Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்-15(2)

அத்தியாயம் – 15.2
நிலாவிற்கு நான்காவது செமெஸ்டெர் ஆரமபிக்க, படிப்பில் அதிகக் கவனம் செலுத்தினாள். அடுத்து காலேஜ் டே வர, அதைப் பற்றி வந்தனாவிற்கு முழு பக்க அளவிற்கு விரிவாக நோட்ஸ் அனுப்பி வைத்தாள் நிலா.
நிலா இந்த முறை ஆட வேண்டாமோ என யோசிக்க, அவளின் தோழிகளும், மற்ற டிபார்ட்மெண்ட் மாணவர்களும் வற்புறுத்தினர்.
எழிலன் வேறு என்ன பாடல் எனக் கேட்டுத் தனியாக மெசேஜ் அனுப்பியிருந்தான். நிலாவோ இன்னும் டிசைட் பண்ணலை எனக் கூறிவிட்டாள்.


Advertisement

ஆனால் இந்த முறை இருவருமே ஒருவரையொருவர் அறியாமல் எஸ்பிபி அவர்களின் தெலுகு பாடல்கள் தான் தேர்வு செய்து இருந்தனர். அதிலும் சங்கராபரணம் பாடல்களே.
நிலா “புரோசேவாரவருறா” தேர்வு செய்ய, எழிலனின் தேர்வோ “சங்கரா நாத சரீரா பாரா” என இருந்தது.
முதல் நாள் எழிலனின் ஆராய்ச்சிப் பிரபலமானது பற்றிக் கூறி, அதற்கு தனியாக மேடையில் பாராட்டினார்கள். அடுத்த நாள் கலை நிகழ்ச்சிகளில் நிலாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மொழித் தெரியாவிட்டாலும், பாடலின் இனிமையிலும், நிலாவின் பாவனைகளும் காண்பவரைக் கவர்ந்தது. நிலவன் மட்டும் வந்திருக்க, அவனின் பெற்றோர் வேறு ஒரு முக்கிய விழாவிற்குச் சென்று இருந்தனர்.

Advertisement

நிலாவின் நடனம் முடிந்ததும் வந்தனாவும் பரதம் ஆடினாள். ஆனால் முறையாகக் கற்றுக் கொள்ளாமல், யுட்யூப் வீடியோ பார்த்துக் கற்றுக் கொண்டு ஆடினாள். என்றாலும் முதல் முயற்சி என பாராட்டினார்கள்.

Advertisement

அடுத்து கல்லூரி ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிக்க, எழிலன் சங்கரா என ஆரம்பிக்கவும், கேலரி அதிர்ந்தது. வழக்கம் போல் அன்றைக்கும் ஸ்டேஜ் ஸ்டீலர் எழிலன் தான்.
நிலவன் மட்டும் நிலாவிடம் “அது என்ன ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி ஒரே படத்தில் சாங்க் செலக்ட் பண்ணியிருக்கீனக?” எனக் கேட்டான்.
நிலா முழித்தாள். “அண்ணா, எனக்குத் தெரியாது. அவர் லெக்சர்ர் ஆன பிறகு பேசினது கூட கிடையாது” எனக் கூற, நிலவனும் அதை ஒத்துக் கொண்டான். ஆனாலும் எங்கோ இடித்தது. அதை அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

