Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்

நிழல்-20

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்

மு.வ விளக்க உரை: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

காரின் வெளியில் தலையைத் திருப்பியிருந்தவள் தவறியும் அதிரனின் புறம் முகத்தைத் திருப்பவில்லை.

அதிரனுமே அந்த நொடியை வெகு நிதானமாய் தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தான்.



Advertisement

வீட்டு வாசலில் கார் நிற்க அதிரனின் புறம் தலையைத் திருப்பியவள் அவனை முழுதாக கண்களுக்குள் நிரப்பிக் கொண்டு கீழேயிறங்கினாள்.

“பை டேக் கேர் ரஞ்சனா..”

“பைங்க.. நாளைக்கு பார்க்கலாம்.”, என்றவள் உள்ளே செல்லும் வரையில் நின்று பார்த்து விட்டு காரை கிளப்பியிருந்தான்.

Advertisement

வீட்டிற்கு வந்தவனுக்காக தங்கைகள் தங்கள் கணவர்கள் மற்றும் மாமியார் மாமனாரோடு காத்திருந்தனர்.

Advertisement

காத்யாயினி தர்மசங்கடமாய் அமர்ந்திருக்க அண்ணன் தங்களை வீட்டில் இருக்குமாறு கூறிச் சென்றதே ஏதோ பிரச்சனை தான் என்பதை உணர்த்தியிருந்தது.

“அண்ணா..”

“மச்சான் உங்க இரண்டு பேருக்கும் என் கல்யாணத்தில் எதுவும் பிரச்சனை இருக்கா?”

Advertisement

“என்ன மச்சான் அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே.”

“ஆனால் உங்க அம்மாவுக்கு பிரச்சனை இருக்கும் போலேயே?”, என்றதில் மகன்கள் தாயை முறைத்தனர்.

“ஊரே பேசுற விஷயத்தை தான் நானும் பேசினேன். இதில் என்ன டா தப்பு?”

“…”

“நம்ம ஜானுவை வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ யாரு என்னனு எதுவுமே தெரியாத குடும்பத்து பொண்ணை மருமகளாக்கிருக்காங்களேனு கேட்டேன்.”

“முதல் விஷயம் என் கல்யாணம் என் முடிவு அதைப் பத்தி நீங்க கருத்து சொல்லவே தேவையில்லை.

இரண்டாவது அதை எங்கம்மாகிட்ட பேசினது.
என் கல்யாணத்தால உங்க குடும்பத்தில் எதாவது குழப்பம் வரப் போகுதா?

அப்பறம் நான் யாரை கல்யாணம் பண்ணினால் உங்களுக்கு என்ன? அப்பறம் உங்க பொண்ணை வேண்டாம்னு சொன்னது நான் தான்.

இதை அவங்ககிட்ட பேசி எந்த பயனும் இல்ல. என்கிட்ட சொல்லுங்க நான் பதில் சொல்றேன்.”, என்றவன் கரங்களை பாக்கெட்டினுள் நுழைந்து நிமிர்ந்து நிற்க மச்சான்கள் இருவரும் அவனருகில் வந்து நின்றனர்.

“மச்சான் அவங்க ஏதோ புரியாம பேசுறாங்க.. விடுங்க..”

“பேசணும்னால் நான் இன்னும் நிறைய பேசலாம். உங்க இரண்டு பேருக்காக தான் அமைதியா இருக்கேன்.

இன்னொரு தடவை என் வாழ்க்கையைப் பத்தி எந்தப் பேச்சும் வராம இருந்தா நல்லது.”, என்றவன் தங்கைகளின் மாமனாரிடம் திரும்பி,

“ஸாரி மாமா. இப்போ இதை பேசலைனால் கல்யாணத்தில் இன்னும் பிரச்சனை பெருசு தான் ஆகும்.”, என்றதைப் புரிந்து கொண்டவராய் அதிரனுக்கு தலையசைத்து அனைவரோடும் கிளம்பியிருந்தார்.

