“இனிமே நீ பிருந்தாவை ஏரிக்கரையில போய் சந்திக்க வேண்டிய அவசியமே இல்ல”என்றார் விஸ்வநாதன்.
பூபதியின் முகம் உடனே சுருங்கியது.
ஏன்?
Advertisement
சிறிது இடைவெளிக்குப் பிறகு…
விஸ்வநாதன் சிரித்தபடி ,”ஏன்னா… இனிமே பிருந்தா நம்ம வீட்டுக்கு உன் மனைவியா வரப் போறா.”எனச் சொன்னார்.
பூபதி சில நொடிகள் பேசவே இல்லை.
அப்பா… உண்மையாவா?
உன் காதலுக்கு அவங்க வீட்டுல சம்மதம்.
Advertisement
அவன் கண்கள் தானாக மூடியது.
பல மாதங்களாக மனதுக்குள் சுமந்திருந்த ஒரு பாரம் அந்த நொடியில் இறங்கியது.
Advertisement
“அப்பா…தேங்க்யூப்பா…”என்றவனது குரல் தழுதழுத்தது.
அந்த நேரத்தில் அருகில் இருந்த ராகவன் ஃபோனை வாங்கி சிரித்தபடி, “என் பொண்ணை நல்லா பார்த்துக்கணும்.”என்றார்.
பூபதி உடனே,”வாழ்நாள் முழுக்க நல்லபடியா பார்த்துக்கறேன் அங்கிள்.” என்றான்.
Advertisement
அருகில் நின்றிருந்த பிருந்தா அந்த வார்த்தையை கேட்டதும்…வெட்கத்தில் தலை குனிந்தாள்.
விஸ்வநாதன் அவளைப் பார்த்து சிரித்தார்.
அந்த இரவு… இரண்டு குடும்பங்களும் அவர்களது காதலை ஏற்றுக் கொண்ட சந்தோசமான இரவாக மாறியது.
இவர்களது காதல் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததும், எதிர்பார்த்ததைவிட எளிதாகவே பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.
பூபதி பிருந்தாவின் காதல் ஏற்றுக்கொள்ள பட்ட செய்தி, இரு குடும்பங்களிலும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
அந்த வீட்டில் அடுத்து நடக்க வேண்டிய முக்கியமான நிகழ்வு ஒன்று இருந்தது. அது ஐஸ்வர்யாவின் திருமணம்.
தூரத்து உறவினரான விக்ரமை ஐஸ்வர்யாவிற்கு ஏற்ற வரனாக முடிவு செய்து,பெரியவர்கள் பேசி நல்ல நாளில் திருமணத்தையும் முடிவு செய்தனர்.
திருமண நாளன்று…வீடு முழுவதும் உறவினர்களின் சிரிப்பும், பேச்சுச் சத்தமும் நிறைந்திருந்தது. மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க… மேடையில் மணப்பெண்ணாக அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவைப் பார்த்த பிருந்தாவின் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர்.
“என்னடி… இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் இதே மாதிரி உட்காரப் போற…” என்று ஐஸ்வர்யா கிசுகிசுக்க,பிருந்தா வெட்கத்தில் அவளது கையை கிள்ளினாள்.
“முதல்ல உன் கல்யாணம் நல்லபடியா முடியட்டும்.அதுக்கப்புறம் என் கல்யாணத்துல நான் உன்னை விட அதிக சந்தோசமா இருப்பேன்” என இருவரும் சிரித்துக் கொண்டனர்.
அந்தச் சிரிப்பைப் பார்த்துக் கொண்டிருந்த பூபதியின் முகத்திலும் புன்னகை.
ஒருபுறம் தங்கையின் திருமணம்…
மறுபுறம் தான் விரும்பிய பெண்ணுடன் தனது திருமணத்திற்கான கனவு…
அவனது மனம் நிறைவாக இருந்தது.
சில நொடிகளில் ஐஸ்வர்யா–விக்ரம் திருமணமும் விமரிசையாக நடந்து முடிந்தது.
புது வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த ஐஸ்வர்யா, ஒரு உண்மையை உணர்ந்து கொண்டாள்.
திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை திருமண மேடையில் இருந்ததைப் போல அழகாக இருப்பதில்லை என்று…
விக்ரம் நல்லவனாக இருந்தாலும்…
அவனது தாயின் குணமும், எதிர்பார்ப்புகளும் ஐஸ்வர்யாவுக்கு ஒத்துப் போகவில்லை.சிறு விஷயங்கள்…பெரிய பிரச்சனைகளாக மாறின.சமையல் முதல் வீட்டைப் பராமரிப்பது வரை…அவள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் குறை.
“எங்க வீட்டுல இப்படித்தான்…என் பையனுக்கு இதுதான் பிடிக்கும்…
உங்க வீட்டுல செல்லமா வளர்ந்ததாலதான்…உனக்கு இங்க இயல்பா இருக்க கஷ்டமா இருக்கு..”
என்ற வார்த்தைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.முதலில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள் ஐஸ்வர்யா.
