Skip to content
Post Views: 5,648
“கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்
மு.வ விளக்க உரை: அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.”
உணவை முடித்து அதிரனும் தேவ ரஞ்சனாவும் அங்கிருந்து கிளம்பிய நேரம் மணி ஒன்பதை கடந்திருந்தது.
மீண்டுமாய் அமைதியான ஒரு பயணம். அதிரன் எதுவும் கூறாமல் காரை இயக்க தேவாவே,
Advertisement
“அப்பா அம்மா இருந்தப்போ மனசு எதைப் பத்தியும் கவலை படாம நிம்மதியா இருந்தது.
அதுக்கப்பறம் இன்னைக்கு தான் அப்படி ஃபீல் பண்றேன். அதுக்காகவே உங்களுக்கு நிறைய தேங்க்ஸ் சொல்லணும்.”
“உண்மை தான். நான் கூட இன்னைக்கு ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கேன்.
Advertisement
கல்யாணம் எதுக்கு பண்ணணும்னு இப்போ புரியுது. நமக்கான ஒரு பெர்சன். ரொம்பவே நல்லா தான் இருக்கு.”
Advertisement
“..”
“எனக்கு உன்னை இம்ரெஸ் பண்ண சர்ப்ரைஸ் பண்ண எல்லாம் வருமானு தெரியலை. உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நான் வாங்கி கொடுக்க ஆசை படுறேன்.”
“எனக்கு..”, என்றவளின் தயக்கத்தில் புருவம் சுருக்கியவன் காரை ஓரமாய் நிறுத்தியிருந்தான்.
Advertisement
“எதுவாயிருந்தாலும் சொல்லு.”, என்றவனின் விழிகளை ஒரு நொடி பார்த்தவள் அவனது இடது புஜத்தைப் பற்றி அவன் மீது தலை சாய்த்திருந்தாள்.
அதிரனும் இதை எதிர் பார்த்திருக்கவில்லை. ஆனால் அவளின் இந்த உரிமை அவனை இன்னுமாய் இலகுவாக்கியிருந்தது.
லேசான மென்னகையோடு அவளது கரத்தை அழுத்திக் கொடுத்த வண்ணம்,
“சோ யூ நீட் அதிரன். அப்படியா?”
“ம்ம் மொத்தமா எனக்கே எனக்கு மட்டுமான அதிரன்.”, என்றவள் தலையை நிமிர்த்தவில்லை.
“கொடுத்துட்டா போச்சு பதிலுக்கு இந்த தேவ ரஞ்சனாவை மொத்தமா உரிமை கொண்டாடிக்கலாமா?”, என்றதற்கு தேவாவிடம் பதிலில்லாமல் போக லேசாய் பற்கள் தெரிய சிரித்தவன் தனது புருவத்தை கீறிய படி வெளியில் தலைத் திருப்பினான்.
“நான் கூட என்னை ரொம்ப யோக்கியன்னு நினைச்சேன். பட் உன் பக்கத்தில் அப்படியெல்லாம் இல்ல போல. நான் பேசுறதெல்லாம் எனக்கே நம்ப முடியாததா இருக்கு.”
“என்ன மேடம் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”
“நீட் யூ ஃபார்எவர்ங்க.”, என்றவள் தலையை நிமிர்த்த வெகு இயல்பாய் அவளது நெற்றியில் பட்டும் படாமலும் இதழ் பதித்து காரைக் கிளப்பியிருந்தான்.
“நான் கொஞ்சம் டஃப் டு ஹேண்டில்..”
“பரவால்ல ஐ கேன் மேனேஜ்.”
“நான் என்னால உங்களுக்கு ஏத்த மாதிரி சில நேரம் நடந்துக்க முடியாம போகலாம்.”
“ஒண்ணும் பிரச்சனை இல்ல. பார்த்துக்கலாம்.”
“நான்..”
“ஹேய்.. யூ ஆர் மைன் உன்கிட்ட உன்னைத் திருப்பி எல்லாம் கொடுக்க முடியாது. கொடுக்குற ஐடியாவும் இல்ல. புரியுதா?”
“நான் அந்தளவு எல்லாம் அட்ராக்டிவ்வா இல்ல.”
