Skip to content
Post Views: 4,289
நிறம் பாராத காதல்
அத்தியாயம்.22(2)
Advertisement
வைதேகியின் இடையில் அவன் கரங்கள் பதிந்து இருக்க, “ஆர் யூ ஓகே” என்றவனின் தொடுதலில் விவரிக்க முடியாத உணர்வுகளை உணர்ந்தாள் வைதேகி.
தன்னை விட்டு அவளாக இன்னும் விலகவில்லை என்ற நிலையில்,
Advertisement
தன் குரலைச் செருமியவன்,”வீட்டுக்குக் கிளம்பலாமா?” எனக் கேட்டதும், இமைக்கும் நொடியில் அவனிடமிருந்து விலகியவள்
Advertisement
“ம்…போகலாம்” என்று வெட்கத்துடன் தெரிவிக்க, வைதேகியை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கம்பெனியிலிருந்து
கிளம்பினான் ரணதீரன்.
Advertisement
வழியெல்லாம் அமைதியாகவே வண்டியை விரட்டிய ரணதீரனை பார்த்து, “சங்கரை உண்மையா வெளியே அனுப்பிட்டீங்க தானே!?” என்று கேட்டாள்.
“நான் சொன்னால் சொன்னதை பண்ணுவேன்” என்ற ரணதீரன் அவள் முகத்தைப் பார்த்துப் பதில் சொல்லாமல் சட்டென்று கோவமான மனநிலையுடன் வண்டியை விரட்டினான்.
“உங்க மனசுல என்ன? பெரிய ஆன்ட்டி ஹீரோன்னு நினைப்பா!?” என்ற வைதேகியின் கிண்டலான பேச்சில் அவளை முறைத்து பார்த்தவன், “நான் எந்த ஆன்டிக்கும் ஹீரோ இல்லை” என்று அவன் சொன்னதும் சத்தமாகச் சிரித்த வைதேகியின் மலர்ந்த வதனத்தை கண்டு ஒரு நொடி அவளை ரசித்தவன் சட்டென்று தன் மனதை ஒரு நிலைப்படுத்தியப்படி வண்டியை விரட்டினான்.
“ம்… ஏன் தீரா? உங்களுக்கு வேலுவை தவிர வேற நண்பர்கள் இல்லையா?” என்று வைதேகி அவனின் மனதை அறிந்துக்கொள்ளும் விதமாகக் கேள்வியை எழுப்ப, “யாரு சொன்னாங்க? எனக்கு மொத்தம் பனிரெண்டு நண்பர்கள், இப்போ உன்னையும் சேர்த்து பதிமூன்று ” என்ற ரணதீரனின் பதிலில் உள்ள அர்த்ததைக் கொண்டு மறைமுகமாக அவனின் மனநிலையை தன் மனதளவில் ஆராய தொடங்கி இருந்தாள் வைதேகி.
‘இத்தனை நண்பர்களா! அது எப்படி? இவரை கிட்டத்தட்ட ஒரு வாரகாலமாகப் நம்ம பார்த்துகிட்டு இருக்கோம். இவருக்கு எந்தப் போனும் வந்தது இல்லையே! ஒரு வேள இவரோட பங்களாவில் இருந்தப்படியே அவங்க நண்பர்கிட்ட எல்லாம் பேசுவாரா?’ என்று தனக்குள் எண்ணியவள்,
“ஏன் தீரா… உங்க பனிரெண்டு! இல்ல இல்ல என்னையும் வேலுவையும் தவிரித்து மீதம் இருக்கும் நண்பர்கள் எல்லாம் எங்க இருக்காங்க?” என சந்தேகமாக அவள் கேட்தும், “என் பங்களாவில் தான்.” என்றவன், இயல்பாக வண்டியை விரட்டினான்.
“என்ன? உங்க பங்களாலையா?”
என்றவளின் வில் போன்ற புருவம் மேலே ஏறி இறங்கியது,”ஏன்?நீ என் நண்பர்களைப் பார்க்கணுமா?” என்று அவன் கேட்டதும்,
“ம்… முடியுமா?” என்று ஆசையுடனும், ஆவலுடனும் தலையை ஆட்டினாள் வைதேகி .
