Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்-12(1)

அத்தியாயம் – 12 (1)
எழிலன் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய சமயம், வீட்டில் அவன் அப்பா, அம்மா இருவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் காத்திருந்த விதமே இன்றைக்கு ஒரு விசாரணை கமிஷன் இருக்கிறது  என எழிலனுக்குப் புரிந்தது.
வழக்கம் போல பெற்றோர் அமர்ந்திருந்த இருக்கையின் எதிர்புறம் அமர்ந்து கொண்டான் எழிலன்.
“ஹாய் டார்லிங்ஸ்” என இருவருக்கும் கூறினான்.


Advertisement

மலர்விழி “டார்லிங்னு சொல்ல வேறே ஆள் பார்த்து இருக்க போலிருக்கே எழிலா?” என்றார்.
“யார் சொன்னது? என்னோட டார்லிங்ஸ் எப்போதும் நீங்க தான்” எனப் பதில் கூறினான் எழிலன்.
“அப்போ என்ன தீடீர்னு பாட்டு பாடி டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ் எல்லாம் நடக்குது?”

Advertisement

“மா, அது எதேச்சையா நடந்தது. நேத்திக்கு நிலவழகி அந்தப் பாட்டு பற்றிச் சொன்னதும், எனக்கு பாடனும் போல் ஆசையா இருந்துது. அதை இப்படி யூஸ் பண்ணிட்டேன். அவளோதான்” என்றான் எழிலன்.

Advertisement

“அவ்ளோதான்னு நீயே சொன்னா நம்பிக்கிறோம். ஆனா மத்தவங்களுக்கும் பெத்தவங்களுக்கும் வித்தியாசம் உண்டு. உன்னோட மனசில் என்ன இருக்குனு ஓரளவு தெரிஞ்சுக்க எங்களால் முடியும். அதுதான் யோசிக்கத் தோணுது” என்றார் மலர்விழி.
“நீங்க பெரிசா யோசிக்க எல்லாம் இதில் ஒண்ணும் இல்லை. அந்த பொண்ணும் நான் பாடுனதை ஸ்போர்டிவ்வா எடுத்துக்கிறா. அதனால் நீங்க சும்மா இருங்க” என்றான் எழிலன்.
செழியன் “எழிலா, உன்னைப் பொறுத்தவரை இது பெரிய விஷயம் இல்லை. கல்சுரல்ஸ் டைம்லே தான் நிறைய பசங்க, பொண்ணுங்க அடுத்த ஸ்டெப்ஸ் எடுக்க ஆரம்பிப்பாங்க. நாளைக்கு மற்ற ஸ்டூடண்ட்ஸ் இதையே அட்வாண்டேஜ் எடுத்துக்க வாய்ப்பு இருக்கு. குரூப் பெர்ஃபார்மன்ஸ் ஓகே. அல்லது ஆர்க்கெஸ்ட்ராவும் ஓகே. இந்த மாதிரி டூயட்னு வரும்போது, தேவையில்லாத சந்தேகங்களைக் கொடுக்கும். இந்த  பொண்ணும் பெரிய இன்ஃப்ளூயென்ஸ் உள்ள பெர்சன் மாதிரி இருக்கு. பிரச்சினையில் எதுவும் மாட்டிக்காத. அது எங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்” என்றார்.

