Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 11.

தமிழை விட்டு பிரியும் நிலா.

 

தமிழ் வீட்டுக்கு வர அவனது பெற்றோர்கள் நிலா வந்து விட்டு போனதை சொல்கிறார்கள்.

 



Advertisement

இனி,

 

‘நல்ல வேல நிலா வந்த இல்லைனா இன்னிக்கும் இவங்க என்னை விடமாட்டாங்க. தேங்க்ஸ்டி ஞாபகமா வந்ததுக்கு. எங்க மறந்துருவியோன்னு நெனச்சேன்’ என தனக்குள் பேசிக் கொண்டு  ரூமுக்கு போனான் தமிழ்.

Advertisement

 

Advertisement

நிலா அம்மா தனியாக கடையில் கஷ்டப்படுவதைப் பார்த்த நிலா ‘அம்மா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீ தனியா எல்லா வேலயும் செய்யறத பாத்து’ என நிலா சொல்ல,

 

‘ஏம்மா அதுக்குன்னு ஆளா வச்சுக்க முடியும். அப்டி ஆள் வச்சா அவங்களுக்கு சம்பளம் தரவேண்டி இருக்கும். அதான் நீயும்  தம்பியும் எனக்கு ஹெல்ப் பண்றீங்கல்ல. சமாளிச்சுக்கலாம்’ என நிலா அம்மா சொல்ல  நிலா இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

 

அடுத்த நாள் ஆபீஸ்க்கு சென்று தமிழுக்காக காத்திருந்தாள் நிலா.

 

‘குட்மார்னிங் நிலா’ என நந்தினி கூற அதை காதில் வாங்காமல் நிலா உட்கார்ந்திருக்க,

 

‘ஏய் நிலா குட்மார்னிங்’ என நந்தினி அவளை பிடித்து உலுக்க பிறகு சுதாரித்த நிலா அவளுக்கு குட்மார்னிங்’ சொல்ல,

 

‘என்ன பலத்த யோசனையா இருக்க ‘ என நந்தினி கேட்க,

 

‘ம் ஒன்னுமில்ல நந்தினி ஒரு விசயத்த தமிழ் சார் கிட்ட  சொல்லனும். ஆனா அத அவரு எப்டி எடுத்துக்குவாருன்னு தெரியல. அதான் யோசனையா இருக்கு’ என நிலா சொல்ல,

 

‘ஏய் சூப்பர் நிலா. உன் லவ்வ சொல்ல போறியா. வெரிகுட். அவரு என்ன சொல்லுவாரு ஐ லவ் யூ டூ ன்னு சொல்ல போறாரு’ என நந்தினி ஆர்வமாக கேட்க,

 

‘நீ வேற ஏன் நந்தினி. அது இல்ல ‘ என நிலா சொல்ல தமிழ் வந்து தன் ரூமுக்கு செல்கிறான். இதைப் பார்த்த நிலாவும் தமிழ் பின்னாடியே சென்று அனுமதி பெற்று அவன் ரூமுக்கு செல்கிறாள்.

 

‘சொல்லுங்க நிலா’ என தமிழ் கேட்க,

 

‘சார் நான் ஒன்னு உங்க கிட்ட கேக்கனும்’ என நிலா இழுக்க,

 

‘எதா இருந்தாலும் பரவால்ல நிலா சொல்லுங்க ‘ என்றான் தமிழ்.

