Skip to content
Post Views: 1,663
தென்றல் – 4
தாயம்மா வயது மூத்த சுமங்கலி. ஊருக்குள் எந்த விஷேசமாயினும் அவரை வைத்து தொடங்கினால் அது சுபமாக இருக்கும் என்பது அங்கே ஒரு நம்பிக்கை.
அவர் மலருக்கு சந்தனம் குங்குமம் வைத்து பூ வைத்து கைகளில் இரண்டு இரண்டு கண்ணாடி வளையல் அடுக்கி ஆரம்பித்து வைத்தார் .பின் ஒவ்வொருத்தராக வந்து வளையல் அடுக்க பூரணியும் வந்து நலங்கிட்டு தான் கொண்டு வந்திருந்த தங்க வளையல்களை அணிவித்தார்.
“எதுக்கு சித்தி இவ்வளவு காஸ்டிலியா”
Advertisement
“என் பொண்ணுக்கு நான் செய்யறேன்”
“ம்க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று பார்வதி முணுமுணுக்க
வேறு எந்த பிரச்சனையும் இன்றி நல்ல முறையில் வளைகாப்பு நடந்துமுடிந்தது.
Advertisement
“சேரி எல்லாரும் சாப்பிட்டு வரலாம் வாங்க” வீட்டுக்கு பெரிய மனிதராய் செந்தில்நாதன் அழைக்க
Advertisement
“ஒரு நிமிஷம்” பார்வதியின் குரல் அனைவரையும் நிறுத்தியது. அனைவரும் அவரை திரும்பி பார்க்க “அது ஒன்னுமில்லை என்ர சின்னமவன் குமரனுக்கும் என் அண்ணன் பொண்ணு காயத்ரிக்கும் கல்யாணம் பண்றதுக்கு எல்லாரு முன்னுக்கும் பாக்கு வெத்தலை மாத்திக்கலாம் னு முடிவு பண்ணிருக்கோம்”
“அடி பாதகத்தி” அப்பத்தா வின் அலறல் அவ்விடத்தை நிறைக்க
அருள்,மலர், பூரணி, விஸ்வநாதன் ஏன் இளா, குமரன் உள்ளிட்ட அனைவரும் ஒரு நொடி ஸ்தம்பித்த நிலை.
Advertisement
பரமசிவம் சாந்தி தம்பதிக்கு கொண்டாட்ட மனநிலை, இருக்காதா பின்ன! ஊரையே கட்டி ஆளும் அளவு சொத்து, நல்லா படிச்ச அழகான அறிவான மாப்பிள்ளை அவங்க பொண்ணு காயத்ரி தான் வேற சாதி பையன விரும்புறா. இப்ப குமரனுக்கு கட்டி வெச்சுட்டா எல்லா பிரச்சினையும் முடிஞ்சிரும்மில்ல.
“ யார கேட்டுபோட்டு நீ இந்த முடிவு பண்ணின?” செந்தில்நாதன் இரைய,
“என்னங் இப்படி சொல்றீங்க?” பார்வதி ஒன்றும் தெரியாதது போல கேட்க,
“சேரி, அப்பிடியே ஏதாவது இருந்தாலும் நம்ம கூட்டுக்குள்ளாற வச்சு பேசோனும். அதென்ன பொது இடத்தில பேசிகிட்டு” என பல்லை கடிக்க,
“அப்பிடி இல்லீங் எப்பிடியும் நம்ம சின்னவனுக்கு நிச்சயம் வெச்சா ஊர கூப்புடுவமல்லங் அதேன் எல்லாரும் இருக்கும் போதே ஒரு பாக்கு வெத்தலைய மட்டும் மாத்திபுடலாமுன்னு”
அவர் கூறிக்கொண்டு இருக்க தமிழின் பார்வை இளாவை காண, அதில் ஆயிரம் கேள்விகள்
உடனே “ இப்ப எனக்கு என்னத்துக்கு மா கல்யாணம்” தன் தாயிடம் பாய,