“ம்… நாளைக்கு அழைச்சிட்டு போறேன்” என்று அவன் சொன்னதும், இதுவரை மாறன், மாயா ஏன் அவன் அன்னைக் கூடப் போகாத அவனின் வீட்டுக்குள் இவளை அழைத்துச் செல்லப் போகின்றான் என்று எண்ணும் போதே,’உங்களுக்கு நான் அவ்வளவு முக்கியமா மாறி இருக்கேனா தீரா’ என்று உள்ளுக்குள் அவனிடம் கேக்க எண்ணிய வார்த்தையைத் தொண்டை குழியோடு நிறுத்தி விட்டாள் வைதேகி.
அமைதியான இவர்களின் பயணத்தில் தென்றல் காற்றின் மெல்லிய இசை மட்டும் வைதேகியின் காதுகளை வருட தன்னை அறியாமல் வைதேகி கண்கள் மூடித் தன் இருக்கையில் தலை சாய்ந்து அப்படியே உறக்கத்தில் விழுந்துவிட்டாள்.
சில நிமிடங்கள் கடந்து வைதேகி கண் விழித்தபோது இவர்கள் பயணித்த ஜீப் ஊட்டித் தேயிலை தோட்டத்தின் உச்சியில் நின்றிருந்தது.
வண்டி நின்றதும் தன் விழிகளை மலர்ந்த வைதேகிக்கு ஜீப்பின் கண்ணாடி வெளியே பார்த்தவளின் கண்களில் அந்த இயற்கையின் அழகு ஓர் கவிதை புத்தகமாகத் தோன்றியது.
ஜீப்பிலிருந்து இறங்கிய வைதேகியின் அருகே ரணதீரனும் அவளை அரவணைத்தப்படி தான்
நின்று இருந்தான்.
அவள் கண் எதிரே மலைகள் பசுமையாகத் தெரிய, வானம் மெழுகுபோல் மென்மையாக வெயிலின்றி நெஞ்சை வருடும் தென்றல் காற்று அவள் மேனியை வருடிச் சென்றது.
அதே உணர்வோடு தன் விழிகளால் ரணதீரனை பார்த்து,
“வீட்டுக்குப் போகலாம்னு சொன்னீங்க… இப்போ இங்க ஏன் அழைச்சிட்டு வந்திங்க? ” என்று கேட்டாள் வைதேகி.
அவளின் கேள்வியில் வைதேகியை அழுத்தமாகப் பார்த்தவன், “ம்… உன்னை இந்த மலையில இருந்து தள்ளி விடப் போறேன்” என்று ரணதீரன் சொன்னதும்,
“உண்மையாவா?” என்றவள் அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவளின் கண்களில் அவன்மீது உள்ள நம்பிக்கை அப்பட்டமாகத் தெரிந்த நிலையில்,”ம்… தள்ளி விடுங்க” என்று கண்களை மூடி அவன் முன் சரணாகதி அடைந்தாள்.
நொடிக்கு நொடி ரணதீரனின் அருகாமைக்கு ஏங்கி தவிக்கும் வைதேகியின் மனதை அவளால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற கேள்வி அவளுக்கும் எழத் தான் செய்தது.
ரணதீரன் முன்னே விழிகளை மூடி நின்று இருந்த வைதேகியை,”என்ன பாப்பா நின்னுகிட்டே தூங்குறியா? “என்ற மாறனின் குரல் அவள் விழிகளை மலரச் செய்ததும், “இன்னைக்கு நம்ம எல்லோரும் இங்க தான் தங்க போறோம்” என்றான் ரணதீரன்.
கீதா, மாயா, வேதநாயகி, பொம்மி, நீலு, மயிழினி என்று அனைவரும் இவர்களை நோக்கி நடந்து வர,”என்ன வைதேகி பசிக்குதா? சாப்பிட போகலமா!” என்ற வேதநாயகி வைதேகியின் கையைப் பிடித்துத் தேயிலை தோட்டத்தின் அருகே இருந்த இவர்களின் அழகான கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார்.
வேதயநாயகியுடன் நடந்து செல்லும் வைதேகியின் உடல் போன பாதையில், உள்ளம் போகவில்லை, அவளின் இதயம் ரணதீரனின் வசமே உறைந்து நின்றது.