Advertisement

“எஸ் பா. எப்போதும் என்னாலே உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. இட்ஸ் அ பிராமிஸ்” என்றான் எழிலன்.
செழியன் பதறி, “டேய், பிராமிஸ் எல்லாம் உன்கிட்டே கேட்கலை. நீ அப்படிப்பட்டவன் இல்லைனும் எங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனால் சில நேரங்களில் நாம அறியாமல் எதிலும் சிக்கிக்கக் கூடாது. அதுக்குத் தான் சொன்னேன். மற்றபடி எங்க பையன் மேலே எங்களுக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு. சரியா?” என்றார்.
“அப்பா, எனக்கும் உங்க நிலைமை புரியுதுபா. என்னோட  ரோல் மாடல் நீங்க தான். உங்களை மாதிரி எல்லாரையும் புரிஞ்சு நடந்துக்குவேன்.” என்றான் எழிலன்.
பின் “மா, நீங்க தனியாப் போய் நிலவழகியைப் பாராட்டின மாதிரி இருந்துது. என்னை எல்லாம் எதுவும் சொல்லலை.” எனக் கேட்டான் எழிலன்.
“உன் பாட்டைத் தான் தினமும் கேக்கறேனே. அந்தப் பொண்ணு டான்ஸ் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கறேன். நல்லாவும் ஆடினா. முகபாவம் எல்லாம் அவளோ அழகா இருந்துது. அதான் பக்கத்தில் போய் சொல்லிட்டு வந்தேன்” என்றார் மலர்விழி.
பின் “அவள் பக்கத்தில் நின்னுட்டு இருந்த ஸ்டூடண்ட் உங்க டிபார்ட்மெண்ட் மாதிரி இல்லையே. மேனேஜ்மெண்ட் தானே. அங்கே ஏன் வந்தான்?” எனக் கேட்டார் மலர்விழி.
“எஸ் எஸ். அவன் அவளோட அண்ணன் மா. பேர் நிலவன். அண்ணன், தங்கச்சி ரெண்டு பேரும் பயங்கரமா பாசமலர் படம் ஓட்டுவாங்க. டிபார்ட்மெண்ட் பூரா கிண்டல் அடிச்சிட்டு இருப்பாங்க பசங்க” என்றான் எழிலன்.
“ரெண்டு பேர் பேரும் ரொம்ப அழகா இருக்கு. ஆனால், இதில் கிண்டல் அடிக்க என்னடா இருக்கு. அவன் தங்கச்சியைப் பத்திரமா பாத்துக்கிறான். உங்களுக்கு ஏன் வலிக்குது?” எனக் கேட்டார் மலர்விழி.
“அம்மா, இன்னும் ஒரு வருஷத்தில் மேஜர் ஆகப் போற பொண்ணு. அவளை அங்கே போகாதே. நான் கொண்டு போய் விடறேன்னு சொல்றது எல்லாம் எம்பரஸ் ஆகாதா.”
“அது பற்றி உங்களுக்கு என்னடா? காலேஜ்லே எல்லாரும் உங்களை மாதிரி இருக்க மாட்டாங்க. அவனுக்கு அந்த பயம் இருக்கும். அதான் அப்படி நடந்துக்கறான்” என்றார் மலர்.
செழியன் “ஏன் எழில், யாரும் ராக்கிங் பண்ணினாங்களா? அது எதுவும் ப்ராப்ளம் வந்ததா.? என்கிட்டே யாரும் கம்ப்ளைண்ட் பண்ணலையே?” எனக் கேட்டார்.
“அப்பா, அது எல்லாம் எதுவும் நடக்கலை. பேர் கேட்டா கூட, அவள் அண்ணன் பின்னாடியே வந்துடுவான். யாரு ராக் பண்ணப் போறா? பட் சிட்டிலே வளர்ந்த பொண்ணு மாதிரி இல்லாம, எல்லாத்துக்கும் ஃபேமிலி சப்போர்ட் பண்ணுற பிரின்சஸ் கேட்டகரியா இருக்கலாம்னு தோணுது” என்றான் எழிலன்.
“ஓ” என்றனர் இருவரும். பின் செழியன் “சரி, போய் வேலையைப் பாரு” என்றார்.
“சப்பா, இப்போவாவது ரெண்டு பேருக்கும் என்னை அனுப்ப மனசு வந்துச்சா. காலேஜ்லே இருந்து வந்தவனை டிரஸ் கூட மாத்த விடாம, விசாரணை நடத்திட்டு இருந்தீங்க?” என்றான் எழிலன்.
இருவரும் சற்றே அசடு வழிந்தபடி “அப்படி இல்லைடா. நாங்க பார்க்காத எழிலனை இன்னிக்குப் பார்த்த மாதிரி இருந்ததா? அதான் உணர்ச்சி வசப்பட்டுட்டோம். சாரி” என்றார் மலர்விழி. செழியன் மகனைத் தட்டிக் கொடுத்தார்.
எழிலன் “மா, இது எல்லாம் உங்க மாமனாருக்குத் தெரிய வேண்டாம். அவரா எதுவும் நினைச்சு, அவர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பார்க்க ஆள் பிடிக்கப் பார்ப்பார். ஜாக்கிரதை” என்றான்.