“என்ன கண்ணு இப்பிடி கேக்கற உனக்கு கல்யாணம் வயசு ஆகுதில்ல உன்ற கண்ணாலத்த ஆருஆரோ முடிவு பண்ணுவாங்க.. நானு உன்னிய பெத்தவ முடிவு பண்ணகூடாதா அன்னிக்கு நீ சத்தியம் பண்ணுணியே உன் சம்மதத்தோட தான் என் கல்யாணம் நடக்கும்னு அது நெசந்தேன கண்ணு” என தன் மாமியாரையும், தன் நாத்தனார் பூரணி மையும் பார்த்து கொண்டே பார்வதி கூற,
“அம்மா இப்பவும் சொல்றேன் உன் சம்மதத்தோட தான் என் கல்யாணம் நடக்கும் ஆனா இப்ப ஏன் அவசரபடுற”, என தமிழ் பல்லை கடிக்க,
“ம்ம்….உன்ற ஆத்தாளுக்கு புத்தி மழுங்கிட்டே போகுது அதேன்”
“ம்ப்ச் அப்பத்தா நீ சும்மாயிரு நான் பாத்துக்கிறேன்”
“என்னத்த பாப்ப நீயி ஏன்டி கூறுகெட்டு போச்சா ஒனக்கு மொதவே அவனுக்கு” என்று கூற வந்தவரை இடைநிறுத்தி,
“அடடா அப்பத்தா இப்போதே என்ற பொண்டாட்டிக்கு வளைகாப்பு முடிஞ்சிருக்கு இன்னும் யாரும் ஒரு வா சோரு உன்கல அதுக்குள்ள ஒரு பிரச்சினையா” என அருள் கடிய
“அட எடுபட்டவனே, அத ஏண்டா என்றகிட்ட சொல்ற உன்ற ஆத்தா இவ்விடத்தேன் நிக்கிறா. அவகிட்ட சொல்லு”
தன் மாமியாரை பார்த்து பார்வதி முறைக்க,
“ஏன் பார்வதி வூட்ல ஒருத்தர்டையும் கலந்துக்காமயா எங்கள வரச்சொன்ன” சாந்தி கேட்க,
“கலந்துகிட்ட உடனே சேரிம்பாங்களா நீ சித்தே சும்மா இரு நங்க” என அவர் காதை கடிக்க,
இத்தனை கலவரத்திலும் பூரணி குடும்பத்தில் யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை,
‘என்ன இவ இன்னும் ஒன்னும் பேசல இவ ஏதாவது பேசுவா அதவெச்சு நாம நினைச்சதை பண்ணிக்கலாம் னு பார்த்தா கிணத்துல போட்ட கல்லாட்டம் நிக்கிறா‘ என பூரணியை பார்த்துக்கொண்டே யோசிக்க,
“வந்திருக்கவிய எல்லாம் சிரமத்திற்கு மன்னிச்சுக்கோங்க” என செந்தில்நாதன் கூற,
“ஏனுங்க இப்ப என்ன ஆகிப்போச்சு னு”,
“நீ கொஞ்ச நேரம் பேசாதிரு”
“இல்ல இங்க பாருங்க இன்னிக்கு இங்க இப்பவே என்ற மகனுக்கு நான் நிச்சயம் முடிக்கோனும்”,
“அப்படி யா அப்ப நாங்க யாரும் இங்கே இருக்க மாட்டோம் நீயே நின்னு என்ன நினைக்கிறயோ செய்யு” என செந்தில்நாதன் கோபமாய் கூற,
வந்திருந்த உறவுகள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட,
“அடடா அதுக்குள்ள பங்ஷன் முடிஞ்சுதா நான் தான் லேட் போல” என கூறியபடியே உள்ளே வந்தார் மருதாச்சலம் இளா பணிபுரியும் பள்ளியின் கரஸ்பாண்டன்ட் செந்தில்நாதன் நாதனுக்கு பங்காளி முறையும் ஆவார்.