Advertisement

அன்றைக்கு எழிலன், நிலா இருவரின் மெசேஜ்ஜும ஹார்ட் எமோஜிகளில் நிரம்பி வழிந்தது.
காலேஜ் டே முடிந்து, செமெஸ்டெர் தேர்வுகள்  நடக்க, வந்தனா மட்டும் எழிலனிடம் சர், சர் என ஏதோ சந்தேகம் கேட்டுக் கொண்டே இருந்தாள். அது எழிலன் அவளிடம் சற்று நெருக்கமாக இருப்பது போல பார்ப்பவர்களை நினைக்க வைத்தது.
இந்த வதந்தி அவர்கள் வகுப்பிற்குள் மட்டுமாக இருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக சீனியர்ஸ் வரை சென்று விட்டது. நிலாவிற்கு அப்போது தான் பயம் வந்தது.
இதுவரை எழிலனை தன்னைச் சேர்ந்தவன் என நினைத்து இருந்தாள். இப்போது பரவி வரும் இந்த வதந்தி எழிலன் தனக்கு மட்டுமே சொந்தமானவன் இல்லை எனப் புரிந்துக் கொண்டாள் நிலா. இது வதந்தி என்பது அவளுக்கும் நிச்சயமே. ஆனால் இந்த வந்தனா இல்லாவிட்டால் வேறு சந்தனா வர மாட்டாள் என என்ன நிச்சயம் எனத் தோன்றியது.
இதை யாரிடம் கேட்பது என்ற யோசனையில் வழக்கம் போல தன் அண்ணனுக்கு ஃபோன் செய்து விட்டாள் நிலா. பின் தலையில் அடித்துக் கொண்ட நிலா, தயங்கி தயங்கி எழிலனுக்கே ஃபோன் செய்தாள்.
எழிலன் ஃபோன் எடுத்து “சொல்லுங்க அழகி மேடம்” எனவும் தான், நிலாவிற்கு மூச்சே வந்தது. இதுவே அவளுக்கு நம்பிக்கைக் கொடுத்தது.
“நான் உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும்” என்றாள்.
“என்ன கேக்கணும்”
வெகுவாகத் தயங்கி “உங்க ஸ்டூடண்ட் வந்தனாவை ..” எனக் கூற, எழிலன் “ம் ..” எனக் கேட்டான்.
“உங்களைச் சம்பந்தப்படுத்தி காஸ்ஸிப் பேசறாங்க” என முடித்தாள்.
“நிலவழகி அதைப் பற்றி என்ன நினைக்கிறாங்க?” எனக் கேட்டான் எழிலன்.
“நான் அதை காஸ்ஸிப்னு தான் நினைக்கிறேன். ஆனால் அது உண்மையாகிடுமோனு பயம் வருது” எனத் தன் மனதைக் கூறிவிட்டாள் நிலா.
அதைக் கூட அவள் உணரவில்லை. ஆனால் எழிலன் தெரிந்துக் கொண்டு விட்டான். நிலாவின் மனம் தன்னிடம் சிக்கியிருக்கிறது என நன்றாகவேப் புரிந்துக் கொண்டான்.
“மனம் எங்கும் மணம் வீசுது.. எந்தன் மனம் எங்கும் உந்தன் மணம் வீசுது” எனப் பாட்டாகவேப் பாடினான்.
நிலாவிற்கு அது புரியவில்லை. ஆனால் அவனின் குரலில் அமைதி ஆகி ஃபோனை வைத்துவிட்டாள்.
எழிலன் வீட்டில் அன்றைக்கு விசில் அடித்தப் பாட்டு ‘காதலின் தீபம் ஒன்று’ பாடல் தான். ஒரு முறை, இருமுறை அல்ல காலையிலே எழுந்ததில் இருந்து பத்தாவது தடவையாக அவன் பிளே லிஸ்ட்டில் இந்த பாடல் ஓடியது.
மலர்விழி “எழிலா, என்னடா ஆச்சு? பாட்டை லூப்லே போட்டு விட்டிருக்கியா?” எனக் கேட்டார்.
பின்னே தன்னை உணர்ந்தவனாக “அப்படித் தான் போலிருக்கு. ஷஃபில் பண்ணுவதற்கு பதிலா, லூப் போட்டுட்டேன்” எனக் கூறிவிட்டுப் பின் புளுடூத் ஸ்பீக்கர் அணைத்து விட்டு வந்தான்.