“யார் சொன்னா அப்படி?”
“!!”
“சொல்லு.. நாம ஒரு கடைக்கு போறோம் அங்கே இருக்குற எல்லாமே அழகா தான் இருக்கும். ஆனா நமக்கு எதாவது ஒண்ணு தான் பிடிக்கும்.
இல்ல செட் ஆகும். அப்படி தான் மனுஷங்களும். எல்லார் கண்ணுக்கும் நாம அழகா அட்ராக்டிவ்வா தெரிஞ்சா அப்பறம் நமக்கு என்ன மதிப்பு?
எனக்கு நீ ரொம்பவே அட்ராக்டிவ் தான். மத்தவங்களுக்கு நீ எப்படி தெரிஞ்சா என்ன?”
“உங்களை மாதிரி எனக்கு பேச வரலை.”, என்றவள் மெலிதாய் சிரித்திருக்க அதிரனுமே புன்னகைத்தான்.
தேவாவின் வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன் விரல்களால் ஸ்டியரிங்கைத் தட்டியவாறு அவள் இறங்குவதற்காக காத்திருந்தான்.
“உள்ளே வாங்க..”
“ஆர் யூ ஷுவர்?”
“ம்ம் ஏன்?”
“இந்த டைம்ல..”
“ஒண்ணும் பிரச்சனையில்ல. என்னைப் பத்தி அடுத்தவங்க பேசுறதுக்கு நான் எப்பவும் மதிப்பு கொடுத்தது கிடையாது. வாங்க.”, என்றதில் காரை விட்டு இறங்கியவன் உள்ளே வர அதற்குள் அழைப்பு மணியை அழுத்தியிருந்தாள் தேவா.
கதவைத் திறந்த அவினாஷ் அதிரனைப் பார்த்து விழி விரித்தவனாய் மலர்ந்த முகமாய் வரவேற்றான்.
“வாங்க சார். உள்ளே வாங்க..”
“உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்னு ரஞ்சனா சொன்னா?”, என்றவனின் கேள்வியில் அக்காவைப் புரியாத பார்வை பார்க்க அதிரனோ,
“அப்பறம் என்னை சார்னு கூப்பிட்டா என்ன அர்த்தம்?”, என்றதில் நாக்கைக் கடித்துக் கொண்டவன்,
“உட்காருங்க மாமா..”, என்று கூற இருக்கையில் அமர்ந்தவன் வீட்டைச் சுற்றி பார்வையை சுழற்றிய வண்ணம் இருக்க தேவா அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“வீட்டை ரொம்ப நல்லா வைச்சுருக்கீங்க இரண்டு பேரும்.”
“நான் இல்ல. அக்கா தான். எனக்கு இந்தளவு எல்லாம் முடியாது மாமா..”, என்றதில் மூவருமாய் புன்னகைத்தனர்.
“சரி ஏற்கனவே நேரமாச்சு. நான் கிளம்பட்டுமா?”
“மாமா ஒரு நிமிஷம்.”
“நானே உங்களைப் பார்க்க வரணும்னு நினைச்சேன். ஆனால் கொஞ்சம் பயம்..”
“என்ன விஷயம்?”
“இல்ல கல்யாணத்துக்கு என்ன எப்படி பண்ணணும்னு எல்லாம் எங்களுக்குத் தெரியாது.
எல்லாத்தையும் நீங்க பார்த்து பண்ணிடுங்க. இந்த வீடு எப்படியும் அக்காக்கு தான்.”
“அவி என்ன பேசுற நீ?”
“இல்லக்கா அது தான் சரியா இருக்கும். அவங்க எல்லாமே பண்றாங்கனு நான் சும்மா உன்னை அனுப்பினா நல்லாயிருக்காது தான.”, என்றதில் தேவாவிற்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
ஒரு வகையில் தேவாவைப் போலவே அவினாஷைப் பார்த்தும் சற்று ஆச்சரியமாய் இருந்தது அதிரனுக்கு.
வயதிற்கு மீறிய பொறுப்புணர்ச்சி பிடித்தும் இருந்தது.