அவர்கள் கிளம்பியதும் சட்டையின் கை பட்டனை அவிழ்த்து மடக்கி விட்ட வண்ணம் தாயின் அருகில் அமர்ந்தான்.

“நான் தான் பார்த்துக்குறேன்னு சொன்னேனே அதி. அவங்களை விட எனக்கு உன்னை நினைச்சு தான் டென்ஷன். தேவா வந்த பிறகாவது நீ மாறுவியானு பார்க்கலாம்.”, என்றதில் அதிரனின் புன்னகைக்கான அர்த்தம் காத்யாயினிக்கு அந்நேரம் புரியாமல் போயிருந்தது.

தேவாவும் அவினாஷும் வெகு நேரம் நிச்சயதார்த்தத்தை பற்றி பேசிய படி அமர்ந்திருந்தனர்.

“அவங்க எல்லாருமே ரொம்ப நல்ல டைப் க்கா.. சாருகேஷ் மச்சான் என்னை தனியா எங்கேயும் விடல. மேபி யாரும் தேவையில்லாத எதையும் பேசுவாங்களோனு நினைச்சாரோ என்னவோ.

கயல் அண்ணி காயத்ரி அண்ணி அவங்க ஹஸ்பெண்ட்ஸ் எல்லாருமே நல்லா பழகுறாங்க.”, என்று தோன்றியதெல்லாம் பேசிக் கொண்டிருந்தவனின் தலையை தேவா வருட என்னவென்பதாய் தமக்கையை ஏறிட்டான்.

“கல்யாணம் முடிஞ்ச அப்பறம் நீ இங்கே தனியா எப்படி டா சமாளிப்ப?”

“…”

“நான் மாமாகிட்ட என்ன பண்ணலாம்னு கேட்குறேன்.”

“வேண்டாம் கா.. எப்படியும் வேலை கிடைச்சுரும் நான் சென்னை போகலாம்னு இருக்கேன்.”

“அவி!!”

“அக்கா உன் கல்யாணத்துக்காக சொல்லல. எப்படியிருந்தாலுமே ஐடி வேலைனால் சென்னை தான போய் ஆகணும்.”

“…”

“ஒரு இரண்டு மூணு வருஷம் அங்கே இருந்துட்டு அப்பறம் இங்கே வந்துரேன். சோ எனக்கும் பழகிடும்.”

“..”

“நான் பத்திரமா இருந்துப்பேன் கா. கவலைப்படாத.. இதோ இருக்கு சென்னை நினைச்சால் ஓடி வந்துருவேன். உன்னைப் பார்க்காம என்னால மட்டும் இருந்துர முடியுமா?”

“ரொம்ப பெரிய மனுஷன் ஆயிட்ட அவி..”, என்றவளுக்கு தம்பியை நினைத்து கவலையும் பெருமையும் ஒரு சேர எழுந்தது.

காலை எழுந்தவள் எப்போதும் போல் அதிரனுக்கு காலை வணக்கம் அனுப்பி விட்டு வேலையைக் கவனிக்கச் செல்ல இரண்டு நிமிடங்களில் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் கேட்டு போனைப் பார்த்தவளுக்கு கண்கள் விரிந்தன.

அதிரன் Day 1 என்று கூறிப்பிட்டு ஒரு பாடல் வீடியோவை அனுப்பியிருந்தான்.

அதைப் பார்த்தவளுக்கு புன்னகையும் வெட்கமும் போட்டி போட மீண்டும் மீண்டுமாய் அதைப் பார்த்த படி நின்றிருந்தாள்.

இவள் ரதியினம் குழல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகை படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

ஒரு பதிலும் அனுப்பாமல் தேவா அலுவலகத்திற்கு கிளம்பத் தயாராக இங்கு அதிரனின் முகத்தில் மெலிதான புன்னகை குடி கொண்டிருந்தது.

எப்போதும் போல் உணவு மேசையில் தாயும் தம்பியும் இருக்க காலை வணக்கத்தோடு வந்து அமர்ந்தான்.