அன்று காலை வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்க, அவன் மாணவர்களில் ஒருவன் ஏதோ நக்கலாகப் பேசிச் சிரித்தான். எழிலன் அவனைக் கண்டிக்க, அவனோ “சர், முதலில் புரொஃபசர்ஸ் ஒழுங்கா இருங்க. அப்புறம் எங்களைக் கண்டிக்கலாம்” என்றான்.
அதில் எழிலனுக்குக் கோபம் வந்துவிட “ஹலோ, யார் கிட்டே என்ன பேசறீங்க? இந்த காலேஜ் புரொஃபசர் பற்றி வெளியில் கேட்டுப் பாருங்க. அவங்க டிசிப்ளின்லே சின்ன குறை இருந்தா கூட இம்மீடியட் டிஸ்மிஸ் தான். ஏதோ பசங்க விளையாட்டுத் தனமா இருக்கீங்கனு பார்த்தா, என்ன இப்படி பிஹேவியர்” எனத் திட்டினான்.
“ஹலோ சர், நாங்க கண்ணுக்கு நேராவே பார்க்கறோம். இதைப் போய் வெளியாள் கிட்டே கேட்கனுமா” எனக் கேட்டான் அந்த மாணவன்.
“என்ன பார்க்கறீங்க?”
“ஏன் நீங்களும், நம்ம கிளாஸ் பொண்ணு வந்தனாவும் குளோஸ்னு பேசிக்கறாங்க” என்றான். இதைக் கேட்ட வந்தனா வெட்கம் போல தலை குனிய, பார்ப்பவர்களுக்கு உண்மை போலத் தான் தோன்றியது.
“வாட் தி ஹெல்” என்றான் எழிலன். “ஸ்டூடண்ட், புரொஃபசர் உறவு என்பது தெய்வத்துக்கும், பக்தனுக்கும் உள்ள உறவுக்குச் சமானம். அதைப் போய் இப்படியாக் கொச்சைப்படுத்துவீங்க. ஒரு பொண்ணுக்கு இது எவ்ளோ பெரிய இஷ்யு தெரியுமா? நீங்க கட்டி விடற கதைகளால் எத்தனைப் பெண்களை வீட்டோடு முடக்கி வச்சிருக்காங்க தெரியுமா? தெரியாமல் எதையும் பேசாதீங்க. இந்த மாதிரி இன்னொரு தடவை பேச்சு வந்தா, என்னோட நடவடிக்கை கடுமையா இருக்கும். எல்லோருக்கும் இது தான் லாஸ்ட் வார்னிங். பி கேர்ஃபுல்” எனக் கூறினான்.
எழிலன் கோபப்பட்டு யாரும் பார்த்ததே இல்லை. முதல் முறைப் பார்த்ததும் எல்லோரும் பயந்து விட்டனர். வந்தனா குனிந்த தலை நிமிரவேவில்லை.  
ஆனால் இந்தப் பேச்சை எல்லாம் எழிலனின் மாணவர்கள் மட்டுமில்லாது, நிலாவும் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என எழிலன் அறியவில்லை.
எழிலனிடம் நோட்ஸ் ஒன்றைக் கொடுக்கக் கூறி, நிலாவின் பேராசிரியர் அவளை அனுப்பி வைத்தார்.  அதற்காக வந்த நிலாவிற்கு இதை எல்லாம் கேட்டதும் கண்களில் கண்ணீர் வந்தது.
எழிலன் திட்டி விட்டுச் சென்றதும், அவனின் வகுப்பு மாணவர்கள் அத்தனை பேரும் வந்தனாவைத் திட்டினர். உண்மையில் அப்படி ஒரு வதந்தியைப் பரப்பி விட்டது அவள் தான். அவளுக்கு எழிலனைப் பிடித்து இருந்ததால் இப்படி ஒரு கதை கட்டினால் தனக்கு ஏதும் அட்வாண்டேஜ் கிடைக்குமோ என எதிர்பார்த்தாள். இப்படி பேக் ஃபயர் ஆகும் என அவள் எதிர்பார்க்கவில்லை.
இந்த நிகழ்வு நடந்த பின்பு, நிலா எழிலனின் கண்களில் படவேயில்லை. எழிலனும் வேலையில் பிசியாக இருந்தான்.
-தொடரும்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!