வைதேகி அங்கிருந்து சென்றதும்,
“அப்புறம் ராணா…வைதேகி என்ன சொல்கிறாள்!?” என்று மாயா கேக்க,
“அவ என்ன சொல்லப் போறா! சீக்கிரமா கனடா போகணும்னு தான் சொல்லப் போகிறாள்” என்ற ரணதீரன் மீண்டும் ஜீப்பில் ஏறி அமந்துக் கொண்டான்.
“என்ன மச்சான் நீ சாப்பிட வரலையா?” என்று மாறன் கேட்டதும்,”எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு மாமா. நான் பக்கத்து ஊர்வரைக்கும் போயிட்டு வரேன்” என்ற ரணதீரனை கேள்வியாகப் பார்த்தான் மாறன்.
“டேய்… பக்கத்து ஊருக்கு ஏன் போற?”என்று மாயா கேக்க,
“போய்ட்டு வந்து சொல்லுறேன்…வீட்டுல யார்கிட்டயும் எதுவும் சொல்லாதீங்க” என்ற ரணதீரன் வேகமாகத் தேயிலை தோட்டத்திலிருந்து பக்கத்து ஊரை நோக்கித் தன் வண்டியை விரட்டினான்.
ராணதீரன் அங்கிருந்து சென்றதை அறியாமல் சிறுமி மயிழினியுடன் வைதேகியும் பொம்மியும் விளையாடிக்கொண்டு இருக்க, நீலுவுடன் சேர்ந்து மதிய உணவை மேசைமேல் அடுக்கினார் கீதா.
“டேய் மாறா… வாங்க சாப்பிடலாம்” என்று கீதா அழைக்க,”எங்க ராணா…”என்று வேதநாயகி கேட்டதும்,”தம்பிக்கு ஏதோ வேலை இருக்குனு கம்பெனிக்குப் போயிட்டான்” என்ற மாயா தன் குழந்தைக்கு மதிய உணவை ஊட்டிவிட்ட்டாள்.
இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க, “அண்ணா… தீரா மதியம் சாப்பிடலையா!?”என்று வைதேகி கேட்டதும்,”அவன் இப்படி தான் பண்ணுவான் வைதேகி, நேர நேரத்துக்குச் சாப்பிடவே மாட்டான்” என்ற வேதநாயகியின் பதிலில் வைதேகியின் முகம் வாடிப்போனது.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை முடித்தப்பின், பொறுமையாகத் தோட்டத்தைச் சுற்றி மாயாவுடன் நடந்து சென்ற வைதேகிக்கு அமைதியான அந்தச் சூழ்நிலை மனதை மேலும் குளிர செய்தது.
“வைதேகி… உனக்குக் கால் வலிச்சா சொல்லு. நம்ம திரும்பிப் போயிடலாம்”
என்று மாயா சொல்ல, “இருக்கட்டும் அண்ணி… இன்னும் கொஞ்ச தூரம் போகலாம்”என்ற வைதேகி
பொறுமையாகத் தோட்டத்தை
சுற்றி வந்தாள்.
இயற்கை எழிலை ரசித்த வைதேகிக்கு அவள் கடைசியாகத் தன் தந்தையுடன் வாழ்ந்த அழகிய காலங்களை நினைவுப்படுத்த,
அவள் விழிகளின் ஓரம் கண்ணீர் கசிந்தது.
“என்னாச்சு வைதேகி ஏன் அழற?” என்று மாயா புரியாமல் கேட்டதும், “என் அப்பாவுக்கு இந்த மாதிரி இயற்கை சூழல் ரொம்பவே பிடிக்கும் அண்ணி. என் அம்மா இறந்த பிறகு நானும் என் அப்பாவும் மாசத்துக்கு ஒரு முறை இந்த மாதிரி அமைதியான இடத்துல போய்த் தங்கிடுவோம்” என்றவளின் மனதில் உள்ள ஏக்கங்கள் எல்லாம் கண்ணீராக வெளியேறியது.
“அழாத வைதேகி…உன் அம்மாவும் அப்பாவும் உன் கூடத் தான் இருப்பாங்க.
சரி வா நீ ரொம்ப நேரம் நடந்தால் கால் வலிக்கும்” என்ற மாயா வைதேகியை அழைத்துக்கொண்டு மீண்டும் தேயிலை தோட்டத்து வீட்டுக்கே திரும்பி இருந்தாள்.
அன்றைய தினம் மாலை நேரம் ரணதீரனை தவிர்த்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்து மகிழ்ந்து தேநீர் பருகிக்கொண்டு இருந்தார்கள்.
