Skip to content
Post Views: 4,240
வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்றார்கள் மாசிலாமணியும் அன்னம்மாவும் காலை உணவும் உண்டுவிட்டு “எங்க இருக்கா” என்று கேட்டனர் பெரியவர்கள்.
Advertisement
ஒரு அறையைக் காட்டினர் “பொழுதனைக்கும் அதுக்குள்ள தான் இருக்கா பிள்ளைக்குப் பால் குடுக்காம அது வேற பிரச்சனை வலி தாங்கமுடியாம அவளே கிளம்பிட்டா, என் தலை எழுத்து நான் என்ன செய்ய மனசு கேக்கல கூடவே போனேன் அங்க டாக்டர் அதுக்கு மேல திட்டுறாங்க இங்க நடக்குற கூத்தையெல்லாம் அவங்ககிட்ட சொல்ல முடியுமா”.
Advertisement
Advertisement
“எல்லாத்தயும் கேட்டுகிட்டு வந்தாச்சு தப்பு செஞ்சது எல்லாம் இவ நாங்க என்னமோ இவளுக்குத் துரோகம் செஞ்சிட்ட மாதிரி எங்ககிட்ட முறுக்கிக்கிட்டு திரியிறா” என்று புலம்பித் தள்ளினார் அன்னம்மா.
Advertisement
“சரி இரு நாங்க பேசுறோம்” என்ற பெரியவர்கள் அவள் அறைக்குள் நுழைந்தனர் இருவரையும் கண்டவள் ஒரு நொடி தடுமாறி எழுந்து நின்றாள்.
“உன் அம்மாவைப் பெத்தவங்க நாங்க வந்து ஒருமணி நேரம் ஆச்சு எட்டி பாக்கவும் இல்ல என்னனு கேட்கவும் இல்ல அப்படி எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசனை” என்று கட்டிலில் அமர்ந்தனர் அவள் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
“இப்படியே உன் இஷ்டத்துக்கு ஆடிக்கிட்டு இருக்க முடியாது நாங்க யோசிச்சு ஒரு முடிவு எடுத்திருக்கோம் அதுப்படி கேட்டு நடக்குறதுன்னா இந்த வீட்டில நீ இருக்கலாம் இல்லனா உன் வழிய பாத்து நீ போய்டணும், காலம் முழுசும் உங்களை உக்கார வெச்சு சோறு போட வேண்டிய எந்த அவசியமும் உன்ன பெத்தவங்களுக்கு இல்ல”.
“படிக்க வெச்சிருக்காங்க நீ செஞ்ச தரங்கெட்ட வேலைக்கு உன்னை வெட்டிப் போட்டிருக்கணும் அதையும் மன்னிச்சு உனக்குக் கல்யாணமும் செஞ்சு வெச்சாங்க இப்போ அத்துக்கிட்டு வந்து நிக்குற, இதுக்கு மேல நாங்க சொல்றதை நீ கேக்கணும் இல்லையா வீட்டை விட்டு வெளில போய் எப்படியோ நாசமா போ”.
“ஆனா இங்க இருக்க முடியாது ஆச்சிக்கு கல்யாணம் பேசிட்டு இருக்கோம் உன்னைய வீட்டில வெச்சுகிட்டு அவளுக்குக் கல்யாணம் செஞ்சா நீ எங்களை நிம்மதியா வாழ விட மாட்ட உன்னையவே சுத்தி சுத்தி வந்திட்டு இருக்க முடியாது உன்னால அவளுக்குக் கல்யாணம் பேசுறதே பெரும் பாடா இருக்கு, தப்பெல்லாம் நீ செஞ்சிட்டு அந்தத் தண்டனையை நாங்க சுமக்கணுமா” என்றவர்.
“உனக்குக் கல்யாணம் பேசப் போறோம்” என்க.
அவள் அதிர்ந்து விழித்தாள் “கல்யாணமா? அதெல்லாம் முடியாது” என்றாள்.
