Skip to content
Post Views: 1,829
சோபாவில் பார்கவி தலை சாய்ந்து அமர்ந்திருக்க. அவளின் அருகில் வந்தவன். “பாரு என்னாச்சு” என்றான்.
அவளோ அவனை நிமிர்ந்து பார்த்து. இவன் எப்படி இந்த நேரத்துக்கு இங்கே வந்தான்
Advertisement
என்றவள். கண்களை துடைத்துக்கொண்டு அவள் அறைக்கு செல்ல போக. “பார்கவி” என்று அன்பு சத்தமாக அழைக்க.
அவளோ அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நிற்க.
Advertisement
Advertisement
“இப்போ எதுக்கு அழுத சொல்லு என்னாச்சு சொல்லுமா” என்றான்.. மீண்டும் அழுதவளை, “வா இங்கே” என்றவன், அவளின் கைபிடித்து அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தவன்..
ஸ்ரீஜெயத்திற்கு போன் போட்டு “உங்க பொண்ணு அழுகுறா என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறா, நீங்களே கேளுங்க” என்று போனை பார்கவிடம் தர.
Advertisement
அவன் கொடுத்த போனை வாங்கியவள் “அப்பா, ஸ்ரீப்பா” என்று பார்கவி அழும் சத்தம் போனில் ஸ்ரீஜெயத்திற்கு கேட்க.
“என்னடா ஆச்சு ஏன்மா அழுகுற சொல்லுடா”… என்றார்.
“ஸ்ரீப்பா” என்றவள் இன்று ஹாஸ்பெட்டலில் நடந்ததை சொல்ல ஆரம்பித்து இருந்தாள்..
“இரண்டு நாள் முன்னாடி ஒரு பேசன்ட் வந்தார், கிட்ணி பிரச்சனையின்னு சொன்னார், நானும் மருந்து கொடுத்தேன்.
அதை வாங்கிட்டு போயிட்டார், இன்னைக்கு வந்து, நீங்க குடுத்த மருந்து எனக்கு சாப்பிட்டா எனக்கு ஒத்துக்க மாட்டேங்குது, இந்த மெடிச்சனை ரிட்டர்ன் வாங்கிகோங்க” என்றார்.
“நாங்க ஏற்கனவே சொல்லி இருந்தோம், மெடிசன் ரிட்டர்ன் கிடையாதுன்னு, ஒருத்தர் ஒரு முறை நான் குடுத்த மெடிசனை ஓபன் பண்ணி யூஸ் பண்ணிட்டா, ரிட்டன் கிடையாதுண்ணு, இது ஆங்கில மருந்துவம் கிடையாது மாத்திரை மாதிரி யூஸ் பண்ணிட்டு திருப்பி கொடுக்க, நான் கொடுத்தது எல்லாம், மூலிகை பொடி, வேர் பொடி, கசாயம், நீங்க அந்த பொடியில் ஓபன் பண்ணி யூஸ் பண்ணிட்டு வேற ஏதாவது கலந்து கொடுத்தா, நாங்க அத எப்படி அடுத்த வங்களுக்கு கொடுக்க முடியும் என்றேன்.
அவரோ எனக்கு இந்த மருந்து சேரல காசு ரிட்டன் பண்ணுங்க என்று பிரச்சனை பண்ணாரு,
முதலில் நான் முடியாதுண்ணு தான் சொன்னேன், அவரு பிரச்சனை பண்ணுற மாதிரி தெரியவும். பணம் குடுத்துடலாம் என்று முடிவு பண்ணி பணம் கொடுத்தா, அத வாங்காம, எனக்கு உங்களால தான் உடம்பு சரியில்லாம போச்சு, அதனால இரண்டு லட்சம் பணம் வேணுமாம், தரலண்ணா ஹாஸ்பெட்டல அடிச்சு நெருக்கி விடுவோமுன்னு சொன்னான்.
எனக்கு கோபம் வந்துச்சு, நீ என்ன வேணுமுன்னாலும் செய்யின்னு சொன்னேன்..