அவனைத் தன்னருகில் அழைத்து நிறுத்திக் கொண்ட வண்ணம் தோளில் கைப் போட்டுக் கொண்ட படி,
“நான் கல்யாணம் பண்ணிக்கலாமானு தான் உன் அக்காகிட்ட கேட்டேன். பிஸினஸ் பண்ணிக்கலாமானு இல்ல.”
“!!”
“அதோட நீயும் இனி எனக்கு சாருகேஷ் மாதிரி தான். உன் வயசுக்கு நீ இவ்வளவு பொறுப்பா எல்லாம் இருக்க வேண்டாம். வாழ்க்கையை என்ஜாய் பண்ணு.
உனக்கும் உன் அக்காக்கும் இனி நான் இருக்கேன். சரியா?”, என்றதில் அவினாஷ் அழுதிருந்தான்.
தேவா அவனருகில் வந்து தம்பியின் கரத்தை இறுகப் பற்றிக் கொள்ள அதிரன் தோளோடு அழுத்திக் கொடுத்தான்.
“இதுக்கு மேல இந்தப் பேச்சு இருக்கக் கூடாது. புரியுதா?”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
அதிரன் வெளியே வர அவனை வழியனுப்ப வந்த தேவாவின் முகம் அத்தனை நேரம் இருந்த பொலிவு குறைந்து தம்பியை நினைத்து வருந்தியிருந்தது.
“அவன் கேட்டதில் எந்த தப்பும் இல்ல. ஒரு விதத்தில் அவன் மனசை வெளிப்படுத்திட்டானே. நீயும் வொரி பண்ணிக்காத.”
“அவனை நான் சரி பண்ணிடுவேன். ஆனால் எனக்கு நீங்க ரொம்ப அதிகமா தேவைப்படுவீங்க..
வாழ்க்கை முழுசும். அது. பரவால்லையா உங்களுக்கு?”
அவளது பேச்சில் இருந்து அதிரனுக்குத் தெளிவாய் புரிந்தது அவளது எதிர்பார்ப்பு எல்லாம் கணவன் என்ற உறவும் அவன் கொடுக்கும் அன்பும் அரவணைப்பும் தான்.
ஓய்ந்து போன மனங்களுக்கு தானே அரவணைப்பின் ஆறுதல் எத்தனை அளப்பரியது என்பது புரியும். தந்தை இறந்த நேரத்தில் அதை அதிரன் அதிகமாகவே உணர்ந்திருக்கிறான்.
ஆண் என்ற முகமூடி கொண்டு அவனது அழுத்தங்களை வெளிக்காட்டாமல் சிறிது காலத்திற்குள் அதை மறந்து மறைத்து நடைமுறைக்கும் வர முடிந்தது.
இப்போது தேவாவின் பயம் மொத்தமும் அவளின் அதீத தேவையும் அன்பும் அதிரனை ஒரு கட்டத்தில் எரிச்சலடைய செய்து விடுமோ என்பது தான்.
இத்தனை நேர பேச்சுக்களிலும் அவள் அதை தான் பலவாறாய் வெளிப்படுத்த முயன்றாள் என்பதும் அதிரனுக்கு இப்போது புரிந்தது.
“உனக்கு என்கிட்ட எப்படியிருக்கணும்னு தோணுதோ நீ தாராளமா இருக்கலாம். என்னால உன் அன்பை தாங்கிக்க முடியலைனு ஒரு நிலைமை வந்தால்..”, என்றவன் பேச்சை நிறுத்தி விட்டு அவளையே பார்த்திருக்க பெண்ணவளின் கண்களின் ஏக்கம் அவனை அப்படியே உள்ளுக்குள் இழுத்து பூட்டி வைத்துக் கொள்வதாய் இருந்தது.
தனது வலது கரத்தை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தவன் இடது கரத்தால் அவளது இடுப்பைச் சுற்றி தன்னோடு மெலிதாய் இழுத்து நிறுத்த பிடிமானத்திற்காக தனது இரு கரங்களையும் அவனது மார்பில் வைத்தவளின் கண்கள் இரண்டும் தாமரையாய் விரிந்திருந்தன.
“இதே மாதிரி இந்த தூரத்தில் நின்னு என்ன தண்டனை வேணாலும் கொடு மறுக்காம வாங்கிப்பேன். சரியா?”, என்றதில் கண்களிலிருந்து மள மளவென கண்ணீர் வர ஆரம்பித்திருந்தாலும் கண் சிமிட்டாது அவனையே பார்த்திருந்தாள்.