 

‘சார் என் வேலய நான் ரிசைன் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்’ என நிலா சொல்ல தமிழுக்கு தூக்கி வாரி போட்டது,

 

‘என்ன சொல்றீங்க. எனக்கு ஒன்னும் புரியல. திரும்ப கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க ‘ என தமிழ் பதட்டமாக கேட்க,

 

‘சார் நான் வேலய விட்டு நிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்’ என நிலா திரும்ப சொல்ல,

 

‘எதுக்கு இப்டி முடிவு பண்ணிங்க. என்ன ரீசன்’ என தமிழ் கேட்க,

 

‘சார் எங்க அம்மா மட்டும் ஹோட்டல்ல தனியா கஷ்டப் படறாங்க. அதான் நானும் போய் ஹோட்டல பாத்துக்கலாம்னு.’ என நிலா சொல்ல,

 

‘இதுக்காக நீங்க ஏன் வேலய விடனும்னு நினைக்கிறங்க . தேவையான ஆளுங்கள வேலைக்கு வச்சுக்கலாம்ல. ஏன் சொல்றேன்னா உங்க சம்பளம் உங்க குடும்பத்துக்கு ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்குன்னு நீங்களே சொல்லிருக்கீங்க’ என தமிழ் கேட்க,

 

‘ஆமா சார் அது உண்மை தான். ஆனா எங்க கடைய நாங்க பாத்துக்கற மாதிரி மத்தவங்க பாத்துக்க மாட்டாங்கல்ல. நீங்க சொன்ன மாதிரி என் சம்பளம் இல்லைன்னா கஷ்டப் படுவோம். ஆனா கொஞ்ச நாள் தான். அப்புறம் எங்க கடைய டெவலப் பண்ணிட்டோம்னா எல்லாம் சரியாகிடும்’ என நிலா சொல்ல,

 

‘அது இல்ல நிலா நான் என்ன சொல்றேன்னா’ என தமிழ் சொல்ல வர,

 

‘ப்ளீஸ் சார் நீங்க மட்டும் இங்கிருந்து போகாதன்னு சொல்லீராதீங்க.  ஏன்னா உங்க பேச்ச என்னால மீற முடியாது. நீங்க தான சொன்னீங்க உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு நீ கண்டிப்பா உங்க அப்பா ஹோட்டல நல்லா ரன் பண்ணி சக்சஸ் பண்ணுவ அப்டீன்னு. அதுக்கு தான் நான் இங்கிருந்து போறேன். ப்ளீஸ் ஓகேன்னு சொல்லி எனக்கு விஷ் பண்ணி அனுப்புங்க.’  என நிலா கேட்க,

 

தமிழ் பின்னால் திரும்பி தன் கண்ணீரை துடைத்து விட்டு ‘சாரி நிலா நான் என் சைடு மட்டும் யோசிச்சுட்டேன். சரி தாராளமா நீங்க இங்கிருந்து போலாம். கண்டிப்பா நீங்க சக்ஸஸ் ஆவீங்கன்னு எனக்கு தெரியும்.  அந்த நாளுக்காக நான் வெய்ட் பண்றேன். ஆனா ஒரு கன்டிஷன் உங்க பிஸ்னஸ்ல  நீங்க சக்சஸ் ஆனதுக்கு பிறகு நீங்க இங்க திரும்ப என் பி.ஏ. வா வேலைக்கு வந்தரனும். அதுவரைக்கும் அந்த ப்ளேஸ் காலியா தான் இருக்கும் . இதுக்கு ஓகேன்னா எனக்கும் நீங்க ரிசைன் பண்ணிக்கறதுக்கு ஓகே ‘ என தமிழ் எமோசனலாகி சொல்ல,

 

‘சார் ரொம்ப தேங்க்ஸ். நீங்க என்ன சொல்ல போறீங்களோன்னு எனக்கு நைட் பூரா தூக்கமே இல்ல. கண்டிப்பா உங்கள மாதிரி ஒரு பாஸ் எங்க கிடைக்கும். என் பிஸ்னஸ டெவலப் பண்ணிட்டு உங்க பி. ஏ. வா திரும்ப இங்கயே வந்தறேன். சார் நான் கிளம்பறேன்.’என நிலா சொல்லி விட்டு கிளம்ப இனி நிலாவை பார்க்க முடியாது பேச முடியாது என தமிழ் ஒவ்வொன்றாய் யோசித்து அழுகிறான்.