“உன்கிட்ட அனுமதி கேக்கல இதைச் செய்யப் போறோம்னு சொல்றோம் அவ்ளோதான் நான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன் நாங்க சொல்றதை கேட்டா இங்க இருக்கலாம் இல்லையா போயிட்டே இரு வேற கல்யாணம் வேண்டாம்னா நீ ஆசை பட்டுக் கட்டிக்கிட்டியே உன் அத்தை மவன் அவன்கூட உன் பிள்ளையையும் தூக்கிட்டு போய் வாழப்பாரு போறியா” என்க.
அவள் முகத்தில் அவ்வளவு வெறுப்பு வன்மம் “முடியாது” என்றாள் ஆங்காரமாக.
“எடு வெளக்கமத்த… என்னடி குரலை உசத்துற வகுந்துபுடுவேன் இந்த ஆட்டம் எல்லாம் வேற எங்கயாவது வெச்சுக்கோ இன்னும் உன் அப்பா ஏன் உன் மேல கை வைக்காம இருக்கார் தெரியுமா அவர் அடிச்சா பரலோகம் போய்டுவ அதான் பேசாம இருக்காரு உன் மேல அவ்வளவு கொலைவெறில இருக்காரு”.
“தெரியாமத்தான் கேக்குறேன் இவ்ளோ கிறுக்குத்தனம் செஞ்சியே என்னடி பிரோயோசனம் அவனை ஆச்சிக்கு விட்டுகுடுக்க கூடாதுன்னு கட்டிக்கிட்டியே அவனோட ஒழுங்கா வாழ்ந்தியா அவன் மூலமா பெத்துக்கிட்ட பிள்ளையை ஒரு நாள் ஒரு பொழுது ஆசையா கொஞ்சியிருப்பியா”.
“தாய் பால் கூடக் கிடைக்காம அந்தப் பிஞ்சு ஏங்கி கிடக்குதே நீலாம் நல்லா இருப்பியா” என்றவருக்கு அழுகையில் பேச வரவில்லை விழிகளைத் துடைத்துத் தன்னை நிலைப்படுத்தியவர் “இங்க பாருடி அடுத்த வாரம் உன் சித்தி வாரா உங்க அம்மாபோல இல்ல அவ தெரியும்ல வௌக்குமாரை எடுத்தான்னா உன் உடம்பை சல்லடையாக்காமா விடமாட்டா அன்னைக்கே உன்னை அடி வெளுத்திருப்பா மாசமா இருந்ததால உன்மேல கை வைக்கல”.
“ஆனா நீ இன்னைக்கு அந்தப் பிள்ளையையே தூக்கி போட்டுட்ட இனிமே உனக்கு எந்தக் கரிசனமும் கிடையாது சொல்றதை கேட்டா உனக்கு நல்லது இல்ல அடி மிதி வாங்கித்தான் கேப்பேன்னா நாங்களும் தயாராத்தான் இருக்கோம், இப்போவும் நீ என்ன சொல்றதுன்னு உன்னை அவன் கூட அனுப்பி வெச்சிருப்போம் அந்தப் பயந்தான் உன்கூட வாழவே மாட்டேன்னு வைராக்கியமா நிக்குறானே”.
“இனிமே அவனுக்கும் உனக்கும் எந்தப் பந்தமும் இல்ல உங்க அப்பா மாப்ள பாக்க போறாரு நாங்க சொல்றவன்தான் யாரை சொல்றோமோ அவனுக்குக் கழுத்தை நீட்டனும் சொல்றதை கேக்குறியா இல்ல உன் வழியை நீயே பாத்துக்கிறியா எதுன்னு யோசிச்சு இன்னும் மூணு நாள்ல சொல்ற” என்றவர்கள் எழுந்து சென்றுவிட சிலையாக அமர்ந்திருந்தாள் மீனா.