அதிரனுக்கு நடப்பதெல்லாம் பெரும் ஆச்சரியமாய் இருந்தது.
தான் இந்தளவு ஒரு பெண்ணோடு இயந்து விழியசைவிற்கு கட்டுப்பட்டு எல்லாம் வாழ முடியும் என்று அவன் நினைத்ததேயில்லை.
அவனின் தேவ ரஞ்சனா அனைத்தையும் நடத்திக் காட்டிக் கொண்டிருந்தாள்.
சுற்றம் உணர்ந்து தனது பிடியை அதிரன் தளர்த்த நகர்ந்து நின்றவள் சுற்றும் முற்றும் பார்த்த படி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“சந்தேகம் போச்சா? இல்லை இன்னும் போக வைக்கணுமா?”, என்றதில் முகம் பழைய பிரகாசத்தை நிறைத்திருக்க அந்த திருப்தியோடு அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
வீட்டிற்கு வந்தவனுக்காக காத்யாயினி வரவேற்பறையிலேயே காத்திருக்க முகத்தை சாதாரணமாய் வைத்த வண்ணம் சென்று அவரருகில் அமர்ந்தான்.
“சாப்ட்டு வா அதி. பேசலாம்.”
“நான் சாப்ட்டேன் மா. ரஞ்சனாவோட வெளியில் போயிருந்தேன்.”
“ஓ! உனக்கு எல்லாம் ஓகே தான அதி!”
“யெஸ் மா நான் உறுதிப் படுத்தாம உங்ககிட்ட சொல்ல மாட்டேனே.”
“தெரியும். இருந்தாலும் கேட்டு கிட்டேன். அப்போ நிச்யதார்த்த வேலை எல்லாம் ஆரம்பிச்சுடலாம் தானா?”
“ம்ம் தேதி பார்த்துட்டீங்களா?”
“ஆமா அதி இன்னும் பதினைஞ்சு நாள்ல. அதிலிருந்து இரண்டு மாசத்தில் கல்யாணம்.”
“ம்ம்..”
“நம்ம கயல் காயூ கல்யாணத்து அப்போவே உனக்குத் தெரியும்..”
“??”
“தேவையில்லாத பேச்செல்லாம் இருக்கத் தான் செய்யும். அதையெல்லாம் நீ கண்டுக்க கூடாது.”
“…”
“உங்ககிட்ட யாராவது எல்லை மீறி பேசினால் கண்டிப்பா நான் சும்மா இருக்க மாட்டேன்.”
“அதி கண்ணா ஒரு இரண்டு நாள் யாரோ என்னவோ பேசட்டும். எனக்கு தேவாவை ரொம்ப பிடிச்சுருக்கு. நீ பேசினியா? அவளுக்கு ஓகே தான?”, என்றதில் அதிரனின் முகத்தில் மென்மை பரவியிருந்தது.
“ஷி இஸ் அ நைஸ் கேர்ள் மா..”, என்றதில் காத்யாயினி மகனைப் பார்த்து புன்னகைத்தார்.
“நல்லது கண்ணா. இந்த கொண்டாட்டம் எல்லாம் ஒரு நாளைக்கு தான் அதுக்கப்பறம் நாம வாழற வாழ்க்கை தான் ரொம்ப முக்கியம்.
சண்டை கோபம் மனஸ்தாபம் எல்லாம் இருக்கும். ஆனால் எல்லாத்துலேயும் இரண்டு பேரும் சேர்ந்து நிக்கணும். அது தான் வாழ்க்கை.”
“…”
“நானும் அப்பாவும் வாழ்ந்த மாதிரி ஒரு நிறைவான வாழ்க்கையை வாழணும் அதி நீங்க.”
“எனக்கு என்னவோ நாங்க உங்க லவ்வையே தூக்கி சாப்பிட்டுருவோம்னு தோணுது.”, என்றவன் மெலிதாய் சிரிக்க ஆச்சரியமாய் புருவமுயர்த்தி புன்னகைத்தார் காத்யாயினி.
error: Content is protected !!