 

நிலா வெளியே வந்து நந்தினி மற்ற அனைவரிடமும் அவளது முடிவை சொல்லி விட்டு அங்கிருந்து பிரியா விடை  பெற அனைவரும் அவள் பிரிவை நினைத்து சோகமாக நந்தினியோ தாங்க முடியாமல் அழுதே விட்டாள்.

 

நிலாவும் முதலில் வேலயை விட்டு போவது என தைரியமாக முடிவு எடுத்தாலும் தமிழ் அழுவதை பார்த்ததும் அங்கயே அவளும் உடைந்து போனாள். இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டு வெளியே வந்தால் மற்றவர்களையும் நந்தினியையும் பார்த்ததும் அவ்வளவு தான் அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைத்துக் கொண்டு வர அங்கிருந்து கிளம்பினாள்.

 

வீட்டுக்கு வந்து நிலா தன் அம்மாவிடம் அனைத்தையும் சொல்லி அழ, ‘கவலப்படாத நீ தான முடிவு எடுத்த. ஒரு முடிவு எடுத்தா அதுல திடமா இருக்கனும். பர்ஸ்ட் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அப்புறம் காலம் எல்லாத்தையும் ஆற வச்சிடும்’ என அவள் அம்மா ஆறுதல்  கூறினார்.

 

தமிழ் கவினுக்கு போன் பண்ணி நடந்தவற்றை எல்லாம் சொல்லி அழ, ‘டேய் தமிழ் என்னடா இது சின்ன புள்ள மாதிரி தேம்பி தேம்பி அழற. அந்த பொண்ண அவ்ளோ லவ் பண்றியாடா’ என கவின் கேட்க,

 

‘அவ ரிசைன் பண்றேன்னு சொல்ற வரைக்கும் எனக்கே தெரியல அவள இவ்ளோ லவ் பண்றேன்னு. இனிமே அவள நினச்சப்ப பாக்க முடியாது அவ கூட பேச முடியாதுன்னு நினைக்க நினைக்க அழுகையா வருதுடா’ என தமிழ் அழ,

 

‘சரி அழாத. நீ தான அவ ஆசைய நிறைவேத்தனும்னு கஷ்டப்பட்ட . அப்புறம் நீயே அதுக்கு தடையா இருக்கக் கூடாது. இது கூட நல்லதுக்கு தான். நீங்க உங்க காதல  ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க இந்த டிஸ்டன்ஸ் உங்களுக்கு ஹெல்ப் பண்ணும். லாங் டிஸ்டன்ஸ் லவ்வ ஃபீல் பண்ணிப்பாரு’ என கவின் ஆறுதலாக பேச தமிழும் கொஞ்சம் சமாதானமானான்.

 

ஆனால் ஒவ்வொரு நாளும் ஆபீஸிலும் வீட்டிலும் அவளை பார்த்தது முதல் இப்போது வரை  அவளோடு இருந்த தருணங்களை நினைத்துக் கொண்டே காலத்தை கழித்தான் தமிழ்.

 

நிலா தன் ஹோட்டலை கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு மேலே கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

 

தமிழ் எங்கே அவளுக்கு தான் போன் செய்தால் அவளை மிஸ் பண்ணுவதை சொல்லி அழுது விடுவாமோ என நினைத்து போனே பண்ணாமல் இருந்தான்.

 

அடிக்கடி இல்லை என்றாலும் நிலா மறக்காமல் அவனையும் அவன் பெற்றொர்களையும் போன் பண்ணி நலம் விசாரித்துக் கொள்வாள். தமிழிடம் பேசும் போது அவளும் தமிழை போலவே தானும் அவனை மிஸ் பண்ணுவதை சொல்லி அழுது விடுவோமோ என நினைத்து சீக்கிரம் பேசி விட்டு வைத்தாள்.