அவனோ நம்ம ஹாஸ்பெட்டல் பக்கத்துல ஒரு ஹோட்டல் இருக்குல, அந்த ஹோட்டல் காரனும் இவனும் பிரண்ட் போல, நம்ம ஹாஸ்பெட்டல் வச்சு இருக்குறதே அந்த ஹோட்டல் காரனுக்கு பிடிக்காது, ஏற்கனவே என்கிட்ட நிறைய பிரச்சனை பண்ணி இருக்கான், நம்ம ஹாஸ்பெட்டல் வர பேஷன்ட் யாரவது தெரியாம அவன் ஹோட்டல் பக்கம் டூவிலர் பார்க் பண்ண உடனே சண்டைக்கு வருவான். அதனால நான் வாச்மேன் கிட்ட சொல்லி, அந்த ஹோட்டல் கிட்ட யாரும் வண்டி நிறுத்தாம பாத்துகிட்டேன்..
இன்னைக்கு பிரச்சனை பண்ண ஆளும், அந்த ஹோட்டல் காரனும் பிரண்டு போல எனக்கு தெரியாது.
என்கிட்ட மருந்து வாங்கி வேண்டாமுன்னு சொன்னானே அவன் போய் அந்த ஹோட்டல் காரனை கூட்டிட்டு வந்து என்கிட்ட சண்டை போட்டு, ஹாஸ்பெட்டலில் உள்ள எல்லா பேஷண்டை வெளியே போக சொல்லி பிரச்சனை பண்ணி, என்னையும் ஹாஸ்பெட்டலில் இருந்து வெளியே தள்ளி, ஹாஸ்பெட்டல் இங்கே நடக்க கூடாது, எங்களுக்கு இரண்டு லட்சம் பணம் தந்துட்டு ஹாஸ்பெட்டலை திற என்று சொல்லி “ஹாஸ்பெட்டலை பூட்டிட்டாங்க பா” என்று அழுது கொண்டே பார்கவி சொல்ல..
கதவு வேகமாக திறக்கும் சத்தம் கேட்க. பார்கவி திரும்பி பார்த்தாள், அன்பு கதவை வேகமாக திறந்து வெளியே செல்வதை பார்த்தவள்.
“அப்பா அன்பு கோபமாக போறாங்க. நான் அவங்க கூட போறேன்” என்றவள் அன்பு பின்னாடி ஓடியவள். அன்பு ஏறிய லிப்ட் கதவு மூடும்முன் அன்பிடம் சென்று.
“அன்பு வேண்டாம் அன்பு, அவனுங்க பொறுக்கி மாதிரி தெரியுது, நாம போலிஸ் கம்ப்பிளைன்ட் பண்ணலாம்” என்று சொல்ல.
அவள் சொல்லியதை காதில் வாங்கதவன். லிப்ட் திறந்தவுடன் காரை நோக்கி செல்ல. பார்கவி அன்புவின் கையை பிடித்தவள், “அன்பு, அன்பு பிரச்சனை வேண்டாம் நாம போலிஸ் ஸ்டேசன் போயி கம்பிளைன்டு பண்ணலாம்” என்று பேசிக்கொண்டே காரில் வர..
அவள் பேசியதற்கு ஒன்றும் பேசாமல் வந்தவன். காரை அவள் ஹாஸ்பெட்டல் முன் நிறுத்தியவன்..
பூட்டி இருந்த ஹாஸ்பெட்டலை பார்த்தவன். யாருக்கோ போன் போட்டு வர சொல்லி விட்டு. பூட்டிய ஹாஸ்பெட்டலை திறக்க போக. அங்கே பார்கவியிடம் சண்டை போட்டவன் நின்றிருந்தான்.