சாருகேஷ் அவ்வப்போது அண்ணனைக் கவனித்த படி உணவில் கவனம் செலுத்த அதிரன் அவனிடம்,

“என்ன டா? எதுவும் வேணுமா?”

“இல்ல ண்ணா..”

“அப்பறம் எதுக்கு என்னையேப் பார்த்துட்டு இருக்க?”, என்றதில் காத்யாயினி சிறிய மகனைப் பார்த்தார்.

“இல்ல நீங்க இன்னைக்கு வித்தியாசமா தெரியுறீங்க ண்ணா அதான்.”

“நானா? எப்பவும் போல தான இருக்கேன்?!”, என்றவன் தாயைப் பார்க்க அவர் சிரிப்போடு உணவை வாயில் வைத்து மென்று கொண்டிருந்தார்.

“ம்ஹும். எனக்குத் தெரியாதா என் அண்ணாவைப் பத்தி கண்டிப்பா ஏதோ வித்தியாசமா இருக்கு.”

“என்ன மா சொல்றான் இவன்?”

“அது கல்யாண மாப்பிள்ளை களை டா கேஷா.. அப்படி தான் இருக்கும்.”, என்றதில் சாருகேஷ் அண்ணனைப் பார்த்து கண் சிமிட்டினான்.

அதிரன் ஒன்றும் கூறாமல் உணவை முடித்து எழுந்து கொள்ள கை கழுவும் நேரம் அவனறியாமல் கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்து நகர்ந்திருந்தான்.

அலுவலகத்தில் தேவாவிற்காக பெண்கள் அணி பார்க்கிங்கிலேயே காத்திருந்தது. உள்ளே வந்தவள் புன்னகையோடு தலைக் கவசத்தை கழட்டி வைத்து விட்டு கைப் பையோடு அவர்கள் அருகில் வந்தாள்.

“வாழ்த்துக்கள் மேடம்…”, என்று அனைவரும் கத்த பதறிப் போனவளாய் அனைவரையும் அமைதியாகுமாறு செய்கை செய்தாள்.

“ஒண்ணுமே சொல்லல. நேத்து க்ரூப் மொத்தமும் உங்க போட்டோ தான். இப்போவாவது விஷயத்தைச் சொல்லு தேவா.”

“இது அரேண்ஞ்ச்ட் மேரேஜ்..”

“ஏதே!!!! இதை நாங்க நம்பணும்?”

“ஹே நிஜமா தான் தரகர் மூலமா போட்டோ ஜாதகம் அவங்களுக்கு கிடைச்சு தான் பேச்சு ஆரம்பமாச்சு..”

“வாவ் இந்த கதையில் எல்லாம் வர மாதிரி ஒரே நாள் வாழ்க்கையே மாறிடுச்சுனு சொல்லு..”

“..”

“இந்த கம்பெனி முதலாளியை கல்யாணம் பண்ணிக்க போற அப்பறம் ஏன் இன்னும் வேலைக்கு வர்ற நீ?”

“கல்யாணம் இன்னும் முடியலையே அதுவரை நான் இங்கே எம்ப்ளாயி தான்.”

“ஹே அதுவரை சாரைப் பார்க்காம இருக்க முடியுமா அதுக்காக தான். இல்ல தேவா..”, என்றதில் அனைவருமாய் சிரித்தனர்.

பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் கடக்க அதிரனின் கார் உள்ளே வந்திருக்க பூட்டியிருந்த கார் கண்ணாடி வழி அனைவரையுமாய் ஒரு பார்வை பார்த்துச் சென்றான்.

அனைவரும் அங்கிருந்து ஓட்டம் எடுத்திருக்க தேவா புன்னகையோடு அவனுக்காக மின்தூக்கியின் அருகில் காத்திருந்தாள்.

பார்வை மொத்தமும் அவள் மேல் பதித்த வண்ணம் வந்தவன் அவளோடு மின்தூக்கியில் ஏறியிருக்க தேவா தன் கையிலிருந்த உணவுப் பையை அவனிடம் நீட்டினாள்.