வைதேகி தன் தாய் தந்தையரை பற்றி வேதநாயகியிடம் பெருமையாகப் பேசினாள்.
அம்மா வீட்டின் சொந்தம் இருந்தும் யாரும் இல்லாத தனிமையான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கும் வைதேகி மீது வேதநாயகிக்கு அளவுக் கடந்த அன்பும் அக்கறையும் அதிகரித்தது.
மாலை நேரம் கடந்து இரவு நேரமும் நெருங்கி வர, “வாங்க வாங்க…நிலா வெளிச்சத்துல அத்தை கையால சாப்பாடு சாப்பிட்டா அமிர்தம் போல இருக்கும்” என்ற மாயா தன் மாமியாரின் கரங்களால் அன்பாகப் பிடித்துக்கொடுத்த அன்னத்தை ரசித்து ருசித்துச் சாப்பிட்டாள்.
நிலா வெளிச்சத்தில் ஒரு ஓரமாகத் தீ மூட்டி, அதன் வெப்பத்தின் நடுவே அனைவரும் கம்பலி ஆடையில் அமர்ந்து இருக்க கீதாவே அனைவருக்கும் இரவு உணவை உருட்டி உள்ளங்கையில் கொடுக்க, “என்ன அண்ணி… இன்னும் ஏன் தீரா வரல? “
என்று நீரை தேடும் மீனாக வைதேகியின் விழிகள் ரணதீரனை தேடியது.
“கம்பெனில நிறைய வேலை இருக்கு. மச்சான் நாளைக்கு காலையில தான் வருவான்” என்று மாறன் சொல்ல, “சாப்பிடாம கூட அப்படி என்ன தான் வேலை பார்ப்பாரோ!” என்று வாய்க்குள் முணங்கிய வைதேகியின் முகமே அவளின் எண்ண ஓட்டத்தை அப்பட்டமாக அனைவருக்கும் வெளிக்காட்டியது.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்ததும், “சரி… எல்லோரும் போய் நேரத்தோடு படுங்க. நாளைக்கு இங்க இருந்தப்படியே கோவிலுக்குப் போயிட்டு நம்ம வீட்டுக்குப் போயிடலாம்” என்று வேதநாயகி சொன்னதும் வைதேகிக்காகத் தரப்பட்ட அறையில் சென்று அங்கிருந்த கட்டிலில் வெறுப்புடன் படுத்துக் கொண்டாள் வைதேகி.
“என்னாச்சு எனக்கு! ஏன் இப்போ எல்லாம் தீரனை மட்டுமே என் கண்கள் தேடுது. அவர்கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும்னு ஏன் தோணுது. என் அம்மா அப்பாவுக்கு
அடுத்து ஏன் தீரனை நான் இவ்வளவு மிஸ் பண்றேன்.” என்று தனக்குள் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டவளுக்கு புரியாத உணர்வின் பிடியில் அவள் சிக்கி தவிக்கும் தருணம் வைதேகி படித்த படிப்பே அவளுக்கு உதவாமல் போனது.
ரணதீரனை பற்றிய நினைவுகளோடு தன் படுக்கையில் விழிகளை மூடி உறங்கியவளின் காதில் சரியாக இரவு பனிரெண்டு மணி அளவில் தூரத்தில் ஒலித்த வெடியின் சத்தம் கேட்டு
அடித்துப் பிடித்து எழுந்தவள் வாக்கிங் ஸ்டிக்கின் உதவியோடு தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் வைதேகி.
பாதி உறக்கத்தில் பயந்து வெளியே வந்த வைதேகியின் எதிரே,
“இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் வைதேகி”என்று வேதநாயகியின் குடும்பமே கையில் கேக், பலூன் என்று முகம் மலர்ந்த புன்னகையுடன் நின்று இருந்த அனைவரின் அன்பையும் பார்த்து வைதேகியின் கண்களும் ஆனந்தத்தில் கண்ணீரால் நிறைந்து இருந்தது.
“என்ன மேடம் எப்படி எங்களோட சர்ப்ரைஸ்!”என்ற ரணதீனும் கையில் சிறுமியைத் தூக்கிக்கொண்டு வைதேகியின் அருகே வந்தவனை பார்த்து அழகாய் சிரித்துக்கொண்டவள்
எதிரில் கேக்கை நீட்டினான் மாறன்.