பார்கவிவுடன் ஒரு ஆண்மகன் வந்து இருப்பதை பார்த்து சிரித்தவன்.. “ஓ உன் ஹஸ்பெண்டை கூட்டிட்டு வந்தீயா, என்று ஹிந்தியின் கேட்டு திரித்தவன். அன்புவை பார்த்து “சோட்டா பையா” என்று ஹிந்தியில் சொல்லி அன்புவை காட்டி சிரிக்க.
அன்பு கதவை திறக்க முடியாமல்,
“நம்ம பூட்டா” என்றான்..
“இல்லை” என்று தலையாட்ட.
ஹாஸ்பெட்டல் பக்கத்தில் உள்ள ஒரு கம்பியை எடுத்து, ஹாஸ்பெட்டலில் பூட்டை உடைக்க முயற்சி பண்ண.
பார்கவியிடம் பிரச்சனை பண்ணிய இருவரும் வந்து அன்பிடம் “ஏய் இரண்டு லட்சம் காச குடுத்துட்டு கதவை திற” என்று ஹிந்தில் பேச.
“இரண்டு லட்சம் வேணுமா உங்களுக்கு” என்றவன், பார்கவிடம் இவர்களை காட்டி “இவங்களா” என்று கேட்க..
“ஆமாம்” என்ற அடுத்த நொடி அன்பு அந்த இருவரையும் அடிக்க.
அந்த இருவரும் அன்பு ஏதாவது பேசுவான், காசு கிடைக்கும் என்று நினைத்தார்கள். அவன் அடிப்பான் என்று நினைக்க வில்லை..
“ஏய் எங்களை அடிச்சீயா தமிழ் வாழா” என்றவர்கள்.. இருவரும் சேர்ந்து அன்புவை அடிக்க,.
அன்புக்கு இருவர் என்பதால் முதலில் அவர்களை சமாளிக்க முடியாமல் அடி வாங்கியவன்.. பின்பு இருவரையும் அடிக்க.
பார்கவி அன்புவை சுத்தி, சுத்தி வந்தவள் “அன்பு வேண்டாம் அன்பு” என்று பார்கவி அன்புவிடம் செல்ல..
“தூரமா போ பார்கவி” என்றவன் அவளை தள்ளி விட..
அவளுக்கோ அவனுக்கு ஏதாவது ஆகிவிட போகுது, இல்லை இவன் கோபப்பட்டு அவர்களை ஏதாவது செய்தால். பிரச்சனை பெரியதாக ஆகிவிடுமோ என்று பயந்து “அன்பு, அன்பு” என்று அவனை சுத்தி சுத்தி வர..
மூன்று பேரும் சரிக்கு சரி சண்டை போட, ஒரு கட்டதுக்கு மேல் அன்பு இரண்டு பேரையும், அடித்து கீழே தள்ளி மிதித்து விட்டு.. அங்கே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து தூக்கி அவர்கள் மேலே போட போக..
“அன்பு” என்று கத்தியிருந்தாள் பார்கவி. அவள் கத்திய சத்தத்தில் அவளை திரும்பி பார்த்தவன்..
அவள் “வேண்டாம் அன்பு, அன்பு” என்று அழுவதை பார்த்தவன். கல்லை கீழே போட்டு.”வா இங்கே” என்று பார்கவியை அழைக்க.
வேகமாக வந்தவள், அவன் அருகில் நின்று கொள்ள.. அவளை தோளோடு அணைத்து கொண்டு “இவ என் வைய்ப், இனிமே ஏதாவது வம்பு இவகிட்ட பண்ணிங்க, கொண்ணு போட்டுடுவேன் சாக்கிரதை” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அன்பு போன் பண்ணியிருந்த போலிஸ் காரர் வந்து விட..
அடிவாங்கி கீழே கிடந்தவர்களை காட்டியவன் “இவங்க தான் என் வைய்பு கிட்ட காசு கேட்டு தொந்தரவு பண்ணது”..
“நாங்க பாத்துக்கறோம் அன்பு சார்” என்று கீழே கிடந்தவர்களை போலிஸ் காரர் எழுப்பி சீப்பில் ஏத்த..