அதை வாங்கிக் கொண்டவன் என்னவென்பதாய் அவளைப் பார்க்க,

“ப்ரிஞ்சி சாதம். நேத்து விரும்பி சாப்பிட்டீங்களே. அதான் உங்களுக்கும் சேர்த்து கொண்டு வந்தேன்.”

“நான் வாயைத் திறந்து அப்போ பேசவே வேண்டாம் உன்கிட்ட..”

“நல்லது தானே சண்டையே வராது.”

“ஓ சண்டையெல்லாம் போடுவியா நீ?”

“புருஷன் பொண்டாட்டி சண்டையில்லாம இருக்குமா என்ன?”

“சண்டை போடுற வேலையை நீ பார்த்துக்கோ சமாதானம் பண்றதை நான் பார்த்துக்குறேன்.”, என்ற நேரம் லிப்ட் கதவு திறக்க அவன் புஜத்தில் லேசாய் அடித்த வண்ணம் தனதறைக்குள் நுழைந்து கொண்டாள் தேவா.

சாருகேஷ் கல்லூரியில் மொத்தமும் அதிரனின் நிச்சயத்தைப் பற்றிய பேச்சு தான். அதிலும் பெண் அவர்கள் கல்லூரியில் பணிபுரிந்தவள் என்றதும் யார் என்ன என்ற அனைத்து விவரங்களும் அலசி ஆராயப்பட்டுக் கொண்டிருந்தது.

“ஐஷு கடைசியில் நம்ம ஹெச் ஆர் தான் எங்க அண்ணி..”, என்றவன் புகைப்டத்தைக் காட்ட ஐஸ்வர்யா அவனை முறைத்த படி அமர்ந்திருந்தாள்.

“என்ன டி?’

“என்னை பங்ஷனுக்கு கூப்பிட்டியா நீ?”

“எதுக்கு உன்னை நாடு கடத்தவா?”

“டேய்!!”

“பின்ன வந்தவங்க எல்லாரும் போட்டோஸ் வீடியோஸ்னு ஷேர் பண்ணி வைச்சுருக்காங்க. உங்க வீட்டில் பார்த்தா பரவாயில்லையா உனக்கு?”

“அதுக்காக பேருக்கு கூட கூப்பிடலை டா நீ..”, என்றவள் உண்மையாகவே வருந்திக் கூறினாள்.

“ஐஷு உங்க வீட்டில் எவ்வளவு ஆசையோட உன்னை இந்தப் படிப்பு படிக்க வைக்குறாங்க.

இந்த நிலைமையில் என்னால உன் பேர் கெட்டு போறதுக்கு நானே எப்படி காரணமா இருப்பேன்?

நம்ம விஷயத்தை நாமளே வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணினால் தான் அழகு.

அதை விட்டுட்டு யாரோ பார்த்து போய் ஏதேதோ சொல்லி மனக்கசப்பு வந்து பேசினால் நல்லாவா இருக்கும்?”

“…”

“படிப்பை முடிக்க போறோம் நம்ம ஆசையை நாம அடைய போறோம். எப்போ உன் வீட்டில் பேசணும்னு சொல்றியோ நான் கட்டாயமா வந்து பேசுறேன். எங்க வீட்டிலேயும் சொல்லிடுறேன்.

அப்பறம் நீ எங்க கூப்பிட்டாலும் வரேன். உன்னையும் எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போறேன். ஓகே தான?”

“…”

“என்ன டி இவ்வளவு தூரம் சொல்றேன்.”

“பேப் நீ ரொம்ப நல்லவன் டா..”, என்றவள் அவனது கரத்தை இறுகப் பற்றி தோள் சாய்ந்து கொண்டாள்.

“ம்ம் இப்படியெல்லாம் சொன்னால் ஒத்துக்க முடியாது..”

“ம்ம் அப்படியே கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்க விட்டுருவ பாரு.. போடா..”, என்றதில் கண்சிமிட்டிச் சிரித்தான் சாருகேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!