பைத்தியம் பிடிக்காதது ஒன்றுதான் குறை ஏற்கனவே நிறைய குளறுபடி செய்து வைத்திருக்க இப்பொழுது பிடிவாதம் செய்தால் அடித்து விரட்டி விட்டு விடுவார்களோ என்று ஒருபக்கம் பயம் படித்திருக்கிறார்கள் அவ்வளவே வேலைக்குச் செல்வதெல்லாம் அவளுக்குச் செட்டாகாது.
ரகுவோடு போவதா ஐயோ செஞ்ச வேலைக்கு அவன் கையில் தனியாக மாட்டினால் அவனே கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என்றுவிடுவான் அப்படியே வாழ்ந்தாலும் அவன் பிள்ளையை மட்டும்தான் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் மனைவியாக ஏற்றுக்கொள்ள மாட்டான்.
வேறு திருமணமா அது எப்படி சரியாக வரும் வருபவன் பழையதை எல்லாம் சொல்லிச் சொல்லிக் கொடுமை படுத்தினால்… அப்போ எல்லாம் தெரிஞ்சவன் கூடவே போ… அதுக்கு வழியில்லையே அந்தப் பரதேசி என்னை ஏத்துக்க மாட்டானே அவனுக்கு எப்போவும் ஆச்சி ஆச்சி அப்படி அவகிட்ட என்னத்தான் பாத்தானோ என்று பொருமினாள்.
மண்டை வெடித்தது இப்படியே எத்தனை காலம் வாழ முடியும் இவனை ஆசை பட்டத்துக்கு நான் இப்படியே சாமியார் மாதிரி வாழணுமா முடியாது அவன் முன்னாடி நல்லா வாழனும் அப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கலாமா?… வேற வழி இருக்கா உனக்கு.
உன்னைய வீட்டை விட்டே அடிச்சு தொரத்திடுவாங்க யாருமே இருக்க மாட்டாங்க இப்போ அவங்க சொல்றதை கேட்டா சொத்தும் கிடைக்கும் கொஞ்ச கொஞ்சமா அந்த வாழ்க்கை பழகிடும் என்று பலவாறாக யோசித்து இறுதியாகத் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாள் மீனா.
அதே தரகர் இந்த முறை மூத்த மகளுக்காகச் சொல்லி வைத்தார் மாசிலாமணி இந்தப் பிள்ளைக்கு நான் என்னனு சொல்லித் தேடுறது என்று சங்கடமானது அவருக்கு வேறு வழியில்லை அவர் தொழிலே அதுதானே தேடலைத் தொடங்கிவிட்டார் அவர்.
“கட்டிக்கிறியா” என்று அவன் கேட்டுச் சென்று மாதம் நான்கு கடந்து விட்டது இரு முறை மட்டும் நேரில் வந்து பார்த்தான் அதும் சில நொடிகள் மட்டும், அப்படியொன்றும் அலைபேசி அழைப்புகளும் கிடையாது ஆனால் அவளுக்கென்னவோ தான் அவன் பார்வையில் இருப்பதை போன்ற ஒரு பிரம்மை.
அன்று கல்லூரி முடிந்து வெளியில் வந்தவள் அலைபேசி ஒலியெழுப்ப எடுத்துப் பார்த்தாள் அவனே சட்டென்று முகம் மலர்ந்துவிட்டது மிக மிக அரிது அவன் அழைப்பதும் “ஹலோ” என்றாள்.
“கிளாஸ் முடிஞ்சுதா” என்றான்.
“ஹ்ம்ம்” என்றாள்.
“சாப்டியா இல்லையா இவ்ளோ டல்லா இருக்க” என்க அவள் விழிகள் நாலாபக்கமும் சுழன்றது எதிர்திசையில் நின்றிருந்தான்.
“என்ன” என்றான் புருவம் உயர்த்தி, அவள் இமைகள் தாழ்த்திக்கொண்டாள் “என்னாச்சு” என்க ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.
“கேளுங்க ராணியம்மா என்னமோ கேக்க வந்தீங்களே” என்க.
சில நொடிகள் அவளிடம் மௌனம் அவனும் அமைதியாக அவளையே பார்த்திருக்க “ஏன் என்னைப் பாக்கவே வரல” என்றாள் மெல்லிய குரலில்.