 

கவின் யாழினிக்கு தன் காதலை கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைத்தான். யாழினிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் மேல் காதல் வர யாழினி அவள் வீட்டிலும் கவின் அவன் வீட்டிலும் தங்கள் காதலை சொன்னார்கள்.

 

யாழினி பெற்றோருக்கும் கவின் பெற்றோருக்கும்  இதில் முழு சம்மதம். அவர்கள் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

 

கவினும் ப்ராஜெக்ட் முடிந்து வந்தான். கவின், யாழினி இருவரும் தமிழ் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க சென்றனர்.

 

‘வாம்மா யாழினி, வாப்பா கவின். எப்டி இருக்கீங்க ‘ என தமிழ் பெற்றோர் நலம் விசாரிக்க,

 

‘ம் நல்லா இருக்கோம் ஆன்டி. இந்தாங்க’ என சொல்லி பத்திரிக்கையைக் குடுக்க,

 

‘யாழினிய எங்க வீட்டு மருமகளாக்கிக்க நினச்சோம். அது இவனால நடக்காம போச்சு. அது நடந்திருந்தா யாழினி எங்களுக்கு மருமகளா தான் இருந்திருப்பா. ஆனா இப்ப அவ எங்களுக்கு மக மாதிரி. கவினும் எனக்கு இன்னொரு மகன் தான். இதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு நிமிஷம் இருங்க’ என சொல்லி சென்று குங்குமத்தை எடுத்து வந்து யாழினிக்கு வைத்து விட இருவரும் தமிழ் பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

 

‘சரி இருங்க காபி எடுத்துட்டு வரேன்’ என சொல்லி தமிழ் அம்மா உள்ளே செல்ல,

 

‘கல்யாணம் எங்க வச்சிருக்கீங்க ‘ என தமிழ் அப்பா விசாரிக்க மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

 

தமிழ் அம்மா காபி ரெடி பண்ணி கொண்டு வந்து குடுக்க அனைவரும் குடித்தனர்.

 

‘தமிழுக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணலாம்னு பாத்தா ரெண்டு பேரும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க. நீங்க கொஞ்சம் சொல்லுங்க’ என தமிழ் அம்மா சொல்ல,

 

‘நிலா எப்டிமா இருக்காங்க. உங்க கிட்ட பேசுவாங்களா’ என யாழினி கேட்க,

 

‘ம் அடிக்கடி இல்லைன்னாலும் அப்பப்ப போன் பண்ணுவா. திடீர்னு வீட்டுக்கு வருவா. எப்ப வந்தாலும் எங்களுக்கு பிடிச்சது எதையாவது வாங்கிட்டு வந்து ஐஸ் வச்சு சமாதானப் படுத்தீருவா.’ என தமிழ் அப்பா சொல்ல,

 

‘ஆமா பர்ஸ்ட் எனக்கு அவ மேல கோபம் இருந்தது. உன் இடத்துல அவ வந்துட்டாளேன்னு. ஆனா அவ எங்க கிட்ட பாசமா அக்கறையா நடந்துக்கறதயும் தமிழ அன்பா பாத்துக்கறதயும் பாத்ததுக்கப்புறம் அவ மேல எனக்கு கோபம் போயி பாசம் வந்துருச்சு. அவ கிட்ட ஏதோ இருக்கு எல்லாரையும் அவப்பக்கம் இழுத்தறா. நீங்களும் அவ கிட்ட பழகுனா உங்களுக்கும் அவள புடிச்சிடும்.’ என தமிழ் அம்மா சொல்ல,

 

‘அது என்னவோ சரி தான் ஆன்டி. நம்ம தமிழயே அவள புடிக்க வச்சிட்டாளே’ என்றாள் யாழினி.

 

‘சரி ஆன்டி நாங்க கிளம்புறோம். தமிழ ஆபீஸ்ல போய் பாத்து பத்திரிக்கை குடுத்துக்கறோம்’ என கவின் சொல்லி விட்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.

 

தொடரும்….

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!