கணவனுக்காக…புதிய குடும்பத்துக்காக…ஒருநாள் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கைக்காக.
ஆனால்…ஒத்துப் போகாத மனங்கள் ஒன்றாக வாழும்போது, சின்னச் சின்ன விரிசல்கள் கூட ஒருநாள் பெரிய பிளவாகிவிடும்.
இறுதியில்…ஒருநாள் தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு பிறந்த வீட்டின் வாசலில் வந்து நின்றாள் ஐஸ்வர்யா.
அன்று அவளைப் பார்த்த,
விஸ்வநாதனும் விசாலாட்சியும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
அதன் பிறகு நடந்தது…ஒரு சாதாரண குடும்பப் பஞ்சாயத்து அல்ல.மகளின் வாழ்க்கைக்காக ஒரு தந்தை எடுக்க வேண்டிய மிகப்பெரிய முடிவு.
விக்ரமை வீட்டோட மாப்பிள்ளையாக விஸ்வநாதன் அழைத்து வந்துவிட்டார்.
அந்தக் கதை…அதற்குப் பின்னால் நடந்த காதல், கோபம், குடும்பப் பிரச்சனை என தனிக்கதைதான்.
கடந்த கால நினைவுகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்க… பூபதியின் கார் மலைப்பாதையில் மெதுவாக மேலே ஏறிக் கொண்டிருந்தது.
சில வருடங்களுக்கு முன்பு இதே மலைக்காற்றில்… பிருந்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்த நாட்கள் நினைவுக்கு வந்தபோது, அவனது இதழ்களில் தன்னையும் அறியாமல் ஒரு புன்னகை மலர்ந்தது.
அவளிடம் முதன்முறையாகக் காதலைச் சொன்ன தருணம்…
அவள் அழுதுகொண்டே சிரித்த தருணம்…
ஏரிக்கரையில் இருவரும் செய்த அந்த சின்ன சின்ன வாக்குறுதிகள்…
எல்லாமே நேற்றுதான் நடந்தது போல அவனது நினைவுக்குள் பசுமையாக இருந்தது.
அந்த நினைவுகளிலிருந்து மெதுவாக நிகழ்காலத்திற்கு திரும்பியவன், காரின் வேகத்தை சற்றுக் குறைத்தான்.
“இன்னும் எவ்வளவு தூரம் பூபதி?”என்று முன் இருக்கையில் அமர்ந்திருந்த மூர்த்தி கேட்டார்.
“இன்னும் பத்து நிமிஷம் சார்… கோவில் வந்துடும்.”
கார் சில நிமிடங்களில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலை நெருங்கியது.
கோவிலைச் சுற்றி ஏற்கனவே திருமணத்திற்கான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. வாசலில் வாழைமரத் தோரணங்கள்… மலர் மாலைகள்… நாதஸ்வரத்தின் மெல்லிய இசை…சுற்றிலும் திருமணக் கூட்டம்.
“இந்த கோவிலுக்கு வந்து எவ்வளவு நாளாச்சு” என மனதிற்குள் நினைத்தபடியே பூபதி காரை நிறுத்தினான்.
அவனுடன் வந்த மூர்த்தியும் ஜோதியும் காரிலிருந்து இறங்கினர்.
“வாங்க சார்…” என்று அவசரமாக உள்ளே செல்ல முயன்றான் பூபதி
ஆனால்…அவர்கள் கோவில் வாசலை நெருங்கிய அடுத்த நொடியே…
உள்ளிருந்து பதற்றத்துடன் இரண்டு தொழிலாளர்கள் வேகமாக வெளியே ஓடி வந்தனர்.
அவர்களின் முகங்களில் இருந்த பரபரப்பைப் பார்த்ததும் பூபதி நின்றுவிட்டான்.
“என்னாச்சு?”
யாரும் உடனடியாக பதில் சொல்லவில்லை.
“பூபதி…” என்று ஒருவன் மூச்சுத் திணறியபடி அருகில் வந்து”கல்யாணம் நின்னுடுச்சு …” என்றான்
பூபதியின் புருவங்கள் சுருங்கின.
“என்ன?”
“மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டேன்னு சொல்லிட்டாரு பூபதி.”
“ஏன்?”
அவன் கேட்ட கேள்விக்கு அந்த தொழிலாளி தயக்கத்துடன் தலைகுனிந்தவாறு,”வரதட்சணை கேக்குறாராம்…”என்றார்.
அந்த ஒரு வார்த்தை கேட்டதும் பூபதியின் முகம் இறுகியது.
பூபதி சில நொடிகள் எதுவும் பேசவில்லை.அவனது பார்வை கோவிலின் உள்ளே சென்றது.
சில நிமிடங்களுக்கு முன்பு வரை திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த இடம் இப்போது குழப்பமாக மாறியிருந்தது.பெண்களின் அழுகுரல்…ஆண்களின் பதற்றமான பேச்சு…நாதஸ்வரம் நின்றுவிட்ட அமைதி…எல்லாமே சேர்ந்து அந்த இடத்தின் சூழலையே மாற்றியிருந்தது.