தன் தோளில் முகம் புதைத்து அழுது கொண்டு இருக்கும் பார்கவியை பார்த்தவன். ‘பாரு அழதா” என்றவன். காருக்கு அழைத்து வந்து காரில் ஏற்றியவன் காரை கிளப்ப..
பார்கவியின் போன் ஒலித்தது. ஸ்ரீஜெயம் தான் அழைத்து இருந்தார்.. போனை ஆன் பண்ணி காதில் வைத்தவள் “ஸ்ரீப்பா” என்றாள்..
“என்னாச்சுடா”..
அழுது கொண்டே அனைத்தையும் சொல்லியவள். “அவங்க இரண்டு பேரையும் போலிஸ் டேஷன் போயிட்டாங்க பா, பிரச்சனை முடிஞ்சது” என்று சொல்ல.
“சரிடா, சரிடாமா அப்பா நைட்டு மும்பை வர்றேன் நீ பயப்புடாத” என்று சொல்ல.
“சரிப்பா நைட்டு வாங்க” என்றவள்..
நிமிர்ந்து அன்புவை பார்த்தாள். கோபம் குறையாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான் அன்பு. “ஏன் கல்லை தூக்கி போட போணீங்க , அவங்களுக்கு ஏதாவது ஆகியிருந்த”..
“செத்து போட்டும், உன்ன இப்படி அழ வச்சவங்களை சும்மா விட சொல்லுறீயா, இனி உன் கிட்ட வர பயப்படனும், அன்பு பொண்டாட்டி க்கிட்ட எவனாவது இனி வம்பு பண்ணா கொண்ணு போட்டுடுவேன்” என்றவன் வீடு வந்து இருக்க. காரை நிறுத்தியவுடன் கிளம்பியிருந்தான்..
பார்கவி அன்பு பேசியதே காதில் இன்னும் கேட்டுகொண்டே இருக்க. மெல்ல புன்னகை வந்தது அவள் முகத்தில். அன்பு பேசியது, மனதிற்கு அவ்வளவு இதமாக இருந்தது, அவன் பேசிய என் பொண்டாட்டி, இனி எவனாச்சும் வம்பு பண்ணட்டும் என்று அவள் மேல், அவன் வைத்துள்ள பாசம், அக்கரை தெரிய இத்தனை நாள் அவன் முகத்தை கூட சரியாக பார்கவில்லையே என்று அவளோடு, அவளே பேசிக்கொண்டு இருக்க அன்பு அவன் அறைக்கு சென்றிருந்தான்.
காரில் தனியாக இருப்பதை உணந்தவள் இறங்கி வீட்டுற்கு வர.
அன்பு ஸ்ரீஜெயத்திற்கு போன் போட்டு கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.. “என்னப்பா வீட்டுக்கு வந்துட்டீங்களா”…
“வந்துட்டோம், நீ இப்போ எங்கே இருக்க மாம்ஸ்”?..
“நானா ஏர்போர்ட்டுக்கு போயிட்டு இருக்கேன்”..
“எதுக்கு ஏர்போர்ட்கு நீ வர” என்றான் அன்பு.
“டேய் நான் மும்பை வரன்டா, என் பொண்ணு ரொம்ப பயந்து அழுதடா அவளை சமாதானம் பண்ணவேண்டாமா”?..
“நீங்க ஒன்னும் வரவேண்டாம் எல்லாம் நான் பாத்துப்பேன், இப்ப தான் என் பொண்டாட்டி என்கிட்ட பேசியிருக்கா” என்றான்.
“சரிடா, சரி உன் பொண்டாட்டியை நீயே பாத்துக்கோ, நான் என்ன பண்ணனும் சொல்லு”..
“திரும்பி விருதுநகர் போ மாம்ஸ், நானும் என் பொண்டாட்டியும் ராசியான உடனே சொல்லுறேன் அப்போ வா மாம்ஸ்” என்று சிரிக்க.
“சரிடா, நல்லா இரு” என்றவர் சிரித்துக்கொண்டே போனை வைத்தார்.