மென் புன்னகையோடு அவளைப் பார்த்தவன் “எதிர்பாத்தீங்களா” என்றான் அத்தனை மென்மையாக, அவளிடம் அமைதி.
“நான் வரலன்னு யார் சொன்னது நீங்கத் தான் என்னைப் பாக்கல” என்க முகம் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.
“நிஜமா எல்லாநாளும் வரேன் ஆனா பக்கத்துல வரல” என்றான்.
“ஏன்” என்றாள் வேகமாகக் கேட்டுவிட்டு உதடு கடித்தாள் அவன் அமைதியாக இருக்க மீண்டும் நிமிர்ந்து பார்த்தாள் விழி அகற்றாமல் அவளையே பார்த்திருந்தான் கண்ணங்கள் சூடாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“இதுக்குதான் வர்ரதில்ல” என்றான்.
“என்ன” என்று அவள் பார்க்க, தலையை அழுந்தக் கோதியவன் “உங்களுக்குப் புரியாது” என்றான்.
ஆம் அவளுக்குப் புரியவில்லை அவனைக் கண்டவுடன் படபடவென்று அடித்துக்கொள்ளும் அவளின் விழிகள் சிவந்து விடும் மூக்கின் நுனி கடிபடும் இதழ்கள் அவனின் அவதியை கூட்டுகிறதே அவனும் என்ன செய்வான்.
அவள் புரியாமல் நிற்க “இந்தாம்மா இன்னைக்கு கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு” என்று கையில் இரண்டு முழம் மல்லிப்பூவை வைத்தார் அந்தப் பூக்கார அம்மா, அவள் சம்மதம் சொன்ன நாள் தொட்டு மல்லிகை அவளைச் சேர்ந்துவிடுகிறது பூ விற்கும் அம்மா அவளுக்குக் கொடுத்துவிட்டு அப்படியே அவரின் கடையை நோக்கிச் சென்றுவிடுவார்.
கல்லூரிக்கு வைத்துச்செல்ல வேண்டாம் என்று எண்ணியவன் மாலை வேளை அவள் கைகளில் சேரும் படி செய்துவிட்டான்.
“எக்ஸாம் எப்போ” என்றவன் கேள்விக்கு “இன்னும் பத்து நாள்ல”.
“எப்போ முடியும்”.
“அடுத்த மாசம்” என்றாள்.
“ஹ்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவன் “என்கூட வெளில வருவீங்களா” என்க விழிகள் விரித்தாள்.
“சாப்பிட்டு போங்க என்னவோ போல இருக்கீங்க” என்றான், அழைப்பைத் துண்டித்தவள் ரோட்டை கடந்து அவனை நோக்கி வந்தாள்.
“பைக்ல வருவியா இல்ல ஆட்டோ பிடிக்கட்டுமா” என்றான்.
“பைக்கிலேயே போலாம்” என்றவள் அவனோடு ஏறிக்கொண்டாள் கொஞ்சம் இடைவெளிவிட்டு அவன்மேல் முட்டிக்கொள்ளாமல் இறுக்கமாகச் சீட்டைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தாள், அவனும் கவனித்தான் என்றாலும் ஒன்றும் சொல்லவில்லை.
காமாட்சிக்கு என்னதான் அவனிடம் சம்மதம் சொல்லிவிட்டாலும் உள்ளுக்குள் ஒரு அலைப்புறுதல் தன்னை பற்றி என்ன நினைப்பார் ஒருவனோடு திருமணம் பேசி உறுதி செய்து அது இல்லை என்று ஆகிவிட்ட போதும் இவள் மனதில் அந்த நினைப்பு இருக்குமா என்ற சந்தேகம் இவருக்கு இருக்குமா அவரைத் தொட்டுவிட்டால் தவறாக எடுத்துக்கொள்வாரோ பொதுவாக ஆண்கள் சிந்தனை அப்படி என்றுதானே கேள்வி அறிவு என்பதாக மனதில் குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை.