அவன் கூறுவது சரிதான். செழியனின் தந்தை தன் கடையை நடத்த வாரிசு இல்லையே எனத் தவிப்பவர். மலரிடம் கூட வேலையை விட்டுவிட்டு, கடையைப் பார்த்துக்க வாம்மா என அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். மலர் தான் நழுவிக் கொண்டிருக்கிறாள்.
பேரனை எப்படியாவது கடைக்குள் இழுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை ஒன்றிற்கு மூன்று டிகிரி முடிக்கப் போகிறான். இதற்கு மேலே என்ன வேண்டும் என்பது தான். ஆனால் எழிலனின் எண்ணமோ டாக்டரேட் வாங்குவதில் இருக்கிறது.
சின்னதாக  ஒரு சலசலப்பைப் பற்றி கேள்விப்பட்டாலும், காலேஜ் எல்லாம் வேண்டாம். கடையைப் பார் என ஆரம்பித்து விடுவார். அதனால் காலேஜ்ஜில் நடக்கும் பல விஷயங்களை அவர் அறியாமல் தான் வீட்டில் பேசுவார்கள். அதைத் தான் அன்னைக்குத் தற்போது நினைவுப் படுத்தினான் எழிலன்.
எழிலன் அறைக்குச் சென்றதும் அவனது ஃபிரண்ட்ஸ் குரூப்பில் இவர்கள் இருவரின் பெர்ஃபார்மன்ஸ் வீடியோ வந்திருந்தது. இதை எதிர்பார்க்கவில்லை எழிலன். உடை மாற்றுவதை மறந்து, வீடியோவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நிலவழகி அழகி தான் என தனக்குள் கூறிக்கொண்டான்.
அவ்வப்போது டிபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் நிலவழகியைக் காணும்போது எல்லாம் அழகி என உள்ளுக்குள் முணுமுணுத்துக் கொள்வான் எழிலன்.
பிரேஷர்ஸ் பார்ட்டி முடிந்த பின், வரலாறு டிபார்ட்மெண்ட்டில் நிலவழகி ஓரளவு பிரபலமடைந்து இருந்தாள். கல்லூரி விடுதியிலும் ஒருவர் மூலம் மற்றவருக்குத் தெரிந்து, பல மாணவிகள் அவளிடம் வந்து பேசிச் சென்றனர். பேராசிரியர்கள் மத்தியிலும் நிலவழகியின் பெயர் கூறி அழைக்கும் அளவிற்கு பிரபலம் கிடைத்தது.
அதற்கு பின் நடைபெற்ற பல கல்லூரி நிகழ்ச்சிகளில் நிலாவின் நடனம் கண்டிப்பாக அரங்கேறியது. நிலவன் நிலாவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவன் என்றாலும், அவளின் திறமையை முடக்குபவன் இல்லை. அதனால் அவளின் நடனத் திறமை தடைபாடாமல் தொடர்ந்தது. அதே சமயம் அவளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துக் கொள்ள மாட்டான் நிலவன். முடிந்தவரை அவனேப் பார்த்துக் கொள்வான். இல்லையெனில் தகுதியான ஆளை ஏற்பாடு செய்துவிடுவான்.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களின் மத்தியில் நிலவன், நிலாவைப் பற்றி கிண்டல், கேலிகள் அதிகமாவே இருந்தது.
எழிலன் இருக்கும்போது அவற்றைக் கண்டித்தான் தான். ஆனால் எப்போதும் அவன் இருப்பது சாத்தியமல்லவே. மேலும் இந்த கிண்டல், கேலி எல்லாம் எழிலன் நண்பர்கள் தான் அதிகம் செய்தனர். அவர்களுக்கு எழிலன் இருக்கும் தைரியம் ஒருபுறம். பொதுவாக டிபார்ட்மெண்ட்களுக்குள் நடக்கும் நாங்க பெரிசா, நீங்க பெரிசா என்ற சண்டையும் ஒரு காரணம்.
மேனேஜ்மெண்ட் ஸ்டூடண்ட்ஸ் எல்லோருமே கொஞ்சம் அலட்டல் பேர்வழிகள் தான். மற்றவர்கள் சாதாரண போர்மல் உடையில் வர, அந்த ஸ்டூடண்ட்ஸ் மட்டும் கோட், ஷூ, போர்மல் என டிரஸ் கோட் கொண்டு கல்லூரிக்கு வருவார்கள். அதனால் மற்ற டிபார்ட்மெண்ட்டில் இருந்து தள்ளியே இருப்பார்கள்.
இருமுறை நிலவன் இருக்கும்போதே எழிலனின் நண்பர்கள் அண்ணன் தங்கை இருவரையும் கேலி பேச, எழிலன் வேகமாக அவர்களைத் தடுத்து நிறுத்தினான். அப்போதே நிலவன் எழிலனிடம் எச்சரித்தான். ஆனால் எழிலனின் நண்பர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!