அனைவரின் நடுவே நின்று மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு வைதேகி கேக்கை வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டவளை
மனதார அனைவருமே வாழ்த்தினார்கள்.
வயதில் மூத்தவர்களான கீதா மற்றும் வேதநாயகியின் காலில் விழுந்து வைதேகி ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள,”அம்மாடி வைதேகி நேரத்தோடு போய்த் தூங்குமா. நாளைக்கு கோவிலுக்குப் போகணும்” என்று வேதநாயகி சொன்னதும் அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றுதும், ரணதீரனும் வைதேகியும் மட்டுமே ஹாலில் தனியாக நின்று இருந்தார்கள்.
“இப்படியொரு இன்ப அதிரிச்சியை நான் எதிர் பார்க்கவே இல்லை தீரா… என் அப்பா உயிரோடு இருக்கும் வரை அவர்தான் இந்த மாதிரி பனிரெண்டு மணிக்கு வாழ்த்து சொல்லுவாரு” என்ற வைதேகியின் ஏக்கத்தைப் புரிந்து இருந்த ரணதீரன், “ப்ச்…ஏன் இப்போ கஷ்டப்படுற , இங்க பாரு உனக்கான பிறந்தநாள் பரிசு” என்றவன் வண்ண காகிதம் சுற்றிய அன்பளிப்பை எடுத்து வைதேகியின் கைகளில் கொடுத்தான்.
“என்ன தீரா… எனக்குக் கிப்ட்டா!அதுவும் நீங்க எனக்குக் கிப்ட் தரிங்களா?” என்றவள் என்ன அன்பளிப்பாக இருக்கும் என்ற ஆவலில் வேக வேகமாக அன்பளிப்பை பிரித்துப் பார்த்தாள்.
ரணதீரன் தனக்காகக் கொடுத்த அன்பளிப்பை பார்த்ததும் வைதேகியின் இதயத்தில் மகிழ்ச்சி, அழுகை, ஆச்சிரியம் என்று அணைத்தும் கலந்த உணர்வு ஏற்பட்ட தருணம் தன்னை மறந்து தன் அருகே இருந்த ரணதீரனை காற்று கூட நுழைய முடியாத அளவிற்கு கட்டி அணைத்துக்கொண்டாள் வைதேகி.
கண் இமைக்கும் நொடியில் வைதேகியின் கரங்களுக்குள் அகப்பட்டு இருந்த ரணதீரனை பார்த்து,”ஐ லவ் யு தீரா…” என்றவளின் வார்த்தையைக் கேட்டு ரணதீரன் பனியில் உறைந்த நீராக மாறியவனுக்கு இந்த நிகழ்வு கனவா நிஜமா என்ற குழப்பம் தான் ஏற்பட்டது.
“என்ன!காதலா!? என்ன
சொல்லுற நீ?”என்று ரணதீரன் புரியாமல் கேட்க,
“ஆமா தீரா…உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு” என்ற வைதேகி மேலும் அவன் இதயத்தில் வாட்டமாக ஒட்டிக்கொண்டாள்.
“தீரா…இப்போ எல்லாம் எனக்குக் கனடா போகணும் என்ற ஆசையே இல்லை, உங்ககூடவும் நம்ம குடும்பத்தோடவும் இங்கேயே வாழணும்னு நான்
ஆசைப்படுறேன்” என்ற வைதேகி அவள் மனதில் உள்ள காதலை அந்தத் தருணமே ரணதீரனிடம் தெரிய படுத்தியவள், காதல் மயக்கத்தில் அவனின் இதயத்தில் தஞ்சம் கொண்டு இருந்தாள்.
வைதேகியின் அணைப்பும் அவளின் ஆர்ப்பரிக்கும் அழகும் ரணதீரனின் மனதில் அவள் மீது காதல் எண்ணத்தை வளர்க்கும் முன்னே,”ராணா… அழகை நம்பாதே ராணா!அவள் உனக்கு வேண்டாம்” என்று திடீரென ரணதீரனின் காதில் மட்டும் ஒலித்த குரலில் இதுவரை வைதேகி உரைத்த காதல் உணர்வுகள் எதுவும் ரணதீரனின் காதில் விழாமல் போனது.
error: Content is protected !!