ரொம்ப தூரம் எல்லாம் போகவில்லை பக்கத்திலே ஒரு ஹோட்டலில் நிறுத்தி விட்டான் உள்ளே அமர்ந்து சாப்பிட விஸ்தாரமான இடம் இருந்தது உள்ளே சென்று கொஞ்சம் தனியான இடம்பார்த்து அமர்ந்துகொண்டனர்.
“என்ன சாப்பிடுற” என்றவன் அவள் பக்கம் மெனு கார்டை தள்ளிவைத்தான் “பாத்திட்டு இரு வரேன்” என்றவன் கைக்கழுகும் இடம் சென்றான், அவனைத்தான் பார்த்திருந்தாள் காமாட்சி முடி நீண்டு வளர்ந்து தோளைத் தொட்டுக்கொண்டிருந்தது நல்ல பெரிய மீசை இப்பொழுது தாடியும் வளர்ந்திருந்தது.
முகத்தில் தண்ணீர் அடித்துக் கழுகி அப்படியே வந்தான் கைகளால் தண்ணீரை வழித்துக்கொண்டு அவன் அமரத் தன்னாலே அவள் கைச்சுடிதாரின் ஷாலின் நுனியை அவனை நோக்கி நீட்டியது விழிகள் மின்ன அதைப் பற்றியவன் அவளைப் பார்த்துக்கொண்டே முகத்தைத் துடைத்தான்.
‘என்ன செய்ற ஆச்சி’ என்று மானசீகமாகக் கொட்டிக்கொண்டவள் “இந்தக் கைத்தான் கொடுத்துச்சு நான் இல்ல” என்று முணுமுணுத்துக்கொண்டே மெனு கார்டில் முகம் புதைத்தாள்.
தாடி மீசைக்குள் ஒளிந்திருந்த இதழ்கள் பெரிதாக விரிவதை அவளால் உணர முடிந்தது “ராத்திரி ஓட்டம் இருந்துச்சு தூங்கவேயில்லை வேற ரெண்டு சவாரி இருந்துச்சு அதையும் முடிச்சிட்டு வரேன் கண்ணெல்லாம் எரியுது இனி போய்த் தான் தூங்கணும்” என்றான் பின்னில் சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டு.
“ஏன் இப்படி… தூங்காம வண்டி ஓட்டினா கஷ்டமில்லயா” என்றாள் படபடப்பாக.
“ஹ்ம்ம் எப்போவும் இப்படி போகமாட்டேன் நைட் ஓட்டினா காலைல ரெஸ்ட் எடுப்பேன் இது கொஞ்சம் அவசரம் மறுக்க முடியல” என்றவன் “தூங்கினா சரியாகிடும்” என்க.
“அப்போ ஏன் இப்போ வந்தீங்க அபப்டியே ரெஸ்ட் எடுத்திருக்கலாம்ல” என்றாள் என்னமோ ஒரு பரிதவிப்பு மனதில்.
“ரெண்டு நாள் ஊர்ல இல்ல என்னமோ உங்கள பாக்காம தூங்க முடியும்னு தோணல” என்றான் இப்பொழுதும் விழிகள் மூடியே இருந்தான் என்னவோ சொல்லமுடியாத உணர்வு நெஞ்சை அடைத்தது காமாட்சிக்கு, அவனையே விழியகலாமல் பார்த்திருந்தாள்.
“ரொம்ப பசிக்குது சீக்கிரம் சொல்லுங்க” என்றான்.
அவனுக்குப் பசி என்றால் எப்படி சாப்பிடுவான் என்று தெரியுமே ஆகையால் மசால் தோசை ஒன்றும் கொத்து பரோட்டா ஒன்றும் அவனுக்குச் சொன்னவள் தனக்காக ஒரு ரவா தோசை சொல்லிக்கொண்டாள்.
“போதுமா” என்றான் அவளிடம்.