அன்புவின் அறைகதவு திறக்க, அன்பு போனை காதில் வைத்திருந்தவன் போனை ஆப் பண்ணி விட்டு திரும்பி பார்த்தான்.
பார்கவி அன்புவின் அறைகதவை திறந்து கொண்டு கதவின் அருகே நிற்க.
அன்பு கட்டிலில் சென்று அமர்ந்தவன், “வா” என்று பார்கவியை அழைக்க.
மெல்ல அவன் அருகில் வந்து அமர்ந்தவள் அமைதியாக இருந்தாள், என்ன பேச, ஏது பேச என்று நினைத்தவள் அவன் முகம் பார்க்க. “எப்படியோ என் முகத்தை பாத்துட்ட போல” என்றவன்.
அவனின் அடிப்பட்ட கையை பிடித்துக்விட்டு கொண்டு இருந்தான்.
சிவந்து இருந்த அவன் கையை பார்த்தவள்.
“அன்பு, அன்பு” என்றவள் மீண்டும் அழுது கொண்டே “எல்லாம் என்னால தானே’ என்றவள். அவன் உடம்பில் அடிப்பட்ட இடத்தை தொட்டு பார்த்து கண்கலங்கி அவனை பார்க்க..
“எல்லாம் சரியாகிடும் பாரு, நீ ஏன் முதலில் என்கிட்ட சொல்லல்ல, முதலிலே சொல்லியிருந்தா எவ்வளவு தூரம் வந்து இருக்காது” என்றான்..
“நானே சரி பண்ணிடலாமுன்னு நெனச்சேன் அன்பு, அது இவ்வளவு பெருசா ஆகும்முன்னு தெரியாது” என்றவள் அவனின் காலை பார்க்க இரத்தம் வந்து உரைந்து இருக்க அதை தொட்டு பார்த்தவள்.
“அன்பு வாங்க ஹாஸ்பெட்டல் போலாம், நிறைய இடத்துல அடிப்பட்டு இருக்கு” என்றாள்..
“நீ டாக்டர் தானே எனக்கு வைத்தியம் பாரு” என்றான்..
“என்னால இப்போ முடியாது அன்பு” என்றவளின் கை நடுங்க.
“என்னாச்சு பாரு” என்றவன் அவளின் கையை எடுத்து அவன் கையோடு இணைத்து வைத்து கொண்டாவன்.
“ஏன் என்னாச்சு” என்றான்.
“ரொம்ப பயந்துட்டேன், உங்களை அவனுங்க ஏதாவது பண்ணியிருந்தா” என்றவளை.
“ஏய் அவனுங்க என்ன பண்ணியிருவானுங்க என்னை, நான் நல்லா தானே இருக்கேன் இட்லி” என்றவன் அவளின் கன்னத்தை கையில் பிடித்து முத்தம் வைக்க..
அவளோ இட்லி என்று தனது சிறுவயது பட்ட பெயரை சொல்லி அழைத்தவுடன். அவனிடமிருந்து விலகியவள்.
“எப்படி இந்த பேர் உங்களுக்கு தெரியும்” என்றாள்..
அவனோ அவளை பார்த்து சிரிக்க..
“சொல்லுங்க அன்பு என்னை சின்ன வயசுல இப்படி தான் கூப்பிடு வாங்க, உங்களுக்கு எப்படி இந்த பேரு தெரியும்”.. என்றவளிடம்.
“வச்சவனுக்கே பேர் தெரியாதா இட்லி”.. என்றவன் மீண்டும் அவளின் இட்லி போன்ற கன்னத்தை பிடித்து முத்தம் வைக்க..
அவனை ஆழ்ந்து பார்த்தவள் ” நீ.. நீ.. என் குட்டா வா” என்றாள் அவனை பார்த்து.
“ஆமாம்” என்று தலையாட்டியவனை தாவி அணைத்துக்கொண்டாள் பார்கவி….
error: Content is protected !!