“வாங்க வாங்க” என அனைவரும் வரவேற்க,
“ஏய்யா வார நேரமா இது” பாட்டி வினவ
“என்ன பண்றது பெரியம்மா வரும் போது தான் கௌசிக் போன் பண்ணினான்”
“ஆரு வெளிநாட்டுல இருக்கானே உன்ற மவனா”
“ம்ம் ஆமா அவன் அம்மா உயிரோட இருந்தா இத்தனை வருஷம் அவனை அங்க விட்டு வெச்சுருப்பாளா நான் எத்தனை தடவை கூப்பிட்டும் வராதவன் இப்ப வர்றேங்கறான்” என்றவர் ,
“அதான் அவன் வரும் போதே கையோட பிடிச்சு ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா அவனுக்கும் ஒரு குடும்பமாயிரும் பாருங்க” என கூற
“ஆமா ஆமா வாஸ்தவந்தேன். ஆமா பொண்ணு பாத்து போட்டியா இல்ல இனிமேதானா”
“என்ன பெரியம்மா இப்படி கேக்கறீங்க என்ற தங்கச்சி பூரணி பொண்ணு இதோ இளா இருக்கும் போது வேற பொண்ணு எதுக்கு”
“என்னது?”
எல்லாருக்கும் மீண்டும் ஒரு அதிர்ச்சி
“மறுபடியும் முதல் இருந்தா இன்னிக்கு நான் யாரு மொகத்தில முழிச்சேன் தெரியல என் பொண்டாட்டி வளைகாப்ப இப்பிடி பிரீ ஷோ ஆக்கறாங்களே” என அருள் மனதிற்குள் புலம்ப,
பார்வதி மட்டும் சந்தோஷ பபட்டுக்கொண்டார்.
“என்னையா அதான் எங்க சின்னவருக்கும் பாப்பாக்கும் பேசிவெச்சிருக்கோமே உனக்கு தெரியாதா” என பாட்டி கூற,
“பேசிதான தான வெச்சிருக்கீங்க பெரியம்மா இன்னும் கல்யாணம் நடக்கல தான” என கேட்க
“அட எவன்டா இவென்” என பாட்டியால் புலம்ப மட்டுமே முடிந்தது.
பூரணிக்கும் விஸ்வநாதனுக்கும் என்ன சொல்வது என தெரியவில்லை. இப்பொழுதும் இளா தமிழையே பார்க்க அவனுக்குமே இது என்னடா சோதனை னு இருக்க,
பார்வதி தான் கூறினார் “நல்ல விஷயம் தானங்க மச்சான் அதுக்கு என்னத்துக்கு இம்பிட்டு ரோசனை”
“அதுக்கில்ல மா கோகிலா இப்ப உயிரோட இருந்தா என்ன செய்யனும் னு தெரியும் நமக்கு என்ன தெரியும்”
“அட விடுங்க மச்சான் அப்புறம் அங்காளி பங்காளின்னுட்டு நாங்க இத்தினி பேரு இருக்கோம் பாத்துக்கலாம் விடுங்க” என்று கூற,
அதான இவுளுக்கு காரியம் ஆவுதுன்னா ஆரு கால வேணாலும் புடிப்பா இல்லைனா ஆரு கால வேணாலும் வாருவா இவ ஆரு இவ வவுசு எனக்கு தெரியாது என பாட்டி மனதிற்குள் பொரும,
“இன்னிக்கு கூட பாக்கு வெத்தலை மாத்திக்கலாம். நான் கூட என்ற அண்ணேன் கூட வெத்தலை மாத்த இருந்தேன் என கதை கூற,
“அட அப்படியா அப்ப எடு எனக்கு ஒரு பாக்கு வெத்தலை ய நானும் விஸ்வா கூட மாத்திக்கிறேன் எடு எடு” என கூற
பொறுத்து பார்த்தவன் “யாரோட பொண்டாட்டிக்கு யாரு மாப்பிள்ளை பாக்கிறது” என்று கத்தியது வேற யாரும் இல்லை நம்ம தமிழ்குமரன் தான்…
மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்….
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத தாபம்…..
தனிமையே போ… இனிமையே வா…
நீரும் வேரும் சேரவேண்டும்……….
பனி விழும் இரவு….. நனைந்தது நிலவு……….
error: Content is protected !!