“ஹ்ம்ம் இதுவே அதிகம்” என்றவள் அதை முடிப்பதற்குள் இரண்டையும் சாப்பிட்டு ஒரு டீயையும் குடித்து முடித்துவிட்டான், அவன் வேகத்திற்கு அவள்தான் திணறினாள்.
“பொறுமையா சாப்பிடு” என்றவன் இப்பொழுது அவள் அருகில் அமர்ந்து அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்டு மீண்டும் விழிமூடிக்கொண்டான், காமாட்சியின் விழிகள் இணைந்த அந்தக் கரங்களிலே தங்கிவிட்டது அடுத்த வாய் உணவு உள்ளே செல்லவில்லை.
“கையை விடணுமா” என்றான்.
“இல்… இல்ல… வேண்டாம்” என்றாள் திக்கி திணறி “பிடிக்கலையா” என்றான் அவள் பக்கம் திரும்பி, அவள் விழிகள் சட்டென்று நிறைந்தது “பிடிச்சிருக்கு” என்றாள் மெல்ல.
அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் “அழாம சாப்பிடுங்க ராணியம்மா எப்போவும் விடமாட்டேன்” என்றவன் விரல்கள் இன்னும் அழுத்தம் கூட்டியது.
அந்த வாரமும் மீனாவை பெண் பார்க்க வந்திருந்ததனர் மாப்பிள்ளைக்கு முப்பத்திரண்டு வயது, நான்கு வயது மற்றும் இரண்டு வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள் தனியாகத்தான் வசிக்கிறான் நல்ல வேலை கைநிறைய சம்பளம் பார்க்கவும் அம்சமாக இருந்தான்.
மாப்பிளையை அவளுக்குப் பிடித்திருக்கிறது அவன் பிள்ளைகளைப் பார்த்து முகம் சுளித்தாள் “இங்க பாருடி இப்படியே செஞ்சிட்டு இருந்தீன்னா சரியா வராது மகாராணிக்கு என்ன நினைப்பு போனா போகுதுன்னு திரும்ப ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்க நினைக்கிறோம் ஒழுங்கு மரியாதையா கட்டிட்டு போற வழிய பாரு” என்றார் அவளின் சித்தி.
“இந்தச் சம்மந்தம் எங்களுக்குச் சரின்னு படுது இவர்தான் மாப்ள கட்டிக்கிட்டு கிளப்பி போ அவர் பொண்டாட்டி இந்த ரெண்டாவது பிள்ளை பிறந்த அப்புறம் இறந்துடுச்சாம் பிள்ளைகளைப் பாத்துக்க இவரோட அம்மா அப்பா கிட்ட விட்டுருக்காராம்”.
“அவங்களால எவ்ளோ நாள் பாக்க முடியும் உனக்கும் ஒரு துணை வேணும் பிள்ளைகளும் உன்ன விட்டுப் பிரிஞ்சு நின்னா உன்கிட்ட ஓட்டுதல் இருக்காதுன்னு எல்லாரும் சொல்லவும் இப்போதான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாராம் பசங்களுக்காகத்தான் கல்யாணம் இப்போதைக்கு அப்படித்தான் இருக்கும் நீ அன்பா அனுசரணாயா நடந்துக்கிட்டா அவரும் உன்னை ஏத்துக்கிட்டு வாழப் போறாரு பாத்து பொழச்சுக்கோ உன்னோட திமிர் தனத்தையெல்லாம் இங்கேயே தூக்கி போட்டுப் போ மறுபடியும்லாம் உன்னைக் கூட்டிட்டு வந்து சீராட்ட இங்க யாராலயும் முடியாது” என்றார் சித்தி.
மீனாவிடம் பேச வேண்டும் என்றான் மாப்பிளை அரவிந்த், அத்தை மகனோடு திருமணம் ஆனால் அவன் குடி, போதை என்று இருக்க மகளால் அவனோட வாழ முடியவில்லை என்றுதான் சொல்லியிருந்தனர் ஆகையால் பெரிதாகத் தோண்டி துருவவில்லை.
