Skip to content
Post Views: 294
ஓம் ஸ்ரீ சாய்ராம்
நிழலாடும் நின் நினைவில் – கதைக்கரு கவிதை வடிவில்
உற்ற தோழி அவளை உறவாக்கிக் கொள்ள,
உள்ளத்தில் ஆசை வளர்த்தான் எம்பி;
உகந்த காரணங்களை வசியமாய் மொழிந்து,
உயிர்த் தோழி அவளின் உள்ளத்தையும் வென்றான்;
உள்ளதை உள்ளபடி உரைக்கும் உன்
கண்ணியம் பிடித்திருக்கிறது – என்மேல்
பெருங்காதல் கொண்டாள் பாவை;
Advertisement
கைகூடா காதலை கனவிலும் எண்ணாதே – அன்புக்
கட்டளையிட்டு கைகோத்தவளின் கரிசனத்தில்,
பெரும் நம்பிக்கை கொண்டேன் யான்.
ஒருமித்த மனத்துடன்,
திருமண பந்தத்தில் இணைந்தோம்;
ஒளிவுமறைவு ஏதுமில்லை,
எங்களுக்கு இடையில் – என
கர்வம் கொண்டோம்;
புரிதலின் இலக்கணமாய் நாங்கள் வாழ,
புகுந்தாள் விதியாள்; விதைத்தாள் விரிசலை;
இல்லறத்தின் காட்சிகள் நீர்க்குமிழிகளாய் உடைய,
இல்லாள் உனக்குக் கொடுத்த வாக்கை மறந்து – விடை தேடுகிறேன்
இதயத் துடிப்பில் நிழலாடும் நின் நினைவில்…
Advertisement
Advertisement
error: Content is protected !!