவள் கூந்தல் விலகி

அவள் நிலா முகம் ஒளிர்ந்தது.

அவளை கண்ட அந்த நிமிடம்…

அத்தனை நேரம் கடுமையாக வாட்டி வதைத்து கொண்டு இருந்த சூரியன் மேகத்திற்குள் சென்று தன்னை மறைத்துக்கொண்டது.

நிழல் திடீர் என்று பரவி சூரிய ஒளியின் பிரகாசத்தை மங்கச்செய்தது.

திடீர் என்று எங்கிருந்து தான் வந்ததோ அந்த குளிர்ந்த தென்றல்.

அப்படி ஒரு இதமான காற்று வெயிலில் தகித்து கொண்டு இருந்த அனைவரும் மூச்சை நன்கு பிரயாசத்துடன் இழுத்து விட்டனர்.

அவள் கையை விக்ரம் இன்னும் விடவில்லை.

அவனையும் அந்த தென்றல் தொட்டு சென்றது.

தேக சிலிர்போடு…கண்கள் விரிய வாயடைத்து பார்த்து நின்றான் விக்ரம்.

“யோவ்…யார்…யா நீ? மொதல்ல கையை விடு” என்று அவன் பிடியில் இருந்து தன் கையை விடுவித்துக்கொண்டாள்.

தன்னை உணர்ந்தவன், சுதாரித்து கொண்டு

“ஏய் உனக்கு அறிவில்ல, இப்படி தான் நடு ரோட்ல ஒரு ஆம்பளைய கை நீட்டி அடிப்பியா”

நீ ஒரு பொண்ணு தானே? ஏதோ மங்கம்மா ராணி பேத்தி மாதிரி பிஹேவ் பண்ற” என்று அவளை நோக்கி கேட்டான்.

அவள் தன் கூறிய வாள் போன்ற ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனை பார்த்து முறைத்து,

“சார் யாரு? ராஜா ராஜா சோழனோ” என்றாள்.

“ஏய்…”என்று கையை ஓங்கி கொண்டு வர

அவள் அவன் கையை பிடித்து தடுத்தாள்.

இருவரின் கண்களிலும் அத்தனை ஆத்திரம்.

“நீ நான் யாருன்னு தெரியாம இப்படி நடந்து கிட்டு இருக்க….”

“ஒழுங்கு மரியாதையா என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு ஓடிரு”.

“உன்ன உயிரோட விட்டுறேன்” என்றான் விக்ரம்.

“ஐயோ…சார்…அதே தானுங்க நானும் சொல்றேன்.

என் கால்ல விழுந்து நீங்களும் மன்னிப்பு கேட்டா உங்கள நான் உயிரோட விடறேன்”.

“ஏய்…ஓம குச்சி…ஒரு அடி அடிச்சா தாங்குவியா?” என்றான் நக்கலாக.

“ஆமாம்…சார் பெரிய சண்டி வீரன் பாரு?

ஏதோ கோட் சூட் போட்டு இருக்கறதால ஏதோ மனுசனா தெரியற” என்றாள் பதிலுக்கு பதில்.

ஆதவ்க்குத் தான் உள்ளே நடுங்கியது.

“கொஞ்சம் தள்ளுங்க…” என்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே வந்தனர் பெண் காவலர்கள்.

“இவன் தானாமா…அவன்” என்று கேட்க

பள்ளி சீருடையில் ஒரு பெண் அப்பாவியாய் அழுது கொண்டு “ஆமாம்” என்றது.

“அவனை அரஸ்ட் பண்ணுங்க” என்று கூறி விட்டு தானும் நான்கு அடியை வைத்தார் அந்த பெண் காவலர்.

“உனக்கு சின்ன பொண்ணா கேக்குதா?”

“தனியா பொண்ணுங்க வந்தா இப்படி தான் கண்ட இடத்துல கை வைக்குறது”.

“உங்க வீட்டுலையும் பொம்பளைங்க இருப்பாங்கல்ல”

“வெறி பிடிச்ச நாய்ங்களா!” என்று அவனை திட்டி விட்டு

“ரொம்ப தேங்க்ஸ் மா…”

“பொண்ணுனா ஒன்ன மாதிரி இருக்கனும்”.

“பாப்பா…அந்த பொண்ணு மாதிரி தைரியமா இரு”.

“யார் உன்ன எதுவும் பண்ண முடியாது”

“முடிந்தவரை உன் சக்தியை வைத்து போராடு நாங்க இருக்கோம்”.

“பயப்படாத சரியா” என்று விட்டு

“ஏய்…பொண்ணே வெரி ப்ரௌட் ஆஃப் யூ”.

“உன் பேர் என்ன?” என்று கேட்டார் அந்த பெண் போலீஸ்.

“சிந்து” என்றாள் புன்னகை நிறைந்த முகத்தோடு.

“ஹ்ம்ம்…பேருக்கேத்த மாதிரியே தைரியமா இருக்க”.

“அப்படியே இரு” என்று சிந்துவை பாராட்டி விட்டு சென்றார்.

கூட்டம் மெல்ல கலைய துவங்கியது.

விக்ரமின் கண்கள் மட்டும் அவளை விட்டு விலகவில்லை.

அழுது கொண்டு இருந்த அந்த பள்ளி சிறுமியை

“ஏய்…இப்போ ஏன் அழற?”

“அதான் அவன போலீஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்கள்ளஅப்பறம் என்ன?”

“இனி அவன் உன் வழியிலே குறுக்க வர மாட்டான்.நீ நிம்மதியா படி சரியா!”

“அப்பறம் ஒரு விஷயம் இது போலே சமுதாயத்துல பெண்களுக்கு பல பிரச்சனைகள் வரும் அதை கடந்து தான் வரணும் வாழனும்”.

“எப்போதும் என்னை போலே யாரோ ஒருவர் வந்து உன்னை வந்து காப்பாட்ருவார் அப்படினு நினைக்காம

உனக்குள் இருக்கும் அந்த பராசக்தியை வெளியே கொண்டு வா.

எப்போதும் நான் சொல்லும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்”.

“எந்த ஆம்பளையும் நல்லவன் கிடையாது”.

“நீ எந்த ஆணையும் முழுவதுமாக நம்பாதே” என்றாள் சிந்து.

அவள் கூறிய அந்த வார்த்தையை கேட்டு கண்களை விரித்து அவளை ஆழ்ந்து பார்த்தான் விக்ரம்.

“சரி வா பாப்பா.. வண்டில ஏறு நீ எந்த ஸ்கூல் சொல்லு விட்டுட்டு போறேன்”.

“ஹ்ம்ம்…சரிங்க அக்கா” என்று சிந்துவின் பிங்க் நிற ஸ்கூட்டியில் ஏறி அமர

வண்டியை திருப்பி விட்டு…

சொடக்கு போட்டு விக்ரமை திரும்ப செய்தாள்.

“ஆம்பளைனா பயந்துருவோமா?”

“உன்ன மாதிரி ஆம்பளைக்கு எல்லாம் பொண்ணுங்க கிட்ட உங்க வீரத்தை காட்ட தான் தெரியும்”.

“எல்லா பொண்ணுங்களையும் ஒரே மாதிரி நினைச்சிராத!”

“இனி எந்த பொண்ணுகிட்டயாச்சும் உன் வீரத்தை காட்டணும் நினச்ச என்று நாக்கை கடித்துக் கொன்றுவேன்” என்று மிரட்டி விட்டு சென்றாள்.

  1. “யாரு டா…. ஆ…இவ” என்று வாயை பிளந்தான் விக்ரம்.

தென்றல் மீண்டும் வீசும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!