மகளுக்கு ஒரு பிள்ளை இருப்பதையும் கூறினார் மாசிலாமணி “தெரியும்” என்றான் மாப்பிளை.
சில நொடி அமைதிக்கு பிறகு “குழந்தையையும் சேர்த்துதான் பாத்துக்கணுமா” என்றான்.
“தேவையில்லை என் பேரனை யாருக்கும் கொடுக்கமாட்டேன் அவனுக்கு நான் எனக்கு அவன்” என்றார் முத்துலட்சுமி.
“யார்” என்று கேள்வியோடு அரவிந்த் மாசிலாமணியை பார்க்க “என்னோட அக்கா அவங்க மகனுக்குத்தான் மீனாவை குடுத்தது” என்றார் அவர்.
“ஓஹ்” என்றவன் “நல்லது அப்போ பேசலாமா” என்றான் மாசிலாமணி அன்னம்மாவை பார்க்க அவர் மீனாவிடம் தோட்டத்திற்கு போகச் சொல்லிவிட்டு அரவிந்தை பார்க்க அவனும் எழுந்து சென்றான்.
“உன்கிட்ட சொல்லியிருப்பாங்க இருந்தாலும் சொல்றேன் நாங்க திருச்சில இருக்கோம், வீட்ல பாத்து வெச்ச கல்யாணம்தான் சந்தோஷமாத்தான் இருந்தோம் ரெண்டு பிள்ளைங்க என்ன அவசரமோ போய்ட்டா எனக்கு ஒரு மனைவிங்கறதை தாண்டி என் பசங்களுக்கு ஒரு நல்ல அம்மா வேணும்”.
“நமக்குள்ள புரிதல் வரக் கொஞ்சம் நாள் ஆகலாம் அதுவரைக்கும் உன்னால காத்திருக்க முடியுமா” என்றான்.
அவள் “ஹ்ம்ம்” என்றாள்.
தொண்டையை செருமிக்கொண்டவன் “உன் குழந்தையைக் கூடக் கூட்டிக்க முடியாது” என்றான் அதற்கும் அவள் “தெரியும்” என்றாள்.
“உனக்கு என்மேல கோவம் வரலையா அதுக்கு” என்றான் அவன்.
“வரவங்க எல்லாரும் இதைத்தானே சொல்றாங்க கேட்டுக் கேட்டுப் பழகிடுச்சு கல்யாணம் செய்யாம வீட்டில விடமாட்டாங்க பிள்ளையை அத்தையும் குடுக்க மாட்டாங்க மனசை தேத்திக்கிட்டேன்” என்றாள் அபாரமான நடிப்பு!.
“சரி அப்போ உனக்குச் சம்மதமா” என்க.
அவள் தலை அசைந்தது, சீக்கிரமா கல்யாணத்தை வெச்சுக்கலாம் என்று சொல்லிச் சென்றுவிட்டனர்.
காமாட்சிக்கு மனதே ஆறவில்லை லிங்காவை மடியில் கிடத்தி உறங்கும் அந்தப் பிள்ளையின் தலை முடியை வருடிக்கொண்டிருந்தாள் ‘எப்படி மனது வருகிறது இவளுக்கு இந்தக் குழந்தையை விட்டுச் செல்ல மனதின் ஒரு மூலையில் கூடக் குற்றவுணர்ச்சி இல்லையா மனசாட்சி குத்தவில்லையா தாய்மை துடிக்கவில்லையா என்று நினைத்தவளுக்கு விழிகளில் நீர் நிரம்பியது.
திருமண நாள் முடிவாகிவிட்டது துணிமணி நகை பொருட்கள் வாங்க அலைந்துகொண்டிருந்தனர் தம்பதிகள் அதற்கிடையில் ரகு வந்து பிரச்சனை செய்தான்.
“அதான் அவளுக்குக் கல்யாணம் செய்யப் போறீங்கல்ல எனக்கு ஆச்சியை கட்டிக்குடுங்க” என்று ஒரே ரகளை, மாசிலாமணி போலீசை அழைக்க அலைபேசியை எடுக்கக் கொஞ்சம் பம்மினான்.
“என் மக கல்யாணமே ஆகாம எங்ககூடவே இருந்தாலும் பராவாயில்லை ஆனா உனக்கு மட்டும் அவளைக் கட்டிக்கொடுக்க மாட்டேன் அதுக்கு என் கையாலேயே கொஞ்சம் விஷத்தைக் குடுத்துட்டு போய்டுவேன்” என்றார் அவர் கொஞ்சம் நேரம் கத்திவிட்டு சென்றான்.
மருதவேலு அழைத்தபோது மீனாவின் திருமணம் லிங்காவை அவள் விட்டுச் செல்வது என்று அதைக் கூறி அழுதாள் காமாட்சி “சில ஜென்மங்களை திருத்த முடியாது ராணியம்மா உங்க அக்கா கொண்டு போனா மட்டும் அவனை நல்லா பாத்துகுமா அன்பா பாத்துக்குறவங்க கிட்ட அவன் வளர்றதுதான் நல்லது”.
“வருத்தப்படாத அவனை அபப்டியெல்லாம் விட்டுடமாட்டேன் எனக்கும் அவன் மகன்தான் ஏன் உன் அத்தை குடுத்தா நம்மளோட கல்யாண சீரா அவனையே கொண்டுபோகலாம்” என்றவன் கூற்றில் நெஞ்சமெல்லாம் நிறைந்து விட்டது அவளுக்கு.
ரகு வந்து சண்டை இட்டதையும் சொல்லிவிட்டாள் மறுநாள் தாம்பரம் இந்து மிசன் மருத்துவமனையிலிருந்து முத்துலெட்சுமிக்கு அழைப்பு வந்தது “உங்க மகனை இங்க சேர்த்திருக்காங்க பாத்துக்க யாருமில்ல வாங்க” என்று.
ஆயிரம் இருந்தாலும் பெற்றவள் அல்லவா பிள்ளையை அன்னம்மாவிடம் விட்டுவிட்டு சென்றார், மூஞ்சி முகரையெல்லாம் பெயர்ந்து முகத்தின் அமைப்பே மாறியிருந்தது ஒரு கையும் உடைந்திருந்தது.
“எப்படி” என்றார் முத்துலட்சுமி.
“தெரியல நல்லா ரௌடி மாதிரி இருந்தான் அடி இடி மாதிரி விழுந்தது எதுக்குடா அடிக்குறேன்னு கேட்டேன் ஒண்ணுமே சொல்லல அடியாள் நினைக்குறேன் வேற யாரையோ அடிக்கவேண்டியதை என்னைய மாத்தி அடிச்சுட்டான் போல” என்றான்.
வீட்டிற்கெல்லாம் அழைத்துவரவில்லை முத்துலட்சுமி அவனுடைய வீட்டிலேயே விட்டுவிட்டார் உணவை மட்டும் சமைத்துக்கொடுத்தார் “நான் செத்து போயிருந்தா என்ன செய்வ அப்படி நினைச்சுகிட்டு நீயே உன்னைப் பாத்துக்கோ” என்றுவிட்டார்.
எளிமையாகக் கோவிலில் வைத்து மீனா அரவிந்த் திருமணம் நடந்து முடிந்தது, அரவிந்தனின் பிள்ளைகள் இருவரும் தந்தையை ஒட்டிக்கொண்டு நின்றிருக்க பேரனை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு வீட்டில் தனிமையில் கண்ணீர் சிந்தினார் முத்துலட்சுமி.
பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கணவனுடனும் அவன் பிள்ளைகளுடனும் கிளம்பிவிட்டாள் மீனா, மறுநாள் காலையே மயிலம்மா ராமலிங்கத்தின் முன் நின்றான் மருதவேலு.
“எனக்குக் காமாட்சியை பெண் கேளுங்க” என்க சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு நின்றார் மயில்லம்மா.
error: Content is protected !!